WELCOME TO PANNAGAM.COM & PTV

பண்ணாகம் இணையம்

NEWS 10

சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு, கர்நாடக மாநிலத்தில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சிறையில் கூடுதல் வசதிகளைச் செய்து தருவதற்காக டிஜிபி சத்யநாராயணா இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக சிறைத் துறை டிஐஜி ரூபா குற்றம்சாட்டியிருக்கிறார். ஆனால், சத்யநாராயணா அதை மறுத்திருக்கிறார்.


பணியிட மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, அவரைப் பற்றி சமூக வலைத்தளங்களில் அவர் இதற்கு முன்னர் வகித்த பதவிகள், அவர் பணியாற்ற விதம் பற்றி விவாதிக்கப்பட்டு வருகிறது.

ரூபாவின் ட்விட்டர் பக்கத்தில் 14,000க்கும் மேற்பட்டோர் அவரை பின்தொடருகின்றனர். அவர் இடமாற்றம் செய்யப்பட்ட செய்தி வெளியானவுடன், பலரும் அதை கண்டித்ததோடு மட்டுமல்லாமல் அவரின் நடவடிக்கை நேர்மையானது என்று கூறி வாழ்த்து செய்திகளை பதிவிட்டனர்.

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ரூபாவின் பெற்றோர் அரசு அதிகாரிகளாக பணியாற்றியவர்கள், அவரது கணவர் முனிஷ் மௌட்கில் அதே மாநிலத்தில் குடிநீர் மற்றும் சுகாதார துறையில் பணியாற்றும் ஐஏஎஸ் அதிகாரி ஆவார்.

2000-ஆவது ஆண்டில் இந்திய குடிமைப் பணி தேர்வில் வெற்றிபெற்று ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வானார்.

அ.தி.மு.க. அம்மா அணியின் பொதுச் செயலாளர் சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் நான்காண்டு சிறை தண்டனை பெற்று பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், கர்நாடக மாநில சிறைத் துறையின் டிஐஜியாக ரூபா என்பவர் நியமிக்கப்பட்டார். கடந்த பத்தாம் தேதியன்று பரப்பன அக்ரஹார சிறைக்குச் சென்று ஆய்வு நடத்திய ரூபா, அந்த ஆய்வின் அடிப்படையில் சிறைத் துறை டிஜிபி சத்யநாராரயணாவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார்.

அந்தக் கடிதத்தில், 'சசிகலாவுக்கு தனியாக சிறப்பு சமையல் அறை வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அவர் விரும்பும் உணவை செய்துகொடுக்க சில கைதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்காக நீங்கள் 2 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதில் தாங்கள் பணம் பெறவில்லையென்றால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறியிருந்தார். இதே அறிக்கையை ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கும் அனுப்பியிருப்பதாக ரூபா தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் வியாழக்கிழமையன்று செய்தியாளர்களைச் சந்தித்த டிஜிபி சத்யநாராயணா இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்தார். 'ஆரம்பத்திலிருந்தே சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்துதரப்பட வேண்டும் என்று கோரப்பட்டாலும் அவை மறுக்கப்பட்டிருக்கின்றன. மற்ற கைதிகளைப் போலத்தான் அவர் பெண்கள் சிறையில் இருந்துவருகிறார். சிறையில் என்ன நடந்தாலும் என் கவனத்திர்கு வந்துவிடும். அங்கு அதிகாரிகள் இருக்கிறார்கள். தன்னார்வ அமைப்புகள் இருக்கின்றன. அப்படி ஏதும் நடக்கவில்லை' என்று சத்ய நாராயணா கூறினார்.


சட்டவிரோத மணல் விவகாரம் வடமராட்சியில் பெரும் பதற்ற சூழ்நிலையை ஏற்படுத்தியிருந்தமை யாவரும் அறிந்ததே.

விசேட அதிரடிப்படையினரைக் குவிக்குமளவில் மணல் விவகாரம் அங்கு எதிர்வினையை  ஏற்படுத்தியுள்ளது.

மணல் தட்டுப்பாடு நீண்டகாலமாக இருப்பது கண்டும் உயர்அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

சில உயர்அதிகாரிகளைப் பொறுத்தவரை தங்களது பதவிக்குப் பங்கம் வராத வகையில் கடமையில் காலம் கடத்துகின்றவர்களாகவே இருக்கின்றனர்.

இதன்காரணமாக ஓர் இளைஞனின் உயிர் காவு கொள்ளப்பட்டுள்ளது. இந்த அநியாயத்துக்கு யார் பதில் அளிப்பது  என்பது இன்னமும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.

மணல் தட்டுப்பாட்டை நீக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்பதும்  இதுவரை தெரியவில்லை. சட்டவிரோத மணல் விவகாரம் பல்வேறு சமூகச் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. 

குறிப்பாக கிராமங்களிடையே மோதல்களை ஏற்படுத்துமளவில் நிலைமை முற்றுமுறுகிப் போயிற்று.
இதுதவிர, வீட்டுத்திட்டத்தைப் பூர்த்தி செய்வதற்கு மணல் தட்டுப்பாடு பெரும் தடையாக இருக்கிறது.
அத்துடன் சிலர் ஏதோவொரு வகையில் சட்டவிரோத மணல் வியாபாரத்தில் ஈடுபட்டு அதிகூடிய இலாபத்தை உழைக்கின்றனர்.

இரவுப் பொழுதில் இந்த சட்டவிரோத மணல் விவகாரம் நடக்கிறது. இதில் காவல் செய்பவர்களுக்கும் பங்கு உண்டா? என்று எண்ணத் தோன்றும்.

இத்தகைய சட்டவிரோத மணலை மிக உச்சமான விலைக்கு விற்பதால், ஏழை மக்கள் தாங்க முடியாத சுமையைத் தாங்கி தமக்குக் கிடைத்த வீட்டுத் திட்டத்தை நிறைவு செய்ய வேண்டியவர்களாக இருக்கின்றனர்.

பொருத்து வீட்டுத் திட்டத்தை வடக்குக்கு அறிமுகம் செய்த அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அவர்கள் கூறிய ஒரு விடயம்,

வடக்கு மாகாணத்தில் மணல் தட்டுப்பாடு மற்றும் தொழிலாளர்களைப் பெறுவதில் கஷ்ரம் ஆகிய காரணங்களால் கல் வீடு என்பதற்குப்பதிலாக பொருத்து வீடுகளே பொருத்தம் என்கிறார்.

எனினும் நம்மவர்கள் பொருத்து வீட்டை எதிர்த்தனர். மக்கள் குடி இருப்பதற்கு வழங்கப்படுகின்ற பொருத்துவீட்டை எதிர்ப்பதால் இவர்களுக்கு என்ன இலாபம் என்ற கேள்வி நடு நிலையாளர்களிடம் எழவே செய்தது.

ஆனால் அமைச்சர் சுவாமிநாதன் கூறிய, வடக்கில் மணல் தட்டுப்பாடு உள்ளது. இதனால் பொருத்து  வீடே பொருத்தம் என்ற கருத்து ஏற்புடையது என்பதை எவரும் மறுக்க முடியாது.

பொருத்து வீட்டுக்குப் பதிலாக கல்வீடுதான் தேவை என்றால், நல்லது அதற்கு மணல் கிடைக்குமா? மணலைத் தட்டுப்பாடின்றி தேவைக்கேற்ப வழங்க முடியுமா? என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

யதார்த்தமான கருத்துக்கள் புற நீக்கப்படுமாக இருந்தால் நிலைமைகள் மோசமாகவே அமையும்.
ஆகையால் மணல் தட்டுப்பாடு என்ற விடயத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பது மிகவும் அவசியமானதாகும்.

இது விடயத்தில் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுநலன் சார்ந்து; சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்ய பொதுமக்களின் நலனில் அக்கறை கொண்டவர்கள் முன்வர வேண்டும்.

இல்லையென்றால் எங்கள் மண்ணில் துப்பாக்கிச் சூடுகளும் மரணங்களும் அழுகை ஒலிகளும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.

இதைத் தடுக்க சம்பந்தப்பட்டவர்கள் அதிரடியாக நடவடிக்கை எடுங்கள்.


சுழி­பு­ரத்­தில் 8 கிலோ 900 கிராம் கஞ்சா போதைப் பொதி­கள் மீட்­கப்­பட்­டுள்­ளன. அவற்றை வைத்­தி­ருந்த குற்­றச்­சாட்­டில் 5 இளை­ஞர்­கள் கைது செய்­யப்­பட்­டுள்­ள­னர் என்று 
பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

தமக்­குக் கிடைத்த தக­வ­லை­ய­டுத்து வட்­டுக்­கோட்டை சுழி­பு­ரம் பகு­தி­யில் வீடு ஒன்­றில் நடத்­திய திடீர் தேடு­த­லின்­போது வீட்­டின் பின்­பு­றத்­தில் கஞ்சா போதைப் பொருள் பொதி­க­ளாக்­கப்­பட்­டி­ருந்த நிலை­யில் மீட்­கப்­பட்­டன. 

அவற்றை வைத்­தி­ருந்த குற்­றச்­சாட்­டில் குறித்த வீட்­டி­லுள்ள 5 இளை­ஞர்­கள் கைது செய்­யப்­பட்­ட­னர்.

அவர்­கள் பொலிஸ் விசா­ர­ணை­யி­லுள்­ள­னர். விசா­ர­ணை­க­ளின் பின்­னர் நீதி­மன்­றில் முற்­ப­டுத்­தப்­ப­டு­வர் என்று பொலி­ஸார் மேலும் தெரி­வித்­த­னர். 

கூகிள் நிறுவனத்திற்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் பாரிய அபராதம் விதித்துள்ளது. வர்த்தக ஒப்பீடு தொடர்பிலான விடயங்களில் கூகிள் நிறுவனம் ஒழுக்க விதிகளை மீறி பக்கச்சார்பாக தனது விற்பனை ஒப்பீட்டு நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் செயற்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் கூகிள் நிறுவனத்திற்கு, ஐரோப்பிய ஒன்றியம் 2.7 பில்லியன் அமெரிக்க டொலர்களை அபராதமாக விதித்துள்ளது. 90 நாட்களுக்குள் தற்போதைய நடைமுறைகளில் மாற்றம் செய்யப்படாவிட்டால் மேலதிக அபராதத்தை செலுத்த நேரிடும் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

விசாரணைக்குழுவினால் குற்றம்சுமத்தப்படாத இரண்டு அமைச்சர்களையும் கட்டாய விடுப்பில் செல்ல வலியுறுத்தமாட்டேன் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று தெரிவித்துள்ளார்.

“அன்புக்குரிய சாம்” என்று விழித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு அவர் ஆங்கிலத்தில் இன்று அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

‘17.06.2017 நாளிடப்பட்ட உங்களின் கடிதம் கிடைத்தது. நன்றி.

இன்று காலை யாழ். ஆயர் வண.ஜஸ்ரின் ஞானப்பிரகாசம், நல்லை ஆதீனம் சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமி ஆகியோரின் குறிப்பும் கிடைத்தது. முதலில் ஒரு விளக்கம்.

சம்பந்தப்பட்ட இரண்டு அமைச்சர்களுக்கும் எதிராக தண்டனை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அவர்கள் தமது ஊதியம், வாகனம் மற்றும் ஏனைய வசதிகளைப் பெறும் உரிமை உள்ளது.

விசாரணை அமர்வு நடைபெறும் போது, சாட்சிகளின் பாதுகாப்பு கருதி அவர்கள் விடுப்பில் செல்ல வேண்டும் என்றே உத்தரவிடப்பட்டது. அவர்களுக்கு எதிராக புதிய குற்றச்சாட்டுகளும் உள்ளன.

இந்த விடயத்தில் இரண்டு அமைச்சர்கள் தொடர்பாக உங்களால் உத்தரவாதம் அளிக்க இயலவில்லை என்பதை புரிந்து கொள்கிறேன்.

ஆனால் சுதந்திரமான விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என்று நீங்கள் அவர்களுக்கு ஆலோசனை வழங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது.

சுதந்திரமான விசாரணையை உறுதிப்படுத்தவே அவர்களை கட்டாய விடுப்பில் அனுப்பும் முறைமையை வரைந்தேன்.

நீங்கள் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இருக்கிறீர்கள். சுதந்திரமான விசாரணைக்கு முட்டுக்கட்டை போடக் கூடாது என்று குறிப்பிட்ட இரண்டு அமைச்சர்களுக்கும் நீங்கள ஆலோசனை கூற வேண்டும்.

நீதி விசாரணையில் தலையீடு செய்யாமல், இரண்டு அமைச்சர்களும் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று இரண்டு மதத் தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

அத்துடன் மதிப்புக்குரியவர்களான செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரேமச்சந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், ஆகியோரும் நேற்று என்னைச் சந்தித்து, சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் இருவரும் நீதி விசாரணைகளில் தலையீடு செய்யாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சம்பந்தப்பட்டவர்களை விடுப்பில் அனுப்பும் நிபந்தனையை வலியுறுத்தப் போவதில்லை.” என்று அந்தக் கடிதத்தில் முதலமைச்சர் கூறியுள்ளார்.

இந்தக் கடிதத்தின் பிரதிகள், நல்லை ஆதீனம், யாழ். ஆயர், மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரேமச்சந்திரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், சட்டவாளர் கனகஈஸ்வரன் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
வடக்கு மாகாண சபை தொடர்பில் ஏற்பட்டுள்ள குழப்பகரமான நிலைமை தொடர்பில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், தமிழரசுக் கட்சிக்கும் இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்த மதத் தலைவர்கள், இவ்விடயம் தொடர்பில் மக்களின் கருத்துக்களை பிரதிபலிக்கும் 3 ஆலோசனை களை குறிப்பிட்டு சம்மந்தப்பட்ட தரப்புக்களுக்கு கடிதம் மூலம் நேற்று அனுப்பியுள்ளனர்.

வணக்கத்துக்குரிய மதத் தலைவர்கள் சார்பில் நல்லை ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞான சம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள் மற்றும் யாழ்.மறை மாவட்ட ஆயர் பேரருள் வணபிதா ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ஆகியோரால் மேற்படி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,

18.06.2017
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ,
எதிர்க்கட்சி தலைவர்,
மேதகு இராஜவரோதயம் சம்பந்தன்.

தலைவர், தமிழரசுக் கட்சி,
பாராளுமன்ற உறுப்பினர்,
மேதகு மாவை சேனாதிராசா,

வட மாகாண முதலமைச்சர்,
நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன்,

கனம் அன்புடையீர்,
மதத் தலைவர்களாகிய நாங்கள் அண்மைக்காலமாக வட மாகாணசபை தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பாக எமது மக்களுடன் கலந்துரையாடியதன் விளைவாக இவ் விடயத்தை பொறுப்புள்ளவர்களுடன் கலந்துரையாடி ஒரு உகந்த தீர்வை மக்களின் நன்மை கருதி ஏற்படுத்த வேண் டிய அவசியத்தின் பிரகாரம் பின்வரும் ஆலோசனைகளை உங்கள் முன் வைக்கலாம் என கருதுகின்றோம்.

01. விசாரணையின் போது குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட இரு அமைச்சர்களும் மீண்டும் தமது அமைச்சர் பணிகளை தொடர அனுமதிக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம். அத்துடன் அவ ர்கள் சம்பந்தமான குற்றச்சாட்டுக்களுக்கான விசாரணைகளை இடையூறுகள் இன்றி செய்வதை அவ் அமைச்சர்கள் ஒத்துழைப்ப துடன் பொறுப்பான மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் சகல உறுப்பினர்களும் கட்சி தலைமைகளும் விசாரணைகளை சரியான முறையில் நடத்துவதற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும். இதன் மூலமே நல்லாட்சியினை வட மாகாண சபையில் கொண்டு வர முடியும்.

02. வட மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களை முதலமைச்சராக கொண்ட மாகாண சபையை திறம்பட இயங்க சகலரும் பூரண ஒத்துழைப்பு வழங்க கேட்டுக்கொள்கிறோம்.

03. ஆளுநரிடம் கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தை மீளப்பெற்றுக் கொள்ளப்பட்டு அதனை உறுதிப்படுத்த வேண்டுகின்றோம்.

தமிழ் மக்களின் அரசியல் பலம் சிதைவடைவதற்கு இடமளிக்காமல் சம்பந்தப்பட்ட தரப்பினர் விட்டுக்கொடுப்புடனும் புரிந்துணர்வுடனும் மேற்குறிப்பிட்ட பரிந்துரைகளை ஏற்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டிக்கொள்கின்றோம் என குறிப்பிட்டு மதத் தலைவர்களால் கடிதம் அனுப்பப்ப ட்டுள்ளது.

அக்கடிதத்தின் பிரதிகள்,
தலைவர்- தமிழீழ ஈழ விடுதலை இயக்கம், தலைவர்- தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தலைவர் - ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தலைவர்-  தமிழ்த் தேசியதிற்கான மக்கள் முன்னணி, தலைவர் - தமிழ் மக்கள் பேரவை, தலைவர்- ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.    
தமிழ் மக்களின் தேசிய கொள்கையுடன் செயற்பட்ட வடமாகாண முதலமைச்சரை பதவியில் இருந்து அகற்றுவதற்கு தமிழரசு கட்சி அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதனை தடுக்க தமிழ் மக்கள் அனைவரும் அணிதிரள வேண்டுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது, கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.

இதன்போது அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தமிழ் மக்களின் தேசிய கொள்கைக்காக தனது செயற்பாடுகளை முன்னெடுத்து வந்தார். அவரின் கொள்கைகளை அகற்றுவதற்கு தமிழரசு கட்சி ஈ.பி.டி.பி மற்றும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகிறது.

திருடர்களை காப்பாற்றுவதற்கு தமிழரசு கட்சி செயற்பட்டு கொண்டிருக்கின்றது. திருடர்களின் குகையாக தமிழரசுக்கட்சி மாறியுள்ளது.

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனின் கொள்கைப்பற்று பாதையை தோற்கடிப்பதற்காக ஈ.பி.டி.பி மற்றும் அரசாங்கம் மற்றும் தமிழ் இனத்தினைக் காட்டிக் கொடுத்த தரப்பினருடன் இணைந்து கொண்டுள்ளனர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகள் துணை போகவில்லை. முதலமைச்சருக்கு எதிரான இந்த சதிக்குப் பின்னால், அரசாங்கம் துணை நிற்கின்றது.

03 வாரங்களுக்கு முன்னர் பீல்ட் மாஸ்ரர் சரத் பொன்சேகா வடமாகாண முதலமைச்சரின் பதவிக்காலம் மிக விரைவில் நிறைவடையுமென தெரிவித்திருந்தார் என்பதனையும் சுட்டிக்காட்டினார்.

ஒற்றையாட்சிக்குள் கொண்டு வருதவற்கு திட்டமிட்டு செயற்படும் அரசாங்கத்துடன் இணைந்து தமிழரசுக் கட்சி செயற்படுகின்றதென்பதனை எமது மக்கள் உணர்ந்துகொள்ள வேண்டும்.

தந்தை செல்வாவின் கோரிக்கைகளை அழிப்பதற்கு தமிழரசுக்கட்சி செயற்பட்டு கொண்டிருக்கின்றது. மாகாண சபையில் இடம்பெற்ற அனைத்து விடயங்களும் வெறுமனவே ஊழல் சம்பந்தப்பட்ட விடயங்கள் அல்ல.

இவை அனைத்தும் தமிழ் மக்களின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட விடயம் என்பதனை எமது மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.

தமிழ் தேசத்தின் வாழ்வா? சாவா என்ற இந்த நிலையில் தமிழ் மக்கள் அணிதிரள வேண்டும். வடமாகாண முதலமைச்சருக்கு எதிரான சதியை முறியடிக்க தமிழ் மக்கள் முன்வர வேண்டும்.

தமிழ் மக்கள் பேரவை உறுப்பினர்கள் மற்றும் சமூக அமைப்புக்கள் ஒன்றிணைந்து செயற்படுமென்பதுடன், தமிழ் மக்கள் பேரவையின் முடிவுகளுக்கு அப்பால், தமிழ் மக்கள் இந்த சதியினை முறியடிக்க அனைவரும் அணிதிரள வேண்டுமென்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளுக்கு அமைய எந்தவொரு கட்சியும் அறுதிப் பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதன்மூலம் தற்போதைய அரசாங்கமான கன்சர்வேடிவ் கட்சி ஒட்டுமொத்த பெரும்பான்மை பெற தவறியுள்ளது.

இதன் காரணமாக தொங்கு நாடாளுமன்றம் அமைக்க பிரித்தானியா தயாராகுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று இடம்பெற்ற பிரித்தானிய தேர்தலுக்கு பின்னர் தொழிற் கட்சி முன்னெற்றத்தை கண்டமையே இதற்கு காரணமாக அமைந்துள்ளது.

பிரெக்சிட் மீதான ஐரோப்பிய ஒன்றியத்துடனான பேச்சுவார்த்தைகளில் தனது கையை வலுப்படுத்த முயற்சிக்கும் நோக்கில், பாராளுமன்ற தேர்தலுக்கு பிரதமர் தெரேசா மே அழைப்பு விடுத்திருந்தார். எனினும் தேர்தல் முடிவுகள் அவருக்கு அவமானத்தை ஏற்படுத்தும் விடயமாக இருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தொழிற்கட்சித் தலைவர் ஜெர்மி கார்பன், தெரேசா மேயை ராஜினாமா செய்யும்படி வேண்டுகோள் விடுத்தார், ஆனால் தன்னுடைய கட்சியை பிரித்தானியாவில் ஸ்திரத்தன்மைக்கு உறுதிப்படுத்துவதாக தெரேசா மே குறிப்பிட்டுள்ளார்.

இந்த நேரத்தில் வேறு எதையும் விட, நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு காலம் தேவை என தெரேசா மே மேலும் தெரிவித்துள்ளார்.

இதுவரை வெளியான தேர்தல் முடிவுகளுக்கு அமைய கன்சர்வேட்டிவ் கட்சி 315 ஆசனங்களையும், தொழிலாளர் கட்சி 265 ஆசனங்களையும் பெற்றுள்ளன.
பிரித்தானியா பாராளுமன்ற தேர்தல் நேற்று இடம்பெற்ற நிலையில், தற்போது முடிவுகள்   வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், முடிவுகள் வெளியான ஆரம்பத்தில் முன்னிலை பெற்றிருந்த Labour கட்சியை பின்தள்ளி ஆளும் கட்சியான Conservatives கட்சி தற்போது முன்னிலை பெற்றுள்ளது.

650 உறுப்பினர்களை கொண்ட பிரித்தானியா பாராளுமன்ற தேர்தலில் தற்போது வரையில், 620 தொகுதிகளுக்கான முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், Conservatives கட்சி 298 ஆசனங்களை பெற்றுள்ளது.

ஆரம்பத்தில் முன்னிலை பெற்ற Labour கட்சி தற்போது 255 ஆசனங்களை பெற்று இரண்டாம் இடத்தினை பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், இறுதி முடிவுகளின் அடிப்படையில் Conservatives கட்சி 318 ஆசனங்களையும், Labour கட்சி 267 ஆசனங்களையும் பெற்றுக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, பிரித்தானியா பாராளுமன்றில் அறுதிப்பெறுபான்மையை பெற்றுக்கொள்ள 326 ஆசனங்களை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


பிரித்தானியாவின் பிரதமர் மற்றும் நாடாளுமன்ற உபிறுப்பினர்களை தெரிவு செய்யும் பொது தேர்தலுக்கான வாக்குபதிவு தொடங்கியுள்ளது.

இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு இரவு 10 மணிவரை நடைபெறவுள்ளது.

பிரித்தானியா முழுவதும் 40000 மையங்களில் வாக்குபதிவு நடைபெறுகிறது. மொத்தமாக 650 நாடாளுமன்ற உறுப்பினர்களை 46.9 மில்லியன் மக்கள் தங்கள் வாக்குகள் மூலம் தெரிவு செய்ய இருக்கிறார்கள்.

தபால் ஓட்டுகள் சில ஏற்கனவே போடப்பட்டு விட்டன.

பள்ளிக்கூடங்கள், சமூக மையங்கள், சமுக மன்றங்கள் போன்ற இடங்களில் வாக்குபதிவு நடைபெற உள்ளன.


அவுஸ்திரேலியாவில் 93 வயது மணப்பெண் ஒருவர் திருமணத்திற்கு எந்த உடை அணியலாம் எனக் கேட்டு பதிவேற்றியுள்ள பேஸ்புக் பதிவு தற்போது வைரலாகியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் பகுதியில் குடியிருந்து வருபவர் 93 வயதாகும் சில்வியா. இவர் தற்போது தமது நீண்ட நாள் நண்பரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.

இதனையடுத்து திருமண நாளில் எந்த உடை அணியலாம் என சில புகைப்படங்களை தமது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு இணையவாசிகளிடம் வினவியுள்ளார்.

93 வயதாகும் சில்வியா 88 வயதாகும் பிராங்க் என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார். கடந்த 20 ஆண்டுகளாக சில்வியாவுடன் நெருங்கிய நட்பில் இருக்கும் பிராங்க், பல முறை சில்வியாவிடம் தம்மை திருமணம் செய்து கொள்ள கேட்டிருக்கிறார்.

ஆனாலும் மரணமடைந்த தமது முன்னாள் கணவருக்கு அவமரியாதை செய்ய விரும்பவில்லை எனக் கூறி பிராங்கின் கோரிக்கையை நிராகரித்து வந்துள்ளார்.

இதனிடையே சில்வியாவுக்கு உடல்நிலை பாதிக்கப்படவே அடிலெய்ட் நகரில் இருந்து கான்பெர்ராவுக்கு குடிபெயர திட்டமிட்டுள்ளார். மட்டுமின்றி பிராங்கையும் தம்முடன் வர அழைத்துள்ளார். இதனையடுத்து இருவரும் திருமணம் செய்ய ஒப்புக்கொண்டுள்ளனர்.

இதனையடுத்தே சில்வியா தமது திருமண உடை குறித்து இணையவாசிகளிடம் ஆலோசனை கோரியுள்ளார்.

நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஹெலிகப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.இந்த நிலையில் மீட்பு பணிக்கு சென்ற ஹெலிகப்டர் ஒன்று காலி, நெழுவ பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகி உடைந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவத்தில் காயமடைந்தவர்கள் தற்போது கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்டிருந்தவர்களை மீட்பதற்காக பெல் 212 மற்றும் எம்.ஐ - 17 ஹெலிகப்டர்கள் பணியில் ஈடுப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை காலி நெலுவ பகுதியில் மீட்பு பணிக்காக சென்றிருந்த MI27 ரக ஹெலிகாப்டரில் பயணம் செய்த மீட்பு பணியாளர் ஒருவர் தவறி வெள்ளத்தில் விழுந்துள்ளார்.

இந்நிலையில் வெள்ளத்தில் விழுந்த குறித்த நபர் உட்பட, வெள்ளத்தில் சிக்குண்ட மேலும் இருவர் மீட்கப்பட்டுள்ளனர்.


மட்டக்களப்பு, ஆரையம்பதி முத்துமாரியம்மன் ஆலயத்தின் மண்டபம் இன்று மாலை இடிந்து விழுந்ததில் 18 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த ஆலயத்தின் மண்டப கட்டட பணிகள் நிறைவடைந்து அதற்கான பிளேட் கொங்ரீட் இடும் பணிகளின் போதே கட்டடம் இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது கட்டடப்பணிகளில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், அங்கிருந்து ஆறுபேர் மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைகளுக்காக மாற்றப்பட்டுள்ளதாக வைத்திய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கட்டட இடிபாடுகளுக்குள் தேடுதல் பணிகள் இடம்பெற்று வருவதுடன், காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச் சம்பவத்தால் அப் பகுதி சோக மயமாக காட்சியளிக்கிறது

சர்வதேச வெசாக் தினத்தை முன்னிட்டு இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்தியப்பிரதமர் நரேந்திர மோடி இன்று மலையகத்திற்கு செல்லவுள்ளார்.

மோடியை வரவேற்பதற்கு மலையகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டு இருக்கின்றன.

இந்த விஜயத்தின்போது இந்தியப் பிரதமர் டிக்கோயா மாவட்ட ஆதார வைத்தியசாலையை திறந்துவைக்க உள்ளார்.

ஆனால் டிக்கோயா மாவட்ட ஆதார வைத்தியசாலையின் பெயர் தமிழில் பிழையாக எழுதப்பட்டுள்ளது.

டிக்கோயா மாவட்ட “ஆதார” வைத்தியசாலை என்பதற்கு பதிலாக டிக்கோயா மாவட்ட “ஆநார” வைத்தியசாலை என எழுதப்பட்டுள்ளது.

ஜேர்மனியில் இரண்டாம் உலகப்போரில் வீசப்பட்ட வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் சுமார் 50,000 மக்கள் உடனடியாக வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Lower Saxon மாகாணத்தில் உள்ள Hanover நகரை சேர்ந்த மக்கள் தான் இன்று காலை முதல் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

இரண்டாம் உலகப்போர் நிகழ்ந்தபோது 1943-ம் ஆண்டு அக்டோபர் 9-ம் திகதி இந்நகர் மீது 2,61,000 வெடிகுண்டுகள் வீசப்பட்டன.

இந்த வெடிகுண்டுகள் வெடித்ததில் 1,245 பேர் பலியாயினர். மேலும், 2,50,000 மக்கள் வீடுகளை இழந்தனர்.

யுத்தம் நடந்து முடிந்து 70 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், ஜேர்மனியில் உள்ள பல்வேறு நகரங்களில் அடிக்கடி வெடிக்காத குண்டுகள் கண்டுபிடிக்கப்படுகின்றன.

இதன் அடிப்படையில், ஹேன்னோவர் நகரில் தற்போது வெடிக்காத நிலையில் 5 வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மேலும், இதே நகரில் 13 இடங்களில் குண்டுகள் இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதால் இன்று காலை முதல் பொதுமக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

வெடிகுண்டுகள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட செயலிழக்கப்படும். இந்நடவடிக்கை முடிந்த பிறகு மாலை முதல் வெளியேற்றப்பட்ட மக்கள் மீண்டும் வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

இதே போன்று கடந்தாண்டு Augsburg நகரில் வெடிக்காத நிலையில் வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதால் சுமார் 54,000 பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

t text

காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் மஹிந்த ஆதரவாளர்களின் மேதினக்கூட்டத்திற்கு அதிகளவிலான மக்கள் படையெடுத்துள்ளனர்.

மே 1ஆம் திகதி உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பல பாகங்களிலும் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

அந்த வகையில் கூட்டு எதிர்க்கட்சியான மஹிந்தவின் ஆதரவாளர்களால் காலி முகத்திடலிலும், ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியால் கண்டியிலும் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

இதில் காலி முகத்திடலில் திரண்டுள்ள பெருமளவிலான மக்கள் கோசங்களை எழுப்பிக்கொண்டு தமது ஆதரவினை வெளிப்படுத்தியுள்ளனர்.

காலி முகத்திடலில், மணல் தெரியாதவாறும், கடல் தெரியாதவாறும் மக்கள் கூட்டம் எவ்வாறு திரளப் போகிறது என்பதை பார்த்துக்கொள்ளுமாறு ரோஹித அபேகுணவர்தன அண்மையில் சவால் விட்டிருந்தார்.

எனினும் அவர் குறிப்பிட்டதைப்போன்று அலைகடலென மக்கள் திரண்டதை காணக்கூடியதாக உள்ளது.

பிரான்ஸில் நாளை ஜனாதிபதி தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குபதிவு நடைபெறவுள்ளதால் வரலாறு காணாத அளவு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பிரான்ஸின் அடுத்த ஜனாதிபதிக்கான தேர்தல் வாக்குபதிவு நாளை நடைபெறுகிறது.

ஜனாதிபதி வேட்பாளர்களாக களத்தில் ஐந்து பேர் உள்ளனர்.

இந்நிலையில் தேர்தலை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதிசெய்யக்கூடும் என்பதால் பிரான்ஸில் தற்போது பதற்றம் நிலவுகிறது.

இருதினங்களுக்கு முன்னர் பாரீஸில் ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த Karim Cheurfi (39) என்னும் தீவிரவாதி ஒரு காவலரை சுட்டுக்கொன்றான்.

இந்த தாக்குதலில் மேலும் இரண்டு காவலர்கள் படுகாயம் அடைந்தனர்.

இதனிடையில் நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மீண்டும் தீவிரவாத தாக்குதல் நடக்க வாய்புள்ளதால், அங்கு பொலிஸ் பாதுகாப்பு வரலாறு காணாத வகையில் பலப்படுத்தப்பட்டுள்ளது

கொழும்பு – கொலன்னாவ, மீத்தொட்டமுல்லை பகுதியின் குப்பைமேடு சரிந்து வீழ்ந்ததுடன், 10 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 150 இற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமைடைந்துள்ளதுடன், அங்குள்ள மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மிகப்பெரும் ஒரு சுகாதார சீர்கேடுக்கும், அச்சுறுத்தலுக்கும் முகம் கொடுக்கும் அவல நிலையினை இலங்கையின் தலைநகரம் எதிர்கொள்ளவுள்ளது.

இலங்கையின் தலைநகரம் மற்றும் வர்த்தக நகரமான கொழும்பில் சேகரிக்கும் குப்பைகளை கொட்டுவதற்கு இடம் இல்லாமையினால் அங்கு வாழும் மக்கள் பேரவலத்திற்கு முகம் கொடுக்க நேரிடும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

நேற்றைய புதுவருட தினத்தல் கொழும்பு – கொலன்னாவ, மீத்தொட்டமுல்லை பகுதியின் குப்பைமேடு சரிந்து வீழ்ந்ததுடன், 10 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 150 இற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமைடைந்துள்ளதுடன், அங்குள்ள மக்கள் இடம்பெயர்ந்த நிலையில் வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அந்த பகுதியில் தற்போதும் பதற்றமான நிலைமை நீடிக்கின்ற நிலையில், அங்கு குப்பைகளைக் கொட்டுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பு முன்னேற்பாடு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

அங்கு குப்பைகள் கொட்டப்படுவது நிரந்தரமாக நிறுத்தப்படவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைக்கும் மக்கள், குப்பைகள் கொட்டப்படுவதற்கு எதிராக குரல் கொடுக்கின்றனர். இவ்வாறான ஒரு நிலையில், எதிர்வரும் நாட்களில், குறித்த பகுதியில் குப்பைகளைக் கொட்டுவதென்பது சாத்தியமில்லாத ஒன்றாகவே அமைந்துள்ளது.

கொழும்பு உட்பட அதனைச் சூழவுள்ள பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் அசம்பாவிதம் இடம்பெற்ற பகுதியிலேயே கொட்டப்பட்டு வருவது வாடிக்கையாகும்.

நாளாந்தம் சுமார் 10 டொன் குப்பைகள் சேகரிக்கப்படும் நிலையில், அவற்றை தற்போது எங்கே கொட்டுவது என்ற கேள்விக்கு, சுகாதார அதிகாரிகள் விடைத்தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலிருந்து தொடர்ச்சியாக இரண்டு, மூன்று நாட்களுக்கு குப்பைகள் அகற்றப்படாவிட்டால், கொழும்பு மிகப்பெரும் சுகாதார சீர்கேடுகளுக்கு முகம் கொடுக்கும். அவ்வாறான நிலைமைகள் ஏற்பட்ட பல சந்தர்ப்பங்களும் இருக்கின்றன.

ஆகவே, கொலன்னாவை சம்பவமானது கொழும்பு குறித்த அச்சத்தினையும், குப்பைகளை கொட்டுவதற்கான மாற்றிடத்தை கண்டறிய வேண்டிய அவசியத்தையும் அரசாங்கத்திற்கும், அதிகாரிகளுக்கும் உணர்த்தியுள்ளது.

இதற்காக அதிகாரிகள், பிலியந்தலை, புத்தளம், ஜா-எலை உள்ளிட்ட சில பகுதிகளை அடையாளம் கண்டுள்ளதுடன், அது குறித்து ஆராய்ந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

அம்பாறை இறக்காமம் பிரதேசத்திலுள்ள மத வழிபாட்டு தலமொன்றில் வழங்கப்பட்ட உணவு விஷமானதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் சமையல்காரர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமன பகுதி பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசாரனைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட இருவரும் அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது தலா இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

பிணை நிபந்தனையை சந்தேகநபர்கள் இருவரும் பூர்த்தி செய்யாத நிலையில் எதிர்வரும் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இறக்காமம் பிரதேசத்திலுள்ள வாங்காமம் பள்ளிவாசலில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றின் போது வழங்கப்பட்ட கந்தூரி உணவை உட்கொண்ட குழந்தைகள், கர்ப்பிணிகள் உட்பட 950 பேர் வரை வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்றோட்டம் போன்ற அறிகுறிகளுடன் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த சம்பவத்தில் இரண்டு பெண்கள் உட்பட மூன்றுபேர் உயிரிழந்த சம்பவமும் இடம்பெற்றிருந்தன.

சம்பவத்தில் நோயுற்றவர்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இறக்காமம், அம்பாறை, சம்மாந்துறை, கல்முனை, அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை ஆகிய வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கல்வியின் மூலம் ஒளிமயமான எதிர்கால வாழ்வை வழங்குவோம். மரதன் ஓட்டத்தில் பங்கு பெறுவீர்,குழந்தைகளின் கல்விக்கு வழி காட்டுவீர்..... 

தானத்தில் சிறந்த தானம் கண் தானம்,ரத்த தானம் கல்வி தானம். நம் தாயகத்தில் கல்வி புலமை இருந்தும் கற்கும் ஆர்வம் இருந்தும் வறுமை முழுமையாக அல்லது பாதியில் தடை போட்டு குழந்தைகளின் கனவையே சிதைக்கிறது.தாயக குழந்தைகளும் நம் வீட்டு சிறார்கள்.நாம் தான் வளர்த்து கல்விக்கு வழி காட்டி ஒளிமயமான எதிர்காலத்தை வழங்க வேண்டும்.ஆதலால் உரிமையுடன் அழைக்கின்றோம்,வாரீர் கைகொடுப்போம்.நம் வீட்டு செல்வங்களுக்கு கல்வியின் மூலம் ஒளிமயமான எதிர்கால வாழ்வை வழங்குவோம்.அவர்கள் எங்கள் வீட்டு ரோஜாக்கள் உதிர்ந்து விடாது பராமரித்தல் நம் கடமையாகும்.ஆதலால் நம்    www.vsf-globalhelp.de  கழக ஏற்பாட்டில் இடம்பெறும் மரதன் ஓட்டத்தில் பங்கு பெறுவீர்,குழந்தைகளின் கல்விக்கு வழி காட்டுவீர்..... 

காலம் : 28.05.2017
 இடம் : Reutlingen  யேர்மனி

நேரம் : 14.00 Uhr

இந்த அரிய நிகழ்வில் எல்லோரும் பங்குபற்றி  தாயகத்தில் கல்வி கிடைக்காமல் வாழும்  யாருமற்ற  எம் தமிழ் உறவுகளின்     சிறார்களுக்காக கல்வியை வழங்க நீங்களும் சிறு பங்காளாராகி உங்கள் சேவையை வழங்கலாம். எனவே 28.5.2017 இல் யேர்மனி  Reutlingen நகரில் நடைபெறும் மருதன் ஓட்ட நிகழ்வில் உங்களால் இயன்றவரை மற்றைய உறவுகளையும் அழைத்து வந்து உதவுங்கள் என விக்ரோறி சீடஸ் அமைப்பின் தலைவி டாக்டர் திருமதி.அருணி வேலழகன் அவர்கள் பண்ணாகம் இணையம் ஊடாக அன்பாக அழைக்கின்றார்.

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் வேளையில், ஸ்காட்லாந்து, பிரித்தானியாவை விட்டு வெளியேறுவது டர்பான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.


ஸ்காட்லாந்தின் First Minister நிக்கோலா ஸ்டர்ஜியன், பிரித்தானியா பிரதமர் தெரெசா மேவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் வேளையில், ஸ்காட்லாந்து, பிரித்தானியாவை விட்டு வெளியேறுவது தொடர்பான முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இதற்கான பொது வாக்கெடுப்பு மீண்டும் நடத்தப்பட உள்ளது. பிரித்தானியாவை விட்டு ஸ்காட்லாந்து வெளியேறுவதற்கு, ஸ்காட்லாந்து எம்பிக்கள் பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஸ்காட்லாந்தின் First Minister நிக்கோலா ஸ்டர்ஜியன் பிரித்தானிய பிரதமர் தெரெசா மேவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

இது ஸ்காட்லாந்து அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்புமனுக்களைத் தாக்கல் செய்த 127 பேரில் 82 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

சரியாக வேட்புமனுக்களைத் தாக்கல்செய்யாத 45 பேரில் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

ஜெயலலிதா மறைந்ததால் காலியான ராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இந்தத் தேர்தலில் போட்டியிட நேற்றுவரை 127 பேர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர். இந்த வேட்பு மனுக்கள் இன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. முதலில் தி.மு.கவின் மருது கணேஷ், அதிமுக - புரட்சித் தலைவி அம்மா கட்சியின் மதுசூதனன் ஆகியோரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், அதிமுக - அம்மா கட்சியைச் சேர்ந்த டிடிவி தினகரனின் வேட்புமனுவை ஏற்கக்கூடாது எனக் கோரி தி.மு.கவின் சார்பில் தேர்தல் அதிகாரிக்கு மனு அளிக்கப்பட்டது.

இதனால், தினகரனின் மனு மீது முடிவெடுப்பது தள்ளிவைக்கப்பட்டது.

அதன் பின் பல கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு தினகரனின் மனு ஏற்கப்பட்டது. அதேபோல ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் வேட்பு மனுவும், பாரதீய ஜனதாக் கட்சி வேட்பாளர் கங்கை அமரனின் வேட்புமனுவும் ஏற்கப்பட்டது.

சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட சில கட்சிகளின் வேட்பு மனுக்கள் சரியாக பூர்த்தி செய்யப்படாததால் நிராகரிக்கப்பட்டன.

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலில் இருந்த 08 இலங்கையர்களும் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை விடுவிப்பதற்கு 'வட்ஸ் அப்' ராஜதந்திர முறைமையை கையாண்டதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷான் டி சில்வா தெரிவித்துள்ளார்.

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட கப்பலில் இருந்த 08 இலங்கையர்களும், கப்பலும் எவ்வித நிபந்தனையுமின்றி விடுவிக்கப்பட்டமைக்கு வட்ஸ் அப் ஊடான தகவல் பரிமாற்று முறைமையே பெரிதும் பயன்படுத்தப்பட்டது. என கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 1:30 மணியளவில், எவ்வித கப்பமும் பெறப்படாமல் கொள்ளையர்களால் தாங்கள் விடுவிக்கப்பட்டதாக குறித்த கப்பலின் கப்டன்  நிக்கலஸ் அந்தோனி அறிவித்துள்ளார்.

குறித்த கப்பல் ஒலூலா நகர கடற்பரப்புக்கு அருகில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அதனை மீட்க சோமாலிய படையினர் கப்பலில் ஏறிச் சண்டையிட்ட சோமாலிய கடற்படையினரை இரண்டு மணித்தியாலத்திற்குள் கப்பலில் இருந்து இறங்குமாறு சோமாலிய கடற்கொள்ளையர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை சோமாலிய கடற்படையினர் மேற்கொள்ளும் சண்டையினை உடனடியாக நிறுத்த இலங்கை அரசாங்கத்துக்கு அறிவித்து அதன் ஊடாக சோமாலிய அரசாங்கத்துக்கு அறிவிக்குமாறும் கப்டன் நிக்கலஸ் உருக்கமாக வேண்டுகோள் விடுத்திருந்தார்.

பின்னர் படையினருக்கும், சோமாலிய கடற்கொள்ளையர்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதை தொடர்ந்து எந்த நிபந்தனைகளுமின்றி, கடற்கொள்ளையர்கள் கப்பலையும், எட்டு இலங்கை பணியாளர்களையும் விடுவித்துள்ளனர்.

இதேவேளை, மீட்கப்பட்ட கப்பலும், அதில் இருந்த எட்டு இலங்கை கடலோடிகளும் தற்போது சோமாலியாவின் பொசாசோ நகர துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் கடந்த சில தினங்களில் 22 பேருக்கு பன்றிக்காச்சல் தொற்று ஏற்பட்டுள்ளதாக வவுனியா பொது வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் கு.அகிலேந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் அண்மையில் பன்றிக்காய்ச்சல் தொற்று காரணமாக பெண்ணொருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தொற்று ஏற்பட வாய்புக்கள் அதிகம் உள்ளதால் சிறுவர்களையும், குழந்தைகளையும் தேவையின்றி வைத்தியசாலையில் தங்கியுள்ள உறவினர்களைப் பார்வையிடுவதற்கு அழைத்து வருவதைத் தவிர்க்குமாறு அறிவுருத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக கர்ப்பிணித்தாய்மார் மற்றும் சிறுவர்கள் அவதானமாக இருக்குமாறும், தற்போது 22 பேருக்கு பன்றிக்காச்சல் இனங்காணப்பட்டு 16 பேர் சிகிச்சையின் பின்னர் வீடு சென்றுள்ளதாகவும் 5 பேர் விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன்,

இதேவேளை ஒருவர் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் வைத்தியசாலைப்பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வைத்தியசாலையில் வைத்தியர்கள், தாதியர்கள், வைத்தியசாலைக்கு வரும் குழந்தைகள், சிறுவர்கள் அனைவருக்கும் சுவாசத்தை பாதிக்காதவாறு முககவசம் அணிந்து பாதுகாப்புடன் செயற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது

யாழ்ப்பாணம் கொம்படி பகுதியில் விமான படையினரின் விமானத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய ஒருவரை விடுதலை செய்து இளஞ்செழியன் தீர்ப்பு வழங்கியுள்ளார்.

1999 ஆம் ஆண்டு ஜனவரி மாதப்பகுதியில் நடைபெற்ற குறித்த சம்பவத்தில் விமானப்படை விங் கமாண்டர் ஒருவர் உட்பட நான்கு விமானப்படையினருக்கும் மரணத்தை விளைவித்ததாகக் குற்றம் சுமத்தி சட்டமா அதிபரால் சிவசுப்பிரமணியம் தில்லைராஜ் என்பவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இதன் அடிப்படையில் கடந்த 2011 ஆம் ஆண்டு யூன் மாதம் 13 ஆம் திகதி இவர் சந்தேகத்தின் பெயரில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்

குறித்த வழக்கு விசாரணையானது இன்று யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த விசாரணையில் இந்தச் சம்பவம் தொடர்பாக உதவி பொலிஸ் அத்தியட்சகருக்கு சுயேச்சையாக சுதந்திரமாக ஒப்புதல் வாக்குமூலம் வழங்கப்படவில்லை என கடந்த 17 ஆம் திகதி வழக்கின் போது கட்டளை வழங்கிய மேல் நீதிமன்றம், இந்த வழக்கை தொடர்ந்து நடத்துவதா இல்லையா என்பதை மன்றுக்குத் தெரிவிக்குமாறு அரச சட்டவாதிக்கு பணிப்புரை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த வழக்கில் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் ஏற்கனவே நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில்,

வழக்கில் மேலதிக விசாரணை எதுவும் செய்யவில்லை எனவும் வழக்கத் தொடுனர் தரப்பு வழக்கை முடிவுக்குக் கொண்டு வருவதாகவும் அரச சட்டத்தரணி மன்றிறல் தெரிவித்தார்.

இந்த வழக்கில் குற்ற ஒப்புதல் வாக்கு மூலம் நிராகரிக்கப்பட்ட நிலையில், எதிரிக்கு எதிராக வேறு சாட்சியங்கள் எதுவும் முன்வைக்கப்படாத நிலையில் குறித்த நபரை மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் குற்றமற்றவர் என தெரிவித்து விடுதலை செய்வதாக தீர்ப்பினை வழங்கியிருந்தார்.

பிரபுக்கள் அவையில் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறும் பிரித்தானியாவின் மசோதா முடங்கியது. மசோதாவில் திருத்தம் வேண்டும் என வாக்களித்த பிரபுக்கள் அவை, பிரித்தானியா வெளியேறுவதை தாமதப்படுத்தியுள்ளது.

பிரபுக்கள் அவையில் நடந்த விவாதத்தின் போது, பிரித்தானியாவில் வாழும் ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களின் உரிமைகளை பாதுகாக்க உத்தரவாதம் அளிக்கும் வகையில் மசோதாவில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என தொழிற்கட்சி தலைமையில் முறையிடப்பட்டது.

இதன் மீது நடந்த வாக்கெடுப்பில் மசோதாவில் திருத்தம் வேண்டும் என்பதற்கு ஆதரவாக 358 பேர் வாக்களித்தனர், எதிராக 256 பேர் வாக்களித்தனர்.

102 வாக்குகள் பெருன்பான்னையுடன் மசோதாவில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என பிரபுக்கள் அவை உத்தரவிட்டுள்ளது.

இதன் மூலம் மசோதா மீண்டும் கீழவையில் தாக்கல் செய்யப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

பிரபுக்கள் அவையின் அதிரடி முடிவால் பிரதமர் தெரசா மேவிற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பிரபுக்கள் அவையில் முடிவு ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்துள்ள அரசு, இதை இரத்து செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனை (கருணா) கொலை செய்ய முயற்சிக்கப்பட்டதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

மட்டக்களப்பிலுள்ள கோவில் ஒன்றுக்கு கருணா சென்ற வேளை, அவரது கழுத்தை நெறித்து கொலை செய்ய முயற்சித்த ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு சந்திவேல் பிரதேசத்தில் வைத்து அவரை கைது செய்வதற்கு விசேட பொலிஸ் குழுவொன்று நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 14ஆம் திகதி கருணா மத வழிப்பாட்டிற்காக மட்டக்களப்பிலுள்ள கோவிலுககு சென்றுள்ள போது, பலவந்தமான அவரது உடம்பில் மோதிய ஒருவர், அவரது கழுத்தை நெறிக்க முயற்சித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் கடந்த காலங்களில் இராணுவத்தினரால் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைந்த ஒருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளதாக சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளது.

அண்மைக்காலமாக அரசியல் ரீதியாக வங்குரோத்து அடைந்துள்ளவர்களும், தமிழ் மக்களால் புறக்கணிக்கப்படுவர்களுக்கும் உயிர் அச்சுறுத்தல் உள்ளதாகவும், அவ்வாறான அச்சுறுத்தலை முன்னாள் போராளிகள் விடுத்து வருவதாக ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

குவைத்தில் ஆறு இலங்­கை­யர்­க­ளுக்கு மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டுள்­ள­தாக குவைத்­திற்­கான இலங்கைத் தூதுவர் நந்­தீபன் பால­சுப்­ர­ம­ணியம் தெரி­வித்­துள்ளார்.

இவ்­வாறு மரண தண்­டனை விதிக்­கப்­பட்ட ஆறு­பேரும் போதைப்­பொருள் மற்றும் கொலைக் குற்­றச்­சாட்­டு­க­ளுடன் தொடர்­பு­பட்­ட­வர்கள் என்றும் அவர் தெரி­வித்தார்.

கொலைக்­குற்றம் சாட்­டப்­பட்­ட­வர்கள், கொலை செய்­யப்­பட்­ட­வர்­களின் உற­வி­னர்கள் நஷ்­ட­ஈட்டைப் பெற்­றுக் ­கொள்­வ­தற்கு சம்­ம­தித்தால் மர­ண­தண்­ட­னை­யி­லி­ருந்து விடு­பட முடியும். ஆனால் போதைப்­பொருள் குற்­றச்­சாட்­டின்­பேரில் மர­ண­தண்­டனை விதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு அவ்­வாறு மரண தண்­ட­னை­யி­லி­ருந்து விலக்­க­ளிக்க முடி­யாது.

இதற்கு முன்னர் இலங்­கையைச் சேர்ந்த ஒருவர் கொலைக் குற்­றத்­திற்­காக மர­ண­தண்­டனை விதித்து தீர்ப்­ப­ளிக்­கப்­பட்டார். அவர் இலங்கை தூத­ர­கத்தின் உத­வி­யுடன் நட்ட ஈட்டை வழங்கி தண்­ட­னை­யி­லி­ருந்து விடு­பட்டார்.

எவ்­வா­றெ­னினும் குவைத் அர­சாங்கம் 2013ஆம் ஆண்டு தொடக்கம் 2016ஆம் ஆண்டு வரை தற்­கா­லி­க­மாக மர­ண­தண்­ட­னையை நிறுத்­தி­வைத்­தி­ருந்­தது. ஆனால் இந்த வருடம் தொடக்கம் மீண்டும் மர­ண­தண்­ட­னையை நிறை­வேற்றி வரு­கி­றது. அந்த வகையில் இந்த வரு­டத்தில் குவைத் அரச குடும்­பத்தில் ஏழுபேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது என்றும் தூதுவர் சுட்டிக்காட்டினார். சிங்கள வாரநாளேடொன்று இச் செய்தியை வெளியிட்டுள்ளது

ஜேர்மனி நாட்டில் வேகமாக பரவி வரும் வைரஸ் காய்ச்சலால் இதுவரை 126 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜேர்மனி நாட்டில் குளிர்காலத்தில் பரவும் H3N3 வகை வைரஸ் காய்ச்சல் தற்போது உச்சத்தை எட்டியுள்ளது.

கடந்த வருடம் அக்டோபர் மாதத்திலிருந்து 43000 பேர் இதுவரை இந்த காய்ச்சலால் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 14000 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த காய்ச்சலுக்கு இதுவரை 126 பேர் பலியாகியுள்ளனர். பலர் சுவாச கோளாறு பிரச்சனையால் அவதிப்படுகின்றனர்.

இந்த வைரஸ் முக்கியமாக அதிகம் பேர் வாழும் வீடுகளிலும், குழந்தைகளிடமும், 60 வயதுக்கு மேற்ப்பட்ட முதியவர்களிடமும் வேகமாக பரவுகிறது.

அதிகபட்சமாக தெற்கு ஜேர்மனியில் 6275 பேரும், குறைந்தபட்சமாக வடமேற்கு ஜேர்மனியில் 1115 பேரும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையில், மக்கள் சுகாதாரத்தை பேணி காக்க வேண்டும் என அந்நாட்டு அரசு வலியுறுத்தியுள்ளது

தமிழ்நாடு - அலங்காநல்லூரில் 2 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று ஆரம்பமான ஜல்லிக்கட்டு போட்டி, விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமானின், 3 காளைகள் பங்கேற்றுள்ளதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

பீட்டா, உச்சநீதிமன்றம், மத்திய அரசு ஆகிய மூன்றும், ஒவ்வொரு வகையில் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழகத்தில் நடத்தவிடாமல் தடை செய்தன. கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த ஜல்லிக்கட்டு, மாணவர்களின் புரட்சிப் போராட்டத்தின் மூலம் சிறப்பாக தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இந்தப் போட்டியில் பங்கேற்க 950 காளைகள் பதிவு செய்யப்பட்டு 1400க்கும் மேற்பட்ட வீரர்கள் அவற்றை அடக்கி வருகின்றனர். ஜல்லிக்கட்டில் பங்கேற்க பதிவு செய்யப்பட்டுள்ள காளைகளில் இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டைமானின் 3 காளைகள் இடம்பெற்றுள்ளன. 

ஜல்லிக்கட்டில் தீவிர ஆர்வம் கொண்ட இலங்கையின் ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டைமான், சல்லிக்கட்டு காளைகளை வளர்த்து, போட்டிகளில் பங்கேற்க வைத்து வருகிறார். அவனியாபுரத்திலும் செந்தில் தொண்டைமானின் காளை பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

இந் நாட்டில் இடம் பெற்ற நீண்டகால கொடிய யுத்தத்தின் விளைவாக உயிர்ச் சேதம், பொருட்சேதம், இருப்பிடச் சேதம் என அனைத்தையும் இழந்து நிர்க்கதியுற்ற நிலையிலும் எம்மவர்கள் வெட்ட வெட்டத் தழைக்கின்ற வாழைமரம் போல் இன்றும் தலை தூக்கி நிற்கின்றார்கள் என்றால் அவர்களின் அடிப்படைக் கல்வி அறிவும் விடாமுயற்சியுமே காரணம் என வடமாகாண முதல மைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலய கணனி, நூலக வகுப்பறை கட்டட திறப்பு விழா இன்று காலை இடம்பெற்றது. அந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே  அவர்  இவ்வாறு தெரிவித்தார்.அங்கு மேலும் தெரிவிக்கையில்,

வட்டக்கச்சி மகாவித்தியாலயத்திலிருந்து 2013ம் ஆண்டில் தனியாகப் பிரிந்து எதுவித அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் இரண்டு தகரக் கொட்டில்களில் இயங்கத் தொடங்கிய உங்கள் ஆரம்பப் பாடசாலை மிகக் குறுகிய காலத்தில் சிறப்பாக வளர்ச்சி பெற்று கட்டடங்கள், பாடசாலை உபகரணங்கள் என அனைத்து வளங்களையும் பெற்று  மிகச் சிறப்பாக மிளிர்வதற்கு உறுதுணை யாக விளங்கியவர்கள் வட்டக்கச்சி மகாவித்தியாலயம் புலம்பெயர் பழைய மாணவர்களே. அவர்களது உதவி ஒத்தாசைகள் நன்றியுடன் இச்சந்தர்ப்பத்தில் நினைவு கூரற்பாலது.

இந்த ஆரம்பப் பாடசாலை கல்வியில் மிகச் சிறந்த நிலையில் இருப்பது எமக்கு மகிழ்ச்சி தருகின்றது. கடந்த ஆண்டு தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் 191 புள்ளிகளைப் பெற்று மாவட்ட நிலையில் முதலாவது இடத்தைப் பெற்றுக் கொண்ட மாணவன் இப்பாடசாலையிலே தமது ஆரம்பக் கல்வியை பெற்றிருந்தார்.

அதுமட்டும் அல்லாது இன்னும் பல மாணவர்களும் மிகக் கூடிய புள்ளிகளைப் பெற்று சிறப்புத் தேர்ச்சிகளைப் பெற்றிருந்தனர். இது போன்றே வட்டக்கச்சி மகாவித்தியாலயத்திலும் க.பொ.த சாதாரணதரம், க.பொ.த உயர்தரம் ஆகியவற்றில் சிறப்புத் தேர்வுகளை எமது மாணவர்கள் பெற்றுக் கொண்டதை அவதானித்தேன்.

இவை பற்றி ஆராய முற்பட்டபோது சில நல்ல தகவல்கள் கிடைக்கப் பெற்றன. இந்த வட்டக்கச்சி கிராமமானது இரணைமடுக் குள த்தினை அடிப்படையாகக் கொண்ட படித்த வாலிபர்களுக்கான ஒரு குடியேற்றத் திட்டமாக 1956ம் ஆண்டில் ஆரம்பித்து வைக்க ப்பட்டது என்று அறிகின்றேன்.

இங்குள்ள மக்கள் பல இடங்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டு படித்த இளைஞர்களாக இங்கு கொண்டு வந்து குடியேற்றப்ப ட்டனர். எனவே இப் பகுதியில் குடியேற்றப்பட்ட அனைத்து மக்களும் ஓரளவுக்குக் கல்வி அறிவு கொண்ட ஒரு சமூகமாக இருப்பதை நாம் அவதானிக்கலாம்.

கடந்த 60 ஆண்டு கால முயற்சியில் மிகச் சிறப்பான நெல்விளையும் பூமியாக, தென்னை மரத் தோப்புக்களாக, பழமரத் தோட்டங்களாக இப்பகுதி அனைத்து விவசாய நடவடிக்கைகளிலும் மேலோங்கி இருப்பதை நாம் அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. யாழ், கிளிநொச்சி மாவட்டங்களிலுள்ள  பல்வேறு திணைக்களங்கள் அரசாங்க அலுவலகங்களில் காணப்படும் உயர் அதிகாரிகள் இங்கிருந்து வந்தவர்களே என்று அறிகின்றேன்.

விடியற்காலையில் வட்டக்கச்சியில் இருந்து கிளிநொச்சிப் பகுதியை நோக்கி படை எடுத்து அதே போன்று மாலையில் அங்கிருந்து வட்டக்கச்சி நோக்கி அரச வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள், சைக்கிள்கள் சாரிசாரியாக வாகன அணிகளாகத் திரும்பிச் செல்வது வட்டக்கச்சிப் பகுதியின் கல்வி மேம்பாட்டிற்கு சான்று பகரக்கூடிய நிகழ்வாகக் கொள்ளப்படலாம்.

‘பிச்சை புகினும் கற்கை நன்றே’ என்ற கோட்பாட்டிற்கு அமையவே எமது மாணவ மாணவியர் பலர் கல்வியில் சிறப்புடன் செயற்படுகின்றர்கள். தமது வறுமை மறந்து கல்வியில் ஈடுபடுகின்றார்கள். இம் மாணவ மாணவியர் கல்வியில் மேன்மை நிலையை அடையச் செய்வதற்கு வழிகாட்டிகளாக விளங்குகின்ற ஆசிரியர்களை இச் சந்தர்ப்பத்தில் வாழ்த்துவதில் பெருமை அடைகின்றேன்.

உதாரணமாக இப்பாடசாலையில் கடந்த ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் 191 புள்ளிகளைப் பெற்று முதல் நிலையைப் பெற்றுக் கொண்ட மாணவன் சாதாரணமாக அவனுடைய வகுப்பறைப் பாடப் புத்தகங்களை மட்டும் வாசித்து இவ்வாறான ஒரு சிறந்த அடைவு மட்டத்தை பெற்றுக் கொண்டிருக்க முடியாது. மாறாக தேடிக்கற்கின்ற வழிமுறை அம்மாணவனுக்கு சிறப்பாக புகட்டப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அன்றி இவ்வாறான அதி சிறப்புத் தேர்வுகளைப் பெறுவது என்பது மிகவும் சிரமம். 

நான் றோயல் கல்லூரியில் பயின்ற போது பல பரிசுகளைப் பெற்றேன். அந்தக் காலத்தில் அதாவது சுமார் 60 வருடங்களுக்கு முன் பரிசுகள் பெற்றால் எமக்கு புத்தகங்கள் வாங்க உரிமைச் சீட்டு தருவார்கள். அதாவது அந்த சீட்டுக்களைக் குறிப்பிட்ட கடைகளில் கொடுத்து அதில் குறிப்பிடப்பட்ட அளவுக்குப் புத்தகங்கள் வாங்கலாம்.

நான் சட்டக்கல்லூரி சேர்ந்ததும் அந்தக் கூப்பன்களைக் கொடுத்து சட்டக்கல்லூரியில் என் பாடப் புத்தகங்களுக்கு மேலதிகமாகப் படிப்பதற்கு உரிய பல புத்தகங்களை வாங்கிப் படித்தேன். அதனால் மேலதிக ஞானம் எனக்குக் கிடைத்தது. இவ்வாறான மேலதிக ஞானமே எமது மாணவர்களுக்குத் தமது பரீட்சைகளில் மிக நன்றாகச் செய்ய வழிவகுத்தது எனலாம்.

இந் நாட்டில் இடம் பெற்ற நீண்ட கால கொடிய யுத்தத்தின் விளைவாக உயிர்ச் சேதம், பொருட் சேதம், இருப்பிடச் சேதம் என அனைத்தையும் இழந்து நிர்க்கதியுற்ற நிலையிலும் எம்மவர்கள் வெட்ட வெட்டத் தழைக்கின்ற வாழைமரம் போல் இன்றும் தலை தூக்கி நிற்கின்றார்கள் என்றால் அவர்களின் அடிப்படைக் கல்வி அறிவும் விடாமுயற்சியுமே அதற்குக் காரணம்.

தென்னிந்தியாவிலோ இலங்கையிலோ சட்டத்தை தமிழில் முதன் முதலில் கற்பித்த ஆசிரியன் நான். 1971ம் ஆண்டில் அக்கைங்கரி யத்தில் ஈடுபட்டேன். சட்டப் பரீட்சைகளில் என்னுடைய மாணவ மாணவியர் என் விரிவுரைகளை மட்டுமே பாவித்தார்கள். ஆனால் சற்று வெளியே சென்று ஆங்கில நூல்களையும் படித்த மாணவ மாணவியர் பரீட்சைகளில் மிக நன்றாக சித்தி அடை ந்தார்கள்.

ஆகவே மேலதிக வாசிப்பானது பரீட்சைகளில் நன்றாகச் செய்ய அத்தியாவசியமானது. மாணவச் செல்வங்களே! “கண்டது கற்கப் பண்டிதன் ஆவான்” என்பார்கள். உங்கள் பாடப் புத்தகங்களுக்குத் தொடர்புடைய மேலதிக வாசிப்புக்களை மறந்து விடாதீர்கள். என தெரிவித்தார்
சீன பல்கலைகழக அரசியல் கற்கைநெறி சிறப்பு பட்டத்துடன்,  அடுத்த ஜனாதிபதி தேர்தலில்  கோத்தபாய ராஜபக்ஷவின், அரசியல் பிரவேசம் இருக்குமானால் அவரது வெற்றி நிச்சயமாகிவிடும். இருப்பினும் அவரது அரசியல் பிரவேசத்தை அவரது சகோதரர் விரும்பவில்லையென முன்னாள் வெளியுறவு தூதுவர்  கலாநிதி தயான் ஜெயதிலக தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

மேலும் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி  தேர்தலை குறிவைத்து, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபாய ராஜபக்ஷ  சீன பல்கலைக்கழகம் ஒன்றில் அரசியல் கற்கைநெறி ஒன்றை மேற்கொள்ளவிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அத்தோடு குறித்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாயவின் கற்கைநெறி, அரசியல் தேர்ச்சிக்கான பயிற்சி இல்லை என்றாலும் அவர் வெற்றி வாகை சூடுவார். அவரது ஆட்சிக்காலம், இலங்கையை வளர்ச்சி மிகு பாதைக்கு இட்டு செல்லும் என்பதில் தமக்கு நம்பிக்கை உள்ளதாகவும், 2019 ஆம் ஆண்டு பாதுகாப்பு தரப்பு கோத்தாவின் பக்கம் இருக்கும்ப்பர் எனும் வகையில் தனது எதிர்வு கூறலை வெளிப்படுத்தியுள்ளார்.  

இந் நிலையில் கோத்தபாய அடுத்த ஜனாதிபதி தேர்தலை குறிவைத்து அரசியல் பிரவேசத்திற்கான பணிகளை செய்தபோது அவரது சகோதரரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ, தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளதோடு, மீறி அரசியலில் பிரவேசித்தால் சிறைக்கு செல்ல வேண்டி ஏற்படும். என எச்சரிக்கை விடுத்ததாகவும்  தகவல்கள் பகிரப்பட்டுள்ளன. 

வவுனியாவில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த, காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களை சந்திக்க பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தனவை அனுப்பும் முடிவு கடைசி நேரத்திலேயே எடுக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கி ன்றன.

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 14 பேர் கடந்த திங்கட்கிழமை தொடக்கம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

அவர்களின் உடல்நிலை மோசமடைந்து வந்த நிலையில், இதுகுறித்து நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜேவிபி உறுப்பினர்கள் நேற்றுமுன்தினம் கேள்விகளை எழுப்பினர்.

அந்தக் கேள்விகளுக்குப் பதிலளித்த  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை, வியாழக்கிழமை அமைச்சர் சுவாமிநாதன் சந்தித்துப் பேசுவார் என்று தெரிவித்திருந்தார்.

முதலில் அமைச்சர் சுவாமிநாதனை அனுப்பி, இந்தப் போராட்டத்தை முடித்து வைக்கவே அரசாங்கம் திட்டமிட்டிருந்தது.

எனினும், உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தவர்களின் உடல்நிலை மற்றும்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொடுத்த அழுத்தங்க ளாலேயே, அமைச்சர் சுவாமிநாதனை அனுப்பும் முடிவு மாற்றப்பட்டு, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன அனுப்பி வைக்கப்பட்டார்.

வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், ஜனாதிபதிக்கு அனுப்பிய அவசர கடிதத்தில், உண்ணாவிரதப் போராட்டத்தில் இரு ப்போரின் உயிர்களை காப்பாற்றுமாறு கோரியிருந்தார்.

மூத்த அமைச்சரை அனுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் பேச்சு நடத்துமாறும் அவர் கேட்டிருந்தார்.

அதுபோன்ற கோரிக்கையை எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனும்  அரசாங்கத்திடம் முன்வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய கூட்டமைப்பின் உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், அமைச்சர் சுவாமிநா தனை வவுனியாவுக்கு அனுப்புவதற்குப் பதிலாக, ஜனாதிபதியும் பிரதமரும் இந்த விடயத்தில் பொருத்தமான வேறொரு பிரதிநி தியை அனுப்ப வேண்டும் என்று கோரியிருந்தார்.

இதையடுத்தே, சுவாமிநாதனை அனுப்பும் முடிவு மாற்றப்பட்டு, ருவான் விஜேவர்த்தன வவுனியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் உடல் நிலை மோசமடைந்து வந்ததாலும், பரவலான போராட்டங்கள் இடம்பெறத் தொடங்கிய தாலும், அவசர வாக்குறுதிகளை வழங்கி இந்தப் போராட்டத்தை  அரசாங்கம் இடைநிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிய வருகிறது

மேலூர் அருகே கிடாரிப்பட்டியில் மலைகளுக்கு இடையே உள்ள பகுதியில் ஜல்லிக்கட்டு நடத்தி பரிசும் வழங்கிவிட்டார் சீமான்.

ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடத்தி வரும் மாணவர்களுக்கு ஆதரவு அளிக்க கடந்த 16-ம் தேதி மதுரை வந்தார் சீமான்.

அரசியல்வாதிகள் எங்கள் போராட்டத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டாம்' என்று மாணவர்கள் கறாராக அறிவித்ததால், தமுக்கம் அருகே அவுட் போஸ்டில் நாம் தமிழர் கட்சி சார்பாக 17-ம் தேதி தனியாக போராட்டத்தை தொடர்ந்தார்.

அப்போது, போராட்டம் குறித்து பேசிய சீமான், வருகிற 21-ம் தேதி (இன்று) அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்தாமல் இங்கிருந்து செல்ல மாட்டேன்" என்று சொன்னவர், அதுவரை மதுரையில் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தார்.

சொன்னபடி இன்று அதிகாலை ஜல்லிக்கட்டை நடத்தியுள்ளார் சீமான்.

அலங்காநல்லூரில் நடத்துவேன்' என்று அவர் கூறியிருந்ததால் காவல்துறை அங்கு விழிப்பாக இருந்தனர். அவர்களின் கவனத்தை திருப்பிவிட்டு, இன்று காலை மேலூர் அருகே கிடாரிப்பட்டியில் மலைகளுக்கு இடையே உள்ள பகுதியில் ஜல்லிக்கட்டை நடத்தி விட்டார் சீமான்.

இதற்கான ஏற்பாடுகளை மிக இரகசியமாக செய்த அவரது கட்சியினர், மாடு வளர்ப்பவர்களிடமும், மாடு பிடி வீரர்களுக்கு மட்டும் தகவல் சொல்லி வரவழைத்து ஜல்லிக்கட்டு நடத்தி, அவர்களுக்கு பரிசுகளையும் வழங்கினார்.

தகவல் வெளியாகி விடும் என்பதால் குறிப்பிட்ட ஒரு சேனலை மட்டும் உடன் அழைத்து சென்றுள்ளார்.

சீமானைத் தொடர்ந்து கண்காணித்து வந்த உளவுத்துறையால் கூட ஜல்லிக்கட்டு நடத்தப்போகும் இடத்தை கண்டுபிடிக்க முடியாமல் கோட்டை விட்டுள்ளனர்.

வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் அரச மற்றும் தனியார் பேருந்து சங்க உறுப்பினர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டதுடன், வவுனியாவில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து தெரியவருவதாவது,

இன்று காலை அரச பேருந்து நிலையத்திற்குச் சென்ற பொலிஸார் அரச பேருந்துகளை நேற்று புதிதாக திறக்கப்பட்ட பேருந்து நிலையத்திற்கு கொண்டு செல்லுமாறு தெரிவித்தனர்.

இதற்கு பேருந்து நிலையத்தில் நின்ற பேருந்து சாரதிகள், நடத்துனர்கள் மறுப்புத் தெரிவித்ததுடன் தமது மேலதிகாரியிடமிருந்து உத்தரவு கிடைக்கவில்லை என்று தெரிவித்தனர்.

இரு பகுதியினருக்கும் இடையே நீண்ட நேரம் பேச்சுக்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்த சமயம் தனியார் பேருந்து ஒன்று அரச பேருந்து தரிப்பிடத்திற்குள் நுழைந்ததையடுத்து இரு பகுதியினருக்கும் இடையே மோதல் தோன்றியது.

இதனிடையே வவுனியா வர்த்தகர் சங்கத்தினரும் பேருந்து தரிப்பிடத்திலுள்ள முச்சக்கரவண்டி சாரதிகளும் அரச பேருந்து சாரதிகளுக்கு ஆதரவு தெரிவித்து பேருந்து நிலையப் பகுதிகளிலுள்ள வியாபார நிலையங்களை மூடி தமது ஆதரவினைத் தெரிவித்துள்ளனர்.

எனினும் பதற்றமான நிலை அப்பகுதி எங்கும் நீடித்து வவுனியா பொலிஸ் நிலையம் வரை நீடித்துள்ளது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

11.30 மணியளவில் பொலிஸாரின் தலையீட்டையடுத்து அரச மற்றும் தனியார் பேருந்து சங்க உறுப்பினர்களிடையே வன்னி பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் காரியலாயத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

பேருந்துக்களை செல்லவிடாமல் அரச மற்றும் தனியார் பேருந்து சாரதிகள் பேருந்துக்களுக்கு முன்னால் அமர்ந்து இருந்து வருகின்றனர். வெளிமாவட்டங்களிலிருந்து வரும் பேருந்துகளை வழிமறித்து தாக்கி வருகின்றனர்.

அதனால் அக்கரைப்பற்றிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் செல்லும் பேருந்து வவுனியா பேருந்து நிலையத்தில் வைத்து தனியார் பேருந்து சாரதிகளால் தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.

இரு பகுதியினரையும் அழைத்துச் சென்ற பொலிஸார் வரும்வரை வழிவிடமுடியாது என்று தெரிவித்து வீதியை மறித்து போக்குவரத்தை இடை நிறுத்திவருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு வடமாகாண சபை உறுப்பினர் செ. மயூரன், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே. கே. மஸ்தானின் பிரதி நிதிகளும் பேருந்து நிலையத்திற்குச் சென்று அரச தனியார் பேருந்து சாரதிகளுடன் கலந்துரையாடினார்கள்.

இதனிடையே பொலிஸாருடன் இடம்பெற்ற பேச்சுக்களில் வடமாகாண சபை உறுப்பினர் செ. மயூரன், வர்த்தகர் சங்கம் தனியார் அரச பேருந்து சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதில் முன்னைய நடைமுறையினை ஒரு சுமூகமான சூழ்நிலை உருவாகும் வரை பின்பற்றுமாறு பொலிஸார் அரச பேருந்து நிலையத்திற்கு தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து வர்த்தகர் சங்கத்தினால் மூடப்பட்ட வர்த்தக நிலையங்களை திறக்குமாறு வர்த்தக உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரச பேருந்துகள் தமது சேவையினை மேற்கொள்ளமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை புதிய பேருந்து நிலையத்தில் தமது கடமைகளை ஆரம்பித்த தனியார் பேருந்துகள் முன்னைய நடைமுறையினை பின்பற்ற முடிவு மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

பிற்பகல் 12.30 மணியளவில் பதற்றமான சூழ்நிலை அகன்று வருகின்றது. எனினும் பெருமளவானவர்கள் இரு பகுதியிலும் காணக்கூடியதாகவுள்ளது.

பொலிஸார் தமது கடமைகளை மேற்கொண்டு வருகின்றனர். அரச பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துமாறு ஒலி பெருக்கியில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பா மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் நிலவி வரும் கடுமையான பனிப் பொழிவினால் இதுவரை அறுபது பேர் உயிரிழந்துள்ளனர். 

இவர்களுள், வீடற்றோர் மற்றும் வயோதிபர்களின் எண்ணிக்கையே அதிகமாகக் காணப்படுகிறது.

இந்த நிலையையடுத்து வீடற்றோர் பாடசாலைகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தற்காலிக முகாம்களுக்குச் செல்லுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் போலந்தில் மட்டும் இருபது பேர் பனிக்கு இரையாகியுள்ளனர். அங்கு நிலவிவரும் கடுமையான காலநிலையால் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

மேலும் பனிக்காலத்தில் சுற்றுச்சூழல் மாசடைவதைத் தவிர்க்கும் முகமாக வோர்ஸோ நகரில் இலவச போக்குவரத்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதனால் வாகனப் பயன்பாடு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சேர்பியாவில் வறிய நிலையில் வாழும் 88 வயதுத் தந்தையும் அவரது 66 வயது மகனும் கடும் குளிரினால் உயிரிழந்துள்ளனர்.

போலி பாஸ்போர்ட்டில் வந்த சிரிய அகதியை பணம் வாங்கிக் கொண்டு நாட்டிற்குள் அனுமதித்த பிரித்தானிய அதிகாரிகளின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிரியாவை சேர்ந்த நபர் ஒருவர் ஜேர்மனியில் இருந்து பிரித்தானியா வந்துள்ளார். அவர் தன்னை போன்ற உருவம் கொண்ட நபர் ஒருவரின் பாஸ்போர்டில் வந்தை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இருப்பினும் அவரிடம் 300 பவுண்ட் தொகை வாங்கிவிட்டு அவரை விடுவித்துள்ளனர்.

இந்நிலையில் வெளியே வந்த அந்த சிரிய அகதி பிரபல ஆங்கில ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அவர் கூறுகையில், இது மிகவும் எளிதாக அமைந்துவிட்டது. நான் ஒரு தீவிரவாதியாக இருந்திருந்ததால் இது வேறுவிதமான விளைவை ஏற்படுத்தி இருக்கும்.

நான் நம்பிக்கை இல்லாமல் தான் இங்கு வந்தேன். ஆனால் அவர்கள் எனக்கு அதிர்ச்சி கொடுத்து என்னை நாட்டிற்குள் அனுமதித்து விட்டார்கள். இது தீவிரவாதிகள் எளிதாக நாட்டிற்குள் நுழைய வழிவகுக்கும் என்று எச்சரித்துள்ளார்.

மேலும், அவர் கடந்த 2015ம் ஆண்டு சிரியாவில் நடந்த உள்நாட்டு போரின் போது பிரான்சில் குடும்பத்தோடு குடிபெயர்ந்ததாக தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாது ஜேர்மனியில் இருந்து பிரித்தானியாவுக்கு செல்வது தான் சரியான வழி என்று தனக்கு போலி பாஸ்போர்ட் தயாரித்து கொடுத்த கும்பல் கூறியதாகவும் தெரிவித்தார்.

இவரது இந்த தகவல் பிரித்தானிய மக்களை அதிர்ச்சியடைச் செய்துள்ளது. அதிகாரிகளின் இது போன்ற செயல்களால் தான் தீவிரவாத தாக்குதல்கள் இடம்பெறுவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.