WELCOME TO PANNAGAM.COM & PTV

பண்ணாகம் இணையம்

 

Kovil - Temple
பண்ணாகம் விசவத்தனை முருகமூர்த்தி  ஆலயம்

சுடராகப் பிறந்து ஒருங்கிணைந்தகார்த்திகேயனின் நாள்தான் கார்த்திகை நாள்.


கார்த்திகை தீபம் -- விளக்கீடு


கார்த்திகை விளக்கீடு என்பது கார்த்திகை மாதபௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்ததிருக்கார்த்திகை நாளில் தமிழர்கள் தமதுஇல்லங்களிலும் கோயில்களிலும்பிரகாசமான தீபங்களை ஏற்றிமகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத்திருநாள் ஆகும். கார்த்திகை மாதம்தமிழ்நாட்டில் கார்மேகம் சோணைமழைபொழியும் மாதம் கார்த்திகை மாதம். கார்என்றும்இ கார்த்திகை என்றும் வழங்கப்படும் காந்தள் பூ மிகுதியாகமலரும் காலம் கார்த்திகை மாதம். கார்த்திகை எனப்படும் விண்மீன்கூட்டம் கீழ்வானில் மாலையில் தோன்றும் மாதம் கார்த்திகை மாதம்.பண்டைய தமிழர்கள் ஒரு மாதத்தில் உள்ள நாட்களை 27 நாள் மீன்பெயர்களால் வழங்கி வந்தனர். அந்த நாள் மீன்களில் ஒரு நாள் மீன்கார்த்திகை-நாள். இவ்வாறு ஒவ்வொரு மாதமும் வருகின்றகார்த்திகை-நாள் முக்கியமான நாளாக தமிழர்களால் வழிபடப்பட்டுவருகின்றது.

கார்த்திகை மாதத்தின் பண்டிகைகளில்முக்கியமானதாக கருதப்படுவது கார்த்திகை தீபம் என்பதுஎல்லோருக்கும் தெரிந்த சேதிதான். சிவன் கார்த்திகை மாதகிருத்திகை நட்சத்திரத்தில் திருமால் பிரம்மன் இருவருக்கும் அக்னிவடிவமாக காட்சி தந்தார். அதாவது தமக்குள் யார் பெரியவர் என்றபோட்டி விஷ்ணுவுக்கும் பிரம்மனுக்கும் உண்டானபோது அந்தபோட்டிக்கு நடுவராக வந்து சிவன் ஒரு பெரும் சோதியாக எழுந்துநின்று சோதியின் அடியை விஷ்ணுவும், உச்சியை பிரம்மனும் காணவேண்டும். அப்படி யார் முதலில் பார்க்கிறீர்களோ அவர்களேபெரியவர் என்று மாயக் குரல் ஒன்று கூற அதை ஏற்றுக் கொண்டஇருவரும் தமது பயணத்தத் தொடங்கினர். அன்னப்பறவையாகஉருமாறிய பிரம்மன் பறந்து உச்சியைத் தேடினார்.பன்றியாக உருமாறிய விஷ்ணு நிலத்தைத்துளைத்துக் கொண்டு அடியைத் தேடினார். இருவரும்பல ஆண்டுகள் பயணித்தும் தங்கள் இலக்கை அடையமுடியவில்லை. கடைசியில் தமது தோல்வியைஇருவரும் ஒப்புக் கொண்டனர். அப்படி சோதிப்பிழம்பாக சிவன் தோன்றிதை அனைவருக்கும் காட்டவேண்டும் என இருவரும் கோர அதை சிவன் ஏற்றுக்கொள்கிறார். அதன்படி ஒவ்வோர் ஆண்டும்கார்த்திகை நாளில் சோதியாய் வெளிப்பட்ட நாள்தான் கார்த்திகைதீபம் நாள். அதை நினைவுப்படுத்தத்தான் அக்னி மையமானதிருவண்ணாமலையில் தீபத்தை மலைமீது ஏற்றி வைக்கிறார்கள்என்பது கதை.

இந்நாளிலேயே தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. கார்த்திகை தீபத்திருநாள் மிகவும் தொன்மை வாய்ந்ததிருநாள். இத்திருநாள் தமிழர்களால் பல்லாயிரம் ஆண்டுகளாககொண்டாடப்படுகிறது. கி.மு.2500 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ்இலக்கியங்களிலும் மற்றும் சங்க கால இலக்கியங்களிலும்கார்த்திகை தீபத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன.                                        

இத்தீபத்திருநாள் திருவண்ணாமலையில் மிகவும்சிறப்பாகக் கொண்டாடப்படுவதால் இதை திருவண்ணாமலைத்தீபம் என்றும் அழைப்பார்கள். சிவபெருமான் ஒளி மயமாகக்காட்சியளித்ததை நினைவு கூரும் வகையில்இ தீபத்தினத்தன்றுதிருவண்ணாமலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும்.

இத்திருநாள் முருகக்கடவுள் அவதரித்த தினமாகவும்கொண்டாடப்படுகிறது. பெரும்பாலானோர் காலை முதல்விரதமிருந்து மாலை பூஜை முடிந்தபின்னர் அகல் விளக்கேற்றிவரிசையாக வாசல் தொடங்கி வீடு முழுவதும் வைப்பார்கள். இதுதான் தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாகும். சிவன் தனதுமூன்றாவது கண்ணான நெற்றிக் கண் மூலம் ஆறு பொறிகளைதெறிக்க வைக்கிறார். அவை ஆகாய கங்கையில் ஆறு சுடர்களாகமிதந்து சரவணப் பொய்கை அடைகின்றன. அங்கே சக்தியானவள்தமது சக்தியின் மூலம் ஆறு பெண்களை உருவாக்கி ஆளுக்கொருசுடரை வளர்க்க வைக்கிறாள். அந்த ஆறு சுடர்களும் ஆறுகுழந்தைகளாக வளர்கின்றன. அந்தக் குழந்தைகளைவளர்த்தவர்கள் கார்த்திகைப் பெண்கள். அவர்கள் வளர்த்தகுழந்தைகள் கார்த்தைகேயன். குழந்தை வளர்ந்ததும் சிவனும்சக்தியும் அங்கே வருகின்றனர். அப்போது சக்தி ஆறுகுழந்தைகளையும் சேர்த்து ஒரு குழந்தையாக மாற்றுகிறாள்.அதனால் அக்குழந்தைக்கு ஆறுமுகன் என்று பெயர் உண்டாகிறது.சிவன் கார்த்திகைப் பெண்களை வானத்தில் நட்சத்திரங்களாகமாற்றியமைக்கிறார். அது கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் என்றுஅழைக்கப்படுகிறது. சுடராகப் பிறந்து ஒருங்கிணைந்தகார்த்திகேயனின் நாள்தான் கார்த்திகை நாள். அதாவதுகார்த்திகேயன் பிறந்தநாள்.

கார்த்திகை மாதத்தில் வருகின்ற கார்த்திகை நாள்மாலைவேளையில் வீடுகளின் வெளிப்புறங்களிலும் வீட்டுமுற்றத்திலும் விளக்கேற்றிக் கொண்டாடுவார்கள்.திருக்கார்த்திகை தினத்தன்று ஆலயங்களில்தீபத்திருவிழா நடைபெறும். பக்தர்கள் தீப விளக்குகள்ஏற்றிவைத்து வழிபடுவர். ஆலயத்தின் முன்புறத்தேவாழை மரம் நட்டு தென்னோலைகளால் அதனை சுற்றிஅடைத்து "சொக்கப்பானை"க்கு அக்கினியிட்டு சோதிவடிவாகக் காட்சியளிக்கச் செய்து சிவபெருமான்சோதிப்பிழம்பாகத் தோன்றிய காட்சியை நினைவுகூர்ந்து வழிபடுவர். இல்லங்களை விளக்குகளால்அலங்கரித்து ஒளி வெள்ளத்தில் இல்லங்களை மிதக்க வைத்துவழிபடுவர்.

இதன் முதல் நாளான பரணி நட்சத்திர நாளில் சைவசமயிகள் பகலில் மட்டும் ஒருபொழுது உண்டு கார்த்திகையன்றுஅதிகாலையில் நீராடி இறைவனை வழிபட்டு நீர் மட்டும் அருந்திஇரவு கோயிலுக்குச் சென்று தரிசனம் பெறுவர். மறுநாட்காலையில்காலைக்கடன்களை முடித்து நீராடி பாரணை அருந்தி விரதத்தைநிறைவு செய்வர். பன்னிரண்டு ஆண்டுகள் இவ்விரதம் இருப்பவர்கள்வேண்டும் வரங்களைப் பெறலாம் என்பது ஐதீகம். பௌர்ணமி நிலவுகிழக்கு வானில் தென்படும் வேளையில் வீட்டு வாசலில் வாழைக்குற்றி நாட்டி வைத்து அதன் மேல் தீப பந்தம் ஏற்றியும்வீடுகளுக்குள்ளும் வெளியிலும் அகல் விளக்குகளில் தீபமேற்றிநேர்த்தியாக அலங்கரித்து வீடுகளை தீபங்களால் அழகுபடுத்திவழிபடுவர்.

சிவபெருமானின் வடிவங்களில் முக்கியமான ஒன்றுஅர்த்தநாரீஸ்வர வடிவமும் ஒன்றாகும். சிறந்த சிவபக்தரானபிருங்கி முனிவர் சக்திதேவியை வணங்காமல் சிவபெருமானைமட்டும் வணங்கி வந்தார். இதனால் கோபம் கொண்ட பராசக்திபிருங்கிமுனிவரின் சக்தியை பறித்து விடுகிறார். உடலில் சக்திஇல்லாமல் பிருங்கி முனிவர் துவண்டு போனார். இதை கண்டசிவபெருமான் சிவனும் – சக்தியும் ஒன்றே என்பதை இவர்கள்மூலமாக உணர்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் சக்திதேவியைவிட்டு பிரிந்தார் ஈசன். சிவபக்தரை சோதித்துவிட்டோமே எனவருந்திய சக்திதேவி தன் தவறை உணர்ந்து சிவலிங்கமே மலையாகஇருக்கும் திருவண்ணாமலைக்கு வந்து கிரிவலம் சென்று தவம்செய்தார். தவத்தை ஏற்ற சிவபெருமான் சக்திதேவிக்கு காட்சி தந்துதனது இடதுபாகத்தில் ஏற்று அர்த்தநாரீஸ்வரராக காட்சிகொடுத்தார். ஆகவே கார்த்திகை தீபத்தன்று சிவபெருமான்அர்த்தநாரீஸ்வராக வலம் வருவார். இந்த நாளில்அர்த்தநாரீஸ்வரரின் தரிசனத்தை கண்டால் கோடி புண்ணியம்கிட்டும். திருவண்ணாமலை சென்று அர்த்தநாரீஸ்வரரை தரிசிக்கஇயலாதவர்கள் மனதால் அர்த்தநாரீஸ்வரரை வணங்கினாலும்கோடி புண்ணியம் கிட்டும்.

கார்த்திகை தீபதன்று அதிகாலையில்அண்ணாமலையார் சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி அதன் மூலம்மேலும் ஐந்து தீபங்கள் ஏற்றி பூஜிப்பார்கள். பின்பு அந்த தீபங்களைஒன்றாக்கி அண்ணாமலையார் அருகில் வைத்து விடுவார்கள்.இதனை ஏகன் அநேகனாகி அநேகன் ஏகனாகுதல் என்ற தத்துவத்தைஉணர்த்துகிறது. சிவபெருமானே அனைத்து வடிவங்களிலும்இருக்கிறார் என்பதை இது தெரியப்படுத்துகிறது. மாலையில்கொடிமரம் அருகிலுள்ள மண்டபத்திற்கு பஞ்சமூர்த்திகள்எழுந்தருளுவர். அப்போது மூலஸ்தானத்தில் இருந்துஅர்த்தநாரீஸ்வரர் வருவார். அவர் முன்னால் அகண்ட தீபம்ஏற்றியதும் மலையில் மகாதீபம் ஏற்றப்படும். அவ்வேளையில்விஷ்ணுவுக்கும் பிரம்மாவுக்கும் ஜோதிவடிவமாக காட்சி கொடுத்தது போல் நமக்கும்ஈசன் ஜோதிவடிவமாக காட்சி தருகிறார். மகாதீபம் ஏற்றும் வேளையில் மட்டுமேஅர்த்தநாரீஸ்வரரை தரிசிக்க முடியும். மற்றநாட்களில் இவர் சன்னதியை விட்டுவருவதில்லை. நம் இல்லத்தில் கார்த்திகைதீபதன்று அண்ணாமலையார் – உண்ணாமுலை அம்மன் படத்தைவைத்து கார்த்திகை தினத்தில் தோன்றிய முருகப்பெருமானையும்கார்த்திகை பெண்களையும் மனதால் நினைத்து ஆறு தீபங்கள் ஏற்றிவழிபடவேண்டும் . இந்த ஆறு தீபங்களை ஏற்றுவதற்கு முன்னதாகமஞ்சளில் விநாயகரை பிடித்து பூஜிக்க வேண்டும். பிறகு மாவிளக்குதீபம் ஏற்றிய பிறகு வீட்டின் வெளிபுறத்திலும் அகல்விளக்கு ஏற்றவேண்டும். பிறகு அரிசிபொரியை வைத்து அர்த்தநாரீஸ்வரரைமனதால் நினைத்து வணங்க வேண்டும். இதனால் சிவ-சக்தியின்அருளாசி நமக்கும் நம் குடும்பத்திற்கும் பரிபூரணமாக கிடைத்துசகல நலங்களோடு சுபிச்சமான வாழ்க்கை அமையும்.

கார்திகை மாதம் முழுவதும் தீபம் வீடுகளில் தீபம்ஏற்றுவது. சிறப்பாகும். முடியாத பட்சத்தில் பரணி, கார்த்திகை,ரோகிணி மூன்று நாட்கள் மட்டுமாவது தீபமேற்றுவது சிறப்பாகும்.அதாவது கார்த்திகை தீப நாளிற்கு முதல்நாள், கார்த்திகைதீபத்தன்று, கார்த்திகை தீபத்திற்கு அடுத்தநாள். வீட்டின் தலைவாசலில், கொல்லைபுற வாசலில், பூசை அறை வாசலில் எனகுறைந்த பட்சம் மூன்று தீபங்கள் ஏற்ற வேண்டும். மற்றப்படி வீட்டில்உள்ள அறைகளின் வாசல்கள் மற்ற இடங்கள் எல்லாம் வீடு தீபஒளியில் பிரகாசமாக இருக்கும் அளவிற்கு தீபங்கள் ஏற்ற வேண்டும்.

முறைப்படி விரதமிருந்து தீபமேற்றிவழிபடும் அனைவரின வாழ்விலும் ஒளிபிறக்கும். பரிபூரண நம்பிக்கையுடன்கடைப்பிடியுங்கள் ஒளிமயமானஎதிரகாலம் நிட்சயம்-


தொகுப்பு-  பண்ணாகம் இ.க.கண்ணன்

2016

பண்ணாகம் விசவத்தனை முருகன் ஆலய புணருத்தான கட்டிடவேலைகள் ஆரம்பம். 

உலககில் வாழ் முருகனடியார்கள் வாரி வழங்கிவருகிறார்கள்.

பண்ணாகம் விசவத்தனையில் பாலஸ்தாபனம் செய்யப்பட்ட நிலையில் முருகப்பெருமானும் பரிவார மூர்த்திகளும்
முருகப்பெருமானின் பாலஸ்தாபன கும்பாபிசேகம் எதிர்வரும் 02.06.2016 வியாழக்கிழமை

பண்ணாகம் விசவத்தனை பதிதனில் வீற்றிருந்து தன்னை எண்ணி வழிபடும் அடியவர்களின் துயர் களைந்து வற்றாத செல்வத்தினையும் வளமான வாழ்வினையும் அருளுகின்ற முருகப்பெருமானின் பாலஸ்தாபன கும்பாபிசேகம் எதிர்வரும் 02.06.2016 வியாழக்கிழமை காலை 9.30 மணி முதல் 10.30 மணி வரை வரும் கடக லக்கினமும் , அச்சுவினி நட்சத்திரமும் துவாதசி திதியும், அமிர்தசித்தயோகமும் கூடிய சுப முகூர்த்தத்தில் முருகப்பெருமானின் திருவருளினால் நிகழவுள்ளது.

கிரியா கால விபரம்
31.05.2016 செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.30 மணிக்கு கர்மாரம்பம், விநாயக வழிபாடு, ஸ்ரீகணபதிஹோமம், நவக்கிரக மகம், வாஸ்து சாந்தி
மாலை 5.00 மணிக்கு மிருத்சங்கிரகணம், அங்குரார்ப்பணம், கும்பஸ்தாபனம்,பேரசலனம், யாகபூஜை , பிம்பஸ்தாபனம்
01.06.2016 புதன்கிழமை காலை, மாலை யாகபூஜை , ஹோமம்
02.06.2016 வியாழக்கிழமை காலை யாகபூஜை , ஹோமம் , பூர்வபச்சிம சந்தானம் , காலை 9.30 முதல் 10.30 மணி வரையுள்ள சுபமுகூர்த்தத்தில் பாலஸ்தாபன கும்பாபிஷேகம் , தசதர்சனம் , மஹா அபிஷேகம் , பூஜை
பண்ணாகம் விசவத்தனை முருகமூர்த்தி ஆலயம்

2016 வருடாந்த   மகோற்சவம்.
 

13.3.2016 கொடியேற்றம் 11.00 மணிக்கு

22.3.2016 தேர்த் திருவிழா

23.3.2016 தீர்த்தத் திருவிழா


கார்த்திகைத் திருவிழா


பண்ணாகம் விசவத்தனை முருகன் ஆலய கார்த்திகைத் திருவிழா 15.2.2016 மாலை 4.00 மணிக்கு மிகச் சிறப்பாக பக்திபரவசமாக நடைபெற உள்ளது. எனவே பக்தர்கள் அனைவரும் தவறாது கலந்துகொண்டு முருகன் அருட்கடாச்சத்தை பெற்றுக் கொள்ளவும்.

-ஆலய பரிபாலன சபை- 

பண்ணாகம் விசவத்தனை முருகன் ஆலயம்


சங்கானை மேற்கில் அமைந்துள்ள பண்ணாகம் -விசவத்தனை என்னும் புண்ணிய பதியில் கோயில் கொண்டு அருள்பாலிக்கும் . பண்ணாக மக்களின் குல தெய்வமாக விளங்குபவர் விசவத்தனை முருகன். கிழக்கே நோக்கிய கோயில் வாசலுடன் பிள்ளையார், வைரவர், முத்துக்குமார், ஆறுமுகசாமி, நவக்கிரகங்கள், சண்டேசுவரர் என்பவற்றை பரிவாரத்தெய்வங்களாக கொண்டு இக் கோயில் விளங்குகின்றது. தினமும் மூன்று வேளை பூசைகள் நடைபெறுகின்றன.

இவ்வாலயத்தின் இராஜகோபுரம் பொதுமக்களின் பெருநிதியுடன்     2010இல் கோயிலின் பிரதான வாயிலில்  இராஜகோபுரம்  பூர்தியாக்கி கும்பாவிசேகம் நடைபெற்று புதுப் பொலிவுடன் ஆலயம் மிளிர்கிறது.

தற்போது ஆலய உள் சுற்றுமண்டபங்கள்  பழுதடைந்து  உடைந்து மழைகாலங்களில் ஒழுகும் நிலையில் உள்ளது இதை திருத்தி அமைக்கவேண்டிய நிலையில் ஆலயம் உள்ளது  எனவே அதற்கான நிதியினை பொதுமக்களிடம் ஆலயம் எதிர்பார்த்து நிற்கிறது. தங்களால் இயன்ற நிதியினை வாரி வழங்கமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


கீழே உள்ள எமது விளம்பரத்தைப் பாருங்கள்


ஆலய பரிபாலன சபை

        பண்ணாகம் ஊரரின் பகுதிகளை சற்லைற்ன் மூலம் நேரடியாக பார்வையிட இங்கே அழுத்துங்கள்

           

 

  விசவத்தனை முருகா ஆலயம்

2013 ம் ஆண்டு மாகோற்சவம் (திருவிழா)

16.3.2013 தொடக்கம் 26.3.2013

                                                           

 

  பண்ணாகம் விசவத்தனை முருகமூர்த்தி ஆலயம் 

 

(படங்கள்  கீழே உள்ளது)

 

2013 ம் ஆண்டு மாகோற்சவம் (திருவிழா)

 

16.3.2013 தொடக்கம் 26.3.2013

 

 16.3.2013 கொடியேற்றம்

 25.3.2013 தேர்த்திருவிழா

 

 26.3.2013 தீர்த்தம்

_________________________________

 

திருவிழா உபயகாரர்கள்.

 

1ம்  திருவிழா விசுவநாதர் மரபினர். 

2ம்  திருவிழா பெரியதம்பி அப்பாப்பிள்ளை.

3ம்  திருவிழா த.செல்லையா குடும்பத்தினர் கி.நடராசா.

4ம்  திருவிழா ஆ.நாகலிங்கம்.

5ம்  திருவிழா இராமநாதர் மரபினர்.

6ம்  திருவிழா வைரமுத்து சீனிவாசகம் குடும்பம்.

7ம்  திருவிழா சோமநாதர் மரபுவழி குடும்பத்தினரும்

               இராமலிங்கம் சிவகுருநாதன் குடும்பம்.

8ம்  திருவிழா ஊர் வாலிபர்கள்.

9ம்  திருவிழா இ.சிவப்பிரகாசம் குடும்பத்தினரும்

               சி.ஞானச்சந்திரமூர்த்தி குடும்பத்தினர்.

10ம் திருவிழா எ.கையாசபிள்ளை குடும்பத்தினரும்

               செ.வைத்தியலிங்கம்.

11ம்  திருவிழா மு.கணபதிப்பிள்ளை குடும்பம்.

 

   ''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

 

                                       கோவில் முன்பகுதி

திருவிழா முன்பு கோவில் வெளிப் பகுதிக்  காட்சிகள் சில 

 

 

 கோவில் முன்பகுதி

 

 

 

 

 

 

  பண்ணாகத்தின்  அதிசிறந்த சக்தி மிகு  பெரிய ஆலயம் இதுவே ஆகும்

 

 

 

 

 

                                               

 

 

பண்ணாகம் ஊரில் வசிக்கும் மக்கள் அனைவரும் சிறந்த சைவசமய பக்தியுடையவராகவும் ஊர்ப்பற்றுடையவராகவும் திகழ்வதால் ஊரின்  பல பகுதிகளிலும் வைரவர்,காளி போன்ற  தெய்வங்களின் சிறிய பல ஆலயங்களும் பக்தி சிரத்தையுடன்  பூசிக்கப்பட்டு  வருகின்றது.  

 

 

   

 

 

 

 

       

-------------------------------------------------------

 

 

 

 

 

வீடியோக் காட்சி2014 இல் மு
ருன் தேரில் னி வரும்வேளை    இராணுகெலியில் இருந்து  பூமாரி !!

2014 இல் 9ம் திருவிழாவில் ஊரில் கெட்ட சக்திகளை  அழிப்பதற்காக ஊரை சுற்றி வேட்டை யாடி காவல் செய்து வரும் காட்சி

பண்ணாகம் விசவத்தனை முருகன் கோயில்

சங்கானை மேற்கில் அமைந்துள்ள பண்ணாகம் -விசவத்தனை என்னும் புண்ணிய பதியில் கோயில் கொண்டு அருள்பாலிக்கும் . பண்ணாக மக்களின் குல தெய்வமாக விளங்குபவர் விசவத்தனை முருகன். கிழக்கே நோக்கிய கோயில் வாசலுடன் பிள்ளையார், வைரவர், முத்துக்குமார், ஆறுமுகசாமி, நவக்கிரகங்கள், சண்டேசுவரர் என்பவற்றை பரிவாரத்தெய்வங்களாக கொண்டு இக் கோயில் விளங்குகின்றது. தினமும் மூன்று வேளை பூசைகள் நடைபெறுகின்றன.

தோற்றமும் தொடர் வளர்ச்சியும்

200 ஆண்டுகளிற்கு முன் வாழ்ந்த கதிர்காமர் என்பவர் தனது சொந்தக் காணியில் ஒரு கொட்டில் கட்டி அதில் வைரவசூலம் வைத்து பூசை செய்து வழிபட்டு வந்தார். பின்னர் அக் கொட்டில் மடாலயமாக பெருப்பிக்கப்பட்டு ஊர் மக்கள் சேர்ந்து வழிபட்டு வந்தனர். ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாத முதல் செவ்வாயில் வைரவரிற்கு விளக்கு வைத்து அடுத்த செவ்வாய் ஊர்மக்கள் சேர்ந்து பொங்கல் பொங்கி படைத்து வழிபாடு செய்தார்கள். இந்தக் காலத்தில் பிராமணக் குருமார் பூசைக்கு நியமிக்கப்பட்டனர்.

கதிர்காமரின் பேரனாகிய சின்னட்டியர் காலத்தில் வைரவ மடாலயத்திற்கு அருகில் முருகப் பெருமானிற்கும் என ஒரு மடாலயம் அமைக்கப்பட்டது. தொடர்ந்து சின்னட்டியர் மகன் செல்லப்பா காலத்தில் முருகனுக்கு ஆகம முறைப்படி ஆலயம் அமைக்கப்பட்டது. ஆனால் வைரவரின் இருப்பிடம் மாற்றம் செய்யப்படவில்லை. 1910ஆம் ஆண்டு கர்ப்பக்கிரகம், திருமஞ்சனக்கிணறு, மகாமண்டபம் என்பன அமைக்கப்பட்டன.

1912ஆம் ஆண்டு முதலாவது கும்பாபஷேகம் நடத்தப்பட்டது. இக் காலத்தில் பத்து நாட்கள் பங்குனி மாதத்தில் அலங்காரத் திருவிழாக்கள் நடைபெற்று வந்தன. 1928ஆம் ஆண்டளவில் முருகைக் கற்களால் ஆன கற்பக்கிரகம் வைரக் கற்களால் மாற்றி அமைக்கப்பட்டது. இத்துடன் கொடிமரம், பலிபீடம், அர்த்தமண்டபம், தரிசனமண்டபம் போன்றனவும் கட்டப்பட்டு இதேகாலத்தில் இரண்டாவது கும்பாபிஷேகமும் நடைபெற்றது. இதன் பின் ஆலயத்தில் கொடியேற்றத்துடன் திருவிழாக்கள் இடம்பெற்றன.

1948இல் சுவாமி பாலஸ்தாபனம் செய்யப்பட்டு 1954 இல் கும்பாபிஷேகம் நடாத்தப்பட்டது. 1958இல் கோயில் பரிபாலன சபை உருவாக்கப்பட்டது. இது தற்போதும் ஆலய செயற்பாடுகளை பரிபாலனம் செய்து பராமரித்து வருகின்றது. 1966இல் புதிய சித்திரத் தேர் உருவாக்கப்ட்டது. தேர்முட்டி, தேர் தரிப்பிடம் என்பனவும் இக் காலத்தில் அமைக்கப்பட்டன.

1982ஆம் ஆண்டு நான்காவது கும்பாபிஷேகம் நடைபெற்றது; 1998இல் ஐந்தாவது கும்பாபிஷேகம் நடைபெற்றது. 2010இல் கோயிலின் பிரதான வாயிலில்  இராஜகோபுரம்  பூர்தியாக்கி கும்பாவிசேகம் நடைபெற்று புதுப் பொலிவுடன் ஆலயம் மிளிர்கிறது.

விழாக்கள்

பங்குனி மாதத்தில் வரும் பௌர்ணமியை தீர்த்த திருவிழாவாக கொண்டு வளர்பிறை முதல் பத்து நாட்கள் கொடியேற்றத்துடன் மகோஸ்சபம் ஆரம்பமாகும். சித்திரை மாத பூரணை வைகாசி மாத வைரவ பொங்கல், வைகாசி விசாகம் ஆடிச் செவ்வாய் புரட்டாதிச் சனி ஐப்பசி கந்தசஷ்டி கார்த்திகை விளக்கீடு மார்கழி திருவெம்பாவை தைப் பூசம் மாசி சிவராத்திரி

அன்னதான சபை இவ் ஆலயத்தில் நடைபெறும் விழாக்களின் போது அன்னதானம் வழங்குவதற்கென ஸ்ரீ முருகன் அன்னதான சபை என்ற அமைப்பு செயற்பட்டு வருகின்றது. இதற்கென ஆலயத்தின் முற்பகுதியில் பெரிய மண்டபமும் அமைக்கப்பட்டுள்ளது.இதனை நிர்வகிப்பதற்கென தனியான நிர்வாக கட்டமைப்பும் செயற்பட்டு வருகின்றது.

---------------------------

14.3.2012 இல் விசவத்தனை முருகன் கோபுர

கும்பாபிஷேகம்.

title

விசவத்தனை முருகன் ஆலய பரிபாலன சபையின் 2010ம் ,2011ம் ஆண்டுகளின் வரவு செலவு அறிக்கை

 விசவத்தனை முருகன் ஆலய பரிபாலன சபையின் 2010ம் ,2011ம் ஆண்டுகளின் வரவு செலவு அறிக்கை பரிபாலன சபையினரால் பண்ணாகம் இணையத்திற்கு இன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இவ் அறிக்கையை புலம்பெயர்ந்து வாழும் பண்ணாகம் முருகன் ஆலய அடியவர்களுக்கு பார்வைக்காக பிரசுரிக்கப்படுகின்றது.

 

                                      

                          

 

 

title

பரிபாலன சபையின் புதிய அறிவிப்பு (23.1.2012)

http://sudarsun.in/blog/wp-content/uploads/2009/05/koovam1.jpg

14.3.2012 இல் விசவத்தனை முருகன் கோபுர

கும்பாபிஷேகம்.

26.3.2012 கொடியேற்றம் 4.4.2012 தேர் 

பரிபாலன சபைத் தலைவர் பண்ணாகம் இணையத்திடம் தெரிவிப்பு.


பண்ணாகம் விசவத்தனை முருகன் ஆலயத்தின் கோபுர வேலைகள் நிறைவடைந்துள்ளது. இன்னும் 50 நாட்களில் 14.3.2012 இல் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது . தற்போது கோபுரத்தின் வர்ணம் பூசும் வேலைகள் நடைபெறுகிறது வேலைகள் சில நாட்களில் நிறைவானதும் கோபுரம் நிறைவாகிவிடும் என பண்ணாகம் இணையத்திடம் இன்று பரிபாலனசபைத் தலைவர் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில் கோபுர கும்பாபிஷேகம் வரும் 14 .3. 2012 பங்குனி மாதத்தில் நடாத்த தீர்மானித்துள்ளதாகவும்   கோபுர கும்பாபிஷேகம் தனியாக  செய்யவிருப்பதாகவும் தெரிவித்தார். அதன்பின் 26.3.2012 வழமையான திருவிழாக்கள் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 4.3.2012 தேர்த்திருவிழா நடைபெறும் எனவும் தெரிவித்தார். திருவிழாவின் பின் புதிய நிர்வாக சபை தெரிவு செய்யப்பட்டு  கோவில் உள் மண்டபங்கள் பலவும் ஆதிமூல மண்டபம் என்பன திருத்தியமைக்கவேண்டிய வேலைகளை செய்யலாம் எனவும் பரிபாலன சபை புதிய முடிவெடுத்துள்ளதால்   தற்போது தை மாதம் பாலஸ்தானம் செய்வது பிற்போடப்பட்டுள்ளது எனவும் பண்ணாகம் இணையத்திடம் பரிபாலன சபைத் தலைவர் தெரிவித்தார்.

---------------------------------------------------------------------------------------------------------- 

title

பண்ணாகம் இணையத்தின் விஷேட இணைப்பு

வரலாறு மிக்க எங்கள் ஆலயம்

விசவத்தனை முருகன் கோயில் இலங்கை பண்ணாகத்தில் அமைந்துள்ளது. பண்ணாக மக்களின் குல தெய்வமாக விளங்குபவர் விசவத்தனை முருகன். கிழக்கே நோக்கிய கோயில் வாசலுடன் பிள்ளையார், வைரவர், முத்துக்குமார், ஆறுமுகசாமி, நவக்கிரகங்கள், சண்டேசுவரர் என்பவற்றை பரிவாரத்தெய்வங்களாக கொண்டு இக் கோயில் விளங்குகின்றது. தினமும் மூன்று வேளை பூசைகள் நடைபெறுகின்றன.

 200 ஆண்டுகளிற்கு முன் வாழ்ந்த கதிர்காமர் என்பவர் தனது சொந்தக் காணியில் ஒரு கொட்டில் கட்டி அதில் வைரவசூலம் வைத்து பூசை செய்து வழிபட்டு வந்தார். பின்னர் அக் கொட்டில் மடாலயமாக பெருப்பிக்கப்பட்டு ஊர் மக்கள் சேர்ந்து வழிபட்டு வந்தனர். ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாத முதல் செவ்வாயில் வைரவரிற்கு விளக்கு வைத்து அடுத்த செவ்வாய் ஊர்மக்கள் சேர்ந்து பொங்கல் பொங்கி படைத்து வழிபாடு செய்தார்கள். இந்தக் காலத்தில் பிராமணக் குருமார் பூசைக்கு நியமிக்கப்பட்டனர்.

கதிர்காமரின் பேரனாகிய சின்னட்டியர் காலத்தில் வைரவ மடாலயத்திற்கு அருகில் முருகப் பெருமானிற்கும் என ஒரு மடாலயம் அமைக்கப்பட்டது. தொடர்ந்து சின்னட்டியர் மகன் செல்லப்பா காலத்தில் முருகனுக்கு ஆகம முறைப்படி ஆலயம் அமைக்கப்பட்டது. ஆனால் வைரவரின் இருப்பிடம் மாற்றம் செய்யப்படவில்லை. 1910ஆம் ஆண்டு கர்ப்பக்கிரகம், திருமஞ்சனக்கிணறு, மகாமண்டபம் என்பன அமைக்கப்பட்டன.

1912ஆம் ஆண்டு முதலாவது கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இக் காலத்தில் பத்து நாட்கள் பங்குனி மாதத்தில் அலங்காரத் திருவிழாக்கள் நடைபெற்று வந்தன. 1928ஆம் ஆண்டளவில் முருகைக் கற்களால் ஆன கற்பக்கிரகம் வைரக் கற்களால் மாற்றி அமைக்கப்பட்டது. இத்துடன் கொடிமரம், பலிபீடம், அர்த்தமண்டபம், தரிசனமண்டபம் போன்றனவும் கட்டப்பட்டு இதேகாலத்தில் இரண்டாவது கும்பாபிஷேகமும் நடைபெற்றது. இதன் பின் ஆலயத்தில் கொடியேற்றத்துடன் திருவிழாக்கள் இடம்பெற்றன.

1948இல் சுவாமி பாலஸ்தாபனம் செய்யப்பட்டு 1954 இல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 1958இல் கோயில் பரிபாலன சபை உருவாக்கப்பட்டது. இது தற்போதும் ஆலய செயற்பாடுகளை பரிபாலனம் செய்து பராமரித்து வருகின்றது. 1966இல் புதிய சித்திரத் தேர் உருவாக்கப்ட்டது. தேர்முட்டி, தேர் தரிப்பிடம் என்பனவும் இக் காலத்தில் அமைக்கப்பட்டன.

1982ஆம் ஆண்டு நான்காவது கும்பாபிஷேகம் நடைபெற்றது; 1998இல் ஐந்தாவது கும்பாபிஷேகம் நடைபெற்றது. 2010இல் கோயிலின் பிரதான வாயிலில் முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இராஜகோபுரம் அமைக்கும் பணிகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து அதன் வேலைகள் நடைபெற்று 2012 நிறைவு நிலையில் உள்ளது. தொடர்ந்து உள் மண்டபங்கள் அனைத்தும் மீள்புனரமைப்பு செய்து முதலாவது கும்பாவிஷேகம் 1912ம் வருடம் நடத்தப்பட்டு இன்று 2012 இல் 100 வது வருடமாகிறது இந்த வருடம் மீளவும் கும்பாவிஷேகம் நடைபெறுவது மிக நல்ல பலன்களை மக்களுக்கு கிடைக்க ஏதுவாக அமையும் எனவே மக்கள் அனைவரும் ஒன்று பட்டு இத்திருப்பணிகளை நிறைவு செய்து முருகன் அருள் ஒளியை பண்ணாகத்திலும்  உலகவாழ் பண்ணாக மக்கள் மனைகளிலும் விளங்கச் செய்வோம்.

பண்ணாகம் இணைய ஆசிரியர் -இககி-

 

 

title

முருகபக்தர்களிடம் பரிபாலனசபையின் அன்பான வேண்டுகோள்

விசவத்தனை முருகன் கோபுரம் நிறைவாகிறது. பரிபாலன சபைத் தலைவர் பண்ணாகம் இணையத்திடம் தெரிவிப்பு.


https://lh4.googleusercontent.com/-6H_XvwcJ244/TXo2fyQGVyI/AAAAAAAAAgE/5mUysUEJ4uU/s1600/Image0471.jpgபண்ணாகம் விசவத்தனை முருகன் ஆலயத்தின் கோபுர வேலைகள் நிறைவடைகிறது. தற்போது கோபுரத்தின் அடித்தள சிற்பங்கள் பொருத்தும் வேலைகள் நிறைவானதும் கோபுரம் நிறைவாகிவிடும் என பண்ணாகம் இணையத்திடம் இன்று பரிபாலனசபைத் தலைவர் தெரிவித்தார். மேலும் அவர் தெரிவிக்கையில் கோபுர கும்பாவிஷேகம் வரும் 2012 https://lh6.googleusercontent.com/-bqHhu3tBkKQ/TXo2LlkBXxI/AAAAAAAAAf4/63vv5W6HcJQ/s1600/Image0453.jpgஆவணிமாதத்தில் நடாத்த தீர்மானித்துள்ளதாகவும்  தனியாக கோபுர கும்பாவிஷேகம் செய்யப் பெருந் தொகைப்பணம் செலவாகும் என்பதால் கோவில் ஆதிமூலவர் மண்டபத்தைத் திருத்தியபின்பு ஒன்றாக கும்பாவிஷேகம் செய்யவிருப்பதாகவும் தெரிவித்தார். கோவில் உள் மண்டபங்கள் பலவும் ஆதிமூல மண்டபம் என்பன மழைகாலங்களில் ஓழுகுவதால் அவற்றையும் திருத்தியமைக்கவேண்டிய கட்டாயத்திலுள்ளதால் தற்போது தை மாதம் பாலஸ்தானம் செய்து கோவில் உள் சுற்றுமண்டபங்கள் ,ஆதிமூலமண்டபம் என்பனவற்றின் திருப்பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளது எனவே இம் மண்டபங்களின் திருப்பணிகளை நிறைவாக்க முருகன் அடியவர்கள் தனிநபர்கள் முன்வந்து தனியாகவும், கூட்டாகவும் செய்யலாம். எனவே முருகன் அடியவர்கள் தாங்களாக முன்வந்து திருப்பணியை நிறைவு செய்ய பரிபாலன சபையுடன் தொடர்பு கொள்ளவும். இது உங்கள் ஆலயம் நீங்கள் தான் இதனை எல்லாம் நிறைவாக்கவேண்டும் எனவும் பரிபாலன சபையினர் வேண்டுகோள் விடுக்கின்றார்கள்.

-இககி-

ஆலடி வயிரவர்

 நீங்கள் தரிசிக்க ஊரின் ஆலயங்கள்.

 

  

ஊரின் நடுவே உள்ள காளி கோவில்

பிரதான வீதி வயிரவர் (சிதம்பரத்தை வயிரவர்)

 காளிகோவில் (விசவத்தனை வீதி வழியில்)

நெல்லியான் வயிரவர்

 

 

வயிரவர் ஆலய   தோற்றம்