WELCOME TO PANNAGAM.COM & PTV

பண்ணாகம் இணையம்

NEWS - 2 

பிரான்சில் அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்களை கண்காணிக்க புதிய யுக்தியை கையாள அரசு முடிவு செய்துள்ளது.

அதிவேகமாக வாகனங்கள் ஓட்டுவதால் அதிகளவு விபத்துக்கள் நடக்கிறது, இதனை தடுக்க பிரான்ஸ் பொலிஸ் தனியார் நிறுவனங்களுடன் கை கோர்த்து ஒரு விடயத்தை மேற்கொள்ளவுள்ளது.

அதன்ப்படி, கார் வேகங்களை அளவிட 383 கார்களில் பொருத்தப்பட்ட கமெராக்களை வைத்து நாடு முழுவதும் ரோந்து செல்வதின் மூலம் வருடத்துக்கு 1.5 மில்லியன் கார்களை கண்காணித்து வருகிறது.

இந்த 383 என்பது அடுத்த வருடத்தில் 450 ஆக உயர உள்ளது.

இதை செய்ய ஆட்கள் பற்றாகுறையாக உள்ளதால் தனியார் நிறுவனங்களை பொலிசார் நாடியுள்ளனர். அவர்களும் இனி இந்த கண்காணிப்பு பணியில் ஈடுப்படுவார்கள் என தெரிகிறது.

வேகமாக செல்லக்கூடாது என கூறப்பட்டுள்ள பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு 10 கி.மீட்டர் வேகத்தை தாண்டினால் அவர்கள் பொலிசாரிடம் சிக்குவார்கள்.

அதே போல போக்குவரத்து துறை சொன்ன வேகத்தை தான் எல்லா இடங்களிலும் கடைப்பிடிக்க வேண்டும்.

கடந்த 2016ல் மட்டும் பிரான்ஸில் சாலை விபத்தில் 3469 பேர் உயிரிழந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பரதநாட்டியம்   கற்பதை  தவிர்த்து. தற்பாதுகாப்பு  கலையை பிள்ளளைகளுக்கு கற்பியுங்கள் மரணச்சடங்கில் உருக்கமான வேண்டுகோள்.  
யேர்மனியில்  22 வயது தமிழ்மாணவி சோபிகா தனியாக வீதியால் சென்றவேளை அவர் மீது நைஜீரிய நாட்டு இளைஞன் கத்தியால் குத்தி கொடுரமாக கொலை செய்தான். இந்த   மரணச்சடங்கில்   தமிழ் மக்கள் அலை அலையாகவும்  யேர்மனிய மக்களும்  பெருமளவில் கலந்து கொண்டு மலர் அஞ்சலிகள் செலுத்தினார்கள்   அங்கு திரண்ட மக்கள் தொகை அளவிடமுடியாததாக இருந்தது.  அங்கு  சோபிகாவின் அப்பா அங்கு கூடியிருந்த பிள்ளைகளையும் பெற்றோர்களையு  தன் பிள்ளளைக்கு நடந்தது போல் மற்றவர்களுக்கும் நடவாது விழிப்பாக இருக்குமபடி தன் கவலையை அடக்கிக் கொண்டு கூறியது கூடியிருந்தவர்களை நெகிழவைத்தது.

யேர்மனியில்  22 வயது தமிழ்மாணவி மீது கத்தியால் குத்தி பலி

இனம்தெரியாதவரால் 22 வயது தமிழ் மாணவி இரவு வீதியில்வைத்து கொடுரக் கொலை!   அம்மாணவி  உதவி உதவி என  கத்தியதும் 4 தடவை கத்தியால் குத்திவிட்டு  மர்மநபர் ஓடிவிட்டதாக சம்பவத்தை பார்தவர் பொலிசாருக்கு தகவல் கொடுத்தார்  பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
யார் இந்த எடப்பாடி கே.பழனிச்சாமி!
முதல்வராகும் இவர்பற்றி சில தகவல்கள்


பரபரப்பான அரசியல் சூழலில் அதிமுகவின் சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் எடப்பாடி கே.பழனிச்சாமி. தற்போது பொதுப்பணித் துறை அமைச்சராக இருக்கும் அவர் ஆரம்ப நாள் முதலே ஜெயலலிதாவின் விசுவாசி என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின் அடுத்த முதல்வராக அவர் பதவியேற்க வாய்ப்பிருக்கும் நிலையில் அவரைப் பற்றிய சில தகவல்கள்:
* 62 வயதான எடப்பாடி பழனிச்சாமி சேலம் மாவட்டம் எடப்பாடி நகரின், நெடுகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர். எடப்பாடி பழனிச்சாமி 1980-ஆம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார்.

* எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டது. இதில் ஜெயலிலதாவின் அரசியல் பயணத்தில் உறுதுணையாக இருந்தவர் எடப்பாடி பழனிச்சாமி.

* கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர் எடப்பாடி பழனிச்சாமி. கொங்கு மண்டலத்தில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக கட்சி வலுப்பெற முக்கிய பங்காற்றினார்.

* 1989-ம் ஆண்டு எடப்பாடி தொகுதியில் அதிமுக சார்பில் சட்டப்பேரவை உறுப்பினராக பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

* 1991-ம் ஆண்டு மீண்டும் எடப்பாடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தேடுக்கப்பட்டார்.

* எடப்பாடி பழனிச்சாமி 1991, 2011, 2016 ஆம் ஆண்டுகளில், எடப்பாடி தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்டு சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

* 1998-ம் ஆண்டு திருச்செங்கோடு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார்.

* 1999 மற்றும் 2004-ம் ஆண்டில் மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்தார்.

* 2011- 2016 ஜெயலிலதா தலைமையிலான ஆட்சிக் காலத்தில் அடிக்கடி அமைச்சகம் மாற்றப்பட்ட போதிலும் மாற்றப்படாத அமைச்சர்களில் ஒருவராக எடப்பாடி பழனிச்சாமி இருந்தார்.

* கடந்த மே மாதம் 2016-ம் ஆண்டு நடந்த சட்டப் பேரவை தேர்தலில் எடப்பாடி பழனிச்சாமி மீண்டும், எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு நான்காவது முறையாக சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

* தொடர்ந்து ஜெயலலிதாவின் விசுவாசியாக இருந்த எடப்பாடி பழனிச்சாமி, கடந்த சட்டப்பேரவை தேர்தலில் சேலத்திலுள்ள 11 தொகுதிகளில், அதிமுக 10 தொகுதிகள் வெற்றி பெற முக்கிய பங்கு வகித்தார்.

* 2016-ம் ஆண்டு ஜெயலிலதாவால் பொதுப்பணித் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

* ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவுக்குப் பிறகு அக்கட்சியின் சட்டப்பேரவை குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.