WELCOME TO PANNAGAM.COM & PTV

பண்ணாகம் இணையம்

செய்திவிமர்சனம்

அன்புடன் தமிழ் மக்களுக்கு,

தமிழ் தேசிய கூட்டமைப்பை கலைக்க வேண்டிய காலம் கனிந்துவிட்டது.

நான் பழையவற்றை கிளறுகிறேன் என எவரும் என்மீது குற்றஞ் சுமத்த முடியாது. ஆனால் தமிழர் விடுதலைக் கூட்டணி பற்றியதும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ள பெரும் அனர்த்தத்தை பற்றியும் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண்பதற்காக கட்சிக்காக அயராது உழைத்த பெரியார்கள் பற்றியும் வரிசை கிரமமாக கடந்தகால சம்பவங்களை சரியாக பதிய வேண்டிய புனிதமான கடமை என்மீது சுமத்தப்பட்டுள்ளது.

தமிழர் விடுதலைக் கூட்டணி;, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகியவை பற்றிய விடயங்களின் எல்லைக்குள் என்னை வரையறுத்துக்கொள்வேன். இன்றைய தலைமுறையினர் எமது கடந்தகாலத்தைப் பற்றி அரைகுறையாக தெரிந்தும் பூரணமாக தெரியாமலும் இருப்பதால் எனது முயற்சி பெரிதாக பாராட்டப்படுமென எண்ணுகிறேன். சரித்திரத்தை பல கோணங்களிலும் ஆராயும் பக்குவத்தை கொண்டவனல்ல நான். ஆனால் தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகியவற்றின் ஆரம்பகால உறுப்பினர் என்பதால் அவற்றினதும் அவற்றின் தலைவர்கள் பற்றிய வரலாற்றை கூறக்கூடிய தகுதிபெற்ற தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் மிகச்சிலரில் நானும் ஒருவன்.

நீண்டகாலமாக தீர்க்கப்படாதிருக்கும் இனப்பிரச்சினை தீர்வுக்காக பெறுமதிமிக்க பங்களிப்பையும் தியாகங்களையும் வழங்கிய தலைவர்கள் அனைவரையும் இளம் தலைவர்கள் பலரையும் நான் அறிவேன். இனியும் நான் மௌனமாக இருந்தால் அவர்களின் தியாகங்கள், உயிராபத்தின் மத்தியில் அயராது உழைத்தமை, உயிரை கொடுத்து உழைத்தமை அத்தனையும் அவர்களின் எலும்புக்கூட்டோடு புதைக்கப்பட்டுவிடும்.


இன்று ஏற்பட்டுள்ள குழப்பகரமான நிலையில் தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகியவற்றின் வரலாறு பற்றி ஆராய முற்படுவது இலகுவான காரியமல்ல. மேலும் நிலைமையை குழப்பமடையச் செய்வது எனது நோக்கமல்ல ஆனால்; இவைகளோடு தொடர்புள்ள தெரிவு செய்யப்பட்ட, சில முற்றாக மறைக்கப்பட்டிருந்த அல்லது மிகைப்படுத்தப்பட்டிருந்த அல்லது பிழையான வியாக்கியானம் கொடுக்கப்பட்ட அல்லது மக்களின் நினைவுகளிலிருந்து முற்றாக நீக்கப்பட்ட சம்பவங்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து அவற்றுக்கு விளக்கம்; கொடுப்பதே எனது முழுநோக்கமாகும்.

மிக ஆழமாக செல்லாது எனது கவனத்தை கௌரவ.ஜீ.ஜீ.பொன்னம்பலம் கியூ.சி கௌரவ எஸ்.ஜே.வி.செல்வநாயகம் கியூ.சி ஆகியோரின் தலைமையில் இயங்கிய அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், இலங்கை தமிழரசு கட்சி ஆகியன இணைந்து செயற்பட்ட காலத்திலிருந்து ஆரம்பிக்க உள்ளேன்.

இலங்கையின் புதிய குடியரசு அரசியல் சாசனம் 1972ம் ஆண்டு பெரும் அரசியல் நெருக்கடியை உருவாக்கியவேளை கௌரவ.எஸ்.ஜே.வி செல்வநாயகம் கியூ.சி அவர்களின் வேண்டுகோளுக்கமைய தனது கட்சியாகிய அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியை இலங்கை தமிழரசு கட்சியுடன் இணைக்க கௌரவ பொன்னம்பலம் அவர்கள் சம்மதம் தெரிவித்து தமிழர் ஐக்கிய முன்னணி என்ற புதிய கட்சியை ஆரம்பித்து பின்னர் ஒரு மாநாட்டில்; தமிழர் விடுதலைக் கூட்டணி என்று பெயர் மாற்றம் பெற்றது.

இக்கட்சியின் நிர்வாகத்தில் கௌரவ எஸ்.ஜே.வி. செல்வநாயகம் தலைவராகவும் தமிழரசு, தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் திருவாளர்கள்.அ.அமிர்தலிங்கம், மு. சிவசிதம்பரம் ஆகியோர் இணை செயலாளர்களாகவும் இரு கட்சிகளையும் சேர்ந்த திருவாளர்கள் மு. ஆலாலசுந்தரம், வீ.ஆனந்தசங்கரி ஆகியோர் பிரச்சார செயலாளர்களாகவும், திருவாளர்கள் வீ.தர்மலிங்கம், தா. திருநாவுக்கரசு ஆகியோர் இணை பொருளாளர்களாகவும் இரு சாராரையும் சார்ந்த பல சிரேஷ்ட சட்டத்தரணிகள் திருவாளர்கள் மாஜி மேல்சபை உறுப்பினர் எஸ்.ஆர்.கனகநாயகம், ஆ.சங்கரப்பிள்ளை, இ.விசுவநாதன், வெ.யோகேஸ்வரன் க.செல்வராசா எஸ்.ராஜநாயகம். எஸ்.நடராஜா ஆகியோருடன் மூத்த தலைவர்கள் பலர் இணைந்து கொண்டனர். திரு. எஸ்.சி. சந்திரஹாசன் சட்டத்துறை செயலாளராக செயற்பட்டார்.
கிளிநொச்சித் தொகுதியை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவபடுத்திய அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நான் தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆரம்பகால உறுப்பினர் ஆவேன். திரு.ஆர்.சம்பந்தன் அப்போது தமிழர் விடுதலைக் கூட்டணியில் சேரவில்லை. அதேபோல் திரு. சேனாதிராஜா அவ்வேளையில் குடியரசு அரசு எதிர்ப்பு சுலோகங்கள் எழுதியமையால் தற்காலிகமாக சிறையில் வைக்கப்பட்டிருந்தார்.

1972ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற பொதுத்தேர்தலில் நாங்கள் 18 பேர் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டோம். நியமன சபை தலைவராக செயற்பட்ட கௌரவ. தலைவர் எஸ்.தொண்டமான் அவர்கள் திருவாளர் சம்பந்தன் அவர்களை திருகோணமலை தொகுதி வேட்பாளராகவும் திரு.அ.அமிர்தலிங்கம் அவர்களை காங்கேசன்துறை தொகுதிக்கும் நியமித்து இருவரும் வெற்றி பெற்றிருந்தார்கள் வட்டுக்கோட்டைக்குரிய திரு.அ.அமிர்தலிங்கம் அவர்கள் எவ்வாறு காங்கேசன்துறைக்கும் திரு.எஸ் நடராஜா அவர்கள் ஏன் காங்கேசன்துறைக்கு நியமிக்கப்படவில்லை என்பதையும் திரு. மாவை சேனாதிராஜா நன்கு அறிந்திருந்தார்.
தமிழர் விடுதலைக் கூட்டணி 1972ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து கட்சி அவ்வப்போது எடுக்கின்ற தீர்மானங்களுக்கமைய பல்வேறு போராட்டங்களிலும் தீவிரமாக ஈடுபட்டிருந்தது. எமது தலைவர்கள்; பலர் சிறைக்கும் சென்றனர். அவ்வாறே நானும் ஒரு தடவை சிறை சென்றிருக்கின்றேன். கைது செய்யப்பட்ட எமது இளைஞர்கள் சிலர் சித்திரவதை செய்யப்பட்டும், மற்றும் சிலர் சித்திரவதை செய்யப்பட்டு கொலையும் செய்யப்பட்டனர்.

தலைவர்களும் தொண்டர்களும் பலவிதமான துன்பங்களை அனுபவித்தனர். பாராளுமன்ற கால எல்லையை நீட்டிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட பொதுஜன வாக்கெடுப்பை ஆட்சேபித்து 18 பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தமை ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கு இலங்கையிலோ அல்லது வேறு எந்த நாட்டிலோ இத்தகைய பெரும்பங்களிப்பு செய்யவில்லை. 1983ம் ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் நாம் பாராளுமன்றத்தை விட்டு விலகிய வேளையில் பாராளுமன்றம் ஆறாவது திருத்தத்தை அமுல்ப்படுத்தி தமிழர் விடுதலைக் கூட்டணியின் கொள்கைகளை ஆதரிக்கின்ற எவரும் தேர்தலில் போட்டியிட முடியாதவாறு ஒரு சத்திய பிரமானம் செய்யும் சரத்தை சட்டத்தில் திணித்திருந்தது.

அடுத்த ஆறு ஆண்டுகளும் எமது பாராளுமன்ற பதவிகள் காலியாகவே இருந்தன. எங்கள் ஒவ்வொருவரிடமும் இன்றைய தலைமுறைக்கு புரியாத அல்லது கேள்விப்படாத நீண்ட சோகக்கதைகள் நிறைய உண்டு. அத்தகைய பெருந்துன்பங்களை அனுபவித்த ஆயிரக்கணக்கானோர் இருக்கும் போது திரு.மாவை சேனாதிராஜா போன்ற இரண்டொருவர்தான் பெரும் தியாகங்களை செய்தார்கள் என இன்றைய தலைமுறையினர் நினைக்கின்றார்கள். இந்தக்காலத்தில் பல சம்பவங்கள் நடந்துள்ளன.

1983ம் ஆண்டு இடம்பெற்ற இனக்கலவரம், தமிழர் விடுதலைக் கூட்டணியினரின் பாராளுமன்ற இராஜினாமா, இந்தியாவில் சிலரின் தற்காலிக குடியேற்றம் திருவாளர்கள் ஆலாலசுந்தரம், தருமலிங்கம் ஆகியோரின் படுகொலைகள், இந்திய-இலங்கை ஒப்பந்தம் ஆகியவற்றுடன் இன்னும் பல நீண்டவொரு இடவெளிக்குப் பின் 1989ம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணி தேர்தலில் போட்டியிட்டு நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற நிலைமை காரணமாகவும் சில ஆயுதம் தாங்கிய குழுக்களின் செயற்பாடுகள் காரணமாக தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு தேசிய பட்டியலில் மாத்திரம் கிடைத்த ஒரேயொரு ஆசனத்தை முன்னாள் எதிர்கட்சித்தலைவர் திரு.அ.அமிர்தலிங்கம் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

அதேநேரம் அந்த ஆசனத்தில் வேறும் சிலர் அக்கறை காட்டினர். நியமனம் பெற்று ஆறு மாதங்களில் திரு.அ.அமிர்தலிங்கம் அவர்கள் படுகொலை செய்யப்பட்டார். திரு.அ.அமிர்தலிங்கம் அவர்களுடன் மிக நெருங்கி பழகியவர்களும் சம்பவம் நடந்த இடத்தில் பிரசன்னமாக இருந்தவர்கள் சிலர் இருந்தும் சாட்சியமளிக்க எவரும் முன்வரவில்லை. அவர்களுள் திரு. மாவை சேனாதிராஜா அவர்களும் ஒருவராவார்.
திரு.அ.அமிர்தலிங்கம் அவர்களின் வெற்றிடத்துக்கு அக்கறை காட்டியவர்கள் பலர் இருந்தனர். அவ் வெற்றிடத்துக்கு ஒருவரை நியமிப்பது சம்பந்தமாக 16-09-1989 அன்று கூட்டப்பட்ட கூட்டத்திற்கு நானே தலைமை தாங்கி திரு. மாவை சேனாதிராஜா அவர்களை நானே பிரேரித்தேன். பல நாட்களுக்குப் பின்பு கட்சித் தலைவர் பதவியையும் பாராளுமன்ற உறுப்பினர் பதவியையும் தனக்கே வழங்குமாறு திரு. மாவை சேனாதிராஜா கேட்டதாக நான் அறிந்தேன். இதனை திரு.அ.அமிர்தலிங்கம் குடும்பத்தினர் அனைவரும் அறிந்திருந்தனர். கூட்டத்தில் சமூகமளித்தவர்களில் வேறு சிலரும் அப்பதவியை எதிர்பார்த்து வந்திருந்தனர்.

இதே நோக்கத்துடன் இந்தியாவிலிருந்து திரு.ஆர்.சம்பந்தனும் உறுப்பினர் தேர்வை அடுத்தக் கூட்டத்தில் நடத்தலாமென பிரேரித்த கலாநிதி நீலன் திருச்செல்வம் அவர்களும் அடங்குவார். அதற்கமைய 05-10-1989ம் அன்று எனது தலைமையில் கூட்டப்பட்ட கூட்டத்தில் திரு.மாவை சேனாதிராஜாவின் பெயரை நான் பிரேரித்ததும் அவா தெரிவு செய்யப்பட்டார். திரு. மாவை சேனாதிராஜாவின் நியமனத்தை அங்கீகரிக்குமாறு தேர்தல் ஆணையாளரை சம்மதிக்க வைக்க நாம் பெரும் சிரமப்பட்டோம் என்பதை திருவாளர்கள் ஆர்.சம்பந்தன், மாவை சேனாதிராஜா ஆகியோர் நன்கு அறிவார்கள்.

காரணம் தேர்தல் ஆணையாளரிடம் உள்ள ஆவணங்களில் திரு.அ.அமிர்தலிங்கம் அவர்களே தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளராக குறிக்கப்பட்டிருந்தமையே. நடவடிக்கை குழு (பொலிட் பீரோ) உறுப்பினர் என நாம் மூவரும் கொடுத்த வேண்டுகோளுக்கமையவே திரு.மாவை சேனாதிராஜாவின் நியமனம் தேர்தல் ஆணையாளரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதை திரு. மாவை சேனாதிராஜாவும், திரு.ஆர்.சம்பந்தன் அவர்களே அதனை உறுதி செய்வார் என நம்புகிறேன். அப்படி செய்யாதிருந்தால் திரு. மாவை சேனாதிராஜா அவர்கள் அப்பதவிக்கு கனவிலும் வந்திருக்க முடியாது.

எது எப்படியிருந்தாலும் மிக சொற்ப உறுப்பினர்களே இக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர் என்பதும் அவர்களில் அநேகர் கட்சி உறுப்பினர்கள் அல்ல கட்சி ஆதரவாளர்களே என்பதுதான் உண்மை. திரு. அ.அமிர்தலிங்கம் அவர்களின் படுகொலையைத் தொடர்ந்து முக்கிய கட்சி உறுப்பினர்கள்கூட நீண்டகாலமாக எமது காரியாலயத்துக்கு வருவதில்லை. அக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் இருவர் கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் மாவட்டசபை உறுப்பிரான திரு.நடேசு என்பவராகும்.

பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட திரு.மாவை சேனாதிராஜா பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கிடைக்கின்ற வாகனம் உட்பட சகல சலுகைகளையும் அனுபவித்தார். ஆனால் இலவசமாக பெற்றுக்கொள்ளக்கூடிய பிரதி இயந்திரத்தை இவரிடம் 25,000 பணம் கொடுத்தே பெற்றோம். இதுவரை அவருடைய தெரிவின் போது மௌனமாக இருந்து செயற்பட்ட சிலரின் பெருந்தன்மைக்கு நன்றி தெரிவித்தது கிடையாது. நிதி பற்றாக்குறையால் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த கட்சிக்கு வரி விலக்களிக்கப்பட்ட வாகனத்தை விற்று கிடைத்த பணத்தில் ஒரு சதமேனும் அவர் கட்சிக்கு வழங்கவில்லை.

துரதிஸ்டவசமாக இதுபோன்ற விடயங்களை பேசுவது மனதுக்கு வருத்தத்தை கொடுத்தாலும் இது அவராக தேடிக் கொண்டதாகும். இன்னும் பல விடயங்கள் தொடரலாம். 08-08-1994 இல் இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் கூட சில குழுக்களின் தலையீட்டால் வடக்கில் ஒரு ஆசனத்தையேனும் தமிழர் விடுதலைக் கூட்டணியால் பெற்றுக்கொள்ள முடியவில்லை. ஆனால் கிழக்கு மாகாணத்தில் தேசிய பட்டியலில் கிடைத்த ஒரு ஆசனத்துடன் மொத்தம் ஐந்து ஆசனங்களை கூட்டணி கைப்பற்றியிருந்தது.

திகாமடுல்ல தொகுதியில் போட்டியிட்ட திரு.மாவை சேனாதிராஜா அவர்களும் திருகோணமலை தொகுதியில் போட்டியிட்ட திரு.ஆர்.சம்பந்தன் அவர்களும் தேசிய பட்டியலில் கிடைத்த ஆசனத்தை தங்களுக்கே தரும்படி அடம் பிடித்தனர். ஆனால் கட்சியின் தலைவர் திரு.மு.சிவசிதம்பரம் அவர்கள் அப்பதவியை திரு.நீலன் திருச்செல்வம் அவர்களுக்கு வழங்கினார். தேர்தலில் தோல்வியுற்ற பல வேட்பாளர்கள் இருந்தும் இப்பதவிக்காக போராடியவாகள் இவர்கள் இருவருமே.

ஆகையால் கட்சியால் எதனையும் செய்ய முடியவில்லை. இந்தவேளையில் திருகோணமலை பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டிருந்த நண்பன் திரு.அ.தங்கதுரை படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து காலியான அவ்விடத்துக்கு திரு.ஆர்.சம்பந்தன் அவர்கள் நியமிக்கப்பட்டார். ஆனால் திரு.மாவை சேனாதிராஜா அவர்களும் அவரால் தூண்டப்பட்ட ஆதரவாளர்களும் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தனர். திரு.மு.சிவசிதம்பரம் அவர்கள் உடல் நலம் குன்றி இந்தியாவில் இருந்தமையால் இப்பொறுப்பு எனது ஆகியது.


31-05-1999 அன்று கலாநிதி நீலன் திருச்செல்வம் அவர்களுக்கு ஐந்து பக்கத்தில் நிலைமைமைய விளக்கி நீண்டவொரு கடிதம் எழுதி அவருடைய பாராளுமன்ற பதவியை இராஜினாமா செய்து அவ்விடத்துக்கு திரு.மாவை செனாதிராஜாவை நியமிக்குமாறு கேட்டிருந்தேன். அவரும் இதற்கு சம்மதம் தெரிவித்திருந்தார். அகதி அந்தஸ்த்து கோருவோர் விடயமாக அவசரமாக ஜேர்மெனிக்கு செல்ல வேண்டியிருந்ததால் கலாநிதி நீலன் திருச்செல்வம் அவர்களுக்கு 05-07-1999 அன்று அனுப்பிய கடிதத்தில் நான் திரும்பி வரும்வரை காத்திராமல் அவ்விடத்துக்கு திரு.மாவை சேனாதிராஜாவை நியமிக்குமாறு கேட்டிருந்தேன்.

துரதிஷ்டவசமாக கலாநிதி நீலன் அவர்கள் படுகொலை செய்யப்பட்டமையால் அவரின் ஈமக்கிரியைகளில் கலந்து கொள்வதற்காக உடனடியாக கொழும்புக்கு திரும்ப வேண்டிய நிலைமை எனக்கு ஏற்பட்டது. இரு நாட்கள் கழித்து இந்த உறுப்பினர் நியமனம் சம்பந்தமாக பேசுவதற்கு கட்சியின் செயலாளர் நாயகம் திரு.ஆர்.சம்பந்தன் அவர்களின் அழைப்பின் பேரில் பாராளுமன்ற கௌரவ உறுப்பினர்களான ஜோசப்பரராஜசிங்கம், பி.செல்வராஜா, எஸ்.துரைராஜசிங்கம் ஆகியோரும் மற்றும் மாவை சேனாதிராஜா, எஸ்.தியாகராஜா நான் ஆகியோர் கலந்து கொண்டோம்.

இப்பதவிக்கு யாரை நியமிப்பது என்ற திரு.ஆர்.சம்பந்தனின் கேள்விக்கு நான் கலாநிதி நீலனுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டவற்றையும் தெரிவித்து எனது ஆதரவையும் திரு.மாவை சேனாதிராஜாவுக்காக தெரிவித்திருந்தேன். அதன்படி திரு.மாவை சேனாதிராஜாவை நியமிப்பதாக அறிவித்ததும் பாராளுமன்ற ஓய்வூதியம் பெற தனக்கு தகைமை கிடைத்துவிட்டதென அவர் மகிழ்ச்சியடைந்தார். அக்கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த அனைவரும் எனது தீர்மானத்தை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். பின்பு அவர்களில் சிலர் இரண்டாவது தடவையாகவும் ஒரே நபருக்கு நியமன உறுப்பினர் பதவியை வழங்கியது தொடர்பாக குற்றம் சுமத்தினர்.

என்னைப் பொறுத்தவரையில் கட்சியின் ஒற்றுமையை நிலைநாட்டுவதற்காக இதனையொரு தியாகமாக கருதி செயற்பட்டேன். நான் அதனை விரும்பியிருந்தாலும் மிக இலகுவாக அப்பதவி கிடைத்திருக்கும். அன்று நான் விட்ட தவறினால் இப்பதவியை வேறு ஒருவருக்கு கொடுக்காமல் விட்டதையிட்டு சில கட்சி உறுப்பினர்கள் என் மீது கோபம் கொண்டிருந்தனர். அடுத்த பாராளுமன்றப் பொதுத்தேர்தல் 10-10-2000 பிரச்சினைகள் எதுவுமின்றி நடைபெற்று முடிந்தது. ஒரு வருடத்தின் பின்னர் பாராளுமன்றத்துக்கான பொதுத்தேர்தல் 05-12-2001 இல்; நடைபெற்றது.

வேட்பாளர்கள் நியமனத்துக்கு முன்பு கட்சியில் அக்கறை கொண்ட முக்கிய பிரமுகர்களான திருவாளர்கள் வீ.கைலாயபிள்ளை, கந்தையா நீலகண்டன், வீ.ஆர்.வடிவேற்கரசன், நிர்மலன் கார்த்திகேயன்,எஸ்.தியாகராஜா, எஸ்.ஜெயபாலசிங்கம் ஆகியோர் அழைப்பின் பேரில் தமிழ் அரசியல் கட்சிகளாகிய தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகியவற்றை இணைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டது.

இந்த அமைப்பு தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது. தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளர்களை தெரிவு செய்வதற்காக கூடியபோது அனைவருக்கும் அதிர்ச்சி தரக்கூடிய வகையில் திரு. மாவை சேனாதிராஜா அவர்கள் யாழ் தேர்தல் மாவட்டத்தில் தானே முதன்மை வேட்பாளராக போட்டியிட வேண்டுமென கோரிக்கை விடுத்தார். நியமனக் குழுவிலிருந்த உறுப்பினர்கள் மிக வெறுப்புடனும் கோபத்துடனும் இக்கோரிக்கையை பொருட்படுத்தாமல் விட்டனர்.
இத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் இரு பலமான வேட்பாளர்களை தெரிவு செய்து தம் மூவருக்கும் வாக்குக் கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இச் செயல் நேர்மையற்ற செயலெனவும் சுயநல நோக்கம் கொண்டதெனவும் அனைவராலும் கண்டிக்கப்பட்டது. இத் தேர்தலில் திரு.மாவை சேனாதிராஜா அவர்களுக்கு 33,000 வாக்குகளும் எனக்கு 36,000 வாக்குகளும் கிடைத்தன. திரு மாவை சேனாதிராஜாவின் சுயரூபம் இத் தேர்தலுடன் வெளிப்பட்டு கூட்டணியை முற்றுமுழுதாக அழிப்பதற்கு வழிவகுத்தது.

2001ம் ஆண்டு தேர்தலுக்கு பின்னர் திரு. பிரபாகரன் வேண்டுகோளுக்கிணங்க புதிதாக தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கிளிநொச்சிக்கு விஜயம் செய்தபோது தரமான உணவுகளுடன் பகலும் இரவும் உபசரிக்கப்பட்டோம். சில நாட்களுக்குப் பின்பு விடுதலைப் புலிகள் தாங்கள் தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமென தமிழர் விடுதலைக் கூட்டணியிடம் கோரிக்கை விடுத்தது. அதை நான் ஏற்றுக்கொள்ள மறுத்தேன். ஏனெனில் அவர்கள் அப்படியில்லை என்றும் அத்தகைய கோரிக்கை எதிர்பார்த்த பலனை தராது என்றும் கூறியிருந்தேன்.

2003-03-26ம் திகதி ‘தி ஐலண்ட்’ பத்திரிகை பின்வருமாறு செய்தி வெளியிட்டிருந்தது. “தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் திரு.வீ.ஆனந்தசங்கரி அவர்கள் தனது கட்சி விடுதலைப்புலிகளின் மேலாதிக்கத்தை ஏற்கவில்லையென்று கூறியிருந்தார். விடுதலைப் புலிகள் சமாதான பேச்சுவார்த்தைகளில் அரசாங்கத்துடன் ஈடுபடுவதற்கும் அது போன்ற வேறு விடயங்களுக்கும் விடுதலைப் புலிகளுக்கு ஏக பிரதிநிதித்துவ அந்தஸ்து வழங்கத் தயார் என்று கூறியிருந்தார்”
அனைவரும் இந்த நிலைமையை கடைபிடித்திருந்தால் பல கொலைகள் தடுக்கப்பட்டு பிரபாகரன் உட்பட ஆயிரக்கணக்கான இளைஞர்களின் உயிர்களை காப்பாற்றியிருக்கலாம்.
மிக்க பாசத்தோடு ஈழத்து காந்தி என அழைக்கப்படுகின்ற கௌரவ எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களுடைய அகிம்சை கொள்கையின் அடிப்படையில் அவர்களால் உருவாக்கப்பட்ட அரசியல் கட்சியே தமிழர் விடுதலைக் கூட்டணியாகும். படிப்படியாக திரு.மாவை சேனாதிராஜா அவர்களுடைய நடவடிக்கைகள் அதிர்ச்சியை கொடுக்க ஆரம்பித்தன.

அவர் இரு தடவைகள் எனது முயற்சியால் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டு மூன்றாவது தடவையாக எமது சகல உதவிகளையும் பெற்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் பாராளுமன்றம் சென்றவர். இலங்கை தமிழரசு கட்சியை மீள இயங்க வைக்க அவர் மேற்கொண்ட முயற்சி, திருவாளர்கள் தந்தை செல்வநாயகம். அ.அமிர்தலிங்கம் ஆகியோர் அவர்மீது கொண்டிருந்த நம்பிக்கைக்கு துரோகம் செய்வதாக அமைந்துள்ளது.

இந்த பாராளுமன்ற உறுப்பினர் திரு. மாவை சேனாதிராஜா அவர்களின் நேர்மை பற்றி ஊடகங்களில் வந்த பின்வரும் செய்தி பொதுமக்களின் சிந்தனையில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமதி அமிர்தலிங்கம் அவர்கள் தனது அறிக்கையொன்றில்,
“எனது கணவர் விரும்பத்தகாத சக்திகள் எவையும் தமிழரசு கட்சியின் சின்னத்தையும் அதன் பெயரையும் துஷ்பிரயோகம் செய்யக்கூடாது என்ற ஒரே காரணத்துக்காகவே எனது கணவர் தமிழரசு கட்சியின் பதிவை பாதுகாத்து வந்தார்.

தமிழரசு கட்சியை அவர் ஒருபோதும் புனரமைக்க எண்ணவில்லை. அவரால் வளர்க்கப்பட்ட சிலர் தமிழரசு கட்சியின் பெயரை துஷ்பிரயோகம் செய்யயும், அதனை புனரமைக்கவும் முயல்வது கவலைக்குரியது. இவர்கள் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையையே இவர்கள் முறியடித்திருக்கிறார்கள். எனவே தமிழரசு கட்சியின் புனரமைப்புக்கு நான் அங்கீகாரமோ அல்லது ஆதரவோ அளிக்கவில்லை என்பதை எல்லோருக்கும் திட்டவட்டமாக தெளிவுப்படுத்திக் கொள்கிறேன். அத்துடன் இது எமது பெரும் தலைவர்களால் உருவாக்கப்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டணியை ஒழித்துவிடும் ஒரு தந்திரோபாயம் என்ற கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்”.
இதற்கு பதிலளித்த திரு.மாவை சேனாதிராஜா 03-11-2003 வெளியிட்டுள்ள அறிக்கையில் “தமிழரசு கட்சியும் அதன் இலட்சியமும் எம்மிடம் பாதுகாப்பாகவே இருக்கின்றன”. என ஆரம்பித்து முன்னுக்குப் பின் முரணாக உண்மைக்கு புறம்பான விடயங்களை உள்ளடக்கி நீண்டவொரு அறிக்கை வெளியிட்டுள்ளார். பின்வரும் செய்தி இவரின் கூற்றில் உள்ள நேர்மையற்ற தன்மையை தெளிவாக வெளிப்படுத்துகிறது.

14-10-2003 அதாவது 18 நாட்களுக்கு முன்பு மாவை கிளிநொச்சியில் விடுதலைப்புலிகளை சந்திக்கிறார் என்ற தலைப்பில் வெளிவந்த செய்தி பின்வருமாறு தமிழரசு கட்சியின் புனரமைப்பில் ஈடுபட்டுள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கிளிநொச்சிக்கு சென்று விடுதலைப் புலிகளின் அரசியல்துறை உதவி பொறுப்பாளர் தங்கனை சந்தித்து கூட்டங்களை நடத்தினார். தமிழரசு கட்சியின் புனரமைப்பு விடுதலைப் புலிகளின் பணிப்புரைக்கேற்ப மேற்கொள்ளப்பட்டது.

இவரின் திருகுதாளங்களை மேலும் உறுதிப்படுத்த 19-10-2003 அன்று ஆங்கில பத்திரிகையில் வெளியாகிய இவரின் பேட்டி இவரின் சுயரூபத்தை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. அப்பேட்டியில் விடுதலைப் புலிகளின் பணிப்பின்பேரில்தான் தமிழர் விடுதலைக் கூட்டணி தலைமை மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர முயற்சிக்கிறீர்களா? என்ற கேள்விக்கு அக்கருத்தை தான் நிராகரிப்பதாக கூறி தமிழரசு கட்சி பிரமுகர்கள் வேண்டுகோளுக்கமையவே மாநாட்டை கூட்ட முயற்சிப்பதாக தெரிவித்தார்.

ஆனால் 1972 இலிருந்து 2004 பெப்ரவரி மாதம் வரை அதாவது 32 ஆண்டுகளில் யாராவது ஒருவர் தமிழரசு கட்சியில் அங்கத்தவராக சேர்ந்ததாக வரலாறு இல்லை. பொய்க்கும் புரட்டுக்கும் கூட எல்லை இருக்க வேண்டும். இன்னுமொரு முக்கிய விடயத்தை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். இலங்கை தமிழரசு கட்சியை தனது கணவர் ஏன் பதிந்து வைத்திருந்தார் என்ற காரணத்தை திருமதி அமிர்தலிங்கம் அவர்கள் தனது அறிக்கையில் வெளிப்படுத்தியிருந்தார்.

அதே காரணத்தினால்தான் 2004ம் ஆண்டு தமிழரசு கட்சியின் தலைவர் பதவியை வகித்த திரு. க.சின்னத்துரை அவர்கள் 2004ம் ஆண்டு பொதுத் தேர்தலில் தமிழரசு கட்சியின் சின்னத்தையும், கட்சியின் பெயரையும் துர்ப்பிரயோகம் செய்த முயற்சித்தபோது அதனை ஆட்சேபித்து வழக்கு தொடுக்க போவதாகவும் இந்த முயற்சியை அனுமதிக்க வேண்டாமென தேர்தல் ஆணையாளரையும் கேட்டிருந்தார்.

ஆனால் திரு. மாவை சேனாதிராஜா அவர்கள் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் திரு.சு.ப.தமிழ்ச்செல்வனின் அதிகாரத்தை பாவித்து திரு.க.சின்னத்துரை அவர்களையும் மௌனிக்க செய்த பெருமை அவருக்கே உண்டு. இன்றும்கூட தமிழரசு கட்சியின் தலைவர், செயலாளர் பதவியை வகிக்கின்ற தகுதி எவருக்கும் இல்லை. ஏனெனில் கட்சி முறையாக புனரமைக்கப்படவில்லை.

நாம் மிகவும் கௌரவம் பேணுகின்ற தலைவர்களாகிய திருவாளர்கள் எஸ்.ஜே.வி.செல்வநாயகம், ஜீ.ஜீ.பொன்னம்பலம், அ.அமிர்தலிங்கம், மு.சிவசிதம்பரம் போன்றவர்களை இவரின் இச்செயல்கள் அவமதிப்பதோடு உண்மையாகவும் விசுவாசமாகவும் செயற்படுகின்ற தமிழர் விடுதலைக் கூட்டணி தொண்டர்களையும், ஆதரவாளர்களையும் அவமதிக்கின்றது. பெரும் தலைவரை ஈழத்து காந்தி என பாசத்தோடு மதிப்பது போல் பாசாங்கு செய்பவர்கள் தமது நன்மைக்காகவே அவரின் பெயரை பயன்படுத்துகின்றனர். இதற்கு தலைமை தாங்குகின்றவர் திரு. மாவை சேனாதிராஜா அவர்களேயாகும்.
தமிழர் விடுதலைக் கூட்டணி மரியாதை நிமித்தம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் அவர்களை கொண்டு இலங்கை தமிழரசு கட்சியின் வெள்ளிவிழா 18-12-1974 இல் கொழும்பு வெள்ளவத்தை இராமகிருஷ்ணா மண்டபத்தில் கொண்டாடப்பட்ட போது ‘மூதறிஞர்’ பட்டம் வழங்கப்பட்டது. அவ்விழாவில் மக்கள் சார்பாக அன்னாருக்கு பொன்னாடை போர்த்துகின்ற கௌரவம் எனக்கு வழங்கப்பட்டது.

தந்தை செல்வா அவர்கள் இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் கலந்து கொண்ட இறுதி நிகழ்ச்சி இதுவேயாகும். அது மட்டுமல்ல இதன் பின்னர் 2004ம் ஆண்டு தமிழரசு கட்சியின் பெயர் துஸ்பிரயோகம் செய்யப்படும்வரை 30 ஆண்டுகள் நடைபெற்றத் தேர்தல்கள், வகிக்கப்பட்ட பதவிகள் அத்தனையும் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பானதே.
இலங்கை தமிழரசு கட்சியின் வெள்ளிவிழா கொண்டாட்டத்தின் பின் அவர் இலங்கை தமிழரசு கட்சியை புனரமைக்க கனவில் கூட எண்ணியதில்லை. அனைத்துத் தேவைகளுக்கும் தமிழ் மக்களின் சார்பாக தமிழர் விடுதலைக் கூட்டணியே இருக்க வேண்டுமென விரும்பியிருந்தார். இதற்கு முன்னோடியாக தன் உயிருள்ள காலத்திலேயே தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமை பதவியை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் திரு.எஸ்.தொண்டமான் அவர்களுடனும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவர் திரு.ஜீ.ஜீ.பொன்னம்பலம் அவர்களுடன் பகிர்ந்து கொண்டார். இம் மூன்று தலைவர்களும் அமரர்களாகி விட்டார்கள் என்பதால் வேறு யாரும் குறுக்கு வழியில் அந்த ஆசனத்தில் அமர முடியாது.
1972ம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணி ஆரம்பிக்கப்பட்ட காலம் தொடக்கம் 2001ம் ஆண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோதும் அதன் பின்பும் 2004ம் ஆண்டு பொதுத் தேர்தல் வரை தமிழர் விடுதலைக் கூட்டணியே தொடர்ந்து இயங்கி வந்தது. சிலருடைய சுயநலம் காரணமாக தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு மாறாக செயற்பட்டவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கத்துவம் வகித்த கட்சிகளுக்கும் அறிவிக்காமல் தமிழர் விடுதலைக் கூட்டணியை நீக்கிவிட்டு இலங்கை தமிழரசு கட்சியை முறையற்ற வகையில் திரு.மாவை சேனாதிராஜா தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைத்துக் கொண்டார்.

தந்தை செல்வா அவர்களால் உருவாக்கப்பட்டு நீண்டகாலமாக முடக்கி வைக்கப்பட்டிருந்த தமிழரசு கட்சிக்கும் முறையற்ற வகையில் திரு. மாவை சேனாதிராஜா அவர்களால் எவரோ ஒருவரின் தூண்டுதலுக்கிணங்கி மீண்டும் மீள்புனரமைப்பு செய்த தமிழரசு கட்சிக்கும் சட்டரீதியாக எதுவித தொடர்பும் இருக்கவில்லை. அப்படியிருந்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் தமிழர் விடுதலைக் கூட்டணியை நீக்கியதோ அன்றேல் அதனிடத்தில் தமிழரசு கட்சியை இணைத்துக் கொண்டதோ நியாயப்படுத்த முடியாத செயலாகும் என்பது மட்டுமல்ல தமிழ் இனத்தையே பாதிக்கக்கூடிய பாரதூரமான விளைவுகளை உருவாக்கியதும் இந்த சம்பவமே.
2004 ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலே நாட்டில் ஏற்பட்ட மிக மோசமான அரசியல் பேரழிவை உண்டாக்கி நாட்டில் என்றும் நடக்காத வகையில் ஜனநாயகத்தை தடம்புரள வைத்தமைக்கு திருவாளர்கள் மாவை சேனாதிராஜா, ஆர்.சம்பந்தன் அவர்களே பொறுப்பேற்க வேண்டும். இதற்கு முக்கிய காரணம் 2004ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பால் வெளியிடப்பட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்றும் அவர்களே தமிழ் மக்களின் தேசிய தலைமை என்றும் தமிழ் மக்கள் தமிழரசு கட்சிக்கே வாக்களிக்குமாறு கோரப்பட்டது.

இக்காலத்தில் யுத்தம் முடியும் வரைக்குமான விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் அனைத்துக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பே பொறுப்பேற்க வேண்டும் என்ற நிலையை ஏற்படுத்தியது. தேர்தல் அதிகாரிகளின் பணியை இத்தேர்தலில் விடுதலைப் புலிகளே கையாண்டனர். அவர்களுடைய செயற்பாட்டால் தேர்தலில் வென்ற 22 ஆசனங்களில் இரண்டு திரு. மாவை சேனாதிராஜா, திரு ஆர்;.சம்பந்தன் அவர்களுக்கும் கிடைத்தது.

இந்த வெற்றி பலாத்காரமாக திணிக்கப்பட்டமையால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் 22 பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக தமது பாராளுமன்ற பதவிகளை இராஜினாமா செய்திருக்க வேண்டும். தேர்தல் கண்காணிப்புக்குழு வடக்கு கிழக்கு மாகாணத்தில் மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை அதற்கு சட்டத்தில் இடமில்லையென ஆணையாளரால் நிராகரிக்கப்பட்டது.
உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றில் அவர்கள் நீக்கப்பட்டிருக்க வேண்டும் அன்றேல் பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டிருக்க வேண்டும். இதில் எதனையும் அரசு மேற்கொள்ளவில்லை. 225 அங்கத்தவர்களைக் கொண்ட பாராளுமன்றத்தில்; 10 வீதமாகவுள்ள இவர்கள் தொடர்ந்து பாராளுமன்றத்தில் செயற்பட்டு பாராளுமன்றம் கலைக்கப்படும் வரை ஆறு ஆண்டுகள் செயற்பட்டமை சட்ட விரோதமான முறையாகும்.

இவர்கள் அடுத்தத் தேர்தலிலும் வெறும் 10 வீதமான வாக்குகளை மட்டும் பெற்று 14 ஆசனங்களை கைப்பற்றினர். இத் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி வேட்பாளர்கள் அத்தனை பேரும் தோல்வியை அடைந்தனர். இவர்களிடமிருந்த பாராளுமன்ற உறுப்பினாகளின் எண்ணிக்கை 18 ஆகும். அவர்கள் தோற்கவில்லை எதுவித தேர்தல் வேலைகளிலும் ஈடுபட விடாது பல்வேறு தந்திரங்களை கையாண்டு தோற்கடிக்கப்பட்டனர்.

இதுவரை இச் சீர்கேட்டை சரிப்படுத்த அரசு எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் வேடிக்கையாதெனில்; காலையில் தோல்வியுற்ற திரு. மாவை சேனாதிராஜா மாலையில் வெற்றிபெற்றமையாகும். எல்லாவற்றக்கும் மேலாக இந்த இடைப்பட்ட காலத்தில் திருவாளர்கள் கிங்ஸ்லி ராசநாயகம். என்.ரவிராஜ், தி.மகேஸ்வரன், அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர், ராஜன் சத்தியமூர்த்தி ஆகியவருடன் 500 இற்கு மேற்பட்ட அப்பாவிகளின் படுகொலைக்கும் 1500 இற்கும் மேற்பட்ட காயமுற்றவர்களுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பை தவறாக வழிநடத்திய திருவாளர்கள் ஆர்.சம்பந்தன், மாவை சேனாதிராஜா ஆகிய இருவருமே பொறுப்பேற்க வேண்டும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகித்த ஏனைய அங்கத்துவ கட்சிகள் வெறும் அப்பாவிகளும் அனுதாபத்துக்குரியவர்களுமாவர். இவர்களுக்கு பதவியை பெற்றுக்கொடுத்த விடுதலைப் புலிகளையே போர்குற்ற விசாரணைக்கு உள்ளாக்க வேண்டும் என்று அடம் பிடிக்கின்றனர்.
தமிழர் விடுதலைக் கூட்டணியும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் தனது ஆரம்பகாலம் தொடக்கம் எத்தகைய முக்கியமான பங்களிப்பை செய்திருக்கிறது என்பதை உலகுக்கு காட்ட அவைகளின் சுருக்கமான வரலாற்றை இங்கே குறிப்பிட்டுள்ளேன்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆரம்பம் சேர் பொன்னம்பலம் இராமநாதன், சேர்.பொன்னம்பலம் அருணாச்சலம் போன்ற தலைவர்களுக்கு அடுத்ததாக கணிக்கப்படக் கூடிய இருவரால் செய்யப்பட்ட பெரும் தியாகத்தால் உருவானதாகும். அவ்விரு தலைவர்களாகிய எஸ்.ஜே.வி.செல்வநாயகம், ஜீ.ஜீ.பொன்னம்பலம் அவர்களும் தமிழ் மக்களின் நன்மை கருதி தமது சின்னஞ்சிறு பிரச்சினைகளை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு தமிழ் பேசும் மக்களுக்காக உழைக்கவும் ஒற்றுமையை நிலைநாட்டவும் ஒன்றுபட்ட அமைப்பாக உருவாக்கப்பட்டதே தமிழர் விடுதலைக் கூட்டணியாகும்.

காந்திய வழியை பின்பற்றும் ஈழத்து காந்தியெனவும் தந்தை செல்வா எனவும் பிரபல்யமாக அழைக்கப்படும் தந்தை செல்வா உருவாக்கிய தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆரம்பகால உறுப்பினர்கள் பலரில் நானும் ஒருவனாவேன். தந்தை செல்வா அவர்களால் உருவாக்கப்பட்டு செயலிழக்கப்பட்டு 26 ஆண்டுகளுக்குப்பின் ஒரு சிலரின் நலன்களுக்காக சம்பந்தப்பட்டவர்களின் ஆதரவு எதுவுமின்றி இலங்கை தமிழரசு கட்சியை மீண்டும்; புனரமைத்தமையானது இந்த நூற்றாண்டில் தமிழ் மக்களுக்கு நடந்தேறிய மிகப்பெரும் அரசியல் துரோகம் மட்டுமல்ல தமிழரசு கட்சியின் மீள்உருவாக்கம் ஏற்கக்கூடியதுமல்ல.
80 அடி உயரமான உச்சியில் உதயசூரியன் சின்னம் பொறிக்கப்பட்ட நினைவு தூண் அன்னார் தகனக்கிரியைகள் செய்யப்பட்ட யாழ் முற்றவெளி மைதானத்தில் கம்பீரமாக காட்சியளிக்கிறது மட்டுமல்ல நிரந்தரமாக அதே இடத்தில் சில சமயம் உலகம் அழியும் வரை நிலைத்து நிற்கும் என்பதில் சந்தேகமில்லை. அதற்கு அருகாமையில் அன்னாரின் அஸ்தியை கொண்டிருக்கும் கல்லறை தூணுக்கு துணையாக அமைந்துள்ளது.
இப்பெரியாரின்; வரலாற்றில் சில பகுதிகள் மறைக்கப்பட்டும் திரிக்கப்பட்டும் அன்னாரின் விருப்பப்படி செயலிழக்கச் செய்யப்பட்ட இலங்கை தமிழரசு கட்சியை புனரமைப்பு செய்ய முற்பட்டதால் ஏற்பட்ட குழப்பமாகும். அவரால் உருவாக்கப்பட்ட இலங்கை தமிழரசு கட்சிக்கும் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கும் என்ன நடந்தது என உலகுக்கு தெளிவுப்படுத்த வேண்டிய புனித கடமை எனக்குண்டு.

பொது மக்களுக்கும் உலகளாவியளவில் பரந்துவாழும் சம்பந்தப்பட்ட எம் மக்களுக்கு இத்தால் அறியத்தருவது யாதெனில் தமிழர் விடுதலைக் கூட்டணி தொடர்ந்து இன்றும் இயங்குகின்றது என்பதையும் இலங்கை தமிழரசு கட்சியை உருவாக்கியவர் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவராக தகனக் கிரியைகள் செய்யப்பட்டு அவரின் ஞாபகார்த்தமாக நன்றியுள்ள இலங்கை மக்களால் நினைவு தூபி நிறுவப்பட்டுள்ளது.

26 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கை தமிழரசு கட்சியை புனரமைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சியால் தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னேற்றம் விஷமத்தனமாக தடுக்கப்பட்டு ஸ்தாபகரும் அவமதிக்கப்பட்டுள்ளார்.எமது பெருந்தலைவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுமானால் தற்போதைய இயங்குகின்ற தமிழரசு கட்சி முடக்கப்பட வேண்டும் என்பதோடு சம்பந்தப்பட்டவர்கள் அதை கலைத்துவிட்டு தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைய வேண்டுமென்றும் அதற்கேற்ப விசுவாசமாகவும் அன்போடும் தந்தை செல்வாவை நேசிக்கின்றவர்கள் வருகைக்காக கூட்டணியின் கதவு திறந்தேயிருக்கும்.

அன்புடன் வி.ஆனந்தசங்கரி செயலாளர் நாயகம் – த.வி.கூ

ஐக்கிய இலங்கை எங்கிருந்து ஆரம்பமாக வேண்டும்.
ஏலையா க.முருகதாசன்

அண்மை நாட்களில் இலங்கைச் செய்தியொன்றை இணையத்தளம் ஒன்றில் வாசித்த போது எனக்குப் பெரும் மகிழ்ச்சி எற்பட்டது.
எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்த செய்தி இதுதான். இன முரண்பாடுகளைத் தீர்த்து வைப்பதற்கும் இனங்கள் மத்தியில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி இலங்கையர்கள் நாங்கள் என்ற பற்றுப் பாசத்தை மூவின மக்கள் உண்டாக்க ஒற்றுமையாக வாழ்வதற்கு ஒரு தொலைக்காட்சி அலைவரிசையைத் தொடங்ககப் போவதாக அமைச்சர் கூறிய வார்த்தைகள்தான் அது.
ஆகா இப்பொழுதாவது சிந்தித்தார்களே என மனம் ஆறதலடைந்தது. ஒரு குடும்பத்தில்கூட கணவன் மனைவி பிள்ளைகள் மத்தியில் அவரவர் உணர்வுகளைப் புரிந்து கொண்டு மற்றவர்கள் உரிமைகளை மதிக்கும் போதுதான் அந்தக் குடும்பத்தில் அமைதியும் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் ஏற்படும்.ஒரு சமூகம் என்பது தனிமனித அலகிலிருந்து குடும்பமாக பரிணாமம் பெற்று குடும்பங்களாக குழுத்தன்மை பெற்று நாட்டு மக்கள் என்ற நிலையை அடைகிறது.
எனவே ஒரு நாட்டினுடைய வலிமை, பொருளாதாரக் கட்டமைப்பு, சமூகக் கட்டமைப்பு போன்றவை அந்த நாட்டு மக்களின் ஒற்றுமையிலும் நல்லிணக்கத்திலுமே தங்கி இருக்கின்றது.ஒன்:றுக்கு மேற்பட்ட இனமக்கள் வாழும் இலங்கையின் கட்டமைப்புக்கு ஆழமான அஸ்திவாரம் போன்று இருக்க வேண்டியது மக்களிடையே காணப்படுகின்ற இனம் மதம் மொழி கடந்த மனிதர்கள் நாங்கள் அனைவரும் சமம் என்ற கருணைமிகு பார்வையோகும்.
மக்கள் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு அரசியல்வாதிகளின் கைகளிலேதான் உள்ளது.ஒரு தனிமனிதன் என்பவன் யார்?. அவன் பிறந்து வளர்ந்து இறக்குவரை அவனது வாழ்வு எப்படி இருக்க வேண்டும். பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் அவன் தன் வாழ்நாளை மகிழ்ச்சியாக வாழ்வதற்கு அவனுக்கு அரசு அளிக்கும் உத்தரவாதம் என்ன என்பதை அரசு உணர்தல் வேண்டும்.
ஒவ்வொரு மனிதனினதும் தேவைகளை உணரப்படுதலும், அவனது உரிமைகளை உணர்தலும் மிக முக்கியமானவை.இலங்கையில், இவையாவும் உணரப்பட்டிருப்பினும் அரசியலாளராக இருக்க வேண்டுமென்பதற்காக இனம் சார்ந்து,மொழிசார்ந்து, மதம் சார்ந்து சிந்தித்து அது சார்ந்த அரசியலை ஒற்றுமையின் தடைக்கற்களாக பிரயோகிக்கின்ற சுயநல மனித விரோத அரசியலாக அதனை மாற்றும் போது ஒற்றுமை சீர்குலைந்து இன முரண்பாடுகளாக முதிர்ச்சி பெறுகின்றது, இனவாதமாக விஸ்வரூபமெடுக்கின்றது.
அரசியல் செய்வது என்பது ஒரு புனிதமான தொண்டுக்குச் சமமானது.ஆனால் பல்லின மக்கள் வாழும் நாடுகளில், மக்களுக்கிடையில் குரோதத்தையும் விரோதத்தையும் அரசியல்வாதிகள் வளர்த்து அதில் தமது அரசியல் பயணத்தைச் செய்கிறார்கள். இலங்கையில் அதுதான் நடக்கிறது.ஒரு தேசத்தின் மக்களை நல்லிணக்கம், ஒற்றுமை, பொருளாதாரனக் கட்டமைப்பு, சமூக இயல்பு, இனங்களுக்குரிய பண்பாட்டுக் குணவியல்புகள் போன்றவற்றை கவனத்திற் கொண்டு அந்த மக்களை வடிவமைப்புச் செய்ய வேண்டும்.
இந்த வடிவமைப்பு என்பது மக்களை நல்சிந்தனை உள்ளவர்களாக மாற்றுதல் அல்லது பழக்கப்படுத்தல் ஆகும். என் தேசத்தில் வாழும் சக மனிதன் என் தேசத்தவன் அவன் எனது உறவினன் நண்பன் என்ற ஆழமான உணர்வில் ஒவ்வொரு மனிதனும் இசைவாக்கம் பெற்றவனாக மாறும் போதுதான் ஒற்றுமை சாத்தியப்படும்.ஒரு உருவத்தை  உருவாக்குவதற்கு முன்னர் அந்தப் உருவத்திற்கான  வரைபடத்தை வரைதல். செய்யப்பட வேண்டிய உருவத்திற்கு எத்தகு பொருளை(மற்றீரியள்) பயன்படுத்த வேண்டும் என்பது அறிவியலின் அடிப்படைத் தகுதியாகும்.
ஒரு தேசத்தை வடிவமைப்பதற்கு எடுபொருளாக இருப்பவர்கள் மக்களே. அவர்களைக் கொண்டுதான் ஒரு தேசம் வடிவமைக்கப்படுகின்றது. இந்த மக்களின் குணவியல்பகள் எத்தகையது என்பதை அறிவுபூர்வமாகச் சிந்திக்காத அரசியல்வாதிகள் பிரயோசனமற்றவர்கள். இத்தகையவர்கள் அரசியல்வாதிகளாக இருப்பதற்கே தகுதியற்யவர்கள் ஆவார்கள்.தகுதியற்ற அரசியல்வாதிகள் மக்களை தவறாக வழிநடத்தி குழப்பமான ஒரு தேசத்தையே உருவாக்குவார்கள்.அதற்கு முன்னுதாரணமாக  இருப்பது எமது இலங்கைதான்.
பல ஆண்டுகளுக்கு முன்பு வடிவமைக்கப்பட்ட தவறான அரசியல் வடிவமைப்பு இன்று வரை தொடர்கிறது. இலங்கை அரசியலில் ஒரு சிலரைத் தவிர பலர் இனவாத அரசியல்வாதிகளே. நாடாளுமன்றத்திலும் சரி பொது வெளியிலும் சரி மூவின மக்களையும் சமவுரிமை உள்ளவர்களாக திடமாகக் கருதி 'இலங்கையர்களாகிய நாம்' என்ற வார்த்தை சொல்லப்பட வே இல்லை. இந்த வார்த்தைக்குள் இருக்கும் மந்திரசக்தியை அவர்கள் புறக்கணித்தார்கள். 'இலங்கையர்களாகிய நாம் ' என்ற சொல் சமவுரிமையை நிலைநாட்டும்; நடவடிக்கைக்கு கொண்டு சென்றுவிடும் என்று பயந்தார்கள்.
இலங்கை அரசு, பத்திரிகை ஊடகங்களை, தொலைக்காட்சி ஊடகங்களை நல்லிணக்க முயற்சிக்கு உளபூர்வமாக பயன்படுத்தவுமில்லை. இலங்கை மக்களை உணர்ச்சிவசப்படும் மக்களாக வெகுதூரம் அழைத்துச் சென்றுவிட்ட நிலையில்தான் நல்லிணக்கத்தை ஏற்படுத்த தொலைக்காட்சி அலைவரிசையை ஏற்படுத்தப் போவதாக அறிவிப்பு வந்திருக்கின்றது.
இந்த அலைவரிசை,இனங்கள் மத்தியில் ஒரு குறிப்பிட்ட இனத்தை முதன்மைப்படுத்தி ஏற்ற தாழ்வுகளை ஏற்படுத்துமா அல்லது உண்மையான நல்லிணக்கத்தை ஐக்கியத்தை எற்படுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.இந்த அலைவரிசைக்குள்ளும் இனவாத அரசியல்வாதிகளின் தலையீடுகள, இடையூறுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அரசின் கடமையாகும்.இன ஒற்றுமைக்கு உதாரணமாக இருக்கும் நாடு சிங்கப்பூர். நான் அங்கு மூன்று ஆண்டுகள் வேலை செய்திருக்கிறேன். பணியிடத்திலும் சரி வெளியிலும் சரி இன ஒற்றுமையை பேணுவதில் சிங்கப்பூர் அரசு சட்டங்களை இயற்றி சீன மக்கள்,மலே மக்கள், தமிழர் ஆகியோரின் உரிமைகளை சமநோக்கில், சம உரிமை கொடுத்து இன ஒற்றுமையை பேணுவதை பார்த்து நான் வியந்து மகிழ்ந்திருக்கிறேன்.
உதாரணமாக சீன மக்களின் பண்டிகையின் போது மலே மக்களை, தமிழர்களை சீன மக்கள் விருந்துக்கழைப்பது. அதைப் போல தமிழர்களின் பொங்கல், தீபாவளி, புதுவுருடப் பிறப்பு தினங்களில் சீன மக்களை, மலே மக்களை விருந்துக்கழைப்பது. அதே போல மலே மக்கள் ரம்ழான் தினங்களில் சீன மக்களை, தமிழர்களை விருந்துக்கழைப்பது.இவை போன்ற நிகழ்வுக் காட்சிகளை தொலைக்காட்சி ஊடகத்தில் அடிக்கடி ஒளிபரப்புகின்றார்கள். அது மட்டுமல்லாது அடுக்குமாடிக் குடியிருப்புகளின் லிப்டுகளின் வாசல் சுவரில் லிப்டுக்குள் இருக்கும் மலே இனத்தைச் சேர்ந்த ஒருவர் வெளியே நிற்கும் சீனரையே தமிழரையோ புன்முறுவல் பூத்தபடி கைலாகு கொடுத்து உள்ளே அழைப்பது போன்ற படங்களை ஒட்டி வைத்திருக்கிறார்கள்.
இவற்றை நாளிலும் பொழுதிலும் பார்க்கும் சிங்கப்பூர் மக்கள் மனதில் தானாகவே ஐக்கியம் எற்படுவதை தவிர்க்க முடியாது. 'சிங்கப்பூரியர்களாகிய நாம்' என்ற வார்த்தையே எல்லா அரசியல்வாதிகளின் நாவிலிருந்தும் வெளிவருகின்றது. நான் இரண்டாந்தரப் பிரஜை அல்.ல என்ற எண்ணம் அனைத்து இன மக்களின் மனதில் ஆழமாக வேரூன்றி உள்ளது.எனவே இன ஐக்கியம் என்பது நான் இரண்டாந்தரப் பிரஜை அல்ல என்ற எண்ணத்தை மூவின மக்களின் மனதில் கொண்டு வருவதை அரசு உறுதி  செய்தல் வேண்டும்.
நல்லிணக்க தொலைக்காட்:சி அலைவரிசை இதைச் செய்யுமா?

தமிழ்க் கிராமம் ஒன்றின் ஊடாக நடந்து செல்லும் இராணுவ வீரர் ஒருவரின் மனநிலை எப்படியிருக்கும் என்பதை நான் இங்குதான் உணர்ந்து கொண்டேன். அவர்கள் பார்க்கின்ற அனைத்தையும் அழித்திருந்தனர். இவ்வாறு விடுதலைப் புலிகளிடம் போர்க்கைதியாகப் பிடிபட்டிருந்து, விடுவிக்கப்பட்ட இலங்கை கடற்படை அதிகாரியான கொமடோர் அஜித் போயகொட, 

இலங்கைஇராணுவத்தினரின் ஒழுக்க மீறல்களை தனது “A Long Watch: War, Captivity and Return in Sri Lanka” என்று நூலில் விபரித்துள்ளார்.

“எனது இராணுவப் பணியின் போது மறக்க முடியாத சம்பவங்களில் இதுவும் ஒன்றாகும். 1991ல் எமது இராணுவ நடவடிக்கை முடிவுற்ற கையோடு இலங்கைக்கு வடக்கேயுள்ள தீவுகளில் ஒன்றான காரைநகரில் கடமையாற்றிய போது பலவீனமுற்ற, பாதிக்கப்பட்ட மக்களுடன் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. இந்த வாய்ப்பின் மூலம் போரின் பாதிப்புக்கள் உண்மையில் எவ்வாறானதாக இருக்கும் என்பதை விளங்கிக் கொள்ள முடிந்தது.  

அந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் நான் யாழ்ப்பாணத்திற்கு இடம்மாற்றம் பெறுவதற்காகக் காத்திருந்தேன். எட்டு ஆண்டுகளின் பின்னர் யாழ்ப்பாணத்திற்கு மாற்றப்பட்டேன். காரைநகரில் இருந்த கடற்படைத் தளமானது முற்றுகைக்கு உட்பட்டிருந்ததால் ஒரு மாதத்திற்கு முன்னரே நான் அங்கு செல்ல வேண்டும் எனக் கட்டளையிடப்பட்டது. கிழக்கில் பணியாற்றிக் கொண்டிருந்த போது காரைநகர் கடற்படைத்தளமானது புலிகளால் முற்றுகையிடப்பட்டுள்ளதால் உடனடியாக அங்கு செல்லுமாறு கட்டளையிடப்பட்டேன்.

காரைநகர் கடற்படைத் தளத்திற்குச் செல்வதற்கான கடல்வழிப் பாதை தவிர்ந்த அனைத்து வழிகளையும் புலிகள் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருந்தனர். காரைநகர் கடற்படைத் தளத்தின் மீது அன்றிரவு புலிகள் செறிவான மோட்டார் எறிகணைத் தாக்குதல்களை மேற்கொள்வதாகவும் செய்திகள் கிடைக்கப் பெற்றன. நான் திருகோணமலையை விட்டுப் புறப்பட்ட வேளையில் எனது சகநண்பர்கள் பலர் மகிழ்ச்சியுடன் எனக்கு விடைகொடுக்கவில்லை. அவர்கள் என்னிடம் வாழ்த்துக் கூடக் கூறவில்லை. நான் மரணத்தைத் தேடிச் செல்வதாகவே அவர்கள் உணர்ந்தனர்.

நாங்கள் கிழக்குக் கரையோர வழியாக ஆயுதப்படகொன்றில் காரைநகர் நோக்கி இரவிரவாகப் பயணம் செய்தோம். நாங்கள் திருகோணமலையைக் கடந்து பின்னர் முல்லைத்தீவு வழியாக பருத்தித்துறையைச் சென்றடைந்து அங்கிருந்து காரைநகரைச் சென்றடைந்தோம். நாங்கள் காலையில் காரைநகரைச் சென்றடைந்தோம். கடல்வழிப் பாதை பாதுகாப்பாக இருந்தது. காரைநகர் கடலில் கடற்படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். நாங்கள் குறித்த கடற்படைத் தளத்தைச் சென்றடைந்த போது காயமடைந்த மற்றும் இறந்த படையினர் அருகிலிருந்த பலாலி விமானத்தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருந்தனர். ஏனைய படையினர் ஓய்விற்கு அனுப்பப்பட்டிருந்தனர்.

நாங்கள் கடமையில் ஈடுபட்டிருந்த வீரர்களுக்கு ஓய்வுவழங்கி அவர்களுக்குப் பதிலாக புதிய வீரர்களை நியமிப்பதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டோம். இரவு சரமாரியான குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்றதாகவும் அதனால் அன்றிரவு தாக்குதல்களை எதிர்பார்த்து விழிப்புடன் இருக்குமாறும் அங்கிருந்து ஓய்விற்காக அனுப்பப்பட்ட படையினர் எம்மிடம் தெரிவித்தனர். குறித்த கடற்படைத் தளத்திற்கான இரண்டாம் நிலைக் கட்டளைத் தளபதியாக நான் கடமையாற்றினேன். பகல் நேரத்தில் பெரும்பாலும் யுத்தம் இடம்பெறுவதில்லை. ஏனெனில் புலிகளுக்கு இரவுத் தாக்குதலே சாதகமாக இருந்தது. இரவில் விமானங்களில் இருந்து பார்க்க முடியாது என்பதால், அவர்களால் தம்மை உருமறைத்து தாக்குதலை மேற்கொள்ள முடியும். இதனால் பொதுவாகப் பகலில் யுத்தம் என்பது எதிர்பார்க்கப்படுவதில்லை.

பசிலன்- 5000 மற்றும் பசிலன்- 2000 போன்ற தமது தயாரிப்பு மோட்டார்களையே புலிகள் பயன்படுத்தினர். இங்கு குறிப்பிடப்படும் பசிலன்- 5000 மற்றும் பசிலன்- 2000 போன்ற மோட்டார் குண்டுகளுக்குள் இரும்புத் துண்டுகள் இருக்கும். மோட்டார் குண்டு வெடிக்கும் போது கூர்மையான உலோகத் துண்டுகள் சிதறும். இது அலுமினியத்தால் மூடப்பட்டு தயாரிக்கப்பட்டது. இவை வழமையாக பேருந்துகளின் அடித்தளத்திலிருந்து அகற்றப்பட்டதாக இருக்கும். இந்த மோட்டார் குண்டுகள் வெடிப்பதற்கு அவை கூர்மையான மூக்குப் பகுதி நேராக நிலத்தில் விழ வேண்டும். நாங்கள் அடிக்கடி காலை வேளைகளில் புலிகளின் வெடிக்காத மோட்டார்களை எடுப்போம். புலிகளின் பல குண்டுகள் வீணாகியிருந்தன என்பதை நாங்கள் இவற்றின் மூலம் அறிந்து கொண்டோம்.

பின்னர் புலிகள் தமது தொழினுட்பத்தை முன்னேற்றியிருந்தார்கள். சில வாரங்களாக, ஒவ்வொரு நாள் இரவும் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றுக் கொண்டிருந்தன. ஏப்ரல் மாதத்தின் முடிவில் நாங்கள் எமது பாதுகாப்பு நிலைகளிலிருந்து முன்னேறத் தொடங்கினோம். அதிகாலையில், நாம் முன்னேறிச் செல்வதற்காக விமானப் படையினர் விமானத் தாக்குதல்களை மேற்கொண்டனர். இதன்மூலம் நாங்கள் எமது முன்னேற்ற நடவடிக்கையை மேற்கொள்ள முடிந்தது. இதன்பின்னர் எமது தாக்குதல் வாகனங்கள் புலிகளின் பாதுகாப்பு நிலைகளை ஊடறுத்துச் சென்றன. இதனைத் தொடர்ந்து காலாட்படையினர் முன்னேறிச் சென்றனர். இராணுவப் படையினர் தமது நிலைகளின் ஊடாக முன்னேறிச் சென்று கொண்டிருந்த வேளையில், கடற்படையினர் தமது நிலைகளைப் பலப்படுத்தினர்.

நாங்கள் சில வீரர்களை இழந்தோம். சில வீரர்கள் காயமுற்றனர். இந்தத் தளத்தை புலிகள் வசம் இழந்துவிடக் கூடாது என்கின்ற மூலோபாய முக்கியத்துவத்தை நாங்கள் கொண்டிருந்தோம். எமது தாக்குதல் நடவடிக்கை முற்றுப்பெற்ற பின்னர், நாங்கள் எமது தளத்தைப் பலப்படுத்தினோம். இதன் பின்னர் தான் புலிகள் அமைப்பால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் பயங்கரமானது என்பதை நாங்கள் உணர்ந்து கொண்டோம். ஒரு சில புலிகள் மட்டும் மோட்டார் தாக்குதல்களை மேற்கொண்டிருக்கவில்லை என்பதை என்னால் உறுதிப்படுத்த முடிந்தது.

நாங்கள் வெளியே வந்தபோது வித்தியாசமான முறையில் அழிவு ஏற்பட்டிருந்ததைக் கண்டுகொண்டோம். காரைநகர் முற்றுமுழுதாக அழிவுற்றிருந்தது. அங்கிருந்த 90 வீதமான வீடுகள் முன்னேறிய படையினரால் பலவந்தமாக உடைக்கப்பட்டன. தமிழ்க் கிராமம் ஒன்றின் ஊடாக நடந்து செல்லும் இராணுவ வீரர் ஒருவரின் மனநிலை எப்படியிருக்கும் என்பதை நான் இங்குதான் உணர்ந்து கொண்டேன். அவர்கள் பார்க்கின்ற அனைத்தையும் அழித்திருந்தனர். துணிமணிகள் இழுக்கப்பட்டும் குடும்ப ஒளிப்படங்கள் அழிக்கப்பட்டும் காணப்பட்டன. கால்நடைகள் மற்றும் ஆடுகள் போன்றன சுதந்திரமாக விடப்பட்டிருந்தன. வீடுகளுக்குள் மாடுகள் நிற்பதை நான் பார்த்தேன்.

இந்த வீடுகளுக்குத் திரும்பி வரும் எவரும் இவ்வாறானதொரு நிலைமையை சகித்துக் கொள்ள மாட்டார்கள் என நான் நினைக்கிறேன். தமது வீடுகளுக்குத் திரும்பி வருவோர் இளைஞர்களாக இருந்தால் அவர்கள் புலிகள் அமைப்புடன் இணைந்து கொண்டிருப்பார்கள். கோயில்களில் சென்று தங்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்த அறிவுறுத்தலை இராணுவத்தினரே மேற்கொண்டனர். காரைநகரில் அணிவகுப்பில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் வீடுகளுக்குள் நுழையும் மக்கள் மீது சந்தேகத்தின் பேரில் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொள்வதற்கான தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.

ஆனால் மதத்தலம் ஒன்றில் அடைக்கலம் புகும் எவர் மீதும் தாக்குதல் நடாத்த முடியாது என்பது ஒரு சட்டமாகும். அதனால் தான் கோயில்களில் அடைக்கலம் புகுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அத்துடன் கண்காணிப்பதற்கும் இது இலகுவான முறையாகும். சில நாட்களில், இராணுவத்தினர் காரைநகர் தீவு முழுவமையும் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தனர். அத்துடன் இவர்கள் பொதுமக்களுக்குள் புலிகள் ஊடுருவியுள்ளனரா என்பதையும் கண்காணிக்கும் பொறுப்பைக் கொண்டிருந்தனர்.

ஆனால் நான் இதைவிட இராணுவத்தினரின் வேறுவிதமான அராஜகங்களையும் நேரில் பார்த்தேன். அதாவது ஆண்கள் வேறாகவும் பெண்கள் வேறாகவும் நிற்குமாறு இராணுவத்தினரால் அறிவுறுத்தப்பட்ட போது பெண்கள் எவ்வாறான அச்சத்திற்கு உள்ளாகினர் என்பதை என்னால் உணரமுடிந்தது. இந்த விடயத்தில் கடற்படையினர் தலையீடு செய்ய வேண்டும் என வடக்கிற்கான எமது தளபதியிடம் நான் கேட்டுக்கொண்டேன். இதற்கான முழுப்பொறுப்பையும் நாம் கொண்டிருந்ததால் இதில் நாம் தலையீடு செய்யவேண்டும் எனக் கூறினேன்.

தரைப்படையினர் இந்த இராணுவ நடவடிக்கைக்குப் பொறுப்பாக இருந்தபோதிலும், மக்களின் பாதுகாப்பிற்கும் அவர்களின் நலனிற்கும் கடற்படையினரே பொறுப்பாக இருந்தனர். எமது சக இராணுவத்தினரின் செயற்பாடுகளால் நாங்கள் பொறுப்பை ஏற்கவேண்டி வரும் என நான் கூறினேன். இதனால் இந்த மக்களின் பொறுப்பை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. முதலில் அனைத்துக் குடும்பங்களும் ஒரேயிடத்தில் ஒன்றாக தங்கவைக்கப்பட வேண்டும் என நான் கூறினேன்.

அப்போதுதான் மக்கள் அனைவரும் தாம் தமது குடும்பங்களுடனும் அயலவர்களுடனும் பாதுகாப்பாக இருப்பதாக உணர்வார்கள் என நான் கூறினேன். பொதுமக்கள் தொடர்பான இறுதி முடிவை கடற்படைக் கட்டளைத் தளபதியே எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டது. இராணுவ வீரர்கள் காரைநகரில் மக்களின் பொருட்களை அபகரிப்பதற்கான முயற்சியில் இறங்கினர். ஆனால் இவர்கள் இவ்வாறு செய்தால் பாரிய பிரச்சினையை நாங்கள் எதிர்கொள்ள வேண்டியேற்படும் என்பதை உணர்ந்துகொண்டோம். படையினரைக் கட்டுப்படுத்துமாறு அவர்களுக்குப் பொறுப்பான அதிகாரிகளிடம் கூறினேன். இராணுவத்தினர் திட்டமிட்ட வகையில் கொள்ளையில் ஈடுபட்டனர். அதாவது சாமி அறையிலேயே மக்கள் தமது பெறுமதி மிக்க பொருட்களைப் பதுக்கி வைத்திருப்பார்கள் என்பதை இவர்கள் அறிந்திருந்தனர். இதனால் சாமி அறைகளை இராணுவத்தினர் உடைத்து அங்கு நகைகளைத் தேடினர்.

நான் ஏற்கனவே இவ்வாறான கொள்ளைச் சம்பவங்களைக் கேள்வியுற்ற போதிலும் நேரில் காண்பது இதுவே முதற்தடவையாகும். உங்களது வீடுகளுக்கு நீங்கள் ஒன்று அல்லது அதற்கு சில வாரங்களுக்குப் பின்னால் திரும்பிச் செல்லும் போது அவை உடைக்கப்பட்டு அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் சூறையாடப்பட்டிருந்தால் அந்தச் சூழலை ஒருதடவை கற்பனை செய்து பாருங்கள். உங்களது குடும்ப ஒளிப்படங்கள் அடங்கிய அல்பம் அந்நியர் ஒருவருக்கு ஒருபோதும் தேவைப்படாது. ஆனால் அது உங்களுக்கு மிக அரிய பொக்கிசமாகும். இதற்குள்ளே பல அரிய நினைவுகளை நீங்கள் பாதுகாத்து வைத்திருப்பீர்கள்.


ஆனால் தற்போது அந்த அரிய நினைவுகள் எல்லாவற்றையும் நீங்கள் இழந்திருப்பீர்கள். இது எவ்வளவு வேதனையானது என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். நான் ஒரு சில இளம் இராணுவ அதிகாரிகளிடம் ஏன் இவ்வாறான கொள்ளைகள் இடம்பெறுகின்றன எனக் கேட்டிருந்தேன். இது புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனிற்குச் சாதகமாக அமையாதா? என நான் அவர்களைக் கேட்டேன். அதற்கு இராணுவ அதிகாரிகள், கண்ணிவெடியின் போது தமது கால்களை இழந்த இராணுவத்தினருக்கு காப்புறுதி தேவைப்படுவது தொடர்பாக எனக்கு நீண்ட கதைகளைக் கூறினர்.

‘இங்கே பாருங்கள், நீங்கள் உங்களுடைய இராணுவத்தினரின் கால்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். அதற்காக அரசாங்கம் இருக்கிறது. அமைச்சு இருக்கிறது. அவர்களிடம் உங்களது இராணுவ வீரர்களின் நலன்களைக் கவனிப்பதற்கான பொறுப்புள்ள ஆட்கள் உள்ளனர். உங்களது இராணுவத்தினரின் நலன்களுக்காக மக்களின் பொருட்களைக் கொள்ளையிட வேண்டாம்’ என நான் அவர்களிடம் தெரிவித்தேன். இந்தக் கதையை இராணுவத்தினரிடம் எடுத்துக்கூறுமாறும் நான் அவர்களிடம் தெரிவித்தேன்.

யுத்தத்தின் போது இவையெல்லாம் இடம்பெறுவது வழமைதான் என அவர்கள் என்னிடம் விவாதித்தார்கள். இருக்கலாம். ஆனால் நாங்கள் இராணுவத்தினரை பயிற்றுவித்து மதிப்பளித்து வைத்திருக்கிறோம் என்பதால் கட்டளை அதிகாரிகள் அனைவரும் தமக்குக் கீழுள்ள வீரர்களின் பிழைகளைச் சரிப்படுத்த முன்வரவேண்டும். எங்களில் ஒருசிலர் இதனைச் செய்தால் இவ்வாறான தவறுகள் தடுக்கப்படும் என நான் கூறினேன். ஆனால் அவர்கள் நான் கூறியதைச் செவிமடுக்கவில்லை. அவர்களும் இதனால் நன்மை பெற்றிருப்பார்களா? அல்லது இது அவர்களுக்கு இலகுவான தெரிவா? தாக்குதல் நடந்த பின்னர் அந்த இடத்தை விட்டுப் புறப்படுவதற்கு முன்னர் கடற்படையினர் எவராவது பொருட்களைக் களவெடுத்து வைத்துள்ளார்களா என சோதிக்கப்படுவார்கள். இவ்வாறான நடைமுறை ஒன்று உள்ளது. அனைத்து வீரர்களும் தமக்கான ஆயுதங்களை வைத்திருக்கின்றனரா என சோதிப்பதற்கு ஒப்பானதாகும்.

தாக்குதல் நடவடிக்கை முடிந்த பின்னர் உங்களது ஆயுதங்களும் உங்களது சட்டைப்பைகளும் வெறுமையாகவே உள்ளன என்பதை நீங்கள் காண்பித்துக் கொள்ள வேண்டும். இது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகும். மாறாக இது எவரையும் துன்புறுத்துவதற்காகவல்ல. யுத்த சூழலில் நாங்கள் நிற்கும் போது இது வழமையாகக் கடைப்பிடிக்கப்பட வேண்டும். ஆனால் தவறு ஒன்று நடந்தால் அது தவறு தான். இது யுத்த சூழலிலோ அல்லது போரின் போதோ இடம்பெற்றாலும் அது தவறுதான்.

இராணுவத்தினர் கொள்ளையில் ஈடுபடுவதை என்னால் தடுத்து நிறுத்த முடியவில்லை. ஆனால் படையினர் தம்வசம் வைத்திருந்த களவாடப்பட்ட பொருட்களுடன் காரைநகரை விட்டு வெளியேறுவதை என்னால் தடுத்து நிறுத்த முடிந்தது. அதாவது இந்த வீரர்கள் எமது கடற்படைப் படகுகளின் மூலமே வெளியேற்றப்பட வேண்டியிருந்ததால் அவர்கள் தம்முடன் தமது இராணுவப் பொருட்களை மட்டுமே கொண்டு செல்ல முடியும் என நான் கட்டளை பிறப்பித்தேன். ஆகவே இந்த வீரர்கள் தம்வசம் வைத்திருந்த பொருட்கள், ஒளிப்படங்கள் போன்றவற்றை ஓரிடத்தில் குவித்தனர்.

அவற்றில் திருமண ஒளிப்படங்கள் சிலவும் இருந்ததை நான் பார்த்தேன். இவை அந்நியர்களின் ஒளிப்படங்கள் அதாவது இவை அந்நியர்களின் வீடுகளிலிருந்து எடுக்கப்பட்ட அந்நியர்களின் ஒளிப்படங்கள். ஆகவே இது பணம் சம்பந்தப்பட்டதல்ல. இவ்வாறான விடயங்களை எவ்வாறு விளங்கிக் கொள்ள முடியும் என்பது எனக்குத் தெரியாது. களவாடப்பட்ட பொருட்களில் சிறுவர்களின் விளையாட்டுப் பொருட்கள், ஈருருளிகள் போன்றனவும் காணப்பட்டன. இது சாதாரண கொள்ளை. ஆனால் பின்னர் இதுவே யுத்தத்தின் சின்னங்களைக் களவாடும் அளவிற்கு விரிவடைந்தது. பொருட்களை அழிக்குமாறு கட்டளையிடப்படும் போது, நீங்கள் எவ்வித வேறுபாடுமின்றி அனைத்துப் பொருட்களையும் அழிக்கும் அளவிற்கு உங்களது மனநிலை வளர்ந்திருக்கும். 

- கொமடோர் அஜித் போயகொட

யேசு தமிழரா?

என்னடா இப்படி ஒரு பெரிய பொல்லடி என்று எண்ணிவிடாதீர்கள். யேசுவுடன் இருந்தவர்கள் எவரும்யேசுவைப்பற்றி எழுதவில்லை. யேசு பிறந்த திகதியே யாருக்கும் தெரியவில்லை. இவர் பிறப்பு சரியாக2016 ஆண்டுகளுக்கு முன்னர்தான் நடந்தது. யேசு மார்கழி 25பிறந்தார் என்பது முழு அப்பட்டமான பொய்.பைபிளை வாசித்துவர்களுக்குத் தெரியும் அவர் ஆடுகள் மேயும் காலத்தில் தொழுவத்தில் பிறந்தவர்என்பதை அனைவரும் அறிவர். இப்படி இருக்க இந்தக்காலம் யெருசலத்தில் எப்படி மார்கழியில் வந்தது.இனியாவது ஒத்துக் கொள்கிறீர்களா யேசு மார்கழியில் பிறக்கவில்லை என்பதை.

ஆதாரம்

http://lifeteen.com/blog/jesus-wasnt-born-on-christmas/

http://classroom.synonym.com/true-birthday-jesus-christian-beliefs-8821.html


அப்படியாயின் எப்படி இந்த யேசுபிறப்பு மார்கழியில் வந்தது? யேசு பிறப்பதற்கு முன்னரே ஐரோப்பாமுக்கியமாக நோர்வே போன்ற துருவநாடுகளில் மார்கழி 23, 24 கொண்டாட்டமான நாட்களாகவேநிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அதாவது வருடத்தின் அதி உயர்ந்த இருள்நிறைந்தநாள் ஆகும்.இருள்நிறைந்த நாளுக்க இப்படி ஒரு கொண்டாட்டம் என்று கேட்கலாம். நிச்சயமா இல்லை. இந்தநாள்நான் பூமி ஒளியின் பக்கம் திரும்பும் என்பதை அன்றை மெய்ஞானமும் இன்றைய விஞ்ஞானமும்நிரூபித்துள்ளது. ஆகா கிறிஸ்தவத்தை ஐரோப்பா நோக்கிக் கொண்டு வந்த உரோமர்கள் ஏற்கனவேகொண்டாடப்பட்டு வந்த இந்த ஒளிநாளை அப்படியே யேசு பிறந்த தினமாக மாற்றினார்கள்.

பண்டைய காலத்தில் அரசுக்குச் சமமான பலத்துடன் மதங்கள் இருந்தன. ஆகா ஆதிக்கம் கொண்டவை மதங்கள் என்பது தெளிவு. முக்கியமாக அரசே மதத்தை வழிநடத்தியதும் உண்டு. அரசைத்துறந்து போதி மரத்தின் கீழ் ஞானம் பெற்றவர் புத்தர். புத்தரே சொல்லியுள்ளார் இது மதமல்ல வாழும் மார்க்கம் என்று. பிற்காலத்தில் புத்தரின் கொள்கைக்கு எதிராகவே பௌத்தம் பரப்பப்பட்டது என்பதை யாவரும் அறிவர் அதைப்பரப்பியதே அசோகன் என்ற சக்கரவர்த்திதான். ஆக மதங்கள் எதிரும் புதிருமாகவே மதங்கள் தம்கொள்கைகளைத் தாண்டிப் பயணித்திருக்கின்றன.. அதை இன்றும் நான் காண்கிறோம்.

மத்திய கிழக்கில் பிறந்த யேசுவுக்கம் தமிழழுக்கும் என்ன தொடர்பு என்பது ஒரு பெரும் கேள்வியாக எழுந்த நின்றாலும் தமிழன் பிறப்பும் வளர்ப்பம் இந்தியாவாகத்தான் இருக்க வேண்டும் என்று இல்லை. ஆதியில் மனிதர்கள் அதிகமில்லாத காலத்திலேயே தமிழ் பேசப்பட்டது எனவும் எல்லோராலும் பேசப்பட்ட மொழி தமிழ் என்று இன்றைய ஆய்வுகள் கூறுகின்றன: நாம் சொன்னால் ஏற்காத தமிழர்கள் வெள்ளைக்காரன் சொன்னால் மட்டும் ஏற்றுக் கொள்வார்கள். இதை ஆராய்ந்து சொன்னவர்கள் வெள்ளையர்களே.

மொகரஞ்சதாரோ கரப்பார் நாகரீகங்களிலும் பபிலோனிய நாகரீகத்திலும் தமிழ் பேசப்பட்டதை ஆதாரம் காட்டிப் பல ஆய்வுகள் வந்துள்ளன. அரேபிய நாட்டை விக்கிரமாதித்தன் ஆண்டான் என்றும் நான் வாசித்துள்ளேன். சிவவணக்கம் ஈரானில் தீயாக வணங்கப்பட்டுள்ளது. மனித இடம்பெயர்வுகள் ஆபிரிக்காவில் இருந்த ஆரம்பமாகி மேல்புறமாக அரேபியசமவெளியூடாக மேலும் கீழுமாகப் பிரிந்து பரந்தது என்றால் தமிழ் மத்திய கிழக்கு மண்ணில் வாழ்ந்ததற்கு சாத்தியம் உண்டு. இன்றும் மத்திய கிழக்கில் நல்நிலப்பயிர் செய்கை கொண்ட இடம் ஈழம் என்று அழைக்கப்படுகிறது. அல் என்பது தமிழில் சூரியன் என்று இருந்து. இதனால்தான் இன்றும் பலமுக்கியமா பெயர்கள் அல் என்று ஆரம்பமாகும் அல் கைடா. அல் லா.

எல் இல் இருந்துதான் திரிபடைந்து அல் உருவானது என்கிறது சில ஆய்வுகள். எல் எல என்ற முற்றுப்பெறாத லெமூறியாக்கட்டத்தின் எச்சமான இலங்கையில் தான் இருந்தது என்றும் கருதப்படுகிறது. இந்த எல்மொழி எச்சமே இன்றும் சிங் எல தமிழ்ல என்று தொடர்கிறது என்கிறார்கள்.


----நக்கீரன்----


தைப்பொங்கல் உழவர் திருநாள் இது வந்தேறிகளின் வடுகப்புதுவருடமல்ல   நோர்வே நக்கீரா


பொங்கல், புத்தாண்டு என்ற இரண்டையும் போட்டு தமிழர்கள் அல்லாத வந்தேறியவர்கள் தமிழையும் தமிழ்கலாசாரத்தையும் பின்பற்றாதவர்கள்  குழப்பத்தை உண்டு பண்ணுவதற்கு செய்யும் சதியே உழவனின் பொங்கல் திருநாளை புதுவருடப்பிறப்பு என்பதாகும். இது எம்தமிழ்கலாசாரத்தை வேரற்ற விழுமியமற்ற சமூகமாக மாற்ற விசமிகள் செய்யும் கயமையான நடவடிக்கையே இது. தமிழ்மொழியையும் தமிழ்மக்களையும் வேரறுத்து எமது அடையாளங்களைச் சிதைத்து தம்மை முதன்மைப் படுத்துவதற்காக செய்யப்படும் வந்தேறிகளின் சதிச்செயலே தைவருடப்பிறப்பு எனும் பித்தலாட்டம். இந்தவந்தேறிகள் தம்மை முதன்மைப்படுத்த திராவிடத்தைப் புகுத்தி தமக்கு அங்கிகாரம் தேடி அரசியயில் இருந்து சினிமாவரை வளர்ந்து பெருவிருட்சமாக நிற்கின்றனர் ஆதிமொழியான செம்மொழியுடன் வடமொழியும் கலந்துதானே மற்றய திராவிடமொழிகள் உருவாயின. அது எப்படி அவர்களுக்கு இல்லாத திராவிடம் தமிழ்நாட்டுக்கு மட்டும் நிற்கிறது. ஆம் தமிழன் ஒரு இழிச்சவாயன் என்பதை வந்தேறிகள் உணர்ந்திருக்கிறார்கள்;. தமிழா எப்போதான் நீ சிந்திக்கப்போகிறாய். 

நாம்தமிழர் என்று தமிழர்களைத் தூக்குகிறோம் என்று பெரியாரே அல்லாத   தமிழை வளர்க்க உதவாத தமிழ் எதிரியான ஈவேராவை மனதில் சுமந்து கொண்டு எப்படி நாம்தமிழர் கட்சி தமிழர்களைப் பிரதிநிதிப்படுத்து முடியும். ஏற்கனவே வந்தேறி வடுகன் ஈவேரா மனதில் உள்ளானே.

பொங்கலுக்குத் தேவை என்ன? நெல்லு, அரிசி, விவசாயம், பால் என்பதில் சந்தேகம் இல்லை. அதே வேளை இந்தத் தைமாதத்தின் நடுப்பகுதியில் தான் கதிர் எடுத்து வந்து சாமிப்படமான இலட்சுமியின் முன் வைத்து வணங்கி நடுவீட்டுடில் தூக்கி விடுவார்கள். இதைப் புதிரெடுப்பு என்பார். இது ஒரு மதச்சடங்கே மார்க்கச் சடங்கோ அல்ல இதை மதத்துடம் முடிச்சுப்போடும் அறிவிலிகள் பௌத்தறிவு பேசுவார்கள் பௌகுத்தறிவற்ற பௌத்தறிவுப் பெட்டயங்கள். பகுத்து அறிவதற்கு 6ம் அறிவு தேவை. பகுத்துப் பார்ப்பதற்கு 4ம் வகுப்பாவது படித்திருக்க வேண்டாமா. இவர்தானாம் பெரியார். இவர் பௌத்தறிவு புரியார்.

உலகிற்கே உணவளிக்கும் விவசாயி தன் விளைச்சலை எதிர்கொண்டு மகிழ்வுடன் கொண்டாடும் தொழிலாளர் திருநாளே பொங்கல். உழவனான தொழிலாளியின் திருநாளைப் பறித்து அதை புதுவருடம் என்று கொட்டாட திணிப்பவர்கள் அனைவரும் உழைப்புக்கும், உழைக்கும் வர்க்கத்திற்கும் எதிரிகளே.

இதற்கு அடுத்தநாள் உழவுக்கு உதவிசெய்த உயிரினமான மாட்டை மகிமைப்படுத்தி துப்பரவாக்கி கழுவிப் புனிதமாக்கி அவற்றை இரட்சிக்கும் நாளே மாட்டுப் பொங்கல். புதுவருடத்துக்கும் மாட்டுக்கும் என்னையா தொடர்பு என்பதை மரமண்டையர்கள் கூறுவார்களா? உழவுக்கு உதவிய சூரியனுக்கு நன்றி சொல்லி பயிற்செய்கைக்கு உதவி உழைத்த மாட்டைக் கூட மகிழ்விக்கும் தமிழனின் தொன்று தொட்டுவந்த நன்றிப் பண்பாட்டுக் கலாசார விழுமியங்களை வேரோடு அழிக்கும் வேலையையே வந்தேறிகள் செய்து தம்மை முதன்மைப்படுத்துகின்றனர். நன்றி என்பது அவர்களின் இரத்தத்திலேயே இல்லையே. இருந்திருந்தால் தமிழ்நாட்டில் குடியேறி நலமாக வாழ்பவர்கள் தமிழையும் தமிழினத்தையும் குடியறுப்பார்களா?

இது இப்படி இருக்க வருடம் எப்படிப் பிறக்கிறது அதற்கான காரணி என்ன? வருடமானது எதை வைத்துக் கணிக்கப்படுகிறது என்பது பற்றி அறிவு இருக்கிறதா? வருடங்கள் சூரியனையே வைத்தே கணிக்கப்படுகிறது. சாத்திர, வானசாத்திர ரீதியாக தை 14-15ம் திகதியில் சூரியபகவான் மகரராசியினுள் பிரவேசிப்பார். இதை மகரச்சங்கிராந்தி என்று இந்துக்கள் இது சிறப்பான தினமாகக் கொண்டாடுகிறார்கள். இது இந்தியாவுக்கான புதுவருடமல்லவா? இது எப்படி தமிழர்களுக்கு மட்டுமான புதுவருடம் ஆகமுடியும்? இந்து முறைப்படி கணிக்கப்பட்ட சாத்திரமுறைகளுக்கமையவே சூரியன் மகரத்தினுள் பிவேசிக்கிறான். மதமில்லை நாஸ்தீகமார்க்கம் கொண்டவர்கள் இந்து முறைப்படி அமையும் சூரியனின் மகரப்பிரவேசத்தை மறைமுகமாக ஏற்றுக் கொள்கிறார்களா? மதமறும்பும் நாஸ்தீகமும் வெளிவேசமா?தம்மை சிறப்பானவர்களாகவும் பிரத்தியேகமானவர்களாகவும் புரட்சியாளர்கள் எனும் புழுகை வெளிப்படுத்துவதற்கும் செய்யப்படும் போலி நாடகமா இந்த தைவருடப்பிறப்பு எனும் பூதாகாரம். இனியாவது தையைப் புதுவருடம் என்பவர்கள் ஆங்கிலேய ஐரோப்பியர் போல் தைமுதலையோ தையில் மற்றைய திகதிகளையோ புதுவருடமாகக் கொள்ளவில்லை. மறைமுகமாக இந்துக்களின் சாத்திரமுறைப்படி கணிக்கப்பட்ட மகரச்சங்கிராந்தியை இவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதே பொருள்.

சரி சனி ஒரு பெரிய கறுப்புக்கிரகம் துன்பம், நோய், நீதி, திருட்டு, பெருவிபரீதங்களுக்குரிய கிரகம். அங்கே சனியின் எதிரியாக உள்ள சூரியன் பிரவேசிப்பது எப்படி உலகிற்கு நலமாக அமையும். இதையாவது சிந்திக்க வேண்டாமா?

தானியங்களுக்கு தலைவன் என்று கருதப்படுபவர் சனி இவரே மகரம் கும்பம் போன்ற இராசிகளுக்கும் அதிபதி. அதாவது ஆங்கிலக்கலண்டர்படி  சூரியன் தை 14-15முதல் மகரத்திலும் 14-15 முதல் மாசியிலும் பங்குனி14-15 வரை பயணம் செய்வார். இந்த இரண்டு மாதங்களிலும் தான் தானியவகையான நெற்பயிர் விளைச்சல் வருகிறது. சாத்திரக்கணிப்பு காலநிலையுடன் பொருந்தியே வருகிறது. அதாவது பொங்கலை புதுவருடம் எனும் பொய்யர்கள் மறைமுககாக இந்து மதத்தை முழுமையாக ஏற்றுக் கொள்கிறார்கள். இதில் ஈவேராவும் அடங்குவர். வானசாத்திரப்படி தை ஒரு இருள்சூழ் மாதம் சித்திரை 14-15ல் சூரியன் மேடராசியினுள் பிரவேசிப்பதே சித்திரை தமிழ் வருடப்பிறப்பாகும். இக்காலத்தில் பூமத்திய ரேகைக்கு அருகிலுகள்ள நாடுகளில்; மத்தியானத்தில் சூரியனின் நிழலானது காலின் அடியில் விழும். அதாவது சூரியன் நேரே நிற்கும் ஒளிகூடிய பூமிக்கு நெருங்கிய மாதம் என்பது பொருள்.

இனியாவது தமிழர்களே புரிந்து கொள்ளுங்கள் தமிழையும், தமிழர்களின் பண்பாடுகளையும் விவசாயிகளையும் உழைப்பாளிகளையும் எமது விழுமியங்களையும் அழிக்க, குளிதோண்டிப்புதைக்க முயலும் வந்தேறிகளை தமிழகத்தை விட்டு விரட்டுங்கள். இவர்கள் தமிழனின் காலன்கள். தமிழுக்கும் தமிழர்களுக்கும் இயமன்கள். ஆந்திரா, தெலுங்கணா, மலையாளம், கர்நாடகம் எங்குமே இல்லாத திராவிடம் எப்படி தமிழ்நாட்டில் தமிழருக்கு மட்டும் வந்தது அங்கு திணிக்கப்பட்டது. இது தமிழை அழிப்பதற்கான செயலென்று உங்களுக்கு இன்னும் புரியவில்லையா? வந்தேறிகள் தம்மை தமிழ்நாட்டில் அங்கிகாரப்படுத்த நிறுவிய கயமையின் வார்த்தையே திராவிடம். தமிழ் என்ற ஒன்று மட்டுமே ஆதியில் இருந்து வந்தது. இன்றும் இருக்கிறது. அதில் இருந்து பிரிந்து போனவையே மலையாளம் கன்னடம் தெலுங்கு துலு எனும் மொழிகள். ஆனால் தமிழ் இன்றும் தமிழாகவே இருக்கிறது. மற்றையவை வேற்று மொழியான வடமொழியுடன் இணைந்து வேற்று மொழியாயின. அந்த மொழிக்கில்லாத திராவிடம் தமிழர் எமக்கு எப்படி வந்தது. இதற்கு நக்கித்தின்ன வந்த வந்தேறிகளும் வடுகர்கள் பதில் சொல்ல வேண்டியவர்கள். வந்தேறி ஒவ்வோருவனையும் விரட்டும் வரை தமிழனுக்கோ தமிழ்நாட்டுக்கோ விமோசனம் இல்லை. பதவி இறக்குங்கள் முடிந்தால் அவர்கள் தமது சொந்தநாட்டில் திராவிடத்தைக் கட்டி எழுப்பி அரசியலில் கொடிகட்டிப்பறக்கட்டும். இந்தச் சவடால் அங்கே பலிக்காது என்பதால்தானே இங்கு வந்தார்கள். திராவிட துரோகிகளை துரத்தும் வரை தமிழனுக்குத் மீட்சியே இல்லை. புதுவருடம் இல்லை. 

பொங்கல் கொதித்துத் தள்ளுவதற்கு இந்தத் திராவிடத் துரோகிகளை விறகாக்குங்கள். உழவர், உழைப்பாளர் திருநாளான பொங்கல் இன்று தமிழர்களாக மகிழ்ச்சியாக திராவிடத் திணுசுகளை எரித்து பொங்கிப் படையுங்கள். வாழ்த்துகிறோம். உழவர் திருநாள் உணர்வுறுக. வந்தேறி வக்கிரகங்கள் அழிந்தொழிக

நோர்வே நக்கீரா
15.01.2016​
உயிர்க்கும் உண்மைகள் 1

மதவேற்றுமைகளில் ஒற்றுமை (மதங்கள் ஒன்றே என்பதற்கான பதிவு)

அவதாரம் என்றால் வானத்தில் இருந்து இறங்கி வருபவர் என்று பொருள் என்றால் இறங்கி வருபவனுக்கு ஊடகம் தேவைப்படும். வானத்தில் இருந்து நேரடியாக வந்தாலும் அண்டவெளி எனும் ஊடகம் தேவைப்படும். யேசு, புத்தர், இராமர், நபி, அனைவரும் இந்திரிய, சூலகத் தொடர்புடையவர்களே. இவைவும் ஊடகமே. அப்படி என்றால் அவதாரம் என்றால் என்ன? அவதாரம் என்பது "இறங்கி வருதல்" என்று மட்டுமே என்று தான் பொருள் கொள்ள முடியும். தன் உயர்நிலையில் இருந்து மனிதநிலைக்கு தாழ்ந்து வருதலாகும். விஸ்ணு இராமனாகவும், கர்த்தர் யேசுவாகவும், அல்லாவின் தூதனாக நபிகளையும் கருதலாம்.

அவதாரம் என்பதை வடமொழியான சமஸ்கிருதத்தில் அவ்வுத்-தார் என்னும் இருசொற்களின் இணைப்பே ஆகும். இதை வானத்தில் இருந்து அண்வெளி எனும் ஊடகத்தினூடாகவும் இறங்கி வரலாம். தாயின் சூலகத்தில் இருந்தும் இறங்கி வரலாம் என்று ஏன் கொள்ள முடியாது? தெய்வநிலையில் இருந்து மனிதராக தரமிறங்குதலை அவதாரம் எனலாம். 

இன்று பல அறிவுசார் இஸ்லாமியர்கள் பகவதம், கல்கி அவதாரம் பற்றிய உண்மைகளை ஒத்துக்கொள்ள ஆரம்பித்துள்ளார்கள்.  அவர்கள் கல்கி அவதாரம் என்பது நபிகள் நாயகமே என்பதை நிரூபிக்க முயல்கின்றனர்.

பூகோள ரீதியாகவும், இனப்பரம்பல் ரீதியாகவும் இந்தியாவை எடுத்துக் கொண்டால் வடக்கில் இருந்து வந்தவர்களே வடவித்தியர்களாகக் கருதலாம். சுருக்கமாகச் சொன்னால் வந்தேறிகள் எனலாம். அதாவது அரபு, பாரசீகம், ஆப்கானிஸ்தான், நேபாளம் மத்திய ஆசியாவில் இருந்து வந்தவர்களாகவே கருதமுடியும். இவர்கள் தமது நம்பிக்கைகளுடனேயே கீழ்நோக்கி நகர்ந்தனர். அதேவேளை இந்தியாவில் ஒருபெரு இனம் தன்னை நிரந்தப்படுத்தி நாகரீகத்துடன் வாழ்ந்து கொண்டிருந்தது. அவர்களே பண்டைய தமிழர்கள். இவர்கள் இயற்கை வணக்கத்துடன் (முக்கியமாக சூரிய வாயு மின்னல் வணக்கங்கள்) லிங்க வணக்கத்தையும் கொண்டவர்களாகவே கருதப்பட்டனர். அங்கே லிங்கம் என்பது இயற்கையின் ஒரு பிரதியாகவே காணப்பட்டது. இங்கே நாகரீகம் அடைந்தநிலையில் இருந்த தமிழர்களுடன் மேய்வனவுடன் வடக்கில் இருந்து வந்து ஏறியவர்களின் நம்பிக்கைகளும் இணைந்து கொண்டன. இந்த நம்பிக்கைகளின் இணைவே இந்துமத்தின் முக்கிய பிரிவுகளான சைவம், வைணவம் எனலாம்.

யூதம், கிறிஸ்தவம், இஸ்லாத்தின் அடிப்படைக்கூறுகளை எடுத்து நோக்கினால் அவற்றை வைணவ புராணங்களில் காணலாம். பகவதம், கல்கி அவதாரங்கில் கூறப்படுவன நபியின் பிறப்பை உறுதிப்படுத்தியதாக சில இஸ்லாமியர்கள் கருத்துக் கொள்கின்றனர். 

கல்கி அவதாரம் பற்றி பகவத்புராணம் தொகுதி 12, அத்தியாயம் 2, சுலோகம் 18-20வரை சொல்வதாவது சம்பாலா எனும் ஊரில், ஊர்த்தலைவரின் வீட்டில் விஸ்ணுயாஸ் என்பவருக்கும், சுமதி என்பவருக்கும் மகனாக கல்கி அவதரிப்பார் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் கூறுவதாவது கல்கி 8 குணங்கள் கொண்டவர் என்றும், தேவர்களால் கொடுக்கப்பட்ட வெள்ளைக்குதிரையில் வலதுகையில் வாளை ஏந்தியபடி வருவார் என்றும், சுலோகம் 25ல் மன்னவர்கள் எல்லாம் கொள்ளையர்களாக மாறும் வேளையே கல்கி அவதாரம் உருவாகும் என்றும் இவருக்கு நான்கு தோழர்கள் உதவியாக இருப்பார்கள் என்றும், மாதவ மாதம் 12ம் திகதி பிறப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது. அப்பிறப்பு நடந்ததோ இல்லையோ என்பது இந்துக்களுக்குத் தெரியாது. இது நடந்ததாகவும் அவர்தான் நபிகள் நாயகம் என்றும் இஸ்லாமிய அறிவு ஜீவிகள் உணர முயல்கின்றனர். 

விஸ்ணுயாஸ் என்றால் இறைவனான விஸ்ணுவை யாசிப்பவன் என்றுபொருள் அதன் அர்த்தம் இறைநம்பிக்கை உடையவன் என்பது ஆகும். தாய் பெயர் சுமதி என்பது சுகம், அமைதி என்று பொருள் கொள்ளும். இந்தக் கல்கி இடம்பெயர்வார் என்றும் மலைக்குகையில் வாழ்வார் என்றும் தெய்வீக ஞானம் கிடைக்கும் என்றும் இவரே இறுதியான விஸ்ணுவின் அவதாரம் கல்கி என்றும் கூறப்பட்டுள்ளது. 

இதை இஸ்லாத்தில் பார்த்தால் முகமது நபியின் தந்தை பெயர் அப்துல்லா அதாவது இறைவனின் அடியாள் என்றும், தாய் ஆமினா என்றால் சாந்தி அமைதி என்றும் சம்பாலா என்றால் அமைதியான இடம் மெக்கா சாந்தமும் அமைதியுள் உள்ள இடம் என்றும் கல்கி அவதாரமே கடசியானது அதேதான் முகமது நபியும் இறுதியான முனி என்றும் குரான் கூறுகிறது. ஆக பகவதம், விஸ்ணுபுராணம், கல்கி அவதாரங்களில் வைணவம் சொன்ன கல்கி அவதாரம்தான் நபிகள் என்று கருதினால் அதை முன்கூட்டியே உலகுக்குச் சொன்ன இந்துக்களாக இந்துக்களுடன் நட்புடன் இஸ்லாமியர்கள் இருப்பார்களா? அடிப்படையில் இந்துக்களை அதிகமாக அழித்தவர்கள் இஸ்லாமியர்களே. மேற்கூறிய நபிகள் பற்றிய தரவுகளை சுரா அல் அஹ்ஜாப்பில் இருந்து எடுத்துத் தந்தவர் டாக்டர் ஜாகீர் நாயக் என்பவராவார். கல்கி அவதாரத்தில் கூறியதுபோல் நபிகளும் குகையில் வாழந்தார் என்றும் வடக்கே சென்று திரும்பினார் என்றும் அவருக்கு அல்லுர் மலையில் உள்ள கிராக்குகையில்தான் தெய்வ அறிவிப்புக் கிடைத்தது. இந்த மலையை ஒளியின் மலை என்று கருதப்பட்டது. இதனால் நபிகளே கல்கி அவதாரம் என்பதை டாக்டர் ஜாகீர் நாயக் நிரூபிக்க விளைகிறார். எது எப்படியோ இஸ்லாத்தின் அடிப்படைய ஆதிமதம் இந்துப்புராணங்களில் சொல்லியிருக்கிறது என்பது உறுதியாகிறது. 

இறைவனானவன் 8 குணங்கள் கொண்டவன் என்பதை வள்ளுவரும் "எண்குணத்தான் தாளை வணங்காத் தளை" என்றார். ஆக மதங்களின் அடிப்படைகள் அனைத்தும் ஒன்றாக அமைந்தாலும் மனிதனே அதை வேற்றுமைப்படுத்தி மதத்தை மனிதம் தாண்டி யுத்தத்த களத்துக்கு அழைத்துச் சொல்கிறான். இந்த அடிப்படைத்தந்துவங்களை மதங்களில் ஆதிமதமான இந்துப்புராணங்கள் கூறியுள்ளன. 

யூத, கிறிஸ்தவ, இஸ்லாத்தின் ஆணிவேர் என்று கருதப்படும் ஆபிரகாமுக்குப் பிள்ளை பிறக்காது என்றும், அவர் தன்னை ஈகம் செய்தால் மட்டுமே பிள்ளைப்பலன் உண்டு என்றும் ஞானிகளால் அறிவுறுத்தப்பட்டது. அவர் இறைவனை வேண்டி அவருக்கு ஒரு ஆண்குழந்தை ஈசாக் பிறந்தான். அந்தப்பிள்ளையை மலையில் உச்சியில் வைத்துக் கொன்று விடு என்று இறை அசரீரி கேட்டது. இவர் ஈகம் செய்வாரா என்பதை இறைவன் சோதித்தான். அவர் அக்கூற்றை ஏற்று அப்பிள்ளையை கொல்லும் போது தேவதைகளை வந்து தடுத்து அப்பிள்ளையை வாழவைத்தன. இந்த ஈசாக்கே கிறிஸ்தவ இல்லாமியர்களின் பொதுத்ததந்தையாவான். 

இதேபோன்ற கதை அல்லது புராணத்தை இந்துவேதத்தில் வாசித்தேன். ஆனால் முடிவு மட்டும் வித்தியாசமாக இருந்தது. அதாவது அக்குழந்தையைக் கொல்லுமாறு உத்தரவு கிடைத்தபோது இந்துத் தந்தை இறைவனுடன் வாதிட்டு அக்குழந்தையைக் காப்பாற்றுகிறான். இவ்விரண்டு கதைகளிலும் தந்தை சோதிக்கப்படுகிறான், பிள்ளை காப்பாற்றப்படுகிறது ஆனால் காப்பாற்றப்பட்ட மார்க்கமே வித்தியாசமானது. மத்தியகிழக்கு மதங்களில் முக்கியமாக இஸ்லாம் கடவுளின் கட்டளைக்கு எந்தக் கேள்வி நியாயமும் இன்றிப்பணிய வேண்டும். இதை கூரானே கூறியுள்ளது. ஆனால் இந்து மதத்தில் மனிதன் கடவுளிடம் கேள்வி கேட்கலாம் பேரம் பேசலாம் வாதிடலாம். இந்த சுதந்திரம் இந்து மதத்தில் உண்டு. கண்ணை மூடிக்கொண்டு கடவுளை ஏற்ற வேண்டிய அவசியம் கிடையாது. சிந்திக்கும் உரிமை சுதந்திரமாக இந்துக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆக மதங்கள் கூறுவது அனைத்தும் ஒன்றே. ஆனார் மார்க்கங்களே வித்தியாசமானவை.

இனிமேலாவது எனது மதம்தான் சரியானது மற்றைய மதங்கள் முழுக்கப் பிழையானவை என்று மதம்மாறுவதையும், மதவேற்றுமைகளையும் விடுத்து மற்றைய மதங்களை அடிமை கொள்வதையும் நிறுத்துவார்களா? மதங்களில் மனிதம் முன்னிறுத்தப்படுமா? மதங்களில் மனிதமனம் நிலவுமா?

மத ஒற்றுமையை நாடும் 
நோர்வே நக்கீரா 27.12.2015

ஆங்கிலம் தமிழிலிருந்து வந்தது !!!
ஆதாரம் இதோ...........
☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆
W.W skeat என்பவர், The Etymological dictionary of the English language இல் உள்ள 14,286 சொற்களில் 12,960 வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை (அதாவது 90% வார்த்தைகள் தமிழிலிருந்து வந்தவை) என்கிறார் ஆய்வின்படி.
எடுத்துகாட்டுகள் :
Cry - ”கரை” என்ற தூயத் தமிழிலிருந்து வந்தது.
கரைதல் என்றால் கத்துதல். காக்கைக் கரையும் என்பர்.
Clay - களி (களிமண்) என்ற தமிழ்ச்சொல்லிலிருந்து வந்தது.
Blare - ”பிளிறு” என்ற தமிழ்ச்சொல்லிலிருந்துவந்தது.
Culture - கலைச்சாரம் என்பதிலிருந்து வந்தது
இதுமட்டுமல்ல இலத்தின், கிரேக்கம், செர்மன் மொழிகள் போன்ற பலவும் தமிழ் மூலத்திலிருந்து வந்தவை பின் ஒன்றோடொன்று கலந்து பலச் சொற்களை உருவாக்கிக் கொண்டன என்று சொல் ஆய்வாளர்கள் உறுதிசெய்கின்றனர்.
ஆதாரம் : “உலகமொழிகளில் தமிழ்ச்சொற்கள்” - ப.சண்முகசுந்தரம். உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவன வெளியீடு.
==========================
தமிழ் உலக மொழிக் எல்லாம் தாய் மொழி ,
உலக கலாச்சாரங்களின் தொட்டில் ,
உலக நாகரீகங்களின் ஊற்று ,
உலகத்தில் உள்ள மதங்களின் தொடக்கம் தமிழ் !
The mother of all languages is the TAMIL language ; the cradle of all cultures ; all relegions and all civilizations !
தமிழ் மொழியில் இருந்து வந்த ஒரு மொழியே ஆங்கிலம் .
S + பேசு = speach
S + பஞ்சு = sponge
S + மெது = smooth
S + பரவி = spray
S + உடன் = sudden
S + நாகம் = snake
S + சேர்த்தால் (ஸ் சத்தம் ) 600 க்கு மேட்பட்ட தமிழ் சொற்களுக்கு ஒரே அர்த்தம் உள்ள ஆங்கில சொற்கள் வரும் ..
உருளை = roll
(கல் கவியல் ஆக கணக்கு பார்க்கும் தமிழர் முறை )கற்குவியல் = Calculation ; calculatrice .
கொல் = kill ( தமிழில் "கொ " வரும் இடத்தில் " K " ஆங்கிலத்தில் போட்டால் 100 english word வரும் )
" பொத்தல் " ல இருந்து பொத்தான் = Button
உலகில் உள்ள , இருந்த அனைத்து மொழிகளிலும் தமிழ் மொழி இருக்கின்றது .
ஆங்கிலத்தில் 20 % தமிழ் மொழி உள்ளது .
ஆங்கிலத்தின் தாய் மொழியான :
லத்தீன் , கிரேக்கம் = 50 % தமிழ் மொழி உள்ளது .
லத்தீன் , கிரேக்கத்தின் தாய் மொழியான சமஸ்கிரதம் ஓரு தமிழர் எழுதிய எழுத்து மொழி .
2015 ஆய்வுகளின் படி :
( Germany ல் உள்ள மொழி ஆய்வு பல்கலைக்கழகத்தில் படிப்பிக்கின்றார்கள் germain மொழியின் தாய் மொழி சமஸ்கிரதம் என்றும் ( europe ய மொழிகளின் தாய் மொழி சமஸ்கிரதம் என்றும் )
- சமஸ்கிரம் என்றால் அர்த்தம் செய்யப்பட்ட மொழி .
- இயற்கிரதம் ( தமிழ் ) என்றால் அர்த்தம் இயற்கையான மொழி . )
சமஸ் + கிரதம் என்றால்: செய்யப்பட்ட மொழி
சம = சமைத்தல் = செய்
கிரதம் = பாஷை = மொழி .
இயற் + கிரதம் என்றால் தமிழ் மொழி ( இறை மொழி , இயற்கையான மொழி )
இயற் = இயற்கை
கிரதம் = பாஷை = மொழி
மண்டரீன் சீனா ; கீபுரு யூதர்களின் ; அரபி = 65 % தமிழ் மொழி உள்ளது .
கீபுருவின் தாய் மொழி அரமைட் ,
அரபு மொழியின் தாய் மொழி zero-அரமைட் .
அரமைட் , zero-அரமைட் = 80 % தமிழ் மொழி உள்ளது .
தமிழ் மொழி பிறந்த இடத்தில் இருந்து : 1000 வருடங்களுக்கு ஒரு முறை மொழி சிதையும் .
1000 Km க்கு தூரத்திற்கு ஒரு முறை மொழி உடையும் !
" ழ " உச்சரிப்பு தமிழ் , மலையாளம் , மண்டரீன் சீனா ஆகிய மூன்று மொழிகளில் மட்டுமே உள்ளது .
700 வருடங்களுக்கு முதல் மலையாளம் என்ற ஒரு மொழி இல்லை !
தாய் தமிழகத்தின் ஒரு தமிழ் பகுதியே இன்றைய மலையாளம் .
அம்மா , அப்பா என்ற தமிழ் சொல் இன்று உலகில் உள்ள 200 மொழிகளில் உள்ளது .
தமிழ் மொழியில் உள்ள தொன்மையான நூல்கள் போல வேறு எந்த மொழியிலும் இல்லை .
இன்று யூத இனத்தில் உள்ள தொன்மையான நூல் ( ஒன்று மட்டுமே உள்ளது ) கி. முன் 2000 .
தமிழ் இனத்தில் உள்ள தொன்மையான பல நூல்கள் : கி. முன் 3000 ; கி.முன் 5000 ;
கி. முன் 7000 நூலான தொல்காப்பியமும் உள்ளது .
தமிழில் மட்டும் தான் சொற்களுக்கு பொருள் வரும் :
கட்டுமரம் என்ற தமிழ் சொல் உலகில் உள்ள அனைத்து ( 7102 ) மொழிகளிலும் கட்டுமரம் தான் .
மரத்தை கட்டுவதால் கட்டு மரம்
இன்று உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் " கட்டு மரம் " தான் .

இப்பதிவை அனுப்பிய நாகராசா அண்ணர் அவர்கட்கும் பதிவின் மூலம் தந்த வீரலட்சமி அவர்களுக்கும் நன்றிகள்

நோர்வே நக்கீரா

வரலாற்றுக்குறிப்புகள்
நோர்வே நக்கீரா 

சாவகர்

இந்தச் சொல்லைப் பலர் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். இவர்கள் இலங்கையின் வடபகுதியை ஆண்டவர்கள் என்று கருதப்படுகிறது இவர்கள் அடிப்படிடையில் யாவா நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று கருதப்பட்டாலும் அதற்கான சரியான காரணங்களும் கருத்துக்களும் இன்னமும் முன்வைக்கப்படவில்லை. யுhவாவைச் சேர்ந்தவர்கள் யாகவர் என்பது தமிழில் சாவகர் என்று அழைக்கப்பட்டிருக்கலாம். 

கி.பி 1247ல் சந்திரபானு என்ற சாவகன் தெற்கு நோக்கி சிங்கள அரசின் மேல் படை எடுத்ததாகவும் அப்போ அங்கே ஆண்டு கொண்டிருந்தவன் இரண்டாம் பராக்கிரமபாகு என்றும் கருதப்படுகிறது. இந்த சாவகனான சந்திரபானு பராக்கிரமபாகுவினால் விரட்டியடிக்கப்பட்ட போது அவன் வடக்கே வந்து ஆட்சியைக் கைப்பற்றியிருக்கலாம் என்று ஒரு சிங்கள ஆய்வாளர் கூறியிருந்தாலும் அது வெறும் ஊகமாகவே உள்ளது. அதற்கான ஆதாரத்தையோ தரவுகளையோ அவர் முன்வைக்கவில்லை.

வடக்கை- யாழ்பாணத்தை ஆண்ட ஆரியச்சக்கரவர்த்திகளில் ஒருவனான காலிங்க ஆரியச்சக்கரவர்த்திக்குப் பின்னர் அவன் மகன் குலோத்துங்கசிங்கை ஆரியன் அரியாசனம் ஏறியாலும் இக்காலகட்டத்தில் ஒரு சாகவன் ஆண்டதாக வரலாற்றுப் பதிவுகள் கூறுகின்றன. இவனுடன் வந்தவர்கள் குடியேறிய பகுதியே சாவகச்சேரி, சாவகன்சீமா, சாவகன்கோட்டை என்று இன்றும் அழைக்கப்படுகிறது.

இந்த சந்திரபானு என்ற சாகவன் பதவியா குருந்தனூர் போன்ற சிங்கள மாவட்டங்களிலிருந்த சிங்களவர்களைத் தன்பக்கம் திரட்டி இரண்டாவது தடவையாக பராக்கிரமபாகுவிற்கு எதிராகப் படை நடத்த முயன்றான் என்பதை சூழவம்சம் கூறுகிறது. இவன் சிங்கள இராட்சியத்திற்கு மேல் படை எடுப்பதற்கு முன்னர் மன்னர் சுந்தரபாண்டியன் சாவகன் சந்திரபானுவை  வென்று திறை பெற்றுப்போனான். இது 1258ல் நடந்ததாகக் கருதப்படுகிறது.

சாவகமன்னன் பாண்டியனுக்கு சரியாகத் திறை செலுத்தாது இரண்டாம் பராக்கிரமபாகுபின் மேல் இரண்டாம் தடவையாகப் படையெடுத்துச் சென்றான். பராக்கிரமபாகுவிற்கு உதவுமாறும் சாகவனைத் தண்டிப்பதற்காகவும் பாண்டிய மன்னனான ஜடாவர்மன் வீரபாண்டியன் 1262ல் தன்படையை அனுப்பி சாவகமன்னனின் சிரம்கொய்தான். தன்வெற்றியைப் பொறிக்கும் முகமாக இரட்டை மீன் இலட்சணையை பாண்டியன் திருக்கோணமலையில் பொறித்துச் சொன்றான் என்று வரலாறுகள் கூறுகின்றன. இந்த இலட்சனையை திருகோணமலை கோட்டை வாயிலில் இன்றும் காணலாம்.

இதில் இருந்து நான் சிலவிடயங்களை ஊகித்துக் கொள்ளலாம். சிங்கையாரியர்கள் அடிப்படையில் யாழ்பாணத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர். இவர்கள் முழுமையான அரசவம்சத்தைச் சேர்ந்தவர்களாக எங்கும் கருதப்படவில்லை. இவர்கள் சத்திரியர்களுடன் இணைந்த பிராமணர்களாகவும். வெறும் சத்திரயர்களாகவுமே காணமுடிகிறது. சிங்கை ஆயரியர்கள் என்று தம்மை அழைத்துக் கொண்டாலும் அவர்களுக்கும் ஆரியர்களுக்கும் எந்தத் தொடர்பும் இருந்ததில்லை. பரராசசேகரன் செகராசசேகரன் சங்கிலியன் போன்றோர் சிங்கையாரிய வம்சாவளி என்றே கருதப்படுகிறது உ.ம் யாழ்பாண வைபவமாலை.

பராக்கிரமபாகு விஜயபாகு கஜபாகு சிங்கபாகு போன்ற அரசர்கள் சிங்களவர்களாகக் கருதப்பட்டாலும் அவர்களின் அனைத்து தொடர்புகளும் சிகிரியா வரலாறும்  பாண்டியர் சேரர்களுடன் தொடர்புள்ளதாகவே உள்ளது. இந்த "பாகு" என்றபெயர் அடிப்படையில் இலங்கைக்கு உரியது அல்ல. இது தொண்டைநாடு கலிங்கத்தைச் சேர்ந்தது. 

இந்தச் சந்திரபானு என்பவன் தாயிலாந்து எனும் தாமிரலிங்கநாட்டை ஆட்சி செய்தவனாகக் கருதப்படுகிறான். மகாவம்சத்தின் இன்னொரு குறிப்பின்படி இவன் தாமிரலிங்க நாட்டை ஆண்ட தமிழ்கொள்ளையன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பெயரில் அவன் தமிழனாகவே காணமுடிகிறது. இவன் கட்டிய கோவில் இன்றும் தாயிலாந்தில் உள்ளது.

இந்தச் சாவகர்கள் இலங்கையில் பலகாலம் ஆட்சி கொள்ளவில்லை எனினும் பயணிகளாக வந்து நாட்டின் ஒரு சிறுபகுதியையாவது கைப்பற்றி ஆண்டார்கள் என்பது சாமர்த்தியமே. யாவகர் இருந்த சேரியே சாவகச்சேரியாகும். 

நட்புடன் நோர்வே நக்கீரா
06.12.2015
வரலாற்றுக்குறிப்பு 
நோர்வே நக்கீரா 

 ஐம்பெரும் காப்பியங்கள் 

 ஐம்பெரும் காப்பியங்கள் ஆசிரியர் 
 1. சிலப்பதிகாரம் இளங்கோவடிகள் 2. மணிமேகலை சீத்தலைச் சாத்தனார் 3. சீவகசிந்தாமணி திருத்தக்க தேவர் 4. வளையாபதி 5. குண்டலகேசி நாதகுத்தனார் சிலப்பதிகாரம் சிலப்பதிகாரக் காப்பியத்தினை இளங்கோ 30 காதைகளாகப் பகுத்து மூன்று காண்டங்களில் அமைத்துத் தந்தார். புகார்க்காண்டம் 10காதைகள் மதுரைக்காண்டம் 13காதைகள் வஞ்சிக் காண்டம் - 7 காதைகள் கோவலனுக்கும் கண்ணகிக்கும் திருமணம் நடைபெற்றது. மாதவியின் கலை மீது தாகம் கொண்ட கோவலன் கண்ணகியைப் பிரிந்து மாதவியுடன் தங்கினான். மணிமேகலை எனும் மகளின் தந்தையானான் . கானல் வரியால் மாதவியைப் பிரிந்தான். செல்வமனைத்தையும் இழந்து கண்ணகியுடன் மதுரை சென்றான். கவுந்தியடிகள் துணையுடன் மாதரியிடம் கண்ணகியை அடைக்கலமாக்கினான். கண்ணகியின் காற்சிலம்பை விற்கச் சென்ற கோவலன் பொற்கொல்லனால் கள்வன் எனக் குற்றம் சாட்டப்பட்டு நீதி தவறிய பாண்டிய மன்னனால் கொல்லப்படுகிறான். தன் கணவன் கள்வனல்லன் என்பதைச் சிலம்பை உடைத்து.  அதன் உள்ளிருந்த மாணிக்கப்பரலைக் காட்டித் தெளிவு படுத்துகிறாள் கண்ணகி. மன்னனோடு கோப்பெருந்தேவியும் உயிர் துறந்தாள். கணவனுக்காக நீதி கேட்டுப் போராடிய கண்ணகி மதுரையைஎரித்தாள். பின்னர் கண்ணகி வஞ்சி மாநகர் புகுந்து அங்குள்ள மலைக்குறவர் காண விமானத்திலேறி விண்ணுலகு சென்றாள் சீவக சிந்தாமணி காப்பியத்தின் நால்வகைப் பொருளான அறம்,பொருள்,இன்பம்,வீடு என்பனவற்றைத் தருகின்றது. சிந்தாமணி, மணநூல் என்று அழைக்கப்படுகிறது. ஆசிரியர் திருத்தக்க தேவர். விருத்தம் எனும் பாவில் அமைந்த முதல் தமிழ்க் காப்பியம் இதுவே. வளையாபதி ஆசிரியர் பெயர் தெரியவில்லை சமண நூல் வளையாபதியின் கதை நவகோடி நாராயணன் ஒரு வணிகன்.இவன் வேறு சாதிப் பெண்ணை மணக்க அந்நிகழ்வு அவனது குலத்தோருக்கு வெறுப்பினைத் தருகின்றது. அவ்வெறுப்பினைத் தாங்க இயலா அவன் தன் மனைவியை விட்டு அயல்நாடு சென்றுவிடுகிறான்.அவன் மனைவிக்குப் பிறக்கும் மகன் வளர்ந்த பின் புகாரில் தன் தந்தையைக் கண்டு இறுதியில் தாய் தந்தையரை இணைத்து வைக்கிறான் குண்டலகேசி இது பௌத்தக்காப்பியம்; மறைந்து போன தமிழ் நூல். ஆசிரியர் நாதகுத்தனார். குண்டலகேசியின் கதை பத்திரை என்ற வணிகர் குலப்பெண் காளன் என்ற கள்வனை நேசிக்கிறாள்.காவலில் இருந்த அவனைத் தன் தந்தை மூலம் மீட்டு மணம் புரிகிறாள். ஒருநாள் பத்திரை சினத்தால் தன் கணவனைக் கள்வன் எனத் திட்டிவிட அவன் அவளைக் கொல்ல மலையுச்சிக்கு அழைத்துச் செல்கிறான். சாகும்முன் அவனை அவள் மும்முறை வலம்வர விரும்பஇ அவன் இசைகிறான். அவனைப் பத்திரை கீழே தள்ளிக்கொன்று விடுகிறாள். பிறகுஇ அவள் வாழ்வை வெறுத்து துறவு பூண்டு புத்த சமயம் சார்ந்து முக்தி பெறுகிறாள். 

 தொகுத்தளிப்பவர் நோர்வே நக்கீரா


வரலாற்றுக் குறிப்பு

தமிழி


சமஸ்கிருதம் தேவபாஷையும் அல்ல.வேதங்கள் சமஸ்கிருத்தில் எழுதப்பட்டவையும் அல்ல.வடக்கில் இருந்து ஆடு மாடுகள் மேய்த்து வந்த மந்தைக்கூடம் தம்மைப் பாப்பணராக கடவுளுக்கு அருகில் உள்ளவர்களாகவும் தமது மொழி தேவபாஷை என்றும் மனிதவினத்தைப் போக்காட்டி தம்மை வாழவைப்பதுடன் தம்மைத் தாமே உயர்த்தியும் அடையாளம் காட்டினர்.

வேதங்கள் எழுதப்பட்ட மொழி தமிழி என்றறிக

திருக்குறள் கூடத் தமிழியில்தான் எழுதப்பட்டது. இந்த தமிழியின் பரணாமவளர்ச்சி தமிழ் ஆனாதுபோல் கிழக்கு ஆபிரிக்காவில் இருந்து ஆதி மொழிகளில் ஒன்று கெஸ் இதன் எழுத்தும் தமிழி போன்று உள்ளதைக் காணலாம். இம்மொழியில் இருந்த வளர்ச்சி அடைந்த மொழிகள் தான் எரித்தியா எத்தியோப்பிய மக்கள் பேசும் திகிரின்யா அமாரிக் என்பன.

வேதங்கள் எழுதப்பட்ட மொழி "தமிழி' : ஆராய்ச்சியாளர் மூர்த்தி

பழமையான 4 வேதங்களும் "தமிழி' என்ற மொழியில் தான் எழுதப்பட்டுள்ளன. அவை சம்ஸ்கிருத மொழி அல்ல என வேத ஆராய்ச்சியாளரும், வேதஸ்ரீ நிறுவனர் மற்றும் தலைவருமான பி.வி.என்.மூர்த்தி கூறினார்.

மறைமொழி அறிவியல் ஆய்வகம், தமிழக அரசு அருங்காட்சியகத்துடன் இணைந்து மறைமொழி அறிவியல் என்ற தலைப்பிலான கருத்தரங்கத்தினை சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் வெள்ளிக்கிழமை (டிச.27) நடத்தியது. இதில்வேதஸ்ரீ தலைவர் பி.வி.என்.மூர்த்தி பேசியது:

பழமையான 4 வேதங்களும் சம்ஸ்கிருதத்தில் எழுதப்படவில்லை. அவை "தமிழி' என்ற மொழியில் தான் இயற்றப்பட்டுள்ளன. நன்கு சம்ஸ்கிருதம் தெரிந்த அறிஞர்களிடம் வேதங்களில் சில பகுதிகளை மொழிபெயர்க்க கூறிய போது அவர்கள்,

இதில் உள்ள பல சொற்கள் சம்ஸ்கிருத அகராதியிலேயே இல்லை என்றனர். இது குறித்து நான் மேலும் ஆராய்ந்த போது வேதங்கள் அனைத்தும் சம்ஸ்கிருதம் கலந்த தமிழி மொழியில் தான் இயற்றப்பட்டுள்ளது என்பதை அறிந்தேன்.

வேதங்கள் இயற்றப்பட்ட காலத்தில் பல நூல்கள் தமிழி மொழியில்

எழுதப்பட்டுள்ளன. ஆனால் அவை கடல் பிரளயத்தின் காரணமாக அழிந்து விட்டதால் தமிழி மொழியைப் பற்றி அறிந்து கொள்ள முடியவில்லை.

சங்கத் தமிழ், வேத இலக்கியங்களில் இலக்கியத்தைத் தவிர விஞ்ஞானம், கணிதம் என்ற இருமுகங்களும் உண்டு. என்னுடைய கண்டுபிடிப்பான மொழிக்கணிதம் என்ற நூல் இவ்விரு முகங்களையும் அம்பலப்படுத்துகிறது.

மேற்கத்திய அறிஞர்களான பித்தாகரஸ், டார்வின், ஐசக் நியூட்டன், ஐன்ஸ்டின்,பூலியன் ஆகியோரின் கண்டுபிடிப்புகள் ஏற்கனவே நம் இலக்கியங்களில்சொல்லப்பட்டுள்ளன. மேலும், ராமாயணம், மகாபாரதம் போன்ற புராணங்களும்விஞ்ஞானம் மற்றும் கணிதத்தை விளக்கத்தான் இயற்றப்பட்டன.

இவற்றில் பலவற்றை மறைமொழி அறிவியல் ஆய்வகம் ஏற்கனவே விளக்கி விஞ்ஞானப்புத்தகங்களாக தயாரித்துள்ளது. இதனை கல்விக்கூடங்களில் பாடப்புத்தகங்களாகஏற்றுக் கொண்டால் இன்றைய அறிவை விட மேலான அறிவைப் பெறலாம் என்றார்.

தகவல் தொகுப்பு -நக்கீரன்

 தமிழ் கி.முன் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழானது கீறல்களாக அதாவது கோடுகளாக தமிழ்பிராமி எழுத்துக்களாகவே இருந்தது
இதை கல்வெட்டுக்களில் எழுதுவது இலகுவாக இருந்தது. ஆதிமொழிகள் அனைத்தும் கீறல்களாகவும் நேர் கோடுகளாகவுமே இருந்தன. பெரும்கவிதைகளையோ படைப்புக்களையோ எழுதுவதற்கு கற்செதுக்கும் சிப்பிகளையும் உடன் கொண்டு திரியவேண்டிய நிலையிருக்கும். இதை இலைகளில் எழுதமுயன்றபோது முக்கியமாகப் பனையோலைகளில் எழுதமுயன்றபோது கோடுகள் இலைகளைக் கிழித்து விட்டன. இதனால் உருட்டி எழுதும் வட்டெழுத்துக்களாக தமிழ் மாற்றப்பட்டது. அதை குத்திக் குத்தி எழுதினார்கள். அதுவும் இலைகளில் ஓட்டையை ஏற்படுத்தியது. இதனால் அவை முழுமையான வட்டெழுத்து வடிவம் பெற்றது. இது களப்பிரர் சோழர்காலம் வரை தொடர்ந்தது. தமிழில் இருந்து தெலுங்கு மலையாளம் கன்னடம் துலு குடகு என 23 மொழிகள் உருவாயின. எம்தாய் மொழி எத்தனை மொழிகளுக்குத் தாயாக இருந்திருக்கிறாள். பெருமையுடன் தலைநிமிர்ந்து கலங்கள் கடந்தும் சிரஞ்சீவியாக வாழும் எம்மொழியை எம்குழந்தைகள் பெருமையுடன் படித்துப் பழகவேண்டாமா?

 நோர்வே நக்கீரா 
ஆரம்பத்தில் இருந்த தமிழ் கீறு எழுத்துக்களாகவே இருந்தன. இதை தமிழ்பிராமி என்பர்
இவை கல்வெட்டுக்களில் பொறிப்பதற்கும் நல்லியல்பு கொண்டிருந்தன. ஆனால் கல்வெட்டுக்களில் பொறிப்பதற்கு அதற்கு எனத் தேர்ச்சி பெற்றவனே தேவைப்பட்டான். அதனால் அதிகம் பொறிப்பது கடினமானது. இதை ஓலைகளுக்கு மாற்றும் எண்ணம் தலைதூக்கியபோது நடைமுறைச்சாத்தியம் அற்றிருந்தது. இதனால் இதை உருட்டி எழுதவேண்டி ஏற்பட்டது. உருட்டி வட்டவடிவில் எழுதும் போது ஓலைகள் கிளியாது இருந்தன. இந்த நவீனமயமாக்கப்பட்ட தமிழை உருவாக்கியவர்கள் பல்லவர்களும் சோழர்களுமே. இந்தப்பல்வர்கள் சிற்பக்கலையில் சிறந்து விளங்கினர். இவர்களை பாரசீக வழிவந்தவர்கள் என எண்ணித்துணிய முயல்கின்றனர். அதற்கான எந்த ஆதாரமும் கிடையாது. யாழ்பாணத்தை ஆண்ட ஆரியச்சக்கரவர்திகள் பல்லவர்கள் என்று கருதப்படுகிறது. களப்பிரர்களிடம் இருந்து தொண்டை நாட்டை வென்று ஆண்ட பல்லவர்கள் ஈழவர்கள் என்றும் கருதப்படுகின்றனர். இலங்கையானது தொண்டை நாட்டை அண்டியே இருந்தது என்றும் நிலவசைவால் கீழ்நோக்கி நகர்ந்தது என்றும் கொள்ளலாம். பல்லவர்களுக்கு முடிவைத்தால் போல் அமைந்தவர்கள் மாமல்லர் மற்றவர் இளந்திரையான். இளந்திரையன் என்ற பெயரே ஈழத்தில் இருந்து கடற்கோளால் தூக்கி வரைப்பட்ட கடல் நுரைகளினுள் கண்டெடுக்கப்பட்ட பிள்ளை என்பதால் அவன் இளந்திரையன் என்று அழைக்கப்பட்டான். இவன் பிள்ளைகள் அற்ற பல்லவ அரசனின் பிள்ளையாகத் தத்தெடுக்கப்பட்டான். இவனே பிற்காலத்தில் பல்லவராட்சியத்தின் எல்லைகளை விஸ்தரித்தவனாவான். தமிழ் எழுத்துக்கள் எப்படி உருமாறின நவீனமயப்பட்டன என்பதைப் பாருங்கள். தமிழ்பிராமியில் "தமிழ்" என்பது எப்படி எழுதப்பட்டது என்று பாருங்கள். கீழே நான் தந்த அட்டணையில் காலப்போக்கில் எப்படிப் புதிய எழுத்துக்கள் சேர்க்கப்பட்டன என்பதையும் காணலாம்.எமது மொழி எத்தனை மூளைகளில் இருந்து முன்னேறி இன்று எம்கையில் கிடைக்கப்பெற்றுள்ளது இதை நாம் தவற விடலாமா? நான் எழுதும் இச்சிறுகுறிப்புக்களையாவது பகிர்ந்து பரப்பி இளசுகள் நெஞ்சில் தமிழ்விதைக்க உதவுங்கள். செய்வீர்களா?
தமிழகத்தின் அரசியல் வரலாறு என்பது பெரும்பாலும் சேரர், சோழர், பாண்டியர் வசமிருந்துதான் ஆரம்பிக்கிறது
கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி அது. மூவேந்தர்களும் வெளிநாட்டு வணிகத்தால் செல்வச் செழிப்புடன் திகழ்ந்த நேரம். யவனர்கள், அரேபியர்கள், சீனர்கள், வட இந்தியர்கள் என பெரும் வணிகக் கூட்டம் இங்கிருந்து இஞ்சி, மிளகு, இலவங்கம், பருத்தி போன்ற வாசனை பொருட்களை தங்கள் நாட்டுக்கு அள்ளிச் சென்றனர். பதிலுக்கு சர்க்கரை, தங்கம், வெள்ளி, பட்டு, உயர்ரக மது, அழகிகள், குதிரைகள் என்று கொட்டிக் கொடுத்தனர். தேனை வண்டு பார்த்துக்கொண்டா இருக்கும்! தமிழகத்தின் செழிப்பு பிற தேசங்களின் கண்களை உறுத்தின. இப்படியே செழிப்பாக போய்க்கொண்டிருக்கையில்தான் இந்தத் தென்பகுதியில் தொடர்ச்சியான அயல்நாட்டுப் படையெடுப்புகள் எழுந்தன. எதிர்பாராத பல்லவர் படையெடுப்பு மூவேந்தர்களின் எல்லையைச் சற்று சுருக்கியது. பல்லவர்கள் தொண்டை மண்டலத்தைச் சிறிது சிறிதாக கைப்பற்றத் தொடங்கியிருந்தனர். அந்த சமயத்தில்தான் திடீரென்று களப்பிரர்களின் கை ஓங்கியது. தொண்டை நாட்டைச் சேர்ந்த காடுகளில் வசித்த கள்வர்களே களப்பிரர் என்பது ஒரு கூற்று. இல்லை இவர்கள் தமிழர்களே என்பது மற்றொரு சாராரின் கருத்து. இங்கு நமக்கு என்ன தேவையென்றால், இவர்கள் பௌத்த, சமண சமயங்களைச் சார்ந்தவர்களாக இருந்தனர் என்பது மட்டுமே. அவர்களுக்கு முன்பே அதாவது சக்கரவர்த்தி அசோகர் காலத்திலேயே பௌத்தமும் சமணமும் தமிழகத்துக்கு அறிமுகமாகி இருந்தாலும், இவர்கள் மூலமாகவே தமிழகத்துக்குள் பௌத்த சமண மதங்கள் ஆழமாக ஊடுருவின. தமிழர் பண்பாட்டை பாதித்தன. அப்படியானால் இதற்கு முன் எந்த மதமும் தமிழகம் வந்ததில்லையா? வந்திருக்கின்றன. ஆனால் இந்த அளவுக்கு வெற்றி கண்டதில்லை. எடுத்துக்காட்டாக, பௌத்தம் இங்கு வேரூன்றுவதற்கு முன்பே வேதாந்தத்தின் பிரதியான வைதீகம் தமிழகம் வந்துவிட்டது. மக்கள் மனதில் அகிம்சையையும் சமதர்மத்தையும், பகுத்தறிவையும் புகட்டிய பௌத்த சமண மதங்களுக்கு முன் உயிர்ப் பலிகளையும், பிறப்பால் சாதியத்தையும், பிளவையும், அறிவு நம்ப மறுக்கும் கட்டுக் கதைகளையும் முன்வைத்த வைதீகம் நிற்கக்கூட முடியவில்லை என்பதே உண்மை. இந்த உண்மையை தமிழகத்தின் இருண்ட காலம் என்று கூறப்படும் களப்பிரர்கள் ஆட்சி நடந்த வேளையில் இயற்றப்பட்டதாகக் கருதப்படும் நூல்கள் தெளிவுபடுத்துகின்றன. பௌத்தமும் சமணமும் அப்படிப் பரவக் காரணம் என்ன? மக்கள் தொண்டு. புத்த, சமண துறவிகள் தமிழகமெங்கும் பரவினர். தீண்டாமை களைந்தனர். பிறரை/பிறவற்றை இம்சிக்காத அவர்களது எளிமை மக்கள் மனத்தைக் கொள்ளை கொண்டது. அசோகர் தோற்றுவித்த வட்டெழுத்து முறையை அறிமுகப்படுத்தி எழுத்துப் புரட்சி கண்டனர். எழுத்துப் பணி கடை நிலை மனிதனையும் சென்றடைய உதவினர். மக்களுக்கு அவர்கள் இடத்துக்கே சென்று கல்வியையும் கற்றுத்தந்தனர். சுருக்கமாகச் சொன்னால், பௌத்தமும் சமணமும் சாமானியர்களையும் அறிவில் சிறந்தோரையும் ஈர்த்தன. இவ்விரு மதங்களிலும் மக்கள் திரள் திரளாக இணைந்தனர். காஞ்சி தமிழகத்தின் புத்த மக்காவானது. மதுரை, பூம்புகார் போன்ற நகரங்கள் பிற புத்த திருத்தலங்களாயின. இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளிருந்தும் பயணிகள் இங்கு வரலாயினர். தமிழகத்தில் பௌத்தம் தளைத்தது

வரலாற்றின்  சிறு குறிப்புகள்  


தொகுப்பு -நோர்வே நக்கீரா


சேரர்

முத்தமிழின் மூவேந்தர் பரம்பரையின் ஒரு மன்னர் பரம்பரையே சேரர். இவர்கள் வில்வித்தையில் சிறந்து விளங்கினர். இம்மன்னர்களின் கொடியும் விற்கொடியாகவே அமைந்தது. இவர்களின் கி.மு500 இருந்தே கண்டறியப்பட்டுள்ளது. இவர்களை முற்காலச்சேரர் பிற்காலச்சேரர் என வகுத்துள்ளனர். முற்காலச் சேரர் பற்றிய தகவல்கள் அதிகமானவை கிடைக்கப் பெறவில்லை. சங்க இலக்கியங்களில் இவர்கள் பற்றிய குறிப்புகளைக் காணலாம். 


இவர்கள் ஆண்ட பகுதியைச் சேரளம் என்று அழைத்தனர். இதுவே பின் இன்று கேரளமாக மருவி உருமாறி உள்ளது. இது சோழநாட்டுக்கு மேற்கிலும் கன்னடதேசத்திற்கு தெற்கிலும் அமைந்திருந்தது. இற்றைக்கு 800 ஆண்டுகளுக்கு முன்னர் அங்கே தமிழ்மட்டுமே த தனி ஒருமொழியாகப் பேசப்பட்ட வந்தது. இதற்கு வரலாற்றுக் சான்றாக சிலப்பதிகாரம் அமைந்துள்ளது. இதை எழுதிய இளங்கோவடிகள் சேரநாட்டில் இருந்தே எழுதினார். அங்கே மலையாளம் என்ற ஒரு மொழி இருந்திருந்தால் நிச்சயம் அவர் அம்மொழியிலேயே எழுதியிருப்பதற்குச் சாத்தியம் உண்டு. இது ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது. பிற்காலச்சேரர்கள், வர்மாக்கள் வடமொழியான சமஸ்கிருதத்துக்கு முதன்மை கொடுக்க ஆரம்பித்ததால் வடமொழி தமிழுடன் கலப்படையத் தொடங்கியது. தமிழ் மாசடைந்து கலப்புற்று வந்த மொழியே மலையாளம் இன்றுள்ள மலையாளத்தின் 20சதவீத வடமொழியும் 80சதவித தமிழும் கலப்புற்றே மலையாளம் என்ற மொழி உருவானது:

முக்கிய குறிப்பு ஆங்கிலேயனின் வைப்புகளுக்குப் பிறந்தவர்கள் இன்று தமிழ்நாட்டில் பேசும் தமிழால் உருவாகப்போகும் புது மொழியின் பெயர் என்ன? இந்த ஆங்கிலேயனுக்கு முந்தானை விரித்தமொழி நாளை செம்மொழியாய் அதிகாரம் கோரினாலும் சந்தேகப்படுவதற்கு இல்லை

தொடரும்...


Reporter  செய்தியாளர்

http://www.tamilthai.com/wp-content/uploads/2010/11/1222603637353_breaking-news_t.png

அரிய சந்தப்பம்! .

உங்களை உலகிற்கு அறியச்செய்யும் ஒரு

வாய்ப்பு 

 யாழ் -ஊர்கள் எங்கும் செய்தியாளர்கள் (News Reporter)

தேவை.

மது இணையத்தில் உள்ள CONTACT US  என்னும் பட்டனை அழுத்தி  அதன் மூலமும் பதிவுகளை அனுப்பலாம்.


பண்ணாகம் இணையம்  மேலும் பலமாற்றங்களையும், பல்துறைஅனுபவம் கொண்டவர்களை இணைத்தும் ஒரு பாரியமாற்றத்தை ஏற்படுத்த உள்ளது. இதன் ஆரம்ப கட்டமாக யாழ்ப்பாணத் தொகுதியில் உள்ள அனைத்து  இடங்களின்  உடனடிச் செய்திகளை தரவல்ல செய்தியாளர்கள் தேவை.

செய்தியாளர்களாக பதிவு செய்ய விருப்பம் உள்ளவர்கள் தாம் எந்தெந்த ஊர்களில் செய்தியாளராக கடமையாற்ற முடியும் என்ற விபரத்துடன் தமது சுயவிபரங்களுடன் தமது புபை்படம் ஒன்றையும் அனுப்பிவைப்பதுடன்  பின்வரும் விடயங்களைக் கவனத்தில் கொள்வது அவசியமாகிறது.

 1) செய்தியாளர் யாழ்- தொகுதியில் வாழ்பவராக இருத்தல் வேண்டும்.

      விண்ணப்பிக்கும் அன்று  18 வயதை பூர்த்தி செய்திருக்கவேண்டும்.

2) செய்திகளை கனனி மூலம் எழுதி,  மின்னஞ்சல் ஊடாக எமது இணையத்திற்கு அனுப்பவேண்டும். அவர்களுக்கு சொந்தமாக  E.mail Adderss இருக்கவேண்டும்.

3) செய்திளுக்குரிய  படங்களும் எடுக்கும் ஆற்றல் உள்ளவராக இருத்தல் வேண்டும்.

4) செய்தியின்  உறுதிப்பாட்டிற்கு   செய்தியாளரே பொறுப்பு வாய்ந்தவராக இருக்கவேண்டும்.

5)செய்தியாளராக முன்அனுபவம் உள்ளவர்களும்,ஆர்வமுள்ள புதியவர்களும் விண்ணப்பிக்கலாம்  .     

(மேலும் தகவல் பெற சேவையில் இணைந்த பின்னர் நேரடியாகத் தொடர்பு கொள்ளவும்)

 எமது இணையத்தில் உள்ள CONTACT US  என்னும் பட்டனை அழுத்தி  அதன் மூலமும் பதிவுகளை அனுப்பலாம்.

 

 செய்தியாளர்  விண்ணப்பப் படிவம்

 

பண்ணாகம் இணையச்  செய்தியாளர் விண்ணப்பம்.                                               

பெயர் :- ……………………………………………………………………………………..
Name-………………………………………………………………………………………..
 முகவரி,Adderss:-(ஆங்கிலத்தில்)………………………………………………………………………………..
                                     ……………………………………………………………….................
                                     ………………………………………………………………………………………
                                     ……………………………………………………………………………………….
பிறந்த திகதி:- …………………………………………………………………..................

திருமணமானவரா?:...      ஆம் / இல்லை

தொலைபேசி …………………………………    E-mail  ……………………………......
கல்வித்தகமைகள்:.......................................................................

வேறு விசேஷ தகமைகள்: ............................................................

தற்போதய தொழில் : ...............................................................................................................

 

  பண்ணாகம் இணையத்தின் செய்தியாளராக  இணைய எனது விருப்பத்தை இத்தால் தெரிவிக்கின்றேன்.

திகதி ,இடம்……………………….                       ……………………………………
                                                       விண்ணப்பதாரி கையொப்பம்

  ( புதியவர்கள் மாதிரிச் செய்தி ஒன்றை எழுதி விண்ணப்பத்துடன் அனுப்பவும்.)

 

 

பண்ணாகம் இணைய நிர்வாம், யேர்மனி 

www.pannagam.com