WELCOME TO PANNAGAM.COM & PTV

பண்ணாகம் இணையம்

News-6

சாவகச்சேரியில் உள்ள தேசிய லொத்தர் சபையின் அதிர்ஷ்ட லாபச் சீட்டுக்கள் விற்பனையாளரால் விற்பனை செய்யப்பட்டு கடந்த 16 ஆம் திகதி அதிர்ஷ்டம் பார்க்கப்பட்ட சீட்டுக்கு 6 கோடி 11 லட்சம் ரூபா ஜாக்பொட் பரிசு கிடைத்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மராட்சி பிரதேச செயலகத்துக்கு முன்பாக உள்ள அதிர்ஷ்ட லாபச் சீட்டுக்கள் விற்பனை முகவரிடம் விற்பனையான சீட்டுக்கு ஜாக்பொட் பரிசு கிடைத்துள்ளது.

குறித்த அதிர்ஷ்டசாலி அதிர்ஷ்ட லாபச் சீட்டை கொடுத்து அவரது பணப்பரிசை பெறலாம் என கூறப்படுகிறது.

அமைச்சர் பா. டெனீஸ்வரன் தனது அமைச்சர் பதவியை தொடர்வதற்கு இடமளிக்கப்பட வேண்டும் எனவும், அவருக்கு அமைச்சருக்கான ஆசனம் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் எனவும் ஆளுங் கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் கடுமையான தர்க்கம் மூண்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். 

வட மாகாண சபையின் 126 வது அமர்வு இன்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது சிறப்புரிமை மீறல் பிரச்சினையை சபைக்கு கொண்டு வந்த மாகாண சபை உறுப்பினர் கே.சயந்தன், மேன்முறையீட்டு நீதிமன்றம் மாகாண மீன்பிடி, போக்குவரத்து மற்றும் கிராம அபிவிருத்தி, வர்த்தக வாணிப அமைச்சராக பா. டெனீஸ்வரனே தொடர்ந்தும் இருப்பார் எனவும், அதற்கு எவரும் தடைவிதிக்க கூடாது எனவும் கூறியது.

மேலும், அரசியலமைப்பின் படி இறைமை மக்களுக்குரியது. அந்த இறைமையை மக்கள் நம்பிக்கை பொறுப்பாக எங்களிடம் கொடுத்துள்ளார்கள். ஆகவே நாம் நம்பிக்கை பொறுப்பாளிகள். அந்த வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றின் உத்தரவு பிரகாரம் டெனீஸ்வரன் அமைச்சராக தொடர்வதற்கு இடமளிக்காமை மக்களின் இறைமையை மலினப்படுத்தும் ஒரு செயலாகும். மேலும் மக்களுடைய நம்பிக்கை பொறுப்பாளிகளான நாம் ஆளுநரை சுயாதீனமாக செயற்படுவதற்காக இடமளிக்கப் போகிறோமா?

ஆகவே, இந்த விடயத்திற்கு பரிகாரம் காணாமல் நாம் இந்த சபையில் குந்தியிருப்பதனால் பயன் எதுவும் இருக்காது. அமைச்சர் டெனீஸ்வரன் அமைச்சராக தொடர்ந்து இயங்குவதற்கு இடமளிக்கப்பட்டு அவருக்கு ஆசனம் வழங்கப்பட வேண்டும். இல்லையேல் அது நீதிமன்ற தீர்ப்பு குறித்து பாரா முகமாக இருப்பதாக அர்த்தப்படும் என்றார்.

இதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன், அமைச்சர் பா. டெனீஸ்வரனின் பதவி நீக்கம் தொடர்பாக ஆளுநர் வர்த்தமானி பிரசுரம் வெளியிடாமையினால், டெனீஸ்வரன் தொடர்ந்தும் பதவி வகிப்பதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. முதலமைச்சராக நான் எனது கடமையை சரியாக செய்துள்ளேன். வர்த்தமானி அறிவித்தல் வெளியிடுவது எனது கடமையல்ல.

அதே சமயம் 5 அமைச்சர்களுக்கு மேல் பதவி வகிப்பது அரசியலமைப்புக்கு முரணான ஒன்றாகும். அவ்வாறு இருந்தால் அமைச்சர் சபையின் தீர்மானங்கள் சட்ட வலு அற்றவையாக மாறுவதுடன், பாரிய விளைவுகளையும் அது உண்டாக்கும்.

எனவே அரசியலமைப்புக்கு முரணாக நடப்பதற்கு நாங்கள் தயாராக இல்லை. இவ்வாறான நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்பினை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டியுள்ளது. மேலும் தற்போதுள்ள அமைச்சர்கள் எவரையும் பதவி இறக்கம் செய்ய இயலாது.

அமைச்சர்களை நியமிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளது என்றால் அதிகார பகிர்வு என்ன வாயிற்று? ஆளுநருடைய சர்வாதிகாரத்தையா எம்மவர்கள் எதிர்பார்க்கிறார்கள்? ஆகவே ஒரு சில நாட்களில் உச்ச நீதிமன்றம் ஒரு தீர்மானத்தை எடுக்கும் என்றார்.

இதனை தொடர்ந்து மாகாண சபை உறுப்பினர் கே. சயந்தன் கருத்து தெரிவிக்கையில், ஒரு ஓய்வு பெற்ற நீதியரசராக முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனின் பதில் வியப்பையும், ஏமாற்றத்தையும் தருகிறது. வழக்கில் யார் வெல்ல வேண்டும்? யார் தோற்க வேண்டும்? என்பது எங்களுடைய பிரச்சினை அல்ல. முன்னாள் அமைச்சர்களை பதவி விலகும்படி முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் கேட்டதை போல் அமைச்சர் டெனீஸ்வரனின் அமைச்சு துறைகளை வகிக்கும் அமைச்சர்களான க.சிவநேசன், திருமதி அனந்தி சசிதரன் மற்றும் முதலமைச்சர் ஆகியோர் அவற்றை மீளவும் டெனீஸ்வரனிடம் கொடுப்பதுடன் அமைச்சர்கள் இருவரின் ஒருவர் தமது அமைச்சு பொறுப்பை மீள வழங்க வேண்டும்.

மக்களால் தேர்வு செய்யப்பட்ட சபை உள்ள போது ஆளுநர் சுயமாக செயற்படுவதற்கு இடமளிக்கப்பட கூடாது. இந்த விடயத்தை இந்த சபை மிக மேலான விடயமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் அமைச்சர் பா.டெனீஸ்வரனின் செயற்பாடு கட்சி ரீதியானது அல்ல. அவருடைய தனிப்பட்ட செயற்பாடாகும் என கூறினார். இதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த மாகாண சபை உறுப்பினர் கே. சயந்தன் ஆளுநர் மாகாண அமைச்சர்கள் 4 பேரும் யார்? என உறுதிப்படுத்துமாறு முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனிடம் கேட்டுள்ளார்.

ஆனால் அதனை மறுத்த முதலமைச்சர் அவ்வாறு எதுவும் தன்னிடம் கேட்கப்படவில்லை என்றார். தொடர்ந்து உரையாற்றிய மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் முன்னாள் அமைச்சர் டெனீஸ்வரனுக்கு முன் வரிசை ஆசனம் தேவையாக இருந்தால் எனது ஆசனத்தை தருகிறேன். அவருக்கு கொடுங்கள் என கூறினார்.

இதற்கு பதிலளித்த மாகாண சபை உறுப்பினர் கே. சயந்தன் தனிப்பட்ட ஒருவருக்கு இழுக்கை ஏற்படுத்தும் வகையில் சிவாஜிலிங்கம் கருத்து தெரிவிப்பதாக கூறினார்.

தொடர்ந்து அமைச்சர் பா. டெனீஸ்வரன் கருத்து தெரிவிக்கையில், ஆசனத்திற்கு ஆசைப்பட்டவன் நான் அல்ல என கூறினார்.

தொடர்ந்து அவை தலைவர் சீ.வி.கே. சிவஞானம் கருத்து தெரிவிக்கையில், இங்கு நடைபெற்ற விடயங்களை நான் நிச்சயமாக ஆளுநருடைய கவனத்திற்கு கொண்டு செல்வேன். மேலும் தானே தொடர்ந்தும் அமைச்சராக இருப்பதாகவும், தனக்கு அமைச்சர்களுக்குரிய ஆசனம் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் எனவும் எனக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதனை அடுத்து இந்த விடயம் தொடர்பாக தெளிவுபடுத்தும் படியும், நாம் இருட்டு நிலையில் இருக்கிறோம். என்பதையும் ஆளுநருக்கு கடிதத்தில் எழுதியுள்ளேன். அதற்கான பதில் எமக்கு கிடைக்கவில்லை.

மேலும் உத்தியோக பூர்வமாக இந்த விடயம் தொடர்பில் எமக்கு எதுவும் தெரியப்படுத்தப் படவில்லை. ஆகவே நாம் நீதிமன்ற உத்தரவை மீறுவதாகவோ, மறுதலிப்பதாகவே அர்த்தப்படாது என கூறியதுடன் ஆளுநரின் பதிலை தொடர்ந்தும் எதிர்பார்ப்பதாக கூறி அவையை தேனீர் இடைவேளைக்காக ஒத்திவைத்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்றிரவு இரு வேறு இடங்களில் வாள்வெட்டுக் குழு வீடு புகுந்து நடத்திய தாக்குதல் சம்பவங்களில் இருவர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணமம் கொக்குவில் மேற்கு பகுதியில், முக மூடி அணிந்து வந்த இருவர் நடத்திய தா்ககுதலில் 24 வயதுடைய நபர் காயமடைந்தார்.

அதேவேளை குப்பிளான் தெற்கு பகுதியில் உள்ள வீடொன்றினுள் எட்டு பேர் கொண்ட கும்பல் ஒன்று புகுந்து தாக்குதல் நடத்தியது.அதில் பாடசாலை மாணவன் காயமடைந்தான் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் தெல்லிப்பழை மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தில் மாணவர்களிடையே ஏற்பட்ட முரண்பாட்டில் இருவர் கத்திக் குத்துக்கு இலக்காகியுள்ளனர் என்று தெரியவருகின்றது. முகாமைத்துவ வணிக பீட இறுதி வருட சிங்கள மாணவர்களுக்கு இடையிலேயே கத்திக்குத்து நடந்துள்ளது. காயமடைந்தவர்கள் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் நடந்துள்ளது. ஜயசூர்ய (வயது 26), சண்றுவான் (வயது – 26) ஆகியோரே காயங்களுக்குள் உள்ளாகியுள்ளனர். ஒருவருக்கு தலையிலும் மற்றையவருக்கு முதுகிலும் கத்திக் குத்து காயம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

நீண்டநாள்களாகவே யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ வணிக பீட இறுதி சிங்கள மாணவர்கள் இரண்டு தரப்புகளாகச் செயற்படுகின்றனர். இன்று ஒரு தரப்பினர் இன்று விளையாடிக் கொண்டிருந்தனர். அந்த இடத்துக்கு வந்த மற்றய தரப்பினர் பகிடிவதை தொடர்பில் பேச ஆரம்பிக்க இரண்டு தரப்புகளுக்கு இடையேயும் கைகலப்பு ஏற்பட்டது.

அதில் மாணவர் ஒருவர் கத்தி எடுத்து இருவரைக் குத்தினார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. கைகலப்பில் சில மாணவர்கள் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

நல்லாட்சி அரசுக்கு மூன்று ஆண்டுகள் ஆதரவு கொடுத்து எமது ஐனநாயக விட்டுக்கொடுப்பை உலகிற்கும் சிங்கள தேசத்திற்கும் காட்டியுள்ளோம்


நல்லாட்சி அரசாங்க ஐனாதிபதி எப்படி முட்டையப்பம் சாப்பிட்டு கூடஇருந்த நண்பன் மகிந்தவை முட்டாள் ஆக்கினாரோ அதேபோல் நம்பி வாக்களித்த தமிழ் மக்களுக்கும் மிண்டு கொடுத்த ஆழவைத்த கூட்டமைப்பு எம் பி மாரையும் முட்டாளாக்கியது மாத்திரம் அன்றி தான் ஒரு பச்சை இனவாதி என்பதையும் சிறுபாண்மை இனங்களிடையே முரண்பாடுகள் தோன்றக் கூடிய வகையான செயற்பாடுகளை உருவாக்கியுள்ளார்.
வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதியில் தற்போது புதிது புதிதாக பிரச்சினைகளை உண்டு பண்ணுவதில் தற்போதைய அரசு தீவிரமாக உள்ளது காரணம் தமிழ் மக்களை இறுதித் தீர்வு விடையத்தில் இருந்து கவனத்தை திருப்பி நாளாந்தம் மக்கள் ஒவ்வொரு உள்ளூர் ஆக்கிரமிப்புக்களுக்கு ஆர்ப்பாட்டம் கவயீர்ப்பு.முற்றுகைப் போராட்டம் என துன்புறுத்த தொடங்கி விட்டது மைத்திரி றணில் அரசாங்கம்.

.
நிலஆக்கிரமிப்பு,கடற்றொழில் ஆக்கிரமிப்பு, கனியமணல் அகழ்தல் மரம் வெட்டுதல், அத்துமீறிய குடியேற்றம், சிவில் நிர்வாகத்தில் இரானுவ தலையீடு ,அரச ஊழியர்களாக சிங்களவரை தமிழர் பகுதியில் நியமித்தல் ,போதைப் பொருட்கள் கடத்தும் மையமாக வடக்கு மாற்றப்பட்டுள்ளமை, இவ்வாறு பல பிரச்சினைகள் கட்டவிழ்க்கப்பட்டுள்ளது.தமிழர் தாயகப் பகுதியில்
நல்லாட்சி அரசுக்கு மூன்று ஆண்டுகள் ஆதரவு கொடுத்து எமது ஐனநாயக விட்டுக்கொடுப்பை உலகிற்கும் சிங்கள தேசத்திற்கும் காட்டியுள்ளோம் .

ஆயிரங்கண்ணுடைய தேவி வழக்கம்பரை முத்துமாரியம்பாளின் மண்டலாபிஷேக பூர்த்தி 5.6.2018 நாளில் பக்தி பூர்வமாக நடைபெற்ற மஹா சண்டிஹோமம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் கொலை மிரட்டல் விடுத்து தன்னை கட்டுப்படுத்த முயற்சிப்பதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு முதலமைச்சரிடம் வாரம் ஒரு கேள்வி பதில் பிரிவில், ஊடகவியலாளர் ஒருவர் சமூக வலைத்தளங்களில் கொலை மிரட்டல் விடுக்கப்படுவதனால், மேலதிகப் பாதுகாப்பை பெற முடியாதா? என வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதற்கு பதில் வழங்கும் வகையில் அறிக்கை ஒன்றை விடுத்துள்ள முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனக்குப் போதுமான பாதுகாப்பு சட்டப்படி வழங்கப்பட்டுள்ளதாகவும் தேவையேற்படின் மேலதிக பாதுகாப்பைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் பரிசீலிக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

1958ஆம் ஆண்டிலிருந்து தமிழ் மக்கள் மீதான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுவது போன்றே இலங்கை அரசாங்கம் செயற்படுவதாகவும் கூறியுள்ளார்.

உயிருக்கு ஆபத்து எப்போதும் எவருக்கும் வர முடியும் எனவும் ஆனால் அதற்கு அஞ்சி மக்களுக்கான கடமைகளை செய்யாமல் இருக்க போவதில்லை எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
ராஜபக்ஷ அரசாங்கம் வெளிப்படையாக தன்னை கட்டுப்படுத்தியதாகவும், தற்போது சர்வதேச நாடுகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள அரசாங்கத்தால் அவ்வாறு கட்டுபடுத்த முடியாது எனவும் விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டமையை இன்று சிங்கள மக்களும், சர்வதேசமும் உணர்ந்து கொண்டுள்ளதாகவும் ஜெனீவா இதுவரையில் கொடுத்துள்ள காலக்கெடு விரைவில் முடிவுக்கு வரப்போவதையும் முதலமைச்சர் ஞாபகப்படுத்தியுள்ளார்.

இதனால் இலங்கை அரசாங்கம் செய்வதறியாது தடுமாறுவதாகவும் பொம்மைகளை பெற்றுத்தருவதாக வாக்களிக்கின்றார்களே தவிர, 70 வருடப் பிரச்சினைக்குத்தீர்வு வழங்குவதாகக் கூறுவதில்லை எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சீரற்ற வானிலையால், இதுவரையிலும் 9,817 குடும்பங்களைச் சேர்ந்த 38,048  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறான அனர்த்தங்களினால் இதுவரையிலும் 8 பேர் மரணமடைந்துள்ளனர். இதேவேளை 7 பேர் காய​மடைந்துள்ளனர்.

19 வீடுகள் முழுமையாகவும், பகுதியளவில் 918 வீடுகளும் ​சேதமடைந்துள்ளனவென தெரிவித்துள்ள அந்த நிலையம்,1,625 குடும்பங்களைச் சேர்ந்த 6,090 பேர், 80 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். அதில் மாற்றுக்கருத்தில்லை என்று மூத்த தமிழ்த் தேசிய செயற்பாட்டாளரும், உலகத்தமிழர் பேரவையின் ஸ்தாபருமான பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது;

பிரபாகரன் உயிருடன் இல்லை. புலிகளை முழுமையாக அழித்து விட்டோம் என்றால் இராணுவத்துக்கு ஒரு இலட்சம் பேரை எதற்காக தற்போது இணைக்கின்றார்கள். அவர்களுக்கு இந்தியாவில் எதற்கு பயிற்சி அளிக்கின்றார்கள். அதற்கான அவசியம் என்ன?

வடக்கில் எதற்காக இலட்சக்கணக்கான இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. போராளிகள் இருந்தால் இராணுவம் இருக்க வேண்டும் என்பதில் நியாயம் உள்ளது. அப்பாவி மக்கள் இருக்கின்ற போது அங்கு எதற்காக இராணுவம் இருக்க வேண்டும்?

பிரபாகரன் உயிரிழந்து விட்டதாக உடலொன்றை காண்பித்தார்கள். உண்மையில் அவருடைய உடலாக இருந்திருந்தால் ராஜபக்ச அரசு அதனை கொழும்புக்குக் கொண்டு வந்து பன்னாட்டு ஊடகங்களுக்கு காண்பித்திருப்பாரா இல்லையா? அதனை ஏன் செய்யவில்லை.

அதற்கு அடுத்ததாக மரபணுப்பரிசோதனை (டி.என்.ஏ) சோதனை செய்தாக கூறினார்கள். பிரபாகரன் இறந்த தருணத்தில் அவருடைய பெற்றோர்கள் வல்வெட்டித்துறையில் தான் இருந்தார்கள். அப்படியென்றால் அவர்களுடைய இரத்தமாதிரி பெறப்பட்டு சோதனை மேற்கொண்டிருக்க வேண்டும்? அவ்வாறு எதுவும் இடம்பெறவில்லை.

இதை விட மகிந்த அரசினால் காட்டப்பட்ட உடல் பிரபாகரனின் உடல் இல்லையென்பதற்கு வேறு ஆதாரம் ஏதும் தேவையில்லை.- என்றார்.

ஐரோப்பிய நாடுகளில் அகதி அந்தஸ்து கோரி மறுக்கப்பட்டிருப்பவர்கள், தாங்கள் சித்திரவதைக்கு உள்ளானவர்கள் என்பதையும், சொந்த நாட்டில் போதிய மருத்துவ சிகிச்சை பெற முடியாது என்பதையும் நிரூபித்தால், ‘சகாயகர பாதுகாப்பு’ (Subsidiary Protection) என்று அழைக்கப்படும் புகலிட அனுமதியை பெற்றுக்கொள்ள முடியும் என கடந்த செவ்வாய்க்கிழமை ஐரோப்பிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சிரேஸ்ட சட்ட ஆலோசகரும் வழக்குரைஞருமான திரு அருண் கணநாதன் மற்றும் கீத் குலசேகரம் ஆகியோரினால் முன்னெடுத்து செல்லப்பட்ட ஒரு ஈழத்தமிழர் தொடர்பிலான வழக்கிலேயே ஐரோப்பிய நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது.

அதாவது மனித உரிமைச் சட்ட விதியின் கீழ் ஐரோப்பாவில் தஞ்சம் கோரி விண்ணப்பிக்கும் ஒருவர் கடந்தகாலத்தில் அனுபவித்த சித்திரவதைகளின் விளைவாக தமது உடல் அல்லது உளவியல் சார்ந்த கடுமையான பாதிப்புகளை கொண்டிருந்து அவர் சொந்தநாட்டிற்கு திருப்பி அனுப்பப்படும் பட்சத்தில. தமது சொந்த நாட்டில் கொலை அச்சுறுத்தல் போன்ற தீங்குகள் இல்லாவிடினும் போதிய சிகிச்சையின்றி மிகமோசமாக பாதிக்கப்பட நேரிடும் அல்லது தற்கொலை செய்துகொள்ள நேரும் எனக்கண்டால் சப்சிடரி ப்ரொட்டக்சன் (Subsidiary Protection) என்று அழைக்கப்படும் புகலிடம் வழங்க ஐரோப்பிய நீதிமன்றம் அனுமதித்து தீர்ப்பளித்துள்ளது. எனினும் அவரது சொந்த நாட்டில் அவ்வாறான மருத்துவ உதவி கிடைக்கப்பெறாது என்பதை ஆராய்ந்து உண்மைத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்வதும் புகலிடம் வழங்குவதும் சம்மந்தப்பட்ட ஐரோப்பிய உறுப்பு நாட்டின் நீதிமன்றங்களை சார்ந்தது என அத்தீர்ப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் பின்னணி

இந்த வழக்கின் விண்ணப்பதாரி தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினராக இருந்த காரணத்தினால் இலங்கை பாதுகாப்பு படையினரால் முன்பு சித்திரவதைக்கு உட்பட்டிருந்த ஒரு ஈழத்தழிழராவார். பாதுகாப்பு காரணங்களுக்காக பெயர் குறிப்பிடப்படாமல் ‘எம்.பி’ (MP) என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ள இவர் 2005 இல் ஒரு மாணவராக பிரித்தானியாவை வந்தடைந்தார். எனினும் இலங்கையில் உயிர் ஆபத்து காரணமாக திரும்பிச்செல்ல முடியாத காரணத்தால் 2009 இல் அரசியல் தஞ்சம் கோரியிருந்தார்.

அவர் தான் இலங்கையில் அனுபவித்த சித்திரவதையின் விளைவாக மன உளைச்சல் மற்றும் மனச்சோர்வு நோய்க்கு (Post-traumatic Stress Disorder and Depression) உள்ளாகியிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

ஆரம்பத்தில் ‘எம்.பி’ இன் புகலிடக்கோரிக்கை மறுக்கப்பட்ட போதிலும், சிரேஸ்ட சட்ட ஆலோசகரும் வழக்குரைஞருமான அருண் கணநாதன் அவர்களின் கடும் உழைப்பால் அவரது வழக்கு ஒரு உதாரண வழக்காக தெரிவு செய்யப்பட்டு, இலங்கைக்கான அரசியல் தஞ்ச வழிகாட்டி வழக்குகளில் (Country Guidance) ஒன்றாக தெரிவு செய்யப்பட்டது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பல மேல்முறையீடுகளினால் இவ்வழக்கு பிரித்தானிய உச்சநீதிமன்றம் வரை சென்றது. அவர் போன்று, சித்திரவதை காரணமாக மனநிலை பாதிப்பு அடைந்தவர்களுக்கு புகலிடம் வழங்குவதற்காக புதிய நடைமுறை ஒன்றை பிரித்தானிய அரசு உருவாக்க வேண்டும் என்ற வாதத்தை அவரது சட்டத்தரணிகள் உச்ச நீதிமன்றில முன்வைத்தனர்.

இதனைத்தொடர்ந்து இந்த வழக்கினை விசாரித்த பிரித்தானிய உச்சநீதிமன்றம், சப்சிடரி ப்ரொட்டக்சன் என அறியப்படும் மூன்றாம் உலகநாட்டைச் சேரந்த பிரஜைகள் அல்லது நாடற்றவர்களுக்கான குறைந்தபட்ச நியமங்களை அளிக்கும்; ஐரோப்பாவின் 2004 ஆம் ஆண்டு பணிப்புகளின் அடங்கல்கள் குறித்து விதிக்குமாறு லக்ஸம்பேர்க் (Luxemburg) இனை தளமாக கொண்ட ஐரோப்பிய நீதிமன்றத்திடம் கோரியிருந்தது. அதன் பிரகாரதம், ஐரோப்பிய நீதிமன்றத்தில் அருண் கணநாதன் தலைமையிலான சட்டத்தணிகள் குழு ஒன்று இது தொடர்பான வழக்கை வெற்றிகரமாக வாதிட்டிருந்தனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை இதற்கான தீர்ப்பை வெளியிட்ட ஐரோப்பிய நீதிமன்றம், சித்திரவதாக்கு உள்ளானவர்கள் அகதி தஞ்சம் நிராகரிக்கப்பட்டாலும், சப்சிடரி ப்ரொட்டக்சன் (Subsidiary Protection) என்ற பாதுகாப்பை பெறமுடியும் என்று தெளிவுபடுத்தியிருந்தனர். இந்த குறிப்பிட்ட இலங்கையரின் வழக்கில் அவர் தனது சொந்த நாட்டிற்கு திரும்பினால் அங்கு போதிய சிசிச்யையின்மையினால் அவரது உடல்நலத்திற்கு தீங்கு நிகழுமா என்பது குறித்து தீர்மாணிக்க வேண்டியது பிரித்தானிய நீதியரசரே எனவும் தெரிவித்துள்ளது.

சகாயகர பாதுகாப்பு (Subsidiary Protection)

இதற்கு முன்னர் 2004 ஆம் ஆண்டின்; ஐரோப்பிய பணிப்புகளின்படி, சப்சிடரி ப்ரொட்டக்சன் (Subsidiary Protection) என்னும் புகலிடம்;, அகதி அந்தஸ்து பெற தகுதி பெற்றிருக்காத மூன்றாம் உலகநாட்டின் ஒரு பிரஜை அல்லது நாடற்ற ஒருவருக்கு பொருந்துமெனினும் அவர் சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டால் அங்கு மரண தண்டனை அல்லது உயிர் பறிப்பு, சித்திரவதை அல்லது கடும் அச்சுறுத்தல் போன்ற மிகக் கடுமையான தீங்கினை அனுபவிக்கும் வகையலான கடும் ஆபத்துக்களுக்கு நிரந்தரமாக முகம் கொடுக்க நேரிடும் என்ற நிலையில் உள்ளவராக மட்டுமே இருக்க வேண்டும் என்றிருந்தது. தற்போது சர்வதேச மனித உரிமை விதிமுறை சார்ந்த மருத்துவ சிகிச்சை என்னும் விடயமும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அட்வொகேட் ஜெனரல் வெஸ் போட் அவர்களின் கருத்து

ஐரோப்பிய நீதிமன்றத்தின் 11 அட்வொகேட் ஜெனரல்களில் ஒருவரான வெஸ் போட் (Yves Bot) அவர்கள், இந்நபர் நாடு திரும்பினால் தற்கொலைக்கு முயற்சிக்கக்கூடியவராகவும், தன்னைத்தானே அழித்துக்கொள்ள தீர்மானித்துள்ளவராகவும் தென்படுகிறார் என் தனது கருத்தினை எழுதி சமர்ப்பித்திருந்தார்.

‘சித்திரவதைகளை மேற்கொண்டு வருகிறது என்னும் குற்றச்சாட்டிற்கு உள்ளான ஒரு நாடாக விளங்கும் இலங்கை, 1984 ஆம் ஆண்டு சித்திரவதைக்கு எதிரான சர்வதேச விதிமுறையின் கீழ், தஞ்சம் கோரியவருக்கு அல்லது அவர் இறக்க நேரிட்டால் அவரது குடும்பத்தினருக்கு புனர்வாழ்வும், நட்டஈடும் வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.

இலங்கையின் போதிய மருத்துவ வசதியின்மை குறித்து வாதிடப்படவில்லை. நாடு திரும்பினால் ஐரோப்பிய மனித உரிமை விதிமுறைகளுக்கு அமைவாக இவருக்கு ஏற்பட்டுள மனநல பாதிப்புகளிலிருந்து தொடர்ந்து பாதுகாக்கப்படுவாரா என்பதனை குறித்த ஐரோப்பிய உறுப்பு நாட்டின் தேசிய நீதிமன்றமே தீர்மாணிக்க வேண்டும்’ என அட்வொகேட் ஜெனரல் போட் தெரிவித்தார்.

இது முன்னர் விதிக்கப்பட்ட வழக்குகளில் இருந்து உருவான ஒரு சட்ட விதி (Established Case-Law) என்றும் ஐரோப்பியச் சட்டமானது மனித உரிமை சார்ந்த சர்வதேச சட்டங்களுக்கு அப்பாற்பட்டு சுயாதீனமான முறையில் இயங்க வல்லது எனவும் குறிப்பிடும் அதேவேளை சர்வதேச சட்டமும், 2004 ஆம் ஆண்டின் ஐரோப்பிய பணிப்புகளும் வேறு இலக்குகளை கொண்டிருப்பதுடன் முற்றிலும் வித்தியாசமான பாதுகாப்பு பொறிமுறைகளை அமைக்கின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சட்டத்தரணி கீத் குலசேகரம் அவர்களின் கருத்து

இந்த வழக்கின் வெற்றிக்காக கடுமையாக உழைத்த சட்டத்தரணிகள் ஒருவரான திரு கீத் குலசேகரம் அவர்கள் கருத்து தெரிவிக்கும் போது,

‘இந்த தீர்ப்பானது, உலகின் எந்த நாட்டில் இருந்து ஐரோப்பாவிற்கு வந்து தஞ்சம் கோரும் அனைத்து இன மக்களுக்கும் நன்மை பயப்பதாக இருப்பினும், குறிப்பாக இலங்கைத் தழிழ் அகதிக் கோரிக்கையாளர்களுக்கு பெரும் ஆறுதலை தருவதாக உள்ளது. வதைமுகாம்களில் சித்திரவதைகளுக்கு உள்ளாகி அங்கிருந்து தப்பிப்பிழைத்த தமிழர்கள் மேற்கு நாடுகளில் அகதி தஞ்சம் கோரி வருகின்றனர். ஆயினும் பல்வேறு காரணங்களுக்காக பலரின் கோரிக்கைகள் நிராகரிக்கபட்ட நிலையில் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் நிலையில் தவித்துக்கொண்டிருக்கின்றார்கள். அவர்களில் பலர் கடுமையான உடல் மற்றும் உள நல பாதிப்புக்களை அனுபவித்து வருகிறார்கள். அவ்வாறாக ஐரோப்பிய நாடுகளில் மறைந்து வாழும் நிராகரிக்கபட்ட அகதிக் கோரிக்கையாளர்கள், இந்த அடிப்படையில் மீண்டும் புதிய விண்ணப்பங்களை (Fresh Claim) மேற்கொண்டு, இந்த வகையிலான புகலிடத்தை பெற்றுக்கொள்ளுவதற்கு இந்த தீர்ப்பு புதிய பாதையை திறந்து விட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.

‘இதனால் ஐரோப்பிய நீதிமன்றம் விதித்துள்ள தீர்ப்பு அங்கு புகலிடம் கோரிவரும் இலங்கை அரசின் சித்திரவதைகளால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு பெரும் மனநிறைவையும் நிம்மதியையும் தந்திருக்கிறது. தமிழ் மக்கள் மட்டுமன்றி, சித்திரவதைக்கு உள்ளான உலகின் அனைத்து இன தஞ்ச கோரிக்கையாளர்களும் நன்மை பெறும் வகையில் இந்த வழக்கை வெற்றிகரமாக நடாத்திய சிரேஸ்ட சட்ட ஆலோசகரும் வழக்குரைஞருமான அருண் கணநாதன் பாராட்டப்பட வேண்டியவர் எனவும், அவரின் இந்த வெற்றி தமிழ் இனத்தக்கே பெருமை சேர்க்கும்’ என்றும் மேலும் தெரிவித்தார்.

தமிழ் மக்களுக்கு தலைமைதாங்கிய தலைவர்களில் வெற்றி கண்ட ஒருவராக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டுமே இருக்கின்றார் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோகனேசன் தெரிவித்துள்ளார்..

யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொணடு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஈழத்தமிழ் மக்களின் பிரச்சினையை உலகேங்கும் கொண்டு சென்றதில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் வெற்றிபெற்றிருந்தார்.

வன்னியில் சிவில் பாதுகாப்புப் படையினால் நடத்தப்படும் முன்பள்ளிகளில் ஆசிரியர்களாகப் பணியாற்றுவோருக்கு 20 நாட்கள் இராணுவப் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

இதற்காக இன்று இராணுவ சீருடையுடன்  முல்லைத்தீவு – தேராவிலில் உள்ள சிறிலங்கா இராணுவ முகாமுக்கு வருமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

போர் முடிவுக்கு வந்த பின்னர் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் வன்னியில் உள்ள முன்பள்ளிகளை சிவில் பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.

இங்கு கற்கும் மாணவர்களுக்கு சிவில் பாதுகாப்பு படையின் சின்னம் பொறிக்கப்பட்ட சீருடைகளே வழங்கப்படுகின்றன. இங்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு, சிவில் பாதுகாப்பு படையே ஊதியம் வழங்கி வருகிறது.

படைக் கட்டுப்பாட்டில் உள்ள முன்பள்ளிகளை மீட்பதற்கு வடக்கு மாகாணசபை இன்னமும் நடவடிக்கை எடுக்காத நிலையில், சிவில் பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டில் உள்ள முன்பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு இராணுவப் பயிற்சி அளிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தலைமைத்துவப் பயிற்சி என்ற பெயரில் இவர்களுக்கு 20 நாட்கள் இராணுவப் பயிற்சி தேராவில் இராணுவ முகாமில் வழங்கப்படவுள்ளது.

இதற்காக இவர்களுக்கு இராணுவ சீருடைகள் வழங்கப்பட்டு இன்று முகாமுக்கு வருமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முன்பள்ளி ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

தாம் முன்பள்ளிகளில் இணைந்த போது, இராணுவப் பயிற்சி ஏதும் அளிக்கப்படாது என்று உறுதியளிக்கப்பட்டதாகவும், இப்போது தலைமைத்துவ பயிற்சி என்ற பெயரில் இராணுவப் பயிற்சிக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளதாகவும் முன்பள்ளி ஆசிரியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் பயிற்சிக்கு செல்லாவிடின், வேலையை இழக்க நேரிடும். இந்த நிலையில் நாங்கள் எங்கே செல்வது? என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்ப்பதற்கு எந்தக் காரணங்களும் இல்லை. எதிர்வரும் 2 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கூடி இறுதித் தீர்மானம் எடுக்கப்படவிருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்தது.

எதிர்வரும் நான்காம் திகதி நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வியடையுமாயின் அன்றைய தினத்துடன் இணக்கப்பாட்டு அரசாங்கம் முடிவுக்குவந்துவிடும் என இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார். திறைசேரி முறி விநியோக மோசடி குறித்து சுதந்திரக் கட்சியின் மத்தியகுழு நியமித்த அமைச்சர்கள் குழுவினால் முன்வைக்கப்பட்ட விடயங்களே பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் குற்றச்சாட்டுக்களாக குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே இதனை எதிர்ப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றோம். இந்த முடிவை ஜனாதிபதிக்கும் தெரியப்படுத்தி இறுதித் தீர்மானம் 2ஆம் திகதி எடுக்கப்படும்.

நன்றிக்கடனை செலுத்துவதற்கான காலம் ஜனாதிபதிக்கு முடிந்துவிட்டது. நாட்டைப் பற்றிச் சிந்திக்கவேண்டிய காலம் வந்திருப்பதாக சுதந்திரக் கட்சி தெரிவித்தது.

நம்பிக்கையில்லா பிரேரணை விவகாரம்

தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, இராஜாங்க அமைச்சர்களான டிலான் பெரேரா மற்றும் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன ஆகியோர் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தனர்.

2ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் நடைபெறும் சந்திப்பில் இறுதி முடிவை அறிவிப்போம்.

பெரும்பான்மையான உறுப்பினர்களின் நிலைப்பாட்டுக்கு ஜனாதிபதி ஒத்துழைப்பார் என நம்புகின்றோம் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை வெற்றிபெறுமாயின் ஜனாதிபதியின் பதவி இல்லாமல் செய்யப்படும் என கூறப்படும் கருத்தில் எந்தவித உண்மையும் இல்லை. அரசியலமைப்பில் அவ்வாறான ஏற்பாடுகள் எதுவும் இல்லை. இந்தப் பிரேரணை வெற்றிபெறுமாயின் அமைச்சரவை கலைக்கப்படும் என்றார்.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றிபெறுமாயின் இணக்கப்பாட்டு அரசாங்கம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுவிடும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் கட்சிகள் மத்தியில் பிழையான நிலைப்பாடொன்று புகுத்தப்பட்டுள்ளது என இங்கு கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

பிரதமர் இணக்கப்பாட்டு அரசாங்கத்தை சிதைக்கும் வகையில் செயற்படுகிறார். அவருடைய நடவடிக்கைகளாலேயே இணக்கப்பாட்டு அரசு உடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த அரசாங்கம் முடிவுக்கு வரக்கூடாது எனக் கருதினால் பிரதமர் தனது பதவியை இன்றோ நாளையோ இராஜினாமா செய்ய வேண்டும். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்கள் 19ஆவது அரசியலமைப்பின் கீழ் குறைக்கப்பட்டன. ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்ட அதேசமயம், ஏகாதிபத்தியம் கொண்ட பிரதமர் ஒருவர் உருவாக்கப்பட்டுள்ளார். தற்பொழுதுள்ள அரசியலமைப்பின் கீழ் பிரதமர் தானாக பதவி விலகினால் அல்லது மரணமடைந்ததால் அல்லது மரணிக்கச் செய்யப்பட்டாலேயே அவரை விலக்க முடியும். நல்லாட்சி அரசாங்கம் ஏகாதிபத்தியம் கொண்ட பிரதமரை உருவாக்கியுள்ளது என்றார்.

பிரதமரின் கீழிருந்த மத்திய வங்கியை மீண்டும் நிதி அமைச்சின் கீழ் கொண்டுவருவதற்கான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.

இதன்மூலம் பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிக்க நாம் எடுத்திருக்கும் தீர்மானத்துக்கு அவர் ஆசீர்வாதம் வழங்கியிருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா குறிப்பிட்டார்.

க.பொ.த. சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் நாளை வெளியாகவுள்ளது.

2017 கபொத சாதாரண தர பரீட்சைக்கு 6 இலட்சத்து 88 ஆயிரத்து 563 பேர் தோற்றினர். 2804 பரீட்சை முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன.

இதில் 2798 முறைபாடுகள் விண்ணப்பதாரிகள் தொடர்பானதாகும். இதன்பொருட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து 1829 பேர் இம்முறைபாடுகளில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

நவீன தொழில்நுட்ப கருவிகள் உள்ளிட்ட பரீட்சை மோசடிகள் தொடர்பில் 969 பேரின் பரீட்சை முடிவுகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

"இஸ்லாம் ஜெர்மனி நாட்டிற்கு சொந்தமானது அல்ல" என தான் நம்புவதாக ஜெர்மனியின் புதிய உள்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

அகதிகள் தொடர்பான அதிபர் மெர்கலின் கொள்கைகளை தொடர்ந்து விமர்சித்து வந்தவர், ஹோர்ஸ்ட் சீஹொஃபர். ஆனால் தற்போது புதிய கூட்டணியில் இவர் முக்கிய பதவியை பெற்றுள்ளார்.

இவருடைய கருத்துகள் ஜெர்மனி கட்சிக்கு தீவிர வலது- மாற்று வாக்காளர்களை திரும்பப் பெறும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.

இந்த கருத்துகளில் இருந்து மெர்கல் விலகியே உள்ளார்.

நாளிதழ் ஒன்றிற்கு அமைச்சர் சீஹொஃபர் அளித்த பேட்டியில், "கிறித்துவத்தை அடிப்படையாக கொண்டுள்ள ஜெர்மனி, தன் மரபுகளை விட்டுக்கொடுக்கக் கூடாது" என்று கூறியுள்ளார்.

"இஸ்லாம் ஜெர்மனி நாட்டிற்கு சொந்தமானது அல்ல. ஜெர்மனி கிறித்துவத்தை அடிப்படையாக கொண்டது" என்றார் அவர்.

"ஜெர்மனியில் நம்முடன் வாழும் முஸ்லிம்கள் நம் நாட்டை சேர்ந்தவர்கள்தான். ஆனால் அதற்காக நம் மரபுகளையும் பழக்கவழக்கங்களையும் விட்டுக் கொடுக்க முடியாது. முஸ்லிம்கள் நம்முடன் வாழ வேண்டும், ஆனால் நம் அருகிலோ நமக்கு எதிராகவோ இருக்க முடியாது." என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி நகரில் பிரபலமான பாதணிகள் உற்பத்தி நிறுவனத்தின் வர்த்தகர் ஒருவரைக் காணவில்லை என கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

காத்தான்குடி நகர், மீன்பிடி இலாகா வீதி, மனேஜர் ஒழுங்கையைச் சேர்ந்த ஏ.எல்.எம். முஹம்மது முபாறக் (வயது 35) எனும் பாதணி தொழிற்சாலையின் உரிமையாளரே நேற்று இரவு  7.30 மணியிலிருந்து காணாமல் போயுள்ளார்.

இதுபற்றி அவரது மனைவி பாத்திமா நஸ்லியா இன்று காலை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

இரண்டு குழந்தைகளின் தந்தையான இவர் வழமைபோன்று நேற்று இரவு தனது மஞ்சந்தொடுவாயிலுள்ள தொழிற்சாலையிலிருந்து வெளியேறி அருகிலிருந்த உணவகத்தில் தேநீர் அருந்தி விட்டு வெளியேறியவரே இரவு 7.30 மணியளவில் காணாமல் போயுள்ளார்.

அவர் கடைசியாக அந்த உணவகத்திலிருந்து வெளியேறியபோது பதிவான சிசிரிவி காணொளியை வைத்து பொலிஸார் விசாரணைகளில் இறங்கியுள்ளனர்.

இந்த வர்த்தகர் மாயமாய் மறைந்த சம்பவம் காத்தான்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொக்குவில் பகுதியிலுள்ள வீடு ஒன்றின் மீது பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் மேற்கொண்ட நபர்களில் இருவரை மடக்கிப் பிடித்த ஊர் மக்கள் அவர்கள் மேல் சர மாரியாக தாக்குதல் நடத்திய பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைத் துள்ளனர். 

நேற்று மாலை இடம்பெற்ற இந்த சம்ப வத்தில் படுகாயமடைந்த இரு சந்தேகநபர்க ளையும் கைது செய்த பொலிஸார் யாழ் போதனா வைத்திய சாலையில் அனுமதித்து ள்ளனர். 

கொக்குவில் பிரம்படி பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு  நேற்று மாலை 7 பேர் கொண்ட குழுவினர் சென்றுள்ளனர். அங்கு ஒருவரு டைய பெயரை கூறி அந்த நபர் எங்கே என கேட்டுள்ளனர். 

அப்போது வீட்டில் இருந்தவர்கள், குறித்த நபர் இல்லை என தெரிவித்ததை அடுத்து அவ் வீட்டின் வாசல் கதவை சேதப்படுத்தியதுடன், போத்தல்களால் வீட்டில் தாக்குதல் மேற்கொண்டு விட்டு பெற்றோல் குண்டையும் வீசிவிட்டு தப்பித்துச்சென்றனர். இத் தாக்குதலில் வீட் டின் யன்னல் மற்றும் கதவுகள் சேதமடை ந்துள்ளன. 

தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட அதே நேரம்  அயலவர்கள் ஒன்று கூடி மேற்குறித்த குழு வில் உள்ளதாக சந்தேகத்தின் பேரில் இரு நபர்களை மடக்கிப்பிடித்து சரமாரியாக தாக் குதல் மேற்கொண்டுள்ளனர். பின்னர் பொலி ஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். 
சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் குறி த்த இரு சந்தேக நபர்களையும் கைது செய்த துடன் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத் தியசாலையில் அனுமதித்துள்ளனர். இச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட இருவரும் 19 வயதையுடைய இளைஞர்களாவர். குறி த்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேல திக விசாரணைகளை மேற்கொண்டு வருகி ன்றனர்.                   

54 வயதாகும் நடிகை ஸ்ரீதேவி திருமண வைபவத்தில் பங்குபற்றுவதற்காக தன்னுடைய குடும்பத்தாருடன் டுபாய் சென்றிருந்தார். அங்கு அவருக்கு இந்திய நேரப்படி இரவு 11 30 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.

1963 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13 ஆம் திகதிவிருதுநகர் மாவட்டம் சிவகாசியில் ஐயப்பன் -ராஜேஸ்வரி தம்பதிகளுக்கு மகளாக பிறந்தஸ்ரீதேவி தனது  நான்கு வயதிலேயே ஏ.பி.நாகராஜன் இயக்கிய கந்தன் கருணை திரைப் படத்தில்குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். 1967ஆம் ஆண்டு வெளியான அப்படம் தெலுங்கு, கன்னடம்  மலையாளம் என்று வல்ல தென்னிந்திய மொழிகளிலும் குழந்தைநட்சத்திரமாக நடிக்கிற வாய்ப்பினை இவருக்குப்  பெற்றுத் தந்தது. அதைத்  தொடர்ந்து பல படங்களில் குழந்தைநட்சத்திரமாக நடித்து வந்த இவரை 1976ஆம்ஆண்டு மூன்று முடிச்சு படம் மூலம்கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர்.

இவர் அறிமுகமான முதல் படத்திலேயே கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்தப் படம் வெற்றி படமாக அமையவே  இவரது சினிமாவாழ்க்கையில் பெரும் திருப்பம் ஏற்பட்டது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழியிலும் இவர் கதாநாயாகியாக உயர்ந்தார்.முன்னணி கதாநாயகர்கள் படங்களிலும், முன்னணி இயக்குனர்களின் படங்களிலும் அவர்இருந்தார். பாரதிராஜாவின் பதினாரு வாயதினிலே, சிவப்பு ரோஜாக்கள், பாலு மகேந்திராவின்மீண்டும் கோகிலா, மூன்றாம் பிறை என அவரது புகழ் உயர்ந்து பறந்தது.

இந்தியிலும் வாய்ப்பு வர இந்திக்கும் சென்றார். முதல் படம் “சோல்வா சாவன்” தோல்வியைதழுவினாலும், இரண்டாவது வெளியான “ஹிம்மத்வாலா” மாபெரும் வெற்றியை தேடித் தந்தது.இந்தி திரைப்பட உலகில் ஒரு நட்சத்திர அந்தஸ்தையும் திருப்புமுனையையும் பெற்று தந்தபடம். அதன் பிறகு மூன்றாம் பிறை மீண்டும் “சத்மா” என்கிற பெயரில் உருவான போது அதிலும்நடித்தார். அதில் இவருக்கு பெரும் புகழும் பாராட்டும் கிடைத்தது. அதைத் தாண்டி,இன்றளவும் பல நடிகைகளுக்கு முன் மாதிரி படமாக திகழ்கிறது.  அதன் பிறகு தொடர்ந்து இந்தியில் இருபத்தி 5 படங்களுக்கு மேல் நடித்து முன்னணி நடிகையாக திகழ்கிறார். 

தென்னிந்திய மொழியில் உச்சத்தில் இருந்த போது தந்தையை இழந்த ஸ்ரீதேவி, இந்தியில்உச்சத்தில் இருந்த போது தாயை பறி கொடுத்தார். அப்போது ஸ்ரீதேவிக்கு ஆதரவாகஇருந்தவர் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி. அவரைத்தான் திருமணம் செய்து கொள்ளப் போகிறார் ஸ்ரீதேவி என்று ஊடகங்கள் எழுதி வந்தன. மிதுன் சக்கரவர்த்தியின் முதல் மனைவி சம்மதிக்கவில்லை என்பதால், போனிகபூரை திருமணம் செய்து கொண்டார் ஸ்ரீதேவி. இவர்களுக்கு ஜான்வி, குஷி என இரு மகள்கள்உள்ளனர். திருமணத்திற்கு பிறகு பதினான்கு ஆண்டுகள் கழித்து ‘இங்கிலீஸ் விங்கிலீஸ்’ படத்தில் நடித்து ஜப்பான் ரசிகர்களையும் கவர்ந்திருக்கும் ஸ்ரீதேவி, தற்போது, விஜய்யுடன் மகாராணியாக ‘புலி’ என்ற தமிழ் படத்திலும் நடித்திருந்தார். இவரது நடிப்பில் தமிழில் மாம் என்ற படம் கடைசியாக வெளியானது. இவரது ஆவணப்படம் ஒன்றை பெங்களூரூவைச் சேர்ந்த ஸ்ரீதேவி ரசிகர் மன்றத்தினர் தயாரித்து வந்தார்கள். தனது நடிப்பிற்காக தமிழ்நாடு, ஆந்திர மாநில அரசுகளின் சிறந்த நடிகைக்கானவிருதுகளையும், கேரள அரசின் சிறந்த குழந்தை நட்சத்திர விருதையும், பல முறை ஃபிலிம்ஃபேர் விருதினையும் பெற்றுள்ள ஸ்ரீதேவி, கலைத்துறையில் இவர் ஆற்றிய பணிக்காக 2013ஆம் ஆண்டு இந்திய அரசு பத்மஸ்ரீ  விருது வழங்கி கௌரவித்துள்ளது. என்பதும் குறிப்பிடத்தக்கது.


நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் தென்னிலங்கையில் மட்டுமல்லாது, வடக்கிலும் பெரும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கில் உள்ள பெரும்பாலான சபைகளில் எந்த ஒரு கட்சிகளும் பெரும்பான்மை பலத்தை பெற்றுக்கொள்ளாத நிலையில், தற்போது வடக்கில் பெரும் அரசியல் நெருக்கடி ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வடக்கில் உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியை கைப்பற்றும் நடவடிக்கையில், அரசியல் கட்சிகளுக்கும், சுயேட்சைக்குழுக்களும் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், வடக்கில் பூநகரி மற்றும் ஊர்காவற்றுறை தவிர்ந்த ஏனைய எந்த உள்ளூராட்சி சபையிலும், பெரும்பான்மை பலம் எந்தக் கட்சிக்கும் கிடைக்கவில்லை.

தொங்கு நிலையில் உள்ள சபைகளில் ஒன்றில் ஈ.பி.டி.பியும், இரண்டில் தமிழ் காங்கிரசும், ஏனையவற்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதிக ஆசனங்களை பெற்றுக்கொண்டுள்ளன.

இந்நிலையில், வடக்கில் உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியை கைப்பறும் நோக்கில் பல்வேறு தரப்பினர்களும் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

பெரும்பான்மை பலத்தை திரட்டுவதற்காக, இரகசிய பேரங்கள் நடத்தப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

வடக்கில் தொங்கு நிலையில் உள்ள சபைகளில் ஆட்சியை கைப்பற்ற அரசியல் கட்சிகள் களத்தில் குதித்துள்ளதால், கட்சி தாவல்கள், தீவிரமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் எந்தக் கட்சி களும் தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் (ஈ.பி. டி.பி) இணைந்து ஆட்சியமைப்பதற்கான முயற்சிகள் நடைபெறுவதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.   

வடக்கு மாகாண சபைக்கு உட்பட்ட உள்@ராட்சி சபைகளில் இரண்டு சபைகள் தவிர, ஏனைய சபைகளில் எந்தக் கட்சியும் தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற் பட்டுள்ளது.

இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்கும் முயற்சியில் தமிழ்த் தேசி யக் கூட்டமைப்புக்கு சார்புடையவர்கள் ஈடுப ட்டு வருவதாகவும் இது தொடர்பில் நேற் றையதினம் யாழ்ப்பாண வர்த்தக சங்க பிரதி நிதிகளுக்கும் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாய கம் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றதாகவும் தெரியவருகின்றது.       

28 ஆண்டுகளுக்குப் பின்னர், பொன்னாலை- பருத்தித்துறை வீதி பொதுமக்களின் போக்குவரத்துக்காக திறந்து விடப்பட்டு, நேற்று பருத்தித்துறைக்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான பேருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கிய பின்னர், பொன்னாலை- பருத்தித்துறை வீதி ஊடான போக்குவரத்து தடைப்பட்டது.

பின்னர் இராணுவ நடவடிக்கைகள் மூலம், வலி.வடக்கு பகுதி முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டு உயர்பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டது.

அண்மையில் மயிலிட்டி பகுதி விடுவிக்கப்பட்ட போதும், பொன்னாலை- பருத்தித்துறை வீதியின் சுமார் 3 கி.மீ வரையான பகுதி இராணுவக் கட்டுப்பாட்டிலேயே இருந்து வந்தது.

பரு­த்தித்­துறை -– பொன்­னாலை வீதி 28 ஆண்­டு­க­ளுக்­குப் பின்­னர் நேற்று திறந்து வைக்­கப்­ப­டுகிறது என்று அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தேர்­தல் பரப்­பு­ரைக் கூட்­டத்­தில் 
தெரி­வித்­தி­ருந்­தார்.
ஆனால் நேற்று அந்த வீதி திறந்து வைக்­கப்­ப­ட­வில்லை. இன்று காலை 8 மணிக்கே திறக்­கப்­ப­டும் என்று
தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதே­வேளை, மேற்­படி வீதி மக்­கள் பாவ­னைக்கு திறந்து விடு­வ­தற்கு கடந்த ஆண்டு ஒக்­ரோ­பர் மாதமே தயார்­ப­டுத்­தப்­பட்ட போதும் உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லுக்­காகஇழு­த­டிக்­கப்­பட்­டது என்று குற்­றம் சுமத்­தப்­ப­டு­கின்­றது.

யாழ்ப்­பா­ணத்­தில் நேற்று இடம்­பெற்ற தேர்­தல் பரப்­பு­ரைக் கூட்­டத்­தில் உரை­யாற்­றியஅரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, 1990ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21ஆம் திகதிமூடப்­பட்ட பரு­தித்­துறை – பொன்­னாலை வீதி இன்று (நேற்று) திறந்து வைக்­கப்­ப­டும்.50 கிலோ மீற்­றர் சுற்றி வந்த மக்­கள் நேர­டி­யாக இந்­தப் பாதை­யின் ஊடா­கச் செல்ல
முடி­யும் என்று குறிப்­பிட்­டார். வீதி திறக்­கப்­ப­டும் என்று நேற்று மாலை அங்கு சென்ற மக்­கள் ஏமாற்­றத்­து­டன்

திரும்­பி­னர். வீதி நாளை (இன்று) திறக்­கப்­ப­டும் என்று படை­யி­னர் தெரி­வித்து மக்­க­ளைத் திருப்பி அனுப்­பி­னர்.

வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள வயற் காணியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து பெருமளவான பழைய மற்றும் புதிய ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

வட்டுக்கோட்டையில் இருந்து யாழ்ப்பா ணம் நோக்கி செல்லும்  வீதியில் யாழ்ப்பாண தொழில்நுட்ப கல்லூரிக்கு அண்மையில் உள்ள வயற் காணியொன்றில் இருந்தே குறித்த பெருமளவான ஆயுதங்கள் மீட்கப்ப ட்டுள்ளன.

இந்நிலையில் இவ் ஆயுதங்கள் மீட்கப்பட்டமை தொடர்பாக மேலும் தெரியவருவ தாவது,

நேற்றைய தினம் மாலை குறித்த வயற் காணியில் உள்ள கிணற்றில் நீர் இறைத்துக் கொண்டிருந்த போது கிணற்று நீரானது வற்றவே கிணற்றுக்குள் இருந்த ஆயுதங்கள் வெளியே தென்பட்டுள்ளன.

இதனையடுத்து குறித்த ஆயுதங்கள் காணப்படுவது தொடர்பாக குறித்த வயற்காணிக் குரியவர் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் வழங்கியிருந்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினருக்கும் தகவல் வழங்கியிருந்தனர்.

இதன்படி பொலிஸார் மற்றும் விஷேட அதிரடிப் படையினர் இணைந்து கிணற்றுக்குள் காணப்பட்ட ஆயுதங்களை மீட்டிருந்தனர். 

இவற்றில் ரி.56 துப்பாக்கிக்கு பயன் படும் ரவைகள் ஒரு தொகையும் அவற்றோடு 60 மில்லி மீற்றர் நீளமான மோட்டார் குண்டுகள் சிலவும், ஆர்.பி.ஜீ குண்டு ஒன் றும் மற்றும் ரொக்கட் லோன்ஜர் வகை சார் ந்த குண்டுகளும் மீட்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட ஆயுதங்களில் பல பழையதாக காணப்பட்டதாகவும் சில ஆயுதங்கள் புதிய ஆயுதங்கள் போல காணப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டிருந்தனர். 

மேலும் மீட்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பாகவும், அவை எக் காலத்திற்குரியது, யாரால் பயன்படுத்தப்ப ட்டது என்பது தொடர்பான விரிவான விசார ணைகள் இடம் பெற்று வருவதாகவும் வட்டுக் கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.


உலகத் தமிழ்ப் பண்பாட்டு 
இயக்கத்தின் எச்சரிக்கை

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் பெயரையும் அதன் சின்னத்தையும் பயன்படுத்தி எதிர்வரும் டிசம்பர் மாதம் யாழ்ப்பாணத்தில் தமிழ் மாநாடு ஒன்றினை நடத்தச் சிலர் முயன்று வருவதாக கனடாவிலுள்ள தலைமையகத்திற்கு தெரியவந்துள்ளது. இதன் பின்னணியில் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் விதிமுறைகளை மீறிச் செயற்பட்டமைக்காக அந்த இயக்கத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்ட சிலர் முயற்சி செய்து வருவதாகவும் அறிய முடிந்துள்ளது.

இவ்வாறு எவராவது உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் பெயரையோ அல்லது சின்னத்தையோ தவறாகப் பயன்படுத்தி செயற்படுவார்களேயானால் அவர்களுக்கு எதிராக கனடாவிலும், இலங்கையிலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இயக்கத்தின் ஜேர்மன் நாட்டுக் கிளையின் தலைவரும், இயக்கத்தின் சர்வதேச ஒருங்கிணைப்பாளருமான திரு. இ. இராஜசூரியர் மிகவும் கண்டிப்பாகத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த இயக்கத்தின் மாநாடு எனக்கூறி இலங்கையில் அல்லது சர்வதேசத்தில் நிதி வசூலிக்கும் செயற்பாடுகளிலும் இவர்கள் ஈடுபட்டள்ளதால் கொடை வள்ளல்களை எச்சரிக்கையாக இருக்குமாறும் திரு. இ.இராஜசூரியர் தெரிவித்துள்ளார். உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் 13 ஆவது சர்வதேச மாநாடு யாழ்ப்பாணத்தில் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்துடன் இணைந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் மிகவும் சிறப்பாக பல்கலைக்கழக மண்டபத்திலும், ரில்கோ ஹோட்டலிலும் நடைபெற்றமையை சகலரும் அறிவர். 

இயக்கத்தின் பெயரையோ இலச்சினையையோ தவறாகப் பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகவே கருதப்படும்.
எனவே தவறிழைத்தமைக்காக தண்டிக்கப்பட்ட சிலரும், பதவிகளுக்காக முண்டியடிக்கும் சிலரும், பணத்தைச் சூறையாட முயலும் சிலரும் கூடி விளையாட முற்பட்டுள்ளதாகவே கருத வேண்எயுள்ளது. 

எனவே இந்தக் கூட்டத்தினருக்கு இலங்கை வாழ் தமிழ் மக்கள் எவ்வகையிலும் அனுமதிக்கக் கூடாது எனவும் திரு. இ. இராஜசூரியர் தெரிவித்துள்ளார். எமது எச்சரிக்கையை மீறியும் இவர்கள் செயற்படுவார்களேயானால் இலங்கையில் இவர்களுக்கும், இவர்களுக்குத் துணை போவோருக்கும்  எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் திரு. இ. இராஜசூரியர் மிகவும் கண்டிப்பாகத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த இயக்கத்திற்கென இலங்கையில் ஒரு கிளை உள்ளதாகவும் அவர்களே அங்கு அங்கீகாரம் பெற்ற அமைப்பாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள  திரு. இ. இராஜசூரியர் அந்த அமைப்பிற்கும் இந்த மாநாட்டிற்கும் எவ்விதமான தொடர்பும் கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.

தகவல்-  இராஜசூரியர்

தமிழர் தலைவன் அமிர்தலிங்கம் அவா்களுக்கு  சிலை

 வலி மேற்கு சுழிபுரம் பிரதேச சபைக்கு முன்பாக ஒரு தமிழ்மகன் சிலையாக கம்பீரமாக நிற்கிறார்!!. 

1977 இல் இலங்கையின் முதல் தமிழ் எதிர்கட்சித்தலைவரான இவருக்கு அவர் பிறந்தமண்ணில்  சிலை நிறுவிவருகின்றார்கள்.


அமிர்தலிங்கம் - ஒரு அறிமுகம் 

அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம்  இலங்கையின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவருமாவார். இவர் இறப்பின் போது தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவராகவும் செயற்பட்டு வந்தார்.

1977 ஆண்டின் பொதுத்தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி நாடாளுமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக ஆனதைத் தொடர்ந்து, இலங்கையின் நாடாளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவராக பதவியேற்றார். இலங்கை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வகித்த முதல்த் தமிழர் அமிர்தலிங்கம் ஆவார்.


இவர் "தமிழனுக்குச் சுயநிர்ணய உரிமை வேண்டும்" என்ற தலைப்பில் 'சுதந்திரனி' ல் எழுதிய (29.09.48) அரசியல் கட்டுரைமூலம் திரு. எஸ். ஜே. வி. செல்வநாயகம் அவர்களின் கவனத்தை ஈர்த்து அரசியலில் தளம் பதித்த திரு அ.அமிர்தலிங்கத்தின் 40 ஆண்டுகால அரசியல் வாழ்வு, ஈழத்தமிழர் அரசியல் வாழ்விலே பின்னிப் பினைந்தது. தமிழ்ப் பிரதேசங்களின் மூலைமுடுக்கெல்லாம் அவர் பயணித்திருக்கிறார். பொதுமேடைகளே அரசியல் போதனையின் களமாக அமைந்த நிலையினால் அமிர்தலிங்கத்தின் பொருள் பொதிந்த பேச்சுக்கள் அவரை தமிழ் மக்களின் தன்னிகரற்ற தலைவனாக நிலைநிறுத்தின.

ஈழத்தமிழ்ர் பிரச்சனை இந்தியாவின் அனுசரணையுடன்தான் தீர்க்கப்படமுடியும் என்பது அமிர்தலிங்கம் அவர்களின் அரசியல் சிந்தனையாக இருந்தது. தமிழகத் தலைவர்களுடனும் மத்திய அரசுடனும் தொடர்ந்து ஈழத்தமிழர்களின் போராட்ட நியாயங்களை ஆணித்தரமாகவும், அவர்கள் அதனைப் புரணமாக ஏற்றுக்கொள்ளும் பாங்குடனும் எடுத்துரைத்திருக்கிறார். ஈழத்தமிழ்ர் பிரச்சனையை சர்வதேச சமுகத்தின் முன்வைக்கும் பொறுப்பினை அவர் வெற்றிகரமாக சாதித்திருக்கிறார். பத்திரிகையாளர்களுடன் அவர் என்றும் அணுகுவதற்கு எளியவராக - இனியவராக இருந்திருக்கிறார்.


இலங்கையில் , வெளிநாடுகளில்

செய்தியாளர்கள்

பண்ணாகம் இணையம்  2016ம் ஆண்டு தனது 10வது அகவையில்  மேலும் பலமாற்றங்களையும், பல்துறைஅனுபவம் கொண்டவர்களை இணைத்தும் ஒரு பாரியமாற்றத்தை ஏற்படுத்த முனைகிறது. இதன் காரணமாக அனைத்து  இடங்களின்   செய்தியாளர்களை  இணைக்கின்றது  செய்தியாளர்களாக பதிவு செய்ய விருப்பம் உள்ளவர்கள் தாம் எந்தெந்த இடங்களில்களில், நாடுகளில்  செய்தியாளராக கடமையாற்ற முடியும் என்ற விபரத்துடன் தமது சுயவிபரங்களுடன் தமது தற்போதய  புகைப்படம் ஒன்றையும் அனுப்பிவைப்பதுடன்  பின்வரும் விடயங்களைக் கவனத்தில் கொள்வது அவசியமாகிறது.

1) செய்தியாளர் இலங்கையில் / வெளிநாட்டில் வாழ்பவராக இருத்தல் வேண்டும்.(தேவையற்றதை நீக்கவும்)

2) செய்திகளை கனனி மூலம் தமிழில்   எழுதி,  மின்னஞ்சல் ஊடாக எமது இணையத்திற்கு அனுப்பவேண்டும். அவர்களுக்கு சொந்தமாக  E.mail Adderss இருக்கவேண்டும்.

3) செய்திளுக்குரிய  படங்களும் எடுக்கும் ஆற்றல் உள்ளவராக இருத்தால் நன்று

4) செய்தியின்  உறுதிப்பாட்டிற்கு   செய்தியாளரே பொறுப்பு வாய்ந்தவராக இருக்கவேண்டும்.

5)செய்தியாளராக முன்அனுபவம் உள்ளவர்களும்,ஆர்வமுள்ள புதியவர்களும் வின்னப்பிக்கலாம்:        செய்திப்பிரிவு   E.mail .-    [email protected]                        நிர்வாகம்    - [email protected]


  விண்ணப்பப் படிவம்-3

 செய்தியாளர் விண்ணப்பம்.   

பெயர் :- ……………………………………………………………………………………..
Name-………………………………………………………………………………………..
 முகவரி,Adderss:-(ஆங்கிலத்தில்)………………………………………………………………………………..
                                     ………………………………………………………………................. 
                                     ………………………………………………………………………………………
                                     ……………………………………………………………………………………….
பிறந்த திகதி:- …………………………………………………………………..................

திருமணமானவரா?:...      ஆம் / இல்லை

தொலைபேசி …………………………………    E-mail  ……………………………......  viber...................................................


கல்வித்தகமைகள்:.......................................................................

எந்த இடங்களில் செய்திகளைப் பெறமுடியும்.--------------------------------------------------------------


வேறு விசேஷ தகமைகள்: ............................................................

தற்போதய தொழில் : ...............................................................................................................

பண்ணாகம் இணையத்தின் செய்தியாளராக  இணைய எனது விருப்பத்தை இத்தால் தெரிவிக்கின்றேன்.

திகதி ,இடம்……………………….                       ……………………………………
                                                                                               விண்ணப்பதாரி கையொப்பம்

  ( புதியவர்கள் மாதிரிச் செய்தி ஒன்றை எழுதி விண்ணப்பத்துடன் அனுப்பவும்.)

பண்ணாகம் இணைய நிர்வாம், யேர்மனி 

 21.6.2012


எமது இணையத்தில் உள்ள CONTACT US  என்னும் பட்டனை அழுத்தி  அதன் மூலமும் பதிவுகளை அனுப்பலாம். 

 இலங்கையில் , வெளிநாடுகளில்

செய்தியாளர்கள்

தேவை

பண்ணாகம் இணையம்  2013 ம் ஆண்டு தனது 7வது அகவையில்  மேலும் பலமாற்றங்களையும், பல்துறைஅனுபவம் கொண்டவர்களை இணைத்தும் ஒரு பாரியமாற்றத்தை ஏற்படுத்த முனைகிறது. இதன் காரணமாக அனைத்து  இடங்களின்   செய்தியாளர் தேவை

செய்தியாளர்களாக பதிவு செய்ய விருப்பம் உள்ளவர்கள் தாம் எந்தெந்த இடங்களில்களில்,நாடுகயில்  செய்தியாளராக கடமையாற்ற முடியும் என்ற விபரத்துடன் தமது சுயவிபரங்களுடன் தமது புபை்படம் ஒன்றையும் அனுப்பிவைப்பதுடன்  பின்வரும் விடயங்களைக் கவனத்தில் கொள்வது அவசியமாகிறது.

 1) செய்தியாளர் இலங்கையில் / வெளிநாட்டில் வாழ்பவராக இருத்தல் வேண்டும்.(தேவையற்றதை நீக்கவும்)

2) செய்திகளை கனனி மூலம் எழுதி,  மின்னஞ்சல் ஊடாக எமது இணையத்திற்கு அனுப்பவேண்டும். அவர்களுக்கு சொந்தமாக  E.mail Adderss இருக்கவேண்டும்.

3) செய்திளுக்குரிய  படங்களும் எடுக்கும் ஆற்றல் உள்ளவராக இருத்தல் வேண்டும்.

4) செய்தியின்  உறுதிப்பாட்டிற்கு   செய்தியாளரே பொறுப்பு வாய்ந்தவராக இருக்கவேண்டும்.

5)செய்தியாளராக முன்அனுபவம் உள்ளவர்களும்,ஆர்வமுள்ள புதியவர்களும் வின்னப்பிக்கலாம்   E.mail - [email protected]

 எமது இணையத்தில் உள்ள CONTACT US  என்னும் பட்டனை அழுத்தி  அதன் மூலமும் பதிவுகளை அனுப்பலாம்.

-

 

  விண்ணப்பப் படிவம்-3

 செய்தியாளர் விண்ணப்பம்.                                               

பெயர் :- ……………………………………………………………………………………..
Name-………………………………………………………………………………………..
 முகவரி,Adderss:-(ஆங்கிலத்தில்)………………………………………………………………………………..
                                     ……………………………………………………………….................
                                     ………………………………………………………………………………………
                                     ……………………………………………………………………………………….
பிறந்த திகதி:- …………………………………………………………………..................

திருமணமானவரா?:...      ஆம் / இல்லை

தொலைபேசி …………………………………    E-mail  ……………………………......
கல்வித்தகமைகள்:.......................................................................

வேறு விசேஷ தகமைகள்: ............................................................

தற்போதய தொழில் : ...............................................................................................................

 

  பண்ணாகம் இணையத்தின் செய்தியாளராக  இணைய எனது விருப்பத்தை இத்தால் தெரிவிக்கின்றேன்.

திகதி ,இடம்……………………….                       ……………………………………
                                                       விண்ணப்பதாரி கையொப்பம்

  ( புதியவர்கள் மாதிரிச் செய்தி ஒன்றை எழுதி விண்ணப்பத்துடன் அனுப்பவும்.)

 

 

பண்ணாகம் இணைய நிர்வாம், யேர்மனி 

 21.6.2012