
திரு.கிருட்ணமூர்த்தி
Mr. Krishnamoorthy
59846 SUNDERN
GERMANY.
இணைய தொழில்நுட்பம்
. திரு.அருண் ( மேற்பார்வையாளர் சுவீஸ் )
பண்ணாகம் செய்தியாளர்கள்/படப்பிடிப்பாளர்கள்
. திரு.தில்லையம்பலம் .கிளிநொச்சி
''Udaga vithagar''. Mr.Krishnamoorthy pannagam
ஊடகவித்தகர் பண்ணாகம் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் புலம் பெயர்ந்த தேசத்தில் சமூகப்பணிகளின் பயணம் ஒரு பார்வை. யேர்மனியில் 1991 முதல்...
எழுத்து உருவாக்கம் திரு.இராமநாதன்.
திரு.கந்தசாமி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஊடகவியலாளர், எழுத்தாளர், பேச்சாளர், நமது இலக்கு பத்திரிகை முதன்மை ஆசிரியர்2005, ஐரோப்பிய தமிழ் வாசகர் வட்ட இயக்குனர் 1992, சோலை சஞ்சிகை ஒலிப்பேளை உருவாக்க இயக்குனர்1993, தமிழ் எழுத்தாளர் இணையகம் ஒருங்கிணைப்பாளர், யேர்மன் தமிழ் கலாச்சார மன்றத் தலைவர் 2017, மேடைநாடக நடிகர், தொலைக்காட்சித் தொடர்நாடக நடிகர், பண்ணாகம்.கொம் இணையத்தள பிரதமஆசிரியர்2006, தமிழ் ஆசிரியர், பன்னாட்டு புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றிய நிர்வாக உறுப்பினர்2004 போன்ற சமூக சேவைகளில் ஈடுபட்டுவருபவருமான செந்தழிழோன் பண்ணாகம் திரு.இக.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பற்றிய ஒரு சில குறிப்புகளை நான் எழுதுவதில் பெருமைப்படுகிறேன்.
புலம்பெயர் நாட்டில் பொது அமைப்புகளில்
இவர் பணிகள்.
யேர்மனி வருகை 1991ம் ஆண்டு
1.ஐரோப்பிய தமிழ் வாசகர் வட்ட இயக்குனர்.
2.யேர்மன் தமிழ் கலாச்சார மன்றத் தலைவர்.
3.பன்னாட்டுப் புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றிய நிர்வாக செயற்பாட்டாளர்.
4.தமிழ்ப் பாடசாலையின் ஆசிரியர்.
5.பண்ணாகம்.கொம் இணைய பிரதம ஆசிரியர்.
6.யேர்மனியில் முன்னாள் நமது இலக்குப் பத்திரிகை முதன்மை ஆசிரியர்.
7.தமிழ் இணைய அகத்தின் அமைப்பாளர்.
8.சோலை ஒலிச் சஞ்சிகை இயக்குனர்.
9. நலவாழ்வு அமைப்பு அனுசரனையாளர்.
10. உலகத் தமிழ் எழுத்தாளர்கள் சிறுகதைப் போட்டி 2020 அமைப்பாளர்.
11.விழுதல் என்பது எழுகையே என்னும் உலகத்தமிழ் எழுத்தாளர்களை இணைத்து எழுதிய நாவலின் இணை அமைப்பாளர்.என இவர் பணிகள் தொடர்கிறது.
இவர் இதுவரையில் பெற்ற விருதுகள்.
1.ஊடகவித்தகர் விருது 2017
2.வாழ்நாள்சாதனையாளர் விருது2019
3.வாசகர்வட்ட விருது 2019
4.உலகசாதனை (24 மணி, 9மணி நேரபேச்சு) விருதுகள் இரண்டு 2020, 2021
5.சிறந்தஆசிரியர் விருது 2014, 2019
6.செந்தமிழோன் விருது 2021
தனது மனதிற்கு தோன்றிய வற்றை காலத்தின் தேவைக்கேற்றவாறு அவ்வவ்ப்போது எழுதிய போது அவற்றை நூலாக வடிக்க பல முயற்சி எடுத்தும் முடியாது முடங்கிக்கிடக்கிறது என கவலைப்படுவார்.. இதில் நாடகங்களைக் குறிப்பிடலாம் இதுவரை பதினைந்துக்கு மேற்பட்ட நாடகங்களை எழுதி இயக்கியும் சிலநாடகங்களில் நடித்தும் உள்ள்ளார். அந்தவகையில் 1982ம் ஆண்டில் தனது ஊரில் நடைபெற்ற பெளர்னமிவிழாவிற்காக `´வேலையாள் வேண்டும்´´ என்ற சமூகநாடகத்தை எழுதி பெண் பிள்ளைகளை நடிகர்களாக்கி தனது இயக்கத்தில் முதன்முதலில் மேடையேற்றிபோது தனது எழுத்திற்கு ஆரம்பமானது. இவ் நாடகம் யாழ் மத்திய கல்லூரியில் நடைபெற்ற யாழ் மாவட்ட நாடகப்போட்டியில் பங்கெடுத்து மூன்றாம் இடம் வெற்றிபெற்றதையும் மறக்கமுடியாது. எனக் கூறினார்.
இதன்பின்னர் யாழ் ஈழமுரசுப் பத்திரிகையின் நிருபராக சிலகாலம் கடமையாற்றி நாட்டின் கலவரங்களால் அவரது எழுத்துத் துறை சிலகாலம் பின்தள்ளப்பட்டது. 1991 புலம்பெயர்ந்து யேர்மனியில் காலடிவைத்தபோது இங்கு பல கையெழுத்து, தட்டச்சு போன்ற வடிவில் பல சஞ்சிகைகள் பலர் அவரவர் எண்ணங்களுக்கேற்ப தங்கள் நண்பர்கள் வட்டத்துக்கு உள்ளே வெளியிட்டதைக் காணக்கூடியதாக இருந்தது. ஐரோப்பா நாட்டில் கிட்டத்தட்ட 25க்கும் அதிகமான சிறு தமிழ் சஞ்சிகைகள் 1991 காலப்பகுதியில் வெளிவந்தது அவற்றை ஒன்றினைக்கும் நோக்கில் ஐரோப்பிய தமிழ் வாசகர் வட்டம் என்ற அமைப்பை 1992ம் ஆண்டு உருவாக்கி பல ஐரோப்பா நாடுகளில் வெளியான சஞ்சிகைகளை அனுகி ஒரேபாதையில் தமிழ் மக்கள் அபிலாசைகளை மேம்படுத்த எழுத்துக்களை வெளியிட கோட்டுக்கொண்டதற்கிணங்க 19 சஞ்சிகைகள் ஒருமுகமானது அது அவருக்கு கிடைத்த வெற்றியாகும். இவரது இச்சேவைக்கு ஊக்கமும் ஆதரவும் கொடுத்த ஊடகங்களில் பின்வருவன முக்கியமானவையாக திகழ்ந்த்து கலைவிளக்கு, தமிழருவி, பரீஸ் ஈழநாடு, வெற்றிமணி, வண்ணத்துப்பூச்சி, ஏலையா, கடல் போன்றவை போல மேலும் பலர் ஒத்துழைப்பு வழங்கினர். இதே காலப்பகுதியில் புலம்பெயர்ந்த தேசத்தில் வேலை வேலை என அலையும் மக்களால் வாசிக்க என நேரம் ஒதுக்குவது இங்கு சிரம்மாக உள்ளதை சிலர் சுட்டக்காட்டினர் அதனால் ஐரோப்பிய தமிழ் வாசகர் வட்டத்தில் அவர் எண்ணத்தில் உருவானது தான் சோலை என்ற ஓடியோ சஞ்சிகை. சோலை எனப் பெயர் கொண்டு 22.5.1993 இல் யேர்மனி சோஸ்ட் நகரில் வெளியிடப்பட்டது. இதற்கு பக்கபலமாக ஒலிநாடாக்களில் ஒலிப்பதிவுகள் செய்வதற்கு ஈழம் பத்திரிகை ஆசிரியர் திரு.இராசகருணா இணைந்து செயற்பட்டார்.. ஒரு எழுத்து சஞ்சிகையில் எனென்ன விடயங்கள் உள்ளதோ அவை அனைத்தையும் ஒலி வடிவில் பதிவு செய்து ஒலிச் சஞ்சிகையாக்கி மக்கள் அவரவர் வாகனத்தில் செல்லும்போது கேட்கக்கூடியதாக தமிழ் உலகில் முதல்முறையாக அமைத்தபெருமை கிருஷ்ணமூர்த்தி அவர்களையேசாரும். இது ஒரு வித்தியாசமான செயலாக பலரால் பாராட்டப்பட்டது இச்சஞ்சிகைகள் பலவற்றில் நான் எழுதிய கவிதைகள் வெளிவந்திருந்தது.
2005ம் ஆண்டு சர்வதேச புலம்பெயர் தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தினர் திடீர் என ஒருநாள் அவரது இல்லம் சென்று தாம் யேர்மனியில் வெளியிட இருக்கும் `` நமது இலக்கு`` என்னு பத்திரிகைக்கு முதன்மை ஆசிரியராக கடமையாற்ற அழைத்தபோது இந்தப் பாரிய பொறுப்பை ஏற்பதா விடுவதா எனக் குழம்மிய வேளை உங்களால் முடியும் என உற்சாகம் கொடுத்து அந்த முதன்மை ஆசிரியர் பொறுப்பில் அமர்த்தினர். 19 பக்கங்கள் கொண்ட நமது இலக்கு பத்திரிகையை இரவுபகல் பாராது செய்திகள் எழுதி வடிவமைத்து அச்சு ஏற்றி வெளியிட்டார். இதில் பல அறிஞர்கள் ,தமிழ் ஆர்வலர்கள் அவருடன் கைகோர்த்து நின்றதை மறக்கமுடியாதுள்ளது. இப்பத்திரிகைக்காக பரீஸ் ரீ ரீ என் தொலைக்காட்சியினர் இவரை அழைத்து நேர்முகம் ஒன்றை நேரடியாக ஒளிபரப்பு செய்து யாவரும் அறிந்ததே. இப்பத்திரிகைச் செயற்பாட்டிற்காக 2005இல் தாயக பயணம்மேற்கொண்டு யாழ்பல்கலைக்கழகத்தில்
பல்கலைக்கழக தமிழ்ப் பீடாதிபதிகளுடன் கலந்துரையாடி அங்கு உரையாற்றியமையும் குறிப்பிடத்தக்கது. இது பற்றிய ஆய்வுக்கட்டுரையை நமது இலக்கு பத்திரிகையில் தொடராக வெளியிட்டு வந்தார்
இதற்கு உறுதுணையாக எழுத்தாளர் ஒன்றியச் செயலாளராக இருந்த திரு சு.பாக்கியநாதன் அவர்களின் செயற்பாடு அமைந்தது.
தமிழ் எழுத்தாளர் இணைய அகம் உருவாக்கிய பின்பு 15.06. 2014 லிருந்து 10.07.2015 வரை. „விழுதல் என்பது எழுகையே' என்ற நெடுந்தொடர் இலக்கியப்பயணத்தில் உலக நாடுகளிலிருந்து இணைந்து கொண்ட 26 எழுத்தாளர்களுடன் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களும் இணைந்து எழுதிய ஒரு சிறந்த வாராந் தொடரை 2020இல் பலரது முயற்சியில் நாவலாக அச்சேற்றி பெருமை கொண்டார்.
2006ம் ஆண்டு ஆரம்பித்து 16வது வருடமாக ஊடகவித்தகர் கிருஷ்ணமூர்த்தியை பிரதம ஆசிரியராகக் கொண்ட பண்ணாகம்.கொம் தனது 10வது ஆண்டுவிழாவில் யேர்மனியில் வாழும் எழுத்தாளர்கள், சஞ்சிகை ஆசிரியர்களை அழைத்து அவர்களுக்கான விழாபோல் அவர்கள் அனைவரையும் பாராட்டி,வாழ்த்தி கெளரவித்ததை இன்றும் பலர் மறக்கமுடியாத நிகழ்வாக கருதுகிறார்கள். தமது விழாவை மற்றவர்கள் விழாவக்கி இன்புற்ரவர் இவராவார்.
யேர்மனியில் தமிழ் கலாச்சாரங்களை யேர்மன் மக்களுடன் அறிய மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தால் யேர்மன் தமிழ் கலாச்சார மன்றத்தை உருவாக்க முயற்சித்தபோது பலர் ஆதரவு வழங்கியபோதும் எசன் நற்பணிமன்ற இயக்குனர் திரு நயினை விஜயன் அவர்கள் வழங்கி ஊக்கத்தில் ஆன்ஸபேர்க் நகரில் மன்றத்தை பதிவு செய்து இவர் தலைவர் பெறுப்பேற்று மிக திறப்பட கலைவகுப்புகள், சமயவகுப்புகள், சந்திப்புகள், விழாக்கள் என நடைபெற்று வருகிறது.
கொரோணா இடர் கலத்திலும் இணையவழிமூலம் மருத்துவ விழிப்புணர்வு கருத்தரங்கங்களுக்கு ஆக்கபூர்வமான ஒழுங்குகளையும், இணையவழியில் தமிழ் கற்பித்தலையும், கலைவகுப்புக்களையும், ஆன்மீக கருத்தரங்கங்களையும், மக்களை உற்சாகப்படுத்த விழாக்களையும் சூம் இணையவழிமூலம் வழங்கி சமுதாய விளிப்புக்களை ஊட்டி வருகிறார்.
திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களின் சேவைகள் தாயகத்தில் பற்பல இருந்தாலும் புலம்பெர்தேசத்தில் எண் கண்முன்னே கண்ட சமூக சேவைகளை இதில் சுருக்கமாக குறிப்பிட்டுள்ளேன். தற்போது பண்ணாகம்.கொம் இணையத்தளம் 16 வருடமாக தொடர்கிறது, இவரது தமிழ் ஆசிரியப்பணி தொடர்கிறது, அதேபோல் எழுத்துப்பணி, கலைப்பணிகள், ஆன்மீகப்பணிகள் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. வாழ்க வளமுடன்.
அன்புடன் அன்பன்
திரு.இராமநாதன்.
அறிவிப்புக்கள்
எமது பண்ணாகம் இணையத்தில் இணைக்கப்பட்ட மற்றைய இணையங்கள் வெளியிடும் செய்திகள்,தகவல்களுக்கு அவர்களே பொறுப்பாளிகள் ஆவார்கள்.
பண்ணாகம் இணையவாசகர்கள் கவனத்திற்கு!!
இது உங்கள் இணையம் பண்ணாகம் இணையத்தில் உங்கள் தனிப்பட்ட நிகழ்வுகள், செய்திகள்பிரசுரம் செய்யவேண்டுமாயின் மின்னஞ்சல் மூலம் அல்லது உரியவர் நேரடியாக அறிவித்தால் மட்டுமே பிரசுரிக்கப்படும் என்பதை இணைய வாசகஅங்கத்தவர்களுக்கு அன்புடன் அறியத்தருகின்றோம்.நன்றி
இணைய நிர்வாகம்
ஓரு நிமிடம் உங்களுடன் .
அன்பான எம் உறவுகளே! நண்பர்களே!
‘‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு‘‘
‘‘அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு‘‘
முதன் முதலாக இணைய உலகத்திலும் ,கூகிளிலும் பண்ணாகம் பெயரை முதலில் பதித்த பண்ணாகம் இணையம் உலகில் 7வது ஆண்டில் கால் பதித்து வலம் வந்துகொண்டிருக்கிறது. இதுவரை காலமும் பண்ணாகம் இணையம் சோர்வின்றி மிக உற்சாகத்துடன் இலவசமாக உங்களுக்கு சேவையாற்றி பெருமிதம் அடைகிறது. மேலும் எம் இணையத்தில் சேவை ரீதியில் செய்திகள் வழங்கிய தாய்நாட்டுச் செய்தியாளர்கள் சிலர் சேவையாக தொடரமுடியாத நிலையில் உள்ளார்கள் எனவே இணையம் பல புதிய செய்தியாளர்களை மாத சம்பள கொடுப்பனவு செய்து தரமான செய்திகளையும்,தகவல்களையும் மிக சிறப்பாக உங்களுக்கு வழங்கவும் இதனால் தாயகத்தில் குறைந்தது 10 பேருக்காவது ஒரு வருமானத்திற்கு வழிகாட்டவும், அவர்களுக்கு ஊடகத்துறை தொடர்பான அனுபவத்தை ஏற்படுத்தவும் இணையத்தை மீண்டும் புதிய பொலிவுடன் உடனடிச் செய்திகள்,படங்கள்,தகவல்கள் தாங்கி புதுமையுடன் 2013 ம் ஆண்டு மிக மிக சிறப்பாக வெளிவர செய்கின்ற ஒரு பாரிய சேவைக்கு நமது நிர்வாகம் தயாராகிறது. இதே வேளை எம் இணைய சகல வாசகர்கள், பார்வையாளர்கள் மற்றும் அபிமானிகள் அனைவரும் ஒரு தரமான இணையமாக உலகெங்கும் உலாவரவைக்கும் பணியில் உங்களையும் பண்ணாகம் இணையத்தில் பங்கு கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றோம்.
உரிமையுடன் உங்களை நாடும்
உங்கள் அபிமான பண்ணாகம் இணைய நிர்வாகம்.
1.1.2013
Krishnamoorthy. pannagam கிருஷணமூர்த்தி சில படங்கள்