WELCOME TO PANNAGAM.COM & PTV

பண்ணாகம் இணையம்

 

2017 முழு வருட இராசி பலன்கள்

இந்த தமிழ் புத்தாண்டு 12 ராசி காரர்களுக்கும் பலன்களை அறிந்து கொள்ளலாம். தமிழ்ப் புத்தாண்டான ஹேவிளம்பி வருடம்14-04-2017

மேஷம்:
(அஸ்வினி-1, 2, 3, 4 பாதங்கள்-பரணி-1, 2, 3, 4 பாதங்கள்-கார்த்திகை-1,2,3,4பாதங்கள்) தைரியத்திற்கு காரகனான செவ்வாயை அதிபதியாகக் கொண்ட மேஷராசிஅன்பர்களே! தங்கள் இராசிக்கு ஹேவிளம்பி வருட கிரக நிலைகள் தரும்பலன்களைப் பார்ப்போம். சூரியன் - தங்களுக்கு இதுவரை தடைக் கல்லாக விளங்கி வந்த காரியங்கள், முன்னேற்றத்துக்கான படிக்கட்டுகளாக மாறி வெற்றிமேல் வெற்றி கிடைக்கும். பொருளாதார நிலைகள் மேம்படும். பல வழிகளிலும் பணம் காசு பொருள் சேரும்.

ஒளிர்கின்ற சூரியன் போல் பலவிதத்திலும், உங்கள் புகழ் ஒளி பரவும். வியாபாரத்திற்கான வங்கிக் கடன்கள், அரசு தொழில் துறைமூலமாக எளிதாகக் கிடைக்கும். கடன்களும் கட்டுக்குள் இருக்கும். அரசுத்துறையால் ஆதாயம் உண்டு. சிலருக்கு உடனடியாக அரசில் புதிய வேலைகிடைக்கும். மாதத்தில் தந்தையுடனான கருத்து வேறுபாடுகள் உண்டாகும். தொழிலில் இதுவரை எவராலும் அடைய முடியாத லாபங்களை சம்பாதித்து, புதிய புதிய சாதனைகளைப் படைத்து அரசாங்கத்தின் பட்டம் கௌரவம் பெறுவீர்கள். செவ்வாய் - ஆனி மாதத்தில் அனைத்துக் காரியங்களிலும் வெற்றி கிட்டும். புதிய ஆடைகள் மற்றும் ஆபரண சேர்க்கையும் ஏற்படும்.

உடன்பிறப்புக்குஇடையே ஒற்றுமை உண்டாகும். வீடு, மனை போன்ற புதியசொத்துக்கள் வாங்கலாம். அதற்குப் பின் வரும் காலங்களில் வாழ்க்கையில்புதிய பல முன்னேற்றங்கள் உருவாகும். புதன் - பலவகையிலும் தனவரவுகள் அதிகரிக்கும்.மேற்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். வீட்டில் சுப காரியங்கள் நடந்து மகிழ்ச்சியும்,செலவும் அதிகரிக்கும். மக்கள்மத்தியில் கௌரவம், புகழ் கூடும். தொழில் விருத்தி, வழக்குகளில் வெற்றி ஆகியவைகளும் ஏற்படும். சுக்கிரன் - தாய், காதலி, மனைவி, சகோதரி போன்ற நெருங்கிய பெண் உறவுகளால் நன்மைகள் உண்டாகும். வீட்டிற்குத் தேவையான ஆடம்பரசாதனங்கள்அனைத்தையும் வாங்கி மகிழ்வீர்கள்.

சுற்றுலா, புனித யாத்திரைகள்போன்ற வெளியூர்ப் பயணங்கள் வெற்றிகரமாகவும், மகிழ்ச்சிகரமாகவும்அமையும். நெருங்கிய உறவினர் வகையில் சுப காரியங்கள் நடக்கும். குரு - ஆவணி 27 இல் 7 ஆம் இடத்திற்கு மாறும் குருவால் வீட்டில் சுபகாரியங்கள் திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் நடக்கும். புதியதொடர்புகள் மகிழ்ச்சி தரும். உயர்ரக வாகன வசதிகள் கிடைக்கும். அரசுவேலை கிடைக்கும் வாய்ப்பு வரலாம். வீடு, மனை ஆகியவற்றை உடனடியாகக்கிரையம் செய்யலாம். வியாபார சம்பந்தமான வெளிநாட்டுப் பயணம் ஏற்படும். சனி - ஹேவிளம்பி வருடத்தில் தங்கள் இராசிக்கு சனி பகவான் நன்மை அளிக்கவில்லை என்றாலும், பாக்கிய ஸ்தானத்தில் சனி உலாவருவதால் உங்களுக்கு இராஜயோகம் ஏற்படும். எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி அடையும். புதிய தொடர்புகள் உண்டாகும். ஊரில் முக்கிய நபர் என்று பெயர் எடுப்பீர்கள். கட்டளை இடும்படியான பெரிய பதவிகள் தேடிவரும்.

ராகு:ஆண்டின் முற்பகுதியில் பூர்வீக சொத்தில் பங்கு கிடைக்கும் பிற்பகுதியில் சொந்த வீடு கட்டி குடிபோவீர்கள். 

கேது: ஆண்டின் முற்பகுதியில் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். பிற்பகுதியில் தொழில் நிலை சிறப்படையும். கணபதி, ஆஞ்சனேயர் ஆகியோரை வணங்கி, சனிக்கிழமை தோறும் சனீஸ்வரனுக்கு எள் விளக்குப் போட தீமைகள் குறையும். திருநள்ளாறு சென்று வரவும் தீமைகள் குறையும்.

ரிஷபம்:
 ( கார்த்திகை -2,3,4 பாதங்கள்-ரோகிணி-1,2,3,4-பாதங்கள்-மிருகசிரீடம்-1,2 பாதங்கள்) களத்திரகாரகனான சுக்கிரனை அதிபதியாகக் கொண்ட ரிஷபராசி அன்பர்களே! தங்கள் இராசிக்கு ஹேவிளம்பி வருட கிரக நிலைகள் தரும்பலன்களைப் பார்ப்போம். சூரியன்: பணம் காசு சேர்ந்து செல்வ நிலை உயரும்.நினைத்த காரியங்கள் நினைத்தபடி தடையின்றி நிறைவேறும். மற்றவர்களின் விவகாரங்களில் தேவையின்றி மூக்கை நுழைக்காதிருப்பது நல்லது. புத்திரபாக்கியம் ஏற்படும். ஆரோக்கியம் பெருகும்.

நோயற்ற வாழ்வு மலரும். ஞானம் மேலிடும். மாசி மாதத்தில் தொழிலில் புதிய விரிவாக்கத் திட்டங்கள் நிறைவேறும், அரசுப் பணியாளர்களுக்குப் பதவி உயர்வுகள் ஏற்படும்.புதிய உயர்ரக வாகன சுகங்கள் கிடைக்கும். பங்குனி மாதத்தில் அரசியல்பிரபலங்களின் ஆதரவு கிட்டும். பொது ஜன சேவைகளால் மதிப்பு மரியாதைகூடும். புகழும் ஓங்கும். செவ்வாய் ; அரசுத்துறையால் இலாபம் ஏற்படும். வீட்டில் பயிர், மனை,பால் மாடுகள் ஆகியவற்றின் மூலமாக ஆதாயம் பெருகும். நவீன வீட்டுஉபயோக சாதனங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.

எதாவது ஒரு வகையில் ஆண்டு முழுவதும் பணம் வந்து கொண்டே இருக்கும். நவநாகரிக ஆடை அணிகலன்கள் சேரும். புதன்: தனதான்ய விருத்தியும், உத்தியோகம், தொழில், வியாபாரம் ஆகியவற்றில் அதிகம்முன்னேற்றம் ஏற்படும். நிம்மதியும் சுகமும் உண்டாகும். கல்வியில் தேர்ச்சி அடைவீர்கள்.பயணங்களால் இலாபம் ஏற்படும். வங்கி, கணக்கு போன்ற துறைகளில் உள்ளவர்களுக்கு வாழ்க்கையில் பல முன்னேற்றங்கள் ஏற்படும். சுக்கிரன்: மிகவும் சிறப்பானதாக இருக்கும்.

ஆண்டு முழுவதும் பொன்பொருள்சேரும். ஆடை, அலங்காரப் பொருட்கள் மற்றும் சுகந்த பரிமள வாசனாதி திரவியங்கள் ஆகிய எல்லாமே ஒரு சேரக் கிடைக்கும். கோவில்களில் ஏழைஎளிய மக்களுக்கு அன்னதானம் செய்யும் அளவுக்கு இறையருளால் வசதிவாய்ப்புக்கள் பெருகும். குரு - ஆவணி 27 க்கு முன் புத்திர பாவத்திலும், பின்னர் ருண பாவத்திலும் சஞ்சரிக்கும் குரு, முற்பகுதி வரையிலான காலத்தில் மனைவி மக்களுடன் சந்தோஷமாக வாழவைப்பார். செல்வந்தர்களின் நட்பு ஏற்படும். கீர்த்தி பெருகும். அரசாங்க உத்தியோகம் ஏற்படும். கௌரவமும், அந்தஸ்தும் உயரும். திருமணம் ஆகாதவர்களுக்குத் திருமணம் கைகூடும்.

பிற்பகுதியில் ஆரோக்கியக் குறைவைத் தந்தாலும் அதற்குப் பிறகு தொழில் துறையில் உள்ளவர்களுக்குச் சிக்கல்களைத் தரலாம். எந்தவொரு புதிய முயற்சிகளிலும் ஈடுபடாதிருப்பது நல்லது. உங்கள் முன்னேற்றத்தைக் கண்டு பிறர் பொறாமை கொள்ள நேரலாம். வேலை இல்லாதவர்கள் ஏதேனும் சிறுதொழில் செய்வது முன்னேற்றம் தரும். பிறருக்குக் கட்டளையிடும் அரசு உயர் பதவி கிடைக்கும். சனி: அஷ்டமச்சனி காலத்தில் அந்தஸ்து, பதவி, கௌரவம் ஆகியவைக்கு பங்கம் ஏற்படலாம். வாழ்க்கை என்றால் ஏற்ற இறக்கம் மற்றும் இன்ப துன்பம் என மாறித்தானே வரும். சிலருக்கு வெளி நாட்டு வாசமும், குறிக்கோளற்ற அலைச்சல்கள் ஏற்படும். பயணங்களின் போது எச்சரிக்கை தேவை. அட்டமச் சனியாக இருப்பதால் கணபதி, ஆஞ்சனேயர் ஆகியோரைவணங்கி, சனிக்கிழமை தோறும் சனீஸ்வரனுக்கு எள் விளக்குப் போட இன்னல்கள் குறையும். திருநள்ளாறு சென்றுவரவும் தீமைகள் குறையும்.

ராகு: ஆண்டின் முற்பகுதியில் புது வீடு கட்டி குடி போவீர்கள் பிற்பகுதியில் அலைச்சல் அதிகரிக்கும். கேது: ஆண்டு முழுவதும் தொழில் முன்னேற்றம் லாபம் அதிகரிக்கும்.

மிதுனம்: 
(மிருகசிரீடம்-3,4 பாதங்கள், திருவாதிரை-1,2,3,4 பாதங்கள், புனர்பூசம்-1,2,3பாதங்கள்) கல்விக்காரகனான புதனை அதிபதியாகக் கொண்ட மிதுனராசி அன்பர்களே!தங்கள் இராசிக்கு ஹேவிளம்பி வருட கிரக நிலைகள் தரும் பலன்களைப்பார்ப்போம். சூரியன்: தானதருமங்கள் செய்யும் அளவுக்குச் செல்வநிலை உயரும். வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும் என பாடும் நிலைக்கு உயர்வீர்கள். எனவே, எந்த முயற்சியிலும் துணிந்து இறங்கி முன்னேற்றம் காணலாம்.

அரசுத் துறையால் இலாபம்அல்லது அரசில் வேலைவாய்ப்பு ஆகியவை ஏற்படலாம். மாதத்தில்பணம் காசு சேரும். எவரும் சாதிக்க முடியாத சாதனைகளைப் புரிவார்.நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். சித்திரை மாதத்தில் சிறந்த வாகனயோகம்ஏற்படும். வீட்டில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறும். செவ்வாய்: சுப பலன்களைஎதிர்பார்க்கலாம். சகோதரரால் நன்மைகள் ஏற்படும். எதையும் செய்துமுடிக்கும் துணிச்சல் உண்டாகும். சிலருக்கு வாகனங்களில் செல்கையில் எச்சரிக்கையுடன் இருக்காவிட்டால் சிறு விபத்துக்கள் ஏற்படலாம். சின்னவிஷயங்களுக்காக அதிகக் கோபம் கொண்டால் டென்ஷனால் ஆரோக்கியக் குறைவுகள் ஏற்பட வாய்ப்புண்டு. புதன்: சுபபலன்களைத் தருகிறார்.

பலவகையான யோகங்கள் ஏற்பட்டு ஜாதகர் அரசனுக்கு நிகராக வாழ்வார். சேவை செய்ய பணியாட்கள்,பணிப்பெண்கள் அமைவர். சந்ததி விருத்தி ஏற்படும். பூமி, மனை, வீடுகள் ஆகியவற்றால் இலாபம் ஏற்படும். பங்குச் சந்தையில் அதிக இலாபங்களை எதிர் பார்க்கலாம். அரசு வேலை கிடைக்கலாம். சுக்கிரன்: சுப பலன்களைக் கொடுக்க வல்லவர் சுக்கிரன். ஆரம்பத்தில் உயர்ந்த செல்வந்தர்களின் நட்புக் கிடைக்கும். முகத்தில் அறிவுச் சுடரொளி வீசும். தனக்கென அழகிய தனிவீடு அமையும். நல்ல குழந்தை பிறக்கும்.மனைவிக்கு வயதானாலும் எழில் நிறைந்தவராக இருப்பார். நல்ல குரு அமைவார்.

அவரால் வாழ்வில் ஒளியும் முன்னேற்றமும் பெருகும். குரு: ஆவணி 27 இல் துலாத்துக்கு மாறும் தேவகுரு இதுநாள் வரை சுக பாவம் அமர்ந்து நிம்மதி, சுகத்தைக் கொடுத்தாலும் புத்திர பாவமேறி, வாழ்க்கையை தனவாசம் மிக்கதாக மாற்றி விடுவார். இன்னல்களை நீக்கி இன்பம் தருவார். செல்வம் சேரும். வாக்கு வன்மைஅதிகரிக்கும். புத்தி தெளிவும், அறிவுக் கூர்மையும் ஏற்படும். பெயரும் புகழும்ஓங்கும். வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.

சனி: இந்த வருடம் கண்டச் சனியாகி குறிக் கோளற்ற பயணங்களைத் தரும். சிலருக்கு வெளிநாட்டு வாசம் ஏற்படும். ஆடியில் ருண பாவம் அமர்ந்துசுப பலனைத் தருகிறார். புதுவீடு கட்டுதல் போன்ற எல்லாமே நல்லதாகநடக்கும். பதவி உயர்வு, வேலையற்றவர்களுக்கு வேலை கிடைத்தல், சுவை மிக்க இராஜ உணவு கிடைத்தல். என இராஜபோக வாழ்க்கை அமையும். இதுநாள் வரை இருந்து வந்த இக்கட்டான நிலைகள் இருந்த இடம் தெரியாமல் போய் பொன்னும் பொருளும் சேரும்.

ராகு: ஆண்டின் முற்பகுதியில் அலைச்சல் அதிகமாக இருக்கும் பிற்பகுதியில் பண வரவுஃப் அதிகரிக்கும். கேது: ஆண்டின் முற்பகுதியில் வெளிநாடு செல்லும் அதிர்ஷ்டம் கிடைக்கும் பிற்பகுதியில் போக்குவரத்தில் கவனம் தேவை.

கடகம்:
 (புனர்பூசம்-4 ஆம் பாதம், பூசம்-1,2,3,4 பாதங்கள், ஆயில்யம்-1,2,3,4 பாதங்கள்) தாய்காரகனான சந்திரனை அதிபதியாகக் கொண்ட கடக ராசி அன்பர்களே!தங்கள் இராசிக்கு ஹேவிளம்பி வருட கிரக நிலைகள் தரும் பலன்களைப்பார்ப்போம். சூரியன்: விருப்பமானவர்களுடன் உறவு ஏற்படும். தமக்குப் பிடித்தமான இடத்துக்கு வேலைமாற்றம் ஏற்படும். விரும்பிய இடத்திற்கு வேலை மாற்றம் கிடைக்கும். அரசாங்க முக்கியஸ்தர்களின் ஆதரவு கிடைக்கும். கல்வியில் வெற்றி, அரசுத்துறையில் இலாபம் ஏற்படும். மிக்க சுகம் உண்டாகும்.வாழ்க்கையில் அதிர்ஷ்டமயமான நல்ல திருப்பங்கள்ஏற்படும்.

பிறர் மேல் இரக்கம் கொள்வார். சுபகாரியங்கள் எண்ணியது எண்ணியபடி நடக்கும். செவ்வாய்: சிறப்பான பலன்களை எதிர்பார்க்கலாம். பயிர், மனை இவற்றால் இலாபம் ஏற்படும்.சிலருக்கு சில மாதங்களில் உறவினர் பகையும், வீட்டில் குழப்பமும்உண்டாகலாம். புதிய ஆடை சேர்க்கை, தானியவிருத்தி, பின்னர் வரும்காலத்தில் கீழான மனிதர்களால் நன்மைகள் ஏற்படும். உடலில் ஒளியும்,அழகும், பொலிவும் கூடும். சொல் வன்மையால் அதிக சம்பாத்தியம் ஏற்படும்.மனைவி மூலம் பூர்ண சுகம் கிடைக்கும். புதன்: பொதுவாக சுப பலனைத் தருவார். வீட்டில் சுபகாரிய நிகழ்ச்சிகள் சிறப்பாக நடக்கும. வழக்குகள் அனைத்தும் சாதகமாகவே முடியும். எழுத்துத் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

பல வழிகளிலும் பணம் வந்து சேரும். சிலர்பிறருக்குப் பிணையாக நிற்கப் போய் அவர்கள் கடனுக்குப் பொறுப்பேற்க நேரலாம். எச்சரிக்கை தேவை. மாணவர்களுக்குக் கல்வியில் தடைகள்ஏற்படலாம். சுக்கிரன்: வருடத்தின் துவக்கத்தில் சுக்கிரனின் அசுப பலன்களை உணர்வீர்கள். வயிற்று உபாதைகள் ஏற்படலாம். வழக்குகளில் வெற்றி உண்டாகும். பின்னர், எல்லா வசதிகளும் இன்பமும் உண்டாகும். உயர்ந்த செல்வநிலையும் அடைவர். பின் வரும் மாதங்களில் மனைவியிடம் அன்புஉடையவராக இருப்பர். மந்திரி போன்ற உயர் பதவிகள் கிடைக்கும். கூட்டு வியாபாரத்தில் உள்ள வியாபாரிகளுக்கு மோசடி காரணமாக நஷ்டங்கள் ஏற்படலாம்.

குரு: ஆவணி 27 ஆம் தேதியன்ற சுக பாவமான துலாத்திற்கு மாறும்குரு மணமாலையும் மஞ்சளும் கூடி, மங்கையர் மண மேடையில் உலாவரச்செய்வார். புதிய வீடு, வாகனம் வந்து சேர்ந்து, குடும்பத்தில் மகிழ்ச்சிஉண்டாகும். மணவாழ்க்கையும் மகிழ்ச்சி நிறைந்ததாக அமையும். தொழில் வளர்ச்சி எதிர்பார்த்த அளவுக்கு நல்ல முன்னேற்றத்துடன் இருக்கும்.அரசு மூலம்வெகுமதிகள் கிடைக்கும். சிலர் இராஜ தந்திரத்தால் அரசியலில் உயர்பதவிகளை அடைவர்.

சனி - ருண, ரோக, சத்ரு ஸ்தானத்திற்கு மாறும் சனியால், எல்லா வகையிலும் பொன்னும் பொருளும் சேரும். புது வீடு வாங்கும் யோகம் ஏற்படும். பணியில் உத்தியோக உயர்வுகளை எதிர்பார்க்கலாம். ஆடி முதல் கார்த்திகை மாதங்கள் தவிர மற்ற மாதங்கள் உங்களுக்கு இராஜயோகம்தான், இம் மாதங்களில் மட்டும் முன்னோர் சொத்துக்களில் இருந்து வந்தபிரச்சனைகள் மத்தியஸ்தம் மூலமாக சுமுகமாக முடியும். அரசு அதிகாரிகள்தாங்கமுடியாத கெடுபிடிகள்செய்வர். சனி பகவானின் சன்னதிக்குச் சென்று எள்தீபம் ஏற்றி வழிபடுதலும், ஒருமுறை திருநள்ளாறு சென்று வருதலும் நலம்பயக்கும். ராகு: ஆண்டின் முற்பகுதியில் பண வரவு அதிகமாக இருக்கும் பிற்பகுதில் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்கவும்

கேது: ஆண்டின் முற்பகுதியில் பலவிதமான அவமானங்களை தருவார் பிற்பகுதியில் அனைவருடனும் நல்லுறவு உண்டாகும். சிம்மம் முதல் விருச்சிகம் வரையிலும், தனுசு முதல் மீனம் வரையிலும் புத்தாண்டு ராசி பலன்கள் வெளியாகும்.


--------------------------------------------

சுப ஸ்ரீ துன்முகி வருஷம் தை மாதம் (26.01.2017) 13ம் தேதி வியாழக்கிழமை இரவு சுமார் 7:29 மணியளவில் சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசுராசிக்குள் பிரவேசிக்கிறார்.

சிம்ம லக்னம் தனுசு ராசி பூராட நட்சத்திரம் 4ம்பாதத்தில் சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசுராசிக்கு பெயர்ச்சியாகிறார்.
இந்த சனிப்பெயர்ச்சியின் பலன்களை பார்க்கலாம்.


மேஷம்: அனைவரையும்அன்பினாலும் பாசத்தினாலும் வீழ்த்துபவர்களே, சமாதானத்தையும், அமைதியையும் விரும்புபவர்களே, கடினமான காரியங்களையும் திட்டமிட்டு செய்து வெற்றியாக்கி காட்டும் சக்தி கொண்டவர்கள் நீங்கள். இதுவரை உங்களது சப்தம களத்திர ஸ்தானத்தில் கண்டச் சனியாக இருந்த சனி பகவான் இனி ஆயுள் ஸ்தானத்திற்கு அஷ்டம சனியாக மாறுகிறார்.

அவர் தனது ஏழாம் பார்வையாக உங்களது தன வாக்கு குடும்ப ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக உங்களது பஞ்சம, பூர்வ, புண்ணிய ஸ்தானத்தையும், தனது மூன்றாம் பார்வையால் உங்களது தொழில், கர்ம ஜீவன ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

உங்களின் தோற்றப் பொலிவு கூடும். கடும் குழப்பத்திற்குப் பிறகு மனதில் தெளிவு பிறக்கும். திட்டமிடாமல் காரியங்களைச் செய்யும்போது அலைச்சல்கள் அதிகரிக்கும். மனதை ஒருமுகப்படுத்தி உழைக்கத் தொடங்குவீர்கள்.

மற்றவர்களின் மனதைத் துல்லியமாக அறிந்து கொள்வீர்கள். பிள்ளைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள்.

அவர்களும் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். உங்களின் மனதை அழுத்திக் கொண்டிருந்த பல பிரச்னைகள் விலகும். வம்பு, வழக்குகளில் ஓரளவு சாதகமான திருப்பங்கள் ஏற்படும்.

அதனால் விட்டுக் கொடுத்துச் சென்று வழக்குகளை முடித்துக் கொள்ளவும்.

இந்தப் பெயர்ச்சியின் போது கேது உங்களின் குடும்ப ஸ்தானத்தைப் பார்ப்பதால் நீங்கள் பிடிவாதங்களை தளர்த்திக் கொண்டு அனைவரிடமும் ஒற்றுமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.


ரிஷபம்: “வாக்கே வாழ்வு’’ என்ற கூற்றுப்படி எடுத்த காரியத்தையும், கொடுத்த வாக்கையும் காப்பாற்றுவீர்கள். உங்களது உழைப்பால் மற்றவர்களை வாழவைப்பீர்கள். இதுவரை உங்களது ரண, ருண களது ராசியையும், பத்தாம் பார்வையாக உங்களது சுக ஸ்தானத்தையும், தனது மூன்றாம் பார்வையால் உங்களது பாக்கிய ஸ்தானத்தையும் பார்க்கிறார். இதனால் சற்று மந்தமான நிலை உண்டாகும். மனதைத் தெம்பாக வைத்துக் கொண்டால் எதையும் எதிர் கொள்ளலாம். தேக ஆரோக்யத்தில் கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

இதனால் உங்களின் செயல்களைக் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க இயலாமலும் போகும். அதேநேரம் பல சாதகமான நிலைமைகளும் வர இருக்கிறது. மூன்றாமிடத்தில் இருக்கும் குரு பகவான், உங்களின் வெளியூர் மற்றும் வெளிநாட்டுத் தொடர்பு களை வலுப்படுத்துவார். செலவுகள் அதிகரிக்கும் என்பதால் அவற்றை ஈடுகட்ட பழைய கடன்களை வசூலிப்பீர்கள். நீங்கள் விரும்பிய வீட்டிற்குக் குடிபெயர்வீர்கள். சுகபோக வசதிகளை அனுபவிப்பீர்கள். உங்களின் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். உடல் உழைப்புக்கு ஏற்ற வருமானம் கிடைக்கும். அனைத்துச் செயல்களையும் பொறுமையுடனும், நிதானத்துடனும் செய்ய வேண்டும்.

உங்களின் ஆலோசனைகள் உங்களுக்குப் பயன்படுவதை விட மற்றவருக்கு பயன்படும். நீரிழிவு நோய் மற்றும் கல்லீரல் நோய் போன்றவை உள்ளவர்கள் கூடுதல் கவனத்தோடிருக்கவும். மது உள்ளிட்ட போதைப் பழக்கங்கள் உள்ளவர்கள் அதை விடுவதே சிறந்தது.


மிதுனம்: மற்றவர்களின் உணர்வு களுக்கு மதிப்பளித்து, மரியாதை கொடுப்பீர்கள். நீங்கள் எதிலும் அறிவார்ந்து செயல்படுவீர்கள். இதுவரை உங்களது பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்த சனி பகவான் இனி ரண, ருண, ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார். அவர் தனது ஏழாம் பார்வையாக உங்களது அயன சயன போக ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக உங்களது தைர்ய வீரிய ஸ்தானத்தையும், தனது மூன்றாம் பார்வையால் உங்களது அஷ்டம ஆயுள் ஸ்தானத்தையும் பார்க்கிறார். இடம் பெயரும் கர்மகாரகனான சனியால் உங்களின் பொருளாதார நிலை மேம்படும்.

பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை செலுத்துவீர்கள். பொதுநலக் காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும். திருமணம் தடைபட்டவர்களுக்கு நல்ல இடத்தில் சம்பந்தம் கைகூடும். குழந்தை இல்லாதோர்க்கு மழலைச் செல்வம் கிடைக்கும்.

குடும்பத்தில் குதூகலம் நிறையும். ஸ்திர ராசியில் சஞ்சரிக்கப் போகும் சனி பகவானால் மகிழ்ச்சி தரும் பயணங்களை மேற்கொள்வீர்கள். அதன் மூலம் வருமானமும் பெருகும். உங்கள் செயல்களை நேர்மையான பாதையில் செவ்வனே செய்து முடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெறுவீர்கள். பங்குச்சந்தை முதலீடு போன்ற இனங்கள் மூலம் திடீர் பணவரவு உண்டாகும்.

ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். குலதெய்வ வழிபாடுகளை சிறப்பாகச் செய்வீர்கள். தர்ம காரியங்களுக்கு செலவு செய்து மகிழ்வீர்கள். நல்ல குருநாதரிடம் தீட்சை பெறும் பாக்கியமும் உண்டாகும். உடல்நலனைப் பொறுத்தவரை பலருக்கு சரியான நேரத்தில் உணவு உட்கொள்ள முடியாமல் பணிகள் கசக்கிப் பிழியக் கூடும்.


கடகம்: எதிலும் துடிப்புடனும், ஈடுபாட்டுடனும் ஈடுபடுவீர்கள். உங்கள் கடமையிலும், காரியத்திலும் கண்ணாக இருப்பீர்கள். சோம்பலை விரும்ப மாட்டீர்கள். இதுவரை உங்களது சுக ஸ்தானத்தில் இருந்த சனி பகவான் இனி பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். அவர் தனது ஏழாம் பார்வையாக லாப ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக தனவாக்கு குடும்ப ஸ்தானத்தையும், தனது மூன்றாம் பார்வையால் களத்திர ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

அர்த்தாஷ்டம ஸ்தானத்திலிருந்து விலகியிருக்கும் சனிபகவான் செழிப்போடு செல்வாக்கையும் உங்களுக்கு அள்ளித் தருவார். அனைத்துக் காரியங்களிலும் கூடுதலான வெற்றிகளைக் காண்பீர்கள். சேமிப்புகளை ஆதாயம் தரும் விஷயங்களில் முதலீடு செய்வீர்கள். திட்டமிட்டு சரியாகச் செயலாற்றுவீர்கள். கடினமாக உழைத்து லாபமடைவீர்கள். மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றல் உண்டாகும். தொழிலில் புதிய வாய்ப்புகளை பெறுவதற்காக அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள்.

லாப ஸ்தானத்தைப் பார்க்கும் சனி பகவான், உங்களை மூத்த சகோதர, சகோதரிகளுடன் இணைத்து செயல்பட வைப்பார். சிறிய முதலீட்டிலும் பெரிய வெற்றிகளைக் காண்பீர்கள். ஆதாயம் தரும் தொழில்களை தொடங்குவீர்கள். தொலைவிலுள்ள புண்ணியத் தலங்களுக்கு ஆன்மிகப் பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பு, பலருக்குக் கிடைக்கும். உடல் உபாதைகள் ஏற்படாது.


சிம்மம்: முன் வைத்த காலை பின் வைக்காமல் வெற்றி நடை போடுவீர்கள். யாரையாவது நம்பி விட்டால் வாரி வழங்கி விடுவீர்கள். எடுத்த முடிவில் இருந்து சிறிதும் இறங்கி வர மாட்டீர்கள்.

இதுவரை உங்களது தைரிய வீர்ய ஸ்தானத்தில் இருந்த சனிபகவான் இனி சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். அவர் தனது ஏழாம் பார்வையாக உங்களது தொழில், கர்ம, ஜீவன ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக உங்களது ராசியையும், தனது மூன்றாம் பார்வையால் உங்களது ரண, ருண ரோக ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

சனி பகவான் அர்த்தாஷ்டம சனியாக தற்போது பெயர்ந்திருக்கிறார். இதுவரை இருந்த கடினமான சூழ்நிலையிலிருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தில் உற்சாகம் கரை புரளும். புத்திரர்களாலும், பேரப் பிள்ளைகளாலும் மகிழ்ச்சி ஏற்படும்.

உயர்ந்த பதவிகள் உங்களைத் தேடிவரும். சமுதாயத்தில் உயர்ந்தோரின் நட்பும், ஆதரவும் கிடைக்கும். செய்தொழிலை விரிவுபடுத்த பெரிய அளவில் கடன் வாங்குவீர்கள். அதேநேரம் அனைத்து விவரங்களையும் நன்றாகப் புரிந்துகொண்ட பிறகே ஆவணங்களில் கையொப்பமிடவும்.

மன அழுத்தம் குறைந்து தெளிவாகச் சிந்திக்கும் காலமிது என்பதால் உங்களுடைய உள்ளம் தெளிவான வழிகளிலேயே இட்டுச் செல்வதற்கு வாய்ப்புகள் அதிகம். வம்பு, வழக்குகளிலிருந்தும் விடுபட்டு புதிய மனிதனாக ஆவீர்கள். ஆன்மிகத்தில் புதிய விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். தர்ம காரியங்களுக்குச் செலவு செய்வீர்கள்.


கன்னி: வெள்ளை மனதுடன் எளிதில் யாரையும் நம்பி விடும் பழக்கம் உடையவர்கள். உங்களுக்கு பொதுவாக புத்தி கூர்மையுள்ள மதிநுட்பம் மிகுந்த வாழ்க்கைத்துணை அமைந்திருக்கும்.

இதுவரை உங்களது தன, வாக்கு, குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில் அமர்ந்து சோகம், குழப்பம், மன உளைச்சல் என உங்களின் பொறுமையை சோதித்த சனீஸ்வரன் இனி மூன்றாம் ஸ்தானத்திற்கு வருகிறார். இதுவரை உங்களது தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் இருந்த சனி பகவான் இனி தைரிய வீர்ய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

அவர் தனது ஏழாம் பார்வையாக உங்களது பாக்கிய ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக உங்களது அயன, சயன, போக ஸ்தானத்தையும், தனது மூன்றாம் பார்வையால் உங்களது பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும் பார்க்கிறார். இனி சனி பகவான் தைரிய வீர்ய ராசியில் சஞ்சரிக்கிறார். பொதுவாக சனி பகவான் மூன்றாம் ராசியில் சஞ்சரிப்பது சிறப்பு என்பதே பொது விதி. அதுவே இதில் கவனிக்கப்பட வேண்டிய மிக முக்கிய விஷயம், இதனால் உங்களுக்கு திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் கிடைக்கும்.

வெளிநாடுகளுக்குச் சென்று வரும் யோகம் உண்டாகும். பிறரின் முகபாவனைகளைக் கண்டே அவர்களின் மனதை அறிந்து கொள்வீர்கள். தெய்வ வழிபாடுகளில் ஈடுபடுவீர்கள். ஆன்மிகப் பெரியோர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். சமுதாயத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.


துலாம்:
எல்லோரிடமும் நல்ல பெயரை எளிதில் சம்பாதித்து விடுவீர்கள். தோல்வியைக் கண்டு துவளாதவர். போராட்ட குணம் உடையவர். நீங்கள் நவகிரகங்களில் அசுரகுரு என்றழைக்கப்படும் தனகாரகனாகிய சுக்கிரனை ஆட்சி நாயகனாக கொண்டவர்கள்.

இதுவரை ஜென்ம சனியாகி உங்களை பாடாய்ப்படுத்திய சனீஸ்வரன் இனி உங்களது தன, வாக்கு, குடும்பஸ்தானமான இரண்டாம் வீட்டில் அமரப் போகிறார்.இதுவரை உங்களது ராசியில் இருந்த சனி பகவான் இனி தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

அவர் தனது ஏழாம் பார்வையாக உங்களது அஷ்டம ஆயுள் ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக உங்களது லாப ஸ்தானத்தையும், தனது மூன்றாம் பார்வையால் சுக ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

பலவிதமான குழப்பங்கள் இருந்தும் திட சிந்தனைகளுடன் உங்கள் குறிக்கோள்களை அடைவீர்கள். வருமானத்தைப் பெருக்குவதற்கு நல்ல வழிகள் உதயமாகும். நிதி நெருக்கடிகள் ஏற்படலாம்.


விருச்சிகம்: எல்லோரிடமும் கண்டிப்பும் கட்டாயமும் உள்ளவர்கள் நீங்கள். எதிலும் சுறுசுறுப்பாக இருப்பவர். துணிச்சலுக்கும், தைரியத்திற்கும் பெயர் போனவர். வாக்கு தவறாதவர்.

இதுவரை விரயச் சனியாகி உங்களுக்கு பலவிதமான முறையிலும் விரயங்களை ஏற்படுத்திய சனீஸ்வரன் இனி உங்களது ஜென்ம ஸ்தானத்தில் அமரப் போகிறார். இதுவரை உங்களது அயன, சயன, போக ஸ்தானத்தில் இருந்த சனி பகவான், இனி உங்களது ராசிக்கு மாறுகிறார். அவர் தனது ஏழாம் பார்வையாக உங்களது களத்திர ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக உங்களது தொழில் கர்ம ஜீவன ஸ்தானத் தையும், தனது மூன்றாம் பார்வையால் உங்களது தைரிய, வீர்ய ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

வருமானம் சீராகவே இருக்கும் என்றாலும் பேராசைக்கு இடம் கொடுக்காமல் பணியாற்றவும். உடல் சோர்வு அதிகரிக்கலாம். நண்பர்கள்போல் பழகும் விரோதிகளிடம் கவனமாக இருக்கவும். அவர்கள் உங்களுக்கு எதிராகச் சில சமயம் சதி வேலைகளில் ஈடுபடலாம். ஆனாலும் கலங்க வேண்டாம்.

துர்க்கையன்னையை தொடர்ந்து வழிபட்டால், எதிரிகள் உதிரிகளாகித் தொலைந்து போவார்கள். யாராக இருப்பினும் நன்கு யோசித்த பிறகே வாக்கு கொடுக்கவும். மற்றபடி கடன் தொல்லைகள் ஏற்படாது.


தனுசு: நீங்கள் மனசாட்சிக்கு விரோதமான காரியங்களை செய்ய மாட்டீர்கள். நீங்கள் வானத்தில் கோட்டை கட்டுவீர்கள். பிறருக்கு கொடுத்து கொடுத்தே மகிழ்ச்சியடைவீர்கள். இதுவரை லாபஸ்தானத்தில் இருந்து உங்களுக்கு பல விதமான முறையிலும் லாபங்களையும் விரயமாக்கிய சனீஸ்வரன் இனி விரயச்சனியாகவும் செயல்படப் போகிறார்.

இதுவரை உங்களது லாப ஸ்தானத்தில் இருந்த சனி பகவான் இனி உங்களது அயன, சயன, போக ஸ்தானத்திற்கு மாறுகிறார். அவர் தனது ஏழாம் பார்வையாக உங்களது ரண, ருண, ரோக ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக உங்களது பாக்கிய ஸ்தானத்தையும், தனது மூன்றாம் பார்வையால் உங்களது தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

ஏழரைச் சனியின் ஆரம்பத்தில் இருக்கிறீர்கள். விரயஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான் உங்களை எதிலும் நிதானமாகவும், அளவெடுத்துச் சிறப்பாகவும் செயல்பட வைப்பார். இதனால் சூழ்நிலைக்கு ஏற்றவாறு பேசி, காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். இல்லத்தில் திருமணம், குழந்தைப் பிறப்பு போன்ற சுப காரியங்கள் நடக்கும். பூர்வீகச் சொத்துகள், சிரமமில்லாமல் வந்து சேரும். ஆலயத் திருப்பணிகளிலும், தர்ம காரியங்களிலும் ஈடுபடுவீர்கள். வருமானம் எதிர்பார்ப்பிற்கும் அதிகமாகக் கிடைக்கும்.


மகரம்:
எவருக்கும் அஞ்சாமல் உண்மையைப் பேசுபவர்கள். எல்லாரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள், நீங்கள். இதுவரை பத்தாம் ஸ்தானத்தில் இருந்த சனீஸ்வரன் இனி லாபச் சனியாக வந்து அமரப் போகிறார்.

இதுவரை உங்களது தொழில், கர்ம, ஜீவன ஸ்தானத்தில் இருந்த சனி பகவான் இனி உங்களது லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார். தனது ஏழாம் பார்வையாக உங்களது பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக அஷ்டம ஆயுள் ஸ்தானத்தையும், தனது மூன்றாம் பார்வையால் ராசியையும் பார்க்கிறார்.தாயின் வழியில் நன்மைகள் உண்டாகும்.

உங்களை விட்டு விலகியிருந்த தாய் வழி உறவினர்கள் மீண்டும் வந்து இணைவார்கள். அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து, நன்மதிப்பை உயர்த்திக் கொள்வீர்கள். அதிகமான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். எந்த வயதினருக்கும் புதிதாக ஒரு கல்வியோ, கலையோ பயில வாய்ப்பு உண்டாகும். சிலருக்கு வெளியூர் சென்று படிக்கும் வாய்ப்புகளும் கிடைக்கும்.

செய்தொழிலில் வளர்ச்சி உண்டாகும். பழைய வாகனங்களை விற்றுவிட்டு புதிய வாகனங்களை வாங்குவீர்கள். அதேநேரம் உடல் நலத்தில் கவனமாக இருக்கவும். சரியான நேரத்தில் ஆகாரம் உட்கொண்டு, ஒவ்வாத உணவுகளைத் தவிர்த்தாலே போதும்; நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.


கும்பம்:
எதிலும் மனசாட்சிக்கு விரோதமான காரியத்தை செய்யாதவர்கள் நீங்கள். குடும்பப் பெருமையைக் காப்பவர்கள். பெரியவர்களை மதிப்பீர்கள். சமுதாய மாற்றத்திற்கு பாடுபடுவீர்கள். இதுவரை பாக்கியஸ்தானமான ஒன்பதாவது ஸ்தானத்தில் இருந்த சனீஸ்வரன் இனி பத்தாமிடத்தில் வந்து அமரப் போகிறார்.

இதுவரை உங்களது பாக்கிய ஸ்தானத்தில் இருந்த சனிபகவான் இனி உங்களது தொழில் கர்ம, ஜீவன ஸ்தானத்திற்கு மாறுகிறார். அவர் தனது ஏழாம் பார்வையாக உங்களது சுக ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக உங்களது களத்திர ஸ்தானத்தையும், தனது மூன்றாம் பார்வையால் உங்களது அயன, சயன, போக ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

உங்கள் சகோதர, சகோதரிகளிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை வளரும். அவர்களுடன் சேர்ந்து இனிய பயணங்களைச் செய்வீர்கள். உங்களின் ஆற்றல் அதிகரிக்கும். பகைவர்களை வெற்றி கொள்வீர்கள். உடல் நலம் சீராகும். வருமானம் சிறப்பாக இருக்கும். உங்களின் பெருந்தன்மையை அனைவரும் பாராட்டுவார்கள்.


மீனம்:
நட்புக்கும், பாசத்திற்கும் முக்கியத்துவம் அளிப்பீர்கள். நீங்கள் எல்லோரையும் எளிதில் நம்புபவர்கள். மனிதநேயம் அதிகம் கொண்டவர்கள்.

இதுவரை உங்களது அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் இருந்த சனி பகவான் இனி உங்களது பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். அவர் தனது ஏழாம் பார்வையாக உங்களது தைரிய, வீர்ய ஸ்தானத்தையும், பத்தாம் பார்வையாக ரண, ருண, ரோக ஸ்தானத்தையும், தனது மூன்றாம் பார்வையால் உங்களது லாப ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். சரளமான பணவரவால் சந்தோஷம் அடைவீர்கள். நம்பிக்கையுடன் பணிகளில் ஈடுபடுவீர்கள். நண்பர்களுக்கும் உற்றார் உறவினர்களுக்கும் தேவையான உதவிகளைச் செய்து மன நிறைவு அடைவீர்கள்.

குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். மழலைச் செல்வம் இல்லாதவர்களுக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கும். புதிய முதலீடுகளில் தைரியத்துடன் ஈடுபடுவீர்கள். உங்களின் முழுத் திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெறுவீர்கள். பழைய கடன்களும் வசூலாகும். எதிரிகளின் பலம் குறையும். வீடு, வாகனம் வாங்கும் யோகம்
உண்டாகும்.

தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். மன அழுத்தம் மறையும். சிந்தனையில் தெளிவு உண்டாகும். சகோதர, சகோதரிகள் மற்றும் நண்பர்கள் மூலமாக நன்மை அடைவீர்கள்.