WELCOME TO PANNAGAM.COM & PTV

பண்ணாகம் இணையம்

NEWS 11

இன்று இரட்டை இலைச் சின்னம் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு ஒதுக்கி தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியானது.

தேர்தல் ஆணைய உத்தரவை அடுத்து அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ சின்னமான இரட்டை இலைச் சின்னம் மற்றும் கட்சிக் கொடியை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அடங்கிய ஒருங்கிணைந்த அ.தி.மு.க-வினர் பயன்படுத்திக் கொள்ளத் தடை இல்லை. பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு என்ற அடிப்படையில் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது குறித்து கருத்து தெரித்த முதல் அமைச்சர்  எடப்பாடி பழனிசாமி இரட்டை இலை எங்கள் வசம் வந்துள்ளது.  விசாரணையை மேற்கொண்டு நியாயமான தீர்ப்பை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது என கூறினார்.

எட்ப்பாடி பழனிசாமி- ஓபன்னீர் செல்வம் அணிக்கு இரட்டை இலை ஒதுக்கப்பட்டது தொடர்பாக கருத்து தெரிவித்த  முதலவர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

இரட்டை இலை எங்கள் வசம்  விசாரணையை மேற்கொண்டு நியாயமான தீர்ப்பை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது 90% நிர்வாகிகள் எங்கள் பக்கம் உள்ளனர். இரட்டை இலை கிடைத்த தன் பின்னணியில் மத்திய அரசு இருக்கிறது என்பது தவறான கருத்து. ஜெயலலிதா ஆசி, கடவுளின் ஆசியோடு இரட்டை இலை சின்ன வழக்கில் நல்ல தீர்ப்பு எங்களுக்கு கிடைத்து உள்ளது.  ஒன்றரை கோடி தொண்டர்கள் மகிழும் வண்ணம் தீர்ப்பு வழங்கபட்டு உள்ளது.

இப்போது தான் சின்னம் குறித்த தீர்ப்பு வந்து உள்ளது. அ.தி.மு.க நிர்வாகிகள் கூடி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும்  என கூறினார்.
யாழ் குடாநாட்டில் நேற்று இரவு வாள்வெட்டுக்குழுக்களால்  மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமான கொலைவெறித் தாக்குதலில் 9 பேர் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாய மடைந்ததுடன் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட் களும் சேதமாக்கப்பட்டுள்ளது.  மானிப்பாய்- சங்குவேலி, நல்லூர், யாழ் ப்பாணம், கோண்டாவில், ஆறுகால்மடம் ஆகிய பகுதிகளில் ஒரே இரவில் இந்த தாக் குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் வாள் வெட்டுக்கு இலக்காகி படுகாயம் அடைந்தவர் கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த சம்பவங்கள் தொடர்பாக தெரிய வருகையில், மானிப்பாய்- சங்குவேலி காளிகோவிலு க்கு அருகில் உள்ள வீடு ஒன்றில் இருந்து கொழும்பு செல்வதற்கு சிலர் ஆயத்தமாகியு ள்ளனர். அவர்களை ஏற்றிச்செல்வதற்காக முச்சக்கரவண்டியுடன் ஒரு இளைஞர் வந்து வீட்டின் முன் நின்றுள்ளார். 
அப்போது இரவு 7.30 மணியளவில் 5 மோட்டார் சைக்கிள்களில் வந்த 10 பேர் கொண்ட குழுவினர், முச்சக்கரவண்டி ஓட்டு நரை வாளினால் வெட்டுவதற்கு வந்துள்ள னர். அப்போது அந்த இளைஞர் வீட்டினுள் சென்றுள்ளார். அவரை துரத்திச்சென்ற அந்த குழுவினர், வீட்டில் நின்றிருந்த ஆண்களை தாறுமாறாக வெட்டியதுடன் அந்த இளைஞ னையும் கொடூரமாக வெட்டியுள்ளனர். பின் னர் வீட்டில் இருந்த அனைத்து பொருட்க ளையும் மிச்சம் விடாது அடித்து நொருக்கி விட்டு சென்றுள்ளனர். 

போகும் வழியில் கடைக்கு முன் நின்றி ருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றையும் கொத்தி தாக்கிவிட்டு வாளினால் இரத்தம் சொட்டச் சொட்ட வீதியால் சென்றுள்ளனர். 
இந்த சம்பவத்தில் முச்சக்கரவண்டி ஓட்டு நர், வீட்டில் இருந்த தந்தை, பெரிய தந்தை மற்றும் மகன் ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர். 

இதில் மானிப்பாயைச் சேர்ந்தவர்களான முச்சக்கரவண்டி ஓட்டுநர் பத்மநாதன் ஜெனி (வயது30) மற்றும் சிவகுருநாதன் (வயது 54), ரவிசங்கர் (வயது44), பகீரதன் (வயது 17) என்பவர்களே வாள்வெட்டுக்கு இலக்கா கியுள்ளனர்.

இதேவேளை, யாழ் நல்லூர் பகுதியில் ஆங்காங்கே இரவு 8 மணியளவில் நடை பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் தலை, கால், கை போன்றவற்றில் படுகாயம் அடைந்த நிலையில் மூவர் வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்டுள்ளனர். 
ஆனைக்கோட்டை ஆறுகால்மடம் பகுதி யிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த 10 பேர் கொண்ட கும்பல் ஒருவரை வெட்டியதுடன் அங்கிருந்த பொருள்களை உடைத்து நாசமாக்கியது.

4 மோட்டார் சைக்கிள்களில் வந்த 10 பேர் தமது முகத்தை மூடிக்கட்டியிருந்ததுடன் கோட் அணிந்திருந்தனர் எனத் தெரிவிக்கப் பட்டது. கும்பலின் வாள்வெட்டுக்கு இலக்காகி ஆனைக்கோட்டை லோட்டஸ் வீதியைச் சேர்ந்த குலசிங்கம் குலபிரதீபன் ( வயது 35 ) என்பவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கோண்டாவில் டிப்போவுக்கு முன்பாக உள்ள உணவகத்துக்குள் நேற்றிரவு 8.10 மணியளவில் புகுந்த கும்பல் அங்கிருந்த தளபாடங்களை அடித்துச் சேதப்படுத்தியது டன், ஒருவரையும் வெட்டிக் காயப்படுத்தியது.

சம்பவத்தில் புத்தூர் கிழக்கைச் சேர்ந்த செல்வராசா மணிமாறன் ( வயது 27) என்ப வர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கடந்த ஒரு வாரத்தில் 20க்கும் அதிக மான வாள்வெட்டு சம்பவங்கள் இடம்பெற்று ள்ளதுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர். இதுவரை எவரும் குறித்த சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்படவில்லை என் பது குறிப்பிடத்தக்கது.       

குளவி கூடு கலைந்தமையினால் மலையக ரயில் சேவை போக்குவரத்து 35 நிமிடங்கள்  தாமதமாகியது.

வட்டவலை ரயில் நிலையப்பகுதியில் மரமொன்றிலிருந்த குளவி கூட்டை கழுகு களைத்தமையினால் இன்று காலை 9.30 மணியளவில் வட்டவலை ரயில் நிலைய அதிகாரிகள் இருவர் குளவி கொட்டுக்கு இழக்கியுள்ளனர். 

இதனையடுத்து  கொழும்பிலிருந்து வந்த பொடி மெனிக்கே ரயில் கடவலையிலும் பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி வந்த உடரட்ட மெனிக்கே  ரயில் ரொசல்லையிலும் நிறுத்தப்பட்டது.

ரயில் பயணிகளின் பாதுகாப்பு கருதி நாவலப்பிட்டி ரயில் கட்டுப்பாட்டு அதிகாரிகளினால் மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன் குளவிகள்  அப்பகுதிகளிலிருந்து வெளியேரிய பின்  11 30 மணியளவில் மீண்டும் ரயில் சேவை ஆரம்பமாகியது 


0094  770763610 இந்த நம்பருக்கு எப்போதேனும் அழைத்திருக்கிறீர்களா.? 
இப்போது அழைக்கலாமா..?! 
அழைத்துப்பாருங்கள் அன்பை அடையலாம் நிச்சியம் உங்கள் உள்ளம் நிறையும் 
இன்று அல்லது நாளை அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவுக்கு வரும் என நம்பிக்கை வெளியிட்டார் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜி லிங்கம்.
கடந்த 26ஆம் திகதி மேல்முறையீட்டு நீதிமன்றில் நகர்த்தல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளோம். அதாவது அநுராதபுரத்தில் இருந்து வவுனியா நீதிமன்றுக்கு மாற்றச் சொல்லி அவ்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இதில் ஆகக் குறைந்தது 48 மணிநேரம் சட்டமா அதிபருக்கு அவகாசம் வழங்கப்பட வேண்டும். எனவே அவ் மனு இன்று திங்கட்கிழமை எடுக்கப்படவுள்ளது. அல்லது நாளை எடுக்கப்படும். அதில் ஒரே நாளில் தீர் ப்பு சொல்லப்பட வாய்ப்பு உள்ளது. 

சிங்கள சட்டத்தரணி ஒருவர் மூலமே தாக்கல் செய்துள்ளோம். சிரேஷ்ட தமிழ் சட் டத்தரணிகளையும் சேர்க்கவுள்ளோம். இரண்டு ஒரு தினங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நிறைவடையும் என நம்புகி றோம் என்றார்.                              


யாழ் மேல் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட இந்து ஆலயங்களில் மிருகங்கள் பலியிடப்படுவது முற்றாக தடை விதித்து யாழ் நீதி மன்று இன்று தீர்ப்பளித்துள்ளது.

யாழ் குடாநாட்டு கோவில்கள் சிலவற்றில் விலங்குகளை பலியிட்டு வேள்வி நடத்துவதற்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 01 ஆம் திகதி (2016-04-01) இடைக்காலத் தடையுத்தரவு ஒன்றை பிறப்பித்தது.

ஆலயங்களில் விலங்குகளைப் பலிகொடுத்து நடத்தப்படும் வேள்விகளை உடனடியாகத் தடுத்து நிறுத்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி அகில இலங்கை சைவ மகா சபை தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணையின் போதே இந்த உத்தரவை நீதிபதி இளஞ்செழியன் பிறப்பித்திருந்தார்.

இந்நிலையில் யாழ் குடாநாட்டின் ஆலயங்கள் சிலவற்றில் மிருகபலி கொடுத்து நடத்தப்படும் வேள்வியை உடனடியாகத் தடுத்து நிறுத்தும் வகையில் இன்று யாழ் மேல்நீதிமன்றத்தால் முற்றாக தடைவிதித்துள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் உடனடியாக – எந்த தாமதமும் இன்றி சிறிலங்கா அரசாங்கம் விடுவிக்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று ஒத்திவைப்பு வேளை பிரேரணைக் கொண்டு வந்து உரையாற்றிய போதே அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.

‘பயங்கரவாத தடைச்சட்டத்தை கொடூரமானது அருவருப்பானது என்று சிறிலங்கா அரசாங்கமே ஒப்புக் கொண்டுள்ள நிலையில், அந்தச் சட்டத்தின் கீழ், தமிழ் அரசியல் கைதிகளை சிறை வைத்திருப்பதில் என்ன நியாயம் உள்ளது?

சிறிலங்கா அரசாங்கம் உள்நாட்டிலும் அனைத்துலக அளவிலும் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி விட்டு அனைத்துலக தர நியமங்களுக்கேற்ற புதிய சட்டத்தைக் கொண்டு வருவதாக வாக்குறுதி அளித்துள்ளது.

அந்த வாக்குறுதியை சிறிலங்கா அரசாங்கம் இன்னமும் நிறைவேற்றவில்லை.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளில் பெரும்பாலானவர்கள் சாதாரண நீதிமன்றத்தினால் கூட ஏற்றுக் கொள்ளமுடியாத ஒப்புதல் வாக்குதல் மூலத்தின் அடிப்படையில் தான் நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இதனால் அவர்களின் குடும்பத்தினர் பெரும் துன்பங்களை எதிர்கொண்டுள்ளனர்.

ஜேவிபி கிளர்ச்சியில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர்களுக்கு பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டது. அதுபோல தமிழ் அரசியல் கைதிகளும் ஏன் விடுவிக்கப்படக் கூடாது?

இந்த விவகாரத்துக்கு ஒரு அரசியல் பரிமாணம் உள்ளது. இவர்களின் விடுதலை, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமைக்கு முக்கியமானது.

வவுனியாவில் இருந்து அனுராதபுரவுக்கு வழக்குகள் மாற்றப்பட்டமை முரண்பட்ட விடயமாகும்.” என்றும் அவர் தெரிவித்தார்.

சீனாவுடன் இணைந்து செயற்படும் போது ஒவ்வொரு நாடும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் அமெரிக்கக் கடற்படையின் உயர்மட்ட அதிகாரியான றியர் அட்மிரல் டொனால்ட் டி கப்ரியேல்சன்.

பிராந்தியத்தில் – குறிப்பாக சிறிலங்காவில் சீனாவின் பிரசன்னத்தை பற்றி அமெரிக்கா கவலை கொண்டுள்ளதா என்று சிறிலங்கா வந்துள்ள றியர் அட்மிரல் மொனால்ட் டி கப்ரியேல்சனிடம் கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று கேள்வி எழுப்பியிருந்தது.

அதற்குப் பதிலளித்த அவர், “ சில விடயங்களில் சீனா வெளிப்படைத்தன்மையுடன் செயற்படாததால், சீனாவுடன் இணைந்து செயற்படும் போது ஒவ்வொரு நாடும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

சீனா தற்போது நன்மைகளை பெற்றுக் கொண்டிருக்கும் அமைப்பு முறையை மறுசீரமைக்க முயல்கிறது. இது கவலையளிக்கிறது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வரவிருக்கும் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும் முயற்சிகளில் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈபிடிபி ஈடுபட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வீ.ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி, வரதராஜப்பெருமாள் தலைமையிலான ஈபிஆர்எல்எவ் பத்மநாபா அணி, ரெலோவில் இருந்து பிரிந்த சிறிரெலோ அணி ஆகியவற்றுடன், ஈபிடிபி ஏற்கனவே பேச்சுக்களை ஆரம்பித்திருப்பதாக கூறப்படுகிறது.

அதேவேளை வரவிருக்கும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலிலும், வேட்பாளர்களை நிறுத்த ஈபிடிபி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது