WELCOME TO PANNAGAM.COM & PTV

பண்ணாகம் இணையம்

கைரேகை பற்றிய  பார்வை.....

கைரேகைப் பலன் உண்மையா?  

(இது ஒரு தொடராக இணையத்தில் எழுதப்படுகிறது எனவே தொடர்ந்து வாசியுங்கள்)

கைரேகை பற்றி உங்களுடன்   EK.சாமி  ஆகிய நான் தொடராக பகிர்ந்து கொள்ள உள்ளேன். 1991ம் ஆண்டில் இருந்து கைரேகைக் கலை,எண்கலை கற்று பல்லாயிரம் மக்களுடன் பலநாடுகளில் பெற்ற அனுபவத்தினால் ஒரு கைரேகை சாத்திர புத்தகம் எழுதவென பலமுறை முயன்றும் நேரமின்மையினால் கைகூடவில்லை. இருந்தும் சிறு சிறு பகுதிகளாக நான் எழுதியவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்வு அடைகிறேன்.இதை வாசித்து உங்கள் கருத்துக்களை பண்ணாகம் இணையத்திற்கு அறிவித்தால்  உங்கள் கருத்துக்களும் பின்னர் வெளிவரும் வரும் புத்தகத்தில் பெக்கிசமாக பதிய எனக்கு ஒரு வாய்ப்பாக இருக்கும்.   

தொடராக வருகிறது கீழ்  பகுதி 1 இல் இருந்து வாசியுங்கள்.                      

(இதனை மறுபிரசுரம் செய்ய தயவுசெய்து பண்ணாகம் இணைய அனுமதியை பெறுங்கள். (ஆக்கஉரிமை EK.சாமி))

நன்றி

 

தொடர்- 5

நேற்று ,இன்று ,நாளை

                ஓரு மனிதன் தான் நாளை எப்படி இருப்பேன் (அதாவது எதிர்காலத்தில்) என்று தான் அறிய ஆவலாக கைரேகை பார்க்க விரும்புகின்றான். இதற்கு சரியான விடையளிக்க வேண்டுமாயின்  அவன் நேற்று எப்படி இருந்தான் இன்று எப்படி இருக்கிறான் என்ற அடித்தளத்தை அவனுக்குக் கூறவேன்டும். அந்த அடித்தளம் அவனுக்கு சரியானதாக அமைந்தால் தான் நளை என்பது அவன் மனதில் நிமிர்ந்து நிற்கும் சொல்லாக இருக்கும்.
(ஓருவன் உயர்வு தாழ்வுக்கு அவன் மனநிலையே முக்கிய காரணமாக அமைகின்றது)
                           நேற்று,இன்று நடந்து முடிந்த செயல்களையும் ,இன்ப துன்பங்களையும் கூறும்போது அது அவனுக்கு சரி,பிழை பார்க்க  ஏதுவாக இருக்கின்றது. நேற்று,இன்று நிகழ்வுகள் சரியானதாக இருக்கும் போது நாளை நடை பெறும் எனக்கூறும் நிகழ்வுகளை அவன்மனம் ஏற்றுக் கொள்கின்றது நம்புகின்றது இதனால் அவன் தன்னை அந்தவழிக்குத் தயார் செய்து வைப்பதால் அவன் பல தவறுகளை தடுக்க முடிகின்றது. அப்படி நேற்று ,இன்று நிகழ்வுகளைக் கூறாது நாளை இப்படி இப்படி தான் நடக்கும் எனக் கூறினால் அதில் அவன் மனம் முழுமையாக நாடாது ஏனோ தானோ என்று இருந்துவிடும் அவனில் மனோ ரீதியான தாக்கங்களை ஏற்படுத்தமாட்டாது ,நம்பிக்கை ஏற்படமாட்டாது என மனோதத்துவ விஞ்ஞானம் கூறுகின்றது.

தொடரும்

தொடர் -4

 

மனம்

http://4.bp.blogspot.com/_bwuUUanIa90/SgQq7sgLLeI/AAAAAAAAAGs/fA_Bq7KM9E8/s400/Meditation.jpg

                   உலகில் எல்லா உயிரினத்திலும் கலந்து இருக்கும் ஓர் உணர்வு மனம் எனப்படுகின்றது. இதில் நல்லது, கெட்டது, உயர்வு, தாழ்வு என்ற உணர்வுகள் ஒரேமாதிரியாக எல்லா உயிரிடமும் காணப்படாது. இதேபோல் இந்தப் பொருள் அல்லது அந்தக் காரியம் தான் உலகில் மிகச்சிறந்தது என சுட்டிக்காட்டவும் முடியாது. ஓருவர் விருப்பம் எனகூறுபோது அது மற்றவர் விருப்பம் இல்லை என கூறிவிடுகிறார். இதில் அந்தக்காரியத்தின் அல்லது பொருட்களின் தன்மையில் விருப்பம் அடங்கியிருக்கவில்லை. மாறாக உயிரினத்தின் உள்ள உணர்வு (மனம்) தான் காரணம். உதாரணத்திற்கு ஒரு மனிதனுக்கு விருப்பம் இல்லாத பொருள் அல்லது காரியம் சில மாதம் அல்லது வருடங்களின் பின் அவருக்கு அது மிகவும் பிடித்ததாக இருக்கிறது இங்கே அந்தப் பொருளின் அல்லது காரியத்தின் தன்மை,வடிவம் மாறவில்லை ஆனால் அது முன்பு பிடித்தமில்லாததாகா இருந்தது இப்போது பிடித்திருக்கிறது என்ற மாற்றம் உள்ளத்தின் உணர்வு (மனம்) என்று தான் கூறமுடியும். இந்த உணர்வுகளின் அதிர்வுகளை சிந்தணைக் கோடாக கையில் கீறப்படுவதையும் நாம் அறியலாம். எனவே உங்கள் மாற்றங்களை கைரேகை வழியாக அறியலாம் என்பது ஓர் பெரிய உன்மையாகின்றது.

இன்பம்,துன்பம்

http://www.skysociety.org.sg/images/chakra.gif

       நாம் ஒன்றை அடையவேண்டும் என தீவீரமாக விரும்பி அடைந்து விட்டால் இன்பம் என்கின்றோம். அதை அடையாவிட்டால் துன்பம் என்கின்றோம்.   நாம் ஒன்றை அதிகம் வெறுப்பதால் அது நம்மைவந்து அடைவதால் துன்பமடைகின்றோம் அது நம்மைவிட்டு அகலும் போது இன்பமடைகின்றோம்.
                            இதற்கு காரனம் நம்முடைய மனமே அன்றி அந்தப் பொருளோ ,நிகழ்ச்சிகளோ காரணம் அல்ல  எனவே இன்ப ,துன்பங்களைத் தீர்மானிப்பது எமது மனமே. நாம் மனதை ஒரு நிலைப்படுத்த வெறுப்புணர்ச்சிகளை அழித்தால் இன்பம் பெருகும் உடல் ஆரோக்கியம் பெறும் வயோதிபம் தோன்றாது நீண்டநாள் உயிர் வாழும்.
                     இந்த இன்ப,துன்பம் நம்மை ஆட்டிப்படைப்பதால் சாதாரண மனித மனம் எப்போதும் சுழன்று கொண்டே இருக்கும் மனச்சுழச்சி வேகத்திற்கு ஏற்ப அதிர்வுகள் தோன்றும்போது இன்ப,துன்ப அடையாள ரேகைகள தோன்றுகின்றன காலப்போக்கில்  பின் மறைகின்றன மனம் ஒரு நிலைபெறுவது என்பது மிக கடினம் நிமிடத்திற்கு நிமிடம்,  மணிக்கு மணி, நாளுக்கு நாள் மன ஓட்டங்கள் மாறபட்டுக்கொண்டே இருக்கும் இதனால் சிந்தனை வாதிகள்,சிறந்த அறிவாளிகளின் கைகளில் பல சிறு ரேகைகள் ரேகைவலைகள் தேன்றும் அதே போல் எது வித சிந்தனைகளும் இன்றி ஓரு குறிப்பிட்ட வரையறைகளுக்குள் வாழும் சில மனிதர்கள் கைகளில் இப்படியான சிறுரேகைகள் காணப்படுவதில்லை காரணம் அவர்கள் மனம் சுயமாக சிந்திக்கும் ஆற்றல் அற்றவர்களாக மற்றவர்கள் சிந்தனைகளை தமதாக்கி செலற்படுவார்கள். இவர்கள் மூளை உழைப்பாளிகளாக எப்போதும் இருக்கமாட்டார்கள். உடல் உழைப்பாளிகளாகவும் அதிக பளுவான வேலைகளை மற்றவர் ஆலோசனையில் செய்பவர்களாக இருப்பார்கள். இவர்கள் வாழ்வில் அறிவுக்கூர்மை உள்ள மனைவியோ,கணவனோ வாய்த்தால் இவர்கள் வாழ்வு இனிமையாக இருக்கும் அல்லது துன்பம் நிறைந்து காணப்படும்.  ஏனவே நம்வாழ்வில் இன்ப துன்பங்கள் என்பது எந்தக்காரியத்திலோ,எந்தப்பொருளிலோ,எந்தச் செய்தியிலோ இருக்கவில்லை அது எம் மனம் ஏற்கும் நிலையிலேயே இன்ப,துன்பம் அமைகின்றது.

 

தொடரும்  -5   EK.சாமி

தொடர்- 3

கைரேகை சாத்திரம் கணிதம் அல்ல ஒரு வழிகாட்டியே..

ஒரு குழந்தை பிறந்தவுடன் குறிப்பு எழுதும் பழக்கம் எம்மில் பலரிடம் உண்டு அதிலும் இந்துக்களிடம் கூடுதலாக உள்ளது. இந்தக் குறிப்பு என்பது குழந்தை பிறந்த நேரம், திகதி,திசை கொண்ட ஒரு கணிதம்தான். அது நீங்கள் கொடுக்கும் தகவல்களை வைத்து அந்தகாலகட்டத்தில் எந் தெந்தக் கிரகங்கள் எங்கெங்கு நின்றவை என்பதை வானசாஸ்திரத்தில் கணித்ததை சேர்த்து கணிக்கப்படுவதலும் இதிலும் அந்த குறிப்பிட்ட மனிதனின் உண்மை நிலையை எடுத்தக்காட்டுவது என்பது கேள்விக்குறியே! இதற்கு ஒரு உதாரணம் கூறுகின்றேன் ஓரிடத்தில் ஒரு குழந்தை பிறக்கின்றது அங்கு அந்தக்குழந்தை பிறந்த நேரம் தவறாகப் பதியப்படுகின்றது அந்த தவறாக பதியப்பட்ட நேரத்தை வைத்து குறிப்பு எழுதப்படுகின்றது அக்குறிப்பை திருமண காலத்தில் பொருத்தம் பார்க்கப்பட்டு செவ்வாய்க்குற்றம் என நிராகரிக்கப்படுகின்றது. ஆனால் அந்தப்பிள்ளையின் சரியான நேரக்கணிப்பில் செய்வாய்க்குற்றம் இருந்திருக்க வாய்ப்பில்லை என்றால் அந்தத்தவறான கணக்கில் தவறான விடை கொண்டு அந்தப் பிள்ளையின்வாழ்வு கேள்விக்குறியாக்கப்படுகின்றது இது அந்தப்பிள்ளையின் விதி என கூறிவிடுகின்றார்கள். நாம் சரியான நேரமோ தககவலோ சரியான கணிப்போ இல்லாமல் ஓரு குறிப்பு எனக்கூறி ஏமாற்றம் அடைவது சரியா?
                    ஏமது நாட்டில் நகரங்களிலோ, கிராமங்களிலோ குழந்தை பிறந்து சரியான நேரம் கணிக்கப்படுவதை பார்த்ததில்லை சில வைத்திய சாலைகளில் மணிக்கூடே இருந்திரக்காது இரந்தாலும் சரியான நேரம்காட்டி இருக்காது அண்ணளவாகத்தான் நேரம்பதியப்படும் இதை யாவரம் அறிந்திருப்புPர்கள் இது யார்தவறு?
குழந்தை தாயின்வயிற்றில் இருக்கும்போது அது தாயின் ஓர் உறுப்புப்போல செயற்படுகின்றது அங்கு அக்குழந்தையின் இதயத்துடிப்பு மட்டுமே நடைபெறுகின்றது இதற்கு அங்கு உயிர் இல்லை எனேனில் ஓர் உயிர்உள்ள உடல் எந்தவெரு ஆதரவுமின்றி தனது ஓன்பது வாசல்களின் உதவியுடன் இயங்கும் தாயின்வயிற்றில் அக்குழந்தை வாயால் சாப்பிடவில்லை, கண்களால் பார்க்கவில்லை,மூக்கால் சுவாசிக்கவில்லை,மலம் சலம் கழிக்கவில்லை அங்கு இதயத்துடிப்பு மட்டும் நடைபெற்று உயிரற்று இருந்து தாயின் கருவறையிலிருந்து  வெளியே வந்து முதற்காற்றை தனது மூக்கினால் சுவாசிக்கும்போது உயிர் அங்கு பிறக்கிறது இதையாரும் மறுக்கமுடியாது.
                      ஆனால் கைரேகை என்பது தாயின்வயிற்றிலேயே தோன்றுகின்றது இது எப்படி இருக்கிறது என்றால் வீடுகட்டமுன்பு வீதிகள் அமைப்பது போலாகும். யாரும் பாதையில்லாத வீடு வாங்குவது கிடையாத எனவே கைரேகை என்பது ஒரு கணிதம் ஆகாது ஒரு வரைபடம் அந்தவரைபடம்பற்றி அறிந்தவர்கள் சுலபமாக தம் நோக்கம் சென்றடையலாம். இந்த வரைபடம் எந்த உயிரினதும் அல்ல அந்தந்த உடலின் வரைபடம்தான் கைரேகை. உடல்தான் பிறந்து அழிகின்றது உயிர் பிறப்பதும் இல்லை அழிவதும் இல்லை உயிரானது தனது இச்சைகளுக்கு (விருப்பம்) ஏற்ப உடலை தேடி தனது இன்பங்களை நிறைவு செய்யும். ஆப்படி தேடிய உடலால் தனது இன்பங்களை நிறைவு செய்யும் திறன் குறைந்துவிட்டால் வேறு உடல் தேடி விலகுகின்றது அதை நாம் இறப்பு என்கின்றோம். அந்த உயிர் தான்தெடும் இன்பங்கள் அந்த உடலில் கிடைத்திருக்குமாயின் நீண்டகாலம் வாழும் அதனால்தான் இச்சைகளின்வெளிப்பாட்டை ரேகையாக்கி விடுகின்றது நாம் அந்த ரேகைவழி சரியாக நடந்து அந்த உயிரின் இன்பங்களைக் கூட்டும்போது உடல் நெடுநாள் வாழ்கின்றது. எனவே உயிர் நாடும் ஆசைகளை நிறைவு செய்ய கைரேகைகள் வழி காட்டிகளாக அமைகின்றது.

 தொடரும் -4

2

 

தொடர் .2 

வலதுகையா? இடதுகையா?  பலன் பார்ப்பது

              நாம் காலா காலமாக இந்த கைரேகை பார்த்தல் (சாத்திரம்) என அறிந்து வந்திருக்கின்றோம். நாம் பிறக்கம்போதே பெரும் ரேகைகள் உருவாகிவிடும் என முன்பு நாம் அறிந்தோம். மனிதனுக்கு இரண்டுகைகள் உள்ளது இரண்டு கைகளிலும் ரேகைகள் உள்ளது இதில் என்ன வலதுகை, இடதுகை கேட்பது இரு கைகளிலும் ரேகை பார்த்து பலன் கூறுவது தான் கைரேகை சாத்திரத்தின் உன்மை நிலையாகும்.
                   இடதுகை இதயக்கை (மனம்) எனவும் வலதுகை (வளமான கை) வருமானக்கை எனக் கணிக்கப்பட்டுத்தான் முன்னைய காலத்தின் வாழ்க்கை முறைக்கு ஏற்ற வடிவத்தில் பெண்களுக்கு இடதுகை எனவும் ஆண்களுக்கு வலதுகை எனவும் பார்த்து வந்தார்கள் எனெனில் முன்னர் ஆண்கள் உழைப்பாளிகளாகவும் பெண்கள் வீட்டிலும் இருந்தார்கள் இதனால் ஆண் சம்பாதிக்கும் திறன் உள்ளவரா என கண்டறிய வலதுகையையும் அந்த சம்பாத்தியத்தை வைத்து மனைவி குடும்பத்தை நல்லபடி நிர்வகிக்கும் மணோநிலையில் இருக்கிறாரா என அறிந்து கொள்ள பெண்னின் இடதுகையையும் பார்க்கும் வழக்கத்தை குறிசாத்திரம் சொல்பவர்கள் ஏற்படுத்தி வந்தார்கள். இது முற்றிலும் தவறு இதனால் எததுவிதமான பலன்களும் இல்லை என முன்னைய கால பழமை கைரேகை சாத்திர நுல்களிலும் கூறப்பட்டுள்ளது.
                       உன்மையாக கைரேகை பலன்கள் கூறுவதாக இருந்தால் ஒருவருடைய இரண்டு கைகளையும் சரியான முறையில் (வாசித்து) பார்த்து பலன் சொல்லவேண்டும் அத்துடன் அவரின் தேவைகளை சரியாகப் புரிந்து அதன்படி கூறவேண்டும் அந்தநேரத்தில் அவருக்கு தேவையில்லாத ,விரும்பாத விடையங்களைக் கூறுவதை தவித்தல் வேண்டும்.
                   முன்பு கூறியபடி வலதுகை (வளமான கை) வருமானக்கை பலருக்கு இதுதான் வளமான கை எந்த ஆலுவலுக்கும் வலதுகையையே உபயோகிக்கின்றார்கள் ஒரு சிலர்மட்டும் இடது கையை வலதுகைபோல் பாவிக்கின்றார்கள் இவர்களுக்கு வமானக்கை (வளமானகை) இடது கையே ஆகும். இதை என்னிடம் கைரேகை பார்க்க வந்த பலர் இக்குழப்பத்தில் இருந்ததை கண்டேன் எனவே இதை இங்கு விபரித்துக் கூறலாம் என கருதுகின்றேன்.
                       மனிதனின் வழிநடத்தலுக்கு மூளை நரம்புமண்டலங்கள்தான் உதவுகின்றன. மனிதன் தான் என்ன செய்யவேண்டும்  என மூளையின் உதவியுடன் தீர்மானித்து செயற்ப்படுத்த கை,கால் வாய்,கண், காது ,மூக்கு என்ற அவயவங்கள் செயற்படுத்தகின்றது. ஓன்றை எழுதவேண்டும் என்றவுடன் வலதுகைப் பாவனையுடையவர்கள் வலது கையாலும் இடதுகைப் பாவனையுடையவர்கள் இடது கையாலும் எழுதுகின்றார்கள். இங்கு நாம் செயற்பாடுகளை எந்தக்கை ஊடாக கூடுதலாக செய்கிறதோ அந்தக்கை பல அதிர்வுகளை சந்திக்கின்றது. அதாவது மூளையில் இருந்து கிடைக்கும் செயற்;பாட்டு அதிர்வுகள் தான் அது. அவை தொடர்ந்து கிடைப்பதால் அங்கு ரேகைகள் உண்டாகின்றது. ஒரே மாதிரியான எண்ணங்கள்,செயற்பாடுகள் தொடர்ந்து கிடைத்தால்  அங்கு ஒரு வலுவான ரேகை பிறக்கின்றது. சுpல செயற்ப்பாட்டு அதிர்வுகள் சிலகாலம் கிடைத்து பின்பு கிடைக்கவில்லை என்றால் அந்தரேகை அழிவு நிலைக்கு செல்கின்றது. (அதிர்வுகள் என நான் இங்கு கூறுவது எண்ணங்களைத்தான்) இங்கு அதிர்வகள் மாறிமாறியும் தொடராகவும் கிடைப்பதால் ரேகைகள் புதிதாக வளர்ந்தும் சில அழிவடைவதும் நிகழ்கின்றது இப்படி இரண்டு கைகளிலும் நிகழ்கின்றது பெரும்பாலும் வளமாக பாவிக்கும் கைக்கு அடிக்கடி ரேகை மாறும் தன்மை கூடுதலாக உண்டு எனவே கைரேகை பார்ப்பவரும் சரி பார்க்கப்படுபவரும் சரி அவரின் வளமாக பாவிக்கும் கை எது என தெரிந்து ரேகை பார்ப்பது மிகவும் நல்லது இரண்டு கைகளையும் எப்போதும் கை ரேகை பார்க்கவேண்டும். ஒரு கையில் அடிமனஓட்டங்கள் பிரதிபலிக்கும் ஒரு கையில் நிகழ்கால மாற்றங்கள் பிரதிபலிக்கும் ரேகைகள் காணப்படும்.

தொடரும்-3

title

 தொடர் ஆரம்பம் 1

கைரேகைப் பலன் உண்மையா? 

கைரேகை பற்றி உங்களுடன்   EK.சாமி  ஆகிய நான் தொடராக பகிர்ந்து கொள்ள உள்ளேன். 1991ம் ஆண்டில் இருந்து கைரேகைக் கலை,எண்கலை கற்று பல்லாயிரம் மக்களுடன் பலநாடுகளில் பெற்ற அனுபவத்தினால் ஒரு கைரேகை சாத்திர புத்தகம் எழுதவென பலமுறை முயன்றும் நேரமின்மையினால் கைகூடவில்லை. இருந்தும் சிறு சிறு பகுதிகளாக நான் எழுதியவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்வு அடைகிறேன்.இதை வாசித்து உங்கள் கருத்துக்களை பண்ணாகம் இணையத்திற்கு அறிவித்தால்  உங்கள் கருத்துக்களும் பின்னர் வெளிவரும் வரும் புத்தகத்தில் பெக்கிசமாக பதிய எனக்கு ஒரு வாய்ப்பாக இருக்கும்.                           

 (இதனை மறுபிரசுரம் செய்ய தயவுசெய்து பண்ணாகம் இணைய அனுமதியை பெறுங்கள். (ஆக்கஉரிமை EK.சாமி))

நன்றி

பகுதி 1

மனிதனாகப்பிறந்தவன் ஏதோ ஒரு நம்பிக்கையில் மூழ்கிக்கிடக்கின்றான். உலகம் கடவுளின் படைப்பு என்றார்கள் ஆம் என்றான். நாளை விடியும் நான் அதைச் செய்வேன் இதைச் செய்வேன் என்ற நம்பிக்கையுடன் நித்திரைக்கச் செல்கின்றான் ஆனால் எல்லோருக்கும் நாளை என்பது நிஜமாவதில்லை இது உலக நியதி என்பார்கள். முனிதனின் வாழ்வு ஒரு நம்பிக்கையின் அடிப்படையிலேயே செல்கிறது. இன்று இருப்பவன் நாளை இருப்பதில்லை நாளை இறப்பான் என்றிருந்தவன் பிழைத்தவிடுவதும் உண்டு சாவு என்பது எப்போது என்று மனிதன் உறுதியாக அறிய முடியாதவரை மனிதவாழ்வில் நம்பிக்கை தொடர்கின்றது.

                    இந்தவகையில் தான் சாத்திர சம்பிரதாயங்கள் உருவாக்கப்பட்டது. சாத்திரம் சம்பிரதாயங்கள் என்பது மனிதன் தன்வாழ்வை ஒரு ஒழுங்கமைப்பில் இட்டுச்செல்வதற்கு உதவியாக இருப்பதற்காக உருவாக்கப்பட்ட ஒழுங்கமைப்பாகும். தன்னம்பிக்கை இழந்து குழம்பித் தவிப்பவர்களுக்கு ஒரு உற்சாகம் கொடுக்கும் ஓரு வழிகாட்டி (இதை சிலர் மூடக் கொள்கைகளினாலும், கடவுள் பயம் காட்டியும் மக்களை மேலும் குழப்பி விடுவதும் உன்டு)  இதில் சாத்திரம் என்றால் எல்லோர் மனதிலும் எழுவது தமது பிறப்புக் குறிப்பு, கைரேகை சாத்திரம் பற்றியதையே சாத்திரம்; என்று நினைத்து விடுகின்றார்கள். இது சாத்திரங்கள் என்பதின் ஒரு பிரிவு என்றுதான்  கூறுவது பொருந்தும் என்று நினைக்கின்றேன்.
                      இந்த சாத்திரம் என்பதை விளக்கினால் பெரும் கட்டுரையே எழுதலாம். யான் இதற்கு ஒரு சிறு உதாரணம்காட்டினால் நன்றாக இருக்கும் என நினைக்கின்றேன். தண்ணீரிலே விழுந்து தத்தளிக்கும் ஒரு எறும்புக்கு கரையேற ஒரு ஆதாரம் தேவைப்படுகின்றது அத்தண்ணீரில் அடிபட்டு வரும் இலையோ,தடியோ கிடைக்கும் போது அதில் ஏறியவுடன் நின்மதியடைகின்றது. இனி நான் உறுதியாக தப்பிவிடுவேன் எனக்கு ஒரு வழி கிடைத்துவிட்டது என்ற நம்பிக்கையுடன் அது தனது அடுத்த முயற்சிக்கு செல்கிறது. இதே போல் கவலை, குழப்பத்தில் தத்தளிக்கு மனிதர்களுக்கு இந்த எறும்பிற்கு கிடைத்த இலையோ,தடியோ போலத்தான் சத்திரம் என்பது உடைந்த மனதை ஒட்டி ஓடவைக்கும் ஒரு சக்தியாக நம்பிக்கையுள்ள மனிதர்களை நல்ல சாத்திர வல்லுநர்கள் வழிவகுக்கின்றார்கள்.
    
                   இந்த சாத்திரங்களில் மிகவும் வலுப்பெற்றது கைரேகை சாத்திரம் என்பது பல அறிஞர்கள் கண்ட உன்மை. மனிதன் பிறக்கும் போதே ரேகைகள் அவனுடன் கூடப்பிறக்கிறது பின்னர் அவரவர் என்ன ஓட்டங்களுக்கும், கால நிகழ்வுகளினாலும் ரேகைகள் மாறுபடுகின்றன, ரேகைகள் புதிதாக தோன்றுகிறது,சில ரேகைகள் அழிந்துவிடுகிறது  இது எல்லோருக்கும் நிகழ்கிறது. ஆனால் எல்லோர்களின் கைகளிலும் பிறக்கும்போதே இதயரேகை,ஆயுள்ரேகை, புத்திரேகை என்பன மாறுபட்டவிதத்தில் என்றும் அழியாமல் இருக்கும் ஆனால் குறிப்பிட்ட நிரந்தர அளவில் இருந்து வளர்ச்சியடையவும் , நிரந்தர அளவுவரை தேய்வடையவும் கூடியவை இவ் மூன்று ரேகைகளும் இரண்டு கைகளிலும் காணப்படும். ஆனால் ஓரேமாதிரயாக இரண்டு கைகளிலும் காணப்படமாட்டாது வேறுபட்டே இருக்கும். வலதுகை,இடதுகை ரேகைகள் எப்போதும் வேறுபட்டே இருக்கும் என்பதை வாசகர்கள் நினைவில் வைத்திருக்கவும்.

                      ஒரு நாட்டிற்கு அதன் இடங்களை அறிய அந்நாட்டின வரைபடம் உதவுகின்றது. அதே போன்று ஓர் இடத்திற்கு  சிக்கல் இல்லாமல் இலகுவாக சென்றடையலாம் என்பதை அறிய வீதி வரைபடம் மிக முக்கியமாகின்றது. ஏந்தவெரு தெரியாத இடங்களுக்கும் இவ்வரை படங்கள் மூலம்தான் சென்றடைய இலகுவான வழியாகும்.. இந்த வரைபடங்கள் இல்லாமல் செல்பவர்கள்  அந்த இடங்களை சென்றடைய பலகாலம் எடுக்கலாம் அல்லது செல்லமுடியாமல் திரும்பிவிடலாம். எனவே வீதி வரைபடம் போன்று மனிதர்களுக்கும் அவர்கள் என்ன ஓட்டங்களுக்க ஏற்ற மாதிரி கையில் ரேகைகள் தோன்று கின்றன,மறைகின்றன இது எல்லா மனிதர்களுக்கும் நடைபெறுகின்றது. ஆவரவர்கைகளில் தொன்றும் ரேகைகள் அவரவர் வழிகளையே காட்டிநிற்கும். உதாரனமாக யேர்மனி நாட்டின் வரைபடத்தில் இலங்கையில் இருக்கும் யாழ்ப்பாணத்தை பார்க்கமுடியாது. யாழ்ப்பாணத்தை பார்க்க வேண்டுமானால் இலங்கை வரைபடம்தான் தேவை இதே போலத்தான் ஒருவருடைய கையில் அவரது குடும்பத்தினர்ராகிய மனைவி,பிள்ளைகளின் பலன் கூறமுடியாது. அந்தக் கைக்குரியவர் பலன்கள் மட்டும்தான் கூறமுடியும் இதை யாரும் மறுக்கமுடியாது. இதை மறுப்பவர் யேர்மனி வரைபடத்தில் யாழ்ப்பாணத்தை காட்டலாம் என கதை கூறுபவராகத்தான் இருக்கமுடியும். இப்படிப்பட்டவர்களை இனம்கண்டு கொள்வது அவசியமாகிறது. இப்படிப்பட்டவர்கள் கைரேகைப்பலன்  நம்பிக்கையுடன் வருபவர்களை மூடநம்பிக்கைகளை வளர்த்துவிடுவதுடன் இவர்கள் பணம் சம்பாதிக்கம் நோக்கில் மக்களைப் பயமுறுத்தி மேலும் அவர்களை மனச்சிக்கலில் மாட்டி விடுபவர்களும் உண்டு எனவே கைரேகைப் பலன் கேட்ப்பவர்கள் மிகவும் அவதானமாக இருக்கவேண்டும்.  உங்கள் கையில் உங்கள் சம்மந்தப்பட்ட உங்களுக்குரிய பலன்கள் மட்டும் தான் கூறமுடியும் மற்றவர்கள் பலன்கள் உங்கள் கையில் பார்த்துக் கூறினால் அவர்களை நம்பாதீர்கள் அவதானமாக இருங்கள் என்பதை இந்த இடத்தில் குறிப்பிட்டாகவேண்டும். கைரேகை ஒரு உயர்வானது இதில் சரியான முறையில் அவதானித்து உங்கள் எதிர்கால வழிகளை நல்லபடியாக அமைக்கலாம் என்பதை உறுதியாக கூறமுடியும்.

தொடரும்.....2

 

தமிழே நீ புலத்தில் வேறூன்றி விருட்சமாவாயா? 

-ஆசிரியர் இ.க.கண்ணன்

ஆங்கிலேயர் கீழைத் தேசத்தை அடிமை கொண்ட காலத்தில் இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் தமிழர்களின் சுதந்திரமும், ஆளுகையும்; முற்றாக அற்றுப் போய்விட்டதென்றே கருதலாம். இக்கால கட்டத்தில் மேலைநாட்டுக் கல்விக்காக புலம்பெயர்ந்து இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் குடியேறினர் ஒரு பகுதித் தமிழர், இன்னொரு பிரிவினர் வேலைவாங்க மொறிசியஸ், பிஜி, அந்தமான், யாவா, சுமத்திரா, தென்ஆபிரிக்கா போன்ற நாடுகளில் ஆங்கிலேயரால் குடியமர்த்தப்பட்டனர்.

         இவ்வாறு குடியேறிய தமிழர் சந்ததியினர் அந்தந்த நாடுகளுடன் ஐக்கியமாகி தாய்மொழி தெ
http://seasonsnidur.files.wordpress.com/2011/06/tamil.gifரியாத ஓர் இனமாக உருப்பெற்று அந்நாட்டு மக்களால் ஒதுக்கப்பட்ட ஓர் இனமாக சோகம் சுமந்து  வாழ்வதைக் காண்கின்றோம். இந்த நிலைக்குக் காரணம் நாம் தமிழர் நமது மொழி தமிழ் என்ற  உணர்வின்மையே. கால வெள்ளத்தால் அடியுண்ட ஈழத் தமிழ் மக்களும் இன்று அகதிகளாய் உலகின் பல பாகங்களிலும் வாழ்கின்றார்கள். இவர்களில் சிலரும் தமிழ்மொழி தெரியாமல்  தம்பிள்ளைகளை வளர்க்கிறார்கள்.

         இமயம் நீரிடை மூழ்கிக் கிடந்த போதும், இந்து மகாசமுத்திரம் நிலப்பரப்பாக இருந்த போதும் தமிழ் மக்கள் வாழ்வு நடாத்தினார்கள் என்று சொல்லப்படுகிறது. இதற்கு நிலநூல், நீர்நூல், உயிர்நூல் முதலியவற்றில் வல்லார் தம் ஆராய்ச்சி முடிவுகள் எடுத்துக் காட்டப்படுகின்றன. தமிழ்மொழியின் இயலே தமிழின் தொன்மைக்குப் பெருஞ் சான்றாக திகழ்கின்றது. தமிழ்மொழி தான் கொண்டுள்ள மூல ஒலிகளாலும், புதுச் சொற்களை உருவாக்கக் கூடிய ஏராளமான வேர்ச் சொற்களாலும்,  சொல்லமைப்பு ஒழுங்காலும், சொற்றொகையாலும், பொருள்வளத்தாலும், இலக்கியச் செல்வங்களாலும் , தொன்மையாலும், இனிமையாலும், எளிமையாலும், ஒப்புயர்வற்றுத் திகழ்கிறது. இத்தகைய இனிமை வாய்ந்த மொழியை புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்குப் புகட்ட மறுப்பது வேதனைக்குரிய விடயமாகும்.

          18ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் தோன்றி வளர்ந்து வரும் மொழி ஒப்பியற் கலையின் ஆய்வாளர்களான மாக்ஸ்முல்லர், கால்டுவெல், குண்டர்வ் முதலிய அறிஞர் பலரும் தமிழின் பெருமையை சிறப்புகளை காரணங்களோடு விளக்கியுள்ளார்கள். எம் தமிழ்மொழி மேல் கொண்ட பற்றால் பெஸ்கி என்ற இத்தாலிய பாதிரி தனது பெயரை தைரியநாதராகி - வீரமாமுனிவராக வளர்ந்து தமிழோடு கலந்தார். ஆனால் புலம் பெயர்ந்த நாடுகளில் வாழும் சில தமிழ்ப் பெற்றோர்கள் பிள்ளைகளுக்குக் சூட்டும் பெயரை பிள்ளைகளே உச்சரிக்க முடியாமல் வேதனைப்படுகிறார்கள். இந்த நிலை மேலும் நீடிக்காமல் மாற்றமடைய வேண்டும்.

          “தமிழே நீ ஒரு பூக்காடு நான் ஒரு தும்பி“ என்று கூறித் தமிழை வலம் வந்தவர் பாவேந்தர் பராதிதாசன். தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்“ எனப்பாடி தமிழ் பேசும் தமிழன் தரணியில் உயர்ந்தவன் என சங்கநாதமிட்டவரும் அவரே. தமிழால் எதை நாம் சாதிக்க முடியும் என்ற உணர்விலே இன்றும் சிலர் இருக்கின்றார்கள். அன்று கனடா, அமெரிக்கா, சிங்கப்©ர், மலேசியா, பிரித்தானியா போன்ற நாடுகளுக்கு வேலை வாய்ப்புத் தேடி புலம்பெயர்ந்த படித்தவர்கள் நல்ல தொழில் வசதி பெற்று தம்தொழிலும், பொருளீட்டலிலும் கண்ணாக இருந்தார்களேயன்றி தம் இளம் தலைமுறைக்கு தாய்மொழிåட்டவோ, தாய்நாட்டுப் பாசத்தைப்,பற்றை வளர்க்கவோ சிறிதும் சிந்தியாதவர்களாக வாழ்ந்தனர். அதனால் அவர்கள் தமிழ்மொழி தெரியாத தமிழர்களாக வாழ்கின்றார்கள்.

           1980ம் ஆண்டின் பின் ஈழத்தில் ஏற்பட்ட இனப்படுகொலைகளில் இருந்து உயிர்ப்பாதுகாப்புத் தேடி ஆயிரமாயிரமாக தமிழர் புலம்பெயர்ந்து மேலை நாடுகளான யேர்மனி, பிரான்சு, சுவிஸ், இலண்டன், நோர்வே, இத்தாலி, கொலண்ட் ஆகிய நாடுகளில் வாழ்கின்றனர். ஏறத்தாழ இருபத்தைந்து ஆண்டுகளின் முன் ஐரோப்பிய நாடுகளில் குடிபுகுந்தவர்கள், தமிழினப்பண்புகளுக்கு வெளியே வாழமுற்பட்ட நிலையும், தாய்மண், கலாச்சாரங்களை மறக்க முற்பட்டமையும்  அன்று அவர்களைப் பாதிக்கவில்லை, இன்றோ அவர்களின் பிள்ளைகள் பெரியவர்களாகி அன்னியக் கலாச்சாரங்களுக்கு அடிமையாகி தமது வாழ்வுமுறைகளை மாற்றியமைத்து அவதிப்படுகின்றனர். இதற்கு அடிப்படைக் காரணம் பெற்றோர்கள் தாய்மொழியை தம் பிள்ளைகளுக்குக் கற்பிக்காததே.

           விழியிழந்து வாழலாம்! மொழியிழந்து வாழக் கூடாது. தமிழ் மக்கள் புலம்பெயர்ந்த நாடுகளில் மொழியை இழக்கலாமா? மொழி படிப்பதும் பேசுவதும், எழுதுவதும் தற்காலக் கல்வி, இது அறிவியல் காலம்,, சாதனைகள் தொழில் நுட்பத்தால் சிறந்து விளங்குகின்றன. ஆனால் புலம்பெயர்ந்த தமிழரிடம் இன்னமும் இழக்க முடியாத படுமூடப் புண்மனம் உண்டு. இது கல்வியால்தான் மாறும் உலகிலே எந்த இனமானது இன்னோர் இனம் வாழ்கின்ற தேசத்திலே சென்று வாழ்ந்து அந்த இனமாக மாறிவிட்டதாக சரித்திரம் உண்டா? இல்லவே இல்லை எனவே புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் எம் இனம் மொழியைக் கற்றாற்றான் தமிழினமாக வாழ முடியும். ஓர் இனத்தின் அடையாளம் மொழியாகும் மொழியில்லாவிட்டால் இனமே அழிந்துவிடும்.

         தமிழ்மொழி இன்று தமிழ் நாட்டில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் பேசப்படும் மொழியாக இருக்கிறது. அது ஈழப்போர் ஏற்படுத்திய தாக்கமே ஆகும். வானொலி, தொலைக்காட்சி, கணிப்பொறி இணையம் போன்ற அறிவியற் கருவிகளால் தமிழ் உலக அரங்கில் சிறந்த, சீரிய இடத்தைப் பெறும் நிலைக்கு வளர்ந்து வருகிறது. புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழரும் தம் தாய் மொழியின் சிறப்புணர்ந்து அதன் வளர்ச்சியில் அக்கறை கொண்டு வருங்காலச் சந்ததியினர் தமிழைக் கற்று தமிழ் உணர்வுடன் செயற் பட தமிழாலயங்கள் , தமிழ்ப்பாடசாலைகள், தமிழ் நிறுவனங்கள், தமிழ் ஊடகங்கள் என்பன அமைத்து தமிழை வளர்க்கும் உயர்வான பணியில் ஈடுபட்டுள்ளனர்.

         இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள் என்பது சர்வ தேசக்கருத்து. ஆனால் இன்றைய இளைஞர்களே இன்றைய தலைவர்களாகவும் இருப்பது எமது; கண்கூடு.

         ஒருவன் தான் கற்ற கல்வியின் மூலம் தனது சமுதாயத்துக்கு சேவை செய்வதன் மூலமே, அக்கல்வி பயனுள்ளதாகும். தாய்மொழியைத் தெரியாமல் பிறமொழியைக் கற்றுக் கொண்டிருப்போரால் எமது சமூகம் எந்தவிதமான பயனையும் பெறப்போவதில்லை, எனவே தாய்மொழிக் கல்வியானது ஒரு வெளி நாட்டில் வாழும் சிறார்களுக்கு பல வழிகளிலும் தேவையானது,  அவசியமானது.

       புலம்பெயர் நாடுகளுக்கு அப்பால் சொந்த உறவுப் பாலங்களைப் பேணிப் பாதுகாக்கவும் உறுதுணையாக அமைக்கவும் எமது சொந்தங்களை தொடர்பாடல் மூலம் வழிசமைக்கும் ஒரே மொழி தமிழாகதான் இருக்கிறது. மற்றைய மொழிகள் எல்லாம் எம் ஊர் உறவுகளுடன் தொடர்புக்கு தெரியாத மொழிகளாக உள்ளது. எனவே தமிழ் எம் தாய்மொழி என புலம்பெயர் வாழ் பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு உணர்த்த வேண்டும்.

அன்புடன் உங்கள்
பண்ணாகம் இணைய ஆசிரியர்
இ.க.கண்ணன்

------------------------------------