WELCOME TO PANNAGAM.COM & PTV

பண்ணாகம் இணையம்

 

யேர்மனியில் பண்ணாகம்  இணையத்தின் 
 10 வது ஆண்டுவிழா  

பண்ணாகம் இணையத்தளத்தின் 10வது ஆண்டு விழா கடந்த  23.04.2016  அன்று சிறப்பாக நடைபெற்றது 

ஜேர்மனியில் இயங்கி வருகின்ற  பண்ணாகம்.கொம் இணையத்தளம் தனது 10வது ஆண்டு விழாவினைச் சுண்டன் நகரில்  சிறப்பாகக் கொண்டாடியது.

பண்ணாகம் இணையம் 10வது ஆண்டுவிழா

 

யேர்மனியில் பண்ணாகம் இணையத்தின் பத்தாவது ஆண்டுவிழா 23.0.4.2016 சனிக்கிழமை வெகுவிமர்சையாக, சிறப்பாக, தியாகிகள் அரங்கில்  யேர்மனி சுண்டனில் நடந்தேறியது.

 

பண்ணாகம் இணையத்தின் ஆதரவாளர்களும் உதவியாளர்கள் நலன்விரும்பிகள் பலர் மங்கலவிளக்கு ஏற்றும் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்கள். அடுத்து தம்மினிய உயிர்களைத் இனத்துக்காக ஈகம் செய்த அரசியல்வாதிகள்,போராட்ட தியாகிகளையும் பொதுமக்களையும் இவ்விழாவுக்கு அதிதியாக வருகைதரவிருந்த அமரரான திருமதி மங்கையற்கரசி  அமிர்தலிங்கம் அவர்களையும் மனதில் நிறுத்தி அகவணக்கம் நிறைந்தேறியது.

 

நிகழ்ச்சிகளை ஆரம்பிக்க யேமனியின் புகழ் பெற்ற சிறந்த ஆசிரியை தனுசா ரமணனின் மாணவியர் வரவேற்பு நடனம் வந்தோரை வரவேற்றனர்

 

அதனையடுத்து யேர்மனி கம் காமாச்சி அம்பாளின் ஆலய ஆதீனகுரு பாஸ்கரக்குருக்கள் ஆசியுரை வளங்கினார்

 

சுவீஸ்நாட்டில் இருந்து வருகை தந்த பவளகாந்தன் அவர்கள் வரவேற்புரை வளங்கியதுடன் பண்ணாகம் இணையத்தின் பிரதம ஆசிரியர் கிருஸ்ணமூர்த்தி அவர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்றார்

 

இதனை அடுத்து பிரதமவிருந்தினர்களாக இலண்டனில் இருந்து வருகை தந்திருந்த மருத்துவமாதுவான திருமதி பகவதி தணிகாசலம், நோர்வேயில் இருந்து வருகை தந்திருந்த நோர்வே நக்கீரா அவர்களின் உரையும் வாழ்த்துப்பாவும் வளங்கப்பட்டன.

 

கலைவிளக்கு திரு.பாக்கியநாதன், தமிழருவி திரு நயினை விஜயன், ஏலையா திரு முருகதாசன்,வண்ணத்தப்பூச்சி திரு காசி நாகலிங்கம், செய்தி ஆய்வாளர் திரு சபேசன், அறிவிப்பாளர் திரு முல்லை மோகன், சமூகசேவையாளர் திரு.திருமதி மனோறஞ்சன் ரதிவதனி, இசையமைப்பாளர் எஸ்ரிஎஸ் தேவராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து பண்ணாகம் இணையத்தின் ளெரவம் பெற்றனர்  இவர்களுக்கு இலண்டனில் இருந்து வருகை தந்த திருமதி பகவதி தணிகாசலம் ,பண்ணாக இணைய ஒப்புநோக்காளர் திருமதி கிருஷ்ணமூர்த்தி சர்வாஜினிதேவி அவர்களால் பண்ணாக இணையத்தின் சார்பாக இலட்சணைச்சின்னம் வளங்கிக் கௌரவிக்கப்பட்டனர் அத்துடன் சிறப்ப விருந்தினர் உரையும் இடம்பெற்றது.

 

இதனைத் தொடர்ந்து இணையத்தின் பிரதம ஆசிரியரான திரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பண்ணாக இணையத்துடன் தான் கடந்துவந்த பாதையில் தாண்டிவந்த சிரமங்களையும் உதவியவர்களையும் நினைவு கூர்ந்தார். அதில் முக்கியமாக பண்ணாகம் இணையம் ஊர்தளத்தில் இருந்து பொதுத்தளத்துக்கு வளர்ச்சி பெற்று நகர்த்தப்பட்டமையை சுட்டிக்காட்டினார்.

 

இணைய நிர்வாக சேவையாளராக வரைகலையாளர் திரு கிருஷ்ணராசா அருண்-சுவீஸ், பொறியலாளர் திரு கிருஸ்ணமூர்த்தி பிரசாத்   இளமானி கணனி பட்டதாரி கௌரவிக்கப்பட்டனர்.

 

தொடர்ச்சியாக இணையத்தின் கௌரவத்தைப் பெற்றவர்கள்

 

கவிஞர் திரு செல்வரத்தினம் பவளகாந்தன் –கவிஞர் திரு வெற்றிவேலு வேலழகன்-    நாடக்கலைஞர் திரு சிவப்பிரகாசம் சிவதாசன் –   சமூகசேவையாளர்   திரு குணரத்தினம் சச்சிதானந்தமூர்த்தி –நடனக்கலை ஆசிரியர் துரையரங்கன் சாந்தி . ஆரம்ப அங்கத்தவர் செல்வன் இராமநாதன் துசியந்தன். மெசடே  2007இல் பண்ணாக இணையத்தின் ஒர் இலட்சம் பார்வையாளராக இலங்கையில் பரிசு பெற்றவரான செல்வன் சுபரூபன் சுப்பிரமணியம்.

 

இவ்விழாவின் நிறைவு நிகழ்பாக சிறப்புப்பட்டிமன்றம் "நவீன தொலைத் தொடர்புச்சாதனங்கள் மனிதவாழ்வில் அமைதியை வளர்க்கிறதா? தொலைக்கிறதா?" பண்டைய பட்டிமன்ற விதிகளுக்கமைய நோர்வே நக்கீராவின் தலைமையில் அரங்கேறியது. 

பங்கு பற்றியோர்

திரு சபேசன், முத்தழகன், தேவராஜன், ஏலையா முருகதாசன், கிருஷ்ணமூர்த்தி (இணைய ஆசிரியர்) முல்லை மோகன்

 

இப்பட்டிமன்றத்தில் வாதத்திறமையால் நவீன தொலைத்தொடர்புச் சாதனங்கள் மனிதவாழ்வில் அமைதியைத் தொலைக்கிறது என்ற சாராரே புள்ளிகளின் அடிப்படையில் முடிவு வழங்கப்பட்டது.

கண்காட்சிகளாக முஞ்சன் நகரில் இருந்து உலகில் வெளியான தமிழ்ப் பத்திரிகைகள் ஆண்டாண்டுகளாகச் சேர்த்து வைத்திருந்த ஆவனங்களை சுமந்து வந்து அருங்காட்சியகத்தை காட்சிக்கு வைத்த திரு அன்ரன் யோசெப் அதிசிறப்பு கௌரவத்தைப் பெற்றார். இலகுசமையல் பாத்திர கண்காட்சியை பாலு ஏசியா பணமாற்று நிறுவனத்தினர் விழா மக்களுக்காக நடாத்தினார்கள்.

பண்ணாகம் இணைய 10வது ஆண்டு நிகழ்வு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்க யேமனியிலேயே பிறந்து வளர்ந்து தமிழ் பயின்ற மாணிவியர்கள் இருவர் றெசிக்கா பேரின்பராஜா, டனுசா பேரின்பமூர்த்தி சிறப்பாக தொகுத்து வழங்கினர். இவர்களின் தமிழ் அழகு வியக்க வைத்தது. தமிழை அழாக வாசித்து நல்ல உச்சரிப்புடன் தொகுத்தளித்தனர். இவர்களுக்கு எம்வாழ்த்துக்கள்.

 

எந்தவித தடைகளோ தாமதமோ இன்றி விழா இனிதே நிறைவேறியது.

 

தொகுப்பு – நக்கீரா,ஏலையா

யேர்மனியில் பண்ணாகம்  இணையத்தின்
 
 10 வது ஆண்டுவிழா  
23.4.2016 

                 சனிக்கிழமை   மாலை 17.30 மணி


நீ பிறந்த பிறகுதான்
நம் உறவுகளின் துடிப்பறிந்து
மிடுக்கோடு தலை நிமிர்ந்தோம்

சிறகிழந்த பறவையாய் எம்
பயணம் தொடர முடியாமல்
விழுந்து கிடந்தோம்
அன்னியர் தேசங்களில்
திக்கெட்டும் திசைமாறி
வந்தவழி தெரியாது
சொந்த மண்ணை இழந்து
வெந்த எம் உள்ளங்கள்
விம்மி அழுகின்ற தருணத்தில்
அறுதலாய் அவதரித்தாய்
பண்பான நம்மூரின்
நாமம் தனைக்கொண்ட
பண்ணாகம் இணையமென
பண்ணாகம் இணையமே!
நீ பிறந்த பிறகுதான்
நம் உறவுகளின் துடிப்பறிந்து
மிடுக்கோடு தலை நிமிர்ந்தோம்
கடுப்பான வலிகளெல்லாம்
களைந்தெடுத்தாய்
பிரிவுகளை இணைத்து
பேரானந்தம் தந்தாய்
உறவோடு உறவாட
உன் பின்னே நாம் தொடர்ந்தோம்
மறவோமே உன் சேவை
அகவைகள் அகிலம்தொட்டு
நீ வளர வாழ்த்துகின்றோம்

-தேவன் திரு-
பண்ணாகம் பெயர் எப்படி பிறந்தது?

பண்ணாகம்

ஆதியில் பண்புடைய, தீண்டாத, தீங்கிளைக்காத நாகங்கள் குடிகொண்ட பிரதேசமே பண்ணாகம் என்றானது. வெள்ளக்காட்டின் மேட்டுப்பகுதியாக பண்ணாகம் இருந்த காரணத்தினால் பாம்புகள் வெள்ளத்துக்கு ஒதுங்கி தம்புற்றுக்களை மேட்டு நிலங்களிலேயே அமைக்கும். இந்த மேட்டு நிலங்களிலேயே மேட்டுக்குடிகளும் வாழத் தொடங்கினர்.

இலங்கையின் வடபகுதியான யாழ்பாணத்தில் சித்தங்கேணி, சுழிபுரம், பனிப்புலம், வட்டுக்கோட்டை போன்ற கிராமங்களை எல்லைகளாகக் கொண்ட கிராமமே பண்ணாகம். இங்கேதான் தமிழீழத்தீர்மானம் த.வி.கூ எடுக்கப்பட்டது. ஈழத்தமிழர்களின் தானைத்தளபதி அமிர்தலிங்கம் பிறந்த இடமும் பண்ணாகமே. பண்ணாகம் இணையத்தின் வேண்டுகோளுக்கிணங்கவே இக்கட்டுரை எழுதப்படுகிறது. பண்ணாகம்  மரவெள்ளிக்கிழங்கு பெயர்போன ஊராக முன்னைய காலங்களில் திகழ்ந்தது  அது வணிக உணவாகவும் இருந்தது. 

அகம் என்பது மனை, வீடு, இல்லம் என்ற பொருள் கொண்டது. பண்புள்ள பண்பட்ட குடிகள் வாழ்ந்த இடமாக பிற்காலத்தில் பார்க்கப்பட்டாலும் பண்டைய வரலாறுகள் பெயர்களை காரணப்பெயர் கொண்டே வைத்தார்கள். பண்ணாகம் மக்களுடைய பேச்சு வளக்கில் அவர்களின் தனித்துவத்தை அறியலாம். ஒரு வசனத்தை நீட்டி இழுத்தே முடிப்பார்கள். இது பனிப்புலத்து மக்களின் பேச்சு வளக்குப்போல் அதிநீளமாக இருக்காது.

பண்ணாகம் சுழிபுரப்பகுதியைப் பார்த்தால் நெற்செய்கைக்கு ஏற்ற நிலங்களாக இருந்திருக்கின்றன. மேடானபகுதிகளில், மரங்கள் செறிந்த இடங்களில் நாகங்கள் தமது புற்றை அமைத்துக் கொள்ளும். தீண்டா நாகங்கள் அதாவது பண்புடைய பத்தியுடைய நாகங்கள் வாழ்ந்த பிரதேசமாகவே பண்ணாகம் பார்க்கப்பட்டுள்ளது. பண்ணாகத்திலும் அதை அண்டிய பிரதேசங்களிலும் நாகவணக்கம் செறிவாவே இருந்தது. அது அப்படியே இன்றும் இருக்கிறது. சங்கமித்திரை வந்த இறங்கிய சம்பில்துறை, திருவடிநிலை, சுழிபுரம், ஈறாக பொன்னாலை ஊடாக காரைநகர்வரை நாகவணக்கம் அதாவது நாகதம்பிரான் வணக்கம் அதிகமாக இருப்பதை இன்றும் காணலாம். முக்கியமாக அரசமரத்தின் கீழ் சிறிய நாகதம்பிரான் கோவில் இருக்கும். சிலவேளை அதைச் சுற்றிப் பாம்புப் புற்றுகளும் இருக்கும். 

இலங்கையின் ஆதிகுடிகளான இயக்கர், நாகர்களின் நாகங்களை வணங்கியவர்களே நாகர்கள் என்று அழைக்கப்பட்டனர். பண்புள்ள நாகங்களோ பண்புடைய நாகர்களோ வாழ்ந்த இடமே பண்ணாகம் என காரணப்பெயராக அமைந்திருக்கலாம் என்பது ஊகிக்க முடிகிறது. பௌத்தம் சம்பில்துறை ஊடாக இலங்கைக்கு வந்தபோது சங்கமித்திரை நாட்டிய வெள்ளரசுமரத்தை இன்றும் பறாளாய் முருகமூர்த்தி கோவிலில் காணலாம். 

சுருக்கமாகக் கூறின் பண்புமைய நாகர்கள் அல்லது நாகங்கள் அகம் எனும் இல்லமாக, வீடாகக் கொண்ட இடமே பண்ணாகம். பண்-அகம் பண்ணகம், பண் நாகம் - பண்ணாகம் அதாவது பண்புடைய தீண்டாது தீதற்ற நாகங்கள் வாழ்ந்த பிரதேசமே பண்ணாகம் ஆகும்.

நோர்வே நக்கீரா 29.04.2016

இன்று 1.3.2015 பண்ணாகம் இணையத்தின் 10 வது பிறந்தநாள்

இதையொட்டி பண்ணாகம் இணையத்தின் அபிமானிகள் ஆதரவாளர்கள் முகநுாலிலும் கடிதம்ஊடாகவும் மின்னஞ்சல் மூலமும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகிறார்கள். இவர் அணைவரையும் 23.04.2016 நடைபெறும் விழாவில் அவை வாசித்து நினைவில் கொள்வோம்.

பண்ணாகம் இணைய நிர்வாகம்


குறிப்பு- விசவர்த்தனை முருகன் ஆலய பரிபாலன சபையின் வாழ்த்துக்கள், கனடா பண்ணாகம் மக்கள் ஒன்றிய ஆரமபத்தலைவர் ஆசிரியர் திரு .திகம்பரலிங்கம் அவர்களின்வாழ்த்துக்கள் மற்றும் பல முக்கிய பிரமுகர்களின்.மன்றங்களின்,கழகங்கள் வாழ்த்துக்கள் கவிதைகள் என்பன ஏற்கனவே தபால்மூலம் மின்னஞ்சல் மூலமும் கிடைக்கப் பெற்றிருக்கின்றது.

பண்ணாகம் இணைய 10வது ஆண்டுவிழா பற்றிய முன் அறிவிப்பு அறிவித்தல் வெளியானவுடன் பலர் எம்முடன் தொடர்புகொண்டு உற்சாகமும் ஆதரவும் தந்து வருபவர்கள் அனைவருக்கும் நன்றிகள். இவ்விழாவில் எழுத்தாளர்கள் கவிஞர்கள் ஆய்வாளர்கள் பலரும் கௌரவிக்கப்படவுள்ளார்கள் என்ற மகிழ்சிகரமான செய்தியை உங்களுக்கு அறியத்தருகின்றோம். அவர்களின் பெயர்களை உங்களிடமிருந்தும் வரவேற்கின்றோம்.