WELCOME TO PANNAGAM.COM & PTV

பண்ணாகம் இணையம்

கல்வி, கலைகளில் தேர்ச்சி, ஞானம், நினைவாற்றல் போன்றவை வேண்டி கலைமகளை பிரார்த்திக்கும் திருநாளாக இன்றைய தினத்தை வாணி விழாவாக இந்துக்கள் அனுஷ்டிக்கின்றனர். கல்வியும் நாம் செய்யும் தொழிலுமே நம்மை வாழ வைக்கும் தெய்வங்கள் என்பதை உணர்ந்து அவற்றையும் கடவுளாக கருதி வழிபடுவதே இதன் ஐதீகம்.


நவராத்திரி விழாவில் அனுஷ்டிக்கப்படும் சரஸ்வதி பூஜையின் (மூன்று தினங்கள்) இறுதித் தினம் இன்றாகும்.இன்று சரஸ்வதி பூசையைத் தொடர்ந்து நாளை விஜயதசமி கொண்டாடப்படும்.

கல்விக்கு உரிய சரஸ்வதி தேவியையும், செல்வத்துக்கு உரிய லட்சுமி தேவியையும், வீரத்துக்கு உரிய சக்தியையும் போற்றி வணங்கும் பண்டிகையாக பக்திப் பெருக்குடனும் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகிறது.

முப்பெருந்தேவியரையும் 9 நாட்கள் வழிபடுவதே நவராத்திரி. முதல் 3 நாட்கள் சக்திக்கு உரியதாகவும், அடுத்த 3 நாட்கள் லட்சுமி தேவிக்கு உரியதாகவும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதி தேவிக்கு உரியதாகவும் கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது.

கல்வி, கலைகளில் தேர்ச்சி, ஞானம், நினைவாற்றல் போன்றவை வேண்டி கலைமகளை பிரார்த்திக்கும் திருநாளாக இன்றைய தினத்தை வாணி விழாவாக இந்துக்கள் அனுஷ்டிக்கின்றனர். கல்வியும் நாம் செய்யும் தொழிலுமே நம்மை வாழ வைக்கும் தெய்வங்கள் என்பதை உணர்ந்து அவற்றையும் கடவுளாக கருதி வழிபடுவதே இதன் ஐதீகம்.

ஆயுதம் என்பதன் உண்மையான பயனை உணர்த்தத்தான் நவராத்திரியின் மறுநாள் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது உயிர்ப்பொருள்கள், உயிரற்றப் பொருட்கள் அனைத்திலும் நீக்கமற இறைபொருள் உறைந்துள்ளது.

வாழ்வில் நம் உயர்வுக்கு உதவும் ஆயுதங்களை போற்றும் விதம் அவற்றையும் இறைபொருளாகப் பாவித்து வணங்குவதே ஆயுதபூஜை எனச் சொல்லலாம். இதுவரை தொழில் சிறப்பாக நடந்ததற்கு கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் இனி சிறப்பாக நடப்பதற்கு அருள் வேண்டும் வகையிலும் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.

நமது பணி, தொழில், வியாபாரத்துக்கு உதவும் கருவிகள், இயந்திரங்கள், புத்தகங்கள் போன்றவற்றுக்கு சந்தனம், குங்குமம் வைத்து, மாலையிட்டு அலுவலகங்களில் பூஜைகள் நடத்தப்படும். தொழிலையும் தொழிலாளர்களையும் போற்றும் இப்பண்டிகை காலம் காலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நாளை விஜயதசமி பண்டிகை கொண்டாடப்படுகிறது. கல்வி, கலைகள் என இந்நாளில் எது தொடங்கினாலும் வெற்றியாக முடியும் என்பது நம்பிக்கை. மழலைக் குழந்தைகளை பாடசாலையில் சேர்ப்பதற்கும் பாட்டு, இசைக் கருவிகள் பயிற்சி, நடன பயிற்சி, பிறமொழி பயிற்சி, புதிதாக ஒரு தொழிலை கற்றுக் கொள்வது ஆகியவற்றை இந்த நாளில் தொடங்கினால் சரஸ்வதி தேவியின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும்.

அன்றைய தினம் குழந்தைகளின் கை பிடித்து, பரப்பி வைத்திருக்கும் நெல்லில் ‘அ' என்று எழுத கற்றுக் கொடுப்பது ‘வித்யாரம்பம்' எனப்படுகிறது. இதன் மூலம் குழந்தைகளின் கல்விவளம் பெருகும் என்பது ஐதீகம்.

தீயவை அழிந்து நல்லவை வெற்றி பெற்ற நாளாக நாளைய விஜயதசமி கொண்டாடப்படுகிறது. மகிஷாசுரனை அழிக்க தேவியானவள் துர்க்கை வடிவம் எடுத்தாள். 9 நாட்கள் நீடித்த போர், விஜயதசமியன்று முடிவுக்கு வந்தது. தீய சக்தியான மகிஷாசுரனை துர்க்கா தேவி வதம் செய்தாள். நல்ல சக்தியின் வெற்றி திருவிழாவாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது என்கின்றன புராணங்கள். 



நவராத்திரியில்    குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு நிச்சயம் குழந்தை பாக்கியம் கிட்டும்.படிப்பில் மந்தமாக இருப்பவர்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதால், உயர்ந்த நிலையை அடையலாம்



நவராத்திரியின் ஒன்பது நாட்களும் விரதம் இருப்பவர்கள், உபவாசியாக இருந்து பூஜித்த பிறகே உணவருந்தி பஞ்சனை மற்றும் பாயில் படுக்காமல் தரையில் விரிப்புகளில் படுக்க வேண்டும். பிரதமைத் திதியில் ஹஸ்த நட்சத்திரம் கூடுமானால் அது உன்னதமான நாளாகும். அந்த நாளில் தேவி தன்னைப் பூஜித்தவருக்கு வேண்டியவற்றையெல்லாம் கொடுப்பாள் என்று சொல்வார்கள்.

நவராத்திரி வழிபாடு சக்தி மகிமையை விளக்கும் மனிதனின் முக்கிய தேவைகளான கல்வி, செல்வம், வீரம் இம்மூன்றையும் வேண்டி அவற்றுக்கு அதிபதிகளான சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை என்று மூன்று சக்தி அம்சங்களையும் வழிபடுதலே இவ்விரதத்தின் நோக்கமாகும்.

முதல் மூன்று நாட்களில் வீரத்தையும், தைரியத்தையும் வேண்டி பராசக்தியை வழிபடுதல் வேண்டும். அடுத்த மூன்று நாட்களும் செல்வத்தை வேண்டி மஹாலட்சுமியை வழிபடவேண்டும். இறுதி மூன்று நாட்களும் கல்வி, அறிவு, சகல கலை ஞானங்கள் என்பவற்றை வேண்டிச் சரஸ்வதி தேவியை வழிபட வேண்டும்.

சுமங்கலிப் பெண்களை இவ்விரத நாட்களில் வீட்டுக்கு அழைத்து அவர்களைப் பராசக்தியாகப் பாவித்துக் கொலுவின் அருகில் அமரச் செய்து வணங்கி மஞ்சள், குங்குமம், பட்டு, நாணயம், தாம்பூலம் என்பவற்றை வழங்குவர்.

நவராத்திரி காலத்தில் எண்ணெய் தேய்த்து முழுகுதல் விலக்கப்பட்டுள்ளது. ஊசிநூல்கொண்டு தைத்தலும் கூடாது. புரட்டாசி சனி விரதம் இந்த நவராத்திரி நாட்களில் வரும்போது எண்ணெய் தேய்க்காது நீராடி அந்த விரதத்தை யும் கைகொள்ளலாம். எண்ணெய் எரித்து வழிபடுதலும் செய்யலாம்.

நவராத்திரி விரதத்தை முறையாகக் கைக்கொள்ள விரும்புவோர் முதலெட்டு நாட்களிலும் பகலில் உணவின்றி இரவில் பூஜை முடித்தபின் பால்பழம், பலகாரம் என்பவற்றை உண்டு, நவமியில் உபவாசமிருந்து பத்தாம் நாள் விஜயதசமியன்று காலை எட்டரை மணிக்கு முன் பாரணை செய்தல் வேண்டும். முடியாதவர்கள் முதலெட்டு நாளிலும் ஒரு நேர உணவுண்டு, கடைசி நாளில் பால் பழம் மட்டும் கொள்ளலாம்.

நவராத்திரி விரதத்தைப் போன்று எளிமையானதும் அதேநேரம் மிகுந்த பலன்களைத் தரக்கூடியதுமான வேறு விரதங்கள் இல்லை என்கின்றன புராணங்கள். தனம், தானியம், நிலையான இன்பம், நீண்ட ஆயுள், ஆரோக்கியம், ஸ்வர்க்கம், மோட்சம் என ஒரு மனிதனுக்கு வேண்டிய அனைத்தையும் தரக்கூடிய விரதம் நவராத்திரி விரதம்.

குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கு நிச்சயம் குழந்தை பாக்கியம் கிட்டும்.படிப்பில் மந்தமாக இருப்பவர்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பதால், உயர்ந்த நிலையை அடையலாம். ஒன்பது நாட்களும் வழிபட இயலாதவர்கள் அஷ்டமியன்று துர்கையை வழிபட்டு அன்று இரவு விழித்திருந்தால், அவர்களின் வாழ்க்கையை துர்காதேவியானவள் கண்விழித்துக் காப்பாள்.

அதேபோன்று, மூல நட்சத்திரம் அல்லது நவமியன்று நாம் அன்றாடம் வேலைக்கு உபயோகப்படுத்தும் பொருட்களையும், குழந்தைகளின் புத்தகங்களையும் பூஜையில் வைத்து வழிபட்டு, அன்று அவற்றைப் பயன்படுத்தாமல், அடுத்த நாள் விஜயதசமியன்று அந்தப் பொருட்களை கண்டிப்பாக பயன்படுத்துதல் சிறப்பு.
உங்கள் பக்கம்

 பத்திரிகைக்கு  நிதி அன்பளிப்பு
பண்ணாகம் ஸ்ரீ முருகன் சனசமூக சேவா வாலிபர் சங்க நுால் நிலையத்திற்கு 6 மாதத்திற்கு 6 வகை தினசரிப் பத்திரிகை வழங்க யேர்மனி  நிதி அன்பளிப்பு.   

யேர்மனியில் இயங்கும் பண்ணாகம் இணையத்தளத்திற்கு ஸ்ரீ முருகன் சனசமூக சேவா வாலிபர் சங்கத்தினர்   அனுப்பிவைத்த 80 வது ஆண்டுவிழா மலரை மக்களுக்கு வழங்கிய போது  சிலா் சிறு தொகைப்பணத்தைச் செலுத்தி மலரைப் பெற்றுக்கொண்டார்கள். அப்படி கிடைத்த பணத்தை  பண்ணாகம் ஸ்ரீ முருகன் சனசமூக சேவா வாலிபர் சங்க நுால் நிலையத்திற்கு 6 மாதத்திற்கு 6 வகை தினசரிப் பத்திரிகை வழங்க பண்ணாகம் இணையத்தளம் தங்கள் நிதியுடன் நுால் நிலையத்திற்கு   அன்பளிப்பு  செய்கிறார்கள். 80 வது ஆண்டு விழா மலரை உருவாக்க  பண்ணாகம் இணையம் நிதி வழங்கி சங்கத்தினருக்கு  ஊக்கமளித்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது நுால் நிலையத்திற்கு 6 பத்திரிகைகளான  உதயன்,  வலம்புரி , தினகரன்  ,வீரகேசரி , தினக்குரல் , மெட்ரோ  ஆகிய நாளாந்த பத்திரிகைகளை 6 மாதகாலம் வழங்குவதற்கான நிதி வழங்கப்படுகிறது.

யேர்மனியில் சங்கத்தின்  80 வது  ஆண்டு மலரைப்பெற்றவர்களில் சிலர்  தாங்களாகவே  முன்வந்து  அன்பளிப்பு வழங்கியவர்களை பாராட்டுகின்றோம்.  சிறு துளி பெருவெள்ளமாகிறது.
1. திருமதி. சர்வாஜினிதேவி கிருஷ்ணமூர்த்தி   [பண்ணாகம் இணையத்தளம் -யேர்மனி] 
2. திருமதி. மங்களராணி  கருணீஸ்வரன்  [யேர்மனி - சோலிங்கன்.]
3.திரு. நடராசா சிறிகாந்தன்  [யேர்மனி  - பொண்]
4.திரு.எதிர்வீரசிங்கம் குபேந்திரன்   [யேர்மனி - சோலிங்கன்.]
5.திரு. கைலாயபிள்ளை  இரத்தினவேல்  [யேர்மனி - முன்சர்.]
6.திரு.மாணிக்கவாசகர்  கிருஷ்ணன்  [யேர்மனி - எசன்.]
இவர்களுக்கு  எமது நன்றிகள்

வீரமக்கள் தினம் 2017

(ஆடி மாதம் 13 தொடக்கம் 16 வரை)


வீரமக்கள் தினத்தை முன்னிட்டு வட்டுக்கோட்டை கழக தோழர்களால் பின்வரும் நிகழ்வுகளை நடத்துவது எனதீர்மானிக்கப்பட்டு அதற்கு செலவாகும் நிதி தொடர்பான உத்தேச மதிப்பிட்டுவிபரம்.



1. பொதுஅறிவுப் போட்டி

வட்டுக்கோட்டைதொகுதியில் உள்ளஅனைத்து பாடசாலை மாணவர்களையும் ஒன்றினைத்து பாடசாலைக்கு அருகில் உள்ள 10பெதுமண்டபங்களில்; போட்டிகளை நடத்துதல்.


முதல் பரிசு 3000.00

இரண்டாம் பரிசு 2000.00

மூன்றாம்  பரிசு 1000.00

ஏனைய ஏற்பாட்டு செலவு 30000.00


2. மரதன் ஒட்டப்பேட்டி

சுழிபுரம் பிரதானசந்தியில் ஆரம்பமாகி சித்தங்கேணி ஊடாக மாவடிச் சந்தி ஊடாக பொன்னாலை சந்தி ஊடாக மீண்டும் சுழிபுரம் பிரதானசந்தியை வந்தடைதல்.

முதல் பரிசு 5000.00

இரண்டாம் பரிசு 3000.00

மூன்றாம்  பரிசு 2000.00

ஏனைய ஏற்பாட்டு செலவு 20000.00

3. சைக்கிள் ஒட்டப்பேட்டி

சுழிபுரம் பிரதான சந்தியில் ஆரம்பமாகி சித்தங்கேனிஇமாவடிச் சந்தி ஊடாக அராலி ஊடாக வட்டுக்கோட்டைச் சந்தி ஊடாக பொன்னாலை சந்தி வந்து மீண்டும் சுழிபுரம் பிரதான சந்தியை வந்தடைதல்.

முதல் பரிசு (புதியசைக்கிள்) 12000.00

இரண்டாம் பரிசு 5000.00

மூன்றாம்  பரிசு 3000.00

ஏனைய ஏற்பாட்டு செலவு 30000.00



4. துடுப்பாடப்  பேட்டி


வட்க்கோட்டை தொகுதியில் உள்ள அனைத்து அணிகளுக்கும் இடையில் 8 வீரர்கள் 5 பந்துபரிமாற்றங்களைகொண்டமுழெஉம-ழுரவ போட்டியாக யாழ்ப்பாண கல்லுரி மைதானத்தில் நடத்துதல்.



முதல் பரிசு 5000.00

இரண்டாம் பரிசு 3000.00

மூன்றாம்  பரிசு 2000.00

ஏனைய ஏற்பாட்டு செலவு 40000.00


5. உதைபந்தாட்டப் பேட்டி

வட்க்கோட்டை தொகுதியில் உள்ள அனைத்து அணிகளுக்கும் இடையில் ஒருபக்கம் 10 நிமிடங்களைகொண்ட போட்டியாக யாழ்ப்பாணகல்லுரிமைதானத்தில் நடத்துதல்.

முதல் பரிசு 5000.00

இரண்டாம் பரிசு 3000.00

மூன்றாம்  பரிசு 2000.00

ஏனைய ஏற்பாட்டு செலவு 30000.00


6. பேச்சுப் பேட்டி

ஆரம்பநிலைஇ இடைநிலைஇ மற்றும் முது நிலை என பாடசாலையில் கல்விகற்கும் மாணவர்களுக்கு இடையில் ஒருபொது மண்டபத்தில் பேட்டிகளைநடத்துதல்.


  ஆரம்பநிலை   இடைநிலை முதுநிலை


முதல் பரிசு 3000.00 3000.00  3000.00

இரண்டாம் பரிசு 2000.00 2000.00  2000.00

மூன்றாம்  பரிசு 1000.00 1000.00  1000.00


ஏனைய ஏற்பாட்டு செலவு    50000.00


7.வறுமை கேட்டிற்குஉட்பட்டமாணவர்களுக்குசைக்கிள் வழங்கல்

வட்க்கோட்டை தொகுதியில் உள்ளபெற்றோரை இழந்த அல்லது வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட கல்வியில் ஊக்கம் உள்ள இரண்டு மாணவர்களுக்கு சைக்கிள் வழங்குதல்.


5ஒ12000 ஸ்ரீ 60000.00








8.வறுமை கேட்டிற்குஉட்பட்டமாணவர்களுக்குகெப்பிவழங்கல்

வட்டுக்கோட்டை தொகுதியில் உள்ளவறுமைக் கோட்டிற்கு உட்பட்ட கல்வியில் ஊக்கம் உள்ள 250 முன்பள்ளிமாணவர்களுக்கு 150ரூபா பெறுமதியான கற்றல் ஊக்கிவிப்பு பொதி வழங்குதல்.


300ஒ200 ஸ்ரீ 60000.00


9.மரம் நடுகைசெய்தல்

வட்டுக்கோட்டை தொகுதியில் உள்ள பொது அமைப்புக்களின் நிலையங்களில் 100 மரக்கன்றுகளை நாட்டுதல்


100ஒ1000ஸ்ரீ100000



10.இரத்ததானம் வழங்குதல்

தொகுதியில் உள்ள பொது அமைப்புக்களின் அனுசரனையில் மாபெரும் இரத்ததான நிகழ்வை நடத்துதல்.


ஏற்பாட்டு செலவு 50000.00


11.இறுதி நாள் நிகழ்வுகள்

1. மங்கல விளக்கு ஏற்றுதல்

2. இறை வணக்கம்

3. குழக கீதம் இசைத்தல்

4. மௌன அஞ்சலி

5. வரவேற்புரை

6. ஆசியுரை

7. தலைமையுரை

8. விருந்தினர்கள் உரை

9. நன்றி உரை

10. பரிசில் வழங்குதல்




ஏதிர்பாக்கப்படும் செலவினங்கள்

01 பொதுஅறிவுப் போட்டிக்கான செலவு 36000.00


02 மரதன் ஒட்டப்பேட்டிக்கான செலவு 30000.00

03 சைக்கிள் ஒட்டப்பேட்டிக்கான செலவு 50000.00

04 துடுப்பாடப்  பேட்டிக்கான செலவு 50000.00

05 உதைபந்தாட்டப் பேட்டிக்கான செலவு 40000.00

06 பேச்சுப் பேட்டிக்கான செலவு 55000.00

07 வறுமைகோட்டிற்குஉட்பட்டமாணவர்களுக்குசைக்கிள் வழங்கல் 60000.00

08 வறுமைகோட்டிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு ஊக்கிவிப்பு பொதி வழங்கல் 60000.00

09 சான்றிதல் அச்சிடல் 2000ஒ10 20000.00

10 சுவர் ஓட்டிஅச்சிடல் 20000ஒ20 40000.00

11 ஓளிமற்றும் ஒளிஅமைப்பு 25000.00

12 போக்குவரத்துச் செலவு (ஆட்டோ) 40000.00

13 போட்டிநடுவர்கள் கொடுப்பனவு 10000.00

14 ஊழியருக்கானகொடுப்பனவு

(சுவர் ஓட்டிஓட்டுதல்இஅறிவிப்புசெய்தல்) 20000.00

15 இறுதிநிகழ்வுக்கானமண்டபவாடகை 10000.00

16 மரம் நடுகைசெய்தல் செலவு 100000.00

17 இரத்ததானம் வழங்குதல் செலவு

(தேநீர் மற்றும் சிற்றுண்டி) 50000.00

மெத்தசெலவுகள் 696000.00




சித்திரைக்கு மட்டும் உண்டு. சித்திரையில் மட்டும் அப்படி என்ன விஷேசம்?


எந்த மாதத்திலும் இல்லாத சிறப்பு சித்திரைக்கு மட்டும் உண்டு. சித்திரையில் மட்டும் அப்படி என்ன விஷேசம்? சித்திரை முதல் நாளுக்கு உள்ள முக்கியமானதும் முதன்மையானதும் சிறப்பு சித்திரை வருடப் பிறப்புதான். தமிழர்களது காலக்கணிப்பு முறையின்படி ஒரு ஆண்டுக்குரிய பன்னிரெண்டு மாதங்களில் சித்திரை முதலாவது மாதமாக கருதப்படுகிறது. தமிழ் மாதங்கள் சூரிய மாதங்கள் எனப்படுகின்றன.

ஏன் என்றால், இம் மாதங்கள் பூமிக்குச் சார்பாகத் தோற்றுகின்ற சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாக வைத்தே கணிக்கப்படுகின்றன. இராசிச் சக்கரத்தில் மேட இராசிக்குள் சூரியன் நுழைவதிலிருந்து அந்த இராசியை விட்டு வெளியேறும் வரையில் உள்ள காலம் சித்திரை மாதமாகும்.

சித்திரை மாதம் 31 நாட்களைக் கொண்டது. ஆங்கில நாட்காட்டியில் ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் முதல் மே மாதம் 14 ஆம் நாள் வரை தமிழ் சித்திரை மாதமாகும். சூரியன் மேட இராசிக்குள் நுழைவது சித்திரை மாதப் பிறப்பு எனப்படும். சித்திரை முதல் மாதம் என்பதால் இதுவே புதிய ஆண்டின் தொடக்கமும் ஆகும்.

இதனால் சித்திரை மாதம் முதல் நாளைத் உலகத் தமிழர்கள் அனைவரும் தமிழ் வருடப் பிறப்பாக சிறப்பாக கொண்டாடுகின்றனர். இலங்கையில் தமிழ்- சிங்கள மக்களால் கொண்டாடப்படும் வைபவமாகவும் அங்கு புதுவருடப் பிறப்பு உள்ளது

சித்திரை மாதம் பிறந்ததுமே இளவேனில்காலம்’ என்னும் வசந்த காலம் தொடங்குகிறது. வசந்த காலத்தில் மாமரங்களில் மாந்தளிர்களும், மலர்களும் பூத்துக் குலுங்கும். அச்சமயம் வேப்ப மரங்களில் வேப்பம் பூக்கள் பூத்துக் குலுங்கும். மனித வாழ்க்கை இனிப்பும், கசப்பும் கலந்தே இருக்கும் என்பதை எடுத்துக் காட்டும் அம்சமாக இச்செயற்பாடு கருதப்படுகிறது.

ஐக்கியம், சமய, சமூக, கலாசார உறவுகள், பண்பாட்டுக் கோலங்கள் என்பவைகளை எடுத்துக் காட்டும் வகையிலும் நல்லெண்ணம், நல்லுறவு, ஐக்கியம், அன்புப் பரிமாற்றம், குதூகலம், விருந்தோம்பல் போன்ற மனிதப் பண்பாட்டின் உயர்ந்த அம்சங்களை வெளிப்படுத்தும் வகையிலும் கொண்டாடப் படும் சமுக விழாவான புது வருடத்தில் இறைவழிபாடு, தானதர்மம், ஆசிபெறுதல் என்பவைகளையும் நாம் கடைப்பிடிப்பது வழக்கம்.

சித்திரை முதல் நாளன்று வீட்டை நன்றாக கூட்டி தூய்மை செய்ய வேண்டும். வாசலில் கோலமிட்டு அழகுபடுத்த வேண்டும். வாயிற்படிகளுக்கு மஞ்சள் குங்குமம் இட்டு, மாவிலைத் தோரணங்களை கட்டி மங்கலம் சேர்க்க வேண்டும்.வாயிற்படி நிலைவாயிலில் மஞ்சள் பூசி, சாணத்தால் மெழுகி, அழகிய மாக்கோலமிட்டால் திருமகள் வாசம் செய்வாள் என்பது நம்பிக்கையாகும்.

அத்தோடு மஞ்சள், குங்குமம் ஆகியவை நோய்க்கிருமிகளும் துஷ்ட தேவதைகளும் வாசல்படியை தாண்டி வராமல் தடுக்கும் சக்திகளாகும்.புதுவருட தினத்தில் நம் நலம் காக்கவே இந்நடைமுறை வழக்கத்துக்கு வந்தது.இந்த புண்ணிய காலத்தில் சகலரும் மருத்து நீர் தேய்த்து சிரசில் கொன்றை இலையையும், காலில் புங்கம் இலையையும் வைத்து ஸ்நானம் செய்தல் வேண்டும். மருத்து நீர் வைத்தல் என்பது முக்கிய விடயமாக புதுவருட தினத்தில் கருதப்படுகிறது.

இம்மருத்துநீர் தாழம்பூ, தாமரைப்பூ , மாதுளம்பூ , துளசி , விஷ்ணுகிராந்தி , சீதேவியார் செங்கழுநீர், வில்வம் , அறுகு , பீர்க்கு , பால், கோசலம் , கோமயம், கோரோசனை, மஞ்சள், திற்பலி மற்றும் சுக்கு என்பவற்றை நீரிலே கலந்து காய்ச்சப்படும். மருத்து நீர் வைத்து நீராடினால் புத்தாண்டின் நல்ல பலன்களை பெறலாம் என்பது நம்பிக்கை ஆகும்.

பின்னர் பச்சை நிறப் பட்டாடை அல்லது வெள்ளைக்கரை அமைந்த புதிய பட்டாடையையும், மரகதம் வைரம் பதித்த ஆபரணங்களையும் அணிந்து ஆலயங்களுக்குச் சென்று இறைவழிபாடு செய்தல் வேண்டும் என வாக்கிய பஞ்சாங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.திருக்கணித பஞ்சாங்கத்தில் வெண் மஞ்சள் பட்டாடை அல்லது மஞ்சள் கரைவைத்த வெள்ளைப் புத்தாடையையும் வைரம் பதித்த ஆபரணங்களையும் அணிந்து ஆலயங்களுக்குச் சென்று இறைவழிபாடு செய்தல் வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சித்திரை புதுவருடமன்று நம் வருங்கால பலன்களை அறிவது அவசியம் .புத்தாண்டு பஞ்சாங்கம் வாங்கி அதற்கு சந்தனம், குங்குமம் ஆகியன இட்டு, பூஜையில் வைத்து பூஜிக்க வேண்டும்.பின்னர் குடும்ப சோதிடரையோ, புரோகிதரையோ கொண்டு புத்தாண்டுப் பூஜைகளை செய்யவேண்டும். பூஜை முடிந்த பின்பு அவர் புத்தாண்டுப் பஞ்சாங்கத்தைப் படிப்பார். அதன் மூலம் அந்த ஆண்டில், நவக்கிரக சஞ்சாரத்தினால் உலகத்துக்கும், மக்களுக்கும் நிகழவிருக்கும் பலன்களை அறிந்து கொள்ளலாம். சில தோஷங்களையும் நீக்கி கொள்ளலாம்.

புதுவருட தினத்தில் தான தருமங்கள் செய்வது வழக்கம். ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும் புதிய விசிறிகளை தானம் செய்ய வேண்டும். சித்திரை பிறப்பதற்கு முந்தைய நாள் இரவு சாப்பாடு முடிந்தபிறகு பூஜை அறையை தூய்மை செய்து கோலமிட்டு வைத்து விட வேண்டும். வீட்டிலுள்ள பொன், வெள்ளி நகைகள், உட்பட அனைத்து ஆபரணங்களையும் பணம், நிலைக்கண்ணாடி, வெற்றிலை, பாக்கு, பழங்கள், தேங்காய், மலர்கள் முதலிய மங்கலப் பொருள்களையும் தயாரித்து, ஒரு மனையின் மீது இட்டு அதற்கு அழகியகோலமிட்டு, பூஜைக்குரிய தெய்வத்தின் முன் வைக்க வேண்டும்.

அரிசி, பருப்பு, வெல்லம், பலா, மாம்பழம், வாழைப்பழம் ஆகியவற்றையும் வைத்து மறுநாள் காலை , சித்திரை மாதப்பிறப்பன்று அதிகாலையில் முதன் முதலாக வீட்டில் மூத்த பெண்மணி எழுந்து குளித்து புத்தாடை உடுத்தி இறைவன் முன்பு குத்துவிளக்குகளையும், ஊதுவத்திகளையும் ஏற்றி வைப்பார். அதற்கு பின்பு, அவர் வீட்டில் தூங்கும் ஒவ்வொருவரையும் எழுப்பி, கண்களை மூடிய நிலையிலேயே சுவாமியின் முன்பு அழைத்துச் சென்று, கண்களை திறக்கச் சொல்வார்.பூஜைக்குரிய தெய்வத்தையும், பூஜைக்கு வைத்துள்ள மங்கலப் பொருட்களையும் முதன் முதலாக தரிசிக்கும்படி செய்வார். இவ்வாறு செய்தால் வருடம் முழுவதும் மகிழ்ச்சி பொங்கும் எனவும் மங்கலப் பொருள்கள் செழித்து இருக்கும் என்பது நம்பிக்கை.

சித்திரை மாதத்தில் சூரியன் மேஷ ராசியில் மிகவும் உச்சமாக பிரகாசிப்பதால் அன்றைய தினம் பானகம், நீர், மோர், பருப்புவடை ஆகியவற்றை நைவேத்தியம் செய்ய வேண்டும்.இனிப்பு, கசப்பு, உவர்ப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு என அறுசுவை கொண்ட உணவுகளை சமைத்து உண்பர்
மதிய உணவில் வேப்பம்பூ பச்சடி, மாங்காய்ப் பச்சடி, பருப்பு வடை, நீர்மோர், பருப்பு, பாயாசம், மசால்வடை போன்றன இடம் பறுதல் அவசியம் . வேப்பம் பூ கசக்கும் என்றாலும் மனித உடலிலுள்ள ரத்தத்தை தூய்மை செய்வதில் வேப்பம் பூவுக்கு நிகராக வேறு எந்த மூலிகையும் இல்லை. இதற்காகவே இந்த உணவு உண்ணப்படுகிறது .அத்துடன் உணவை விருந்தினருடன் உண்டு மகிழ்ந்தால் அந்த ஆண்டு முழுவதுமே குதூகலமாக இருக்கும் என்பது மக்களின் முக்கிய நம்பிக்கையாகும்.இதற்காகவே விருந்தினர் வருகையும் விருந்தோம்பலும் நம் பாரம்பரியமாக மாறியது.

சித்திரை முதல் நாளன்று பெருவாரியாக மக்கள் கோயில்களுக்கு சென்றும் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டும் மற்றும் பல வகைகளிலும் வருடப் பிறப்பை சிறப்பாக கொண்டாடுவர். சித்திரைப் புதுவருடத்தின் மற்றொரு சிறப்பு அம்சம் கைவிசேடமாகும். ஆரம்ப காலத்தில் வீட்டின் தலைவி உரிய சுப நேரத்தில் சிறிய மூலிகைப் பொட்டல ம் ஒன்றினை கிணற்றுக்குள் போட்டுவிட்டு பிறக்கும் புத்தாண்டு நிமித்தம் முதல் முறையாக தண்ணீரை கிணற்றிலிருந்து வெளியில் எடுப்பதையே கை விசேடமாக கருதப்பட்டது. ஆயினும் நாளடவில் கைவிசேடம் என்பது சுபமுகூர்த்தத்தில் பணத்தை கொடுப்பதும் எடுப்பதும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

நல்ல நேரத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் குடும்பத் தலைவரிடமிருந்தும், வயதில் மூத்தவர்களிடமிருந்தும், அலுவலகங்கள், விற்பனை நிலையங்கள், தொழிற்சாலைகள் என்பவைகளில் வேலை செய்வோர் தங்கள் வேலை கொள்வோரிடமிருந்தும் புதுவருடத்தில் முதல் அன்பளிப்பாக வெற்றிலையில் பாக்கு, நெல்லு காசு என்பவற்றை வைத்துகுத்து விளக்கின் முன்னாலே வைத்து கொடுப்பர்கள். பணத்தை கைவிசேடமாக பெற்றுக்கொள்வார்கள்.கொடுக்க பட்ட எல்லாவற்றையும் எண்ணி (நெல்லு உட்பட) அது ஒற்றை விழுந்தால் நல்ல பலன் என்பது ஐதீகம். கைவிசேடம் பரிமாறிக்கொள்வது என்பது ஒரு பாரம்பரியமான வழக்கமாகும்.

மூத்தோர்களிடமிருந்து கைவிசேடம் பெற்றால் அந்த ஆண்டு முழுவதும் பணவரவும் பல நன்மைகளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. கைவிசேடமாக பெற்ற பணத்தை அந்த ஆண்டு முழுவதும் பத்திரமாக வைத்திருக்க வேண்டும் என்பதும் நம்பிக்கையாக கடைப்பிடிக்கப் பட்டு வருகிறது.

புதுவருடம் பிறந்ததன் பின் பஞ்சாங்க கணிப்பின்படி சுப தினத்தில் சுப நேரத்தில் தொழிலிலுக்குச் செல்வது அல்லது தொழிலை ஆரம்பிப்பதன் மூலம் தொழில் விருத்தி அடையும் என்பதே எதிர்பார்ப்பாகும்.

பிறக்கும் இவ்வருடம் புனிதமாய் புதுமைகளோடு எம் வாழ்க்கயில் சகல வெற்றிகளும் ஏற்பட்டு நல்ல வளங்கள் வாழ்க்கையில் உருவாகவும் வழி தரட்டும் என நம்புவோமாக !!!

பொது அமைப்புக்கள்  நல்ல நோக்கம் உடையவை ஆனால் அதன் நிர்வாகத்தின் செயற்பாடே அதன் உயர்வுக்குக் காரணமாகிறது.

அந்தவகையில் பண்ணாகம் ஸ்ரீ முருகன் சனசமூக சேவா வாலிபர் சங்கம் நிர்வாகம் முன்மாதிரியாக செயற்பட்டார்கள் . 

பண்ணாகம்  ஸ்ரீ முருகன் சனசமூக சேவா வாலிபர் சங்க  80 வது ஆண்டு அமுதவிழா நிர்வாகம் 2016 மக்கள் மனதை கவரும் வண்ணம் தமது செயற்பாடுகளை மிக மிக திறமையான முறையில் எல்லா மக்களையும் ஒன்றிணைத்து  80 வது ஆண்டு விழாவை  சிறப்பித்துள்ளார்கள். உள்நாட்டு மக்கள் மட்டுமன்றி வெளிநாட்டு மக்கள் மெச்சும்படி மிகத் திறமையான அணுகுமுறையில்  நான் என்ற எண்ணம் இன்றி நாம் என்ற எண்ணத்தில் ஓவ்வொரு நிர்வாக உறுப்பினர்களும் மக்கள் சிந்தனைகளையும் பெற்று செயற்பட்டதை  ஊர்உறவுகள் அனைவரும் பாராட்டாமல் இருக்கமுடியாது.

விழாமுடிந்த பின் தமது அலுவல் முடிந்துவிட்டது என்று இருந்துவிடாமல்  விழாவிற்கான  பெறுபேறுகள்பற்றிய விடயங்களைச் சரியான முறையில் உள்நாட்டு வெளிநாட்டு மக்களுக்கு  நன்றிக்கடிதங்களும்   ஆண்டுவிழாச்   சிறப்பு மலரையும்  எல்லோரும் திருப்திகரமாக  நினைக்கும் விதத்தில் அனுப்பிச் செயற்பட்டவிதம் திறமை மிகு நிர்வாகம் என்ற பெருமையால்  2016 நிர்வாகிகளால் பண்ணாகம்  ஸ்ரீ முருகன் சனசமூக சேவா வாலிபர் சங்கம் பெருமை கொள்கிறது.  இதனால் மக்கள் தொடர்பு கூடிவருவதை அவதானிக்கமுடிகிறது.  இதேபோல இனி வரும் நிர்வாகமும் தனது செயற்பாட்டை திறமையாக்கும் என வாழ்த்துகின்றோம்.  


-பண்ணாகம் இணைய அவதானி-

தமிழ் இலக்கியம் 
உலக இலக்கியமாக 
மாறிக் கொண்டிருக்கிறது

தமிழர்கள் என்றால் உலகத்து தமிழர்கள் என்று கூறுமளவுக்கு இன்று தமிழ்ச் 
சமூகம் உலகமெங்கும் பரந்துபட்டு வாழ்கின்றது. எனவே தமிழ் இலக்கியம் உலக இலக்கியமாக மாறிக் கொண்டிருக்கிறது என்றால் மிகையாகாது. தமிழ் இலக்கியத்துக்கான நோபல் பரிசு தொலைவிலில்லை என்று கூறுமளவுக்கு வளர்ந்து நிற்கின்றது தமிழிலக்கியம் என்கிறார் சமூக, அரசியல், இலக்கியச்  செயற்பாட்டாளரும், எழுத்தாளருமான தருமன் தர்மகுலசிங்கம்.

யாழ். மண்ணில், பல கல்வியியலாளர்களை இந்த உலகுக்கு தந்த கரவெட்டியில் பிறந்த தருமன் தர்மகுலசிங்கம் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக 1979ஆம் ஆண்டு நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து தற்பொழுது டென்மார்க் நாட்டில் வசித்து வருகின்றார். 

இவருடைய புலம்பெயர்வு என்பது தனியே தன்னுடைய பொருளாதாரத்தை, மாத்திரம் வளமாக்கும் நோக்கத்தை கொண்டதாக இருக்கவில்லை. ஈழத்தமிழர்களுடைய குரலாக சர்வதேசமெங்கும் ஒலிக்கும் வகையிலும் தமிழர்களுடைய கலை, கலாசார, பண்பாடுகளை உலகமெங்கும் சென்று காக்கும் பாதுகாவலனாகவும் கலை, இலக்கிய, அரசியல் செயற்பாட்டாளனாக என பல தளங்களில் பயணித்து வரும் ஒரு மிகப்பெரிய ஆளுமையாக இருந்து வருகின்றார். 

அத்துடன் உலகின் மிகப்பெரிய படைப்பாளியாக போற்றப்படும் டென்மார்க் நாட்டின் கலாமேதை ஹான்ஸ் கிறிஸ்ரியன் அனசனின் படைப்புகளை தமிழ் படைப்புலகுக்கு தந்திருக்கின்றார். அனசன் எழுதிய தேவதைக் கதைகளில் 31 கதைகளை தேர்ந்தெடுத்து தாய், பாட்டி எனும் இரு தொகுதிகளாக வெளியிட்டிருக்கின்ற அதேவேளை, 'தேடல் சில உண்மைகள்' என்ற நூலையும்  வெளியிட்டுள்ளார். 

கடந்த வெள்ளிக்கிழமை (10) தனது அறுபதாவது அகவையை எட்டியிருக்கும் தர்மகுலசிங்கம், அண்மையில் இலங்கைக்கு வருகை தந்திருந்த போது ஞாயிறு தினக்குரல் சார்பாக சந்தித்தோம். 

அவருடனான நேர்காணல் பின்வருமாறு;

கே உங்களுடைய இலக்கிய பிரவேசம் மற்றும் இலக்கிய பயணம் தொடர்பில்...

ப என்னுடைய இலக்கிய பயணம் 1990களில் ஆரம்பமானது. தமிழில் கம்பன், வடமொழியில் காளிதாசன், ஆங்கிலத்தில் சேக்ஷ்பியர் போன்று இவர்களுக்கு ஈடு இணையான டென்மார்க் தேசிய எழுத்தாளர் ஹான்ஸ் கிறிஸ்ரியன் அனசனின் எழுத்துக்கள் என்னை கட்டிப் போட்டன. அவருடைய காத்திரமான படைப்புகள் மெய்சிலிர்க்க வைக்கக்கூடியன. குறிப்பாக குழந்தைகளுக்கும் ஏனையவர்களுக்கும் அவருடைய எழுத்துக்கள் மிகப்பெரிய தத்துவத்தை தரக்கூடிய அதேவேளை, வழிகாட்டக்கூடியதும். அவ்வாறானதொரு காத்திரமான படைப்பாளியின் படைப்புகளை தமிழ் மொழியில் கொண்டு வர வேண்டும் என்ற அவாவின் முதல் பிரசவம் தான் 'தாய்'. இதற்கு 1997ஆம் ஆண்டு இலங்கையின் தேசிய விருது கிடைத்தது. அதைத் தொடர்ந்து 'பாட்டி' என்ற நூலை வெளிக்கொணர்ந்தேன். 

அதனைத் தொடர்ந்து மாபெரும் இலக்கிய கர்த்தா எஸ்.பொ.வினுடனான கலந்துரையாடல், ஆய்வு போன்றவற்றின் பயனாக 'தேடல் சில உண்மைகள்' என்ற படைப்பை உருவாக்கி வெளியிட்டேன். 2007ஆம் ஆண்டு அனசன் கதைகள் என்ற 54 கதைகளைக் கொண்ட மொழிபெயர்ப்பு தொகுப்பொன்றை வெளியிட்டேன். 

தற்பொழுது கைவசம் சிறுகதை தொகுப்பொன்றும் பௌத்தம் தொடர்பான படைப்பொன்றும் இருக்கின்றது. வெகுவிரைவில் இவ்விரண்டு படைப்புகளும் வாசகர் கைகளில் தவழும். 

கே நீங்கள் கலை, இலக்கிய, அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றீர்கள். அது தொடர்பில்.....

ப 1979ஆம் ஆண்டு நான் என்னுடைய 21ஆவது வயதில் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்தேன். என்னுடைய புலம்பெயர்வானது ஒளவையார் கூறியது போன்று திரைகடல் ஓடி திரவியம் தேடலை நோக்கமாகக் கொண்டிருந்தது. 

என்னுடைய பதின்ம வயதுகளில் சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சியின் (சண்முகதாசன்) மாணவர் அணியில் இருந்திருக்கின்றேன். அக்காலகட்டத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்ற பல போராட்டங்களில் கலந்து கொண்டிருக்கின்றேன். 

அந்த அடிப்படையில் தான் என்னுடைய புலம் பெயர்வின் பின்னரான செயற்பாடுகளும் நகர்ந்து கொண்டிருக்கிறது. என்னுடைய அரசியல் பக்கத்தை பார்த்தால் டென்மார்க் நாட்டின் சமூக ஜனநாயக கட்சியின் சார்பில் இரு தடவைகள் தேர்தலில் போட்டியிட்டிருக்கின்ற அதேவேளை, எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட காத்திருக்கின்றேன். 

அதேபோல், பல புலம்பெயர் நாடுகளுக்கு பயணம் சென்று தமிழ் மக்களுடைய உரிமைகள், பொருளாதார கட்டமைப்பு எவ்வாறு வளர வேண்டும் அதனை எவ்வாறு தமிழர்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பது தொடர்பான உரைகளை நிகழ்த்தியிருக்கின்றேன். மேலும் 2014ஆம் ஆண்டு நாடு கடந்த அரசாங்கத்தின் வருடாந்த மகாநாட்டில் சிறப்பு பேச்சாளனாக கலந்து கொண்டு பேசியது பசுமையான நினைவு. அத்துடன் 2015ஆம் ஆண்டு தொடக்கம் 2016ஆம் ஆண்டு வரை டென்மார்க் நாட்டின் மேற்கு உயர்நீதிமன்றத்தின் ஜுரராக பணியாற்றியிருக்கின்றேன். 

என்னுடைய இலக்கிய பயணத்தில் ஏறக்குறைய பதினைந்து வருடங்களுக்கு முன்னர் தமிழ் நிகழ்கலைகளை கற்பிப்பதற்காக இந்தியாவிலிருந்து ஆசிரியரொருவரை அழைத்து வந்து டென்மார்க்கில் இயங்கி வரும் நுண்கலைக் கல்லூரியில் தமிழ் கலைகளை அங்குள்ள மாணவர்கள் கற்று பயன் பெறுவதற்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தேன். அத்துடன் டென்மார்க் தமிழ் இலக்கிய மன்றம், மனித உரிமை, சமூக, பொருளாதார கட்டமைப்புக்கான தலைவராக பணியாற்றிக் கொண்டிருக்கின்றேன். அத்துடன், தற்பொழுது உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் அகில பொதுச் செயலாளராக 2015ஆம் ஆண்டு முதல் பதவி வகித்து வருகின்றேன். 

கே நீங்கள் நாட்டை விட்டு புலம்பெயர்ந்து மூன்று தசாப்தங்கள் கடந்துள்ளதுடன், நீங்கள் பல்வேறு நாடுகளுக்கு விஜயம் செய்து புலம்பெயர் தமிழர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணி வருகின்றீர்கள். இந்நிலையில் புலம்பெயர் தமிழர்களுடைய வாழ்வியல் மற்றும் கலை, கலாசாரம் போன்றவற்றுடனான அவர்களுடைய ஈடுபாடுகள் எவ்வாறு உள்ளன? 

ப முப்பது வருட யுத்தத்தினால் இரண்டு விடயங்கள் ஈழத்தமிழர்கள் மத்தியில் நடந்திருக்கின்றது. ஒரு பக்கம் பேரழிவு. இந்த பேரழிவு பொருளாதாரம், கலாசாரம், மானுட அழிவு போன்றவற்றை ஈழத்தில் ஏற்படுத்தியிருக்கின்றது. மறுபக்கத்தில் போரினால் ஏற்பட்ட புலம்பெயர்வு ஈழத்தமிழர்களின் மத்தியில் மிகப்பெரிய வளர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. புலம்பெயர்வினால் ஈழத்தமிழர்கள் பாரிய வளர்ச்சியை அடைந்துள்ளார்கள். 

கல்வி, பொருளாதாரம், சமூக ரீதியாக புலம்பெயர் நாடுகளில் ஈழத்தமிழர்கள் மிகப்பெரிய உச்சத்தை அடைந்திருக்கிறார்கள். புலம்பெயர் நாடுகளில் காத்திரமான சிறந்ததொரு இளம் தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கின்றது. இதனை நான் கண்கூடாக கண்டு வருகின்றேன். இதனை நான் இத்தருணத்தில் பெருமையாக கூறிவைக்கின்றேன். 

டென்மார்க் நாட்டில் நான் வசிக்கும் பிரதேசத்தில் வாழ்கின்ற 65 தமிழ் குடும்பங்களில் அனைவரும் கல்வியியலாளர்களாக திகழ்கிறார்கள். இது அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு மேலும் மேலும் அதிகரித்து உலகில் தமிழன் புகழ்பெற்ற இனமாக வாழ்வான் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. 

கே ஈழம் கண்ட போரின் வலிகள் உங்களுடைய எழுத்துகளினூடாக வெளிவருமா? 

ப நிச்சயமாக வரும். ஈழப் போர் இன்று, நேற்று தொடங்கியதொன்றல்ல. அது சுதந்திரத்துக்கு முன்னரே தொடங்கி விட்டது. அதேபோல் வடக்கில் இன்றும் 
சமூக ஏற்றத்தாழ்வுகள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. எனவே என்னுடைய படைப்பு மேற்படி விடயங்கள் அனைத்தையும் உள்ளடக்கியதாக விரைவில் வெளிவரும். 

கே புலம்பெயர் நாடுகளில் வாழ்கின்ற இளம் சமுதாயத்தினர் மத்தியில் இலக்கியச் செயற்பாடுகள் எவ்வாறு உள்ளன? 

ப பிரான்ஸ் நாட்டில் பிரெஞ்ச் இலக்கியத்தில் தமிழர்கள் இலக்கியம் படைத்து வருகிறார்கள். ஈழத்து தமிழர்களான கலாமோகன், வாசுதேவன் போன்ற இருவரும் பிரெஞ்ச் மொழியில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அதேபோன்று மொழிபெயர்ப்புகளையும் செய்து கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு புலம்பெயர் நாடுகள் பலவற்றில் முதல் தலைமுறையினர் இலக்கியம் செய்து கொண்டிருக்கும் சூழ்நிலையில் புலம்பெயர் நாடுகளில் கல்விகற்ற இளந்தலைமுறையினர் தாங்கள் வாழும் நாடுகளின் மொழிகளிலேயே இலக்கியம் படைக்கும் அளவுக்கு இன்று வளர்ந்து நிற்கிறார்கள். 

எதிர்காலத்தில் பல்வேறு கோணங்களில் பல்வேறு மொழிகளில் புலம்பெயர் தமிழர்கள் இலக்கியம் படைப்பார்கள். 

கே ஈழத்தவர்களுடைய படைப்புகளுக்கு புலம்பெயர் தேசங்களில் கிடைக்கும் அங்கீகாரம் எவ்வாறு உள்ளது? 

ப ஈழத்தவர்களுடைய படைப்புகள் புலம்பெயர் தேசங்களில் ஓரளவுக்கு கிடைக்கின்றதே தவிர, பெரியளவில் பரந்துபட்டளவில் அவற்றின் வரவு இருக்கும் சூழல் அங்கு இல்லை. இந்த மந்தமான சூழலுக்கு ஈழத்து படைப்பாளிகளுக்கும் புலம்பெயர் படைப்பாளிகளுக்குமிடையிலான தொடர்பு போதியதானதாக இல்லை என்றே நான் கருதுகின்றேன். 

இவ்விரு படைப்பாளிகளுக்குமிடையிலான தொடர்புகள் மேலும் மேலும் வளர்க்கப்பட வேண்டும். அதற்கு கலாசார, இலக்கிய பரிமாற்ற மையம் ஒன்று உருவாக்கப்பட்டால் சிறப்பாக இருக்கும் என நான் கருதுகின்றேன். அந்த களம் அமைய வேண்டுமாகவிருந்தால் ஈழத்து படைப்பாளிகள் புலம்பெயர் படைப்பாளிகளுடன் ஒரு இறுக்கமான உறவை ஏற்படுத்த வேண்டும். அதற்கான முன்னெடுப்புகள் ஆரோக்கியமான முறையில் முன்னெடுக்கப்பட்டால் எதிர்காலத்தில் ஈழத்துப் படைப்புகளுக்கும் புலம்பெயர் படைப்புகளுக்குமிடையில் நெருங்கிய ஒரு பிணைப்பை ஏற்படுத்த முடியும். 

கே புலம்பெயர் நாடுகளில் வாழ்கின்ற இளம் சமூகத்தின் எதிர்காலம் எவ்வாறிருக்கின்றது? 
ப புலம்பெயர் நாடுகளில் இளம் தலைமுறையினர் தலைசிறந்தவர்களாக விளங்குகிறார்கள். இன்று அங்கு வாழும் தலைமுறையினர் கல்விச் சமூகமாக மாறியிருக்கிறார்கள். புலம்பெயர் நாடுகளில் வாழ்கின்ற முதல் தலைமுறையினருக்கும் இளம் தலைமுறையினருக்கும் இடையில் நிறைய வேறுபாடுகள் காணப்படுகின்றன. 

நான் வாழும் டென்மார்க் நாட்டில் நூற்றுக்கு நூறு வீதமான இளம் தலைமுறையினர் மிகப்பெரிய கல்வியலாளர்களாக காணப்படுகிறார்கள். அதற்கு டென்மார்க் நாட்டின் சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்புத்தான் காரணம். அந்த நாட்டினுடைய கட்டமைப்பு புலம்பெயர் தமிழர்களை உச்சம் பெற்றவர்களாக மாற்றியிருக்கின்றது என்றுதான் கூற வேண்டும். இதற்கு காரணமாகவிருந்த டென்மார்க் நாட்டின் கல்வியியலாளர்கள், அரசியல்வாதிகள், மற்றும் அந்நாட்டுக்கும் இந்நேர்காணலினூடான எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம். 

அங்கு மிகப்பெரிய ஒரு காத்திரமான நேர்த்தியான சமூகமொன்று தமிழர்கள் மத்தியில் உருவாகியிருக்கின்றது என்பதை இத்தருணத்தில் நான் கூறி வைக்க விரும்புகின்றேன். 

கே போருக்கு பின்னரான ஈழத்தின் இலக்கிய முயற்சிகளை எப்படி பார்க்கிறீர்கள்?

ப போர்க்கால இலக்கியங்கள் மிக வீச்சாகவும் எழுச்சியாகவும் இருந்தது. அதன் பின்னரான இலக்கியங்கள் சமுதாய அக்கறையோடு  படைக்கப்படுவதாக தெரியவில்லை. 

கே எவரும் கையிலெடுக்காத டென்மார்க் நாட்டின் கலாமேதை கிறிஸ்டியன் அனுசனின் படைப்புகளை நீங்கள் மொழிபெயர்த்துள்ளீர்கள். இதற்கு ஏதாவது சிறப்பு காரணங்கள் உண்டா ?

ப ஒரு நாட்டில் நாங்கள் குடிபெயர்ந்தால் அந்த நாட்டினுடைய வரலாறு, இலக்கியங்களை பற்றி கற்றுக் கொள்வது இயல்பானது. ஆகவே அனசனின் படைப்புகளை வாசிக்கும் பொழுது அவரது படைப்புகளை தமிழுக்கு கொண்டுவர வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது. 

ஒரு நாட்டினுடைய சமூக, கலாசார பண்பாட்டு விழுமியங்களை கற்றுக் கொள்ளும் போது ஏற்பட்ட தாக்கம் தான் அவருடைய படைப்புகளை தமிழில் கொண்டு வர என்னைத் தள்ளியது. 

கே அரசியல்,சமூக,இலக்கியம் என பல தளங்களில் நீங்கள் பயணித்து வருகிறீர்கள்.இதில் உங்களுக்கு சவாலாக இருந்த துறை மற்றும் உங்களுக்கு ஆத்ம திருப்தியை தரக்கூடியது எது?

ப அரசியலும் சமூகமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தது. இவற்றினுடைய வெளிப்பாடுதான் இலக்கியம். அந்த வகையில் இந்த மூன்று விடயங்களும் எனக்கு ஆத்ம திருப்தியைத் தருகின்றது. 

கே எதிர்கால தமிழ் இலக்கிய உலகம் எவ்வாறு இருக்கும்?

ப  தமிழர்கள் என்றால் உலகத்து தமிழர்கள் என்று கூறுமளவுக்கு இன்று தமிழ்ச் சமூகம் உலகமெங்கும் பரந்துபட்டு வாழ்கின்றது. எனவே தமிழ் இலக்கியம் உலக இலக்கியமாக மாறிக் கொண்டிருக்கிறது என்றால் மிகையாகாது. தமிழ் இலக்கியத்துக்கான நோபல் பரிசு தொலைவிலில்லை என்று கூறுமளவுக்கு வளர்ந்து நிற்கின்றது தமிழிலக்கியம். 

கே எழுத்தாளனாக ஆகாமல் இருந்திருக்கலாம் என்று தோன்றியது உண்டா?

ப சமூக அக்கறையுள்ள ஒருவனுக்கு இந்த எண்ணம் வராது. 

கே மணி விழாவைக் கொண்டாடும்  நீங்கள், இந்நேர்காணலினூடாக  யாருக்காவது நன்றி சொல்ல விரும்புகிறீர்களா?

ப எனது பெற்றோருக்கு முதல் நன்றி. மனைவி, பிள்ளைகள் மற்றும் நான் வாழும் டென்மார்க் நாட்டிற்கும் என்னைச் சுற்றியிருக்கின்ற பத்திரிகையாளர்கள், இலக்கிய நண்பர்கள் அனைவருக்கும் இத்தருணத்தில் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். 



உலகத் தமிழர்கள் எல்லோரும் உவகையுடன் கொண்டாடும் பொங்கல் திருநாளில் அனைவருக்கும் எனது உளமார்ந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்வோடு 
தெரிவித்துக் கொள்கிறேன்.

“உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்” என்ற மகாகவி பாரதியாரின் சொல்லிற்கு ஏற்ப உழவுத் தொழிலைப் போற்றும் வகையில் இந்த இனிய பொங்கல் நன்னாளில், மக்கள் தங்களது மன மகிழ்ச்சியினை வெளிப்படுத்தும் விதத்தில் வீட்டினுள்ளும் வெளி வாசலிலும் வண்ணக் கோலங்களினால் அலங்கரித்து கடவுளுக்கு நன்றி செலுத்தும் வகையில், கரும்பு, காய்கறிகள் முதலியவற்றை படையலிட்டு, புது பானைக்கு மஞ்சள் தழையினைக் காப்பாக அணிவித்து, அதில் அரிசியிட்டு, பால் ஊற்றி அது பொங்கும் போது, “பொங்கலோ பொங்கல்” என்று உற்சாகக் குரலெழுப்பி இறைவனை வழிபடுவார்கள்.

உலகெங்கும் வாழும் தமிழர்களால் தை முதல் தேதியன்று கொண்டாடப்படுவது பொங்கல்.

தை முதல் தேதியன்றே தமிழ்ப் புத்தாண்டு தொடங்கும் நாள் என்று மூத்த தமிழ்ச் சான்றோர்களின் வாக்கினைப் பின்பற்றி, கடந்த ஆண்டில் இருந்து தை முதல் தேதியை தமிழ்ப் புத்தாண்டாக கடைபிடிப்பது என்று தமிழக அரசு முடிவெடுத்து, அதற்கான சட்டமும் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டின் தைப் பொங்கல் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது எனலாம்.

`பொங்கல் பண்டிகை' என்பது அறுவடைத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. ஆண்டு முழுவதும் நமக்கு உதவி புரியும் இயற்கைக்கும், விவசாயத்திற்குப் பயன்படும் கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் நாளாக பொங்கலைக் கொண்டாடி மகிழ்கிறோம்.

பொங்கல் என்பதற்கு `பொங்கி வழிதல்', `பொங்குதல்' என்பது பொருள். அதாவது புதிய பானையில், புத்தரிசியிட்டு, அரிசியில் இருந்து பால் பொங்கி வழிந்து பொங்கி வருவதால், தை பிறந்துள்ள புத்தாண்டு முழுவதும் நம் வாழ்வும், வளமும் அந்தப் பால் போன்று பொங்கி சிறக்கும். மகிழ்ச்சியும், திளைப்பும் ஒருசேரப் பல்கிப் பெருகுவதோடு, கழனியெல்லாம் பெருகி, அறுவடை மென்மேலும் அதிகரிக்கும் என்பதே இந்தப் பண்டிகையின் மேலோங்கிய தத்துவமும், தொன்றுதொட்டு வரும் நம்பிக்கையுமாகும்.

பொங்கல் தினத்தன்று வயல்களில் விளைந்து, அறுவடைக்குத் தயாராக இருக்கும் நெற்கதிர்களில் சிறிதளவைக் கொண்டு வந்து வீட்டில் படைத்து வணங்குவதும் வாடிக்கையாக உள்ளது. தவிர, காடுகளில் விளையக்கூடிய அனைத்து வகை காய்கறிகளையும், பூமிக்குள் விளையும் கிழங்கு வகைகளையும் படைத்து வழிபடுகிறார்கள்.

அறுவடை தொடங்கியதைக் குறிக்கும் வகையில், பயிர் விளைச்சலுக்கு உதவிய மழை, சூரியன், கால்நடைகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு நன்றி தெரிவித்து அவர்களுக்கு வேண்டியதைச் செய்யும் நாளே தைப் பொங்கல் திருநாள் எனலாம்.

பொங்கல் தினத்தன்று வீட்டின் வாசலில் வண்ணக்கோலமிட்டு, அதன்மீது அடுப்புக் கட்டியை வைத்து அவற்றில் புதிய பானைகளில் வெண்பொங்கலும், சர்க்கரை பொங்கலும் தனித்தனியே செய்து, சூரியனுக்குப் படைத்து வழிபடுகிறோம்.

இயற்கை வளத்தால், மும்மாரி மழை பொழிந்தால் மட்டுமே விவசாயம் பெருகும். காடு, கழனி நனையும். சூரிய வெளிச்சம் பட்டால்தான் பயிர் வளர்ச்சியடைந்து சாகுபடி சிறக்கும்.