மன்றத் தலைவர் திரு கிருஷ்ணமூர்த்தி தலைமையில் மண்டபம் நிறைந்த மக்கள் மத்தியில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
விழா குறித்த நேரத்தில் 3.30 மணிக்கு மங்கலவிளக்ககேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்டது. மங்கல விளக்கை கம் காமட்சி அம்பாள் ஆலய குரு சிவ சிறி பாஸ்கரக்குருக்களும், தமிழருவி ஆசிரியரும் எசன் நகர அறநெறிப்பாடசாலை அதிபருமான திரு திருமதி நயினை விஜன் அவர்களும், ஆன்ஸ்பேர்க் நகர கலாச்சாரபிரிவு அலுவலர் திருமதி பெஏக்மன் Beckmann, மொழிபெயப்பாளர் றொபின்சன், திரு ரவிறஞ்சன், sts tvதிரு தேவராசா,அறிவிப்பாளர் முல்லை மோகன், மன்ற உறுப்பினர்கள் திரு.காந்தன்,திரு. சண்முகலிங்கம் அவர்களும் மங்கல விளக்கை ஏற்றிவைத்தார்கள். தொடர்ந்து அமைதிவணக்கம் இதில் இலங்கையில் தற்போது நடைபெற்ற குண்டு வெடிப்பால் இறந்த மக்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து மன்ற மகளீர் உறுப்பினர்கள் திருமதி.கி.சர்வாஜினிதேவி, திருமதி.பா.மாலினி, திருமதி.கா.பரணிகா, திருமதி.ம.சசிகலா, திருமதி.ச.சந்துரு ஆகியோர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார்கள். திருக்குறள் வாழ்த்தை மன்ற ஆலோசகர் திருமதி.சசிகலா விஜயன் அவர்கள் நிகழ்த்தினார். தொடர்ந்து வவேற்பு உரையை திருமதி மாலினி பாலேஸ்வரன் அவர்களும் டொச் மொழியில் செல்வி பாலாஜினி பாலேஸ்வரன் அவர்களும் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து மன்றத்தலைவர் ``ஊடகவித்தகர்`` , ``வாழ்நாள் சாதனையாளர்``திரு.இக.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தலைமைஉரையை நிகழ்த்தினார். அவர் தமது தலைமையுரையில் மன்றக் கொள்கை பற்றியும் மன்றத்தின் 2வருட சேவைகள் பற்றியும் மன்ற எடுகோளாகிய ``மனிதத்தை நேசிப்போம்`` பற்றியும் மன்றம் எந்த அமைப்பையும் சார்ந்ததில்லாமல் தனித்துவமாக யேர்மனி சட்டங்களுக்கு அமைய பதிவுசெய்யப்பட்டது எனவும் கூறினார். மக்களை மன்றத்தில் இணைந்து ஒருபலமான மன்றமாகா செயற்பட மக்களை அன்புடன் அழைத்தார். கலை ஆசிரியர்களாக யேர்மனியில் கலை பயின்று ஆசிரியர் தரம் எய்தியவர்களுக்கு மட்டும் ஆசிரியர்பதவி வழங்குவதாக மன்றம் தீர்மானித்து அதை நடைமுறைப்படுத்தி வருவதாக பெருமையாக அறிவித்தார். இதற்கு ஒத்துழைத்து வரும் மூத்த ஆசிரியர்களை வாழ்த்தினார்.
தொடர்ந்து யேர்மன் தமிழ் கலாச்சார மன்றத்தின் கலைவகுப்பு மாணவர்கள் நிகழ்ச்சிகள் நடைபெற்றது இதில் சுரத்தட்டு இசை மாணவர்கள் நிகழ்வு நடைபெற்றது இதில் மன்றத்தால் அறிமுகமான இளம் ஆசிரியர் செல்வன் சந்தோஸ் சிவகுமாரன் அவர்கள் மாணவர்களுக்கு மிக திறமையாக கற்பித்துள்ளார் என மக்கள் பாராட்டினார்கள். தொடர்ந்து திரு சிவா, மற்றும் சகான கரோக்கி இசைக்குழு பாடகர் திரு .ஜீவா அவர்கள் பக்திப்பாடல்களைப்பாடினார்கள்.
நடன ஆசிரியைகளின் நடனநிகழ்வுகளில் பரதசூடாமணி திருமதி அமலா ஆசிரியையின் மாணவர்களும்,திருமதி தனுஜா ரமணன் அவர்களின் மாணவர்களும்,கார்த்திகா கனகலிங்கம் அவர்களின் மாணவர்களும்,எசன் நகர நுண்கலைக்கல்லூரி நடன ஆசிரியை திருமதி.நிஷா தர்சன் மாணவர்களும் சிறந்த நடன நிகழ்வைவழங்கினார்கள்.
அடுத்த நிகழ்வாக வாழ்த்துரைகளை எசன் நகர தமிழ் மொழிச்சேவை கலாச்சார மன்றத் தலைவர் திரு சிவாஅருள் அவர்களும், மொழிபெயர்ப்பாளர் திரு றொபின்சன் அவர்களும், ஆன்ஸ்பேர்க் கலாச்சார நிலைய பொறுப்பாளர் திருமதி பெஏக்மன் (Beckmann) அவர்களும்,
sts TV இயக்குனர் திரு.தேவராசாஅவர்களும், itn TV இயக்குனர் ,தமிழ் ரைம்ஸ் பத்திரிகை பிரதம ஆசிரியர் திரு. தவா அவர்களும் சிறப்பு வாழ்த்துரை வழங்கினார்கள்.
கர்நாடக இசை நிகழ்ச்சியில் எசன் நகர நுண்கலைக்கல்லூரி ஆசிரியை திருமதி.ஞானாம்பாள் விஜயகுமார் , மன்றத்தால் அறிமுகமாக்கப்பட்ட இளம் இசை ஆசிரியர் சுரேக்கா செல்வராசா அவர்களும் மாணவர்களும் , திருமதி.விஜயகலா கிருபாகரன் அவர்களும் அவர்கள் மாணவர்களும் சிறந்த இசைவழங்கி மக்கள் பாராட்டைப் பெற்றார்கள்.
அடுத்து விருது வழங்கும் நிகழ்வை மன்ற தலைவர் தொடக்கிவைத்தார். யேர்மன் தமிழ் கலாச்சார மன்றத்தின் விருதாகிய `` இசைக்கலை சாதனைப் பணியாளர் விருது`` யேர்மனியில் பல ஆண்டுகளாக இசை ஆசிரியரயையாக பணியாற்றிய திருமதி.விஜயகலா கிருபாகரன் (கலா ரீச்சர்) அவர்களுக்கு மன்றத்தின் சார்பாக யேர்மனி மற்றும் ஐரோப்பாவில் பிரசித்தி பெற்ற கம் காமட்சி அம்பாள் ஆலய குரு சிவ சிறி பாஸ்கரக்குருக்களும் மன்ற ஆலோசகரும் தமிழருவி ஆசிரியரும் எசன் நகர அறநெறிப்பாடசாலை அதிபருமான திரு திருமதி நயினை விஜன் அவர்களும் இணைந்து மக்களின் பலத்த கைதட்டல் மத்தியில் பொன்னாடை போர்த்தி விருதை வழங்கிவைத்தார்கள். விருதை ஏற்று உரை ஆற்றிய இசைச் சாதனைப்பணியாளர் விஜயகலா அவர்கள் மன்றத்திற்கு நன்றியைக்கூறி இந்தத்தருணம் மகிழ்ச்சியில் எந்தவார்த்தைகளும் பேசமுடியவில்லை என கூறி விருது வழங்கியவர்களுக்கு நன்றி பாராட்டினார்.
ஆன்ஸ்பேக்நகரில் 1996 ஆரம்பகால நடன ஆசிரியை திருமதி. யாமினி ஜீவகன் (செல்வி யாமினி சர்வானந்தன் ) அவர்களுக்கு ``நடன சாதனைப் பணியாளர் விருது `` அவருக்கு வழங்க ஒழுங்கு செய்யப்பட்டது. திடீர்என ஆசிரியை விழாவுக்கு சமூகமளிக்க முடியாத காரணத்தால் அவருக்கான கெளரவம் இவ்வருடம் வழங்கப்படவில்லை. அவரது சேவையை மக்கள் மறக்கவில்லை என்பது உண்மை. இந்நிகழ்வில் சிறப்பு விருந்திரரான வண்ணத்துப்பூச்சி ஆசிரியர் காசி நாகலிங்கம் அவர்களும் அவரது உறவினர் துன்பியல் நிகழ்வுகாரணமாக வரமுடியவில்லை என அறிவித்தார்
மன்ற இசை ஆசிரியர்களை மன்ற பொதுச்செயலாளர் செல்வன் கி. இரசாத் கெளரவித்தார்.
விழா நிகழ்வில் மிகச் சிறப்பு நிகழ்வாக இடம்பெற்ற ``புலம் பெயர்ந்த நாட்டில் பெற்றோர் குற்றவாழிகள்`` என்னும் வழக்காடு மன்றத்தை தமிழ்வேள் திரு நயினை விஜயன் அவர்கள் தலைமை நீதிபதியாக கலந்து கொண்டுடார். இம்மன்றில் வாதிடுபவர்களாக பற்பல மேடைகள் கண்ட பிரபலங்களான விமர்சகர் திரு.சபேசன் அவர்கள் , ஈ.ரீ.ஆர் தமிழ் வானொலி இயக்குனர் திரு.ரவீந்திரன் அவர்கள், அறிவிப்பாளர் திரு.முல்லை மோகன் அவர்கள், எழுத்தாளர் திரு.ஏலையா முருகதாசன் அவர்கள் , கவிமாமணி திரு.குகதாசன் அவர்கள்,பண்ணாகம் .கொம் பிரதம ஆசிரியர் திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களும் கலந்து மிக கருத்தாழம்மிக்க கலகலப்பான வழக்காடு மன்றமாக நடைபெற்றது இந் நிகழ்வை மக்கள் மிக மிக கலகலப்பாகவும் பலர் விவாதம் மேலோங்க உணர்ச்சி வேகத்தில் பார்வையாளர்கள் தமது கருத்தையும் வெளிப்படுத்திய பாங்கு நிகழ்வு மக்களை ஆழமாக கவர்ந்தது எனலாம். விழாவின் இறுதியில் மன்றப் பொதுப்பணி செயலர் திருமதி.சர்வாஜினி அவர்களின் நன்றியுரையுடன் விழா இரவு 21.30.மணிக்கு நிறைவாகியது.
மகிழ்ச்சியான கலைநிகழ்ச்சிகள் அனைத்தும் சிறப்பாக இருந்தது அனைத்து கலைநிகழ்வையும் இரு இளம் பெண் அறிவிப்பாளர்கள் செல்விகள் டனுஷா பேரின்பமூர்த்தி ,செல்வமீனா கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சிறப்பாக தொகுத்து வழங்கினார்கள். மக்களுக்கு அவ்வப்போது சிற்றுண்டிகளை மன்ற இளையோர் அணித் செயலர் செல்வி பாபிதா பாலேஸ்வரன் அணியினர் மன்ற நிர்வாகிகள் ஒத்துழைப்புடன் வழங்கினார்கள். நிகழ்வில் கலந்த அனைவருக்கும் பாராட்டுப் பட்டயம் விழா அதிதிகளால் வழங்கப்பட்டது .விழாவை சிறப்பாக மன்ற அங்கத்தவர்கள் இணைந்து நிகழ்ச்சியை நடாத்திய யேர்மன் தமிழ் கலாச்சார மன்றத்தின் நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள்.
இந்த விழா நிகழ்வுகள் அனைத்தையும் sts TV , itn TV நிறுவனங்கள் படப்பிடிப்பு செய்துஉள்ளனர் அவர்களுக்கும் மன்றம் பாராட்டும் நன்றிகளும் தெரிவித்தது.
.... அவை அரங்கன்..