WELCOME TO PANNAGAM.COM & PTV

பண்ணாகம் இணையம்

 சிறப்புச் செய்திகள்   தகவல்கள்

யேர்மனியில் புதிய முயற்சி தமிழ் நூல்நிலையம். 24 மணி நேரமும் திறந்த நிலையில் சுயசேவை.
பண்ணாகம்.கொம் இணையம் தனது 15வது ஆண்டு நிறைவை எட்டும் வேளையில் பண்ணாகம்.கொம் இணைய பிரதம ஆசிரியரும், யேர்மன் தமிழ் கலாச்சார மன்றத் தலைவருமாகிய ஊடகவித்தகர் திரு.இக.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் என்னத்தில் உருவாகியது 24 மணி நேர நூல்நிலையம். இதன் மூலம் யேர்மனியில் தமிழ் மக்களிடையே குறைந்து வரும் தமிழ் வாசிப்பை மக்களிடையே மீண்டும் ஊக்குவிப்பதற்காக முதல் முதலாக இலவச 24மணிநேரமும் திறந்த நூல்நிலையம் ஒன்றை யேர்மன் மக்களுடன் இணைந்து யேர்மனி சுண்டன் நகரில் 16.11.2020 திங்கள் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த நல்ல செயற்பாட்டை பண்ணாகம்.கொம் இணையமும் ,யேர்மன் தமிழ் கலாச்சார மன்றமும் இணைந்து செயற்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . இதற்காக நூல்களை மக்கள் தங்கள் அன்பளிப்பாக வழங்கி வருகிறார்கள் இது ஒரு மக்கள் இணைந்த சேவையாகவே நடைபெறுகிறது. பலர் நேரடியாகவும் பல வெளிநாடுகளிலிருந்து தபால் மூலமும் அனுப்பிவைக்க படவுள்ளது. தொடங்கிய அடுத்தநாள் யேர்மனி எசன்நகர அன்பர் திரு கிருஷ்னர் தன்னிடம் உள்ள 100க்கு மேற்பட்ட நூல்களை அன்பளிப்பாக வளங்க முன்வந்ததும் , இந்தியாவிலிருந்து இனியநந்தவனம் பிரதம ஆசிரியர் சந்திரசேகரன் தம்மாலான சேவைகளை வளங்குவதாக பல ஆலோசனைகளைவழங்கியதாகவும் ,மற்றும் தமிழருவி வானொலி இயக்குனர் நயினைவிஜயன் ஊக்கங்களும்,ஏலையா முருகதாசன்,யேர்மன் தமிழ் கலாச்சார மன்ற உறவுகள்,பண்ணாகம் உறவுகள்,ஆவணகம் அன்ரன் போன்றவருகளின் ஆதரவு பலம் சேர்ப்பதாக நூல்நிலைய அன்பர் ஒருவர் தெரிவித்தார்.இதேபோன்று யேர்மனியில் பல நகரங்களிலும் உருவாக்க வேண்டும் என்ற ஆவலையும் வெளியிட்டுள்ளார்கள். இது ஒரு புதிய முயற்சி தொடரும் காலங்களில் இதன் பலாபலன்கள் பற்றிய கருத்துக்கணிப்பு நடைபெறும்.
இது ஒரு பெரிய நூலகம் அல்ல சிறிய அளவு பழைய தொலைபேசி நிலையங்களைப் பயன்படுத்தி உள்ளோம் இதற்காக யேர்மனிய மக்களின் ஒத்துழைப்புடன் யேர்மனி டொச் மொழி நூல்களும் இங்குள்ளது. நாளாந்தம் பலர் தாங்கள் விரும்பிய நேரம் வருகிறார்கள் தமக்கு பிடித்த நூல்களை தாமாக எடுத்துச் சென்று வாசித்தபின் தாமாகவே திருப்பி கொண்டு வந்து வைக்கிறார்கள். அதேநேரம் தம்மிடம் வீட்டில் மிகையாக உள்ள நூல்களையும் அங்கு வைத்து செல்கிறார்கள் இதனால் நாம் தினமும் அங்கு சென்று ஒழுங்கு செய்யவேண்டியுள்ளது. அங்கு மேலதீகமாகவுள்ள நூல்களை எடுத்துவந்து அங்கு நூல்கள் தேவைப்படும்போது நிரபப்பட்டும் வருகிறது. இச்சேவைக்காக எந்தவொரு கட்டணமும் அறவிடப்படுவதில்லை. மக்கள் சேவை மகேசன் சேவையாகிறது. வாழ்க தமிழ் 
'' தமிழ் எங்கள் மூச்சு''

WORLD RECORD in Virtual Talk
24 நாடுகள் 24மணித்தியாலங்கள் 24 பேச்சாளர்கள்
உலகசாதனைப் பயணம்  13.11.2020 சிறப்பாக நடைபெறுகிறது.  
ASIA BOOK OF RECORDS
24 நாடுகளின் 100பேருக்கும் மேலான பங்காளர்கள் 500 பேருக்கும் மேலான பார்வையாளர்கள் இணைந்த சாதனைப்பயணம் இதில் யேர்மனியலிருந்து இன் சாதனை முயற்சியில் .ஜெர்மனி இணைப் பேச்சாளர்கள்....
தமிழவேள் திரு.நயினை விஜயன் தமிழருவி வானொலி இயக்குனர்.,
ஊடக வித்தகர் திரு.இக.கிருஷ்ணமூர்த்தி யேர்மன் தமிழ் கலாச்சார மன்ற தலைவர்., ஆசிரியை திருமதி.சசிகலா நயினை விஜயன்.
ஊடகவியலாளர் திரு.முல்லை மோகன் அவர்கள்.
நெறியாள்கை முனைவர் ரோகினி
அமீரகம். டுபாய்

சிங்கப்பூர் வாழ்வியல் இலக்கியப் பொழில்

 

ஐரோப்பா இணைய சந்திப்பு01.11.2020 மாலை 16.00 மணிக்கு ஆரம்பித்து 19.00 மணிக்கு நிறைவுபெற்றது. மூன்று மணித்தியாலங்கள் பாடல்,ஆடல்,கவிதை,உரைகள் என தொய்வின்றி மிக விறுவிறுபப்பாக முதலாவது சந்திப்பு நடைபெற்றது இதில்  50 மேற்பட்டவர்கள் பல நாடுகளிலிருந்து கலந்து சிறப்பித்தார்கள் இதில் பல சிறுவர்கள் இளையோர்கள் என பலரும் கலந்திருந்தது மிக ஆரோக்கியமானதாக இருந்தது. இந்த நிகழ்வை  இலக்கியப் பொழில் நிறுவனர் திரு. பாவலர் எல்ல.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஒழுங்கமைத்திருந்தார்.

யேர்மனிய தமிழர் வாழ்க்கை இன்று!.
ஊடக வித்தகர் பண்ணாகம் இக.கிருஷ்ணமூர்த்தி

இலங்கை சுதந்திரமடைந்து 1948-களின் பின்னரே கல்வியில் சிறந்த தமிழர்கள் தொழில் துறை வல்லுனர்களாகப் பிரித்தானியா முதற்கொண்டு பிற ஐரோப்பிய நாடுகளுக்குப் புலம்பெயர்ந்தனர்.  1979 முதல் இல் இலங்கையில் ஏற்பட்ட மோசமான அரசியல் , 1983 இனக்கலவரங்களுக்குப் பின்னர் பெருந்தொகையினரான ஈழத்தமிழர்கள் அகதிகளாக ஐரோப்பாவுக்கு இடம்பெயர்ந்தனர். இவ்வாறு இடம்பெயர்ந்து வாழ்வோரும் அவர்களின் வழித்தோன்றல்களும் ஐரோப்பியத் தமிழர் எனப்படுகிறார்கள். இன்று இவர்களில் கணிசமானோர் குடியுரிமை பெற்று, அந்தந்த நாடுகளின் மொழிகளைக் கற்று, பொருளாதார வளர்ச்சியடைந்து வாழ்கின்றனர். பிரித்தானியா, பிரான்ஸ், யேர்மனி, இத்தாலி, சுவிற்சர்லாந்து,  ஆகிய நாடுகளில் பரந்து வாழ்கின்றார்கள். மொத்தமாக ஏறக்குறைய 600,000–800,000 அளவுக்கு ஐரோப்பாவில் தமிழர்கள் வசிக்கின்றனர். 
                                        யேர்மனியில் 75,000 க்கு மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர்.இவர்களில் ஒரு சிலர் 1979ல் இங்கு கல்விக்காக வந்தவர்களாகவும் பின்பு 1980,1983 களில் அரசியல் கலவரங்களால் பாதிக்கப்பட்டவர்களும் 1984 முதல் 2009 வரை உக்கிரமான இனக்கலவரங்களில்  பாதிக்கப்பட்டவர்களாகவும் பெரும் தொகையான மக்கள் யேர்மனி வந்தடைந்தார்கள். இவர்களுக்கு யேர்மனி நாட்டு மொழி,கலாச்சாரம்,பண்பாடுகள்,காலநிலை என்பது முற்றிலும் தமிழருக்கு ஏற்றதாக இருக்கவில்லை. ஆரம்பத்தில் பலவகையில் சிரமங்களுக்கு உள்ளாகிய போதும் மனம் தளராது தமது தாயகம் ,தாயக உறவுகள் என்பவற்றைக்காப்பதற்கு  அன்னிய தேசத்தில் தம் சக்தியை மீறி உழைத்தார்கள். மெல்ல மெல்ல காலப்போக்கில் எல்லா நிலையிலும் தங்களை இந்த நாட்டிற்கு ஏற்றமாதிரி மாற்றிக்கொண்டு  தமிழ் மொழி,பண்பாடு ,கலாசாரம் ,சமயம் என்பவற்றை வளர்த்து எடுக்க பலர் பலவழிகளில் தம்மை சமூகத்திற்காக எந்த ஊதிபமும் இன்றி பல தமிழ்ப் பாடசாலைகளை உருவாக்கி எமது சந்ததிக்கு எமது தாய்மொழியை அழியவிடாது கல்வியை புகட்டவேண்டுமென  தமிழ்மொழிக்கல்வியை இங்குள்ள கல்வியாளர்களை ஆசிரியராக்கி சேவை அடிப்படையில் மிகத்திறமையாக வழிநடத்தி வருகிறார்கள். அத்துடன் கலைக்ககூடங்கள் அமைத்து நடனம், இசைக்கலை, வாத்தியங்கள்,வாய்ப்பாட்டு,நாடகம்,குறும்படங்கள் என நமது கலாச்சரங்களை அழியவிடாது கற்பித்து அதற்கு தரமான பரீட்சைகளை நடாத்தி சான்றிதழ்களை வழங்கி  கலைகளை அழியாமல் புலம்பெயர்ந்த தேசமான யேர்மனியில் போற்றி வருவது தமிழர் வாழ்வில் முக்கிய கடமையாகியுள்ளது. தமிழ்மக்களின் கலாச்சார பெருவிழாக்களும் போட்டி போட்டு மக்கள் மனம் மிழும் அளவிற்கு நடைபெற்று வருகிறது. அத்துடன்நின்று விடாது கத்தோலிக்கமக்கள் வாழும் இந்த நாட்டிலும் இந்துமதம் தழைக்க யேர்மனியில் 30 மேற்பட்ட ஆலயங்களை நிறுவி இந்துக்கள் தங்கள் சமயதர்மத்தை காப்பாற்றி தமது சந்ததிகளுக்கு அவர்கள் அடையாளங்களை காட்டி உள்ளார்கள். இதே போன்று தமிழ்க் கத்தோலிக்க மக்களும் தமது தமிழ் வழிபாட்டு முறைகளை தமது சந்ததிக்கு தமிழ்மூலம் உயர்த்தி வருவதையும்,விழாக்களையும்  யேர்மனியில் காணமுடிகிறது.
                                                              மொழி,கலாச்சாரம்,பண்பாடுகள் காக்கும் அதேநேரத்தில் தமிழருக்கு தேவையான இலங்கை உணவுப்பொருட்கள்,சமையல் தளபாடங்கள் , தமிழர் கலாச்சார உடுபுடவைகள் மற்றும் தங்கநகைகளையும் வர்த்தகரீதியாக வழங்க ஆரம்பத்தில் ஒருசிலர் முயற்சி வெற்றி பெற்றதைத்தொடர்ந்து அத்துறைசார்ந்தவர்கள் பலர் பலவிதமான அங்காடிகளை அமைத்து வணிகத்தில் ஈடுபட்டார்கள் இதனால் பலர் பெரும்செல்வந்தர்களாகவும் ஒரு சிலர் நட்டமடைந்து கடனாளிகளாகவும் உள்ளார்கள். தற்போது பல இலங்கை,இந்திய உணவகங்களை நிறுவி யேர்மனியர்களையும் தமிழ் உணவுச்சுவைக்கு ஈர்த்துள்ளார்கள்.  இப்படியாக பல இடங்களில் ஆரம்பிக்கப்பட்ட வணிக நிறுவனங்கள் இன்று யேர்மனியில்  டோட்முன்ட் என்ற மக்கள் செறிந்து வாழும் பெரு நகரில் ஒரு பெரும் வீதியை தமதாக்கி ஒரேஇடத்தில்  தமது முயற்சியினால் பல்வேறு விதமான அங்காடிகளைப்பார்க்கும்போது ஒரு குட்டி யாழ்ப்பாணத்தை எம் கண்முன் காட்டி நிற்பதைக்காண யேர்மனியில் ஈழத்தமிழன் தனித்துவமாக தளம்பல் இல்லாமல் சுயத்துடன் வாழ்கிறான் என பெருமை கெள்கின்றேன்.
                                                    யேர்மனியில் ஆரம்பத்தில் கால்பதித்த  தமிழர்கள் பலர் இலங்கையில் பல் துறைக்கல்விகள் கற்று பட்டதாரிகளாக இருந்தாலும் படிப்புக்குரிய வேலைக்கு அந்த சான்றிதழ்கள் யேர்மனிய சட்டத்தின் முன் வலுஅற்றதாக உள்ளதினால் சிறு சிறு உதவி வேலைகளையும் தொழிற்சாலைகளில் கூலியாட்களாகவும் தொழில்பெற்று தமது பிள்ளைகளுக்கு யேர்மனியில் அதி உச்ச கல்வியைக் கொடுத்து இன்று யேர்மனியில் மிக உயர்ந்த சகல துறைகளிலும் தமிழ் சமுதாயம் உயர்ந்து நிற்பதற்கும், தமிழர் என்றால் மிக நல்ல இனம் என யேர்மனியர்மத்தியில் உயர்ந்து நிற்பதற்கு யேர்மனியில் இருக்கும் தமிழர்களின் ஒவ்வொரு குடும்பத்தின் பங்களிப்பும் உள்ளடங்கி உள்ளதை நினைத்து பெருமை கொள்கிறேன். பெற்றோர்களால் பிள்ளைகளும் இன்று பிள்ளைகளால் பெற்றோர்களும் பெருமைகொண்டு வாழும் யேர்மனிய தமிழர் வாழ்க்கை நன்றாக அமைந்துள்ளது.

ஊடக வித்தகர் பண்ணாகம் இக.கிருஷ்ணமூர்த்தி

பண்ணாகம் இணைய பிரதம ஆசிரியருக்கு

 

``வாழ்நாள் சாதனையாளர் விருது`` 


யேர்மனியில் 2.3.2019ல் யேர்மனி நகரமேயரால் வழங்கப்பட்டது.

இந்த விருதை பரிந்துரை செய்த யேர்மன் எசன் நகர அறநெறிப்பாடசாலைக்கு பண்ணாம் இணையத்தின் நன்றிகள். இவருடன் மேலும் 6 சாதனையாளர்களுக்கும் வழங்கப்பட்டது. 

1.3.2019 பண்ணாகம் இணையத்தின் 13 வது ஆண்டு நிறைவில் 14வது ஆண்டு ஆரம்பத்தில் உற்சாகம் ஊட்டும் வகையில் வாழ்நாள் சாதனையாளர்விருது கிடைத்தது மிக மிழ்வானதாகும். தாயகத்திலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் செய்து வரும் பொதுசேவைகளை மேலும் உற்சாகப்படுத்தும் நல்நோக்கில் வாழ்நாள் சாதனையாளர்கள் 7 பொயர்களைத் தெரிவுசெய்து நல்ல சமூக அக்கறையுடன் செயற்பட்ட திரு நயினை விஜயன் சசிகலா தம்பதிகளையும் அவர்களுடன் ஒன்றிணைந்து  செயற்படும் சமூக சேவையாளர்களையும் வாழ்த்துவதில் பண்ணாகம்.கொம் இணையம் பெருமகிழ்வுடன் நன்றிகளை கூறுகிறது.


அன்றைய நிகழ்வின் விபரமும் படங்களும்


எசன் அறநெறித்தமிழ் பாடசாலையின் 15வது ஆண்டு விழா 2019.அமரர் சங்கீத பூஷணம் செல்வ சீராளன் அரங்கில் .!!. 

ஒரு கண்ணோட்டம்..!!!!

எசன் தமிழர் கலாச்சார நற்பணி மன்றத்தின் ஒருஅங்கமான அறநெறிப்பாடசாலையின் 15வது நிறைவு ஆண்டு விழா எசன் நகரில் வெகு சிறப்பாக 2ம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. பி.ப 2மணிக்கு மங்கல விளக்கினை ஏற்றியதோடு நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின.அறநெறிப்பாடசாலையின் நடன ஆசிரியை நாட்டியமணி திருமதி.நிஷா தர்சன் அவர்களின் மாணவிகள் வரவேற்பு நடனத்தை அளிக்க நிகழ்ச்சிகள் தொடர்ந்தன.மாணவர்களின் ஆடல்பாடல் பேச்சு என விழா களை கட்டி நின்றது. பாடசாலையின் சின்னஞ்சிறார்கள் அளித்த பாடல்கள் நடனங்கள் காவடி.நாடகம் , என அனைத்தும் ரசிக்கக்கூடியவையாக இருந்தன இவர்களை உருவாக்கிய ஆசிரியர்களுக்கு பாராட்டுக்கள்.நுண்கலைவகுப்புக்களில் பயிலும் மாணவர்களும் தங்கள் திறமையை வெளிக்காட்டத் தவறவில்லை தபேலா மிருதங்க ஆசிரியர்கள்நகுசாந், அனுசாந் நயினை விஜயன் ஆகியோரின் மாணவர்கள் போட்டி போட்டுக் கொண்டுஅளித்த மிருதங்க வாத்திய இசை விருந்து மிகச் சிறப்பாக அமைந்திருந்தது .
கலந்து கொண்டிருந்த பார்வையாளர்கள் ரசித்து பாராட்டிக் கொண்டிருந்ததை என் செவிகளால் கேட்க முடிந்தது. அறநெறிப்பாடசாலையின் நடன ஆசிரியை நாட்டியமணி திருமதி.நிஷா தர்சன் அவர்களின் மாணவிகளின் பாம்பு நடனம் பலரின் பாராட்டுக்களையும் பெற்றுக்கொண்டது.
சுரத்தட்டு வாத்திய இசை வழங்கிய மாணவர்களும் தாங்களும் சளைத்தவர்கள் அல்ல என இனிமையான இசை வழங்கி நின்றார்கள். அவர்களை உருவாக்கிய ஆசிரியர்களுக்கு பாராட்டுக்கள். தனியொருவராக சுரத்தட்டு இசை வழங்கிய யோசுவா அவர்களுக்கு நல்ல எதிர்காலம் உண்டு என்பதை அவரது இசையில் காணக்கூடியதாக இருந்தது. விழாவில் முத்தாய்ப்பு வைத்தநிகழ்ச்சியாக அமைந்தது பல்வேறு துறை சார்ந்த கலைஞர்கள் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டதாகும்.

எழுத்தாளர் பூவரசு ஆசிரியர் இந்துமகேஸ் .

கலைவிளக்கு பாக்கியநாதன் 

அறிவிப்பாளர் பாலா
நகைச்சுவை நடிகர்,கல்வியாளர் ,திரு. தர்மசோதிராஐன்
ஜெயந்தி நாதக்குருக்கள் சிவசாமிக்குருக்கள்,
விமர்சகர், ஊடகவித்தகர், பண்ணாகம் கந்தசாமி கிருஷ்ணமூர்த்தி ,
ஆசிரியை திருமதி இந்து தெய்வேந்திரம்
ஆகியோர் இந்த விருதுக்காக தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

விழாவில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த எசன் நகர பிதா திரு Thomas Kufen அவர்கள் அனைவருக்கும் பொன்னாடைப் போர்த்தி பாராட்டுப் பத்திரம் வழங்கி கெளரவித்தார்.பெர்லினிலிருந்து வருகைதந்த சிவச்செல்வர் சின்னையா சிவஞனசுந்தரம் அவ்ர்களின் வாழ்வியல்வழிகாட்டி நூல் அறிமுகமும் மதிப்பளிப்பும் சிறப்பாக நடைபெற்றது. .திருவாளர்கள் வாரித்தம்பி நவரட்ணம், நாகலிங்கம் ஷண்முகலிங்கம்,திருமதி.சரோஜினிதேவி தங்கரட்ணம் ஆகியோர் சமூக சாதனைப் பணியாளர்களாகப் பாராட்டப்பட்டனர்.ஆன்மீகச் சிந்தனைச் சொற்பொழிவாளர்கள் ,சிவவினோபன் ,ஹரிணி, ஹம் காட்சியம்பாள் ஆலயகுரு ,கவிமணி குகதாஸ், அகரம் ரவி, வெற்றிமணி ஆசிரியர் சிவகுமாரன்,தமிழர் அரங்கம் சபேசன் , ஆகியோர் வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்தனர்.முன்னாள் ஆசிரியை நவநிதி குணபாலசிங்கம், மற்றும் இநாள் ஆசிரியைகள் கலையரசி ரவீந்திரசிவம், மாணவ ஆசிரியிகள் செல்விகள் தாருண்ஜா தர்மகுலசிங்கம், ஆர்த்திகா ராஜேந்திரன், கலைவாணி ரவீந்திரசிவம், அகிஷா வேலுப்பிள்ளை,ஆகியோர் மதிப்பளிக்கப்பட்டனர்.எல்லாப்புகழும் நடன குழுவின் பவிரா,வினுஜா,தாரணி ,பிரகாஸ் தில்லையம்பலம் ஆகியோரின் துள்ளிசை நடனம் பார்வையாளர்களைக் கவர்ந்திருந்தது. வாழும்போதே கலைஞர்கள் கெளரவிக்கப்படவேண்டும் என்ற எண்ணம் கொண்ட திரு.திருமதி . நயினை விஐயன் அவர்களின் சிந்தனையில் உதித்ததே இந்த வாழ்நாள் சாதனையாளர் விருது இவர் போன்றவர்கள் உள்ளவரை எமது கலையும் கலாச்சாரங்களும் கலைஞர்களும் வாழ்ந்து கொண்டே யிருபார்கள். வயலின் வீணை இசை வழங்கிய கலைஞர்களும் பாராட்டுக்குரியவர்களே.இவர்கள் வயலின் வீணை இசைக்கலாஜோதி செல்வி.சஜினி நயினை விஜயன் அவர்களின் மாணவ மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது. காவடிச்சிந்து நடனத்தை கனகசபை நடனப்பள்ளி நடன ஆசிரியை திருமதி.சாந்ஜி துரையரங்கன் அவர்களின் மாணவிகள் சிறப்பாக வழங்கியிருந்தனர்.இனிமையான இசை வழங்கிசிந்தையை குளிர வைத்தாரகள் .சலங்கை ஒலி நாட்டியாலயத்தின் நடனமணிகள் ஆடிய நர்த்தனம் சிறப்பு நிகழ்ச்சியாக அமைந்தது .35நடனக்கலைஞர்கள் இணைந்து சிறப்பித்த இந்நிகழ்வு பார்வையாளர்களின் அமோக கரகோசத்தைப் பெற்றது.நிகழ்ச்சிகள் அனைத்தையும் திரு.திருமதி,நயினை விஐயனோடு இணைந்து கேதாரணி பாலா .கார்த்திகா சிவபாதம் கலையரசி ரவீந்திரசிவம் ஆகியோர் சிறப்பாக தொகுத்து வழங்கினார்கள்.விழா அனுசரணையாளர் அமிர்தானந்தசுரபி நந்தீஸ் உணவகத்தினரின் சுவையான உணவுகள் பார்வையாளர்களின் பசியைத் தணித்துக்கொண்டிருந்தன.அபிடெக்கோ அலங்காரம்,அசோகன் ஒலியமைப்பு, ஐரிஎன் படப்பிடிப்பு,ராம்ஜித் போட்டோ என அனைவரும் விழாவுக்கு வலுச்சேர்த்தனர். திரு.நயினைவிஜயன் அவர்களின் நன்றியுரையோடு விழா இனிதே நிறைவுற்றது.வாழ்க வளர்க எசன் அறநெறிப்பாடசாலை.


செய்தி -வாழ்நாள் சாதனையாளர் பாலா எசன்.


புது வருடப் பிறப்பு அன்று இரவு 12.01 மணி தொடக்கம் உறவுகள்,நண்பர்கள்,அயலவர்கள் என நேரடியாகவும் மற்றும் தொலைபேசி வழியாக வாய்வழி வாழ்த்துக்கள் கூறி வருவது வழக்கமாக இருந்தது. 
இது தற்போது வருடாவருடம் குறைந்து குறைந்து கரைந்து போய்விட்டது. இதற்கு முழுக்காரணம் சமூகவலைத்தளங்கள் என்பதே ஓரே ஒரு பதில்! வாய்வழி இல்லாமல் எழுத்தில் சுயமாக இல்லாவிட்டாலும் மற்றவர்களின் வாழ்த்தைப் பிரதி செய்து பலதடவைகள் பதிந்து தமது அன்பைப் பகிர்வதாக நினைத்து, இதயங்கள் பேசும் உண்மை அன்பை இழந்து வருவதை யாரும் உனர்வதாக இல்லை. இதனால் உறவுகள் உடைந்து விட்டதா அர்த்தம் அல்ல மாறா மனநெருடல்கள் கூடி உங்களை அறியாமல் நோய்கள் அதிகரிக்கும் வழிகள் அதிகரிக்கிறது. எனவே உறவுகளுடன், நண்பர்களுடன் வாய்வழியாக உரையாடுங்கள் மனம்விட்டுப் பேசுங்கள் முகநுலை விட்டு நேரடியாக முகம்பார்த்துக் கதையுங்கள். முகநூல் நல்ல பொதுத் தகவல் பரிமாற்றத்திற்கு நல்லதளம். உறவுகளின் இருப்பை அது நிறைக்காது. இதை வாசித்தால் ஒருதரம் மனதில் நேசியுங்கள் பின் யோசியுங்கள். 
நன்றி அன்புடன் ``ஊடகவித்தகர்`` பண்ணாகம் கிருஷ்ணமூர்த்தி.

யேர்மனியில் சைவசமயமும்

 தமிழ்மக்களும்

‘‘ஊடக வித்தகர்‘‘; பண்ணாகம் இக.கிருஸ்ணமூர்த்தி யேர்மனி 

‘கோவில் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டாம்‘‘; என நம் முன்னோரின் கூற்றுக்கு அமைவாக சைவர்களாகிய நாம் பலநாடுகளுக்கு புலம் பெயர்ந்து வாழ்ந்து வருகின்றபோதும் எமது மதங்களையும் கலாசார பண்பாடுகளையும் விட்டுவிடவில்லை என்ற நிலை எமக்கு மிகப் பெரும் பெருமையாக உள்ளது. புலம்பெயர்ந்தாலும் அந்தந்த நாடுகளில் 35 வருடங்களின் முன் தாம் வாழ்ந்த சிறிய இடங்களிலும் அரசினால் கொடுக்கப்பட்ட தங்குவிடுதிகளிலும் சிறிய அளவில் தெய்வப் படங்களைவைத்து தமது இடநெருக்கடிகள்இ பொருளாதார நெருக்கடிகள் எல்லாவற்றையும் கடந்து சிறு வீட்டின் அறைகளிலும் சில இடங்களில் நிலத்தின் கீழ் உள்ள அறைகளிலும் மக்கள் விரும்பிய தெய்வங்களின் பெயரில் அந்தந்த நாடுகளில் தமது வாழ்விடங்களில் புலம்பெயர்ந்த தமிழ் மக்களால் சைவம் மேம்;பட்டு வந்துள்ளது.
யேர்மனியின் பல பாகங்களில் முதலில் யேர்மனிய அரசால் அனுமதிக்கப்படாத ஒரு வழிபாட்டு இடமாக அமைத்திருந்தனர.; இங்கு தாமாகவே பூசைகளையும் கூட்டுப்பிரார்த்தனைகளையும் கிழமையில் ஒரு முறையும் சில இடங்களில் ஒவ்வொருநாழும் மாலைவேளைகளிலும் செய்துவந்தனர் அந்த காலங்களில் அந்தணர்கள் என பலர் இருக்கவில்லை சில இடங்களில் சில அந்தணர்களை அடையாளம் கண்டு அவர்களை அந்த வழிபாட்டு இடங்களுக்கு அழைத்து கிரிகைவழிபாடுகளையும் நடாத்தினர். கிரிகைகள் நடாத்துவதற்கான பொருட்கள் இங்கு இருக்கவில்லை ஒருசிலரின் முயற்சிகளினால் தமிழர் கடைகள் சில உதயமாகின அவர்கள் மூலம் வழிபாட்டு இடங்களுக்காக பொருட்கள் சில வரவழைக்கப்பட்டு சில வழிபாட்டு முறைகளும் படிப்படியாக வளர்ச்சி கண்டது. ஆரம்பகாலங்களில் எல்லாம்; தமிழ்மக்கள் எந்தவித பாகுபாடுமின்றி ஒரே நிலையான அகதிகள் உதவிகளைப்பெற்று இருந்தனர் அவர்களுக்கு தமது தாய்நாட்டை விட்டு வந்த மனவருத்தங்களையும் உறவுகளின் இழப்புகளையும் தாங்கிக் கொள்ளும் மனவலிமையை இந்த வழிபாட்டு இடங்களில் பெற்று சிறுது ஆறுதல் அடைந்தனர.; அதுமட்டுமல்லாது தமிழ்மக்கள் ஒன்று இணையும் இடமாகவும் தமது தகவல்களை பரிமாற புதிய உறவுகளையும் கண்டு மனம் தேறுவதற்கான இடமாகவும் கருதியமக்கள் வழிபாட்டு இடங்களைச் சுற்றிஉள்ள மற்றைய புதிய தமிழர்களைச் சந்திக்கும்போது இந்த வழிபாட்டு இடம்பற்றி கூறி அவர்களையும் அழைத்தனர் இதனால் அங்கு மக்கள் கூட்டம் பெருகியதால் காலப்போக்கில் சில இடங்களில் யேர்மனிய மக்கள் தமக்கு இவர்கள் இடையூறாக இப்பதாக கருதியதால் சமூகச்சிக்கல் தோன்றியது இதை சிலர் சிறந்த முறையில் யேர்மனிய சமூகஉதவி நிறுவனங்களின் உதவியைநாடி மாற்று இடங்களைப்பெற்று சட்டப்படியான அமைப்பாக பதிவு செய்தனர். ஆரம்பகாலங்களில் யேர்மனிய மொழியில் தேர்ச்சி பெற்றவர்கள் இருக்கவில்லை ஒருசிலர் தமது ஆங்கில அறிவுமூலம் சிலரை நண்பராக்கி மெழிவளம் பெற்று எம்மக்களுக்கு உதவிவந்தனர். இன்று யேர்மனியில் 30 க்கும் மேற்பட்ட ஆலயங்கள் மக்களின் பாரிய உதவிகள் மூலம் தொடர்ந்து இயங்கிவருகிறது பல ஆலயங்களில் சிறந்த முறையில் வழிபாடுகள் நடைபெற்று வருவதை யாவரும் அறிவார்கள்.
யேர்மனியில் தமிழ்மக்கள் 65;000 க்கும் மேற்பட்டவர்கள் வாழ்ந்து வருகின்றார்கள் இவர்களுள் 40000 க்கும் மேற்பட்ட மக்கள் சைவ சமயத்தவர்களாக வாழுகிறார்கள் இவர்கள் தாம்வாழும் இடங்களில் யேர்மனிய சட்டத்திற்கு அமைவாக ஆலயங்ளை அமைத்து மக்கள் ஒன்றிணைந்து நிர்வாக அமைப்பினுடாகவும் சில தனிப்பட்டவர்களின் ஆலயங்களாகவும் தற்போது திருவிழாக்களஇ; தேர்ப்பவனிகள்இ காவடிகள் இகற்பூரச்சட்டி நேர்திகள் என ஊர்வாசத்துடன் நடைபெற்று வருகின்றது. சிலர் ஒருபடி முன்நோக்கி பறவைக்காவடி வேண்டுதல்களையும் செய்து வந்தனர் இந்த நிகழ்வு ஒரு சில வருடங்கள் நடைபெற்றது.பின் யேர்மனி அரசால் பறவைக்காவடி நடைமுறைக்கு அனுமதி மறுக்கப்பட்டது. 
யேர்மனியில் உள்ள ஆலயங்களை மூன்று வகைப்படுத்தலாம் அதாவது மிக மிக அதிகம் மக்கள் கூடும் ஆலயமாவும். ஓரளவு அக்கம் பக்கம் உள்ள நகர மக்கள் கூடும் ஆலயமாகவும் சில அந்தந்த நகரமக்கள் மட்டும் கூடும் சிறு ஆலயமாகவும் உள்ளது. இதில் ஐரோப்பா தமிழ் மக்கள் பெரும்பாலோராலும் பெருமளவு யேர்மனிய மக்கள் வந்து செல்லும் ஆலயமாகவும் 15 திருவிழாக்களையும் மூன்று காலப் பூசைகளையும் மிகப்பெரிய கோபுரம் அமைந்த ஆலயமாகவும் மக்களின் உதவியில் உருவாகிய ஆலயம் யேர்மனி கம் காமாட்சி அம்பாள் ஆலயமாகும.; 
திருவிழாக்கள் மட்டுமல்லாமல் மக்கள் நலம்சார்ந் மதம் சார்ந்த அனைத்து கிரிகைகளும் விழாக்கழும் திருமணச் சடங்குகளும் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இந்த சிறப்பான நடவடிக்கைகளை பார்த்து வந்த பல யேர்மனிய மக்கள் சைவசமயத்தை தமது மதமாக ஏற்று நல் அனுட்டானங்களுடன் இருந்துவருகின்றார்கள். இப்படியாக வெளிநாடுகளிலும் சைவம் மேம்படுவதற்கு தமிழ் மக்களின் புலப்பெயர்வு பெரும்வாய்பளித்திருக்கிறது என்பது பெருமைப்படவேண்டியுள்ளது.
புலம்பெயர்நாடுகளில் அடுத்த சந்ததியினர் இதைத் தொடர வாய்ப்புகள் இருக்குமா? தற்காலத்தின் நடைமுறைகளை பார்க்கின்றபோது பெரும்பாலான இளம் சமூகத்தினரின் மதம்சார்ந்த நம்பிக்கைகளில் அதிக கவனம் செலுத்தாது வருவது புலம்பெயர்தேசங்களில் ஆலயங்களும் சமயமேம்பாடுகளும் எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்பது கவலைப்படவேண்டிய விடயமாகும். இந்த விடயம் மிகவும் கூர்ந்து கவனிக்கப்படவேண்டியிருக்கிறது. இந்த விடயங்களில் ஆலயங்களின் நிர்வாகங்கள் பல கவலைப்படாமல் வியாபார ரீதியான கண்ணோட்டங்களில் பணம் சம்பாதிப்பதையும் போட்டிபோட்டு ஆயலங்களைக்கட்டுவதிலும் முனைந்து வருகின்றார்கள் இப்படியான போக்கு எதிர்காலத்தில் ஆலயங்கள்; மக்கள் அல்லாத காட்சி இடங்களாக இருக்கும் நிலையை தடுத்து நிறுத்துவதற்காக இப்போதே அதற்கான அடித்தளங்களை ஆணித்தரமாக இடுவதற்கான முன்னெடுப்புக்களை ஆலய நிர்வாகங்களும் சமயம்சார்ந்த அமைப்புக்களும் இளம் சமூகத்தைநோக்கி செயல்களில் இறங்கி எதிர்காலத்திலும் சைவம் வெளிநாடுகளில் நிலையாக்கவேண்டும் என்பதே எம்மக்களின் உயரிய கருத்தாகும்.
நன்றி 

பண்ணாகம் இணையம் நன்றி பகிர்வதில் 


பெருமகிழ்வடைகின்றது.


எமது பண்ணாகம் இணையத்தின் பிரதம ஆசிரியர் திரு.இக.கிருஷ்ணமூா்த்தி அவர்களுக்கு யேர்மனி நுண்கலைக் கல்லுாரியால்  `` ஊடக வித்தகர்``  என்னும் உயரிய விருதை வழங்கி கெளரவித்த வேளையில்  பல இணைய அபிமானிகளும், நண்பர்களும்  முகநுாலிலும், மின்னஞ்சலிலும்,  தமது தகவல் பக்த்திலும், தொலைபேசியிலும்,  நேரடியாகவும், வைபரிலும் உலகம் எங்குமிருந்து வாழ்த்துக்களை கூறிய வண்ணம் இருக்கின்றார்கள். பலர் தமது முகநுாலின் முன் பதிவில் பதிவிட்டும் மதிப்பளித்திருந்தார்கள்  மற்றும் இவ்விருதை வழங்க தெரிவு செய்தவர்களுக்கும்  வழங்கிய நயினை விஜயன் தமிழருவி நிர்வாகத்தினருக்கும்  எமது உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.


நன்றியுடன்

பண்ணாகம் இணைய நிர்வாகத்தினர்.

 

நேரடியாக தமது Facebook  பக்கத்தில் அன்புள்ளங்களின் பதிவுகள் சில  ....... 

இவர்களுக்கும் நன்றிகள் பல

எசன் நகரில் வாணிவிழா கலைமாலை

யேர்மனி  நுண்கலைக் கல்லுரி மற்றும் எசன் தமிழ்கலாச்சார நற்பணிமன்றத்தினரால் 30. 9.2017 இல் 32 வது ஆண்டு வாணிவிழா  கலைமாலை

தமிழருவி விருது 2017லில் 
``ஊடக வித்தகர்´´ விருதுக்கௌரவம்    பண்ணாகம்  பிரதம ஆசிரியர் திரு  கிருஷ்ணமூர்த்தி அவர்கட்கும் ,  ``ஊடகத்தென்றல் `` விருதுக்கௌரவம்    
எஸ்.ரி-எஸ்  இணைய திரு.தேவராசா அவர்கட்கும்  வழங்கப்பட்டது
1. Oktober 2017

யேர்மனி  நுண்கலைக் கல்லுரி மற்றும் எசன் தமிழ்கலாச்சார நற்பணிமன்றத்தினரால் 30. 9.2017 இல் 32 வது ஆண்டு வாணிவிழா  கலைமாலை நிகழ்வில்     பண்ணாகம்.கொம்  இணைய பிரதம ஆசிரியர்  திரு.   கிருஷ்ணமூர்த்தியும் அவர்பாரியாரும்    சிறப்புப்பாக தமிழ்கலாச்சார நற்பணிமன்றத்தி ஷதிருனரால் கௌரவிக்கப்பட்டு ஊடகவித்தகர் என்ற கௌரவும் திரு ந‌யினை விஐயனால்  மக்கள் சார்பாக வழக்கப்பட்டுள்ளது என்பது சிறப்புக்குரியது,  இதேபோன்று   எஸ்.ரிஎஸ் இணைய ஆசிரியரும்  இசைஅமைப்பாளருமான  திரு தேவராசா அவர்கட்கு  ஊடகத்தென்றல்  என்ற கௌரவும் திரு ந‌யினை விஐயனால் மக்கள் சார்பாக வழக்கப்பட்டுள்ளது என்பதும் சிறப்புக்குரியது.

 விழா அரங்கில் பல்சுவை நிகழ்வுகள்தமிழ்கலாச்சார நற்பணிமன்றத்தில் கலைகளை கற்றவர்கள் மேடைநிகழ்வுகளை வழங்க  தாளவாத்தியங்கள் வீணை, வயலின், சுரத்தட்டு என்று கற்றதை சிறப்புற இளம் கலைஞர்கள் பார்வையாளருக்கு நிகழ்வாக்கியது மிகச்சிறப்பு இதனுடன் நடனங்கள் இளையோர் நடிப்பில் இருநாடகங்கள் என வந்தோர் சிறப்பு எனச்சொல்லும் அளவுக்கு நிகழ்வுகள் அமைந்திருந்தது

இதில் இந்தியாவில் வந்திருந்தவரும் எமது பக்கவாத்தியத்தில் சங்கீத கச்சேரிஎமது சிறார்களின் வாய்ப்பாட்டு என சிறப்புற மேடையில் இடம்பெற்றது,

இதைஎல்லாம் செயல்வடிவமாக்கிய ந‌யினை விஐன் குடும்பத்தாரின் கலையார்வம் அவர்களின் அற்றலின் சிறப்பால் இன்நிகழ்வு சிறப்புக்கண்டது

இறுதி நிகழ்வாக பட்டிமன்றம் நடைபெற்றது  அதனைத் தொடர்ந்து பிரதம விருந்தினர்களால் மாணவர்களுக்கான  பரீட்சை சித்திச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.  2.30 மணிக்கு ஆரம்பமான நிகழ்ச்சிகள் இரவு 23 மணியளவில் நிறைவுகண்டது.

எமக்கு கிடைத்த  விழாவின்  சில காட்சிகள் 

எங்கள் தமிழினம் தந்த சித்த மருத்துவத்தை எங்கள் வாழ்க்கையில் பின்பற்ற உறுதி பூணுவோம். 
ஓர் இனமும் மொழியும் வாழவேண்டுமாயின் அதன் பெருமைகளை ஏனையவர்கள் தேடியறிய வேண்டுமாயின் முதலில் அந்த மொழியும் இனமும் சார்ந்தவர்கள் அதனைப் போற்றிப் பெருமைப்பட வேண்டும். 
அவ்வாறு செய்யாதவிடத்து குறித்த இனமும் மொழியும் காலச்சக்கரத்தில் தன்னிலை இழந்து போகும் என்பதே உண்மை. இந்த நிலைமைக்கு எங்கள் தமிழ் மொழியும் வந்து விடுமோ! என்ற ஏக்கம் நம்மிடம் இருக்கவே செய்கிறது. உலக மொழிகளில் தமிழ் மொழி காலத்தால் முந்தியது. எழுத்திலும் பேச்சிலும் வாழ்ந்து கொண்டிருப்பது. உலகின் பழைமைமிகு மொழிகளுக்கு வழங்கப்படும் செம்மொழி அந்தஸ்து எங்கள் உயிரினும் மேலான தமிழ் மொழிக்கும் கிடைத்துள்ளது. இருந்தும் எங்கள் மொழியை எங்கள் இனத்தை நாங்கள் முதலில் போற்றவும் மதிக்கவும் கெளரப்படுத்தவும் முன்வர வேண்டும். இதன் ஓர் அம்சமாக எங்களின் பண்பாட்டை, கலாசாரத்தை, தெய்வீக வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது கட்டாயமானதாக இருக்கும். கூடவே எங்கள் தமிழ் மொழி தந்த சித்த மருத்துவம் என்பது இன்று உலகம் வியக்கும் அளவில் மகத்துவம் கொண்டதாக உள்ளது. இருந்தும் சித்த மருத்துவத்தின் சிறப்பை மறந்தவர்களாக நாம் வாழ்வது வேதனைக்குரியது. தமிழ் மக்களின் உடல்நலத்தையும் ஆரோக்கியத்தையும் பாதுகாத்த சித்த மருத்துவம் இன்று ஆங்கில மருத்துவத்தின் மோகத்தில் எங்களால் புறந்தள்ளப்பட்டுள்ளது. உண்மையில் சித்தமருத்துவத்தின் சிறப்பே எங்கள் மூதாதையர்களின் ஆரோக்கியத்துக்கும் ஆயுள் பலத்துக்கும் பதினாறு செல்வத்துக்கும் அடிப்படையாக இருந்தது. உணவை மருந்தாகத் தந்து எங்களை நோயற்றவர்களாக வாழ வைத்த சித்த மருத் துவத்தை தூக்கியயறிந்துவிட்டு இன்று மாதந் தோறும் வைத்தியசாலைகளில் ஆங்கில மாத் திரைகளைப் பெற்று நாளும் அதனை விழுங்கும் நோயாளிகளாக நாம் மாறிவிட்டோம். இந்த நிலைமை நமக்குத் தேவைதானா என்பதை நாமே சிந்திக்க வேண்டும். இந்தச் சிந்தனை மேலெழும்போது சித்த மருத்துவத்தின் மகத்துவம் உணரப்படுவதாக இருக்கும். இதனை ஊக்குவிப்பதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவத்துறையினர் மேற்கொண்டுள்ள சித்த மருத்துவக் கண்காட்சி அமையும் என்பதில் ஐயமில்லை. அந்த வகையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த மருத்துவத்துறையினர் மிகுந்த அர்ப்பணிப்புடன் நடத்துகின்ற சித்த மருத்துவக் கண்காட்சியை பார்வையிடுவதுடன் எங்கள் தமிழினம் தந்த சித்த மருத்துவத்தை எங்கள் வாழ்க்கையில் பின்பற்றவும் உறுதி பூணுவோம். இஃது எங்கள் மொழியை - எங்கள் இனத்தை உலகறிய வைக்கும். இது சத்தியம்.
மனிதன் இறந்த பின் மனித உடலுக்கு என்ன நடக்கிறது

மனித உடலில் உள்ள உயிர் பிரிந்த உடன் நமது இயற்கை, தன்னுடன் நமது உடலையும் சேர்த்து நடத்துவது கிடையாது. இயற்கையான முறையில் மனித உடல்கள் அழிந்து போகும் காலங்கள் போய் தற்போது நாம் பயன்படுத்தும் நவீன சடங்குகளால் இத்தகைய இயற்கை முறையில் அழிவதை நாம் நேரில் காண முடியாமல் போகின்றது. மண்ணில் புதைத்து அல்லது எரித்து உடலை நாம் தகனம் செய்யும் முறை பெரிய அளவில் ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும், இயற்கையாக அழுகி மண்ணோடு மண்ணாக தானே அழிவதை விட, மேல் கூறிய முறை நல்லது தான்.
 முன்பு மனிதன் இறந்த உடலை தூரத்தில் சென்று வைத்து விட்டு, அது தானே அழுகி மறைந்து போகும்படி விட்டு வருவார்கள். அது மட்டுமல்லாமல் 2003 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிப்புகளின் படி பண்டைய காலத்தில் மனிதர்கள் இறந்தவர்களை புதைத்ததற்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இது வடக்கு ஸ்பெயின் நாட்டில் 350,000 ஆண்டிற்கு முன் நடந்த சம்பவத்தில் விளக்கப்பட்டுள்ளது. இங்கு உடல் மக்கிப் போகும் போது என்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன? உடல் இறந்த பின் என்ன ஆகும் என்று 5 வித்தியாசமான விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. திசுக்கள் வெடித்து திறக்கும் இறந்த சில நிமிடங்களில் மனித உடல் அழுகத் துவங்கி விடுகின்றது. இதயத் துடிப்பு நின்றவுடன் உடல் குளிர்ந்த நிலைக்கு செல்கின்றது. இதை ஆல்கோர் மோர்டிஸ் என்று கூறுவார்கள். உடம்பின் வெப்பநிலை 1.5 டிகிரி பாரன்ஹீட் ஆகி ஒரு மணி நேரத்திற்கு பின் அறையின் வெப்பநிலைக்கு வருகின்றது. இந்த நேரத்தில் இரத்தத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடு அமிலத்தன்மையை அதிகப்படுத்துகின்றது. இதனால் திசுக்கள் வெடித்து, அதன் என்சைம்ஸ்களை வெளியிட்டு அவற்றை தன்னை தானே விழுங்கச் செய்கின்றது. வெளிர் மற்றும் ஊதா நிறத்திற்கு மாறுவது புவி ஈர்ப்பானது தனது முதல் காலை, மனிதன் இறந்த உடன் பதிக்கின்றது. அதாவது இறந்தவுடன் முழு உடம்பும் வெளிர் நிறத்திற்கு மாறி விடுகின்றது. அப்போது இரத்த அணுக்கள் கனமாக தோன்றுவதால், அவை தரையின் பக்கமாக ஈர்க்கப்படுகின்றன. ஆகையால் இரத்த ஓட்டம் நின்றிருக்கும் இந்த சமயத்தில், உடம்பின் பின்பகுதியில் ஊதா நிறத்தில் புள்ளிகளும் படைகளும் ஏற்படுகின்றன. இதை லிவர் மார்டிஸ் என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். அது மட்டுமல்லாமல் உடம்பில் எப்போது உயிர் போயிற்று என்றும் இதை கொண்டு தான் மருத்துவர்கள் கூறுவார்கள். உடலை இறுகச் செய்யும் கால்சியம் இறந்த உடல் இறுக்கமாகவும், அசைப்பதற்கு கடினமாகவும் இருக்கும். இதை ஆங்கிலத்தில் ரீகர் மார்டிஸ் என்று கூறுவார்கள். இறந்து மூன்று அல்லது நான்கு மணி நேரத்திற்கு பின் இந்த செயல் ஆரம்பிக்கின்றது. இதை தொடர்ந்து 12 மணி நேரத்தில் அதன் உச்சத்தையும் 48 மணி நேரத்தில் செயல் இழந்தும் போகின்றது. இது ஏன் நடக்கின்றது? தசைகளை சுற்றி உள்ள மென்படலங்களில் பம்ப் இருக்கின்றது. இறந்த பின்னர் அது செயலிழந்த கால்சியத்தை அதிக அளவில் பாயச் செய்து, உடம்பில் உள்ள தசைகள் எல்லாம் இறுகிய நிலையில் வைக்கிறது. இது தான் ரீகர் மார்டிஸ். தன்னைத் தானே செரித்துக் கொள்ளுதல் உடம்பு அழுகுவது பல படிகளை கொண்ட அழியும் முறையாகும். ரீகர் மோர்டிஸ் நிலை மெதுவாகவும் படிப்படியாகவும் நடப்பதால் அது முடியும் போது உடம்பு அடங்கி விடுகிறது. அதாவது அது தன்னைத் தானே அழித்துக் கொள்ள தயாராகி விடுகிறது. அதற்கு கணையம் தனக்குள் உள்ள என்சைம்களை வெளியேற்றி உடல் தன்னையே அழித்துக் கொள்ள உதவுகிறது. இதர நுண்கிருமிகள் இதனுடன் சேர்ந்து இந்த காரியத்தை விரைவுபடுத்துகின்றன. இதனால் வயிற்றின் கீழ் உள்ள உடம்பு பச்சை நிறத்திற்கு மாறி விடுகின்றது. மெழுகால் மூடப்படுவது உடல் அழுகிய நிலையில் உடம்பின் எலும்பு மட்டும் மீதமாகின்றது. ஆனால் சில உடல்கள் இந்த நிலைக்கு பதிலாக மெழுகால் மூடப்படுகின்றன. உடல் குளிர்ந்த மண் அல்லது குளிர்ந்த நீரை தொடர்பு கொண்டால் அடிப்போசியர் என்ற ஒரு மெழுகு பேன்ற கொழுப்பு மிக்க பொருள் உருவாகின்றது. இது பாக்டீரியாக்களால் உருவாக்கப்படுகின்றது. இந்த படலம் உள்ளிருக்கும் உறுப்புகளுக்கு பாதுகாப்பாக இருக்கின்றது. இறுதியாக புதைக்கப்பட்டாலும், எரிக்கப்பட்டு கரைக்கப்பட்டாலும், நாம் இறுதி சடங்கிற்கு பின் மண்ணையே சென்று சேர்கின்றோம். சிலர் மெழுகாக மாறக்கூடும்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


பண்ணாகம்.கோம் ஆசிரியர் திரு.கிருஷ்ணமூர்த்தி 2 வாரங்களுக்கு முன் ஜெர்மனி எஸ்ஸன் நகரில் நடைபெற்ற திருக்குறள் மாநாட்டில் வாசித்தளித்த கட்டுரையை நமக்காக வழங்கியுள்ளார். அதனை பகிர்ந்து கொள்கிறேன்.
-டாக்டர் சுபாசினி - மலேசியா


திருக்குறளும் எதிர்காலச்சந்ததியும்
இக.கிருஷ்ணமூர்த்தி, எஸ்ஸன், ஜெர்மனி

வள்ளுவர் கண்ட திருக்குறள் கடைச்சங்க காலமான கி.மு. 300 க்கும் கி.பி. 250 க்கும் இடைப்பட்ட காலத்தில் மதுரையை நெடுஞ்செழியன் எனும் பாண்டிய மன்னன் ஆண்ட பொழுது வள்ளுவர் என்ற நபர் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது.  திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளை தமிழ்ச்சங்கத்தில் அரங்கேற்றம் செய்ய மிகவும் சிரமப்பட்டதாகவும் முடிவில் ஔவையார் துணையோடு மதுரையில்  அரங்கேற்றியதாகவும் நம்பப்படுகிறது. 

திருக்குறளில் முதலாவது  ஈரடியான ‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு’ என்று தொடங்கி 1330  ஈரடி குறளில் உலகத் தத்துவங்கள் அனைத்தையும் புகுத்தி ‘திருக்குறள்’ என்னும் தமிழ் அமுதை மக்களுக்கு எடுத்துச் சொன்னவர் திருவள்ளுவர். இதை ஔவையார் மிக சிறப்பாக அணுவைத்துளைத்து எழுகடலையும் அதில் புகுத்தினால் போல் என அதை மேம்பாட்டை சுருக்க விளக்கினார் வள்ளுவர் உலகளாவிய தத்துவங்களைக் கொண்ட திருக்குறளை  உலக இலக்கிய அரங்கில் எல்லா மக்களால் ஏற்கப்பட்ட நுாலாக தமிழ்மொழிக்கென்று ஓர் உயர்ந்த இடத்தை நிலைப்பெறச்செய்தவர். இவர் உலக மக்களால்;, ‘தெய்வப்புலவர்’, ‘பொய்யில் புலவர்’, ‘நாயனார்’, ‘தேவர்’, ‘செந்நாப்போதர்’, ‘பெருநாவலர்’, ‘பொய்யாமொழிப் புலவர்’ என்றெல்லாம் பல பெயர்களில் அழைக்கப்படுகிறார். அவர் எழுதிய திருக்குறள்  பேதங்களின்றி காலம் கடந்தும் பொருந்துவது போல் கூறி உள்ளதால் திருக்குறளை சிறப்பிக்கும் விதமாக ‘உலகப் பொது மறை’, ‘முப்பால்’, ‘ஈரடி நூல்’, ‘உத்தரவேதம்’, ‘தெய்வநூல்’, ‘பொதுமறை’, ‘பொய்யாமொழி’, ‘வாயுறை வாழ்த்து’, ‘தமிழ் மறை’, ‘திருவள்ளுவம்’ போன்ற பல பெயர்களால் சிறப்பித்து அழைக்கின்றனர்.

திருவள்ளுவர் அவர்களின் பிறப்பு மற்றும் பிறப்பிடத்திற்கான சரியான சான்றுகள் இதுவரை இல்லை என்று தான் கூறவேண்டும். ஏனென்றால் அவர் கி.மு.31 ஆம் ஆண்டு பிறந்திருக்கிறார் என்றும் மதுரையில் பிறந்ததாகவும் சென்னையில் உள்ள மயிலாப்பூரில் பிறந்ததாகவும் சிலரும் கூறுகின்றனர். மேலும் அவர் ஆதி – பகவன் என்ற பெற்றோருக்குப் பிறந்ததாகவும் சிலர் சொல்கின்றனர். ஆனால்  இவை எதுவுமே உறுதிப்படவில்லை. மேலும் சிலர் அவர் ஒரு கிறித்துவர் என்றும் சமண மதத்தவர் என்றும் பவுத்தர் என்றெல்லாம் கூட பொய்யான தகவல்களைப் பரிமாறுகின்றனர். உண்மையில் அவர் ஒரு சைவனாகத்தான் இருந்திருக்கிறார். திருவள்ளுவரின் சமயம் சார்ந்த கருத்துகள் அனைத்தும் சைவ சித்தாந்தத்தை  விளக்குவதைப் பற்றியே எழுதியுள்ளார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் கருத்தியல் கண்காணிப்பாளர் தேர்வுத்துறை முன்னோடியான சோ. சண்முகம் அவர்கள் திருக்குறளில் சைவ சமயம் எனும் கட்டுரையில் திருக்குறளில் சைவ சமயக் கருத்துகள் நிரம்பியுள்ளன என்கிறார்.
ஈரடிகளில் உலகத் தத்துவங்களை சொன்னதால் இது ‘ஈரடி நூல்’ என்றும் அறம், பொருள், இன்பம் அல்லது காமம் என்னும் முப்பெரும் பிரிவுகளைக் கொண்டதால் ‘முப்பால்’ என்றும் அழைக்கப்படும் இந்நூல் மனிதர்கள் தம் அகவாழ்விலும் புற வாழ்விலும் இன்பமுடனும், இசைவுடனும் நலமுடனும் வாழவும் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்கியிருக்கிறது..இந்நூல் அறத்துப்பால், பொருட்பால் மற்றும் காமத்துப்பால் என்னும் மூன்று பிரிவுகளைக்கொண்டது

 அறத்துப்பால்:- முதல் பிரிவான ‘அறத்துப்பாலில்’ மனசாட்சி மற்றும் மரியாதை நல்ல நடத்தை போன்றவற்றை பாயிரவியல் இல்லறவியல், துறவறவியல், ஊழியல் என்ற உட்பிரிவுகளில் தெளிவாக எடுத்துரைக்கிறார்.

 பொருட்பால்:- இரண்டாவது பிரிவான ‘பொருட்பாலில்’ உலக விவகாரங்களில் எவ்வாறு சரியான முறையில் நடந்து கொள்வது என்பதை அரசியல், அமைச்சியல், அங்கவியல், ஒழிபியல் போன்ற உட்பிரிவுகளில் விளக்கியுள்ளார்.

 இன்பத்துப்பால்:- மூன்றாவது பிரிவான ‘இன்பத்துப்பால்’ அல்லது ‘காமத்துப்பாலில், ஆண்கள் மற்றும் பெண்களுக்கிடையேயான காதல் மற்றும் இன்பத்தைத் தெளிவாக களவியல், கற்பியல் என்ற தலைப்புகளில் எடுத்துரைக்கிறார்.

முதல் பிரிவில் 38 அத்தியாயங்களும் இரண்டாவது பிரிவில் 70 அத்தியாயங்களும் மூன்றாவது பிரிவில் 25 அத்தியாயங்களும் உள்ளன. ஒவ்வொரு அத்தியாயத்திலும் பத்து ஈரடி குறள்கள் என மொத்தம் 1330 குறள்கள் உள்ளன. திருக்குறளில் உள்ள அனைத்து கருத்துகளும் உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் பொருந்துவதாக உள்ளது. இந்நூல் ஏறக்குறைய 2000 ஆண்டு பழமையானது என்று கணிக்கப்பட்டாலும் இதை இயற்றப்பட்ட காலம் இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை. ஆனால் அதன் பெறுமதியறிந்து திருக்குறள் இதுவரை 80 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டிருக்கிறது. என்பது தமிழிற்கு பெருமையே ஆகும்.

இன்றைய உலகில் எதிர்காலச் சந்ததிக்கு இன்றியமையாததாக திகழ்வது  கல்வி, பண்பு, இல்லறம் ஆகும். எந்தவொரு சமூகத்தினரும் இக்கல்வியைக் கற்பதிலிருந்து விலகிச் செல்வது இன்றைய நவீன உலகில் மிகவும் அரிதாகக் காணப்படுகிறது. ஏனெனில் கல்வியின் சிறப்பை அனைத்து சமூகங்களும் புரிந்துள்ளன. இதனால் தான் இன்று கல்வியானது மனிதனின் அறிவுக்கு அத்தியாவசிய தேவையாக இருக்கிறது கல்வியின் சிறப்புப் பற்றி கூறும்போது கல்வி கற்றவன் எந்த இடத்திற்குச் சென்றாலும் அவன் பிற சமூகத்தால் மதிக்கப் படுகின்றான். இதற்குக் காரணம் அவன் கற்ற கல்வியே ஆகும். இதனையே திருவள்ளுவர் மிகவும் அழகாக வர்ணித்திருக்கிறார்.

ஒருவன் தான் எவ்வளவு கல்வி கற்றாலும் அதனை செயல் வடிவில் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அவன் கற்ற கல்வியின் பயன் அவனுக்குக் கிடைக்கும். இல்லாவிடில் அவன் கற்ற கல்வியின் பயன் ஒன்றும் இல்லாமல் போய்விடும். இதனையும் திருவள்ளுவர் தனது திருக்குறளின் ‘கல்வி’ என்ற அதிகாரத்தின் முதலாவது குறளில் தெளிவாகக் கூறுகின்றார்.
‘கற்க கசடறக் கற்பவை கற்ற பின் 
நிற்க அதற்குத்தக’ 

என்று கூறுவதிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்.
‘எண்’ என்று சொல்லப்படுவதும் ‘எழுத்து’ என்று சொல்லப்படுவதும் இவை இரண்டினையும் அறிந்தோர் சிறப்பு மிக்க மக்களின் உயிர்களுக்கு கண் என்று சொல்லப் படுவர். இந்த அளவிற்கு கல்வியின் சிறப்பு எடுத்துரைக்கப் படுகின்றது.

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்.
கற்றவரின் நிறப்புப் பற்றி கூறும் போது ஒருவனின் முகத்திலுள்ள கண்ணானது கற்றவருக்குரிய அடையாளம் என்று சொல்லப்படுகிறது. அதே கண் இல்லாதவருக்கு முகத்தில் இரண்டு புண் இருப்பதாக குறிப்பிடப்படுகின்றது. இதன் மூலம் கல்வியின் சிறப்பும் அதனைக் கற்றவனின் சிறப்பும் கூறப்படுகின்றது.
மனிதன் ஆயுள் முழுவதும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். கற்க மறுப்பவன் வாழ மறுப்பவன் ஆகின்றான். ஒருவன் தான் கற்ற கல்வியின் இன்பத்தை உணர்ந்தானாயின் அவன் மீண்டும் கற்பதையே விரும்புவான். இது கல்வியின் பண்பாக கருதப்படுகிறது.
கல்வி தொழிலுக்கும் வழி காட்டுகிறது. கல்வி என்பது வாழ்க்கை வாழ்வதற்காக உதவும் கருவியாகும். அறிவியலும் சமூகமும் வாழ்நாள் முழுவதும் தொடரும் கருவியாகும். வாழ்க்கையின் நோக்கம் என்ன என்பதை இனங்கண்டு அதற்கேற்ப கற்க வேண்டும். வாழ்க்கையை நெறிப் படுத்தவும் மேம் படுத்தவும் கல்வியை பயன்படுத்த வேண்டும். கல்வி கற்றவரிடம் ஒழுக்கம் பண்பு நேர்மை நீதி இவைகள் அனைத்தும் ஒருங்கே அமைந்து காணப்படும். எனவே கல்வி யானது ஒரு மனிதனின் முக்கிய தேவை யாக இருக்கிறது. எந்தவொரு சமூகத்திலும் ஆண் பெண் என்ற வேறுபாடின்றி கல்வி இல்லாமல் இருப்பது இக்காலத்தைப் பொறுத்த வரை மிகவும் தாழ் வாகவும் இழிவாகவும் கருதப்படும். 

வெளிநாட்டவருக்கு தமிழரின் விருந்தோம்பல் மிகவும் ஒரு அதிசயமாக பார்க்கப்படுகிறது தற்போதய எதிர்காலச்சந்ததிகள் வெளிநாட்டு கலாச்சாரத்தில் மூழ்கி விருந்தோம்பலைத் தொலைத்துவிடாமல் காக்க பலகுறள்கள் எடுத்தியம்புகின்றது வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை  பருவந்து பாழ்படுதல் இன்று விருந்தினரை நாள்தோறும் வரவேற்று மகிழ்பவரின் வாழ்க்கை அதன் காரணமாகத் துன்பமுற்றுக் கெட்டொழிவதில்லை. என இக் குறள் விளக்குகிறது
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து 
நல்விருந்து ஓம்புவான் இல்.

நல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டில் மனமகிழ்ந்து திருமகள் வாழ்வாள். இதேபோன்று பண்பைப்பற்றியும் வள்ளுவர் எமது இளையோருக்கு ஏற்றவகையில் கூறியிருக்கிறார். பண்பை அவர் தம்  பண்பான குடும்பத்தில் கற்றுக் கொள்ளவேண்டும் என கூறுகிறது.

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும் 
பண்புடைமை என்னும் வழக்கு. 
எல்லாரிடமும் அன்புள்ளவனாக வாழ்வது. உலகத்தோடு ஒத்து வாழும் குடும்பத்தில் பிறந்திருத்தல் இவை இரண்டும் பண்புடைமை என்னும் நல்ல வழிகளாகும். தற்காலத்தில் அன்புபை விட பணமே அதிக சிறந்தது என எண்னுகின்றவர்களால் அன்பு சீரழிகிறது.

நயனொடு நன்றி புரிந்த பயனுடையார் 
பண்புபா ராட்டும் உலகு.

நீதியையும் அறத்தையும் விரும்பிப் பிறர்க்கும் பயன்படுபவரின் பண்பினை உலகத்தவர் சிறப்பித்துப் பேசுவர்.

அதேபோல் குடும்பவாழ்வு பற்றி கூறுகிறார். எதையும் முகம் கொடுத்து வாழவேண்டும் அப்போது நல்லகுடும்பமாக வழலாம் என்கிறார் வள்ளுவர். ஆனால் இன்றைய சமூகத்தில் படித்த பெண்களை புறம்தள்ளும் செயலாக உள்ளது என பெண்கள் போர்கொள்கிறார்கள். இவைபற்றிய சில குறள்கள்.

இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும் 
நல்லாருள் நாணுத் தரும்.

நற்குணமில்லாத மனைவியைத் திருத்த முனையாமல் பணிந்து போகிற கணவன் நல்லோர் முன்னிலையில் நாணமுற்று நிற்கும் நிலைக்கு ஆளாக நேரிடும். என குறள் கூறகிறது  எனவே கணவன் தனது மனைவியை திருத்தி ஒழுங்கமைப்பது என்பது சிக்கலானவிடயமாகி தற்போது உள்ளது. இதனால் பலர் வாழ்வு முறிந்து போய்விடுகிறது.
இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும் 
நல்லார்க்கு நல்ல செயல்.

மனைவிக்கு அஞ்சி வாழ்கின்றவன் எப்போதும் நல்லவர்க்கு நன்மையான கடமையைச் செய்வதற்கு அஞ்சி நடப்பான். வள்ளுவர் மனைவிக்கு அஞ்சாது வாழ் என்கிறார் இதனால் இக்காலத்தில் பல பெண்கள் பெண்விடுதலை என்று குடும்பப் பிரிவுகள் ஏற்படுகிறது.. 

நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள் 
பெட்டாங்கு ஒழுகு பவர்.
மனைவி விரும்பியபடி செய்து நடப்பவர் தம்முடைய நண்பர்க்கும் உறவிற்கும் உற்ற குறையையும் செய்து முடிக்கமாட்டார்; அறத்தையும் செய்யமாட்டார். இதனால் தற்காலத்தில் தனது சொந்தங்களையும் நண்பர்களையும்  இழந்து தவிப்பான். மனைவியிடம் எதிர் வாதம் செய்தால் நின்மதியை இழக்கின்றான் இது எதிர்காலச்சந்ததிக்கு பொருந்துமா? என்ற கேள்வி எழுகிறது.

திருக்குறளில் தற்காலத்தில் படித்த இளம்சந்ததிகளுக்கு பலவித அறிவுரைகளை வழங்கினாலும் படித்த பெண்களால் ஏற்கப்படாத சில குறள்களும் உள்ளது அவை பெண் ஆணுக்கு கட்டுப்பட்டு ஒழுக்கம் ஒற்றமையாக வாழ வேண்டும் அப்போது குடும்பம் அமைதியாக அறத்துடன் வாழும் என்று கூறுவதை பல படித்த பெண்கள் உயர்வுதாழ்வு என எண்ணி பெண்ணடிமைத்தனம் என கூறுவதால் அவர்கள் வாழ்வில் சலசலப்பு ஏற்படுவதைகாணமுடிகிறது எனவே உலகத்தால் ஏற்கப்பட்ட நல்ல பலவிடயங்களைக் கொண்ட சொன்ன வள்ளுவர் பெண்கள் அறம் என்று  கூறியவிடயங்களில் எதிர்கால படித்த சந்ததியினர் சில குறள்களில் முரண்படுவது தவிற்கமுடியாது உள்ளது.   

நன்றி -   மின்தமிழ்
.

ஊடகவித்தகர் , வாழ்நாள்சாதனையாளர் , வாசகவட்ட விருதாளர் ,எழுத்தாளர்,பேச்சாளர் பண்ணாகம் திரு.இக.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் பொதுப் பணி விபரங்களும், விருதுகளும்.

1) பண்ணாகம்.கொம் இணைய பிரதம ஆசிரியர், நிர்வாக இயக்குனர்.
2) யேர்மன் தமிழ் கலாச்சார மன்றத் தலைவர்.
3) யேர்மனி தமிழ்ப் பாடசாலை ஆசிரியர்.
4) முன்னாள் நமது இலக்கு பத்திரிகையின் முதன்மை ஆசிரியர்
5) ஐரோப்பிய தமிழ் வாசக வட்ட அமைப்பின்  தலமை இயக்குனர்.
6) தமிழ் இணைய அகத்தின் நிறுவனர் . (முதற் பணி உலக 26 எழுத்தாளர்களை இணைத்து நாவல் உருவாக்கியது)
7) பன்னாட்டு புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் நிர்வாக செயற்பாட்டாளர்.
8) இலண்டன் பி.பி.சி தமிழ்ச் சேவை ஒன்றியத்தினால் ஊடகவியலாளர் அங்கீகார சான்றிதழ் பெற்றவர்.
9) சிறந்த தமிழ் ஆசிரியப்பணி விருதாளர்.
10) 24 மணிநேர தொடர் பேச்சு உலகசாதனையாளர். 2020
11) உலகத் தமிழ்மொழி நாளாளில் 8 மணி நேரப்பேச்சு உலகசாதனை 20.2.2021

விருதுகள்.
1)  ஊடகவித்தகர் விருது. 2017
2) வாழ்நாள் சாதனையாளர் விருது.2019
3) வாசகர் வட்ட விருது. 2019
4) சிறந்த தமிழ் ஆசிரியர் விருது. 2012
5) உலகசாதனை பேச்சாளர் விருது.2020
6) உலகசாதனை தமிழ்மொழி நாள் பேச்சு 2021