WELCOME TO PANNAGAM.COM & PTV

பண்ணாகம் இணையம்

NEWS 7

நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் ஏடிஎம்களில் ஒரு நாளைக்கு 10, 000 ரூபாய் வரை எடுக்கலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமைAFPImage caption'இனி ஏடிஎம்களில் 10, 000 ரூபாய் எடுக்கலாம்'

மேலும், நடப்பு வங்கிக் கணக்கில் ( Current Account) இது வரை 50 ஆயிரம் வரை எடுக்கலாம் என்பதை வாரம் ஒன்றுக்கு ரூ.1 லட்சம் எடுக்கலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த நடைமுறை நாளை முதல் அமலுக்கு வரவுள்ளது.

ஆனால், ஒரு வாரத்தில் வங்கியில் சேமிப்புக் கணக்கில் இருந்து ( Savings Account) 24,000 ரூபாய் எடுக்கலாம் என்பது மாற்றப்படவில்லை.

முன்னதாக, கடந்த நவம்பர் 8-ஆம் தேதியன்று புழக்கத்தில் இருந்த 500 ரூபாய், ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. ஆரம்பத்தில், ஏடிஎம்களில் நாள் ஒன்றுக்கு 2000 ரூபாய் வரை எடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

பின்னர், இந்த உச்சவரம்பு, 2,500 வரை மட்டுமே எடுக்கலாம் என்று உயர்த்தப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக இந்த உச்சசவரம்பு தொகை 4,500 ரூபாயாக உயர்த்தப்பட்டது.

இந்நிலையில் இந்த உச்சவரம்பு தொகையை 10, 000 ரூபாயாக உயர்த்தி இன்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

சென்னையில்  ஜல்லிக்கட்டு குறித்து ரஜினிகாந்த் ஏன் மவுனமாக உள்ளார் என்பதே பலரும் கேட்கும் கேள்வி. 

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஜல்லிக்கட்டை இந்த ஆண்டாவது நடத்தக் கோரி தமிழகத்தில் பேரணிகள் நடந்து வருகின்றன.
ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தி மாணவர்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். திரையுலக பிரபலங்களும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுக்கத் துவங்கியுள்ளனர். உலக நாயகன் கமல் ஹாஸன், சிம்பு, ஜிவி பிரகாஷ், சிவகார்த்திகேயன் ஆகியோர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். முரட்டுக்காளை படத்தில் காளையை அடக்குவதற்கு பெயர் போன காளையனாக நடித்த ரஜினி மட்டும் ஜல்லிக்கட்டு பற்றி எதுவும் பேசாமல் அமைதியாக உள்ளார். அவர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவிக்க மாட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஜேர்மனி நாட்டில் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்த ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் ரூ.2 கோடி பேரம் பேசிய அகதி ஒருவரை அந்நாட்டு பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

சிரியா நாட்டை சேர்ந்த 38 வயதான அகதி ஒருவர் ஜேர்மனியில் புகலிடம் கோரி Saarbruecken என்ற நகரில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், ஐ.எஸ் தீவிரவாதி ஒருவனை தொடர்புக்கொண்டு அகதி ஜேர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் தாக்குதல் நடத்த தயார்.

கார்களை வெடிகுண்டுகளாக மாற்றி இஸ்லாமியர்கள் இல்லாத மக்கள் மத்தியில் தாக்குதல் நடத்துவேன்.

ஆனால், இத்தாக்குதலை நடத்த தனக்கு 1,80,000 யூரோ(2,81,40,606 இலங்கை ரூபாய்) தரவேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறுஞ்செய்தி அனுப்பும் டெலிகிராம் என்ற தளம் மூலமாக அகதி தீவிரவாதியை தொடர்புக்கொண்டதால் இது பொலிசாருக்கு தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து புத்தாண்டுக்கு ஒரு நாள் முன்னதாகவே பொலிசார் அகதியை அதிரடியாக கைது செய்துள்ளனர்.

மேலும், நபர் மீது தீவிரவாத குற்றச் செயல்களுக்கான வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 19-ம் திகதி ஜேர்மனி தலைநகரான பெர்லினில் தீவிரவாதி ஒருவன் நடத்திய தாக்குதலில் 39 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுவிட்சர்லாந்தில் பிரபல ஹோட்டல் ஒன்று தீக்கரையாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Arosa நகரத்தில் உள்ள the Posthotel Holiday Villa என்ற ஹோட்டலிலே தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஹோட்டலுக்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்கள் சம்பலாகியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவயிடத்திற்கு பொலிசார், தீயணைப்பு துறையினர், மருத்துவ சேவை என அனைவரும் விரைந்துள்ளனர்.

அதிக புகை நச்சு தாக்கத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நான்கு பேர் ஹெலிகாப்டர் மூலம் Chur பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மேலும், புகையால் பாதிக்கப்பட்ட 10 பேர் அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீ விபத்தை அடுத்து ஹோட்டலில் தங்கியிருந்த 150 விருந்தினர்கள் வெளியேற்றப்பட்டு அருகில் உள்ள வேறொரு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், அப்பகுதி உள்ள மக்களை வீடுகளின் கதவு மற்றும் ஜன்னல்களை முடி வைக்குமாறு பொலிசார் வலியுறுத்தியுள்ளனர்.

தற்போது, தீயை கட்டுப்படுத்தும் பணியில் பொலிசார், தீயணைப்பு துறையினர் என 100 பேர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மீட்பு பணியில் 3 ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ரயில்வே அருகில் ஹோட்டல் அமைந்துள்ளதால் அப்பகுதியில் ரயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. எனினும், தீ எற்பட்டதற்கான காரணம் குறித்த தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை புனித பிரதேசங்களாக அறிவிக்குமாறு கோரும் தீர்மானம் ஒன்று கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

அத்துடன் மாவீரர் துயிலும் இல்லங்களை பிரதேச சபை ஊடாக சிரமதானம் செய்து புனித பிரதேசங்களாக மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இன்று கிளிநொச்சி மாவட்டச் செயலக கேட்போா் கூடத்தில் இடம்பெற்று வருகிறது.

இணைத்தலைவா்களான வடமாகாண முதலமைச்சா் சிவி. விக்கினேஸ்வரன், இராஜாங்க அமைச்சா் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினா்களான சி.சிறிதரன், அங்கஜன் இராமநாதன் ஆகியோரின் தலைமையில் இடம்பெற்று வருகின்றது.

இதன்போது காணிகள் சுவிகரிப்பு அதிகரித்துள்ளதாக வடமாகாண முதலமைச்சா் சிவி. விக்கினேஸ்வரன் தனது அறிமுக உரையில் தெரிவித்தார்.

இந்நிலையில் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை புனித பிரதேசங்களாக அறிவிக்குமாறு கிராமிய அபிவிருத்தி தலைவர் கோரிக்கை விடுத்தார்.

இந்த கோரிக்கையை விவசாய சங்கத்தினர் வழிமொழிந்த நிலையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.