WELCOME TO PANNAGAM.COM & PTV

பண்ணாகம் இணையம்

 

’’விழுதல் என்பது எழுகையே’’  26 எழுத்தாளர்கள் எழுதிய கதை நிறைவுப்பகுதிகள்

END of the  STORY  
1 - 3 

’’விழுதல் என்பது எழுகையே’’
கதையின்  26 பிரமாக்கள்     (26 கதைஆசிரியர்கள்) அனைவருக்கும் பண்ணாகம் இணையத்தின் நன்றிகள்.
(A to Z  oder)

„விழுதல் என்பது எழுகையே“ 

நிறைவுப் பகுதி (3) 


 திருமதி.நிவேதா உதயராயன்


 முடிவு தொடர்கிறது


அன்றைய பொழுதின் விடியல் சீலனுக்கு மிக மகிழ்வாக இருந்தது. தன் வாழ்வில் இத்தனை காலம் பட்ட துன்பத்துக்கு முதல் முறையாக  சஞ்சலங்கள் எதுவுமற்று, கவலைகளே இன்றி மகிழ்வு கொண்டு மனம் துள்ளிக் குதிப்பது இன்றுதான். அவனுக்கே அம்மகிழ்வைத் தாங்க முடியாது மனது கனத்தது. 

துன்பங்கள் வருவது கூட நல்லதுதான். அப்பொழுதுதான் நாம் இழந்தவைகளும் பெறுமதி மிக்கவைகளும் எம் கண்ணுக்குத் தெரிகின்றது. இறைவன் தெரிந்தேதான் இரண்டையும் மனிதவாழ்வில் வைத்துள்ளான் என்று எண்ணியவனுக்கு சிரிப்பு வந்தது. எத்தனை இலகுவாகிவிட்டது மனம். வாற வெள்ளிக்கிழமை கலா வந்தால் எப்படி எப்படிச் செய்யவேண்டும், என்ன முதலில் கதைக்கவேண்டும் என்று மனதுள் பட்டியல் இட்டுக்கொண்டான். அவளுக்கு என்ன வாங்கலாம் என்று யோசித்தவன் உடனேயே அந்த எண்ணத்தைக் கைவிட்டான். பத்மகலா வந்த பிறகு அவளைக் கடைக்குக் கூட்டிக்கொண்டு போய் வாங்கிக் கொடுப்பதுதான் நல்லது என முடிவெடுத்தவன், பாடல் ஒன்றை மகிழ்வாக விசிலடித்தபடி எழுந்து குளியலறைக்குச் சென்றான். 

வெள்ளிக்கிழமை பிராங்பேர்டிற்குப் போறதுக்கு கார் வேணும் ஆரிட்டைக் கேட்கலாம்? என யோசித்தவனுக்கு சத்தியநாதன் தான் உடனே நினைவில் வந்தார். அவர் வேண்டாம். அவர் மகளை மறுத்துவிட்டு அவரிடமே உதவி கேட்பது ஏதோபோல் இருக்க, எதுக்கும் வேலை செய்யும் இடத்தில் மாக்கிடம் கேட்டுப் பார்ப்போம். அவன் ஏதும் ஐடியா சொல்வான் என எண்ணி மனதை அமைதிப்படுத்தியபடி வேலைக்குச் செல்ல ஆயத்தமானான் சீலன். 

மதியம் உணவு வேளையின் போது எயர்ப்போட் விடயம் பற்றி மாக்கிடம் கதைத்தபோது அவனொரு யோசனை சொன்னான். "எயாப்போட் போகும்போது நீ இங்கிருந்து ரெயினில் போய்விடு. உன் நண்பி வந்தபின் அங்கேயே ஒரு டாக்ஸி பிடித்து அழைத்து வா. ஒரு 150 யூரோ வரும் " என. ஆனால் அது நல்ல யோசனையாகச் சீலனுக்குப் படவில்லை. அவன் பணத்தில் குளிப்பவன் அல்லவே இத்தனை பணம் செலவழிக்க. பத்மகலா என்ன இரண்டு மூன்று சூட்கேசா கொண்டுவரப் போகிறாள். ஒன்றுதானே. அவளையும் ரெயினிலேயே கூட்டி வந்துவிடலாம் என மனதில் நினைத்தாலும் மாக்கிடம் சொல்லவில்லை. கலா ஏதும் நினைப்பாளோ என்று ஒரு நிமிடம் எண்ணியவன், இயல்பாக இருப்பதே எல்லாதுக்கும் நல்லது. இருக்கிறதை விட்டு பறக்கிறதுக்கு ஆசை கொள்வதுதான் தவறு என எண்ணியபடி தன் வேலையில் மூழ்கிப்போனான்  சீலன். 

இரண்டாவது வெள்ளி விடிந்தபோது மனதில் எதுவோ பிசைவதாக உணர்ந்தவுடன் ஏன் இப்படி இருக்கிறது. இன்று கலாவைப் பார்க்கும் சந்தோசத்தில் இருக்கிறேன். அம்மா தங்கச்சிக்கு ஏதும் வருத்தமோ என் எண்ணியவன் உடனேயே அவர்களுக்குத் தொலைபேசி எடுத்தான். தாயின் குரலைக் கேட்டவுடன் தான் மனம் நின்மதியானது. தங்கச்சி சுகமோ என்று அவன் கேட்காமலேயே தாய் அவள் டியூசனுக்குப் போட்டாள் என்று கூற, சீலனின் மனம் அமைதி கொண்டது. 

கடவுளே பத்மகலா எந்தத் தடையும் இல்லாமல் வந்து சேர்ந்திடவேணும் என்று மனம் வேண்டாத தெய்வங்களை எல்லாம் வேண்டிப் பிரார்த்திக்க, கட்டாயம் அவள் தன்னிடம் வருவாள் என்று மனம் சொல்ல, சில நேரம் தன்னை அறியாமலே ஏற்பட்ட மன அழுத்தத்தில் தான் நெஞ்சு பிசைந்ததாக்கும் எனத் தன்னைத் தானே சமாதானம் செய்துகொண்டான். காலையில் எழுந்தவுடனேயே ஏழு மணிக்கு எல்லாம் காலை உணவை உண்பவனுக்கு இன்று பசியே எடுக்கவில்லை. 

இதுவரை போடாமல் வைத்திருந்த ஒரு சேர்ட்டை எடுத்துப் போட்டுக்கொண்டான். நல்ல காலம் இப்ப சமர்.அல்லது என்ன தான் அழகா ஆடை அணிந்தாலும் மேலே யக்கற்றைப் போட எல்லாம் உள்ளே மறைத்துவிடும் என எண்ணியவனாக ரெயின் டிக்கற் தனதும் கலாவினதும் சரியாக இருக்கிறதா எனச் சரிபார்த்து பேர்சுக்குள் வைத்து காற்சட்டைப் பையினுள் வைத்துவிட்டு கதவைப் பூட்டியபடி இறங்கினான். 

நடக்கும்போது ஏனோ அந்தரமாக இருந்தது. என்ன இது ஒருநாள் கூட இப்படி இருக்கவில்லையே என்னும் எண்ணம் மீண்டும் வர, எனக்குப் பதட்டம் அதிகமாகிவிட்டது எனத் தனக்குச் சமாதானம் சொன்னவன் பத்து நிமிடத்தில் பஸ்தரிப்பிடம் வந்து சேர்ந்தான். தரிப்பிடம் வந்தவன்,பஸ்சுக்கு இன்னும் ஐந்து நிமிடங்கள் இருப்பதைப் பார்த்துவிட்டு ஓரிடத்தில் நிற்காமல் இருக்காமல் அங்கும் இங்கும் நடந்தான். எத்தனை தரம் என்று நடப்பது என எண்ணியபடி ஒரு பக்கமாகப் போய் நின்றவனில் கண்ணில் விளம்பரத்துக்கும் அப்பால் அவனது உருவம் தெரிந்தது. 


„ம்...“ நல்ல சிமாட் ஆகத்தான் இருக்கிறன் என பெருமிதம் ஏற்பட்ட அடுத்த நிமிடமே ஆயாசமும் ஏற்பட கீழே குனிந்து பார்த்தான். சப்பாத்தைப் போட மறந்து வீட்டில் போடும் செருப்புடன் வந்துவிட்டிருப்பது தெரிய, அய்யோ இப்ப திரும்பிப் போகவேணுமே. இன்னும் மூன்று நிமிடத்தில் பஸ்ஸைப்  பிடிக்க முடியாது. வந்துவிட்டுத் திரும்பிப் போவது சரியில்லையே என நினைத்தவன், இப்படியே போக முடியுமா ? நல்ல காலம் இப்பவாவது கண்டேனே. இதுவே எயர்ப்போடில் அல்லது ரெயினுக்கை ஏறின பிறகு கண்டால் என்ன செய்யிறது என்று மனதைச் சமாதானப்படுத்தியபடி மீண்டும்  வீட்டுக்கு விரைந்து நடந்தான்.

-------------------------------------------------------------------------------


கிறங்கிப் போய் அவன் தோழில் சாய்ந்தபடி பத்மகலா விட்ட நிம்மதிப் பெருமூச்சு இப்பகூட அவன் காதில் கேட்கிறது. கண்களில் கண்ணீர் வழிந்தோட அதைத் துடைக்க மறந்து வெளியே பார்த்தபடி நிற்கிறான் சீலன். அதுதான் எங்கள் விதியென முன்பே எழுதப்பட்டிருக்கு. அதை மாற்ற முடியாதுதான். வாழ்வு பூராவும் இந்தக் குற்ற உணர்வே என்னை சிறிது சிறிதாகக் கொல்லப்போகிறது. என்னால் இன்னொருத்தியுடன்  வாழவும் முடியப்போவதில்லை. ஆனாலும் நான் அதற்காக மனமொடிந்து வீழ்ந்து போய் விடமாட்டேன். 

எத்தனை அழிவின் பின்னும் எம் மக்கள் போராடிக்கொண்டே இருக்கிறார்களே மீண்டும் எழுந்து நிற்க. நானும் அப்படித்தான் எத்தனை முறை வீந்தாலும் எழுவேன். என் உயிர் உள்ளவரை. காதல் வாழ்வின் ஒரு பகுதியே அன்றி காதல் இன்றி வாழ்வு முடிந்துவிடுவதில்லை. என்னை இறைவன் இப்படி நிற்க வைத்துள்ளான் என்றால் ஏதோ என்னால் என் சமூகத்துக்கு ஆகவேண்டியது இன்னும் இருக்கிறது. காரண காரியமின்றி எதுவுமே உலகில் எதுவும் நடப்பதில்லை. என் எழுகையை யாரும் தடுக்கவே முடியாது என எண்ணியபடி தூரத்தில் தெரியும் காட்சிகளைப் பார்க்கத் தொடங்கினான் சீலன். 

இன்றுடன் மூன்று மாதங்கள் ஆகின்றன. எத்தனை தடவை நான் கீழே விழுந்தாலும் தடுமாறித் தடுமாறி எழுகிறேனே. அப்படி இருந்தும் கடவுள் என்னைச் சோதிக்கிறானே. இந்தப் பிறப்பில் என் மனமறிந்து நான் யாருக்கும் எந்தப் பாவமும் செய்யவில்லையே என சீலன் எத்தனையாவது தடவைகள் எண்ணியிருப்பான் என்று அவனுக்கே தெரியவில்லை. அத்தனைக்கு அவன் மனதில் விரக்தி ஏற்பட்டிருந்தது. எத்தனை ஆசைகள் கோட்டைகள் எல்லாம் கட்டி அவன் பத்மகலாவின் வருகைக்காகக் காத்திருந்தான். கடவுளும் பாராபட்சம் பாக்கிற ஆள்தானோ? அல்லது எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கவேண்டும். உள்ளுக்குள் கடவுள் மேல் கோபம் வந்தாலும் அடுத்த நிமிடமே கடவுளே என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். நீங்கள் தான் எங்களைக் காப்பாற்ற வேணும் என மனதினுள் மன்றாடியவனுக்கு கண்கள் நிரம்பி கண்ணீர் எட்டிப் பார்த்தது. 

எத்தனை போராட்டத்தின் பின் பத்மகலாவைத் தன்னுடன் வைத்திருக்கிறேன். தடாலடியாக வந்திறங்கிய மல்லிகா உடனேயே தங்கையை கனடாவுக்குக் கூட்டிக்கொண்டு போக ஒற்றைக் காலில் நின்றதுவும் இவன் அவளின் காலில் விழாத குறையாகக் கெஞ்சி மன்றாடியும் கூட அவள் இறங்கி வரவில்லை. சத்தியநாதன் அண்ணை தான் கடைசியில் மல்லிகாவுக்கு சீலனைப் பற்றிச் சொன்னார். தன் மகள் உட்பட எத்தனை திருமணம் அவனுக்கு வந்தது என்றும் கலாவைத் தவிர யாரையும் கட்டச் சீலன் மறுத்துவிட்டதையும் சொன்னபின் தான் மல்லிகா ஒருவாறு இறங்கி வந்தாள். அத்துடன் கலாவின் நிலை இன்றும் மாறலாம் அல்லது மாதங்களோ வருடங்களோ கூட எடுக்கலாம்  என்பதும்  இந்த நேரத்தில் கலாவை கூட்டிக்கொண்டு செல்வது நல்லதும் அல்ல என வைத்தியர்கள் கூறியதும் மல்லிகா ஒருவாறு இறங்கிவந்து கலாவை இங்கேயே விட்டுவிட்டுப் போகச் சம்மதித்தாள்.

சீலனின் மனம் அப்பப்ப கிடந்தது அல்லாடும். ஆனாலும் அவன் மனதைத் தளரவிடவில்லை. தனக்கும் பத்மகலாவுக்கும் கட்டாயம் ஒருநாள் திருமணம் நடக்கும். ஆனால் எப்போது என்பது தான் தெரியவில்லை. முன்பெல்லாம் கடவுள் மேல் நம்பிக்கையற்றிருந்தவன் அவன். பத்மகலா தன்னுடன் கதைத்தால் கம் அம்மனுக்கு அபிசேகம் செய்வதாகவும், பழனிக்கு வந்து மொட்டை  போடுவதாகவும் கூட வேண்டியுள்ளான். என்ன செய்வது மற்றைய துன்பங்களைத் தாங்கிக் கொண்ட எனக்கு இதைத் தாங்க முடியவில்லையே என எண்ணியபடி வைத்தியசாளைக்குச் சென்று பத்மகலாவின் கட்டிலின் முன் கதிரையை எடுத்துப் போட்டு அவள் கைகளை தன் கைகளில் எடுத்து வைத்துக்கொண்டான். 

-----------------------------------------------------------------------சப்பாத்தை மாற்றிவிட்டு மீண்டும் பஸ் தரிப்பிடம் வந்த சீலன்,  எதுக்கும் விமானம் வெள்ளன வந்தாலும் என எண்ணிக்கொண்டே இரண்டு மணி நேரத்துக்கு முன்னர் விமான நிலையம் சென்று காத்திருக்க ஆரம்பித்தான்.

நூற்றி இருபது நிமிடங்கள் நூறாகி ஐம்பதாகி முப்பதாக பிரயாணிகள் வெளியே வரும் பாதைக்கு அருகே சென்று கம்பிகளில் கையை வைத்தபடி வெளியே வருவோரைப் பார்க்கத் தொடங்கினான். அவனுக்கே தெரிந்ததுதான் நாட்டுக்குள் புதிதாக வரும் அவள் எப்படியும் வெளியே வர ஒரு மணி நேரமாவது செல்லும். ஆனாலும் காத்திருப்பதிலும் ஒரு சுகம் இருக்கவே செய்கிறதுதான். இந்த ஐந்து ஆண்டுகளில் எப்படி இருப்பாள். அப்படியே தானோ என பலதும் நினைக்க முகம் சந்தோசத்தில் பூரித்தது. அவனறியாமலே சிரிப்பு எட்டிப் பார்க்க தனக்குள்ளேயே கூச்சப்பட்டவனாக அருகில் இருந்த கதிரையில் அமர்ந்து விழியை வழிமேல் வைத்துக் காத்திருந்தான். 

அதோ அவள்தான். அவன் முகம் அவளைக் கண்டதும் எப்படி மகிழ்வு கொண்டதோ அப்படியே அவள் முகமும் பிரகாசிக்க தூரத்திலேயே இவனைக் கண்ட மகிழ்வில் சிரித்தபடியே வந்து சீலன் என்று வாஞ்சையுடன் அவன் கைகளைப் பற்றினாள். பத்மகலா இவ்வளவு அழகியா? வெளிநாட்டுக் காற்று அவளை நன்கு பளபளப்பாக்கி என்ன அழகாக இருக்கிறாள் என மனதில் நினைத்தாலும் வெளியே சொல்லவில்லை. அவளைக் அணைக்க வேண்டும் என்று எழுந்த ஆவலைக் கட்டுப்படுத்தியபடி „பிரயாணம் எல்லாம் எப்பிடி“ என்றன்.

"சீலன் நீங்கள் இப்ப எவ்வளவு வடிவாவிட்டியள். முகமும் நல்ல குளிர்மையா வந்திட்டுது" என்று பத்மகலா கூற, "நீரும் தான்" என்று மட்டும் கூறிவிட்டு நிறுத்திக்கொண்டான். அவளைக் கண்டவுடன் அணைத்து முத்தமிடுவது பற்றி தான் எப்படியெல்லாம் கற்பனை செய்து வைத்திருந்தும் அவள் வந்தவுடன் ஏன் தன்னால் அப்படிச் செய்யமுடியாமல் போனது என்று மனதுள்ளே எண்ணியவன், அதுதான் தமிழ் பண்பாடு எனப் பெருமையாக உணர்ந்தான். வீட்டுக்குத் தானே வருகிறாள். அவளுக்கும் ஆசை இருக்கும் தானே. ஆசைதீர அணைப்போம் என எண்ணிக்கொண்டு அவளது சூட்கேசை இழுத்தபடிவாயிலை நோக்கி நடக்கத் தொடங்கினான். அவனின் பற்றிய கையை அவள் விடவில்லை. 

வாசலை அண்மித்தபோது எதிரே கனகலிங்கம். சத்தியநாதன் வீட்டு பிறந்த தினத்தில் சந்தித்தவர்.  சீலனை சத்தியநாதனின் மகளுக்காக திருமணத்துக்குக் கேட்டவர் என அவனுக்கு ஞாபகம் வந்தது. 

இவனும் அவரைப் பார்த்து „வணக்கம் அண்ணை“ என்றான். அவரும் வணக்கம் சொல்லிவிட்டு „என்ன தம்பி இந்தப்பக்கம்“ என்றவரின்  பார்வை பத்மகலாவின் மேல் விழுந்தது. „இவதான் கலா நான் கலியாணம் செய்யப் போறவ“. „நீங்கள் எங்கே இந்தப் பக்கம்“ எனக் கேட்க „எனது நண்பன் சிறிலங்கா போறான் அவனை விட வந்தனான். நீங்கள் ஆற்றேன் காரிலையோ .... „என அவர் இழுக்க, „இல்லை அண்ணை ரெயினில தான் போகப்போறம்“ என்று சீலன் கூற,  „என்னோட வாங்கோ நான் தனியாத்தான் போகப்போறன“; என்று கூறியபடி அவர் கார் தரிப்பிடம் நோக்கி நடக்கத் தொடங்கினார். 

முதலில் மறுப்போமா என எண்ணிய சீலன், சரி காரில் என்றால் கொஞ்சம் வேகமாகப் போகலாம். தானாகக் கேட்டவரை ஏன் மறுப்பான் என எண்ணிக்கொண்டு கலாவுடன் அவர் பின்னே நடந்தான். கார் டிக்கியைத் திறந்து கலாவின் சூட்கேசை வாங்கி வைத்தவர், „சீலன் நீங்களும் அவவுடன் பின்னுக்கு இருங்கோ“ என்று சொல்ல நன்றியுடன் அவரைப் பார்த்துவிட்டுக் கலாவுடன் ஏறி நெருங்கி அமர்ந்தான். தனக்கும் கலாவுக்கும் சீற் பெல்டை மறக்காமல் போட்டுக் கொண்டான்.கனகலிங்கத்துக்குத் தெரியாதா இளசுகள் மனம் எப்படி என்று. அவரும் தனக்குள் சிரித்துக்கொண்டார். 

கார் விரைவுப் பாதையில் செல்லவாரம்பிக்க மழையும் சோவென ஆரம்பித்தது. புதிய இடத்தை வடிவாப் பார்ப்போம் என எண்ணிய கலாவுக்கு மழையின் வேகத்தில் கண்ணாடியின் பின் எதுவுமே தெரியாது தலையும் சுற்ற ஆரம்பிக்க, „தலை சுத்துது சீலன்“ என்றாள்.  „மெதுவாக என்ர தோளிலை சாய்ந்து கொள்ளும் வாரும்“ என்று உரிமையோடு அவளைத் தன் தோளில் சாய்த்துக்கொண்டான் சீலன். அவனுக்கு மட்டுமல்ல அவளுக்கும் அவனின் அணைப்பு நெகிழ்வைத் தந்தது. அனாலும் இன்னொருவரும் இருக்கிறார் என்னும் எண்ணம் இருவரையும் கட்டியும் போட, கண்களை மூடியபடி அவனின் தொடுகையில் கிளர்வு கொண்டு லயித்துப்போய் கிடந்தாள் கலா. அவனுக்கும் அவள் உணர்வு புரிந்திருக்க வேண்டும அவள் உச்சியில் அவசரமாக ஒரு முத்தம் பதித்துவிட்டு சூழ்நிலையை மாற்ற கனகலிங்கத்தாருடன் பேச்சுக் கொடுக்கத் தொடங்கினான் சீலன். தோளில் வசதியாக சாய்ந்து கொள்வதற்கு சீற் பெல்ட் இடைஞ்சலாக  இருக்க ஒருமாதிரி கைகளால் துலாவி அதை விடுவித்தபின் தான் அவளுக்கு நின்மதியாக இருந்தது.

 

----------------------------------------------------------------

கண் மூடிக் கருத்தழிந்து எந்தவித உணர்வுகளின் பிரதிபலிப்பும் இன்றி வைத்தியசாலையில் படுத்தபடுக்கையாகக் கிடக்கும் பத்மகலாவை வைத்தகண் வாங்காது பார்த்துக் கொண்டு இருந்தான் சீலன். 

அவளது அழகிய முகம் கருமைபடர்ந்து கண்கள் குழிவிழுந்து உயிருடன் இருக்கிறாள் என்பதற்;குச் சாட்சியாக சுவாசம் மட்டுமேயாக கடந்த மூன்று மாதங்களாக இதே நிலைதான்.அவளின் தலையை ஆதரவாக வருடிக் கொடுத்தான். அவன் கண்களில் நிரம்பிய கண்ணீர் அணை உடைந்தது போல் தழும்பி அவள் நெற்றியில் உதிர, அவள் வழி அசைந்தது மூடிய இமைககளுக்குள். அவசரமாக நெற்றியில் விழுந்த கண்ணீரைத் துடைத்தான். குமுறி வரும் தனது அழுகையை  தன்னிதழை உள்ளிழுத்து அடக்கினான். 

சீலனும் ஒவ்வொரு நாளும் வேலை முடிய ஆவலுடன் வந்து அவளைப் பார்ப்பதும் அவளுடன் பழைய கதைகள் சொல்லி தானே தனக்குள் சிரித்தபடி அழுவதுமாக. ஆனால் நம்பிக்கையை மட்டும் அவன் கைவிடவே இல்லை. 

கனகலிங்கம் நன்றாகக் கார் ஓட்டக் கூடியவர். கன காலம் கார் வைத்திருக்கிறார். மழைக்குள்ளும் லாவகமாக அவர் கார் ஓட்டுவதை சீலன் பார்த்துக்கொண்டு இருந்தான். பிராங்க்பேர்ட்டிலிருந்து காகன் செல்ல இரண்டு மணிநேரம் செல்லும். யேர்மனியின் மற்றைய விரைவுப் பாதைகள் எல்லாம் நேரானவை இந்தப் பாதை மட்டும் தான் சீலன் ஒரே வளைவு எனச் சொல்லியபடி கனகலிங்கம் வீதியைப் பார்க்க, ஐயோ அண்ணை உந்த லொறி சிக்னல் போடாமல் எடுக்கிறான் என்று சீலன் கத்தியது மட்டும் தான் சீலனுக்கு நினைவில் இருந்தது. 

கார் லொறியுடன் மோதி உருண்டு கேடர் ஒன்றுடன் அடிபட்டுத்தான் நின்றது. அதிக வாகனங்கள் இல்லாததால் இவர்கள் உயிர் தப்பியதாக பொலிஸ் கூறியதைக் கேட்டதும் சீலன் கடவுளுக்கு நன்றி சொன்னான்.

கனகலிங்கமும் சீலனும் சிறு காயங்களுடன் தப்ப, பெல்ட் போடாமல் இருந்ததனால் பத்மகலா அதிக பாதிப்புக்குள்ளாகி கோமா நிலைக்குப் போய்விட, இப்போதும் அனைத்தையும் மனக்கண்ணில் பார்த்தபடி பத்மகலாவுக்கு முன்னால் அமர்ந்திருக்கிறான் சீலன். 

நிட்சயமாய் கலா எனக்காக எழுந்து வருவாள். அவளுக்காக நான் காத்திருப்பன் என எண்ணியபடி வீட்டுக்குச் செல்ல எழுந்தவனின் கைகளுள் கலாவின் கை அசைந்தது......


சுபம்


முடிவு 4 தொடரும்

-----------------------------------------------------------------------------------------------------------------------------------


 கதையின் வித்தியாசமான நிறைவுப்பகுதிகள்  4 இல்   

 (மற்ற முடிவுப் பகுதிகள்  தொடர்ந்து வரும்)

நிறைவுப்பகுதி 1  இந்தியாவில் இருந்து 

திருமதி லட்சுமணன் தேனம்மை அவர்கள் 

   எழுதிய முடிவுப் பகுதி 1.

====+++++==++++++===++++++++====+++++++=====

„விழுதல் என்பது எழுகையே“ 

(நிறைவுப்  பகுதி 1, எழுதியவர்: திருமதி.தேனம்மை லக்ஸ்மணன், இந்தியா)

தொடர்கிறது...


பெண் என்று பூமிதனில் பிறந்துவிட்டால் மிகப்பீழை இருக்குதடி தங்கமே. என்று பாரதியார் பாடியது சும்மாவா.

பத்மகலாவின் வருகைக்காக சீலன் பிராங்போர்ட் ஏர்போர்ட்டில் வெளியேறுவார் கதவிற்கு முன்னால்  படபடப்புடன் காத்திருந்தான். விமானத்தை விட்டிறங்கி பாஸ்போட் பரிசோதனை முடிந்து வெளியே வரும் கதவுக்கூடாக  ஒவ்வொரு பயணியும் வரும் போதும் கதவு திறப்பதும் வருவது பத்மகலாவா என ஆவலுடன் கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

சில விநாடி இடைவெளிகளுக்குள் மூடித்திறக்கும் கதவிடுக்குள் ஊடாக பத்மகலாவின் உருவம் தெரிகிறதா என அவனின் கண்கள் தேடின.

இதோ ப்ராங்க்ஃபர்ட் ஏர்ப்போர்ட்டில் பீடு நடைபோட்டு தன்னருகே வரும் பத்மகலாவைப் பார்த்துப் பெருமிதமாக இருந்தது சீலனுக்கு. 

சீலன் தனக்காக ஒற்றைச் சிவப்பு ரோஜாவுடன் கண்களில் அவலும் பரசவமும் மின்ன காத்திருப்பதைக் கண்டதும் அவனை நோக்கி வேகமாக நடந்து வர அவனும் அவளை நோக்கி நடந்தான்.

சில விநாடிகள்தான், தாயிடம் சேய் பாய்ந்து சென்று அணைத்துக் கொள்வது போல் இருவரும் ஒருவரை அணைத்துக் கொண்டனர்.

பத்மகலா சீலனின் தோள்மீது சாயந்து அவனை இறுக்கி அணைத்தவாறு குலுங்கி குலுங்கி அழுது ஆனந்தக் கண்ணீர் சொரிந்தாள். 

அவளின் கண்ணீர் சீலனின் சேர்ட்டையையும் பனியனையும் தாண்டி அவனின் முதுகைச் சுட்டது. சீலன் அவள் முதுகை ஆதரவாக வருடியவாறு தனது கண்களையும் துடைத்துக் கொண்டான்.

„சீலன் உன்னோடு சேருவேன் என எதிர்பார்க்கவேயில்லை“

குலுங்கி குலுங்கி அழுதாள்.அது காதலில் தோய்ந்து வந்த அழுகை.

அவர்கள் இருவரும் பொது இடம் என்றும் கவனிக்காது அணைத்துக் கொண்டு  நின்றதை வெள்ளைக்காரர்கள் வியப்புடன் பார்த்தார்கள். ஏனென்றால் தமிழ்க் காதலர்கள் பொது இடங்களில் கட்டிப்பிடித்து அணைப்பது அரிது அதனால் அவர்கள் வியப்புடன் பார்த்தார்கள் சிலர் அவர்களிருவரையும் பார்த்து புன்னகைத்துக் கொண்டே சென்றார்கள்.

அணைப்பிலிருந்து விடுபட்டனர் இருவரும்.

சீலன் தனது காதலியை அழைத்துச் சென்று வாங்கொன்றில் உட்கார வைத்துவிட்டு „இருங்கோ இங்கே ஒரு கோப்பி குடிச்சுப் போட்டுப் போவோம் என்றான் சீலன். அதனருகே ஒரு மக்டொனால்ட்ஸ் கடை இருந்தது. இருங்கோ வாரேன் என்று ஸ்டார்பக்ஸ் காஃபியை வாங்கிக் கொண்டு  மக்டொனால்ட்ஸில்  இரண்டு பர்கர் ஆர்டர் செய்து எடுத்துவந்தான். 

முன்சனுக்கு செல்லும் புகையிரதத்தில்  திரும்பி வீட்டிற்கு வரும்போது சுடச் சுட பர்கரும் காஃபியும் சாப்பிட்டபடி வந்தார்கள். அவனது நெடுநாளைக்கு முன்னான கனவு ஞாபகம் வந்தது. குழந்தைத்தனமான கனவு.. பத்மகலாவுடன் பர்கரும் ஐஸ்க்ரீமும் சாப்பிடுவதான கனவு. அவளைப் பார்த்துப் புன்னகைத்தான்.

அது விரைவுப் புகையிரதம், பெரிதாகப் பயணிகள் இல்லை. பத்மகலா அவனின் தோளில் சாய்வதும் தலைநிமிர்த்தி பர்கரை சாப்பிடுவதும் கோப்பி குடிப்பதும் பிறகு தோளில் சாய்வதுமாக இருந்தாள்.

கனடாவிலிருந்து புறப்படும் போது தலைக்குத் தேய்த்துக் குளித்த சாம்பூவின் வாசனையும் அவளின் உடலிலிருந்த வாசனையும் அவனைக் கிறங்கடித்தது.

அவனை அவள் உற்று என்ன என்பது போல் பார்த்த அவள் கண்கள் கலங்கி இருந்தன. பதறிவிட்டான் சீலன். முன்பு எப்போதோ கோபித்ததை நினைத்து அழுகிறாளோ. இல்லை அவள் பட்டென்று போட்டுடைத்தாள். அவனுடன் இனி சேர்வோமோ என்ற நிலையிலிருந்து இன்று கண்டடைந்த நிலை வரை அவள் மனக்கண்ணில் ஓடி இருந்தது. 

„சீலன்.. சீலன் என்று குழந்தை போலத் தேம்பியபடி. இந்தப் பொறாமைதான் எவ்வளவு பெரிய விடயம்;..பானு அக்காவைப் போய் சந்தேகப்பட்டேனே மன்னிச்சிருங்கோ“ என்றாள். 

„அதெல்லாம் விடு.. உன் மனக்குழப்பம் அப்பிடிப் பேச வைத்தது. ஆனால் நீ கொடுத்து வைத்தவள் கலா. நம்மட பெண்கள் இங்கே படும் பாட்டை அறிந்தால் வருந்துவாய். நீ பாக்யசாலி என்பேன“;.

”என் அம்மா. என் அம்மாவைப்போல எத்தனை அம்மாக்கள். தங்கட குஞ்சுகளை வெளிநாட்டுக்கு அனுப்புவித்து தப்பிச்சு வாழ்ந்தா போதுமெண்டு தங்கள் சொத்துசுகம் எல்லாத்தையும் வித்து தியாகியாக் கிடக்குறாங்க. தன் ரத்தத்தைப் பாலாக் கொடுத்து தன் சேமிப்பையும் வழிச்சுக் கொடுத்து என்னென்ன துயரத்தோட வாழ்ந்து வர்றாங்க. படிப்பு ஒண்டே தன்னை உயர்த்தும் என்று படிக்க வந்து பணத்தட்டுப்பாடாலும் உடல் நிலையாலும் பாதிப்படிப்போடு கல்யாணம் கட்டிப்போன என் தங்கச்சி, இங்கே தங்கட தாய்நாட்டை விட்டுத் தனியா உபத்ரவம் செய்யும், சந்தேக குணம் கொண்ட புருசனோட சின்னஞ்சிறு பிள்ளைகளோடும்  ஊர் ஏக்கத்துல வாழ்ந்து வர்ற பானு அக்கா, குடிப்பழக்கத்தாலயும் மற்ற பழக்கங்களாலயும் புருஷன் அழைக்காம இருந்தாலும் வந்து அவனுக்குப் பணிவிடை செஞ்சு அவனுக்குப் பின்னே அநாதரவா ஆன பிரான்சில் வாழும் கமலா அக்கா, அடுத்தவங்களுக்கு உதவி வர்ற வவா அன்ரி, டேவிட் அங்கிள் மனைவி, தன்னோட வாழ்க்கையை தந்தைக்குப் பயந்து ஒளிச்சு பின்னே ஓடிப்போய்த் திருமணம் செய்த நிரோஜா.. ஹ்ம்ம் பெண்களுக்கு எங்கேயும் அதிகாரம் இல்லை. முடிவெடுக்க முடிவதில்லை. .”

உணர்ச்சி வசப்பட்ட மனநிலையில்  பேசிக்கொண்டிருந்தான் சீலன். மனம் கட்டறுந்த நிலை.. ”இன்னும் சிலபேரைப் பத்திச் சொன்னா உன் மனசு துடிக்கும் கலா .. என்னைத் தன் சகோதரனாய் வரிச்ச சாந்தி தன்னோட கணவனைக் காண பூஜைக்கு வந்த புஸ்பம் போல இருந்தா. ஆனா இந்த கண்டம் விட்டுக் கண்டம் மாறும் வித்தையில  விசாவுக்கு ஏற்பாடு செய்த ஒரு காடையனால  தன்னோட உடல் மாசடைஞ்சிருச்சின்னு சொல்லி ஏழாவது மாடிலேருந்து உயிர்துறந்த சாந்தி.. அதை விடக் கொடுமை. நல்ல சீர் செனத்தியோட அப்பா அம்மா கட்டி வைச்ச பவித்ரா அக்கா இங்கே இப்போ என்று சொல்லும்போது குலுங்கிக் குலுங்கி அழுதுவிட்டான்”.

பதறிப்போன கலா.. ”சீலன் சீலன்.. என்னாச்சு ? “ என்றாள். அவங்க காரியம் முடிஞ்சு போச்சுன்னு அங்கே அவங்க அப்பா அம்மா எல்லாம் கர்மா பண்ணிட்டாங்க. ஆனா அவங்க இங்கே இங்கே ஒரு சீரழிவைச் சந்திச்சு இப்போ அதிலிருந்து மீள முடியாம இருக்காங்க.. பெண்களை போகப் பொருளா உலகமெங்கும் பயன்படுத்துறாங்க. அதுக்கு ஜெர்மனியும் விதி விலக்கில்ல. ஐரோப்பாவோட மையமா இது திகழுதுன்னு சொல்றாங்க. 

திருமணம் செய்து கூட்டி வந்து புருசனால கைவிடப்பட்டவங்க., கள்ளவிசாவில வந்தவங்க தாங்கள்  ஜீவிக்க வேண்டி ஒரு வேலை தேடிப் போகும்போதும் அந்த அலுவலகங்கள்ல பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகுறாங்க. யாதும் ஊரே யாவரும் கேளீர்னு இதுல ஈடுபட்டவங்க போதை அடிமையாவும் ஆகிடுறாங்க. அப்படிப்பட்டவங்களுக்கு நாம் ஏதும் உதவி செய்யணும் கலா என்றான்.” அவனுடைய நெகிழ்வும் தீவிரமும் அவளிடமும் தொற்றிக் கொண்டது. 

இந்தப் பேப்பரைப் பார். இதுல அடுத்த கிழமை பிராங்பேர்ட்டிலபெண்களுக்கு நேரும் குடும்ப வன்கொடுமைகள் குறித்தும் பாலியல் பலாத்காரத்தை எதிர்த்தும் பேரணி நடக்க இருக்கு. அந்தப் பேரணியும் கருத்தரங்கும் அனைத்துலகப் பெண்கள் அமைப்பினால் நடத்தப்படவிருக்கின்றது.

உலக  நாடுகள் அனைத்திலுமிருந்து அந்ததந்த நாடுகளிலிரக்கம் பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள்அ கலந்து கொள்ளுகிறார்கள்.

அதன் முடிவுல நடக்கப் போற கருத்தரங்கத்துல மதுரைப் பல்கலைக்கழக பேராசிரியை  மங்கையர்க்கரசியாரும், டென்மார்க்கிலிருக்கும் பேராசிரியர்;  குமாரவேலுவும்  அவர்களும்  பேசுறாகிறார்கள். ஜேர்மனிய பெண்கள் அமைப்பு அவர்களை அழைத்திருக்கிறார்கள்.

„அவர்கள் இருவரும் உன்னுடன் தொடர்பு கொண்டார்களா“

„ஓம் நான் அவர்களின் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது அவர்கள் வருவதாகச் சொன்னார்கள். அவர்களிருவரும் பிராங்பேர்ட்டில் உள்ள ஒரு விடுதியில் தங்கப் போகிறார்கள். அவர்களுக்கான செலவை ஜேர்மனிய பெண்கள் அமைப்பு பொறுப்பேற்றுளளது“

„அது சரி கலா நீ இங்கை என்ன படிக்கப் போகிறாய் கனடாவிலை மூன்று மாதம் டொக்ரருக்குப் படித்தாயே“

„பெண்ணியம் சம்பந்தப்பட்ட படிப்பையும் ஜேர்னலிசமும் படிக்கப் போகிறன் „

„அப்ப டொக்ரர் படிப்பு“

„அதைவிட எனக்கு இதிலைதான் விருப்பம். படிப்புக்கு எல்லையும் இல்லை வயதும் இல்லை. யோசிப்பம்“என்றாள் பத்மகலா.

„அருமையான முடிவு. கனடாவிலை பெண்களுக்கான டொக்ரர் படிப்பை படித்தனி. அதை இங்கை தொடர முடியும். பெண்ணியம் சம்பந்தப்பட்ட படிப்பையும்  ஜேர்சனலிசத்தையம் படித்தாள் ஒன்றுக்கொன்று தொடர்பு உள்ளதாயும் இருக்கின்றது, இது முடியுமா உன்னால்....“ என்று வாய் மூடமுன்,

„முடியும் சாதித்துக் காட்டிறன்“ என்றாள் உறுதியாக.

புகையிரதத்தில் பேசியபடியே வந்த  பத்மகலா சீலனின் தோளில் தூங்கிவிட்டாள். முன்சன்  புகையிரத நிலையத்தை புகையிரதம் வந்தடைந்தது.

தனது தோளில் தலைசாய்த்துத்  தூங்கிக் கொண்டிருந்த பத்மகலாவின் தலையை மெதுவாகத் தூக்கிய சீலன் „கலா நாங்கள் இறங்க வேண்டிய ஸ்ரேசன் வந்துவிட்டது, இறங்குவம்“ என அவளை எழுப்புகிறான்.

புகையிரதத்தை விட்டு முதலில் இறங்கிய பத்மகலா, கனடாவிலிருந்து கொண்டுவந்து சூட்கேசை சீலனிடமிருந்து வாங்குகிறாள்.

„கலா இனி வீட்டை போய் சமைக்க ஏலாது, இங்கேயே உருளைக்கிழங்கு பொரியலை வாங்கிக் கொண்டு போய் வீட்டிலை வைத்துச் சாப்பிடுவம் „ என்ற சொல்லியவாறு பத்மகலாவை அழைத்துக் கொண்டு புகையிரத நிலையத்திற்க எதிரேயிருந்த உணவு விடுதியில் உருளைக்கிழங்குப் பொரியலை பாரசல் செய்து வாங்குகிறான்.

பத்மகலா விமானப் பிரயாணம், புகையிரதப் பிரயாணம் என சோர்ந்து போயிருந்தாள்.தனது வீட்டுக்கு பஸ்ஸில் அவள் இருக்கும் கூட்டிக் கொண்டு போக முடியாது என புரிந்து கொண்ட சீலன் ராக்சியில் அவளைக் கூட்டிக் கொண்டு போனான்.

அவனது வீடு மாடியில் இருந்தது. 

ஒரு கூடம் கூடத்தோடு திறந்த சமையலறை,ஒரு படுக்கையறை மலசலகூடம் இவ்வளவுதான் அவனது வீடு.

கூடத்திலிருந்த சோபாவில் இருவரும் அமர்ந்தார்கள். மேலே பார்த்தபடி இருந்த பத்மகலாவின் கண்களிலிருந்து மெல்லக் கண்ணீர் கசிந்தது.

சீலன் அவளை ஆதரவாக அணைத்தபடி „இப்ப எதற்கு அழுகிறாய்.......எதை நினைத்து அழுகிறாய்....அழாதை“என்கிறான்

அப்படியே அவன் மடியில் தலை வைத்தவள் குலுங்கி குலுங்கி அழுதாள்.

„முடியேலை சீலன் முடியேலை அழாமலிருக்க  முடியேலை...சீலன்  நான் கனடாவிலிருந்த போது உனக்கும் எனக்கும் இனிச் சரிவராது எனக்குச் சமனாக உன்னால் முடியாது என்று சொன்னேன். அதைக் கேட்ட நீ எவ்வளவு வேதனைப்பட்டிருப்பாய் என்பதை உணர்ந்தேன். அன்றிரவு நித்திரை இல்லாமல் அழுதேன். அக்காவிற்கும் அத்தானுக்கும் நான் இங்கு வருவதில் விருப்பம் இல்லை. ஆனால் பிடிவாதமாக இருந்தேன்.அவர்களுடன் தினம் தினம் வாக்குவாதப்படுவதால் ஏதோ கோபத்தில் அப்படிச் சொன்னேன். நீ எவ்வளவு நல்லவன். எதையும் மனதில் வைத்திருக்காமல் இருக்கிறாய். என்னை மன்னித்துவிடு சீலன்“ என அவனிடம் மன்னிப்புக் கேட்டாள்.

சீலன் அவளை ஒரு குழந்தையை மடியில் படுக்க வைத்து தலையை வருடிக் கொடுப்பது போல் அவளின் தலையை வருடிக் கொடுத்தபடியே „கலா அழுகையை நிறுத்து. நான் ஒன்றுமே நினைக்கேலை அழாதை „ அவளின் கண்ணீரைத் துடைத்துவிடுகிறான்.

கலா ஜேர்மனிக்கு வரப் போகிறாள் என்று அவள் சொன்னவுடன் சீலன்  வீட்டுக்கு லாண்டலைன் தொலைபேசி இணைப்பை எற்படுத்தியிருந்தான். 

தாய்க்கும் சுவிஸிலிருந்த தவம்,டேவிட் அங்கிள், பானுவுக்கும் டென்மார்க்கில் ஆனந்தருக்கும் பேராசிரியர் குமாரவேலுவுக்கும் மதுரைப் பேராசிரியர் மங்கையற்கரசிக்கும் தனது தொலைபேசி இலக்கங்களைக் கொடுத்திருந்தான்.

நேற்று மங்கையற்கரசியும் குமாரவேலுவும் அடுத்த கிழமை பிராங்பேர்ட்டில் நடக்கவிருக்கும் சர்வதேசப் பெண்கள் பேரணியிலும் கரத்தரங்கிலும்  கலந்து கொள்ள வருவதாக அறிவித்துவிட்டார்கள்.

முகம் கழுவிவிட்டு வருகிறேன் என பத்மகலா எழவும் தொலைபேசி மணி அடித்தது. பத்மகலா தொலைபேசியை எடுத்து „கலோ“ என குரல் கொடுக்க, மறுமுனையில் இரண்டு விநாடிகள் சத்தம் வரவில்லை.மறுபடியும் „கலோ“ என்கிறாள் கலா.

மறுமுனையில் „கலோ நான் பானு பேசுகிறன் சுவிஸிலிருந்து இது சீலனின் வீடுதானே......நீங்கள்....

„நான் பத்மகலா“ அவள் சொல்லி முடிக்குமுன்,

„பத்மகலாவா“ உற்சாகத்திலும் மகிழ்ச்சியிலும் பானுவின் குரல் தொலைபேசிக்கூடாக அதிர்கிறது. தொடர்ந்து பானு „எப்ப வந்தனீங்கள்“ என்கிறாள் பானு, „இன்றைக்குத்தான் வீட்டுக்கு வந்து கொஞ்ச நேரந்தான் ஆகுது“ என பத்மகலா சொல்லிக் கொண்டிருக்கும் போதே சீலன் எழுந்து தொலைபேசியிலிருந்த ஒலிபெருக்கியை அமத்த மறுமுனையில் பானு „ எனக்கு சரியான சந்தோசம் பத்மகலா நீங்கள் சீலனுடன் வந்து சேர்ந்தது, சீலனுடன் பேசமுடியுமா என அவள் கேட்க“ சொல்லுங்கள் பானு அக்கா நான் கேட்டுக் கொண்டிருக்கிறன் „ எனச் சீலன் சொல்கிறான்.

„சீலன்! வருகிற சனிக்கிழமை பிராங்பேர்ட்டிலை நடக்கிற சர்வதேச பெண்கள் பேரணியில் கலந்து கொள்ள நானும் சுவிஸ் பெண்கள் ஐந்து பேரும் வருகிறம். பிராங்பேர்ட்டில் விடுதியில் தங்குவதற்கு ஒழுங்கு செய்திருக்கிறார்கள், உங்கள் இருவரையும் சந்திக்க வேண்டும் என்று விருப்பம்.....“ என்று பானு சொல்ல,

„நானும் கலாவும் அந்தப் பேரணியில் கலந்துகொள்ள வருகிறோம். உங்களை அங்கு சந்திக்க முடியும்“

„அப்படியா சந்தோசம் நான் வேலை செய்கிற இடத்திலையிருந்துதான் ரெலிபோன் எடுத்தனான், சரி சந்திப்பம் ரெலிபோனை வைக்கிறன்“ . மறுமுனையில் பானு தொலைபேசியை துண்டிக்கிறாள்.

உருளைக்கிழங்கு பொரியலை இருவரும் சாப்பிட்டு தேநீரும் போட்டுக் குடிக்கின்றனர். சீலன் சோபாவில் காலை நீட்டி படுக்க ஆயத்தமாக அவனின் தலைமாடடில் உட்கார்ந்த கலா அவனின் தலையை தனது மடியில் வைக்கிறாள்.

சீலன் மெதுவாகக் கண்ணயர்கிறான். என்னதான் அக்காவுடனும் அத்தானுடனும் வாக்குவாதப்பட்டு தான விரும்பிய காதலைத் தேடி ஜேர்மனிக்கு வந்துவிட்டாலும், என்னதான் இருந்தாலும் அவள் என் அக்கா என எண்ணிய பத்மகலா தொலைபேசியை எடுத்து எண்களை அமத்தி காதில் வைக்கிறாள்.

சில விநாடிகளில் தொடர்பு கிடைக்க „அக்கா நான் வந்து சேர்ந்துவிட்டன் சரி வைக்கிறன்“ எனச் சொல்லி தொடர்பைத் துண்டிக்கிறாள்.

அவள் தொலைபேசியை வைக்க தொலைபேசி மணி அடிக்க எடுத்து காதில் வைத்து கலோ சொல்ல முன்பு „சீலா ராசா நான் அம்மா பேசுகிறன்“ சீலனின் தாயின் குரல் வர பத்மகலா தடுமாறுகிறாள், சில விநாடிகள் எதுவும் பேசாமல் இருக்கிறாள்.

சீலனின் குரலைக் கேட்காத  தாயார்“சீலா நான் பேசுவது கேட்கவில்லையா சீலா“ என பணரிதவிப்புடன் கேட்க“ கலோ „ பத்மகலா குரல் கொடுக்க, ஒரு பெண்ணில் குரல் வர தாய் பலவாறாக யோசித்து „சீலன் இல்லையா நீங்கள்..............?“

„நான் பத்....ம...கலா“

„ஓ“.....

„சீலனிடம் கொடுக்கவா“

„இல்லை உங்களோடைதான் கதைக்க வேண்டும்“ என சீலனின் தாய் சொன்னதும் பத்மகலா என்ன ஏதுவோ என  பயப்படுகிறாள்.

„பிள்ளை பயப்படாதை நீங்கள் கனடாவிலையிருந்து வரப்போவதாகச் சீலன் சொல்லியிருந்தான்“

பத்மகலாவிற்கு வியப்பும் பயமும் வந்து கொண்டிருந்து. இதற்கிடையில் சீலன் கண்முழித்து எழுந்து யார் என சைகையால் கேட்கிறான். உங்கள் அம்மா என சத்தம் வராமல் சொல்கிறாள்.

„சீலனிடம் கொடுக்கவா“ என பத்மகலா மீண்டும்  கேட்க „வேண்டாம்  உங்களுக்கு கொஞ்சம் புத்திமதி  சொல்லுறன், கவனமாக கேள் பிள்ளை“

„சொல்லுங்கள்“

„நீங்கள் இரண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் விரும்புகிறியள்  எண்டு நீங்கள் யாழ்ப்பாணத்தில் படித்துக் கொண்டிருந்த போது ஒரு நாள் எங்கள் வீட்டிற்கு வந்த போதே கண்டுபிடித்துவிட்டன்“

„....................“

„ அது ஒண்டும் பிரச்சினை இல்லை, இப்ப நீதான் கழுத்திலை தாலி ஏறும் வரை கவனமாக இருக்க வேண்டும், இல்லாட்டி பதிவுத்திருமணம் முடியும் வரையுமாவது கவனமா இருக்க வேண்டும், நான் என்ன சொல்லுகிறன் எதற்காகச் சொல்லுகிறன் என்பது புரியுதுதானே“

„ம்“

„பிள்ளை தாலி பவுணிலைதான் கட்ட வேண்டும் என்றில்லை, மஞ்சள் கொடியிலை ஒரு மஞ்சளை கட்டி அதை தாலியாக கட்டினாலே போதும்“

„அதுவரை.....“

„புரியுது“

„சீலன் கட்டுப்பாடுடையவன்தான், ஆனால் சூழ்நிலைதான் எல்லாத்துக்கும்  காரணம், நீங்கள் பெண் கவனமாக இருக்க வேண்டும் என்ரை பிள்ளை என்பதற்காக முழுசாக நம்ப முடியாது“

„நீங்கள் பயப்படாதையுங்கோ பிழை ஒன்றும் நடக்காது என்னை நீங்கள்  நீங்கள் என்று கூப்பிடாதையுங்கோ, நீ என்றே கூப்பிடுங்கோ“ என பத்மகலா சொல்ல“

„என்னை மாமி என்று சொல்லிப் பேசலாந்தானே“ என்கிறாள் சீலனின் தாய்.

„சரி மாமி“

„சீலனிடம் ரலிபோனை குடு பிள்ளை“

பத்மகலா தொலைபேசியை சீலனிடம் கொடுக்கிறாள். பத்மகலாவிற்கு சொன்னதையே அவனுக்கும் தாய் சொல்கிறாள்.

„சரி அம்மா, நீங்கள் சொன்ன மாதிரியே நடக்கிறம்“ என சீலன் பதில் சொல்கிறான்.

இரவு எட்டு மணியாகியது. நாளைக்கும் எங்கேயாவது கடையிலை சாப்பிடுவோமா என சீலன் கேட்க இலலை சமைத்துச் சாப்பிடுவம் என பதமகலா சொல்கிறாள்.

இரவுச் சாப்பாடாக பாணை ஜாமுடன் சாப்பிட்டவுடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். பேச்சின் நடுவில் புங்குடுதீவில் வித்தியாவிற்கு நடந்த கொடுமை பற்றி பத்மகலா கடுங்கோபத்தடனும் குமுறலுடனும் கதைக்கிறாள். நான் பெண்ணியம் பற்றியும் ஜேர்சனலிஸம் பற்றியும் படிக்க வேண்டும் என்ற ஒரு பிடிவாதம் வந்ததற்கு எங்கள் நாட்டில் நடைபெறும் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறையும் ஒரு காரணம் என்கிறாள்.

பத்மகலாவைப் பெருமையுடன் பார்க்கிறான் சீலன். நித்திரை இருவரையும் ஆட்கொள்ள „கலா போய் அறைக்குள் படு“ என்கிறான் சீலன். அவள் எழுந்து போகிறாள் சீலன் சோபாவில் படுக்க வசதியாக படுக்கையறையிலிருந்த தலையணையை பத்மகலா கொண்டு வந்து கொடுக்கிறாள்.

மஞ்சல் கயிற்றிலாவது தாலி அல்லது பதிவுத்திருமணம் என்ற காவலரண் இருவரையும் தடுத்து வைக்கிறது. எல்லாவற்றையும்விட  சீலனின் தாய் தங்களில் வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என இருவரும் நினைக்கின்றனர்.

அடுத்த நாள் முன்சனில் உள்ள தமிழ்க்  கடைக்குப் போன சீலனும் பத்மகலாவும் பொருட்களுடன் மஞ்சல் கயிறொன்றை வாங்குகின்றனர. கடைக்காரர் சிரித்துக் கொண்டே மஞ்சல் கயிறை கொடுக்கும் போது வெற்றிலையில் வைத்துக் கொடுக்கிறார்.

வீட்டுக்கு வந்த சீலனும் பதமகலாவும் விவேக் அங்கிளுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருகிற வெள்ளிக்கிழமை வீட்டுக்கு வர முடியுமா எனக் கேட்டு உங்கள் முன்னிiயில் பத்மகலாவிற்கு தாலி கட்ட இருப்பதைச் சொல்கிறார்கள்.

அவர்களும் மகிழ்ச்சியுடன் சம்மதிக்கிறார்கள். தாலி கட்டுவதுடன் பதிவுத்திருமணம் மிக முக்கியம் என விவேக் அங்கிள்  புத்தி சொல்ல, அதற்கான விண்ணப்பத்தை கொடுக்கவிருப்பதாக சீலன் பதில் சொல்கிறான்.

தீவிரமான சிந்தனை ரேகைகள் ஓடுகின்றன கலாவின் மனதிலும். இப்போது அவளும் சீலனும் தனித்தனி இல்லை. இணைந்த கைகள் இணைந்து செயல்பட்டால் எதிலும் வெற்றி நிச்சயம்.

சீலன் பிஎம் டபுள்யு கார் தயாரிக்கும் நிறுவனத்தில் பயிற்சிப் படிப்பு படிக்கிறான். பத்மலாவும் படிக்கப் போகிறாள். 

ஆனால் தம்மைப்போல இங்கே பாடுபட்டு ஓடிவந்த தம் மக்களுக்காக இதுவரை என்ன செய்தோம் இனி என்னென்ன செய்யலாம் என்ற எண்ணங்கள் இருவரின் மனதிலும் எழும்பத்தொடங்கின. மென்மேலும் செய்யவேண்டியவை பற்றி இருவரும் தங்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். 

விழுதல் யார் வாழ்க்கையிலும் நிகழலாம். ஆனால் அதன் பின் எப்படி எழுந்தார்கள் என்பதே சரித்திரம் ஆகிறது. தோல்விக்குப் பின் வரும் வெற்றியைச் சரித்திரம் குறித்துக்கொள்கிறது. இங்கே அகதிகளாய் வந்த ஒவ்வொரு பெண்ணுக்காகவும் ஏன் இம்மண்ணில் பிறந்த பெண்களுக்காவும் குரல் கொடுப்பது தமது தர்மம் என்பதை உணர்ந்தார்கள். தாங்கள் பணிபுரியும் இடங்களிலும் மற்ற நிறுவனங்களிலும் விமன்ஸ் செக்சுவல் ஹரேஸ்மெண்ட்  ஆரம்பிக்க எண்ணம் கொண்டார்கள். 

மறுநாள் மாலை. ப்ராங்க்பர்ட் நகரத் தெருக்களில் பல்வேறு பண்பாட்டைச் சார்ந்த பெண்களின் பேரணி. அதில் முதல் வரிசையில் சுபத்ரா, பானு, பத்மகலாவும் அவளுடன் சீலனும் பேராசிரியர்கள் மங்கையர்க்கரசியும் குமாரவேல் சாரும் நடந்து வந்தார்கள். பத்மகலாவின் கழுத்தில் மஞ்சள் கயிறு தாலியாக தொங்க கமபீரமாக அவள் நடப்பதை பெருமிதமாக பார்க்கிறாள் பானு. கையில் பிடித்திருந்த பதாகைகள் அவர்களது கொள்கைகளை அழுத்தம் திருத்தமாக அறிவித்தன. 

“ஆக்கும் சக்தி பெண். அழிவுச் சக்தி ஆக்காதீர். ”

”போதைப் பொருளல்ல பெண்

போகப் பொருளல்ல பெண்.

சக மனுசி பெண்.”

“சிகரங்களைத் தொட 

கடந்தவைகளை மற. 

விழுதல் இயற்கையென்றால்

எழுதலும் இயற்கையே “

தர்மசீலனையும் பத்மகலாவையும் பெருமிதமாய்ப் பார்த்தபடி நடந்து கொண்டிருந்தார்கள் மங்கையர்க்கரசியாரும், குமாரவேல் சாரும். அவர்கள் பின்னே பிரளயத்தைக் கொண்டுவந்து பூமியைச் சுத்தம் செய்யும் ஆழிப்பேரலை போல பெண்கள் வெள்ளம் தொடர்ந்து சென்று கொண்டிருந்து.

பேரணி முடிவில் மாபெரும் மண்டபத்தில் கருத்தரங்கிற்கு ஏற்பாடாகியிருந்தது. பேச்சாளராக மேடையில் பல்வேறு நாடுகளிலுமிருந்து தெரிவு செய்யப்பட்ட ஆண்களும் பெண்களும் உட்கார்ந்திருந்தார்கள்.

பல நாட்டுப் பெண்களுடன் ஆங்காங்கே அந்த மண்டபத்தில் ஆண்களும் கேட்போராக உட்கார்ந்திருக்கிறார்கள். பானு, சீலன்லு சுபத்திரா, பத்மகலாவும் உட்கார்ந்திருக்கிறார்கள்.

பெண்களக்கெதிரான கொடுமைகள் பன்முக நிலையில் நடைபெறுகின்றன என பேச்சாளர்கள் ஒருவர் மாறி ஒருவர் பகிர்ந்து கொள்கிறார்கள். ஒவ்வொரு நாட்டிலும் இந்தக் கொடுமைகள் இடம்பெறுகின்றன என்பதை அந்தந்த நாட்டிலிருந்து வந்த பெண்கள் கோபத்துடனும் குமுறலுடனும் சொல்கிறார்கள்.

மேடையில் இருந்த நான்கு ஆண்களில் டென்மார்க்கில் இருந்து வந்த பேராசிரியர் குமாரவேலுவும் ஒருவர்.

அவர் பேச எழுந்ததும் ஒரு வேண்டுகோளை ஏற்பாட்டாளர்களிடம் முன் வைக்கிறார். இலங்கையை தாயகமாக கொண்ட பெண்ணியம் படிக்கப் போகிற பத்மகலா என்பவர் இங்கே கேட்போராக இருக்கிறார். அவரைப் பேச அழைக்கலாமா, அவரின் ஆங்கிலப் பேச்சை அவரின் காதல் கணவனே ஜேர்மன் மொழியில் மொழிபெயர்ப்பார் என அனுமதி கேட்க பத்மகலாவிற்கு அனுமதி கிடைக்கிறது.

பத்மகலாவும் சீலனும் மேடையை நோக்கி எழுந்து போகிறார்கள். பத்மகலாவும் சீலனும் “எழுகையே” என்பது போல கம்பீரமாக நடந்து போவதை எல்லாரும் கைதட்டி வரவேற்கிறார்கள்.

ஒலிவாங்கி முன்னாள் நின்ற பெண்களுக்கெதிராக உலக நாடுகள் எங்கும் இடம்பெறும் பாலியல் வன்முறை நிறுத்தப்பட வேண்டும் எனக் கூறிய அவள் அண்மை நாட்களில் இலங்கையில் புங்குடுதீவு என்ற இடத்தில் ஒரு மாணவி மீது மேற்கொண்ட குழுப்பாலியல் வன்முறையை விபரித்து இவற்றுக்கு காரணியாக போதைப்பொருள் விற்பனையும் இருப்பதால் போதைப் பொருளுக்கெதிராகவும் பெண்கள் போராட வேண்டும் என சரளமாக ஆங்கிலத்தில் பேச அதைச் சரளமாக சீலன் மொழிபெயர்த்தான்.

நாடு நாடாக அலைந்து படாத கஸ்டங்களை அவமானங்களை தாங்கி இன்று ஜேர்மனியின் முகம் ஆகிய நகரொன்றின் முக்கிய நிகழ்வொன்றில் மொழி வல்லோனாக அந்த மொழி அறிவுக்கூட துறைசார் கல்வி எதனையும் கற்று சாதிக்க முடியும் விழுந்தாலும் எழுந்து நிமர முடியும் என்பதை சீலனும் எத்தனை தடை வந்தாலும் இலட்சியத்தையும் இலக்கையும் காதiலையும் அடைவதற்கு விடாமுயற்சியே காரணம்; என தெளிவுபட உறுதிபட காதல் ஜோடி இருவரும் உதாரணமாக அந்த மேடையில் நின்றனர்.

முற்றும்.  


முற்றைய 3 முடிவுகள் தொடரும்