WELCOME TO PANNAGAM.COM & PTV

பண்ணாகம் இணையம்

NEWS -8

ஒட்டகப்பாலில் இருந்து தயாரிக்கப்பட்ட குழந்தைகளுக்கான பால்மா விற்பனைக்கு வந்துள்ளது.

துபாயில் இந்த வருடத்திற்கான உணவு கண்காட்சி கடந்த 18 ஆம் திகதி ஆரம்பமாகி எதிர்வரும் 22 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்த கண்காட்சியில் ஒரு வயது முதல் மூன்று வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடிய வகையில் ஒட்டகப்பாலில் தயாரிக்கப்பட்ட பால்மா ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

'கேமலிசியஸ்' என பெயரிடப்பட்டுள்ள இந்த பால்மாவில் பசும்பாலில் உள்ளதை விட அதிக வைட்டமின் சி உள்ளதாக விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

ஒட்டகப்பால் ஏற்கனவே பல இடங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகின்ற நிலையில் ஒட்டகப்பாலில் இருந்து தயாரிக்கப்பட்ட முதல் பால்மா என்ற பெருமையை இந்த கேமலிசியஸ் பால்மா பெற்றுள்ளது.

மேலும் இந்த பால்மா துபாயில் விற்பனைக்கு வந்துள்ள நிலையில் அடுத்த கட்டமாக ஆசியா ஆப்ரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் விற்பனை செய்ய கேமலிசியஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாண மாநகரசபைத் தேர்தலில், 16 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மாநகர முதல்வராக இம்மானுவல் ஆர்னோல்ட்டைத் தெரிவு செய்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை தமிழ் அரசுக் கட்சி தலைமையகத்தில் இன்று நடந்த கூட்டத்திலேயே ஆர்னோல்ட், யாழ். மாநகர முதல்வராகத் தெரிவு செய்யப்பட்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரின் முன்னிலையில் இந்தத் தெரிவு இடம்பெற்றது.

யாழ். மாநகரசபைக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் அனைவரும் இந்தக் கூட்டத்தில், பங்கேற்றனர் என்றும், இதில், ஆர்னோல்ட் மாநகர முதல்வர் பதவிக்கு ஒருமனதாகத் தெரிவு செய்யப்பட்டார் என்றும் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் அறிவித்துள்ளார்.

அதேவேளை, யாழ். மாநகர பிரதி முதல்வராக ஈசன் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்றும் அவர் கூறினார்.

எனினும், 45 பேர் கொண்ட யாழ்ப்பாண மாநகரசபையில், ஆர்னோல்ட் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறிலங்காவில் அரசியல் உறுதித்தன்மையில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதால், அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

உள்ளூராட்சித் தேர்தலை ஒட்டிய அரசியல் குழப்பங்கள், சிறிலங்காவின் அரசியலில் உறுதியற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது. இது நாட்டின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.

இதனால் அரசாங்க பங்கு சந்தையில் இருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேறத் தொடங்கியுள்ளனர்.

அத்துடன், அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பும் சரியத் தொடங்கியுள்ளது.

கடந்த வாரத்தின் இறுதி வேலை நாளான, பெப்ரவரி 2ஆம் நாள், அமெரிக்க டொலர் ஒன்றின் மதிப்பு, 155.94 ரூபாவாக இருந்தது.

சுதந்திர நாள் விடுமுறைகளுக்குப் பின் நேற்று வங்கிகள் திறக்கப்பட்ட போது, அமெரிக்க டொலர் ஒன்றுக்கான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு, 156.13 ரூபாவாக வீழ்ச்சியடைந்துள்ளது.

அண்மைய நாட்களாக சிறிலங்கா ரூபாவின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நாமறிந்தவரை நாடறியச்செய்வோம் !!!

ஒரு மனிதன் தன் வாழ்நாளில் பெரும்பகுதியை தன் வாழ்வியலுக்காகவும், வாழ்வாதாரத்துக்கும் செலவாக்கிட, பொதுநலம் சார்ந்து ..தன்னாலானதை சமூகத்துக்கும்,கலைகளுக்கும்,பொதுப்பணிக்கும் செலவிடுகிறான். எழுத்தாளர்களாக,கலைஞர்களாக,ஆன்மீகத் தொண்டர்களாக,கவிஞர்களாக நாட்டுப்பற்றாளர்களாக.....
ஆங்காங்கே வாழும் இவ்வாறான மனிதர்களால்தான் உலகமே சுழன்றுகொண்டிருக்கிறது.

இவர்களின் உழைப்பு,பணி என்பன காலக்கிரமத்தில் காணாமலோ,மறந்தோ,மறைக்கப்பட்டோ போய்விடுகின்றன.குறிப்பாக புலம் பெயர் தேசங்களில், இவ்வாறு காணாமல் போனவர்கள் பல ஆயிரம் பேர்.இவர்களைப்பற்றிய சிறு சிறு குறிப்பாதல் அடுத்த சந்ததிக்குத் தெரியப்ப்டுத்தப்படல் வேண்டும்.இப்பணியில் சிலர் ஈடுபட்டிருந்தாலும்,எல்லோரையும் எல்லோருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.கடந்த 38 ஆண்டுகளாக நாமறிந்த பலரை தமிழருவி பத்திரிகை ஊடாக வெளியுலகுக்குக் காட்டியிருநந்தாலும் அனைவரும் அதற்குள் சங்கமிக்கவில்லை.காலவெளியில் பலர் உருவாகியிருக்கிறார்கள்.அவர்களையும் உள்வாங்கி ...இலக்கியச்சோலைக்கூடாக புலம்பெயர் வாழ்வியல் வரலாற்றில் சிறு பதிவிடல் முயற்சி.நூலாக்கவும் அதன் உயற்சி உங்கள் வாழ்த்துக்களோடு.இம்முயற்சிக்கு உறுதுணையாக, அவைத்திலகம் பாலா, பண்ணாகம் டொட் கொம் அதிபர் ஊடகவித்தகர்  இக.கிருஷ்ணமூர்த்தி,ஆசிரியை திருமதி.சசிகலா விஜயன் அவர்களும் கரம் கோர்த்திருப்பது மட்டற்ற மகிழ்ச்சி.இணைந்து பயணிப்போம்.

தமிழ்வேள்- நயினை விஜயன்
--------------------------------