WELCOME TO PANNAGAM.COM & PTV

பண்ணாகம் இணையம்

இலக்கியச்  செம்மல்கள்  பதிவு

   நாமறிந்தவரை நாடறியச்செய்வோம்!!! 

இலைமறைகாயாக உள்ள சமூகசேவையாளர்களின் பதிவு

நாமறிந்தவரை நாடறியச்செய்வோம் !!! 

இலைமறைகாயாக உள்ள சமூகசேவையாளர்களின் பதிவு

ஒரு மனிதன் தன் வாழ்நாளில் பெரும்பகுதியை தன் வாழ்வியலுக்காகவும், வாழ்வாதாரத்துக்கும் செலவாக்கிட, பொதுநலம் சார்ந்து தன்னாலானதை சமூகத்துக்கும், கலைகளுக்கும்,பொதுப்பணிக்கும் செலவிடுகிறான். எழுத்தாளர்களாக,கலைஞர்களாக,ஆன்மீகத் தொண்டர்களாக,  கவிஞர்களாக நாட்டுப்பற்றாளர்களாக.....
ஆங்காங்கே வாழும் இவ்வாறான மனிதர்களால்தான் உலகமே சுழன்றுகொண்டிருக்கிறது.

இவர்களின் உழைப்பு,பணி என்பன காலக்கிரமத்தில் காணாமலோ,மறந்தோ,மறைக்கப்பட்டோ போய்விடுகின்றன.குறிப்பாக புலம் பெயர் தேசங்களில், இவ்வாறு காணாமல் போனவர்கள் பல ஆயிரம் பேர்.இவர்களைப்பற்றிய சிறு சிறு குறிப்பாதல் அடுத்த சந்ததிக்குத் தெரியப்ப்டுத்தப்படல் வேண்டும். 

இவர்கள் பற்றிய தகவல்களை தொடராக பதிவதற்கு  தம்முயற்சியை தொடர்கிறார்கள். தமிழருவி ''தமிழவேள்'' திரு.நயினை விஜயன். ''அவைத்திலகம்'' திரு.பாலா,   ''ஊடகவித்தகர்'' பண்ணாகம் திரு. இக.கிருஷ்ணமூர்த்தி, ஆசிரியை திருமதி.சசிகலா விஜயன் அவர்களும் கரம் கோர்த்திருப்பது மட்டற்ற மகிழ்ச்சி. நாம் கலை இலக்கிய படைப்பாளிகள்  சங்கத்துடன்  இணைந்து பயணிப்போம்.
-----------------------------------

இலக்கியமே இலக்காக இணைந்து வாழும், இலட்சியத்தம்பதிகள் ராஜ்சிவா - நிம்மிசிவா தம்பதிகள் இவ்வார இலக்கியச்சோலையில் உலா வருகிறார்கள். (5)
---------------------------------------------------------------------
கிழக்கின் உதயம் திரிகோணமலையில்,வி.ராஜரட்ணம் வழக்கறிஞர்,மனோன்மணி தம்பதிகளின் ,அருந்தவப்புதல்வனாக,நிரைகழலரவம் நித்திலம் கொழிக்கும் கோணமாமலையில் பிறந்த ராஜ் சிவாவுக்கு கல்வியூட்டி, கலை இலக்கியங்களைக் கற்றுக்கொடுத்தது யாழ் -பருத்தித்துறை காட்லிக் கல்லூரி !!!..கல்வி கற்குங்காலத்திலேயே முளையில் தெரிந்த பயிராக அனைவராலும் அறியப்பட்டவர்.கவிதை, பேச்சுப்போட்டி என , மேடைகள் பல கண்டவர்.வாழ்த்துக்களை அள்ளிக்கொண்டவர்.
தாயகச்சூழல் அடித்து துரத்த 1984ல் யேர்மனி வாறண்டோவ் நகரில் அடைக்கலம் தேடினார். கொம்.டிசைனர் விங்லஸ் நிறுவனத்தில் 21 ஆண்டுகள் வேலை. பெளதிகம்,கணிதம்,போன்ற பாடங்களில்,மிக ஆர்வம், உலகியல் விஞ்ஞானம்,ஆராய்ச்சித் தேடல் , உந்தித்தள்ள,தமிழில் இலகுவாக ஆராய்ச்சிக்கட்டுரைகள் எழுத முடியும் என்ற உந்துதலால், நான்கு நூல்கள் பிறந்தன, இலக்கிய உலகம் கண்களை அகலத்திறந்தது...ஆச்ச்சரியப்பட்டது.1.எப்போது இந்த உலகம் அழியும்.2012
2.இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன,2013, 3.இறந்தபின்பும் இருக்கின்றோமா.?2014.
4.நிலவில் ஒருவன். 2014.
உயிர்மை பதிப்பக உரிமையாள்ர்,மனுஷ்யபுத்ரன் வெளியிட்டுப் பெருமைகொண்டது.இவர் புகழும் இலக்கிய உலகம் கண்டது.சென்னைப் புத்தகக்கண்காட்சியில், முதல் 10 ல் - முதல் 5 க்குள் தேர்வாகி சாதனை படைத்தது...அரிய நிகழ்வு.ஜன்னல் சஞ்சிகையில், அவர்கள் என்ற ஆராய்ச்சித் தொடர் 36 வாரங்கள் ..வெளிவந்தது.உயிர்மை என்ற பத்திரிகையில், இவரது 80 கட்டுரைகள் வெளிந்துள்ளன. அதுமட்டுமா...ஆனந்தவிகடன்,ஜூனியர் விகடன்,குங்குமம்,ஆந்தவிகடன் ..ஆண்டுமலர்...மலையாள மனோரம்மா வில் பல கட்டுரைகளென எழுதிக்குவித்துள்ள ராஜ்சிவா, அமைதியும் தன்னடக்கமும் மிக்க ஒரு ஈழத்து எழுத்தாளர் என்பதில் நமக்கும் பெருமையல்லவா.தமிழ்- ஹிந்துவில் 3 கட்டுரைகளும் வரைந்திருக்கும் இவரது 6 நூல்கள்,வெளியீட்டுக்குத்தயாரான
நிலையில்.....புதுச்சேரிப் பல்கலைக்கழகம் வெளியிடக் காத்துள்ளது.தான் கற்ற ஹாட்லிக் கல்லூரி.....வரலாற்றை ஒரு நூலாக்க வேண்டுமென்பது...இவரது எதிர்கால இலக்கு.!!. இவரது இலக்கியப்பணியை போற்றி காட்லிக்கல்லூரி சஞ்சிகை இவரது புகைப்படத்தை அட்டைப்படத்தில் பிரசுரித்து மதிப்பளித்துள்ளது....குறிப்பிடத்தக்கது....இவரது பணி மென்மேலும் வளரவும்... ஈழத்து எழத்தாளர்களின் இலக்கிய வட்டம் தமிழகம் வரை பரவவும்,உலகத்தமிழர்கள்.. ஆதரிக்கவும் நாமும் வாழ்த்துவோமே. இலக்கியச்சோலைக்காக ---ஆசிரியை..சசிகலா நயினை விஜயன்.அடுத்து திருமதி.நிம்மிசிவாவின் இலக்கியப்பயணம்...தொடரும்...!!!!

நாமறிந்தவரை நாடறியச்செய்வோம் !!!
வாழும் போதே வாழ்த்துவோம் !!. 

இலக்கியச்சோலையின் நறுமலர்--.4

அல்லையில் பூத்த கலை முல்லை ....
பன்முகக் கலைஞர் 
அல்லைப்பிட்டி செல்லத்துரை தில்லையம்பலம்..!!

யாழ் -அல்லைப்பிட்டி ..திரு.திருமதி.செல்லத்துரை தம்பதிகளுக்கு ஆடவல்லான் தில்லையம்பலத்தானின் நல்லருளால் .1946ல், பெற்றெடுத்த தம்மைந்தனுக்கு தில்லையிலாடும் அம்பலக்கூத்தனின் பெயரையே வைத்து ..தில்லையம்பலம் என நெஞ்சமெலாம் மகிழ அழைத்து மகிழ்ந்தனர் பெற்றோர். ஆடற்கூத்தன் சிவனின் அருள் பெற்ற திரு.தில்லையபலம் அவர்கள் ஆரம்பக்கல்வியை அல்லைப்பிட்டி பராசக்தி விதியாலயத்திலும் உயர்கல்வியை, மத்திய கல்லூரியிலும் பயின்றார்,.பாடசாலை விழாக்களிலும் , பாட்டு, நாடகம் என தன் திறமையை வெளிப்படுத்தி வந்தார்.

அதுமட்டுமல்லாது சிரமதானம், கிராமியத் தொண்டுகள் மூலம் தான் பிறந்த மண்ணை, நண்பர்களுடன் இணைந்துஅழகுறப் பேணி வந்தார்.கரைநகர் இந்து கலைமன்றத்துடனும்,வாகீசர் சனசமூக நிலையத்துடனும் இணைந்து , வள்ளுவர் விழா,வாணிவிழா,என பல ஆண்டுகள்... அரும்பணியாற்றியவர். மலர்ந்த வாழ்வு, காதலா கடமையா,மற்றும், பெண்ணாக மாறினால்...எனும் பரிசுபெற்ற நாடகத்தில் முக்கிய பாத்திரமேற்று சிறந்த ..நடிகர் எனும் விருதைப் பெற்றுக்கொண்டார்.

பூதத்தம்பி வரலாற்று நாடகத்தில் வில்லன் பாத்திரம், பண்டிதர்கள்,க,வ,ஆறுமுகம்,நாட்டுக்கூத்துக் கலைஞர் முத்து தில்லைநாதன் ஆகியோரின் நெறியாள்கையில் பல நாடகங்களை மேடையேற்றியுள்ளார். பூதத்தம்பி வரலாற்று நாடகம்...இவரது கலைவாழ்வின் திருப்புமுனை. போத்துக்கேயதளபதி அந்திரியாஸ் கடற்கோட்டை அமைத்த காலத்தில், , பூதத்தம்பியின் விருந்துண்டு, அவர் மனைவிமேல் காதல் கொண்டு பலவிதமான பரிசுப்பொருட்களை அனுப்புகிறான்,.. அனைத்தையும் , திருப்பியனுபியதோடு, பதிலுக்கு விளக்குமாறையும், செருப்பையும் அவள் அனுப்பிய செய்தியை இந்நாடகத்தில் காணலாம். இறுதிவரை அவன் காதலை ஏற்றுக்கொள்ளாத அவளின் சாபத்தால், அந்திரியாஸ் முருகண்டியில் யானை தாக்கி மரணமடைகிறான்.இந்த வரலாற்று நாடகம் பல தடவைகள் மேடையேறியது.தன் வாழ்நாளில் ஊர்போற்ற வாழும் தில்லையம்பலம் அவர்கள்.புலம் பெயர்ந்தும், அவரும் , அவர்களுடைய புதல்வர்கள் , மற்றும் பேரர்கள், பாட்டு , நாடகம், என அனைவரும் கலைக்குடும்பமாக யெர்மனியில் விளங்கி வருகிறார்கள்.இவர்களுக்கு ஊக்க சக்தியாக
பூத்துகுலுங்கும் கலைச்சோலையாக, அவரின் வாரிசுகள், சகல , கலைகளிலும், சிறந்து
விளங்குகிறார்கள்.
புலம்பெயர்ந்தும் கலைகளைத் தொடர்வதும்
பூர்வ ஜன்ம பந்தம்.
தாம் கற்ற கல்வி ஜென்மத்துக்கும் , பரம்பரைக்கும்
தொடர்வது..
இவர்து கலை வாழ்வுக்கு எடுத்துக்காட்டு.
தன் கலைவாழ்வுக்கு உறுதுணையான துணைவியார் திலகவதியை நன்றியோடு நினைத்துக்கொள்கிறார்.
இவரது புதல்வர்களான கண்ணன் ,திருக்கேதிஸ்வரன் பாட்டுத்துறையிலும், மகளார் சுமதி ஆசிரியையாகவும், மருமகள் தனுஜா நாடகத் துறை, மற்றும் அவரது பேரப் பிள்ளைகள், கபிலேசன், கோபிகா, திலக், பவிரா வினுஜா தாரணி, ஆகியோர் பாட்டு, நடனம் நாடகம் என அனைவருமே கலைத்துறையில் கொடிகட்டிப் பறக்கிறர்க்ள்.இன்றும் அவர்களை வழிநடத்தி கலைத்துறைக்கு சேவையாற்றும்... மூத்த கலைஞர் செல்லத்துரை..தில்லையம்பலம் அவர்களை இலக்கியச்சோலையும், உங்களோடு இணைந்து வாழ்த்துவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறது .
நீங்களும் வாழ்த்தலாமே !!!! இலக்கியச்சோலைக்காக...


தமிழருவி நயினை விஜயன்.

நாமறிந்தவரை.... நாடறியச்செய்வவோம்...!
இலக்கியச்சோலை- 3 
அவைத்திலகம்  பாலா...
அறிவிப்பாளர் பன்முக கலை ஆளுமை.
------------------------------------------

ஆம்.. மாவின் கனி தூங்கும் பொழில் மாதோட்ட நன்னகர் ஒருபுறம் ... ஆலய மணி ஓசை அரவணைக்கும் மடு மாதா ...தேவாலயம் ஒருபுறம் என இறையருள் கொட்டிக்கிடக்கும் மன்னார் மாநகர் அடம்பனில்,ரங்கசாமி செல்லம்மா தம்பதிகளுக்கு செல்லப்பிள்ளையாக, பிறந்தவர் பாலா என அன்போடு அனைவரும் அழைக்கும் பாலசுந்தரம் அவர்கள்.ஆரம்பக்கல்வியை அடம்பன் றோமன் கத்தோலிக்கப் பாடசாலையிலும், உயர் கல்வியை அடம்பன் ம.மகாவித்தியாலயத்திலும் பயின்றவர்.கல்லூரிக்காலங்களில்,இவரது, பேச்சுத்திறனும், நாடகம் கவிதை, நாட்டுக்கூத்து ,போன்றவற்றில் இவர் வெளிப்படுத்திய கலைவெளிப்பாடுகள், இலக்கிய மேடைகளைச் சிறப்பாக அலங்கரித்தன..!! மாணவ்ர்கள் ஊரவர்கள் மத்தியில்
மிகப் பெரிய பிரபல்யத்தை தந்தன.அதன் விளைவால் இலங்கை வானொலியில் இசையும் கதையும்,இன்றைய நேயர் வாலிபர் வட்டம்,ஒலிமஞ்சரி போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று பலரின் பாராட்டுக்களையும்... அள்ளிக்கொண்டவர்.இலங்கை வானொலியில் அறிவிப்பாளர் பதவி தேடிவந்த தினமே ...நாட்டில்
இருந்து வெளியேறினார்...! கலைத்தாகம் கொண்டவர் கலைக்காகவே வாழ்வர் என்பதற்கிணங்க, புலம்பெயர்ந்து ஒரு வருடத்திலேயே. 1985 ல்.யேர்மனியில் பிரபலமாக இருந்த
சுபெர்மிக்‌ஷ், சப்தஸ்வரா போன்ற இசைக்குழுக்களில் அறிவிப்பாளராகி 250 க்கும் மேற்பட்ட மேடைகளை அலங்கரித்தவர்.பல அரங்கேற்ற மேடைகள் இவரது அறிவிப்பால் சிறப்படைந்தன.எனது புதல்வர்களான மிருதங்க வித்வான்கள் நகுஷாந்த் அனுஷாந்த், ஆகியோரின் மிருதங்க அரங்கேற்றத்திற்கு அறிவிப்பாளராக...சிறப்புச்செய்தவர்.அறிவிப்புத் துறையில் மட்டுமல்ல, பல நாடகங்களை தயாா்ித்து ஒளிவிழாக்களில் , கலைவிழாக்களில் மேடையேற்றியவர்.தமிழருவி, ஈழநாடு பத்திரிகைகளில்..சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் என ,தயாநந்தி என்ற புனை பெயரில்

பல ஆக்கங்களை எழுதியவர்.மன்னார் மாவட்ட ,நாட்டுக்கூத்து கலை குறித்து பல தகவல்களை சேகரித்தவர்.இவர் எழுதிய ´´அடிமை வியூகம் ´´ எனும் நாவலை யேர்மனி வண்ணத்துப்பூச்சி நிறுவனம் வெளியிட்டுப் பெருமை கொண்டது. தாயக நினைவுகள் சுமந்து பல ஆக்கங்களை எழுதியவர். பன்முக ஆற்றல்கொண்ட பாலா அவர்களுக்கு , பிரான்ஸ் தமிழ் கலைஞர் ஒன்றியம்.. `´அவைத்திலகம் ´´ எனும் விருதை வழங்கிச் சிறப்பித்தது.யெர்ர்மனியில் 300 க்குமதிகமான நிகழ்ச்சிகளை தொகுத்தளித்திருக்கிறார்.இவரது முன்னேற்றத்துக்கு இவரது துணைவியார்...வனஜா பாலா, உற்றதுணை என்பதில் உள மகிழ்வோடு புன்னகை செய்வார். மன்னாரில் இருந்து வெளிவரும் மன்னா பத்திரிகைக்கும் நீண்டபல ஆண்டுகளாக வாசகராக இருந்துவருகிறார்.
தன் கலையுலக வளர்ச்சியில் உறுதுணையான
இரங்கும் இல்லம் சிவனடியான் ஸ்ரீபதி, கலைவிளக்கு வீடியோ பாக்கியநாதன், தமிழருவி நயினை விஜயன், வண்ணத்துப்பூச்சி காசி, மற்றும் சுப்பர் மிக்‌ஷ்,சப்த்தஸ்வரா இசைக்குழு இயக்குனர்களையும் ..இதயம் கனிந்த நன்றியோடு எப்போதும் நினைவு கூருவார்.
இவரது ஒரே புதல்வி காஸ்டின் கேதாரணி , யேர்மனி தமிழ் ரைம்ஸ் பத்திரிகையில் எழுதிவருகிறார்.தமிழில் கட்டுரை எழுதக்கூடிய இளையோர் சிலரில் இவரும் ஒருவர். வயது 14 தான்.
itr வானொலியில் யேர்மனி கலையகத்திலும் பணியாற்றியவர்.இவரது ஆற்றலால் பயனடைந்தவர்கள் ஏராளம்.அவைத்திலகம் பாலா அகத்திலகமும் கூட. பன்முக ஆற்றல் கொண்ட அவைத்திலகம் பாலாவை இலக்கியச்சோலைக்கூடாக ..பணி தொடர வாழ்த்துவோமே.! 


இலக்கியச் சோலைக்காக -தமிழருவி நயினை விஜயன்.

நாமறிந்தவரை  நாடறியச்செய்வோம். 

                               இலக்கியச்சோலையின்- மலர் ..2                            8.2.2018


திருமதி.கெங்கா தேவி ஸ்ரான்லி டேவிட்

யேர்மனி.
செந்தமிழ்ப் பணியாளர்கள் முத்தையா கற்பகம் தம்பதியருக்கு நல்லூர் சங்கிலியன் தோப்பில் பூத்தமலர்.இளமையில் கல்வி செங்குந்தாவில் உயர்தரம் வரை.

தனியார் பாடசாலையில் தமிழ் , ஆங்கிலம் போதானாசிரியர்.பின்னர் தாதிப் பயிற்சி, முதியோருக்கு உதவும் குணத்தால்,பராமரிப்பு நிலையத்தில் கடமை.தாயகத்தில் இலக்கிய தாகம் கொண்டு சஞ்சிகை, பத்திரிகைகளில் கவிதைகள் வடித்தவர், கட்டுரைகள் பல தாங்கிப் பத்திரிகைகள் பெருமை கொண்டன.நடனம் , நாட்டியம், தாளலயம், என கலைகளின் வடிவங்களில் மாணவர்களை உருவாக்கியவர். அன்புக்கணவர் ஸ்டான்லி டேவிட் தன் இலக்கியத் தேடல்களுக்கு ஆக்கமும் , ஊக்கமும், தரும் பேறுபெற்றவர். மலேசியாவில் நடந்த கவிதைப்பெருநிகழ்வுக்கு சிறப்புக் கவிதை அனுப்பிப் பாராட்டுப் பெற்றவர்.

பட்டிமண்டபங்களில் எதிரணியினரை கிறங்க வைப்பவர்.புன்னகையை எப்போதும் அணிந்தவர்...இன்பத்தமிழை ..அடுத்தசந்திக்காய்.... தமிழாலயத்தில் ஆசிரியப்பணி.ஒரேமகன் நிரோஷான் டேவிட் பொறியியலாளர். உ.த.ப.இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டவர்...இலக்கியத்தால் தமிழுக்கு அணிசெய்பவர்.காற்றலைகள் பல தடவைகள் இவரது கவிதைகளைச் சுமந்திருக்கின்றன.முதியோர்பால் அன்பு கொண்டவர். அதனால் சிறப்புப் பயிற்சி பெற்று ...முதியோர் இல்லத்தில் பராமரிப்பாளர்..!!!.சமூகம் , தமிழ்,இலக்கியம், மனித நேயம் எனத் தன் வாழ்நாளை நகர்த்தி்க்கொண்டிருக்கும் சகோதரி கெங்காவை வாழ்த்துவோமே பணிதொடர.!!!! -
-தமிழருவி நயினை விஜயன் இலக்கியச்சோலைக்காக... !

நாமறிந்தவரை  நாடறியச்செய்வோம். 

                           இலக்கியச்சோலையின்- மலர்  -1                   7.2.2018

பன்முக ஆற்றலாளர் யேர்மனி சோஸ்ற் - ஆசிரியை திருமதி இந்து தெய்வேந்திரம்.

ஈழத்து மல்லாகம் மானிமனை ராமலிங்கம் அன்னலட்சுமி ஈன்ற முத்துக்களில் ஒருவர். ஆரம்பக் கல்வியை மல்லாகம் இந்துக்கல்லூரி..... உயர்தரம் வரை ராமனாதன் மகளிர் கல்லூரி.......கல்வியிலும் கலைகளிலும் மேடைகள் பல, கண்டவர் கண்களைக் கொள்ளை கொண்டவர்.புலம் பெயரமுன் தனியார்துறை கல்வி நிறுவனத்தில் ஆசிரியப்பணி.
1985ல் யேர்மனியில் பதியம் ..புன்னாலைக்கட்டுவன் வடக்கு தந்த தெய்வேந்திரம் கரம் பற்றி மீண்டும் மிடுக்கோடு கல்விப்பணியும், தமிழ்ப்பாடசாலை பொதுப்பணியும்.சோஸ்ற் நகரத்தில், கல்வி கலாச்சார அமைப்பு , அதனூடு பல பணிகள் தொடுப்பு.ஆன்மீகப் பணி ,கல்வி, கலை,  விளையாட்டு என ஓயாத பணி.கணவரும் நண்பர்களும் கரம் கொடுக்க,அண்மையில் 25 ஆவது ஆண்டு வெள்ளிவிழா கண்டவர்,.தன் பணியை ஊருக்குள் மட்டும் முடக்காது, உ.த.ப.இயக்கம்,உலகத்த்மிழ்ப் பாராளுன்மன்றம் மகளிர் பிரிவு ,யேர்மன் சர்வதேச நாட்டவர் குடியேற்றச் சபை,என பணிகள் ஏராளம்....

ஓய்வில்லா உழைப்பு அவருக்குக் கிடைத்ததோ அளவிலா ஆத்மதிருப்தி.நாடகம், வில்லுப்பாட்டு, கோலாட்டம், கும்மி என தமிழர் கலைகள், அத்தனையும் அத்துப்படி, அத்தனையும் அள்ளிக்கொடுத்தார், தன் எண்ணப்படி.அனைத்துமே இலவசமாக சொன்னபடி..அன்புக்கணவரின் ஒத்துழைப்பும், உறுதுணையும்,நட்பு வட்டத்தின் அன்பும் நம் எதிர்காலச்சந்ததிகளுக்காக, இருக்குவரை பணிசெய்வதே என் பெரு நோக்கமெனக்கூறும், சகோதரி இந்துவை நாமும் பாராட்டுவோம் பணிசெய்ய வாழ்த்துவோம்...!!!