WELCOME TO PANNAGAM.COM & PTV

பண்ணாகம் இணையம்

 சிறப்புச் செய்திகள்   தகவல்கள்

பண்ணாகம் இணையம் நன்றி பகிர்வதில் 


பெருமகிழ்வடைகின்றது.


எமது பண்ணாகம் இணையத்தின் பிரதம ஆசிரியர் திரு.இக.கிருஷ்ணமூா்த்தி அவர்களுக்கு யேர்மனி நுண்கலைக் கல்லுாரியால்  `` ஊடக வித்தகர்``  என்னும் உயரிய விருதை வழங்கி கெளரவித்த வேளையில்  பல இணைய அபிமானிகளும், நண்பர்களும்  முகநுாலிலும், மின்னஞ்சலிலும்,  தமது தகவல் பக்த்திலும், தொலைபேசியிலும்,  நேரடியாகவும், வைபரிலும் உலகம் எங்குமிருந்து வாழ்த்துக்களை கூறிய வண்ணம் இருக்கின்றார்கள். பலர் தமது முகநுாலின் முன் பதிவில் பதிவிட்டும் மதிப்பளித்திருந்தார்கள்  மற்றும் இவ்விருதை வழங்க தெரிவு செய்தவர்களுக்கும்  வழங்கிய நயினை விஜயன் தமிழருவி நிர்வாகத்தினருக்கும்  எமது உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.


நன்றியுடன்

பண்ணாகம் இணைய நிர்வாகத்தினர்.

 

நேரடியாக தமது Facebook  பக்கத்தில் அன்புள்ளங்களின் பதிவுகள் சில  ....... 

இவர்களுக்கும் நன்றிகள் பல

எசன் நகரில் வாணிவிழா கலைமாலை

யேர்மனி  நுண்கலைக் கல்லுரி மற்றும் எசன் தமிழ்கலாச்சார நற்பணிமன்றத்தினரால் 30. 9.2017 இல் 32 வது ஆண்டு வாணிவிழா  கலைமாலை

தமிழருவி விருது 2017லில் 
``ஊடக வித்தகர்´´ விருதுக்கௌரவம்    பண்ணாகம்  பிரதம ஆசிரியர் திரு  கிருஷ்ணமூர்த்தி அவர்கட்கும் ,  ``ஊடகத்தென்றல் `` விருதுக்கௌரவம்    
எஸ்.ரி-எஸ்  இணைய திரு.தேவராசா அவர்கட்கும்  வழங்கப்பட்டது
1. Oktober 2017

யேர்மனி  நுண்கலைக் கல்லுரி மற்றும் எசன் தமிழ்கலாச்சார நற்பணிமன்றத்தினரால் 30. 9.2017 இல் 32 வது ஆண்டு வாணிவிழா  கலைமாலை நிகழ்வில்     பண்ணாகம்.கொம்  இணைய பிரதம ஆசிரியர்  திரு.   கிருஷ்ணமூர்த்தியும் அவர்பாரியாரும்    சிறப்புப்பாக தமிழ்கலாச்சார நற்பணிமன்றத்தி ஷதிருனரால் கௌரவிக்கப்பட்டு ஊடகவித்தகர் என்ற கௌரவும் திரு ந‌யினை விஐயனால்  மக்கள் சார்பாக வழக்கப்பட்டுள்ளது என்பது சிறப்புக்குரியது,  இதேபோன்று   எஸ்.ரிஎஸ் இணைய ஆசிரியரும்  இசைஅமைப்பாளருமான  திரு தேவராசா அவர்கட்கு  ஊடகத்தென்றல்  என்ற கௌரவும் திரு ந‌யினை விஐயனால் மக்கள் சார்பாக வழக்கப்பட்டுள்ளது என்பதும் சிறப்புக்குரியது.

 விழா அரங்கில் பல்சுவை நிகழ்வுகள்தமிழ்கலாச்சார நற்பணிமன்றத்தில் கலைகளை கற்றவர்கள் மேடைநிகழ்வுகளை வழங்க  தாளவாத்தியங்கள் வீணை, வயலின், சுரத்தட்டு என்று கற்றதை சிறப்புற இளம் கலைஞர்கள் பார்வையாளருக்கு நிகழ்வாக்கியது மிகச்சிறப்பு இதனுடன் நடனங்கள் இளையோர் நடிப்பில் இருநாடகங்கள் என வந்தோர் சிறப்பு எனச்சொல்லும் அளவுக்கு நிகழ்வுகள் அமைந்திருந்தது

இதில் இந்தியாவில் வந்திருந்தவரும் எமது பக்கவாத்தியத்தில் சங்கீத கச்சேரிஎமது சிறார்களின் வாய்ப்பாட்டு என சிறப்புற மேடையில் இடம்பெற்றது,

இதைஎல்லாம் செயல்வடிவமாக்கிய ந‌யினை விஐன் குடும்பத்தாரின் கலையார்வம் அவர்களின் அற்றலின் சிறப்பால் இன்நிகழ்வு சிறப்புக்கண்டது

இறுதி நிகழ்வாக பட்டிமன்றம் நடைபெற்றது  அதனைத் தொடர்ந்து பிரதம விருந்தினர்களால் மாணவர்களுக்கான  பரீட்சை சித்திச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.  2.30 மணிக்கு ஆரம்பமான நிகழ்ச்சிகள் இரவு 23 மணியளவில் நிறைவுகண்டது.

எமக்கு கிடைத்த  விழாவின்  சில காட்சிகள் 

எங்கள் தமிழினம் தந்த சித்த மருத்துவத்தை எங்கள் வாழ்க்கையில் பின்பற்ற உறுதி பூணுவோம். 
ஓர் இனமும் மொழியும் வாழவேண்டுமாயின் அதன் பெருமைகளை ஏனையவர்கள் தேடியறிய வேண்டுமாயின் முதலில் அந்த மொழியும் இனமும் சார்ந்தவர்கள் அதனைப் போற்றிப் பெருமைப்பட வேண்டும். 
அவ்வாறு செய்யாதவிடத்து குறித்த இனமும் மொழியும் காலச்சக்கரத்தில் தன்னிலை இழந்து போகும் என்பதே உண்மை. இந்த நிலைமைக்கு எங்கள் தமிழ் மொழியும் வந்து விடுமோ! என்ற ஏக்கம் நம்மிடம் இருக்கவே செய்கிறது. உலக மொழிகளில் தமிழ் மொழி காலத்தால் முந்தியது. எழுத்திலும் பேச்சிலும் வாழ்ந்து கொண்டிருப்பது. உலகின் பழைமைமிகு மொழிகளுக்கு வழங்கப்படும் செம்மொழி அந்தஸ்து எங்கள் உயிரினும் மேலான தமிழ் மொழிக்கும் கிடைத்துள்ளது. இருந்தும் எங்கள் மொழியை எங்கள் இனத்தை நாங்கள் முதலில் போற்றவும் மதிக்கவும் கெளரப்படுத்தவும் முன்வர வேண்டும். இதன் ஓர் அம்சமாக எங்களின் பண்பாட்டை, கலாசாரத்தை, தெய்வீக வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது கட்டாயமானதாக இருக்கும். கூடவே எங்கள் தமிழ் மொழி தந்த சித்த மருத்துவம் என்பது இன்று உலகம் வியக்கும் அளவில் மகத்துவம் கொண்டதாக உள்ளது. இருந்தும் சித்த மருத்துவத்தின் சிறப்பை மறந்தவர்களாக நாம் வாழ்வது வேதனைக்குரியது. தமிழ் மக்களின் உடல்நலத்தையும் ஆரோக்கியத்தையும் பாதுகாத்த சித்த மருத்துவம் இன்று ஆங்கில மருத்துவத்தின் மோகத்தில் எங்களால் புறந்தள்ளப்பட்டுள்ளது. உண்மையில் சித்தமருத்துவத்தின் சிறப்பே எங்கள் மூதாதையர்களின் ஆரோக்கியத்துக்கும் ஆயுள் பலத்துக்கும் பதினாறு செல்வத்துக்கும் அடிப்படையாக இருந்தது. உணவை மருந்தாகத் தந்து எங்களை நோயற்றவர்களாக வாழ வைத்த சித்த மருத் துவத்தை தூக்கியயறிந்துவிட்டு இன்று மாதந் தோறும் வைத்தியசாலைகளில் ஆங்கில மாத் திரைகளைப் பெற்று நாளும் அதனை விழுங்கும் நோயாளிகளாக நாம் மாறிவிட்டோம். இந்த நிலைமை நமக்குத் தேவைதானா என்பதை நாமே சிந்திக்க வேண்டும். இந்தச் சிந்தனை மேலெழும்போது சித்த மருத்துவத்தின் மகத்துவம் உணரப்படுவதாக இருக்கும். இதனை ஊக்குவிப்பதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவத்துறையினர் மேற்கொண்டுள்ள சித்த மருத்துவக் கண்காட்சி அமையும் என்பதில் ஐயமில்லை. அந்த வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவத்துறையினர் மிகுந்த அர்ப்பணிப்புடன் நடத்துகின்ற சித்த மருத்துவக் கண்காட்சியை பார்வையிடுவதுடன் எங்கள் தமிழினம் தந்த சித்த மருத்துவத்தை எங்கள் வாழ்க்கையில் பின்பற்றவும் உறுதி பூணுவோம். இஃது எங்கள் மொழியை - எங்கள் இனத்தை உலகறிய வைக்கும். இது சத்தியம்.
மனிதன் இறந்த பின் மனித உடலுக்கு என்ன நடக்கிறது

மனித உடலில் உள்ள உயிர் பிரிந்த உடன் நமது இயற்கை, தன்னுடன் நமது உடலையும் சேர்த்து நடத்துவது கிடையாது. இயற்கையான முறையில் மனித உடல்கள் அழிந்து போகும் காலங்கள் போய் தற்போது நாம் பயன்படுத்தும் நவீன சடங்குகளால் இத்தகைய இயற்கை முறையில் அழிவதை நாம் நேரில் காண முடியாமல் போகின்றது. மண்ணில் புதைத்து அல்லது எரித்து உடலை நாம் தகனம் செய்யும் முறை பெரிய அளவில் ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும், இயற்கையாக அழுகி மண்ணோடு மண்ணாக தானே அழிவதை விட, மேல் கூறிய முறை நல்லது தான்.
 முன்பு மனிதன் இறந்த உடலை தூரத்தில் சென்று வைத்து விட்டு, அது தானே அழுகி மறைந்து போகும்படி விட்டு வருவார்கள். அது மட்டுமல்லாமல் 2003 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்புகளின் படி பண்டைய காலத்தில் மனிதர்கள் இறந்தவர்களை புதைத்ததற்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இது வடக்கு ஸ்பெயின் நாட்டில் 350,000 ஆண்டிற்கு முன் நடந்த சம்பவத்தில் விளக்கப்பட்டுள்ளது. இங்கு உடல் மக்கிப் போகும் போது என்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன? உடல் இறந்த பின் என்ன ஆகும் என்று 5 வித்தியாசமான விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. திசுக்கள் வெடித்து திறக்கும் இறந்த சில நிமிடங்களில் மனித உடல் அழுகத் துவங்கி விடுகின்றது. இதயத் துடிப்பு நின்றவுடன் உடல் குளிர்ந்த நிலைக்கு செல்கின்றது. இதை ஆல்கோர் மோர்டிஸ் என்று கூறுவார்கள். உடம்பின் வெப்பநிலை 1.5 டிகிரி பாரன்ஹீட் ஆகி ஒரு மணி நேரத்திற்கு பின் அறையின் வெப்பநிலைக்கு வருகின்றது. இந்த நேரத்தில் இரத்தத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடு அமிலத்தன்மையை அதிகப்படுத்துகின்றது. இதனால் திசுக்கள் வெடித்து, அதன் என்சைம்ஸ்களை வெளியிட்டு அவற்றை தன்னை தானே விழுங்கச் செய்கின்றது. வெளிர் மற்றும் ஊதா நிறத்திற்கு மாறுவது புவி ஈர்ப்பானது தனது முதல் காலை, மனிதன் இறந்த உடன் பதிக்கின்றது. அதாவது இறந்தவுடன் முழு உடம்பும் வெளிர் நிறத்திற்கு மாறி விடுகின்றது. அப்போது இரத்த அணுக்கள் கனமாக தோன்றுவதால், அவை தரையின் பக்கமாக ஈர்க்கப்படுகின்றன. ஆகையால் இரத்த ஓட்டம் நின்றிருக்கும் இந்த சமயத்தில், உடம்பின் பின்பகுதியில் ஊதா நிறத்தில் புள்ளிகளும் படைகளும் ஏற்படுகின்றன. இதை லிவர் மார்டிஸ் என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். அது மட்டுமல்லாமல் உடம்பில் எப்போது உயிர் போயிற்று என்றும் இதை கொண்டு தான் மருத்துவர்கள் கூறுவார்கள். உடலை இறுகச் செய்யும் கால்சியம் இறந்த உடல் இறுக்கமாகவும், அசைப்பதற்கு கடினமாகவும் இருக்கும். இதை ஆங்கிலத்தில் ரீகர் மார்டிஸ் என்று கூறுவார்கள். இறந்து மூன்று அல்லது நான்கு மணி நேரத்திற்கு பின் இந்த செயல் ஆரம்பிக்கின்றது. இதை தொடர்ந்து 12 மணி நேரத்தில் அதன் உச்சத்தையும் 48 மணி நேரத்தில் செயல் இழந்தும் போகின்றது. இது ஏன் நடக்கின்றது? தசைகளை சுற்றி உள்ள மென்படலங்களில் பம்ப் இருக்கின்றது. இறந்த பின்னர் அது செயலிழந்த கால்சியத்தை அதிக அளவில் பாயச் செய்து, உடம்பில் உள்ள தசைகள் எல்லாம் இறுகிய நிலையில் வைக்கிறது. இது தான் ரீகர் மார்டிஸ். தன்னைத் தானே செரித்துக் கொள்ளுதல் உடம்பு அழுகுவது பல படிகளை கொண்ட அழியும் முறையாகும். ரீகர் மோர்டிஸ் நிலை மெதுவாகவும் படிப்படியாகவும் நடப்பதால் அது முடியும் போது உடம்பு அடங்கி விடுகிறது. அதாவது அது தன்னைத் தானே அழித்துக் கொள்ள தயாராகி விடுகிறது. அதற்கு கணையம் தனக்குள் உள்ள என்சைம்களை வெளியேற்றி உடல் தன்னையே அழித்துக் கொள்ள உதவுகிறது. இதர நுண்கிருமிகள் இதனுடன் சேர்ந்து இந்த காரியத்தை விரைவுபடுத்துகின்றன. இதனால் வயிற்றின் கீழ் உள்ள உடம்பு பச்சை நிறத்திற்கு மாறி விடுகின்றது. மெழுகால் மூடப்படுவது உடல் அழுகிய நிலையில் உடம்பின் எலும்பு மட்டும் மீதமாகின்றது. ஆனால் சில உடல்கள் இந்த நிலைக்கு பதிலாக மெழுகால் மூடப்படுகின்றன. உடல் குளிர்ந்த மண் அல்லது குளிர்ந்த நீரை தொடர்பு கொண்டால் அடிப்போசியர் என்ற ஒரு மெழுகு பேன்ற கொழுப்பு மிக்க பொருள் உருவாகின்றது. இது பாக்டீரியாக்களால் உருவாக்கப்படுகின்றது. இந்த படலம் உள்ளிருக்கும் உறுப்புகளுக்கு பாதுகாப்பாக இருக்கின்றது. இறுதியாக புதைக்கப்பட்டாலும், எரிக்கப்பட்டு கரைக்கப்பட்டாலும், நாம் இறுதி சடங்கிற்கு பின் மண்ணையே சென்று சேர்கின்றோம். சிலர் மெழுகாக மாறக்கூடும்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


பண்ணாகம்.கோம் ஆசிரியர் திரு.கிருஷ்ணமூர்த்தி 2 வாரங்களுக்கு முன் ஜெர்மனி எஸ்ஸன் நகரில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் வாசித்தளித்த கட்டுரையை நமக்காக வழங்கியுள்ளார். அதனை பகிர்ந்து கொள்கிறேன்.
-டாக்டர் சுபாசினி - மலேசியா


திருக்குறளும் எதிர்காலச்சந்ததியும்
இக.கிருஷ்ணமூர்த்தி, எஸ்ஸன், ஜெர்மனி

வள்ளுவர் கண்ட திருக்குறள் கடைச்சங்க காலமான கி.மு. 300 க்கும் கி.பி. 250 க்கும் இடைப்பட்ட காலத்தில் மதுரையை நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னன் ஆண்ட பொழுது வள்ளுவர் என்ற நபர் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது.  திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளை தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றம் செய்ய மிகவும் சிரமப்பட்டதாகவும் முடிவில் ஔவையார் துணையோடு மதுரையில்  அரங்கேற்றியதாகவும் நம்பப்படுகிறது. 

திருக்குறளில் முதலாவது  ஈரடியான ‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு’ என்று தொடங்கி 1330  ஈரடி குறளில் உலகத் தத்துவங்கள் அனைத்தையும் புகுத்தி ‘திருக்குறள்’ என்னும் தமிழ் அமுதை மக்களுக்கு எடுத்துச் சொன்னவர் திருவள்ளுவர். இதை ஔவையார் மிக சிறப்பாக அணுவைத்துளைத்து எழுகடலையும் அதில் புகுத்தினால் போல் என அதை மேம்பாட்டை சுருக்க விளக்கினார் வள்ளுவர் உலகளாவிய தத்துவங்களைக் கொண்ட திருக்குறளை  உலக இலக்கிய அரங்கில் எல்லா மக்களால் ஏற்கப்பட்ட நுாலாக தமிழ்மொழிக்கென்று ஓர் உயர்ந்த இடத்தை நிலைப்பெறச்செய்தவர். இவர் உலக மக்களால்;, ‘தெய்வப்புலவர்’, ‘பொய்யில் புலவர்’, ‘நாயனார்’, ‘தேவர்’, ‘செந்நாப்போதர்’, ‘பெருநாவலர்’, ‘பொய்யாமொழிப் புலவர்’ என்றெல்லாம் பல பெயர்களில் அழைக்கப்படுகிறார். அவர் எழுதிய திருக்குறள்  பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால் திருக்குறளை சிறப்பிக்கும் விதமாக ‘உலகப் பொது மறை’, ‘முப்பால்’, ‘ஈரடி நூல்’, ‘உத்தரவேதம்’, ‘தெய்வநூல்’, ‘பொதுமறை’, ‘பொய்யாமொழி’, ‘வாயுறை வாழ்த்து’, ‘தமிழ் மறை’, ‘திருவள்ளுவம்’ போன்ற பல பெயர்களால் சிறப்பித்து அழைக்கின்றனர்.

திருவள்ளுவர் அவர்களின் பிறப்பு மற்றும் பிறப்பிடத்திற்கான சரியான சான்றுகள் இதுவரை இல்லை என்று தான் கூறவேண்டும். ஏனென்றால் அவர் கி.மு.31 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார் என்றும் மதுரையில் பிறந்ததாகவும் சென்னையில் உள்ள மயிலாப்பூரில் பிறந்ததாகவும் சிலரும் கூறுகின்றனர். மேலும் அவர் ஆதி – பகவன் என்ற பெற்றோருக்குப் பிறந்ததாகவும் சிலர் சொல்கின்றனர். ஆனால்  இவை எதுவுமே உறுதிப்படவில்லை. மேலும் சிலர் அவர் ஒரு கிறித்துவர் என்றும் சமண மதத்தவர் என்றும் பவுத்தர் என்றெல்லாம் கூட பொய்யான தகவல்களைப் பரிமாறுகின்றனர். உண்மையில் அவர் ஒரு சைவனாகத்தான் இருந்திருக்கிறார். திருவள்ளுவரின் சமயம் சார்ந்த கருத்துகள் அனைத்தும் சைவ சித்தாந்தத்தை  விளக்குவதைப் பற்றியே எழுதியுள்ளார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் கருத்தியல் கண்காணிப்பாளர் தேர்வுத்துறை முன்னோடியான சோ. சண்முகம் அவர்கள் திருக்குறளில் சைவ சமயம் எனும் கட்டுரையில் திருக்குறளில் சைவ சமயக் கருத்துகள் நிரம்பியுள்ளன என்கிறார்.
ஈரடிகளில் உலகத் தத்துவங்களை சொன்னதால் இது ‘ஈரடி நூல்’ என்றும் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளைக் கொண்டதால் ‘முப்பால்’ என்றும் அழைக்கப்படும் இந்நூல் மனிதர்கள் தம் அகவாழ்விலும் புற வாழ்விலும் இன்பமுடனும், இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்கியிருக்கிறது..இந்நூல் அறத்துப்பால், பொருட்பால் மற்றும் காமத்துப்பால் என்னும் மூன்று பிரிவுகளைக்கொண்டது

 அறத்துப்பால்:- முதல் பிரிவான ‘அறத்துப்பாலில்’ மனசாட்சி மற்றும் மரியாதை நல்ல நடத்தை போன்றவற்றை பாயிரவியல் இல்லறவியல், துறவறவியல், ஊழியல் என்ற உட்பிரிவுகளில் தெளிவாக எடுத்துரைக்கிறார்.

 பொருட்பால்:- இரண்டாவது பிரிவான ‘பொருட்பாலில்’ உலக விவகாரங்களில் எவ்வாறு சரியான முறையில் நடந்து கொள்வது என்பதை அரசியல், அமைச்சியல், அங்கவியல், ஒழிபியல் போன்ற உட்பிரிவுகளில் விளக்கியுள்ளார்.

 இன்பத்துப்பால்:- மூன்றாவது பிரிவான ‘இன்பத்துப்பால்’ அல்லது ‘காமத்துப்பாலில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கிடையேயான காதல் மற்றும் இன்பத்தைத் தெளிவாக களவியல், கற்பியல் என்ற தலைப்புகளில் எடுத்துரைக்கிறார்.

முதல் பிரிவில் 38 அத்தியாயங்களும் இரண்டாவது பிரிவில் 70 அத்தியாயங்களும் மூன்றாவது பிரிவில் 25 அத்தியாயங்களும் உள்ளன. ஒவ்வொரு அத்தியாயத்திலும் பத்து ஈரடி குறள்கள் என மொத்தம் 1330 குறள்கள் உள்ளன. திருக்குறளில் உள்ள அனைத்து கருத்துகளும் உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் பொருந்துவதாக உள்ளது. இந்நூல் ஏறக்குறைய 2000 ஆண்டு பழமையானது என்று கணிக்கப்பட்டாலும் இதை இயற்றப்பட்ட காலம் இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை. ஆனால் அதன் பெறுமதியறிந்து திருக்குறள் இதுவரை 80 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருக்கிறது. என்பது தமிழிற்கு பெருமையே ஆகும்.

இன்றைய உலகில் எதிர்காலச் சந்ததிக்கு இன்றியமையாததாக திகழ்வது  கல்வி, பண்பு, இல்லறம் ஆகும். எந்தவொரு சமூகத்தினரும் இக்கல்வியைக் கற்பதிலிருந்து விலகிச் செல்வது இன்றைய நவீன உலகில் மிகவும் அரிதாகக் காணப்படுகிறது. ஏனெனில் கல்வியின் சிறப்பை அனைத்து சமூகங்களும் புரிந்துள்ளன. இதனால் தான் இன்று கல்வியானது மனிதனின் அறிவுக்கு அத்தியாவசிய தேவையாக இருக்கிறது கல்வியின் சிறப்புப் பற்றி கூறும்போது கல்வி கற்றவன் எந்த இடத்திற்குச் சென்றாலும் அவன் பிற சமூகத்தால் மதிக்கப் படுகின்றான். இதற்குக் காரணம் அவன் கற்ற கல்வியே ஆகும். இதனையே திருவள்ளுவர் மிகவும் அழகாக வர்ணித்திருக்கிறார்.

ஒருவன் தான் எவ்வளவு கல்வி கற்றாலும் அதனை செயல் வடிவில் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அவன் கற்ற கல்வியின் பயன் அவனுக்குக் கிடைக்கும். இல்லாவிடில் அவன் கற்ற கல்வியின் பயன் ஒன்றும் இல்லாமல் போய்விடும். இதனையும் திருவள்ளுவர் தனது திருக்குறளின் ‘கல்வி’ என்ற அதிகாரத்தின் முதலாவது குறளில் தெளிவாகக் கூறுகின்றார்.
‘கற்க கசடறக் கற்பவை கற்ற பின் 
நிற்க அதற்குத்தக’ 

என்று கூறுவதிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்.
‘எண்’ என்று சொல்லப்படுவதும் ‘எழுத்து’ என்று சொல்லப்படுவதும் இவை இரண்டினையும் அறிந்தோர் சிறப்பு மிக்க மக்களின் உயிர்களுக்கு கண் என்று சொல்லப் படுவர். இந்த அளவிற்கு கல்வியின் சிறப்பு எடுத்துரைக்கப் படுகின்றது.

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.
கற்றவரின் நிறப்புப் பற்றி கூறும் போது ஒருவனின் முகத்திலுள்ள கண்ணானது கற்றவருக்குரிய அடையாளம் என்று சொல்லப்படுகிறது. அதே கண் இல்லாதவருக்கு முகத்தில் இரண்டு புண் இருப்பதாக குறிப்பிடப்படுகின்றது. இதன் மூலம் கல்வியின் சிறப்பும் அதனைக் கற்றவனின் சிறப்பும் கூறப்படுகின்றது.
மனிதன் ஆயுள் முழுவதும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். கற்க மறுப்பவன் வாழ மறுப்பவன் ஆகின்றான். ஒருவன் தான் கற்ற கல்வியின் இன்பத்தை உணர்ந்தானாயின் அவன் மீண்டும் கற்பதையே விரும்புவான். இது கல்வியின் பண்பாக கருதப்படுகிறது.
கல்வி தொழிலுக்கும் வழி காட்டுகிறது. கல்வி என்பது வாழ்க்கை வாழ்வதற்காக உதவும் கருவியாகும். அறிவியலும் சமூகமும் வாழ்நாள் முழுவதும் தொடரும் கருவியாகும். வாழ்க்கையின் நோக்கம் என்ன என்பதை இனங்கண்டு அதற்கேற்ப கற்க வேண்டும். வாழ்க்கையை நெறிப் படுத்தவும் மேம் படுத்தவும் கல்வியை பயன்படுத்த வேண்டும். கல்வி கற்றவரிடம் ஒழுக்கம் பண்பு நேர்மை நீதி இவைகள் அனைத்தும் ஒருங்கே அமைந்து காணப்படும். எனவே கல்வி யானது ஒரு மனிதனின் முக்கிய தேவை யாக இருக்கிறது. எந்தவொரு சமூகத்திலும் ஆண் பெண் என்ற வேறுபாடின்றி கல்வி இல்லாமல் இருப்பது இக்காலத்தைப் பொறுத்த வரை மிகவும் தாழ் வாகவும் இழிவாகவும் கருதப்படும். 

வெளிநாட்டவருக்கு தமிழரின் விருந்தோம்பல் மிகவும் ஒரு அதிசயமாக பார்க்கப்படுகிறது தற்போதய எதிர்காலச்சந்ததிகள் வெளிநாட்டு கலாச்சாரத்தில் மூழ்கி விருந்தோம்பலைத் தொலைத்துவிடாமல் காக்க பலகுறள்கள் எடுத்தியம்புகின்றது வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை  பருவந்து பாழ்படுதல் இன்று விருந்தினரை நாள்தோறும் வரவேற்று மகிழ்பவரின் வாழ்க்கை அதன் காரணமாகத் துன்பமுற்றுக் கெட்டொழிவதில்லை. என இக் குறள் விளக்குகிறது
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து 
நல்விருந்து ஓம்புவான் இல்.

நல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டில் மனமகிழ்ந்து திருமகள் வாழ்வாள். இதேபோன்று பண்பைப்பற்றியும் வள்ளுவர் எமது இளையோருக்கு ஏற்றவகையில் கூறியிருக்கிறார். பண்பை அவர் தம்  பண்பான குடும்பத்தில் கற்றுக் கொள்ளவேண்டும் என கூறுகிறது.

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும் 
பண்புடைமை என்னும் வழக்கு. 
எல்லாரிடமும் அன்புள்ளவனாக வாழ்வது. உலகத்தோடு ஒத்து வாழும் குடும்பத்தில் பிறந்திருத்தல் இவை இரண்டும் பண்புடைமை என்னும் நல்ல வழிகளாகும். தற்காலத்தில் அன்புபை விட பணமே அதிக சிறந்தது என எண்னுகின்றவர்களால் அன்பு சீரழிகிறது.

நயனொடு நன்றி புரிந்த பயனுடையார் 
பண்புபா ராட்டும் உலகு.

நீதியையும் அறத்தையும் விரும்பிப் பிறர்க்கும் பயன்படுபவரின் பண்பினை உலகத்தவர் சிறப்பித்துப் பேசுவர்.

அதேபோல் குடும்பவாழ்வு பற்றி கூறுகிறார். எதையும் முகம் கொடுத்து வாழவேண்டும் அப்போது நல்லகுடும்பமாக வழலாம் என்கிறார் வள்ளுவர். ஆனால் இன்றைய சமூகத்தில் படித்த பெண்களை புறம்தள்ளும் செயலாக உள்ளது என பெண்கள் போர்கொள்கிறார்கள். இவைபற்றிய சில குறள்கள்.

இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும் 
நல்லாருள் நாணுத் தரும்.

நற்குணமில்லாத மனைவியைத் திருத்த முனையாமல் பணிந்து போகிற கணவன் நல்லோர் முன்னிலையில் நாணமுற்று நிற்கும் நிலைக்கு ஆளாக நேரிடும். என குறள் கூறகிறது  எனவே கணவன் தனது மனைவியை திருத்தி ஒழுங்கமைப்பது என்பது சிக்கலானவிடயமாகி தற்போது உள்ளது. இதனால் பலர் வாழ்வு முறிந்து போய்விடுகிறது.
இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும் 
நல்லார்க்கு நல்ல செயல்.

மனைவிக்கு அஞ்சி வாழ்கின்றவன் எப்போதும் நல்லவர்க்கு நன்மையான கடமையைச் செய்வதற்கு அஞ்சி நடப்பான். வள்ளுவர் மனைவிக்கு அஞ்சாது வாழ் என்கிறார் இதனால் இக்காலத்தில் பல பெண்கள் பெண்விடுதலை என்று குடும்பப் பிரிவுகள் ஏற்படுகிறது.. 

நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள் 
பெட்டாங்கு ஒழுகு பவர்.
மனைவி விரும்பியபடி செய்து நடப்பவர் தம்முடைய நண்பர்க்கும் உறவிற்கும் உற்ற குறையையும் செய்து முடிக்கமாட்டார்; அறத்தையும் செய்யமாட்டார். இதனால் தற்காலத்தில் தனது சொந்தங்களையும் நண்பர்களையும்  இழந்து தவிப்பான். மனைவியிடம் எதிர் வாதம் செய்தால் நின்மதியை இழக்கின்றான் இது எதிர்காலச்சந்ததிக்கு பொருந்துமா? என்ற கேள்வி எழுகிறது.

திருக்குறளில் தற்காலத்தில் படித்த இளம்சந்ததிகளுக்கு பலவித அறிவுரைகளை வழங்கினாலும் படித்த பெண்களால் ஏற்கப்படாத சில குறள்களும் உள்ளது அவை பெண் ஆணுக்கு கட்டுப்பட்டு ஒழுக்கம் ஒற்றமையாக வாழ வேண்டும் அப்போது குடும்பம் அமைதியாக அறத்துடன் வாழும் என்று கூறுவதை பல படித்த பெண்கள் உயர்வுதாழ்வு என எண்ணி பெண்ணடிமைத்தனம் என கூறுவதால் அவர்கள் வாழ்வில் சலசலப்பு ஏற்படுவதைகாணமுடிகிறது எனவே உலகத்தால் ஏற்கப்பட்ட நல்ல பலவிடயங்களைக் கொண்ட சொன்ன வள்ளுவர் பெண்கள் அறம் என்று  கூறியவிடயங்களில் எதிர்கால படித்த சந்ததியினர் சில குறள்களில் முரண்படுவது தவிற்கமுடியாது உள்ளது.   

நன்றி -   மின்தமிழ்
.