நல்லைக் கலாமந்திர் நடனாலயம் வழங்கும் ''சதங்கை நாதம் '' நடன ஆற்றுகை
நல்லைக் கலாமந்திர் நடனாலயம் வழங்கும் ''சதங்கை நாதம் '' என்னும் மாபெரும் நடன ஆற்றுகை இம்மாதம் 23. ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை மாலை 2.30 மணிக்கு நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் செந்தமிழ்ச் சொல்லருவி .ச.லலீசன் தலைமையில் இடம்பெற உள்ளது .
இந்த நிகழ்வின் முதன்மை அதிதியாக விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் இசைத்துறைத் தலைவர் கலாநிதி தெ.பிரதீபனும் சிறப்பு அதிதி களாக நாட்டியக் கலைமணி திருமதி யசோதரா விவேகானந்தன் மற்றும் நடனதிலகம் திருமதி வசந்தி குஞ்சிதபாதம் ஆகியோருடன் கௌரவ அதிதியாக யாழ்.கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலய அதிபர் திருமதி லுடேவிக்கா மகேஸ்வரனும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். .
இவ் நடன ஆற்றுகையானது அனுஷாந்தி சுகிர்தராஜின் நெறியாள்கையில் இடம்பெறவுள்ளதுடன் இசை விரிவுரையாளர் த வநாதன் ரொபேர்ட் மற்றும் வதனா திருநாவுக்கரசின் குரலிசையும் , சின்னையா துரைராஜாவின் மிருதங்க இசையும் , அம்பலவாணர் ஜெயராமனின் வயலின் இசையுடன் வெங்கடேஸ்வர ஐயர் ரத்னபிரபாகர் சர்மாவின் தபேலா இசையும் ஒன்றிணையவுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் இவ் விழாவில் பங்குகொண்டு சிறப்பிக்கும் படி கலைஞர்கள் மற்றும் ஆர்வலர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.
யாழ்.தர்மினி பத்மநாதன்