WELCOME TO PANNAGAM.COM & PTV

பண்ணாகம் இணையம்

NEWS - 4

தெற்கில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலையில் வெளிநாடுகளின் தலையீடுகளும் இருக்கலாம் என வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

சர்வதேசங்கள் அரசாங்கத்தினை பிளவுபட விடமாட்டார்கள் என்ற தோற்றப்பாடு காணப்படுவதால் தற்போதைய அரசாங்கம் தொடர்ந்தும் நீடிக்குமென தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கம் இதன் பின்னர் முடிந்தளவு தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கோ, அல்லது அவற்றினை ஒதுக்கி வைப்பதற்கோ முனையலாம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சமஸ்டி அரசியல் யாப்பினை 9 மாகாணங்களுக்கும் கொண்டு வருவதுடன், வடகிழக்கு மாகாணங்கள் இணைத்து, அவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். ஆனால் இந்த விடயத்தில் சிங்கள கட்சிகள் எவ்வாறான நிலைப்பாட்டினை எடுக்கின்றார்கள் என்பதனைப் பொறுத்து, நிரந்தரமான தீர்வினை எட்ட முடியும் என்பதை தாம் எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு- கிழக்கில் ஆதிக்கம் செலுத்திவந்த தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு இம்முறை பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டும் வகையில் ஈழம் சிறியதாகிவிட்டது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மஹிந்த தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றியை தொடர்ந்து கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும், இத்தேர்தலின் மூலம் வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் மத்தியிலும் தனக்கு ஆதரவு கிட்டியுள்ளமை மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பத்தாம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல்களின் முடிவுகள் அன்றைய தினம் மாலை 7 மணி முதலே அறிவிக்கப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, வாக்கெடுப்பு நிலையங்களைப் புகைப்படம் பிடிப்பதோ அல்லது காணொளிப் பதிவிடுவதோ கடுமையாகத் தவிர்க்கப்படவேண்டும் என, மேலதிக தேர்தல் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

அடுத்தமாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை நேற்று வவுனியாவில் வெளியிடப்பட்டது.

வவுனியாவில் உள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பணியகத்தில் நேற்று மாலை நடந்த நிகழ்வில், இந்த தேர்தல் அறிக்கையை, தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் கையளித்தார்.

அதையடுத்து, கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கு இரா.சம்பந்தன், தேர்தல் அறிக்கைகளை வழங்கினார்.


யாழ்.புங்குடுதீவு பகுதியில் கடற்படையினருக்கு சொந்தமான கவச வாகனம் மோதியதில், பாடசாலை மாணவியொருவர் ஸ்தலத்திலே பலியாகியுள்ளார்.

யாழ். பூங்குடிதீவு வைத்தியசாலை சந்தியில் இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

புங்குடுதீவு ரோமன் கத்தோலிக்க பாடசாலையில் கல்வி கற்கும் திருலங்கன் கேஷனா என்ற வயது 9 என்ற மாணவியே இவ்வாறு சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவி, பாடசாலைக்கு தனது மாமனாருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இதன்போது, புங்குடுதீவு வைத்தியசாலை சந்தியில் கடற்படை கவச வாகனம் மாணவி பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில், கடற்படை கவச வாகனத்தைச் செலுத்திச் சென்றவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஊர்காவத்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

யாழ். ஆணைக்கோட்டை வராகி அம்மன் கோவில் பகுதியில் வைத்து  ஒருவர் மீது சரமாரியாக வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது

இதில் படுகாயமடைந்த நபர் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும், தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமைக்கான காரணம் வெளியாகாத நிலையில், மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கனடா, ரொறொன்ரோ மற்றும் ஒன்ராறியோ மாகாணங்கள் வரலாறு காணாத கடுங் குளிர் தாக்கத்திற்கு  வெள்ளிக்கிழமை உட்பட்டுள்ளது.

இதனால், கனடா சுற்று சூழல் அமைப்பு ஒரு விசேட காலநிலை எச்சரிக்கை அறிக்கையை விடுத்துள்ளது.

ரொறொன்ரோ, மற்றும் ஒன்ராறியோ மாகாணங்கள் இன்று வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை வரை மிக விறைப்பான கடுங்குளிர் 35-சி முதல் -40சிக்கு குறையலாம் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இன்று பிற்பகல் மற்றும் இரவில் குளிர் காற்றுடன் கூடி -26சி வெப்பநிலை உணரப்படும் எனவும் இது குறைந்தது -22சி வரை காணப்படும் என நம்பப்படுகிறது.

ரொறொன்ரோ பியர்சன் சர்வதேச விமான நிலைய அதிகார சபை இது குறித்து தெரிவிக்கையில்…

இன்று(05) கடந்த 4 மணி நேரத்தில்-21.9சி வெப்பநிலை காணப்பட்டதாகவும், விமான நிலைய நடவடிக்கைகள் வழக்கம் போல் உள்ளன எனவும் தெரிவித்துள்ளது.

அதேவேளை,வடகிழக்கு யுனைரெட் மாநிலங்கள் மற்றும் கனடாவின் கிழக்கு பகுதிகள் பனிப்புயலினால் தாக்கப்பட்டிருப்பதால் சில தாமதங்கள் மற்றும் இரத்துக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

கனடாவில் தற்போது நிலவும் கடுங்குளிருடன் கூடிய காலநிலை எதிர்வரும் ஞாயிற்றுகிழமை நிறைவுறும் என எதிர்பார்க்கப்படுகிறது.