WELCOME TO PANNAGAM.COM & PTV

பண்ணாகம் இணையம்

 

2018
 முழு வருடஇராசி பலன்கள் 2018 -
Rasi Palan 2018


குருபகவான் இப்போது வக்ரகதியில் இருக்கிறார். இன்னும் சில தினங்களில் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

துலாம் ராசியில் உள்ள குருபகவான் புரட்டாசி மாதம் 25ம் தேதியன்று அக்டோபர் 11ம் தேதியன்று விருச்சிகம் ராசிக்கு இடம் பெயர்கிறார்.

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள் பரிகாரங்களைப் பார்க்கலாம்.

குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடங்களே அதிக பலனடையும்.

குரு பகவான் தெய்வீக அறிவுக்கும் வேதாந்த ஞானத்திற்கும், செல்வ வளத்திற்கும் பொருள் சேமிப்பிற்கும் காரணகர்த்தா.

குரு பகவான் மாபெரும் சாதனைகளைச் செய்ய வைத்து மனிதனை மாணிக்கமாக திகழ வைப்பார்.

நாட்டை ஆளவைப்பார், நல்லோருடன் சேர வைப்பார். புது புது உத்திகளைக் காண வைப்பார் ஆன்மீக சுகத்திற்கு காரகராகவும் திகழ்கிறார்.

இந்த குரு பெயர்ச்சி ரிஷபம், கடகம், துலாம், மகரம், மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு சாதகமான பலனை தருகிறது.

இந்த குரு பெயர்ச்சி பலன்கள் பொதுவானதாகும். அவரவர்கள் ஜாதகத்தில் கிரகங்களின் அமைப்பிற்கு தக்கவாறும் தற்சமயம் நடைபெறும் தசா-புக்திக்கு தக்கவாறும் உள்ள பலன்களே நடைபெறும்.

#மேஷம்

செவ்வாய் பகவானின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் துடிப்பாகவும் மிகுந்த வீரத்துடன் செயல்படுவீர்கள். மற்றவர்களை பற்றி கவலைப்படாமல் எதிலும் முதலிடத்தை பிடிப்பது ஒன்றே உங்களின் தலையாய நோக்கமாகும்.

வீரமும் தைரியமும் கோபமும் ஆக்ரோஷமும் ஒருங்கே அமையப் பெற்றுள்ளவர்கள் நீங்கள். வீர தீரம் கொண்ட மேஷ ராசிக்காரர்களுக்கு உங்கள் ராசிக்கு 7ம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் அக்டோபர் மாதம் முதல் 8ம் இடத்திற்கு செல்கிறார்.

அஷ்டமத்தில் குரு அவ்வளவாக நல்லதில்லை. ஆனாலும் குரு பகவான் பார்வை ராசிக்கு 12ம் இடம் 2ம் இடம் மற்றும் 4ம் இடங்களின் மீது விழுவதால் பல நன்மைகள் நடக்கும். தனவரவு இருக்கும், சுக சந்தோஷங்கள் அதிகரிக்கும்.

சுப விரையங்கள் அதிகம் ஏற்படும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே அவ்வப்போது பேச நேரம் ஒதுக்குங்கள் சண்டைகளை தவிர்க்கலாம்.

சாப்பாட்டு விசயத்தில் கவனமாக இருந்தால் வயிறு கோளாறுகளையும், நோய்களையும் தவிர்க்கலாம். வியாழக்கிழமை குருபகவானுக்கு அர்ச்சனை செய்யலாம்

#ரிஷபம்

சுக்கிரன் பகவான் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் மிகவும் மென்மையானவர்களாகவும் மற்றவர்களை அனுசரித்து நடக்க கூடியவர்களாகவும், வசீகரப் பேச்சினால் பிறரை கவரக் கூடியவர்களாகவும் இருப்பிர்கள்.

நினைத்த காரியத்தை செம்மையாக முடிக்கும் ஆற்றல் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே…. உங்கள் ராசிக்கு 6 ஆம் இடத்தில் இருக்கும் குருபகவான் ராசிக்கு 7வது வீட்டில் அமர்வது சிறப்பான அம்சம்.

கல்யாண வயதில் உள்ள ஆண் பெண்களுக்கு திருமணம் கை கூடி வரும் மேலும் நின்று போன திருமணங்கள் இனி சுபமாக நடைபெறும். திருமண வாழ்க்கையில் விவாகரத்து பெற்ற ஆண், பெண்களுக்கு மறுமணம் நடைபெறும்.

இது காதல் மலரக் கூடிய ஒரு காலம் ஆகும். காதல் உறவுகள் வலுப்படும். அதுவே திருமணத்தில் முடியக் கூடிய நல்ல நேரம் ஆகும்.

பொருளாதார உயர்வு இருக்கும், தீராத பிணிகளும் தீரும். நம்பிக்கையிழந்து வாழ்க்கையை ஓட்டியவர்களுக்கு எல்லாம் இனி எல்லாமும் சாத்தியம் தான் என்ற நம்பிக்கையை இந்த குரு பெயர்ச்சி கொடுக்கும்.

#மிதுனம்

புதன் பகவான் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் புத்தி கூர்மையுள்ளவர்களாகவும்,சகிப்பு தன்மையும்,பொறுமையும் உடையவர்களாகவும் எல்லா காரியங்களையும் திறமையாக செய்து முடிக்கும் ஆற்றல் பெற்றவர்களாகவும் இருப்பீர்கள்.

உங்கள் ராசிக்கு களத்திரம் மற்றும் ஜீவன ஸ்தான அதிபதியான குரு ராசிக்கு 6வது வீட்டில் அமர இருக்கிறார். 6ம் இடம் சுப ஸ்தானம் இல்லை. குரு பகவான் 10,12 ஆம் இடம் மற்றும் 2 ஆம் இட தன ஸ்தானத்தை பார்வையிடுகிறார்.

பணம் அதிகமாக வந்தாலும் சுப விரைய செலவுகள் ஏற்படும். திருமண வாய்ப்புகள் தாமதப்படும். தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமை விரதம் இருந்து வழிபட நன்மைகள் அதிகம் நடக்கும்.

#கடகம்

சந்திரனின் ஆதிக்கம் பெற்றவர்கள் நீங்கள் உங்கள் ராசிநாதன் சந்திரன் பதினைந்து நாட்கள் வளர்பிறையாகவும், பதினைந்து நாட்கள் தேய்பிறையாகவும் உலவி வருவார்.

குருபகவான் இதுநாள் வரை உங்கள் ராசிக்கு 4வது வீட்டில் உள்ள குருபகவான் அக்டோபர் மாதம் முதல் 5வது வீட்டிற்கு செல்கிறார்.

குருபகவான் ராசியை பார்வையிடுகிறார். ராசிக்கு 9ஆம் இடம், 11வது இடத்தையும் பார்வையிடுகிறார் குருபகவான். காதல் கனியும் காலம், திருமண வாய்ப்புகளும் கைகூடி வரும். வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற ஆடை அணிந்து குருபகவானை வழிபடலாம்.

#சிம்மம்

சூரியனை ஆட்சி நாதனாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களே… உங்கள் ராசிக்கு 3வது வீட்டில் இருந்த குருபகவான் அக்டோபர் மாதம் முதல் ராசிக்கு 4வது வீட்டில் அமரப்போகிறார்.

குருபகவான் ராசிக்கு 8ஆம் இடம், 10ஆமிடம், 12வது இடத்தையும் பார்வையிடுகிறார். வீட்டில் சின்னச் சின்ன சண்டைகள் ஏற்படும்.

காதல், திருமண விசயங்களில் அவசரப்பட வேண்டாம். வேலைப்பளு அதிகரிக்கும். கடன் வாங்கவோ,கொடுக்கவோ வேண்டாம்.

தென்திட்டையில் எழுந்தருளும் குருபகவானை வணங்க நல்லதே நடக்கும். முக்கிய முடிவுகளை எடுக்கும் போது அவசரப்படாமல் ஆலோசனை செய்து முடிவு செய்யவும்.

#கன்னி

புதன் பகவானை ஆட்சி நாதனாகக் கொண்ட புத்திசாலித்தனம் கொண்ட கன்னி ராசிக்காரர்களே. உங்கள் ராசிக்கு 2வது வீட்டில் தன ஸ்தானத்தில் அமர்ந்துள்ள குருபகவான், முயற்சி ஸ்தானமான மூன்றாவது வீட்டில் அமர உள்ளதால் சிறு சிறு பயணங்கள் ஏற்படும்.

வாக்கு ஸ்தானத்தில் அமர்ந்திருந்த குரு 3வது இடத்திற்கு செல்வதால் வார்த்தைகளில் கவனம் தேவை. குரு பகவான் ராசிக்கு 7வது வீடு, 9வது வீடு 11வது இடத்தை பார்வையிடுகிறார். இந்த குரு பெயர்ச்சியினால் வேலைப்பளு ஏற்பட்டாலும் நீண்ட நாள் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும், கடன் தொகை வசூலாகும்.

#துலாம்

அன்பும், காதல் உணர்வும் கொண்ட துலாம் ராசி நேயர்களே… இது நாள் வரை உங்கள் ராசியில் இருந்த குரு பகவான் அக்டோபர் மாதம் முதல் உங்கள் ராசிக்கு 2வது வீடான தன ஸ்தானத்திற்கு செல்கிறார்.

குரு பகவான் ராசிக்கு 6வது இடம் 8வது இடம், 10வது இடத்தை பார்வையிடுகிறார்.

குரு பெயர்ச்சியினால் வீட்டில் அமைதி நிலவும், உல்லாச பயணம் செல்லக்கூடிய நேரம், சிலருக்கு பணி செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும், பதவி உயர்வுகள் கிடைக்கும். வியாழக்கிழமையன்று ஏழைகளுக்கு அன்னதானம் கொடுக்கலாம்.

#விருச்சிகம்

செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசி நேயர்களே. இதுநாள் வரை உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் இருந்த குருபகவான், அக்டோபர் மாதம் முதல் ராசிக்குள் வந்து அமர்கிறார்.

உங்கள் ராசிக்கு 5வது வீட்டிலும், 7வது வீட்டிலும், 9வது வீட்டிலும் குருவின் பார்வை விழுகிறது. பொறுப்புகளும், கடமை உணர்வுகளும் அதிகரிக்கும்.

பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் பலரும் அனுசரணையாக இருப்பார்கள். குரு பகவானை வியாழக்கிழமைகளில் சென்று வணங்கி வரலாம்.

குரு 5ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 5மிடத்தை பார்ப்பபதால் திருமணமான தம்பதியினருக்கு புத்திர பாக்கியம் கிட்டும். உங்கள் குழந்தைகளின் மேல் படிப்பிற்காக செலவுகள் அதிகரிக்கும்.

தாய் வழியில் தன வரவு வரும். எடுத்த காரியங்கள் வெற்றி பெறும். குரு 7ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 7மிடத்தை பார்ப்பதால் வியாபாரம், கூட்டு தொழில், நண்பர்கள் மூலம் நல்ல உறவு ஏற்படும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

#தனுசு

அறிவாற்றலும், திறமையும் கொண்ட தனுசு ராசிக்காரர்களே இதுநாள் வரை உங்கள் ராசிக்கு 11வது வீட்டில் லாப ஸ்தானத்தில் இருந்த குரு பகவான், ராசிக்கு 12வது வீட்டில் விரைய ஸ்தானத்தில் சஞ்சரிக்க உள்ளார்.

சுப விரைய செலவுகள் ஏற்படும். குரு பகவான் 4 ஆம் இடம் 6 ஆம் இடம் மற்றும் 8 ஆம் இடத்தை பார்க்கிறார்.

பண வரவுக்கு பஞ்சமில்லை அதே போல சுப விரைய செலவுகளும் அதிகம் ஏற்படும். வாழ்க்கைத்துணையுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட வேண்டாம். காதல் விவகாரங்கள் கை கூடுவதில்லை கொஞ்சம் ஒத்திப்போடவும்.

அவ்வப்போது உடல் களைப்பு ஏற்படும் என்பதால் சத்தான உணவுகளை சாப்பிடவும். உங்கள் ராசிக்கு 4 ம் வீடு பூமி வீடு,வாகனம் சுகம் கல்வி,தாய் ஆகிய ஸ்தானங்களை குரு பார்ப்பதால் அதன் அடிப்படையில் யோகங்கள் வரும்.

சகல காரியங்கள் சித்தி பெறும். உங்கள் ராசிக்கு 6ம் பாவத்தை குரு பார்ப்பாதல் கடன் சுமை குறையும்.நோய் நொடி நீங்கும். தொழில் அபிவிருத்தி உண்டாகும்.

வர வேண்டிய தொகைகள் வந்து சேரும். உங்கள் ராசிக்கு 8ம் பாவத்தை குரு பார்ப்பதல் வழக்கு வெற்றிகள் சாதகமாகும். பயம் நீங்கும்.எதிர்பாராத வகையில் பண வரவு வரும். காலங்கள் மாறும் காட்சிகள் மாறும். குருபகவானை சரணடைய நல்லதே நடக்கும்.

#மகரம்

உங்கள் ராசிக்கு 10ம் பாவத்தில் சஞ்சாரம் செய்த குரு பகவான் இப்பொழுது உங்கள் ராசிக்கு 11ம் வீடான லாப ஸ்தானமான சிம்மத்தில் சஞ்சரிக்க உள்ளார்.

11ம் பாவம் என்பது மூத்த சகோதரர்கள், வித்தை, லாபம், நட்பு, மன ஆசைகள் நிறைவேறுதல் ஆகியவற்றை குறிக்கும் இடமாகும். உங்கள் ராசிக்கு 11ம் பாவத்தில் குரு வரும் பொழுது முழுமையான யோகத்தைச் செய்யும் என்பது பழமையான ஜோதிட நூல்களில் சொல்லப்பட்டுள்ளது.

உங்கள் ராசிக்கு 3ம் பாவத்தை குரு 5ம் பார்வையாக பார்ப்பாதல் வீரம்,போகம் துணிவு துணைவர் பலம், ஆயுள்பலம், எல்லா காரியங்களிலும் வெற்றி பெற செய்வார். உங்களுடைய எண்ணங்கள் யாவும் நிறைவேறும். திட்டங்கள், ஆசைகள் கனவுகள் எல்லாம் நிறைவேறும்.

குழந்தைகள் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிட்டும். லாப ஸ்தானத்தில் உள்ள குருபகவானால் பதவி உயர்வு கிடைக்கும் ஆரோக்கியம் மேம்படும். உற்சாகம் அதிகரிக்கும்.

#கும்பம்

ராசிக்கு 9ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்யும் குரு பகவான் 10 ஆம் இடத்திற்கு செல்கிறார். குரு பகவான் 2 ஆம் இடம் 4 ஆம் இடம் மற்றும் 6 ஆம் இடத்தை பார்வை இடுகிறார். பத்தாமிடத்து குரு ஈசனார் ஒரு பத்திலே தலையோட்டிலே இரந்துண்டது என்பது பாடல்.

கடந்த காலத்தில் குரு 9ல் நல்ல இடத்திலிருந்து நன்மைகளை அடைந்தவர்கள் பத்தில் குரு கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி என்ற நிலையையும் உருவாகும்.

குரு பகவான் 5ம் பார்வையாக 2மிடமான வாக்கு வித்தை குடும்ப ஸ்தானத்தை பார்க்க போவதால் சொன்ன சொல்லை காப்பாற்றலாம்.

குடும்பத்தில் சந்தோஷங்களைப் பார்க்கலாம். குடும்ப தேவைக்காக புதிய பொருட்களை வாங்கலாம். எந்த காரியத்தையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்யுங்கள். பத்தில் உள்ள குரு பதவியை ஒன்றும் நாசம் செய்ய மாட்டார் கவலை பட வேண்டாம். நன்மையே நடக்கும்.

#மீனம்

இது வரை உங்கள் ராசிக்கு 8ல் இருந்த குரு இப்பொழுது ராசிக்கு 9ம் இடத்திற்கு மாற இருக்கிறார்.

உங்கள் ராசி நாதனான குருவே உங்கள் ராசியை பார்க்கிறார். அது மிகவும் நல்லது. அகப்பட்டவனுக்கு அஷ்டமத்தில் சனி, ஓடிப் போனவனுக்கு ஓன்பதில் குரு என்பார்கள்.

உங்கள் ராசி நாதன் குரு 5ம் பார்வையாக உங்கள் ராசியை பார்க்க போவதால் எடுத்த காரியங்கள் வெற்றி பெறும். உங்களுக்கு முன்னேற்றமும் வளர்ச்சியும் யோகமும் வந்து சேரும்.

குரு 7ம் பார்வையாக. ராசிக்கு 3 ம் இடத்தை பார்க்க போவதால் தைரியமாக எல்லா காரியங்களிலும் இறங்கி வெற்றி பெறலாம்.

தைரியத்தையும், தன்னம்பிக்கை தந்து வளமான வாழ்வு உண்டு.பொதுவாக எல்லா ராசி அன்பர்களும் குரு பெயர்ச்சிக்கு பரிகாரமாக ஆலங்குடி சென்று குருவுக்கு பிரீதி செய்வதும், திருச்செந்தூர் சென்று கடலில் குளித்து முருகப் பெருமானை வழிபாடு செய்து வர நல்ல பலன்கள் கிடைக்கும்.


ஹேவிளம்பி வருடம் முடிந்து சீரும் சிறப்புமாக விளம்பி வருடம் பிறக்கிறது. மங்களரகமான விளம்பி வருடம் வசந்தருதுவுடன், உத்தராயண புண்ணிய காலம் நிறைந்த சனிக்கிழமை காலை 6 மணி 55 நிமிடத்துக்கு 14.4.2018 கிருஷ்ண பட்சம், திரயோதசி திதி, உத்திரட்டாதி நட்சத்திரம் முதல் பாதத்தில் பிறக்கிறது. இந்தத் தமிழ் புத்தாண்டில் ஒவ்வொரு ராசி அன்பர்களுக்கும் ஏற்படக்கூடிய பலன்களைப் பற்றியும், செய்யவேண்டிய பரிகாரங்களும்.

சுதந்திர மனப்பான்மையுடன் செயல்படுபவர்களே!

ராசிக்கு 12-ல் சந்திரன் இருக்கும்போது புத்தாண்டு பிறப்பதால், திடீர்ப் பயணங்களும், திடீர் செலவுகளும் அதிகரிக்கும். சிக்கனமாக இருக்க முயற்சி செய்யவும். வீண் ஆடம்பரச் செலவுகளைக் கட்டுப்படுத்தவேண்டியது அவசியம். குடும்பத்துடன் நீண்டநாள்களாகச் செல்ல நினைத்த கோயில்களுக்குச் சென்று வருவீர்கள். புதிதாக அறிமுகமாகும் நபர்களிடம், குடும்ப விஷயங்களைப் பேசவேண்டாம்.

3.10.18 வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டிலேயே இருப்பதால், அடுத்தடுத்த சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வருகையால் குடும்பத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். கணவன் - மனைவிக்கிடையில் ஒற்றுமை அதிகரிக்கும். அவ்வப்போது சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும், பெரிதுபடுத்தாமல் பொறுமை காக்கவும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். மகளுக்கு எதிர்பார்த்தபடி நல்ல வரன் அமையும். மகனுக்கு வேலை கிடைக்கும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். பூர்வீகச் சொத்தை மாற்றியமைப்பீர்கள். விலையுர்ந்த தங்க நகைகள் வாங்குவீர்கள். ஆனால், 4.10.18 முதல் 12.3.19 வரை குரு ராசிக்கு 8-ல் மறைவதால், வீண் அலைச்சல், வதந்திகள், இனம்புரியாத கவலைகள் ஏற்பட்டு நீங்கும். 13.3.19 முதல் பிற்போக்கான நிலை மாறும். பல வகைகளிலும் வளர்ச்சியான போக்கைக் காணலாம். மகனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும். நீங்களும் வெளிநாடு சென்று வருவீர்கள்.

30.4.18 முதல் 27.10.18 வரை உங்கள் ராசிநாதன் செவ்வாய் கேதுவுடன் சேர்ந்து 10-ம் வீட்டில் அமர்வதால், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். கௌரவப் பதவிகள் தேடி வரும். ஆனால், கேதுவுடன் சேர்ந்திருப்பதால், சொத்துப் பிரச்னைகளை சுமுகமாகப் பேசி முடித்துக்கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சகோதர வகையில் செலவுகள் அதிகரிக்கும்.

ஆண்டின் தொடக்கம் முதல் 12.2.19 வரை கேது 10-லும் ராகு 4-லும் இருப்பதால், பிரபலங்களின் நட்பு கிடைக்கும். நண்பர்களின் உதவியால் மகனுக்கு வெளிநாட்டில் வேலை அமையும். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அரசாங்கக் காரியங்களில் அவசரம் வேண்டாம். 13.2.19 முதல் கேது 9-ல் அமர்வதால், தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அவருடன் கருத்துவேறுபாடுகள் ஏற்படக்கூடும். பிதுர்வழிச் சொத்துகளைப் பெறுவதில் பிரச்னை ஏற்பட்டு நீங்கும். ஆனால், 3-ல் ராகு அமர்வதால், தாயின் உடல் ஆரோக்கியம் மேம்படும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். புது வீடு மாறுவீர்கள். பழைய வாகனத்தை மாற்றிவிட்டு, புதிய வாகனம் வாங்குவீர்கள்.

2.8.18 முதல் 30.8.18 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால், கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. விலையுயர்ந்த ஆபரணங்களை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளவும்.

வருடம் முழுவதும் சனிபகவான் 9-ல் நிற்பதால், தன்னம்பிக்கை அதிகரிக்கும். கடன் சுமைகளிலிருந்து ஓரளவு விடுபடுவீர்கள். பிற மொழியினரால் சில உதவிகள் கிடைக்கும். நல்ல வாய்ப்புகளை நழுவவிட்டுவிட்டதாக அடிக்கடி நினைத்து வருத்தப்படுவீர்கள்.

வியாபாரத்தில் அனுபவ அறிவைப் பயன்படுத்தி கூடுதல் லாபம் அடைவீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். ஆனாலும், பெரிய அளவில் முதலிடு செய்வதைத் தவிர்க்கவும். சந்தை நிலவரத்தை அறிந்து செயல்படுவது அவசியம். வாடிக்கையாளர்களிடம் இணக்கமாக நடந்துகொள்ளுங்கள். கடையை வசதியான இடத்துக்கு மாற்றுவீர்கள். ஆனி, ஆவணி, தை, மாசி மாதங்களில் லாபம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும். ஸ்டேஷனரி, உணவு, ஏற்றுமதி - இறக்குமதி, கெமிக்கல், மருந்து வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். வேலையாள்களை அனுசரித்துச் செல்லவும்.

உத்தியோகத்தில் கூடுதலாக வேலை பார்க்கவேண்டி வரும். அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ளவேண்டாம். சக பணியாளர்களின் குறைகளைச் சுட்டிக்காட்டவேண்டாம். உங்கள் பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கவேண்டாம். எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாகத்தான் கிடைக்கும். முக்கிய ஆவணங்களில் சட்ட நிபுணரின் ஆலோசனை அவசியம். தை, மாசி மாதங்களில் பதவிஉயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.    

இந்த வருடம் ஒருபக்கம் அலைச்சலைத் தந்தாலும், மற்றொரு பக்கம் உங்கள் திறமையையும் செல்வாக்கையும் அதிகரிக்க வைப்பதாக அமையும்.

பரிகாரம்: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி புத்தூர் என்னும் ஊரில் அருள்பாலிக்கும் ஶ்ரீசுப்பிரமணியரை, சஷ்டி திதி நாளில் தரிசித்து வழிபட, சுபிட்சம் உண்டாகும்.

தவறுகளைத் தட்டிக் கேட்பவர்களே!

உங்கள் ராசிக்கு லாபஸ்தானத்தில் வருடம் பிறப்பதால், உடல் ஆரோக்கியம் மேம்படும். அந்தஸ்து உயரும். புதிய பதவிகள் தேடி வரும். வி.ஐ.பி.கள் மத்தியில் பிரபலமடைவீர்கள். புத்தாண்டின் தொடக்கம் முதல் 3.10.18 வரை குருபகவான் 6-ல் மறைந்திருப்பதால், குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது அவசியம். விலையுயர்ந்த பொருள்களை இரவல் தரவோ வாங்கவோ வேண்டாம். மற்றவர்களுக்காக ஜாமீன் கொடுக்கவேண்டாம். உங்கள் பெயரை சிலர் தவறாகப் பயன்படுத்தக்கூடும். ஆனால், 4.10.18 முதல் வருடம் முடியும்வரை குருபகவான் 7-ல் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்ப்பதால், போட்டி, பொறாமைகள் நீங்கும். தடைப்பட்ட திருமணம் கூடி வரும். கணவன் - மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேர்வீர்கள். வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியம் சீராகும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். அடுத்தடுத்த சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். ஆனால், 13.3. 19 முதல் வீண் அலைச்சல், இனம்புரியாத கவலைகள் ஏற்பட்டு நீங்கும். வெளியூரில் இருக்கும் பூர்விகச் சொத்தை அவ்வப்போது சென்று கவனித்து வருவது நல்லது.

14.4.18 முதல் 12.2.19 வரை கேது 9-ல் இருப்பதால், செலவுகள் அதிகரிக்கும். கடந்தகால இழப்புகள் மன உளைச்சலை ஏற்படுத்தும். தந்தையின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். வழக்குகளில் வழக்கறிஞரின் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படவும். ஆனால், ராகு 3-ல் இருப்பதால், மனதில் தைரியம் பிறக்கும். எதையும் சாமர்த்தியமாகச் சமாளிக்கும் திறமை ஏற்படும். வராது என்று நினைத்த பணம் கைக்கு வந்து சேரும். வாங்கிய கடனைத் தந்து முடிப்பீர்கள். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். ஆனால், 13.2.19 முதல் வருடம் முடியும்வரை கேது 8-லும் ராகு 2-லும் அமர்வதால், மற்றவர்களின் மனம் புண்படாமல் பேசுவது அவசியம். சில நேரங்களில் நீங்கள் சாதாரணமாகப் பேசுவதுகூட பிரச்னையை ஏற்படுத்திவிடும். மற்றவர்களுக்கு ஜாமீன் கொடுக்கவேண்டாம். கண் பார்வையை பரிசோதித்துக்கொள்வது நல்லது. பல் மற்றும் காது வலி வந்து நீங்கும். எவ்வளவு பணம் வந்தாலும் பணப் பற்றாக்குறை நீடிக்கும். குடும்பத்திலும் வெளிவட்டாரத்திலும் அனுசரித்துச் செல்வது நல்லது.

31.8.18 முதல் 1.1.19 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால், குடும்பத்தில் சின்னச் சின்ன பிரச்னைகள் ஏற்படக்கூடும். நீங்கள் எதைப் பேசினாலும் மற்றவர்கள் தவறாகப் புரிந்துகொள்ளக்கூடும். டி.வி., ஃப்ரிட்ஜ் போன்ற சாதனங்கள் பழுதாகும். வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும்.

ஆண்டு முழுவதும் சனிபகவான் அஷ்டமச் சனியாகத் தொடர்வதால், அவ்வப்போது படபடப்பு, தூக்கமின்மை, மறைமுக எதிர்ப்புகள் வந்து செல்லும். கணவன் - மனைவிக்கிடையில் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. வழக்கில் தீர்ப்பு தள்ளிப்போகும். நீங்கள் நம்பியவர்களே உங்களை ஏமாற்றக்கூடும். திடீர்ப் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். சொத்து வாங்கும்போது, தாய்ப்பத்திரத்தை சரிபார்த்து வாங்கவும். குடும்ப விஷயங்களை வெளியில் சொல்லிக்கொண்டிருக்கவேண்டாம்.

30.4.18 முதல் 27.10.18 வரை செவ்வாய் கேதுவுடன் சேர்ந்து 9-ல் இருப்பதால், புதிய முயற்சிகள் வெற்றியடையும். பாதிப் பணம் தந்து பதிவு செய்யாமல் இருந்த சொத்தை, மீதிப் பணம் தந்து பதிவு செய்துகொள்ளுவீர்கள். என்றாலும் சகோதரர்களுடன் பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். தந்தை சில நேரங்களில் கோபப்பட்டாலும், நீங்கள் பொறுமையுடன் இருப்பது நல்லது.

அஷ்டமத்தில் சனிபகவான் தொடர்வதால், வியாபாரத்தில் புதியவர்களை நம்பிக் கடன் தரவேண்டாம். ஆடி, ஐப்பசி மாதங்களில் பற்று வரவு உயரும். புது ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும். சந்தையில் உங்கள் நிறுவனத்தின் மதிப்பு அதிகரிக்கும். வர்த்தக சங்கத்தில் கௌரவப் பதவி கிடைக்கும். புரட்டாசி, மார்கழி மாதங்களில் புதிய கிளைகள் தொடங்குவீர்கள். கடையை நவீனப்படுத்துவீர்கள். புது வேலையாள்களைப் பணியில் அமர்த்துவீர்கள். பங்குதாரர்களை மாற்றவேண்டிய நிலை ஏற்படும். புதிய பங்குதாரர்களைச் சேர்க்கும்போது சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

உத்தியோகத்தில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். அலுவலகப் பணியின் காரணமாக வெளி மாநிலம், வெளிநாடு செல்லும் வாய்ப்பு சிலருக்கு ஏற்படும். ஆனாலும், உத்தியோகத்தில் நீடிப்பது பற்றிய ஓர் அச்ச உணர்வு ஏற்படக்கூடும். அதிகாரிகள் பாரபட்சமாக நடந்துகொள்வார்கள். அலுவலகம் சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்களை கவனமாகக் கையாளவும். சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிடவேண்டாம். சிலருக்கு விரும்பத் தகாத இடமாற்றம் உண்டாகும். வைகாசி, ஆனி மாதங்களில் சம்பள உயர்வு கிடைக்கும். மாசி, பங்குனி மாதங்களில் புதுப் பொறுப்புகள் வந்து சேரும்.

இந்தப் புத்தாண்டு கடின உழைப்பாலும், தொலைநோக்குச் சிந்தனையாலும் முன்னேற்றம் தருவதாக அமையும்.

பரிகாரம்: தஞ்சை மாவட்டம் மணலூர் என்ற ஊரில் அருள்பாலிக்கும் அருள்மிகு மாரிஅம்மனை ஒரு வெள்ளிக்கிழமையன்று சென்று வழிபடுவதால், நோய்கள் நீங்கி, நன்மைகள் பெருகும்.


அனைவரையும் சமமாக நினைத்துப் பழகுபவர்களே!

உங்கள் ராசிக்கு 10-ல் புத்தாண்டு பிறப்பதால், நிர்வாகத் திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். நீங்கள் இதுவரை உழைத்த உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். வேலைக்கு விண்ணப்பித் திருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும்.

புத்தாண்டின் தொடக்கம் முதல் 3.10.18 வரை குரு 5-ல் இருப்பதால், அறிஞர்களின் நட்பால் சில விஷயங்களைச் சாதிப்பீர்கள். பிள்ளைகளின் அலட்சியப் போக்கு மாறும். மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். தூரத்து சொந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள். குலதெய்வக் கோயில் திருப்பணியில் ஈடுபடுவீர்கள். பூர்வீகச் சொத்தைச் சீர் செய்வீர்கள். செலவுகளைக் குறைக்கத் திட்டமிடுவீர்கள். ஆனால், 4.10.18 முதல் 12.3.19 வரை குரு 6-ல் மறைவதால், வரவுக்கு அதிகமான செலவுகளும், அலைச்சலும், எதிர்ப்புகளும் ஏற்படக்கூடும். குடும்பத்திலும் கணவன் - மனைவிக்குள் வீண் சந்தேகம் ஏற்பட்டு நீங்கும். எக்காரணம் கொண்டும் உங்கள் தனித்தன்மையை இழந்துவிடவேண்டாம். ஆனால், 3.3.19 முதல் வருடம் முடியும்வரை குரு அதிசாரத்தில் 7-ல் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்ப்பதால், பிரிந்திருந்த கணவன் - மனைவி ஒன்று சேர்வீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு வேலை கிடைக்கும். பூர்வீகச் சொத்தைப் புதுப்பிப்பீர்கள். விலையுயர்ந்த தங்க நகைகளை வாங்குவீர்கள். தெய்வத்துக்கு வேண்டிக்கொண்ட காணிக்கைகளைச் செலுத்துவீர்கள்.

2.1.19 முதல் 29.1.19 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால், கணவன் - மனைவிக்கிடையில் கருத்துவேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால், விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. வீண் சந்தேகத்தைத் தவிர்க்கவும். வீட்டுப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். மின்னணு, மின்சார சாதனங்களில் பழுது ஏற்பட்டு நீங்கும்.

வருடம் முழுவதும் சனிபகவான் 7-ம் வீட்டில் கண்டகச் சனியாகத் தொடர்வதால், கணவன் - மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். வீண் சந்தேகத்தைத் தவிர்ப்பது அவசியம். புதிய நண்பர்களை நம்பி முக்கிய முடிவுகள் எதையும் எடுக்கவேண்டாம். மற்றவர்களுக்காக ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். வாழ்க்கைத்துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சொத்து வாங்கும்போது தாய்ப் பத்திரத்தை சரிபார்த்து வாங்கவும்.

30.4.18 முதல் 27.10.18 வரை செவ்வாய் கேதுவுடன் 8-ல் இருப்பதால், சகோதர வகையில் சங்கடங்கள் ஏற்படக்கூடும். வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும். சொத்து வாங்கும்போது சட்ட நிபுணர்களைக் கலந்து ஆலோசிப்பது அவசியம்.

புத்தாண்டின் தொடக்கம் முதல் 12.2.19 வரை ராகு 2-லும் கேது 8-லும் தொடர்வதால், மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். அலைச்சல் அதிகரிக்கும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமை அவசியம். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும் என்பதால், வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையாக இருக்கவும். மற்றவர்களின் விஷயங்களில் தலையிடவேண்டாம். வீண்பழி வந்து செல்லும். 13.2.19 முதல் வருடம் முடியும் வரை ராசிக்குள் ராகுவும் 7-ல் கேதுவும் அமர்வதால், உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. முன்கோபத்தைத் தவிர்க்கவும். மின் சாதனங்களைப் பயன்படுத்தும்போது எச்சரிக்கையாக இருக்கவும். மற்றவர்களுக்கு ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். வாழ்க்கைத்துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

வியாபாரத்தில் சித்திரை, ஆவணி, கார்த்திகை மாதங்களில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். விளம்பர யுக்திகளைப் பயன்படுத்தி லாபத்தை அதிகரிப்பீர்கள். சந்தை நிலவரங்களை நுணுக்கமாக கவனித்து, பெரிய முதலீடு செய்வீர்கள். அனுபவம் மிக்க வேலையாள்களைப் பணியில் அமர்த்துவீர்கள். கடையை நவீனமயமாக்குவீர்கள். ஹார்ட்வேர், ஓட்டல், லாட்ஜ், டிரான்ஸ்போர்ட் வகைகளால் ஆதாயமடைவீர்கள். என்றாலும் கண்டகச் சனி தொடர்வதால், கூட்டுத் தொழிலைத் தவிர்ப்பது நல்லது. பங்குதாரர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள்.

உத்தியோகத்தில் உங்கள் ஆதிக்கம் ஓங்கும். மூத்த அதிகாரி சில முக்கிய ரகசியங்களை உங்களிடம் பகிர்ந்துகொள்வார்கள். வைகாசி, ஆனி மாதங்களில் சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். புது வாய்ப்புகளும் வரும். சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துகொள்வார்கள். இழந்த சலுகைகளைத் திரும்பப் பெறுவீர்கள். வேறு சில நல்ல வாய்ப்புகளும் வரும். தை, மாசி மாதங்களில் பெரிய பொறுப்புகள், பதவிகள் தேடி வரும்.  

இந்தப் புத்தாண்டு சமூகத்தில் பெரிய அந்தஸ்தையும், திடீர் யோகங்களையும் அள்ளித் தருவதாக அமையும்.

பரிகாரம்:கடலூர் மாவட்டம் நல்லாத்தூர் என்னும் ஊரில் அருள்பாலிக்கும் அருள்மிகு ஶ்ரீதேவி, பூதேவி சமேத ஶ்ரீவரதராஜ பெருமாளை ஒரு சனிக்கிழமையன்று வழிபடுவது நன்மை தரும்.

மனதில் உள்ளதை மறைக்காமல் பேசுபவர்களே!

உங்கள் ராசிக்கு 9-ல் சந்திரன் இருக்கும்போது இந்த வருடம் பிறப்பதால், சவாலான காரியங்க ளையும் சாமர்த்தியமாகச் செய்துமுடிப்பீர்கள். அடுக்கடுக்காக செலவுகள் ஏற்பட்டாலும், அதற்கேற்ப வருமானமும் கிடைக்கும். கனவாக இருந்த வீடு வாங்கும் விருப்பம் நிறைவேறும். அதிக வட்டிக் கடனை, குறைந்த வட்டிக் கடன் பெற்று தந்து முடிப்பீர்கள்.

புத்தாண்டின் தொடக்கம் முதல் 3.10.18 வரை குருபகவான் 4-ல் தொடர்வதால், வேலைச்சுமை அதிகரிக்கும். எதையும் உணர்வுப்பூர்வமாக முடிவெடுக்காமல், அறிவுப்பூர்வமாக யோசித்து முடிவெடுக்கவும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சொத்துப் பிரச்னையை சுமுகமாகப் பேசித் தீர்த்துக்கொள்ளுங்கள். இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது கூடுதல் கவனம் தேவை. ஆனால், 4.10.18 முதல் 12.3.19 வரை குருபகவான் 5-ல் அமர்வதால், அடுத்தடுத்த சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்தி வைப்பீர்கள். மகனுடைய உயர்கல்வி, உத்தியோகம் தொடர்பான முயற்சிகள் சாதகமாக முடியும். குடும்பத்தினருடன் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். விலை உயர்ந்த ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். உறவினர்கள் மதித்துப் பேசுவார்கள். ஆனால், 13.3.19 முதல் வருடம் முடியும் வரை குரு 6-ல் மறைவதால், குடும்பத்தில் அவ்வப்போது வாக்குவாதங்கள் ஏற்படும். சேமிப்புகள் கரையும். சிலருக்குக் கடன் வாங்கக்கூடிய நிலையும் ஏற்படும். சொத்துப் பிரச்னைக்காக நீதிமன்றம் செல்ல நேரிடும்.

வருடம் முழுவதும் சனிபகவான் 6-ல் நீடிப்பதால், எதிலும் உங்கள் கை ஓங்கும். வாழ்க்கையின் நெளிவுசுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். பேச்சில் அனுபவ அறிவு பளிச்சிடும். புதுப் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். சிலருக்கு வெளி மாநிலம், வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும். பிதுர்வழிச் சொத்தைப் பெறுவதில் இருந்த தடை விலகும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வாங்கிய கடனைத் தந்து முடிப்பீர்கள்.தந்தைவழி உறவினர்களுடன் இருந்த கருத்துவேறுபாடு மறைந்து, சுமுகமான சூழ்நிலை ஏற்படும்.

30.1.19 முதல் 24.2.19 வரை சுக்கிரன் உங்கள் ராசிக்கு 6-ல் சென்று மறைவதால், பணிச்சுமை அதிகரிக்கும். சிறிய அளவில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். கணவன் - மனைவிக்கிடையில் வீண் வாக்குவாதம் ஏற்படக்கூடும். ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது.

14.4.18 முதல் 12.2.19 வரை ராசிக்குள் ராகுவும், 7-ல் கேதுவும் தொடர்வதால், அடிக்கடி மனஇறுக்கம் ஏற்படக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் சலசலப்புகள் வந்து செல்லும். வாழ்க்கைத்துணைக்கு தைராய்ட் பிரச்னை போன்ற பிரச்னைகள் ஏற்படும். ஆனால், 13.2.19 முதல் வருடம் முடியும் வரை ராகு 12-லும் கேது 6-லும் அமர்வதால், உடல் ஆரோக்கியம் தொடர்பான மன பிரமையிலிருந்து விடுபடுவீர்கள். முகத்தில் மலர்ச்சி உண்டாகும். உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். எதிர்பார்த்து ஏமாந்த பணம் கைக்கு வரும். வாழ்க்கைத்துணையுடன் இருந்த கருத்துவேறுபாடு நீங்கும். அவருடைய ஆரோக்கியம் மேம்படும். திருமணத் தடை நீங்கும். அடுத்தடுத்த சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஷேர் மூலம் பணம் வரும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள்.

30.4.18 முதல் 27.10.18 வரை செவ்வாய் கேதுவுடன் சேர்ந்து 7-ல் அமர்வதால், வாழ்க்கைத்துணையின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். உடல் உஷ்ணம் அதிகரிக்கும். உணவில் கட்டுப்பாடு அவசியம். மற்றவர்களுக்காக ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம்.

வியாபாரத்தில் போட்டியாளர்களைச் சமாளிக்க கடுமையாக உழைக்கவேண்டும். வெளிநாட்டு நிறுவனம், புகழ் பெற்ற நிறுவனம் என்று வரும் விளம்பரங்களை நம்பி, விசாரிக்காமல் பெரிய அளவிலான முதலீடுகளைச் செய்யவேண்டாம். பணியாளர்களின் குறைகளை அன்பாகச் சுட்டிக்காட்டித் திருத்துங்கள். வைகாசி, ஆனி, புரட்டாசி மாதங்களில் லாபம் அதிகரிக்கும். புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். பழைய பங்குதாரர் விலகுவார். எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், கெமிக்கல், எண்டர்பிரைசஸ் வகைகளால் ஆதாயம் அடைவீர்கள். கார்த்திகை, மார்கழி, மாசி மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். உங்கள் திறமையை மூத்த அதிகாரி பரிசோதிப்பார். அடிக்கடி விடுமுறையில் செல்பவர்களின் வேலையையும் நீங்களே பார்க்கவேண்டி வரும். கடுமையாக உழைத்தும், உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். சித்திரை, வைகாசி மாதங்களில் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். கார்த்திகை, மாசி மாதங்களில் அலுவலகத்தில் உங்கள் ஆதிக்கம் ஓங்கும்.  

இந்தப் புத்தாண்டு இடமாற்றம், செலவு, அலைச்சல்களைத் தந்தாலும், அனுபவ அறிவால் வளர்ச்சியையும், மகிழ்ச்சியையும் தருவதாக அமையும்.

பரிகாரம்:ஈரோடு மாவட்டம், பவளமலை என்னும் ஊரில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு வள்ளி தெய்வானை உடனுறை அருள்மிகு முத்துக்குமார சுவாமியை பூசம் நட்சத்திர நாளில் வழிபட்டால், மகிழ்ச்சி பெருகும்.

மற்றவர்களை எளிதில் புரிந்துகொள்பவர்களே!

வருட ஆரம்பம் உங்கள் ராசிக்கு 8-ம் இடத்தில் பிறப்பதால், எளிதாக முடிக்கவேண்டிய வேலைகளையும் போராடித்தான் முடிக்கவேண்டி வரும். ஒரு பக்கம் பணம் வந்தாலும் மற்றொரு பக்கம் செலவுகளும் துரத்தும். வீட்டுப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். மின்சார, மின்னணு சாதனங்கள் பழுதாகக்கூடும். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எதையும் எடுக்கவேண்டாம். வாகனத்தில் செல்லும்போது கூடுதல் கவனம் தேவை. அடிக்கடி கழுத்து வலி, சளித் தொந்தரவு, காய்ச்சல் வந்து செல்லும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் திருமணத்தை முன்னிட்ட கடன்கள் ஏற்படக்கூடும்.


14.4.18 முதல் 12.2.19 வரை ராகு 12-லும் கேது 6-லும் தொடர்வதால், நீண்டகாலமாகச் செல்ல நினைத்த குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வருவீர்கள். மறைமுக எதிரிகளால் ஆதாயம் உண்டாகும். உறவினர்கள் மதிக்கும்படி நடந்துகொள்வீர்கள். விழாக்கள், விசேஷங்களில் முதல் மரியாதை கிடைக்கும். பால்ய நண்பர்களால் உதவி கிடைக்கும். 13.2.19 முதல் வருடம் முடியும் வரை ராகு லாப வீட்டில் அமர்வதால், செல்வாக்கு அதிகரிக்கும். கௌரவப் பதவிகள் தேடி வரும். ஷேர் மூலம் பணம் வரும். ஆனால், கேது 5-ல் அமர்வதால், பிள்ளைகளால் அலைச்சலும் செலவுகளும் அதிகரிக்கும். மகளின் திருமணத்துக்காக வெளியில் கடன் வாங்க நேரிடும். பூர்வீகச் சொத்தில் பிரச்னை ஏற்படக்கூடும். கர்ப்பிணிப் பெண்கள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.

ஆண்டின் தொடக்கம் முதல் 3.10.18 வரை குருபகவான் 3-ம் வீட்டில் மறைந்திருப்பதால், சில வேலைகளை இரண்டு மூன்று முறை போராடித்தான் முடிக்கவேண்டியிருக்கும். சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவதால் மற்றவர்களின் மனம் புண்பட நேரிடும் என்பதால், பேச்சில் நிதானம் தேவை. 4.10.18 முதல் 12.3.19 வரை குரு 4-ல் அமர்வதால், வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வீடு கட்டும் பணியில் தடை, தாமதங்கள் ஏற்படக்கூடும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தாய்வழி உறவினர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும். தாய்வழிச் சொத்தைப் போராடித்தான் பெறவேண்டியிருக்கும். மற்றவர்களின் ஆலோசனையை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், சிந்தித்து முடிவு செய்வது நல்லது. சொத்து வாங்கும்போதும் விற்கும்போதும் வில்லங்கம் எதுவும் இருக்கிறதா என்று தீர விசாரித்த பிறகு வாங்கவும். ஆனால், 13.3.19 முதல் வருடம் முடியும் வரை குருபகவான் 5-ல் அமர்வதால், பணப்புழக்கம் அதிகரிக்கும். அடுத்தடுத்த சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வாடகை வீட்டில் உள்ளவர்கள் சொந்த வீடு கட்டிக் குடியேறும் வாய்ப்பு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வருமானத்தை உயர்த்த புது வழி கிடைக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். வி.ஐ.பி.களின் அறிமுகம் கிடைக்கும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். மகனுக்கு வேலை கிடைக்கும். வெளிவட்டாரத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.

வருடம் முழுவதும் சனிபகவான் 5-ல் நீடிப்பதால், தெளிவாக முடிவெடுக்க முடியாமல் தவிப்பீர்கள். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். அன்புடன் எடுத்துச் சொல்லி அவர்களைத் திருத்த முயற்சி செய்யவும். மகளின் திருமணத்துக்காக வெளியில் கடன் வாங்க நேரிடும். மகனின் உயர்கல்வி, உத்தியோகம் தொடர்பான முயற்சிகள் தாமதமாக முடியும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் ஏற்படக் கூடும்.

25.2.19 முதல் 21.3.19 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால், கணவன் - மனைவிக்கிடையில் வீண் மோதல்கள் வரும். வீண் சந்தேகத்தால் பிரிவு ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையுடன் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளவேண்டாம். குடும்ப விஷயத்தில் மற்றவர்களின் தலையீட்டை அனுமதிக்கவேண்டாம். வாகனப் பழுது ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கைத்துணைக்கு அலர்ஜி போன்ற பிரச்னை ஏற்படக்கூடும்.

30.4.18 முதல் 27.10.18 வரை செவ்வாய் கேதுவுடன் 6-ல் சேர்ந்திருப்பதால், வீடு, மனை வாங்குவீர்கள். சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் ஏற்படும். சகோதரர்கள் பாசத்துடன் நடந்துகொள்வார்கள். தாய்வழி உறவுகளிடம் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். அரசாங்க அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும். நேர்மறையாகச் சிந்தித்துச் செயல்படுவீர்கள்.

வியாபாரத்தில் லாபம் குறைத்து வைத்து விற்பதால் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆனி, ஆடி மாதங்களில் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும். புது இடத்துக்குக் கடையை மாற்றுவீர்கள். அனுபவம் மிக்க வேலையாள்கள் திடீரென்று பணியிலிருந்து விலகிச் செல்வார்கள். பங்குதாரர்களிடம் இணக்கமாக நடந்துகொள்வது அவசியம். மார்கழி, தை மாதங்களில் பழைய பாக்கிகள் வசூலாகும். பங்குனி மாதத்தில் வெளிநாடு தொடர்புடைய நிறுவனத்திலிருந்து புதிய பங்குதாரர் வர வாய்ப்பு இருக்கிறது. பற்று வரவு சுமுகமாக நடைபெறும். உணவு, ஷேர், ஸ்பெகுலேஷன், கல்வி வகைகளால் ஆதாயம் உண்டு.

உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். ஆடி, ஆவணி மாதங்களில் புது வாய்ப்புகள் வரும். உங்கள் மீது வீண்பழி சுமத்திய உயரதிகாரி மாற்றப்படுவார். மூத்த அதிகாரி உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். கூடுதல் பொறுப்புகளை உங்களிடம் ஒப்படைப்பார். சக ஊழியர்களின் உதவியுடன் தேங்கிக் கிடந்த வேலைகளை விரைவாக முடிப்பீர்கள். வைகாசி மாதத்தில் பதவி உயர்வு கிடைக்கும். எதிர்பார்த்த சம்பள பாக்கியும் கிடைக்கும்.

10.3.18 முதல் 2.5.18 வரை செவ்வாயும், சனியும் சேர்ந்திருப்பதால் தாயாரின் உடல் நிலை பாதிக்கும். தாய்வழி உறவினர்களுடன் மனத்தாங்கல் வரும். உங்கள் மீது சிலர் வீண்பழி சுமத்துவார்கள்.

3.5.18 முதல் 30.10.18 வரை செவ்வாயும், கேதுவும் சேர்ந்திருப்பதால் வி.ஐ.பி. களுக்கு நெருக்கமாவீர்கள். ஏமாற்றுக்காரர்களை இனம் கண்டு ஒதுக்குவீர்கள். அயல்நாட்டில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு.

14.1.18 முதல் 7.2.18 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால் சிறுசிறு விபத்துகள் வந்து போகும். மற்றவர்களுடன் பழகும்போது பக்குவமாகப் பழகுவது நல்லது. கணவன் - மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது.

ஆண்டு முழுவதும் கேது 6-ல் இருப்பதால், லட்சியத்தை நோக்கி முன்னேறுவீர்கள். தாழ்வு மனப்பான்மை விலகும். தன்னம்பிக்கை துளிர்க்கும். புறநகர்ப் பகுதியில் வீடு அல்லது மனை வாங்கும் யோகம் உண்டாகும். வெளிநாடு மற்றும் வெளி மாநிலத்தில் இருக்கும் நண்பர்களால் திடீர் திருப்பம் உண்டாகும். பழைய கடன்களை வட்டியுடன் தந்து முடிப்பீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அரசு காரியங்கள் நல்லவிதத்தில் முடியும். ஆனால், ராகு 12-ல் தொடர்வதால், சுபச் செலவுகள் அதிகரிக்கும். மற்றவர்களுக்கு ஜாமீன் கொடுக்காதீர்கள். கனவுத் தொல்லையால் தூக்கம் குறையும். திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். சில வேலைகளை அலைந்து திரிந்துதான் முடிக்கவேண்டி இருக்கும். புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். தொலைந்து போன ஆவணம் ஒன்று திரும்பக் கிடைக்கும்.

ந்தப் புத்தாண்டின் முற்பகுதி கொஞ்சம் சிரமம் தந்தாலும், பிற்பகுதி உங்கள் அந்தஸ்தை உயர்த்துவதாக அமையும்.

பரிகாரம் : அரியலூர் மாவட்டம் காமரசவல்லி என்னும் ஊரில் அருள்பாலிக்கும் அருள்மிகு பாலாம்பிகை உடனுறை அருள்மிகு கார்க்கோடகேஸ்வரரை ஒரு பிரதோஷ நாளில் வழிபடுவது நன்மை தரும்.

மென்மையாகப் பேசும் குணமுடையவர்களே!

மனித நேயத்துடன் எதிர்ப்பார்ப்புகள் இன்றி எதிரிக்கும் உதவுபவர்களே! இந்த விளம்பி வருடம் உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் பிறப்பதால் புதிய திட்டங்கள் நிறைவேறும். மற்றவர்களின் ரசனைக் கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். எதிர்பாராத பணவரவு உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். தள்ளிப் போன திருமணப் பேச்சு வார்த்தை கூடி வரும். கணவன்-மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.

இந¢த ஆண¢டு தொடக்கம் முதல் 12.02.19 வரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் ராகு இருப்பதால் எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். கேது 5-ம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். பூர்வீகச் சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். ஆனால் 13.02.19 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு கேது 4-ம் வீட்டிலும், ராகு 10-லும் அமர்வதால் வேலைச்சுமை இருக்கும். வீண் பழி வரக்கூடும். தாயாருடன் வீண் விவாதம், அவருக்கு கை, கால் வலி வந்துப் போகும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகளும் அதிகரிக்கும். உத்யோகத்தில் நெருக்கடிகள், இடமாற்றங்கள் வந்துச் செல்லும். வாகனத்தின் ஓட்டுநர் உரிமத்தை சரியான நேரத்தில் புதுப்பிக்க தவறாதீர்கள். சின்ன சின்ன அபராதத் தொகை செலுத்த வேண்டி வரும்.

ஆண்டு முழுவதும் ராசிக்கு 4-ல் சனி தொடர்வதால், தாயின் உடல்நலனில் கவனம் தேவை தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். புறநகர்ப் பகுதியில் இடம் வாங்கி வைத்திருப்பவர்கள் அடிக்கடி சென்று கண்காணித்து வருவது நல்லது. பண விஷயத்தில் மற்றவர்களுக்கு ஜாமீன் கொடுக்கவேண்டாம்.

14.04.18 முதல் 3.10.18 வரை குருபகவான் 2-வது வீட்டிலேயே தொடர்வதால் குடும்பத்தில் அமைதி நிலவும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். வழக்குகள் சாதகமாக முடியும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும். பழைய கடனில் ஒரு பகுதியை தந்து முடிப்பீர்கள். ஆனால் 4.10.18 முதல் 12.3.19 வரை 3-ம் வீட்டிற்கு குரு செல்வதால் அதுமுதல் காரியத் தடைகள் அதிகரிக்கும். முதல் முயற்சியிலேயே எந்த ஒரு வேலையையும் முடிக்க முடியாமல் இரண்டாவது அல்லது மூன்றாவது முயற்சியில் போராடி முடிக்க வேண்டி வரும். இளைய சகோதரர் ஆதரவாக இருப்பார். பழைய நண்பர்களில் ஒரு சிலர் விலகுவார்கள். பணத்தட்டுப்பாடு அதிகரிக்கும். தவிர்க்க முடியாத செலவினங்களும் வந்துப் போகும். என்றாலும் தந்தைவழியில் உதவிகள் உண்டு. தந்தைவழி சொத்துகள் வந்து சேரும். 13.3.2019 முதல் வருடம் முடியும் வரை குருபகவான் அதிசார வக்கிரமாக 4-ல் அமர்வதால், இழுபறியாக இருந்த காரியங்களெல்லாம் முடிவடையும். என்றாலும் தாயாருக்கு முதுகு, மூட்டு வலி, சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வந்துச் செல்லும். தாயார், அம்மான், அத்தைவழியில் மனஸ்தாபம் வந்து நீங்கும். சொத்து வாங்கும் போதும் சட்ட நிபுணர்களை கலந்தாலோசித்து தாய்பத்திரம், வில்லங்க சான்றிதழ்களையெல்லாம் சரி பார்த்து வாங்குங்கள். உங்களைப் பற்றிய விமர்சனங்கம் அதிகரிக்கும்.

22.03.2019 முதல் 13.04.2019 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் இருக்கும். வாகனத்தை அதிவேகமாக இயக்க வேண்டாம். கணவன்-மனைவிக்குள் விவாதங்கள் வந்து போகும்.

இந்த ஆண்டு முழுக்க சனிபகவான் 4ம் வீட்டில் நீடிப்பதால் வீடு கட்ட அரசாங்க அனுமதி தாமதமாக கிடைக்கும். மனை வாங்கும் போது வில்லங்க சான்றிதழ், தாய்பத்திரத்தை சரி பார்த்து வாங்குவது நல்லது. வாகனத்தை இயக்கும் போதும், சாலையை கடக்கும் போதும் அலைப்பேசியில் பேச வேண்டாம். சின்னச் சின்ன விபத்துகள் நிகழக்கூடும். பழைய வாகனத்தை வாங்குவதை தவிர்ப்பது நல்லது. அப்படி வாங்குவதாக இருந்தால் ஆவணத்தை சரி பார்த்து வாங்குங்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். தாய்வழி உறவினர்களுடன் மோதல்கள் வரக்கூடும். தாய்வழி சொத்துக்களில் சிக்கல்கள் வரக்கூடும். மறதியால் பணம், விலை உயர்ந்த நகையை இழக்க நேரிடும். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் அலட்சியம் வேண்டாம். பழைய கசப்பான அனுபவங்கள் நினைவுக்கு வரும். குடும்பத்துடன் வெளியூர் செல்லும் போது வீட்டை பாதுகாப்பாக பூட்டிச் செல்லவும்.

30.04.2018 முதல¢ 27.10.2018 வரை செவ்வாய் கேதுவுடன் உங்கள் ராசிக்கு 5-ல் நிற்பதால், கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக செயல்படுவது நல்லது. குழந்தையின் வளர்ச்சியை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்ளவும். வரம்பு மீறி யாரையும் விமர்சிக்க வேண்டாம். உடன்பிறந்தவர்களால் வீண் அலைச்சலும், செலவுகளும் இருக்கும். சகோதரியின் கல்யாணத்தை போராடி முடிப்பீர்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்சனையை முடிந்த வரை பேசித்தீர்ப்பது நல்லது. பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். அவர்கள் விரும்பிய கல்வியிலேயே சேர்ப்பது நல்லது. சொத்து விற்பது வாங்குவதில் வில்லங்கம் ஏதாவது இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ற பொருட்களை கொள்முதல் செய்து லாபத்தை பெருக்குவீர்கள். ஆனி, ஆடி மாதங்களில் சிலர் புதுத் துறையில் முதலீடு செய்வீர்கள். வேலையாட்களிடம் தொழில் ரகசியங்களை சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். ஆவணி மாதத்தில் அனுபவமிக்க வேலையாட்களை பணியில் சேர்ப்பீர்கள். மார்கழி, தை மாதங்களில் புதுக் கிளை தொடங்கும் வாய்ப்பு உண்டாகும். பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிப்பது நல்லது. பங்குதாரர்கள் உங்களை கோபப்படுத்தும்படி பேசினாலும், அவசரப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம். புரோக்கரேஜ், சினிமா, சிமெண்ட், பெட்ரோ&கெமிக்கல், மருந்து, மர வகைகளால் ஆதாயமடைவீர்கள். விலகிப் போன வியாபார வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும்.

உத்யோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உங்களைப் பற்றி அவதூறானக் கடிதங்கள் உங்களை விமர்சித்து வரக்கூடும். உங்களுக்கு நெருக்கமாக இருந்த உயர் அதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு புது அதிகாரியால் சில நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். என்றாலும் வைகாசி, கார்த்திகை, மாசி மாதங்களில் அதிரடி முன்னேற்றங்கள் உண்டு. அலுவலகச் சூழ்நிலை அமைதியாகும். பெரிய பொறுப்புகள் தேடி வரும். சம்பளம் உயரும். சக ஊழியர்கள் மனஉளைச்சலை ஏற்படுத்துவார்கள்.

இந்தப் புத்தாண்டு தொலை நோக்குச் சிந்தனையாலும், வளைந்துக் கொடுத்துப் போவதாலும் வெற்றி பெற வைக்கும்.

பரிகாரம் : நாகப்பட்டினம் மாவட்டம் தகட்டூரில் எழுந்தருளியிருக்கும் பைரவரை அஷ்டமி திதியில் வழிபட்டு வந்தால் நன்மைகள் பெருகும்.நடுநிலை தவறாத குணமுடையவர்களே!

உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், உங்களை தலைநிமிர வைக்கும். சோகத்தில் மூழ்கியிருந்த உங்கள் மனதில் தன்னம் பிக்கை பிறக்கும். வீட்டில் சுபகாரியங்கள் ஏற்பாடாகும்.

இந்த ஆண்டு தொடக்கம் முதல் 3.10.2018 வரை உங்கள் ராசிக்குள்ளே குரு அமர்ந்து ஜன்ம குருவாக இருப்பதால், பழைய பிரச்னைகள் தலைதூக்கும். தேவையில்லாத பிரச்னைகள் தலைதூக்கும் என்பதால், மற்றவர்களை நம்பி பெரிய முயற்சிகளில் ஈடுபடாதீர்கள்.

4.10.18 முதல் 12.3.19 வரை குருபகவான் உங்கள் ராசியை விட்டு விலகி 2-ல் அமர்வதால், குடும்பத்தில் இதுவரையிலும் நிலவி வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். உங்கள் குடும்பத்தில் வீண் கலகத்தை ஏற்படுத்திவந்த ஏற்படுத்திய சுற்றத்தாரை இனங் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். புது வேலை அமையும். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வந்துசேரும்.

திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம், காது குத்து போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். மகனுக்கு உயர்கல்வி, உத்தியோகம் நல்லவிதத்தில் முடியும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்து வீர்கள். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். வீடு கட்ட வங்கிக்கடன் கிடைக்கும்.

13.3.19 முதல் வருடம் முடியும் வரை குருபகவான் அதிசார வக்ரமாகி 3-ம் வீட்டில் அமர்வதால் இலக்கை எட்டிப் பிடிக்க கடுமையாகப் போராட வேண்டி வரும். சுபச் செலவுகளும் திடீர் பயணங்களும் அதிகரிக்கும்.

14.4.18 முதல் 12.2.19 வரை ராசிக்கு 10-ல் ராகு நிற்பதால் வேலைச் சுமை, டென்ஷன் வரக்கூடும். ஆனால், உங்களின் ஆளுமைத் திறன் அதிகமாகும். கேது 4-ல் நிற்பதால் தாழ்வுமனப்பான்மை, பகைமை வரும். தாயாரின் உடல்நிலை பாதிக்கும்.

13.2.19 முதல் 9-ல் ராகு நுழைவதால், நீங்கள் எதிர்பார்த்தபடி பணவரவு திருப்திகரமாக இருக்கும். தந்தை வழி உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் வந்துபோகும். கேது 3-ம் வீட்டில் நுழைவதால், பூர்வீகச் சொத்துப் பிரச்னைகள் சுமுகமாக முடியும். வேற்று மொழி பேசுபவர்களால் ஆதாயமடைவீர்கள்.

இந்த ஆண்டு முழுக்க சனிபகவான் 3-ம் வீட்டில் நிற்பதால் சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். பிரபலங்கள் பட்டியலில் இடம்பிடிப்பீர்கள். உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள்.

நகரின் எல்லையை ஒட்டியிருக்கும் பகுதியிலே நிலம், வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், அல்லாதவர்கள் யார் என்பதை உணரும் சூட்சும புத்தி உண்டாகும். வெளிநாட்டிலிருப்பவர்கள், வேற்று மாநிலத்தில் இருக்கும் நண்பர்களால் திடீர் திருப்பம் உண்டாகும்.

30.04.18 முதல் 27.10.18 வரை செவ்வாய், கேதுவுடன் சேர்ந்து 4-ல் நிற்பதால், தாழ்வுமனப்பான்மை நீங்கி தன்னம்பிக்கை பிறக்கும்.நெருக்கமானவர்களுடன் மனவருத்தம், தாயாருக்கு மருத்துவச் செலவுகள், சொத்துத் தகராறுகள் வந்து செல்லும். உங்கள் ரசனைக்கேற்ப வீட்டை விரிவுப் படுத்திக் கட்டுவீர்கள்.

வியாபாரத்தில், ஆவணி, புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் இரட்டிப்பு லாபம் உண்டு. பற்று-வரவு உயரும். வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். பெரிய நிறுவனங்களுடன் ஏற்படும் புதிய ஒப்பந்தங்களால் உங்கள் நிறுவனம் புகழ் பெறும். பங்குதாரரால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்வீர்கள். ஹார்டுவேர், ஹோட்டல், ஸ்பெக்குலேஷன், ரியல் எஸ்டேட் வகைகளால் லாபம் அடைவீர்கள்.

உத்தியோகத்தில் நிர்வாகத் திறமை அதிகரிக்கும். அலுவலகச் சூழ்நிலை உங்களுக்குச் சாதகமாக அமையும். மார்கழி, தை மாதங்களில் பதவி உயர்வுக் காக உங்களுடைய பெயர் பரிசீலிக்கப்படும்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு உங்களின் நீண்ட கால கனவுகளை நனவாக்குவதுடன், அடுத்தடுத்து உங்களை சாதிக்கவைப்பதாக அமையும்.

பரிகாரம்:கோவை மாவட்டம், உக்கடம் எனும் ஊரில் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீஹரிவரதராஜப் பெருமாளை, ஏதேனும் ஒரு சனிக்கிழமையில் வழிபட்டு வாருங்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.தவறுகளைத் தட்டிக் கேட்பவர்களே!

உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் சந்திரன் நிற்கும் போது இந்த விளம்பி ஆண்டு பிறப்பதால் புதிய சிந்தனைகள் உதயமாகும். வருங்காலத் திட்டங்கள் நிறைவேறும். சாதுர்யமான பேச்சாலும், சமயோஜித புத்தியாலும் பழைய பிரச்னைகளைத் தீர்ப்பீர்கள்.

குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். கடன் பிரச்னையில் ஒரு பகுதி தீரும். வீட்டுக்குத் தேவை யான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யுமளவுக் குப் பணவரவு உண்டு. உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிந்து இனி செயல்படத் தொடங்குவீர்கள்.

3.10.2018 வரையிலும் குரு தரும் பலனால், திடீர்ப் பயணங்கள் மற்றும் திடீர்ச் செலவுகளால் கொஞ்சம் திணறுவீர்கள். திருமணம், சீமந்தம் போன்ற சுபச் செலவுகளும் அதிகரிக்கும். நீண்ட நாள்களாகப் போக நினைத்த அண்டை மாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். ஓய்வெடுக்க முடியாதபடி வேலைச்சுமை அதிகரிக்கும்.

4.10.2018 முதல் 12.3.2019 வரை உங்கள் ராசிக்குள்ளேயே குரு வந்து அமர்வதால் வீண் அலைச்சல், அலைக்கழிப்பு குறையும். பல நாள்கள் தூக்கமில்லாமல் தவித்தீர்களே! இனி ஆழ்ந்த உறக்கம் வரும். என்றாலும் முன்கோபம் அதிகரிக்கும். உணர்ச்சி வசப்பட்டு வார்த்தைகளை விடவேண்டாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

உடல் அசதி, சோர்வு, எதிலும் ஒருவித சலிப்பு, யூரினரி இன்ஃபெக்ஷன், காய்ச்சல், வாயுத் தொந்தரவால் நெஞ்சு வலி வந்து போகும் வாய்ப்புள்ளது. கவனமாக இருக்கவும். நேரம் கடந்து சாப்பிடுவதைத் தவிர்க்கப்பாருங்கள். வெளி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. குடும்பத்திலும் சிறுசிறு வாக்குவாதங்கள் வந்து போகும். கணவன், மனைவிக்குள் வீண் சந்தேகம், ஈகோ பிரச்னையைத் தவிர்ப்பது நல்லது.

13.3.2019 முதல் வருடம் முடியும் வரை குருபகவான் அதிசார வக்ரமாகி உங்கள் ராசிக்கு தனஸ்தானமான 2-ம் வீட்டில் அமர்வதால், அதுமுதல் எதிர்பார்த்த வகையில் உதவிகளும், திடீர் பணவரவும் உண்டு. ஆனால், செலவுகள் அடுத்தடுத்து இருக்கும். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். வாரிசுகள் இல்லாமல் வருந்திய தம்பதிக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

30.4.2018 முதல் 27.10.2018 வரை செவ்வாய் கேது வுடன் சேர்ந்து 3-ம் வீட்டில் நிற்பதால் திடீர் யோகம், பணவரவு, குடும்பத்தில் மகிழ்ச்சி எல்லாம் உண்டாகும். தைரியமாகவும், தன்னிச்சையாகவும் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். பழைய கடனைத் தீர்க்க வழி பிறக்கும்.

வருடம் பிறக்கும் முதல் 12.2.2019 வரை ராகு 9-ல் நிற்பதால் தந்தையாரின் உடல்நலம் பாதிக்கும். கேது 3-ல் நிற்பதால், சவால்களைச் சமாளிக்கும் வல்லமை கிடைக்கும். வி.ஐ.பி-கள் உதவுவார்கள். 13.2.2019 லிருந்து வருடம் முடியும்வரை ராகு 8-ல் நுழைவதால் பயணங்களில் கவனம் தேவை. அலர்ஜி வந்து நீங்கும். கேது 2-ல் நுழைவதால் பேச்சில் கடுமை காட்டாதீர்கள். இந்தாண்டு முழுக்க சனி 2-ல் அமர்ந்து பாதச்சனியாக இருப்பதால், குடும்பத்தில் வீண் வாக்கு வாதங்களைத் தவிர்த் திடுங்கள். கர்ப்பிணிகள் கவனமாக இருப்பது நல்லது. பூர்வீகச் சொத்துப் பிரச்னையை அறிவுபூர்வமாக அணுகுவது நல்லது.

வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். சித்திரை மற்றும் தை மாதத்தில் பற்று வரவு உயரும். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கைக்கு வரும். ஆவணி மாதம் பெரிய பதவிக்குத் தேர்ந்தெடுக் கப்படுவீர்கள். வராது என்றிருந்த பாக்கித் தொகை வந்து சேரும். ஏற்றுமதி, இறக்குமதி, மருந்து, பிளாஸ்டிக், ஊதுபத்தி, உணவு, லாட்ஜிங் வகைகளால் ஆதாயம் பெருகும். பங்கு தாரர்களிடம் பேசும்போது நிதானமாகப் பேசவும்.

உத்தியோகத்தில் வேலைப்பளு கூடும். ஏழரைச் சனி தொடர்வதால் முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடுவதற்கு முன் படித்துப் பாருங்கள். ஆவணி, புரட்டாசி மாதங்களில் புதிய வேலை வாய்ப்புகள், பொறுப்புகள் தேடி வரும்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு, பெரிய மனிதர் களின் நட்பையும், வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையையும் பெற்றுத் தருவதாக அமையும்.

பரிகாரம்:சங்கடஹர சதுர்த்தி திருநாளில் திருச்சி உச்சிப் பிள்ளையாரை வணங்கி வழிபட்டு வாருங்கள். சங்கடங்கள் தீரும்; சந்தோஷம் பெருகும்.


லட்சியத்தை அடைவதில் உறுதியானவர்களே!

இந்த ஆண்டு தொடக்கம் முதல் 3.10.2018 வரை உங்களின் ராசிநாதன் குருபகவான் லாப வீட்டிலேயே தொடர்வதால் தொட்டது துலங்கும். திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில் நடக்கும். பிதுர்வழிச் சொத்துகள் கைக்கு வரும். உறவினர்கள் சிலர் உங்களுக்கு எதிராகத் திரும்பலாம்; கவனம் தேவை.

ஆனால், 4.10.2018 முதல் 12.03.2019 வரை 12-ம் வீட்டில் குரு அமர்வதால் எதிர்பாராத பயணங்கள் அதிகரிக்கும். பணம், பொருள் சேர்ந்தாலும் செலவுகளும் துரத்தும். தகுந்த ஆதாரம் இல்லாமல் எவருக்கும் கடன் தரவேண்டாம். உயர்கல்வி, உத்தியோகம் பொருட்டு பிள்ளைகளைப் பிரிய வேண்டிய சூழ்நிலை உருவாகும். கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனைப்படி உணவு ஏற்கவும்.

13.3.2019 முதல் வருடம் முடியும் வரை குருபகவான் அதிசார வக்ரமாகி ராசிக்குள்ளேயே வந்து அமர்வதால், கோபம் அதிகரிக்கும். மன உளைச்சலுக்கும் ஆளாவீர்கள்.

வருடப் பிறப்பு முதல் 12.2.2019 வரை ராகு 8-ம் வீட்டிலும் கேது 2-ம் வீட்டிலும் நிற்பதால், கணவன் மனைவிக்கு இடையே வீண் சந்தேகங்கள் வரும்; ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்லவும்.

13.2.2019 முதல் வருடம் முடியும் வரை கேது ராசிக்குள் நுழைவதால் வீண் டென்ஷன், தலைச்சுற்றல், மன அமைதியின்மை, முன்கோபம் வந்து நீங்கும். ராகு 7-ல் நுழைவதால் வாழ்க்கைத் துணையின் உடல்நலனில் கவனம் தேவைப்படும். பிள்ளைகளின் கனவுகளை நிறைவேற்றுவீர்கள்.

இந்தாண்டு முழுக்க சனிபகவான் ராசியிலேயே அமர்ந்திருப்பதால் எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். சொந்தமாக வீடு வாங்குவீர்கள். எனினும் உடல் அசெளகரியங்களும் உண்டு. உறவினர்களிடம் அதிகம் உரிமை பாராட்ட வேண்டாம். சொத்துப் பிரச்னையை சுமுகமாகப் பேசித் தீர்க்கப் பாருங்கள்.

30.4.2018 முதல் 27.10.2018 வரை செவ்வாய் கேதுவுடன் சேர்ந்து 2-ம் வீட்டில் அமர்ந்திருப்பதால், செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். சில நேரங்களில் காரசாரமாகப் பேசி சிலரின் நட்பை இழப்பீர்கள். சகோதர சகோதரிகளிடம் விட்டுக் கொடுத்துப் போங்கள். தாய்மாமன் வகையில் கருத்து வேறுபாடுகள் வரக்கூடும். சிலர் வீடு மாற வேண்டிய நிர்பந்தம் உண்டாகும்.


21.4.18 முதல் 14.5.18 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால், சவால்களைச் சந்திக்க வேண்டி வரும். எங்கு சென்றாலும் எதிர்ப்புகள் அதிகரிக்கும். கடன் பிரச்னை தலைதூக்கும். எந்தக் காரியத்தைத் தொட்டாலும் முதல் முயற்சியிலேயே முடிக்க முடியாமல் இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும். சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், செலவினங்கள் அதிகரிக்கும்.

வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்து போட்டி யாளர்களைத் திக்குமுக்காட வைப்பீர்கள். வேலையாட் களை மாற்றுவீர்கள். வைகாசி, மாசி மாதங்களில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். லாபம் கூடும்.

புரட்டாசி மாதங்களில் புதிய பங்குதாரர் கள் அமைவார்கள். பழைய சரக்குகளை அசல் விலைக்கே விற்றுத் தீர்ப்பீர்கள். வி.ஐ.பி-கள் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள். வாகன உதிரிபாகங்கள், ஷேர், ஸ்பெகுலேஷன் வகைகளால் ஆதாயமுண்டு.

உத்தியோகத்தில், இதுவரை நீங்கள் சந்தித்துவந்த அவமானங்கள் நீங்கும். மூத்த அதிகாரி உங்களுக்கு முன்னுரிமை தருவார். அவருடைய பூரண ஒத்துழைப்பால் உங்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் சில சிறப்புப் பொறுப்பு களை உங்களிடம் ஒப்படைப்பார்கள்.

சக ஊழியர்கள் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் தருவார்கள். கார்த்திகை, மார்கழி ஆகிய மாதங்களில் நீங்கள் எதிர்பார்த்த அளவுக்கு சம்பளம் உயரும். புதிய பொறுப்புகளும், சலுகைகளும் உங்களைத் தேடிவரும்.

மொத்தத்தில், விளம்பி வருடம் நீங்கள் தொட்ட காரியங்களை எல்லாம் வெற்றிபெற வைத்து, சகல கோணங்களிலும் உங்களைச் சாதிக்கவைப்பதாக அமையும்.

பரிகாரம்: திருவாரூர்- தியாகராஜர் கோயில் கீழவீதியில் அருள்பாலிக்கும் வீர ஆஞ்சநேயரை, ஞாயிற்றுக்கிழமைகளில் சென்று வணங்குங்கள். பகை தீரும்; வெற்றிகள் குவியும்.


மற்றவர்களுக்கு உதவும் குணமுடையவர்களே!

உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் இந்த விளம்பி வருடம் பிறப்பதால், போராடி வெற்றி பெறுவீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். விஐ.பி-கள் உதவுவார்கள். தைரியமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். தள்ளிப்போன திருமணப் பேச்சுவார்த்தை கூடிவரும். வீடுகட்ட திட்ட அனுமதி கிடைக்கும். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். பூர்வீகச் சொத்தில் மராமத்து வேலைகள் செய்வீர்கள்.

3.10.2018 வரை குரு 10-ம் வீட்டில் தொடர்வதால், வேலைச்சுமையால் பதற்றம் அதிகரிக்கும். தங்க ஆபரணங்களை யாருக்கும் இரவல் தரவோ, வாங்கவோ வேண்டாம். உங்களிடம் உள்ள திறமையை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். ஆனால், அவை பலனளிக்காது.

4.10.18 முதல் 12.3.19 வரை குரு உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்வதால் திடீர் யோகம் உண்டாகும். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். சில நல்ல மனிதர்களின் நட்பால் புதிய பாதையில் பயணிப்பீர்கள்.

13.3.2019 முதல் வருடம் முடியும் வரை குரு அதிசார வக்ரமாகி 12-ல் மறைவதால் செலவுகள் அதிகமாகும். நல்ல விஷயத்துக் காக வெளியே கடன்வாங்க நேரிடும். பூர்வீகச் சொத்தில் பாகப்பிரிவினை நல்ல விதத்தில் முடியும். சிலருக்கு அயல்நாட்டுப் பயணம் அமையும்.

14.4.18 முதல் 12.2.19 வரை ராசிக்குள் கேது நிற்பதால் டென்ஷன், ரத்த அழுத்தத்தால் மயக்கம், பயம், எதிலும் சந்தேகம் வந்து நீங்கும். ராகு 7-ல் நிற்பதால் கணவன் மனைவிக்குள் கசப்பு உணர்வு ஏற்படும். 13.2.2019 முதல் ராகு 6-லும் கேது ராசியை விட்டு விலகி 12-ல் அமர்வதால், ஆரோக்கியம் மேம்படும். மகளுக்குத் திருமணம் கூடிவரும்.

இந்தாண்டு முழுக்க விரயச் சனி தொடர்வதால், வீண்பழி, பண இழப்பு, ஏமாற்றங்கள் வந்து போகும். தாயாரின் உடல் நலம் பாதிக்கும். இளைய சகோதரர்கள் உங்களைத் தவறாகப் புரிந்துகொள்வார்கள்.

15.5.2018 முதல் 8.6.2018 வரை சுக்கிரன் 6-ல் மறைவதால் சிறுசிறு விபத்துகள், வீண் செலவுகள், சண்டைச் சச்சரவுகள், உங்களைப் பற்றிய வதந்திகள், வந்துபோகும். கணவன் மனைவிக்குள் அவ்வப்போது குழப்பங்களும், பிரச்னைகளும் வரும்.

30.4.2018 முதல் 27.10.2018 வரை ராசிக்குள்ளேயே செவ்வாயும், கேதுவும் சேர்வதால், உடல்நலம் பாதிக்கும். பெரிய நோய் இருப்பதைப் போல நீங்கள் உணருவீர்கள். நல்ல மருத்துவரை ஆலோசித்து மருந்து, மாத்திரை உட்கொள்வது நல்லது. சகோரர்களால் அலைச்சல்களும், செலவினங்களும் உண்டாகும்.

வியாபாரத்தில் ஏற்றஇறக்கங்கள் இருக்கும். போட்டிகள் அதிகரிக்கும். சித்திரை, ஆனி ஆகிய மாதங்களில் லாபம் கூடும். வேலையாட்களைத் தட்டிக் கொடுத்து வேலை வாங்குங்கள். வாடிக்கை யாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். பங்கு தாரர்களுடன் அவ்வப்போது சிற்சில சச்சரவுகள் வரக்கூடும். புது ஏஜென்சி எடுக்கும்போது யோசித்துச் செயல்படுங்கள்.

அவ்வப்போது சந்தை நிலவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள். கடன் வாங்கி கடையை நவீனமாக்குவீர்கள். ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் புது ஒப்பந்தம் வரும். பற்று-வரவு உயரும்.

உத்தியோகத்தில் அலட்சியத்துடன் செயல்படவேண்டாம். வேலைப்பளு அதிகரிக்கும். ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளைப் பார்க்கவேண்டி வரும். எந்த வேலையை முதலில் முடிப்பது என்ற குழப்பமும் டென்ஷனும் அதிகரிக்கும்.

மூத்த அதிகாரிகளிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ளாதீர்கள். உங்களின் மேலதிகாரி தவறான வழிகளைக் கையாண்டாலும், நீங்கள் நேர்வழியில் செல்வது நல்லது. சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இழந்த உரிமையைப் பெறுவீர்கள். மார்கழி, தை ஆகிய மாதங்களில் சம்பளம் கூடும். புது பொறுப்புகளும் பெரிய பதவியும் தேடி வரும். சிலருக்குப் புது வேலை அமையவும் வாய்ப்பு உண்டு.

மொத்தத்தில் இந்த விளம்பி வருடம், சங்கடங் களைச் சமாளிக்க வைத்து, சாதனையை நோக்கி உங்களை நகர்த்துவதாக அமையும்.

பரிகாரம்:மதுரை, எழுத்தாணிக்கார தெருவில் அருள்பாலிக்கும் ஸ்ரீகனகவல்லி தாயாரையும், ஸ்ரீவீரராகவ பெருமாளையும் ஏகாதசி நாளில் சென்று வழிபட்டு வாருங்கள்; ஆனந்தம் பெருகும்.பொதுநலனில் ஆர்வம் கொண்டவர்களே!

இந்த விளம்பி வருடம் உங்களுக்கு 2-வது ராசியில் பிறப்பதால், பக்குவமான பேச்சால் வெற்றி பெறுவீர்கள். கைமாற்றுக் கடனை அடைப்பீர்கள். மகளுக்கு நல்ல வரனும் மகனுக்கு வேலையும் கிடைக்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்னை தீரும்.

3.10.2018 வரை குரு 9-ம் வீட்டில் நிற்பதால், உங்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தியடையும். சிலர், புது வீட்டுக்குக் குடிபுகுவீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். வேலைப்பளு குறையும். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

4.10.2018 முதல் 12.3.2019 வரை குரு உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டுக்கு வருகிறார். யாருக்காகவும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம். மனைவியின் குறைகளைப் பெரிதுபடுத்தாதீர்கள். 13.3.19 முதல் வருடம் முடியும் வரை குரு அதிசார வக்ரமாகி லாப வீட்டில் வந்து அமர்வதால் பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். திடீர் யோகம், பணவரவு உண்டு.

14.4.18 முதல் 12.2.19 வரை கேது 12-ம் வீட்டில் நிற்பதால், திடீர் பயணங்கள் அதிகரிக்கும். ராகு 6-ல் நிற்பதால், கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வழக்கில் வெற்றியுண்டு. வெளிநாட்டிலிருப்பவர்கள் உதவுவர்.

13.2.2019 முதல் வருடம் முடியும் வரை கேது லாப வீட்டுக்குள் வருவதால், ஷேர் மார்க்கெட் மூலம் பணம் வரும். திடீர் யோகம் உண்டு. சொத்துச் சிக்கல்கள் பேச்சுவார்த்தை மூலம் சரியாகும். ராகு 5-ம் வீட்டுக்கு வருவதால், பிள்ளைகளால் வீண் அலைச்சலும் மன உளைச்சலும் வரக்கூடும். குடியிருக்கும் வீட்டை மாற்ற வேண்டி வரும்.

இந்த ஆண்டு முழுக்க சனிபகவான் லாப வீட்டில் நிற்பதால், செயலில் வேகம் கூடும். வருமானம் உயரும். பிரபலங்களின் பட்டியலில் இடம் பிடிப்பீர்கள். தொலைநோக்குச் சிந்தனை அதிகரிக்கும். பெரிய பதவிகள் தேடி வரும். அழகு, இளமைக் கூடும். பாதியில் நின்ற வீடு கட்டும் பணியை முடித்து புது வீட்டில் குடிபுகுவீர்கள். அனுபவபூர்வமான பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள்.

ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துச் சேமிக்கத் தொடங்குவீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அரசாங்க விஷயங்கள் நல்லவிதத்தில் முடிவடையும். கடன் பிரச்னைகள் ஓயும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். இந்தி, தெலுங்கு பேசுபவர்கள் உதவுவார்கள். சுயத்தொழில் தொடங்கும் முயற்சியில் இறங்குவீர்கள். சொந்த ஊரில் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள்.

30.4.2018 முதல் 27.10.2018 வரை உள்ள காலகட்டங்களில் செவ்வாய் கேதுவுடன் சேர்ந்து ராசிக்கு 12-ல் அமர்வதால் சுபச் செலவுகள் அதிகரிக்கும். சகோதர, சகோதரிகளால் அவ்வப்போது அலைச்சலும், டென்ஷனும் இருக்கும். என்றாலும் அவர்களால் ஆதாயமும் உண்டு. வழக்கில் அவசர முடிவுகள் வேண்டாம்.

9.6.2018 முதல் 4.7.2018 வரை சுக்கிரன் உங்கள் ராசிக்கு 6-ல் மறைவதால், சின்னச்சின்ன வாகன விபத்துகள் வரும் என்பதால், கவனமாக பயணிப்பது நல்லது. எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை ஏற்படும். கணவன் மனைவிக்குள் சாதாரண விஷயத்துக் கெல்லாம் சண்டை வரும்.

வியாபாரத்தில், சந்தை நிலவரத்தை அறிந்து புது முதலீடுகளைச் செய்யுங்கள். அதிக வட்டிக்குப் பணம் வாங்கி வியாபாரத்தை விரிவுப்படுத்த வேண்டாம். பங்குதாரர்களால் அவ்வப்போது பிரச்னைகள் வரும். கெமிக்கல், பெட்ரோ-கெமிக்கல், உரம் மற்றும் மருந்து வகைகளால் ஆதாயமடைவீர்கள். சித்திரை, ஆடி மாதங்களில் புதிய வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சாஃப்ட்வேர் துறையில் புதிய முதலீடுகள் செய்யவேண்டாம்.

உத்தியோகத்தில் வேலை அதிகரிக்கும். விரும்பத்தகாத இடமாற்றமும் வரக்கூடும். மேலதிகாரிகளைப் பகைக்கவேண்டாம். மாசி மாதத்தில் பதவி, சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம். சூழ்ச்சிகளை முறியடித்து முன்னேறுவீர்கள்.

மொத்தத்தில் இந்த விளம்பி வருடம், விடாமுயற்சி யாலும் கடும் உழைப்பாலும் உங்களுக்கு முன்னேற் றத்தைப் பெற்றுத் தருவதாக அமையும்.

பரிகாரம்: தர்மபுரி மாவட்டம், தகடூர் எனும் ஊரில் அருளும் ஸ்ரீகாமாட்சியம்மனையும், ஸ்ரீமல்லிகார்ஜுனேஸ்வரரையும் பிரதோஷ நாளில் வழிபட்டு வாருங்கள். செல்வ வளம் பெருகும்.

இளகிய மனம் படைத்தவர்களே!

உங்கள் ராசியிலேயே இந்த விளம்பி வருடம் பிறப் பதால் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத் துங்கள். அவ்வப்போது வீண் டென்ஷன், தலைச்சுற்றல், மன அமைதியின்மை, முன்கோபம் வந்து நீங்கும்.

இந்தாண்டின் தொடக்கம் முதல் 3.10.2018 வரை உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டில் குரு இருப்பதால் எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலைகள், சிலர் மீது நம்பிக்கையின்மை, வீண் அலைச்சல் வந்து போகும். மறைமுக எதிரிகள் முளைப்பார்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.

ஆனால், 4.10.2018 முதல் 12.3.2019 வரை உங்களின் பாக்கியஸ்தானமான 9-ம் வீட்டில் குரு நுழைவதால், இடையூறுகளைக் கடந்து வெற்றி பெறுவீர்கள். சில இடங்களில், சில நேரங்களில் அமைதியாக இருந்து காரியம் சாதிப்பீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. குடும்பத்தில் தள்ளிப் போன சுப நிகழ்ச்சிகளெல்லாம் நல்ல விதமாக நடந்தேறும். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். சொத்து வாங்கும் யோகம் உண்டாகும்.

13.3.2019 முதல் வருடம் முடியும் வரை உங்களின் ராசிநாதன் குருபகவான் அதிசார வக்ரமாகி உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்வதால், நான்கைந்து வேலைகளை ஒன்றாகச் சேர்த்துப் பார்க்க வேண்டியது இருக்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம்.

5.7.2018 முதல் 1.8.2018 வரை உள்ள காலகட்டத்தில் சுக்கிரன் 6-ல் மறைவதால், சிறுசிறு விபத்துகள் வரக்கூடும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள்.

30.4.2018 முதல் 27.10.2018 வரை செவ்வாயும், கேதுவும் சேர்ந்து லாப வீட்டில் நிற்பதால், நிர்வாகத் திறன் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவு உண்டு. குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் தருவார்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவர். மனைவிவழியில் மதிப்பு கூடும். கடன் பிரச்னை கட்டுக்குள் இருக்கும்.

14.4.2018 முதல் 12.2.2019 வரை கேது 11-ம் வீட்டில் நிற்பதால், ஷேர் மார்க்கெட் மூலம் பணம் வரும். தயக்கம், தடுமாற்றம் நீங்கும். கடந்த வருடத்தில் வாட்டிவதைத்த பிரச்னைகளுக்கெல்லாம் இப்போது தீர்வு கிடைக்கும். ஆனால், 5-ல் நிற்கும் ராகுவால் மன அமைதியின்மை, டென்ஷன் வரக்கூடும்.

13.2.2019 முதல் வருடம் முடியும் வரை 4-ல் ராகு நுழைவதால், வேலைச்சுமை அதிகரிக்கும். தாயாருடன் மனஸ்தாபங்கள் வெடிக்கும். வாகனம் தண்டச்செலவு வைக்கும். கேது 10-ம் வீட்டுக்குள் வருவதால் உத்தியோகத்தில் எதிர்ப்புகள், திடீர் இடமாற்றம், குடும்பத்தில் அதிருப்தி வந்து நீங்கும்.

இந்தாண்டு முழுக்க சனிபகவான் 10-ம் வீட்டிலேயே அமர்வதால் எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். உடல் ஆரோக்கியம் சீராகும். வெளி வட்டாரத்தில் செல்வாக்குக் கூடும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். என்றாலும் வேலைச்சுமையை நினைத்து ஆதங்கப்படுவீர்கள்.

வியாபாரத்தில் தேங்கிக்கிடந்த சரக்கு களை சாமர்த்தியமாக விற்றுத் தீர்ப்பீர்கள். வைகாசி, ஆவணி மாதங்களில் லாபம் அதிகரிக்கும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் வெளிநாட்டு நிறுவனத்தின் ஒப்பந்தம் கிடைக்கும். ஷேர் மார்க்கெட், ஸ்பெகுலேஷன், இரும்பு, கட்டட உதிரி பாகங்களால் லாபமடைவீர்கள். வாடிக்கை யாளர்கள் விரும்பி வருவார்கள். புதிய கிளைகள் தொடங்குவீர்கள். விலகிச் சென்ற பங்குதாரர் மீண்டும் வந்து இணைவார்.

உத்தியோகத்தில் வேலைச்சுமை குறையும். மூத்த அதிகாரி உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். மார்கழி, தை மாதங்களில் மேலதிகாரி களுக்கு நெருக்கமாவீர்கள். ஐப்பசி மாதத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். இடமாற்றமும் வரக் கூடும். எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதவி உயர்வு தடையின்றி கிடைக்கும். இழந்த உரிமையை மீண்டும் பெறுவீர்கள்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு உங்களை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வதுடன், வசதி வாய்ப்புகளை வாரி வழங்குவதாக அமையும்.

பரிகாரம்: தேனி மாவட்டம், சுருளிமலை எனும் ஊரில் கோயில்கொண்டிருக்கும் ஸ்ரீசுருளிவேலப்பரை, செவ்வாய்க்கிழமைகளில் சென்று வணங்கி வாருங்கள்; சகல செளபாக்கியங்களும் உண்டாகும்.

ராசி பலன் 2018 - Rasi Palan 2018


கிரஹங்களின் கோச்சாரம் அன்றாடம் நடக்கும் ஒரு நிகழ்ச்சி. இவர்களது சஞ்சாரம் நமது வாழ்க்கையில் எந்த விதமான திருப்பங்கள் மற்றும் மாற்றங்கள் கொண்டு வரும் என்பதை இந்த 2018 ராசி பலன் மூலம் நாங்கள் உங்களுக்கு தெரிவிக்கிறோம். இந்த ராசி பலன் தொகுப்பு ஜனவரி முதல் டிசம்பர் 2018 வரை உள்ளது.

உங்கள் வாழ்க்கையின் முக்கிய சமாசாரங்களான படிப்பு, பணம், ஆரோக்கியம், வேலை, கல்யாணம், உறவு, நட்பு, குடும்பம், கேளிக்கை மற்றும் ஆன்மீக விஷயங்களை அலசி ஆராய்ச்சி செய்திருக்குகிறோம். மேலும் உங்களுக்கு வருகிற பிரச்சனைகள் மற்றும் அதனை சமாளிக்கும் பரிகார முறைகளை பற்றியும் தெரிவித்திருக்கிறோம். மேஷம் முதல் மீனம் வரை எப்படி இருக்கும் என்பதை இந்த தொகுப்பில் நீங்கள் காணலாம்.

மேஷம் (Mesham)

செவ்வாய் கிரஹத்தை ராசிநாதன் ஆக கொண்டிருக்கும் மேஷ ராசிக்காரர்களே, இந்த வருடம் மிஸ்ர பலன்களை குறிப்பிட்டாலும், கிட்டத்தட்ட அனைத்து பலன்களும் நல்லதாகவே இருக்கும். சனி 9ஆம் வீடு தனுசில், குரு 7ஆம் வீடு துலாவில், ராகு 4ஆம் வீடு கடகத்தில், கேது 10ஆம் வீடு மகரத்தில் உள்ளன. ராசி அதிபதி செவ்வாய் வருடத்தின் மத்தியில் ஆரம்பித்து இறுதி வரைக்கும் 10ஆம் வீடு மகரத்தில் கேதுவுடன் இருக்கிறார். இது ராசிநாதனுக்கு உச்ச வீடு என்பதால் எல்லா கவனமும் செய்யும் வேலையில் முன்னேறுவதில் இருப்பீர்கள். வருடத்தை உற்சாகத்துடனும் ஆரம்பிப்பீர்கள். சாகசமாகவும், தைர்யமாகவும் எல்லா முடிவுகளையும் எடுப்பீர்கள். பதவி உயர்வு, ஊதிய உயர்வு நிச்சயம் உண்டு. வெளிநாட்டு வ்யாபாரிகளுடன் கூட்டு ஒத்துழைப்பு பெருமளவில் நன்மை தரும். கார்ய சம்பந்த தூர பிரயாணங்கள் பயனுள்ளதாக இருக்கும். வாழ்க்கை துணையுடன் நெருக்கம் இருந்தாலும், வீட்டில் நிம்மதியும் சந்தோஷமும் குறைவாக இருக்க காண்பீர்கள். தாய் தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனக்குறைவு பெரிய பிரச்னையாகலாம்.

 • வில்வ மரத்திற்கு பூஜை செய்யவும். வில்வத்தின் வேர்களை அணிந்து பயன் பெறவும்.
 • அதிகாலையில் சூர்ய பகவானை வணங்கி, தாம்பிர செம்பில் ஜலம் அர்பணிக்கவும். நன்மை உண்டாகும்.
ரிஷபம் (Rishabam)

சுக்கிர கிரஹத்தை ராசிநாதன் ஆக கொண்டிருக்கும் ரிஷப ராசிக்காரர்களே, இந்த வருடம் முழுவதும் பல்வேறு பிரச்னைகள் தலை தூக்கும். சனி 8ஆம் வீடு தனுசில், குரு 6ஆம் வீடு துலாவில், ராகு 3ஆம் கடகத்தில் மற்றும் கேது 9ஆம் மகரத்தில் சஞ்சாரம் செய்கின்றனர். அஷ்டம சனியின் பிடியில் வருடம் முழுவதும் இருக்கிறீர்கள். குரு வருட இறுதியில் 6ஆம் வீட்டிலிருந்து 7ஆம் வீடு வ்ருச்சிகத்திற்கு வரும் உங்கள் நிலைமை பெரிதளவில் சரியாகும். ராகுவின் வலுவான ஸ்திதியினால் எந்த வித பிரச்னைகளையும் துணிவுடன் சந்திப்பீர்கள். அரும்பாடுபட்டு எடுத்த கார்யங்களை முடிப்பீர்கள். இருந்தாலும் செய்யும் வேலையில் அடிக்கடி தடங்கல்கள் வந்து கொண்டு இருக்கும். வீண் அலைச்சல் மற்றும் வேண்டாத பிரச்னைகள் இருக்கும். உங்கள் எதிர்பார்ப்பிற்கு மாறாக விளைவுகள் இருக்கும். வியாபாரிகள் பண சம்பந்தமான எந்த விஷயமும் பல முறை யோசித்து செய்தால் நல்லது. புதிய கூட்டோ அல்லது முதலீடோ வருட இறுதியில் உங்களுக்கு சாதகமாக இருக்கும். தந்தையுடன் மனஸ்தாபம் வரலாம்; அல்லது தந்தைக்கு அசௌகரியம் ஏற்படலாம்.

 • ஆஞ்சநேயருக்கு தினமும் பூஜை, ஆராதனை செய்யுங்கள். செவாய்க்கிழமை, சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயருக்கு கோவிலில் விளக்கு ஏற்றவும்.
 • சனிக்கிழமை தோறும் நவகிரஹ சன்னதியில் சனீஸ்வரனுக்கு எண்ணெய் தீபம் ஏற்றுங்கள்.
மிதுனம் (Midhunam)

புதன் கிரஹத்தை ராசிநாதன் ஆக கொண்டிருக்கும் மிதுன ராசிக்காரர்களே, பல்வேறு பிரச்னைகள் தலை தூக்கினாலும் சமயோஜித அறிவையும் நேர்மறை சிந்தனையையும் பிரயோகித்து வாழ்க்கையில் முன்னேறுவீர்கள். சனி 7ஆம் வீட்டில், குரு 5ஆம் வீட்டில், ராகு 2ஆம் வீட்டில் மற்றும் கேது 8ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார்கள். உங்கள் வாய் வார்த்தைகளினால் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் சிற்சில விஷயங்களில் சண்டை சச்சரவுகள் வரலாம். கவனமாக கையாளுங்கள். உங்கள் ஆரோக்கிய விஷயத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும்; திடீர் நோய் வர வாய்ப்பும் இருக்கிறது, அதிகமாக கவனம் தேவை. சிலர் தங்களுக்கு பிடித்தவர்களுடன் மண வாழ்க்கையில் இணைவார்கள். முதலில் மண-வாழ்க்கை பிரமாதமாக இருந்தாலும், வருட இறுதியில் சிறு வேறுபாடுகள் தலைதூக்கலாம். ஒருத்தரை ஒருவர் விட்டு கொடுக்காமல் நிலைமையை கையாளுங்கள். வேலை விஷயமாக சிலர் குடும்பத்தை விட்டு வெகு தூரம் செல்லலாம்; வெளிநாட்டு பயணம் கூட மேற்கொள்ளலாம். பாடுபட்டு உழைத்த பணம் விரயமாகும்; இந்த விஷயத்தில் சற்று கவனமாக இருக்கவும். வருட பிற்பகுதியில் உத்யோகஸ்தர்கள் கடினமாக உழைத்து முன்னேறுவார்கள்.

 • தினந்தோறும் விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரம் சொல்லுங்கள். பைரவ பூஜை நன்மை செய்யும்.
 • அரவாணிகளுக்கு, திருநங்கைகளுக்கு உங்களால் முடிந்த உதவி செய்யவும்.
கடகம் (Kadagam)

சந்திரனை ராசிநாதன் ஆக கொண்டிருக்கும் கடக ராசிக்காரர்களே, வருடம் 2018 நிறைய சவால்களும் சில புதிய திருப்பங்களும் கொண்டு வரும். சனி 6ஆம் வீட்டில், குரு 4ஆம் வீட்டில், ராகு ஜென்மத்தில் மற்றும் கேது 7ஆம் வீட்டில் சஞ்சரிக்கிறார்கள். மனம் ஒரு நிலை இல்லாமல் தவிக்கும். வீட்டில், குடும்பத்தில் சந்தோசம் நிலவும். ஆனால் வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடுகள் இருக்கும். சிறிய பிரச்னையானாலும் உடனே தீர்வு காண முயலுங்கள். இந்த வருடம் முழுவதும் ஒரு புது விதமான உணர்வு பாய்வதை உடலிலும் உள்ளத்திலும் பாய்வதை உணர்வீர்கள். உங்கள் புரட்சிகரமான படைப்பாற்றலை மற்றவர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள் அல்லது தப்பாக புரிந்து கொள்வார்கள். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். வேலை செய்யும் இடத்தில் விடா முயற்சியுடன் கார்யங்களை செய்து முடிப்பீர்கள். உங்கள் உடல் ஆரோக்கியமாக இருந்தாலும், உண்ணும் உணவில் கட்டுப்பாடு இருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கை துணையின் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். சின்ன பிரச்னை விஸ்வரூபம் எடுக்க வாய்ப்பிருக்கிறது.

 • மஹாதேவரை தினமும் வணங்குங்கள். ருத்ர காயத்ரி, மஹா ம்ருத்யுஞ்சய மந்திரம் ஜெபியுங்கள். எல்லா விதத்திலும் நன்மை உண்டாகும்.
 • பசு-பக்ஷிகள், நாய்களுக்கு தீனி கொடுங்கள். சனிக்கிழமை அன்ன தானம் மற்றும் ஏழை-எளியோர்களுக்கு தேவையான பொருள்கள் கொடுக்கவும்.
சிம்மம் (Simmam)

சூர்யனை ராசிநாதன் ஆக கொண்டிருக்கும் சிம்ம ராசிக்காரர்களே, மொத்தத்தில் ஒரு பிரமாதமான வருடம். குரு 3ஆம் வீட்டில், சனி 5இல், கேது 6இல் மற்றும் ராகு 12இல் கோச்சாரம் செய்கின்றன. மனம் சமயம், மதம் சம்பந்தமான அல்லது நல்ல செயல்கள் செய்வதிலும் லயிக்கும். புனித யாத்திரையும் மேற்கொள்ளலாம். கூட பிறந்தோர் மற்றும் நண்பர்களின் உதவி, ஆதரவு மற்றும் சஹயோகம் உங்களுக்கு கட்டாயம் கிடைக்கும். காதல் சம்பந்தங்களில் சில இன்பமான அனுபவங்களுடன் சிற்சில சிக்கல்களும் வரலாம். ஜாக்கிரதையாகவும் கவனமாகவும் இருக்கவும். வாழ்க்கை துணையுடன் சந்தோஷத்துடன் இருப்பீர்கள், இருந்தாலும் வருட மத்தியில் அனாவசிய பிரச்னைகளை பெரிது படுத்தாமல் தீர்வு காண முயலுங்கள். தந்தையின் அந்தஸ்து சமூகத்தில் உயரும், ஆனால் உடல் அசௌகர்யப்படலாம். செய்யும் வேலையில் கடுமையாக போட்டி இருந்தாலும், அயரா உழைப்புடன் காரியத்தில் இறங்கி, வேலையை செய்து முடிப்பீர்கள். வீடு, மனை வாங்கும் யோகம் வருடத்தின் இறுதியில் இருக்கிறது. அதற்குமுன் முயற்சி எடுக்காதீர்கள், வீண் அலைச்சலும் பண விரயமும் தான் மிஞ்சும்.

 • சூர்ய பூஜை செய்யுங்கள். தந்தைக்கும், தந்தை சமான பெரியவர்களுக்கும் மரியாதையுடன் அன்பு சேவை செய்யுங்கள்.
 • தார்மீக ஸ்தலத்தில் தர்மம், சேவை செய்யுங்கள். வறுமையில் இருக்கும் ஊனமுற்றோர், நோயாளிகளுக்கு உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள்.
கன்னி (Kanni)

புதன் கிரஹத்தை ராசிநாதன் ஆக கொண்டிருக்கும் கன்யா ராசிக்காரர்களே, அவ்வப்பொழுது வரும் அற்பமான பிரச்னைகளை தவிர்த்து இந்த வருடம் பிரமாதமாக இருக்கும். குரு 2இல், சனி 4இல், கேது 5இல் மற்றும் ராகு 11இல் சஞ்சாரம் செய்கிறார்கள். வாய்ப்புகள் ஏராளமாக வரும், சாதனையும் நிறைய செய்வீர்கள். இந்த வருடம் தன லாபத்தை குறிக்கிறது. உங்கள் புத்தி கூர்மையும், வாக்கு சாதுர்யமும் உங்களுக்கு பல்வேறு வெற்றிகளை தேடித்தரும். செய்யும் வேலையில் வேகமாக முன்னேறுவீர்கள். சமுகத்தில் அந்தஸ்து அதிகரிக்கும் மற்றும் உங்கள் வாழ்க்கையில் புதிய நண்பர்கள் வருவார்கள், மற்றும் புதிய தொடர்புகள் உண்டாகும். வீடு புதுப்பித்தல், அலங்கரித்தல், சீரமைப்பு போன்றவற்றில் உங்கள் தியானம் செல்லும். புது வீடு, மனை வாங்கும் முயற்சியில் முழு மூச்சுடன் சிலர் இறங்குவார்கள். இந்த மாதிரி விஷயங்களுக்கு இது உகந்த சமயம். குழந்தைகள், குறிப்பாக அவர்கள் படிப்பு மற்றும் ஆரோக்கியம் சம்பந்த விஷயங்களில், ரொம்பவே ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய சமயம். வாழ்க்கை துணை மூலம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் நல்லது நடக்கும்.

 • விஷ்ணு காயத்ரி, சஹஸ்ரநாமம் மற்றும் விஷ்ணு பூஜை நன்மை தரும்.
 • ராகு-கேது பரிகாரம் நல்லது. பல வண்ண விரிப்புகள் ஏழை-எளியோர்களுக்கு தானம் செய்யவும்.
துலாம் (Thulaam)

சுக்ர கிரஹத்தை ராசிநாதன் ஆக கொண்டிருக்கும் துலா ராசிக்காரர்களே, உங்கள் விருப்பம்படி சில விஷயங்கள் உருவாகவில்லை என்றாலும், ஒட்டுமொத்தமாக இந்த வருடம் முன்னேற்றத்தை குறிக்கிறது. வருடத்தை ஒரு புத்துணர்ச்சியுடன் ஆரம்பிப்பீர்கள். ஆனால் கூடவே ஒரு ஆக்ரோஷமும் கலந்து இருக்கும். உங்கள் வற்புறுத்தலும், வலியுறுத்தலும் சில சமயங்களில் உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். மற்றபடி உங்கள் குடும்பத்தில் இதனால் வீண் பிரச்னைகள் உருவெடுக்கும். தக்க சமயத்தில் நிலைமை கெடாமல் பார்த்துக்கொள்வீர்கள். இருந்தாலும், உங்கள் அந்தரங்க வாழ்க்கையில் உங்கள் மனம் லயிக்காது. மனதில் இருக்கும் கோவம் வாய் வார்த்தை மூலம் வெளியே வரும் பொழுது மிகவும் கவனமாக நிலைமையை கையாளவும். செய்யும் வேலையில் மாற்றங்கள் திடீரென வரும், நீங்களும் உங்கள் படைப்பாற்றல், உத்வேகம் மூலம் பல விதமான சவால்களை கையாள்வீர்கள். குழந்தைகள் தங்கள் படிப்பிலோ, வேலையிலோ பிரமாதமாக பிரகாசிப்பார்கள். மாணவர்களுக்கு மிகவும் சிறப்பான காலம் இது. சிறிய பயணம் மேற்கொள்வீர்கள். பண சேகரிப்பதில் மும்முரமாக இருப்பீர்கள்.

 • வியாழக்கிழமை தோறும் அரச மரத்திற்கு ஜலம் அர்ப்பணம் செய்யுங்கள். மரத்தை தொடாமல் சுற்றி வருதல் பயன் தரும்.
 • உங்களால் முடிந்த அளவு கோ சேவை செய்யுங்கள்.
விருச்சிகம் (Viruchigam)

செவ்வாய் கிரஹத்தை ராசிநாதன் ஆக கொண்டிருக்கும் விருச்சிக ராசிக்காரர்களே, இந்த வருடம் கலந்த பலன்களை குறிப்பிட்டாலும் கெடு பலன்கள் சிறிதளவு அதிகமாக இருக்கும். சனி 2ஆம் வீட்டில், கேது 3இல், ராகு 9இல் மற்றும் குரு 12ஆம் வீட்டில் சஞ்சரிக்கின்றன. பண தட்டுப்பாடு, வீண் விரையம், தன நாசம் போன்ற பிரச்னைகள் அடிக்கடி தலைதூக்கும். ராசிநாதன் வருடத்தின் பாதிக்கு மேல் சமயம் ராகு-கேதுவிற்கு மத்தியில் சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியம் கெடும் மற்றும் மன உளைச்சல் அதிகரிக்கும். நீங்கள் எதிர்பார்த்தபடி வாழ்க்கை நிகழ்வுகள் நடக்காதலால் ஏமாற்றம் கலந்த கோவம் உங்களுக்குள் நிறைய இருக்கும். எந்த விஷயத்திலும் நிதானம் உங்களுக்கு நன்மை தரும். வெளிநாட்டு கல்வி விரும்புகிற மாணவர்களுக்கு இது ஒரு அனுகூலமான நேரம். படிப்பில் கவனம் சிதறாமல் பார்த்துக்கொள்ளவும். தாம்பத்திய உறவில் கவனம் செலுத்துங்கள். தந்தையுடனும், வீட்டில் இருக்கும் பெரியவர்களுடனும் உறவு கெடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். உத்யோகத்தில் இருப்பவர்கள் தங்கள் வேலையில் வரும் சவால்களை தைர்யமாக சந்தித்து முன்னேற வழி தீருவார்கள்.

 • சிவனுக்கு ஸ்ரத்தையுடன் பூஜை, ஆராதனை செய்யுங்கள். ருத்ராபிஷேகம் சுபம் தரும்.
 • ஆலமரத்தின் வேர்களின் மேல் பால் கலந்த ஜலம் ஊற்றுங்கள்.
தனுசு (Dhanusu)

குரு கிரஹத்தை ராசிநாதன் ஆக கொண்டிருக்கும் தனுசு ராசிக்காரர்களே, சில விஷயங்களை தவிர்த்து இந்த வருடம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். ஜென்மத்தில் சனி, 2இல் கேது, 8இல் ராகு மற்றும் 11ஆம் வீட்டில் குரு சஞ்சரிக்கிறார்கள். வாழ்க்கையில் மேலும் மேலும் வளருவதற்கு நிறைய வாய்ப்புகள் வரும். பண வரவு இருந்து கொண்டே இருக்கும். இரண்டுக்கும் மேற்பட்ட வருவாய் ஆதாரங்கள் உள்ளன. கடினமாக உழைக்கவும் செய்வீர்கள். அளவுக்கு அதிகமாக எதுவும் நல்லதில்லை. ஆதலால் அதிகமாக வேலைப்பளு எடுத்துக்கொண்டு வாழ்க்கையில் மற்ற முக்கிய விஷயங்களை புறக்கணிக்காதீர்கள். உங்கள் அணுகுமுறை மற்றும் பேசும் தோரணையினால் குடும்பத்திலும், வேலை செய்யும் இடத்திலும் பிரச்னைகள் உருவாகலாம். வேலை செய்யும் பரபரப்பில் உங்கள் உடல் நலத்தின் மேல் கவனக்குறைவாக இருக்காதீர்கள். வருட முடிவில் இது உங்களுக்கு ஒரு பெரிய பிரச்னையாக உருவெடுக்கும். தொழில்-நுட்ப-ரீதியாக படிக்கும் மாணவர்களுக்கு நல்ல காலம். அவ்வப்போது வரும் இடையூறுகளை கவனித்து கொண்டீர்களானால், உங்கள் குடும்ப வாழ்க்கை அமைதியாக இருக்கும்.

 • சனிக்கிழமை தோறும், சாயங்கால சமயம், அரச மரத்தின் அருகில் எண்ணெய் விளக்கு ஏற்றி வழிபடவும்.
 • உங்கள் எடைக்கு சரிசமமான சப்த-தான்யங்கள் தானம் செய்யவும்.
மகரம் (Magaram)

சனி கிரஹத்தை ராசிநாதன் ஆக கொண்டிருக்கும் மகர ராசிக்காரர்களே, இந்த வருடம் முழுவதும் வாழ்க்கை சம்பந்த பல விதமான அனுபவங்களை நீங்கள் எதிர்பார்க்கலாம். சனி 12இல், கேது ஜென்மத்தில், ராகு 7இல் மற்றும் குரு 10ஆம் வீட்டில் சஞ்சரிக்கின்றன. உடல் ஆரோக்கியக்குறைவும், பண தட்டுப்பாடும் எதிர்பாராத விதமாய் உங்களுக்கு தொல்லை கொடுக்கலாம். வெளிநாடு மூலம் உங்களுக்கு பல விதத்தில் ஆதாயம் கிடைக்க இருக்கிறது. இருந்தாலும் சாமான்ய வாழ்க்கை விட ஆன்மீகத்திலும் தார்மீகத்திலும் உங்கள் சாய்வு அதிகம் இருக்க காண்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் உங்கள் அதிகாரம் ஓங்கும், ஆனால் அது உங்களை சர்சையிலோ, விவாதத்திலோ கொண்டு போகாமல் பார்த்துக்கொள்ளுங்கள். மேல் அதிகாரிகளின் ஆதரவும், சஹாயோகமும் உங்களுக்கு நிச்சயம் உண்டு. குடும்ப வாழ்க்கையில் சில பிரச்னைகள் திடீரென கிளம்பினால் கூட, நிம்மதி காண்பீர்கள். தாம்பத்திய உறவில் சற்று நிதானமாக விவரங்களை கவனிக்கவும். சண்டை-சச்சரவுக்கு இடம் தராதீர்கள். வருட இறுதியில் கணவன்-மனைவி உறவில் நெருக்கம் அதிகமாகும். சுய முன்னேற்றத்திற்கு ரொம்பவே நல்ல வருடம் இது.

 • தினமும் கணபதி அதர்வஸீர்ஷ ஸ்தோத்ர பாராயணம் செய்யவும். கணேஷ் பூஜை உகந்தது.
 • அன்ன தானம், பக்ஷிகளுக்கு தான்யம் போடுவது, தெரு நாய்களுக்கு ரொட்டி-பிஸ்கெட் துண்டங்கள் போடுவது உங்களுக்கு நன்மை தரும்.
கும்பம் (Kumbam)

சனி கிரஹத்தை ராசிநாதன் ஆக கொண்டிருக்கும் கும்ப ராசிக்காரர்களே, இந்த வருடம் உங்களுக்கு எல்லா விதத்திலும் சிறந்தது. சனி 11இல், கேது 12இல், ராகு 6இல் மற்றும் குரு 9ஆம் வீட்டில் சஞ்சரிக்கிறார்கள். நீங்கள் எடுக்கும் முடிவுகள் எல்லாம் உங்களுக்கு பிரமாதமாய் முடியும். பணம் சம்பாதிப்பதிலும், சேகரிப்பதிலும் உங்கள் கவனம் முழுவதும் செலுத்துவீர்கள். வெகு தூர பிரயாணம் உங்களுக்கு சாதகமாக முடியும். வாழ்க்கையை நன்றாக அனுபவிப்பீர்கள். ஆன்மீகம் உட்பட, எல்லா விஷயத்திலும் ஆர்வம் காண்பிப்பீர்கள். தார்மீக காரியங்களில் ஈடுபாடு பெருகும். மேல் அதிகாரிகள் இடமிருந்து பாராட்டும் புகழும் பெறுவீர்கள். தாம்பத்திய உறவில் அன்பும், ஒருதொருக்கு ஒருவர் புரிந்து கொள்ளுதலும், கேளிக்கை விஷயங்களில் ஜோடியாக சேர்ந்து கொண்டு இன்பம் அனுபவிக்கிறதுமாய் இந்த வருடம் கழியும். குழந்தைகள் அவர்கள் வாழ்க்கையில் சந்தோஷமாய் முன்னேறுவார்கள். காதலர்கள் ஆரம்பத்தில் சிரமங்களை சந்தித்தாலும், புரிந்து கொண்டு சந்தோஷமாக இருப்பார்கள். எதிர்ப்புகளும், தடைகளும் உங்களை அசைக்க முடியாது. சகல சுகத்தையும் பெற்று ஆடம்பரமாக வாழ்வீர்கள்.

 • தான தர்மம் செய்யுங்கள். வாழ்க்கையில் அவதி படுகிறவர்களுக்கு உங்களால் முடிந்த உதவி செய்யவும்.
 • லட்சுமி-நாராயண பூஜை செய்யுங்கள்.
மீனம் (Meenam)

குரு கிரஹத்தை ராசிநாதன் ஆக கொண்டிருக்கும் மீன ராசிக்காரர்களே, சோதனைகளும் சாதனைகளும் கலந்த வருடம் இந்த 2018. சனி 10இல், கேது, 11இல், ராகு 5இல் மற்றும் குரு 8இல் சஞ்சரிக்கிறார்கள். வருடம் முழுவதும் உங்கள் உடல் நலனிலும், ஆரோகியத்திலும் கவனம் செலுத்தவேண்டியது மிகவும் அவசியம். செய்யும் வேலையில் உங்கள் கவனம் முழுவதும் இருக்கும், ஒரு வெறியில் கார்யம் செய்வீர்கள். இதன் விளைவு, உங்கள் உடல் அசௌகர்யப்படலாம் மற்றும் அந்தரங்க வாழ்க்கை குலையலாம். வேலை செய்யும் இடத்தில் அதிகாரிகள் கடுமையான உழைப்பை எதிர்பார்க்கலாம். சக ஊழியர்கள் ஆதரவு, சஹயோகம் உங்களுக்கு கிட்டாமல் இருந்தாலும், பொறுமையாய் இருங்கள். அலை பாயும் மனதை ஒரு நிலையில் வைத்து கார்யம் செய்யவும். குழந்தைகளுக்கு உங்கள் அன்பும், அதைவிட முக்கியம், உங்கள் வழிகாட்டலும் அவசியம். வருட இறுதியில் உங்கள் வாழ்க்கையில் சிறப்பான திருப்பங்கள் வரும். அதுவரைக்கும் நிலமையையம், பிரச்னைகளையும் சமாளியுங்கள். பண வரவு சீராக இருக்கும். வேண்டாத அலைச்சலை தவிர்க்கவும்.

 • மஹா விஷ்ணுவிற்கு சந்தன அபிசேகம் அல்லது சந்தன திலகமிட்டு பூஜை செய்யவும்.
 • வியாழக்கிழமை விரதம் நன்மை தரும். அன்று மட்டும் வாழைப்பழத்தை உட்கொள்ளாமல், நெய்வேத்தியமாக பகவானுக்கு அர்ப்பணித்து, ப்ரசாதமாய் உட்கொள்ளவும்.

விவரமாக விஷயங்கள் தெரிந்து கொள்வதற்கு ஆஸ்ட்ரோஸேஜ் வெப் தளத்தில் செல்லுங்கள். எங்கள் குண்டலி ஆப் டவுன்லோட் செய்து உங்கள் ஜாதக சம்பந்தமான விஷயங்களை அறியுங்கள் ஆராயுங்கள். குண்டலி ஆப் மூலம் நீங்கள் 50 பக்க ஜாதகம் இலவசமாக பெறலாம். இந்த ப்ரோக்ராம் உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் அல்லது ஷேர் செய்யுங்கள், எங்கள் அஸ்ட்ரோஸேஜ் டிவிக்கு சப்ஸ்க்ரைப் பண்ணுங்கள்.


உங்கள் வாழ்வு சிறக்க பண்ணாகம் இணையம் வாழ்த்துகின்றது