WELCOME TO PANNAGAM.COM & PTV

பண்ணாகம் இணையம்

 

INTERNATIONAL MOVEMENT FOR TAMIL CULTURE

உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கம்

உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தின்  பொதுச்செயலாளரான  திரு. துரை கணேசலிங்கம்( யேர்மனி)   நீக்கப்பட்டார்.


உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கத்தின்  பொதுச்செயலாளரான  திரு. துரை கணேசலிங்கம்( யேர்மனி)  19 வருடங்கள் தொடர்ந்து செயலாளர் பதவியில் இருந்து வந்தவரை அவ் இயக்கம் தற்போது நீக்கியுள்ளது.   இவரை உத்தியோக ரீதியிலான   கனடா அரசபதிவில் பதிவு செய்யப்பட்ட பதிவிலிருந்து நீக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது  என அதன் புதிய பொதுச் செயலாளரும்  அதன் உலகளாவிய  நிர்வாகபிரதிநிதிகளும்  கலந்த  சந்திப்பில் பண்ணாகம்.கொம்  இணையத்திடம் நேரடியாக  டென்மார்க் நகரில்  06 .11.2016 இல்   தெரிவித்தார்கள். இவை பற்றிய செய்திகள் அனைத்து ஊடகங்களுக்கும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. உ.த.ப.இயக்கம் சம்பந்தமான எந்த நடவடிக்கைகளிலும் இனி வரும் காலங்களில் கணேசலிங்கம் அவர்கள் செயற்பட முடியாது எனவும் அவர் எந்த பொறுப்பிலும் இல்லை எனவும்  உலக பொதுமக்களுக்கு அவ்வியக்கம் அறிவிக்கிறது.