Click to edit table header |
பண்ணாகம் இணையத்தில் தமிழ்க் கவிஞர்களின் சங்கமம். |
அன்பைத் தேடும் உறவுகள்
உலகில் உன்னத சக்தி அன்பு இது
உண்மை உறவில் உயர்வு கொள்ளும்
அன்பில்லா இதயங்கள் சில இருந்தாலும்
அன்பைத் தேடும் இதயங்கள்
என்றும் அகிலத்தில் நிலைத்து நிற்கும்
பாலர் நிலையிலும் பள்ளி வாழ்க்கையிலும்
நட்பு என காண்பவர்கள் மனதைத் தேடியாங்கு
உற்றுப் பார்ப்பவர்களில் ஊமை அன்பு
உள்ளே சென்று உள்ளத்தை வருடினாலும்
உரிமை அன்பை உள்ளம் என்றும் தேடி நிற்கும்
உறவுகள் பல உலகில் பரந்திருந்தாலும்
உரியவர்கள் என தரம்பிரித்து தவிக்கும் மனம்
நிலையில்லா வாழ்வை நிதம் வாழ்ந்தாலும் என்றும்
குறை சொல்லும் உறவுகளில் குணம் கண்டு
நிறை தேடும் இதயங்கள் நிழலாய் இங்கு வாழும்.
வேலை வேலை என ஓடிய நேரம் எமக்கு
வேளை வேளைக்கு உணவுகள் படைத்த
உன்னத தெய்வம் அம்மாவின் கருணைகொண்ட
உயர்வான அன்பைத் நாம் தொலைத்த வேளை
துயர்கொண்ட இதயம் துவண்டு விழுந்து
மலையெனும் அவ் அன்பை உலகில் தேடும் அது
கண்கொட்ட பின்னபு சூரிய வணக்கமாகும்.
அணைகண்ட வெள்ளமென சிலர்
மனம் அமைதி கொண்டாலும்
கலங்கரை விளக்காக விளங்கும் மற்றவர் அன்பை
கறையின்றிப் பெற காலமெல்லாம்
அன்பைத் தேடும் இதயங்கள் அகிலத்தில் என்றும் வலம்வரும்.
ஊடகவித்தகர் கிருஷ்ணமூர்த்தி. பண்ணாகம்.கொம்
படைத்தவன் திருவிளையாடல் பாமரனே பார்.
படைத்தவனே பறிக்கின்றான்
பதைபதைக்கும் உலக மக்கள்
விதைத்தவன் விளைய முன்பு
வினைதிறன் பார்க்க முடியுமா?
காலம் என்னும் கட்டளையில்
காலான் செய்யும் மாயையில்
கவலையின்றி கண்மூடி கைகட்டி வாய் மூடி
காவல் செய்கிறது வைத்தியர்கள் எம் தெய்வம்
துடிக்க பதைக்க பல்லாயிரம் மக்கள்
துக்கம் இதுவா சொல்லவில்லை
தேடியலைந்து உடல்களைக் காணாது
தேம்பினர் எஞ்சிய உறவுகள் .
வருடங்கள் சென்றால் வருமாம்
வாழ்வில் இக் கொடுமை என்று ஒரு வரலாறு
வலாறுகளை மாற்றம் விஞ்ஞானம் எங்கே?
வாழ்வில் வரலாறுதான் வென்றதோ.
பாவம் அம் மக்கள் பரிதவிக்கும்போது நாம்
பாராமுகம் காட்டி முகபதிவில் வாழ்த்துக்கள் பகிர்வது
வருத்தம் தருகிறது அவர்களுக்குநாம் என்ன செய்வது
அஞ்சலிகளையும் ஆறுதல்களையும் வளங்குவோம்.
ஊடகவித்தகர் பண்ணாகம் இக.கிருஷ்ணமூர்த்தி
இவர்களில் நான் யார்?
ஏலையா க.முருகதாசன்
இவர்களே மனிதர்கள்
இவர்கள் யாருமே
ஒருவர் போல் ஒருவர் இல்லை
சிலர்
தம்மை யோக்கி;யன் என்பர்;
ஆனால் அவர்கள் அயோக்கினாய் இருப்பர்
சிலரைப் பற்றி
மிதித்த இடத்துப் புல்லும் சாகா மனிதர் என்பர்
ஆனால் அவர்கள் அப்படியல்ல
அவர்களை ஆராய்ந்தால்
அவர்கள் வேசதாரிகள் எனத் தெரிய வரும்
எப்பொழுதும்
அவன் சரியில்லை இவன் சரியில்லை என்பர்
ஆனால்
தான் சரியானவனா என்பதை அறியார் அவர்
பொன்னாடை போர்த்திக் கொள்பவரை
விமர்சிப்பார் சிலர்
அதற்காக ஏங்குவார் அவர்
பிரச்சனைகளைத் தூண்டுவார் சிலர்
தூண்டியவரே
கழுவின மீனில் நழுவியது போல
முகம் கொடுக்காது நழுவுவர்
தன்னை
ஏகபத்தினி விரதன் என்பர் சிலர்
அடுத்தவன் மனைவிமீதும்
ஆசை கொள்வர் இவர்
சிலர்
திட்டமிட்டு சூழ்ச்சி செய்வர்
எதுவுமே தெரியாதது போல் நடிப்பர்
அப்பாவிகளாய் முகம் கொண்டு
இவன் என் நண்பன் என
கட்டியணைப்பர்
மெய்யணைக்க வாய் பொய்யுரைக்கும்
எல்லா மனிதருமாய்
எல்லாரும் இருக்கிறார்கள்
இவர்களில்
நான் யார்?
--------------------------------
மாவீரர்கள்
------------------------------
தமிழனை பெருமையாக தரணியெங்கும் பார்க்க வைத்தது
உரிமைகள் மறுக்கப்பட்ட போது உணவின்றி உறக்கமின்றி
உதயமான புலிப்படையாய் உருவெடுத்து
முப்படை கொண்டு உரிமைப் போராட்டத்தில்
உயிரையும் துச்சமென மதித்து
உயிரினும் மேலான தமிழுக்காய்
உயிரோடு நாம் வாழ உயிர்நீத்த
நம் மாவீரர்களுக்கு - அண்ணன் உருவாக்கிய
மாவீரர் நாளில் எங்களின் சகோதரர்களை சகோதரிகளை
என்றும் நன்றியுடன் வணங்கி
நினைவு கூர்ந்திட
இன்று நாம் அனைவருமே கூடியிருக்கின்றோம்
தியாகச் சரித்திர நாயகர்கள் -மாவீரர்
தாயக மண்ணின் காவலர்கள்.
தீயாலே தீர்த்தமாடிய தீரர்கள் -இவர்கள்
விடுதலைக்காய் உயிர் கொடுத்த உத்தமர்கள்
ஓ! எங்கள் மாவீரர்களே!
உங்கள் ‘உயிர்விலைக்கு’ எதுவுமிங்கே ஈடாகும்?
கந்தகக் காற்றைச் சுவாசித்து
விடுதலை ஒன்றையே யாசித்தீர்….
உம்மையே உருக்கித் தாரைவார்த்து
எம்மைக் காத்தீர் நேசித்தீர்…….
மண்ணின் நிரந்தர விடியலுக்காய்,
கடலாடிக் களமாடிப் போராடி
நிரந்தரமாய் மண்ணுள் உறங்கிவிட்ட
வீரத் தமிழ்ச் செல்வங்களே!
சுட்டெரிக்கும் புழுதிமணல் வெளியில்
உங்கள் கால்த்தடம்……………
கத்தும் கடலோசையில் உங்கள் உயிர்மூச்சு…….
காண்டாமணி ஓசையில் உங்கள் கணீர்க்குரல்………..
மூண்டெரியும் தீயினில் உங்கள் ‘பூமுகம்’………
கல்லறைப் பூக்களில் உங்கள் புன்னகை………..
ஆறடிக்குள் துயிலும் அற்புதங்களே-எங்கள்
ஆணிவேரான ஆலமரங்களே..!
ஆண்டுக்கொருமுறையா உமை நினைக்கிறோம் ......
இல்லையே நாளெல்லாம் உம்மைத் தொழுகிறோம்
தீயெரியும் தேசத்தில்
தினமும் நினைவில் சேர்ந்தெரிகின்றோம்
கல்லறைக்கு வருகையிலே கால் கூசும்-உமைக்
கண்டவுடன் கட்டியணைத்து மெய் சோரும்.
கண்களிலே கண்ணீர் கவி எழுதும்
கையிரண்டும் உமை நோக்கி கூம்பி எழும்.
நீங்கள் துயிலும் இல்லங்கள் எங்கள் தேசத்தின் ஆலயங்கள்-
அதில் வாழும் நீங்களெங்கள் ஆதிமூலங்கள்.
பாழடைந்த கோவிலெல்லாம் மறைந்துவிடுவதில்லை.
மாவீரரே ஆலயங்களை அழித்தாலும் ஆதிமூலத்தில்
வாழும் உங்களை மறக்கப்போவதில்லை.
சாவினை கழுத்தினில் கட்டிக்கொண்டீர்-
அந்த சாவினை சரித்திரமாய் ஆக்கிக்கொண்டீர்.
விடுதலைத்தீயினை விழி சுமந்தீர்
வீர வித்துக்காளாய் மண்ணுக்குள் நீர் புதைந்தீர்.
எத்தனை வலி சுமந்தோம்?
எத்தனை ‘உயிர்’ கொடுத்தோம்?
எல்லாமே வீண்தானா?
என்றும் ஏங்குவோம் தான்.
கல்லறைகளுக்குள் ‘கனவுகள்’
கருக்கொண்டு கிடக்கின்றன!
சிந்திய குருதியின் சூடு
தணியாமல் கிடக்கிறது!
மனங்களில் மாறாத வடுக்களுடன்
அழுதபடி தொழுகின்றோம் என்பதை அறிவீரே….
கல்லறை வந்து உமைக்கட்டித்தழுவி
கவலைகள் சொல்லியழ முடியவில்லை…..
கற்களாய் உம்மை நட்ட
கோயில்களை தேடுகின்றோம்,
ஒரு புற்களைக்கூட காணோம்
நிர் மூலமாய்க் கிடக்கின்றன……
அதற்காக
கண்ணயரா கண்மணிகளே
விண்ணேறிப்போனவரே நீங்கள்
விலாசமின்றிப்போவீரோ?
பனிக்கின்றன விழிகள்
பதைக்கின்றது நெஞ்சம்
என்ன நடக்கிறதெம் தேசத்தில் இன்று?
எவருக்குமே விளங்கவில்லையே..!
எங்கள் தேசத்தின் வீடுகளில்
நினைவுப் படங்களைக்கூட வைக்கமுடியாமல்
நீங்கள் நடந்த தடங்கள் மட்டும்
என்றென்றும் எங்களுடன்
கண்களில் நீங்கள் செய்த குறும்புத்தனங்கள்
எம் மனங்களில் நீங்கள் செய்த வேள்விகள்………..
எம்முள் விதைகளாய் விழுந்திருக்கும்
உம் நினைவுகள் எதையும்
நாம் தொலைத்து விடவில்லை
கல்லறைக்குள் துயிலும் கண்மணிகளே !
நெஞ்சறையில் நிமிர்வைத்தரும் ஒளிகளே
உம் நினைவுகளையும் கனவுகளைசுமந்தபடி
வாழ்கிறோம் வளர்கிறோம்.
உங்கள் கல்லறைகள் வெறும் கல் அறைகளல்ல
உடைத்தவுடன் மறைந்து அழிந்துபோக.
அவை ஈழத் தாயின் கருவறைகள் !
இலட்சியத்தீ கருக்கொள்ளும் நெருப்பறைகள்!
நாம் உங்களை புதைக்கவில்லை...
எம் மண்ணிலும் மனதிலும் விதைத்திருக்கிறோம்!
மண்விடியும்….!
எம் கைவிலங்கும் நாளை பொடியாகும்!
செங்கதிரோன் இருள்விலகி ஒளிவீசும்-
எங்கள் செந்நிறக்கொடி-
காற்றில் அசைந்தாடும்
விண்ணிருந்து மேகம் இடி…இடிக்கும்
மண் நனைத்து முகில்கள் இதமாக்கும்-
எம் மண் விடியும் நாளை
குயிலிசை பாடும் உயிர்விதை…!
நேற்றொடு போகுமோ
ஈழம் கானலெண்றாகுமோ..!
வாழ்வில் தோல்விகள் கொஞ்சமா..?
தோற்றதாய் கிடப்பது மட்டுமே தோல்வியாகும்.
ஆகவே புதுவீச்சொடு எழுவோமே
வெற்றிக்காய் எம்மையும் இணைப்போமே
நிஐத்தடன் நிலவன்
பாலயாப் பாவிகள்!!!!
எக்கோடிகளை எட்டித் தொட
மாடிகளின் மேல் நின்று கெட
பாற்குடங்களைக் குலுக்குகிறீர்கள்?
கோலுக்கடியில் (அரசுக்கடியில்)
வாழாதிருக்கவா
காலுக்கடியில் மாடி?
அண்ணாந்தே பார்க்கிறார்கள்
பாலகர்கள் போடி..!
பெண்களைப் பெண் மணந்து
புண்களுக்குப் பூசைகள்.
ஆண் கண்களுக்கு ஆசைகள்.
ஆண் பெண் பாலறியாது
கண்கேட்டுப்போனதோ….பார்?
ஆணை ஆண் அணைந்து
ஊனை உண்ணத்துடிக்கும்
சேனை உருவானதோ?
எருவாய்கள் எல்லாம்
திருவாய்கள் ஆக
கருவாய் தேடா
கலியுகம் இதுவோ?
நோர்வே நக்கீரா?
18.11.2015
குஞ்சுகள் பொரித்தது
-----------------------------------
ஒருமாதமாகி உருண்டு புரண்டு
ஓராயிரம் பொய்கள் பேசி
மக்கள் மனதைகவர வந்தவர்கள்
வாய்ப்புகள் எமக்குத் தான் என்று
மார்பு தட்டியவர்கள்
பேசிய வார்த்தைகள் மிதமாகி
எல்லைகள் கடக்க மக்கள் மௌனமாகி
அடைக்கோழி போல் அடைகாத்த முட்டையின்
குஞ்சுகள் பல இன்று பொரித்தன
சிறகு முளைத்து பறக்கும் காலம்
ஐந்து வருடம் என்பதை மறக்காமல்
அடைக்கோழிகள் பரம்பரைகளை
அடையாளம் தெரியாமல் திரிந்தால்
அடுத்த அடைகாலத்தில் குஞ்சு பொரிப்பது
மிக மிக அரிதாகும்! மிக மிக அரிதாகும்!
.
EKk.கண்ணன்
மாப்பிளை தேவை
ஐரோப்பாவில் பிறந்து
நாகரீகமாய் வளர்ந்து
படித்து எல்லாம் முடித்து
தொழில் செய்து
தொழில்பார்க்கும்
அழகிய தமிழ்பெண்ணுக்கு
பேசா அடிக்காத
வெருட்டாத முறைக்காத
மாப்பிள்ளை தேவை.
பழகிப்பார்த்து
பள்ளியில் பயின்று பார்த்து
திருப்தி என்றால் திருமணம்.
பிழைத்துப்போனால்
இன்னுமொரு மறுமணம்.
பிணவறையில் இருந்து
விரைகின்றன விண்ணப்பங்கள்...!
நோர்வே நக்கீரா
பரம்பொருள் அறியாப்பார்பணன்
சூத்திரனை சூட்சுமமாய்
சாத்தித்தில் சிக்கவைக்க
கோத்திரம் எழுதினான்
பார்ப்பணன்
இறை பாத்திரம் அறியா
காழ்புணன்.
கடவுளெனக்காட்டும்
கடந்துள்ளவன் கூட
சூத்திரன் என்பதை அறி
பாரதமண்ணின்
ஆதிகுடி அனைத்தும்
சூத்திரர் என்று குறி
நீ பூப்போட்டு
பூசை செய்து
தொழுதெழும் பரம்பொருளில்
யாரடா பார்பணர்
நீ சீர்போட்டு
சொல்லும் உன்
வேதங்கள் காட்டுவது
சாதியில் சிறிய சூத்திரர்.சுத்தமாய்
சூத்திரன் சிவனுக்கு
சிறுநீரெடுக்கும்
பார்ப்பணனே அறி
சாத்திரம் சொல்லும்
பரம்பொருள் அனைவரும்
சூத்திரன் என்றே படி
வடமொழி எனும்
கெடுமொழி இன்று
வடுப்பட்டது பார் உலகில்
வடுமொழி என நீ
வசைந்துரைத்த தமிழ்மொழி
வளர்கிறது பார் இலகில்
பரம்பொருள் எனும்
பெரும்பொருள் கண்டாய்
பரம்பொருளாக
சூத்திரனையே சொன்னாய்.
சிவனோ பறையன்
கிருஸ்ணனோ இடையன்
முருகனும் வேடுவிச்சி மணாளன்
பார்வதி தந்தை
அரக்கன் தக்கன்
யாரடா இங்கே பார்ப்பணன்
பாரடா பார்பணா
யாவரும் சூத்திரன்
பரம்பொருள் அறியாப் பார்ப்ணனே- நீ
வெறும்பொருள் என்று அறி
பெரும்பொருள் பாரில் சூத்திரனே. என
அறப்பொருள் கொண்டு முடி.
நோர்வே நக்கீரா
17.11.2015
-----------------------------------------
அகதி அரவங்கள்
பாலைவனத்துப் பாம்புகள் சில
சாலைகள் ஊடே ஊர்ந்தே பல
நாடுகளை ஒடிக் கடந்தன- ஐரோப்பிய
நகரங்கள் நாறியே நடுங்கின.
பாம்புக்கு இப்போ பால்வார்ப்பார்
நாளைய நிலையை யார்கேட்பார்?
வயிறு முட்டப் பாம்பு முட்டை
முட்டைபோட ஈரோவில் நிஸ்டை
ஐயோ அப்பா ஐரோப்பா
ஈரோ இப்போ தப்பப்பா?
அகதிகளுடனே அல்லாவே
கால்களுக்கிடையில் செல்வாரே
ஆணுறை அறியா அல்லாவை
அகதியாய் உள்ளே அனுமதித்தால்
ஐரோப்பியர் ஐயோ அகதியாமே
ஆணுறையுடனே அரவங்களை
அனுமதித்தால் மட்டும் விடிவுண்டு
தானுறை கொண்ட ஐரோப்பியரே!! -பாம்பு
தானுறை களட்டும் தெரியாதோ?
எல்லைகள் எங்கும் பன்றிகளை
இருத்தி வைத்துப் பாருங்கள்
எல்லைக்காவல் தேவையில்லை
தொல்லைகள் தொடரா தொலைவாகும்.
நோர்வே நக்கீரா 05.09.2015
களத்தில் ஒரு கன்றுக்குட்டி
பறவைகளின் பாஷை என்ன..
ஒலிக் குறிப்பு ஒன்று
அர்த்தங்களால் நிரப்பப் பட்டு
பேசும் பாஷையாகி.......
நீயும் நானும்
காதல் மொழியாக
அன்பு மொழியாக........
பேசியும் புரியாத
மொழியாக பேதங்களால்
நகர்கிறது..............
எழுதிப் படிக்க முடியாத
படித்துப் பொருள் கூற முடியாத
உணரும் மொழி ஒன்றை.......
என் வீட்டுப் பறவை
நாழிகை மறந்து
நல்ல சங்கீதமாய் பாடுகிறது .........
உற்றுக் கேட்டால்
உள்ளம் பறி போகிறது இவை பேசும் மொழியே
இன்ப மொழி என தோன்றியது.....
சுபாரஞ்சன்.
--------------------------------
2)
ஒற்றைக் குருவி ஒன்று
------------------------------------
அடர்ந்த காட்டையும்
அது கூடி வாழ்ந்த
கூட்டையும் இழந்து
கலங்கியதோ.............
வன வேடனின்
கண்ணியிலே
துடித்து மடிந்த
துணையை எண்ணி கலங்கியதோ......
பாடிப் பழகிய
பாசக்குருவிகள்
திசை மாறிப் பறந்த
சோகத்தை எண்ணி
கலங்கியதோ................
ஒற்றைக் குருவியின்
சோகத்தை பகிர
ஒரு துணை இல்லையே
எனக் கலங்கியதோ................
சுபாரஞ்சன்.
ஆக்கிரமிக்கப்படும் ஐரோப்பா
வருடம் ஒரு குண்டு விழும்
விழுந்து உருண்டு அது அழும்
பொருளாதாரத் தரம் கெடும்
நல்லுயிர்கள் உயிர் விடும்
பீறிடும் பீரங்கிகளுடன் முக்கால் ஆண்கள்
நாறிடும் நாசகாரி கவசவண்டியுடன் பெண்கள்
அல்லா படையெடுப்பு ஐரோப்பாவில் நடக்கிறது - அல்லா
இல்லா எதிர்காலம் சொல்லாது போகிறது
காணாத அல்லாவைக் கண்டதாய் நபியும்
கோணது சொன்னானே கேணயன் இவனும்
நபியைக் காட்டியே நடக்கிறது போர்கள்
நம்பி நம்பி அழிகிறது ஐரோப்பிய ஊர்கள்.
வண்டியில் இருந்து முண்டி விழுவது அல்லாத பிள்ளைகள்
கொத்தணிக் குண்டுகளாய் அல்லா அனுப்பிய தொல்லைகள்
காகங்கள் நாடில் போட்ட குண்டுகள் ஐரோப்பாவில் வெடிக்கும்
யாகங்கள் செய்யினும் யாதுமிழந்து மேற்குலகம் துடிக்கும்
நோர்வே நக்கீரா
12.11.2015
ஐரோப்பிய மண்ணில்
விண்கட்டிப்பறக்கின்றன
தெற்காசியப் பட்டங்கள்.
விண் கூவுகிறது பட்டம்.
விண்ணாதி விண்ணர்களால்
விண்ணில்
ஐரோப்பிய மண்ணில்
விண்கட்டிப்பறக்கின்றன
தெற்காசியப் பட்டங்கள்.
ஆசிரியர்!
போராசிரியர்!!
டாக்டர்!!!...கலாநிதி!!!
முனைவர்...துணைவேந்தர்...வேந்தர்...!!!!
காற்றிலே பறக்கா
காசாலே பறக்கும் காற்றாடிகளுக்கு
காசா?...சேலசா...?
காசாலே சா...
காசுடனே சா
காசிலேயே தொங்குகின்றன
வால்களும் குஞ்சங்களும்
அசைவுகளுக்கு இசைந்தால்போல்
வாலாடி
குஞ்சம் குலுக்கி
விண் கூவுகிறது பட்டம்.
பத்தாம் வகுப்புப் படிக்காதவனும்
பட்டம் விடுகிறான்
கட்டம் கட்டமாய் காசுவாங்கி
கொள்ளையடித்துக் கொட்டமடிக்கிறது
ஐரோப்பிய தரகு வியாபாரம்
அண்ணாந்து பார்ப்பதாலும்
உயரவே பறப்பதாலும்
நூலில்தான் வாழ்வென்பதை அறியாது
எம்கைகளை இழுத்து
வெட்டிப்பார்க்கிறது நூல்
நாம் நூலை
கைவிடும்போது தெரியும்
பட்டமும் பதவியும்
பட்டங்களின் வாழ்வும்
காட்டுக்குள் சாவும்.
கிளிந்தே கிடக்கும் பட்டங்கள்.
உண்மை உளறி
நோர்வே நக்கீரா 22.10.2015
-----------------------------
தாய்மை
ஆண்
பெண்ணுக்கு
ஆடைகட்டி அழகுபார்த்தான்
அம்மனாக
அனைவரும்
கையெடுத்துக் கும்பிட்டனர்
தெய்வமாக
இன்றோ
கவர்ச்சி என அதை
அம்மனே அவிழ்தெறிந்துவிட்டு
காட்டி மறைக்கிறது
மறைத்துக் காட்டுகிறது
கும்பிட்ட கைகள் குறுத்து
வம்பிட்டுப் போக
கவர்ச்சி கவறற்று
காதலில் பவற்று
காமத்தில் கவிண்டு போகிறது
தாய்மை
வாய்மை இழந்தது
வாய் மெய் இழந்தது- பெண்மையின்
மெய் வாயிழந்தது
நோர்வே நக்கீரா
இற.. பிற.. இந்தநாட்கள்
அழுதலில் தொடங்கிய பிறப்பு
அளவிடுப்போகும் இறப்பு
பிறப்பு இறப்பு இரண்டுக்கும் இடையில்
வாழ்க்கையின் வளர்ப்பு.
திண்டு ஆடுகிறது
திண்டாடும் வாழ்க்கை
கொதிக்கும் குளம்பின்மேல் கூத்தாடுகிறோம்
சிவனையும் கூத்தாடியாய் குறை கூறுகிறோம்
வாழ்கையே கூத்துத்தானே கூத்தா.
ஆத்தாமேல் கூத்து -பின்
ஆத்தாவுள் கூத்து
ஆத்தாவுள் குத்து
ஆத்தாது பிறப்பு
கிழக்கெழுவான் எழுமுன்னே
கிளர்ந்தெழுவான் போக்கறுவான்
போக்கு வாக்குத்தெரியாது
பழக்கம் வழக்கமாகி
கோ-வ(ண-க)ம் கொண்டு
கோடிபழிகள் தீரக்கும்பிட்டு
குடும்பி பிடித்து
தேங்காய் உடைத்து
சாதம் படைத்து
அது பிரசாதமாக்கி
பிற ஏழைகளுக்குக் கொடுத்து
போதும் என்று பெருவயிறு கூற
சுற்றம் சூழ கொற்றம் மீழும் பிறந்தநாட்கள்.
போர்வந்து பாருளுது
ஏரெறிந்து ஊரெரிய
எறிகணைகள் எறிந்து நாடெரிய
அனுமானின் அவல விஜயம்- ஆனால்
காணவில்லை இராமனை.
யார்யாரோ உடல்கள்
எங்கள் வயல்களில் புதைந்து
எலும்புகள் விளைந்து
பிறந்தநாட்கள் மறந்து
இறந்தநாட்களாய் போனது.
இன்று
உற்றது ஒன்றும்
பிறமொழி தத்தெடுத்த
பெற்றது இரண்டும்
சுற்றி நின்று பிறதோர் மொழில்
பிறந்தநாள் பாடி
சின்னக் கேட்கை சிறிதாய் வெட்டி
சிறுதுண்டுகளாய் ஊட்டி
கூட்டமற்றுக் கூடக் கொண்டாடும்
புலத்துப் பிறந்தநாட்கள்.
சிறுத்துப்போனானே மனிதன்
குறிகிப்போயின
மனிதருடன் மனங்களும் மொழியும்.
மொழியை மொழியென மொழிந்தாலும்
மொழியை மொழியாக மொழிவாயோ தமிழா!!
பி.கு:- வாழ்க்கை போகும் இடம் அறியாதது இதனால் நாம் போக்கறுந்தவர்கள். மனிதன் போக்கறுவான்.
தமிழனாய்
நோர்வே நக்கீரா.
இன்று முதல் பண்ணாகம் இணையத்தில் அறிமுகமாகிறார்.
இணைய கவிஞர் குழுவில்
திருமதி . சுபாரஞ்சன்
ஐஸ்பழத்திற்கு அழுதபோது
*********************************
கோடை
வற்றி
கொடும்
வெயில்
தணலாய்
கக்கும்
வெக்கையில்
பொசுங்கி
வியர்வை
கொட்டும்...........
கோடையை
குளிர்விக்க
பாடலோடு
வண்டி வரும்
மிதி
வண்டியில் மணியடித்து
ஐஸ்பழ
மாமாவின் அழைப்பு வரும் ......
கண்ணைக்
கவரும் வண்ணப் பழங்கள்
வேண்டும்
என போராடி அழுதது
பணப்
புழக்கம் இல்லாமல்
பண்டமாற்றம்
செய்தது.....,,,,.....
பழைய
போத்தலும்
பாட்டியின்
மூக்குப் பேணியும்
மங்கிப்
போன வெண்கலமும்
துருப்
பிடித்த இரம்புத் துண்டும்
அம்மாவின்
கால் கொலுசும்
ஐஸ்பழம்
தந்தது................
மின்னி
மறைகின்ற நினைவுகள்
இனிப்பாய்
இருக்கிறது
எண்ணிக்
பார்க்கையிலே
எனக்கும்
பிடித்த பழமாய் ..........!!
சுபாரஞ்சன்
------------------------------
பரம்பரையே வேண்டாம்
(கவிதை 15.05.2015)
(புங்கிடுதீவைச்சேர்ந்து உயர்கல்வி கற்கும் மாணவி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்துப்பட்ட பின் கொலை செய்யப்பட்டார். )
காவலாய் நிற்கவேண்டிய கடவுள்களே!
காமக்கோலமாய் நிற்பதேன் கயமைகளே!
உங்களைப் பூசித்தவளும்
கண்காணாமலே நேசித்துவளும் பெண்தான்
அவர்கள் என்றும் பொன்தான்
பொன்னென்பதாலா தீயிலிட்டு பொசுக்கி
நகையாக்க நகையாய் நகைக்கிறீர்கள்?
நெஞ்சில் வஞ்சம்கொள் நஞ்சர்களே.
பொந்துக்குள் யந்துக்கள் தேடி
உணவு நாடி
ஊம்பும் நல்லபாம்பு
காதலில் பிறக்காத கயமைகளே - நீவீர்
மனிதவடிவில் வாழும் நச்சுப்பாம்புகளே
பொந்துகளே பொறியானால்....?
பொறுக்கிகளே
விந்து உந்தும் குறியில் வெறிபோகும்.
வாழ்வியல் நெறிமாறும்.
வந்தவிடம் தேடி
வதைகொள்ளத் திரியும் வக்கிரகங்களே!
வதைபடுவது வனிதையரின் உடல்மட்டுமல்ல
உங்களை நேசித்த உள்ளமும் தான்.
கொன்று பின் தின்னும் மிருகம்
இது மிருகதர்மம்
தின்ற பின் கொல்லும் குரங்குகளே
இது மனிதநேய வெறுமம்
கேடுகெட்ட கொடும் கறுமம்
விந்து சிந்தும் கொடிய யந்து சாக
விதைகளைக் சிதைத்து விடு
முடிந்தால் எடுத்து விடு
அரக்கர்கள் மேல் இரக்கம் வேண்டாம்
அரக்கபரம்பரையே இருக்க வேண்டாம்
தெரிந்து அடியோடு அரிந்துவிடு.
பின் புனிதமாகும் பூமி புரிந்துவிடு
வெகிழ்ச்சியுடனும் வேதனையுடனும்
நோர்வே நக்கீரா 15.05.2015
தொங்கும் உறவு
தன்னை அறியாமலே
தந்தையில்-பின்
அன்னையில்
தொங்கித் தூங்கினாள்.
ஈன்று புறமெறிந்த பின்
தாயிலும் –பின்
தந்தையில்…
தம்பியில்…
தமையனில்…
தொங்கித் தொங்கியே
சுமையானவளை
ஊர் உறவுகள் கூடி
குடும்பத்தில் காய்ந்து கருவாடாக
மஞ்சள் கையிற்றில் தூக்கிலிட்டனர்
சாகும் வரையும்
தூங்கும் அக்கயிற்றில்
தூங்கத் தொடங்கிவிட்டாள்
அவள் மகளும்.
நோர்வே நக்கீரா 27.04.2015
இல்லை
கந்தகக்காற்று கலையவில்லை
வைத்த குண்டுகள் வெடிக்கவில்லை
விழுந்த குண்டுகளும் சிதறவில்லை
காலனின் காத்திருப்பு தொடர்கிறது…!
ஒடிய உதிரங்கள் உலரவில்லை
செம்மண் கழிவோயிலால்
இன்னும் கறுக்கவில்லை
ஐ.நாவில்
உதிரத்தை மறைக்க
கழிவெண்ணையால் முடியவில்லை
உலகம் எம்நிலையையும் உணரவில்லை
கழிவெண்ணை நீரை
குடித்தும்….குளித்தும்
தமிழன் இன்னும் அழியவில்லை
வடக்குக்கிழக்கில் அரசமரங்களின் கீழ்
செத்துச்சமாதியான புத்தனைப் புதைக்க
அரசின் அரக்கபடையால் முடியவில்லை
அங்கே மனிதரில்லை…மனிதமில்லை!!
தம்பியின் கதைகேட்டு கிட்லர் எகிறுகிறான்
“யாரடா என்பெயரைக் கெடுத்தவன்”
சுனாமியுடன் புதிய கிட்லருக்காய்
காத்துக்கிடக்கிறது இலங்கை.
நோர்வே நக்கீரா 30.03.2015
காவுபோன பேச்சும் எழுத்தும்
பேச்சுக்களும்
பேனாக்களின் மூச்சுக்களும்
தலைநகர் டென்மாக்கில்
ஒரு தலையாய சந்திப்பு 15.02.2015
சுதந்திரத்தை தன்னுள் சுட்ட கூரான்கள்
சுடுகோலுடன் சுற்றித்திரிந்தன
அல்லாதவரை அழைத்தபடி
இருளுக்குள் இருள்மர்
பேய்நாக்களால்
பேனாக்களுக்கு
தேவைப்பட்டது காவல்
சுடுகோல் துப்பிய துளைகளினூடாக
தலைகீழாக நின்ற பேனாக்களின் தலைகளால்
வழிந்து கொண்டிருந்தது
சிவப்பு சுதந்திரம்
பேச்சு மூச்சின்றி
வாய்மூடி
மெளன அஞ்சலில் செய்தது பேச்சு
மூச்சுக்கு மூச்சு
பேச்சு சுதந்திரத்தை எழுதிய
எழுத்துச் சுதந்திரம்
ஊடகங்களுள்
புதைத்து மறைக்கப்பட்டது.
கொல்லை வாசலைத்திறந்து
அல்லாப்பிள்ளைகளை
நாட்டினுள் நுளையவிட்டு குற்றத்துக்காக
பேச்சும் எழுத்தும்
நாடுகடத்தப்பட்டன பிணங்களாக.
மூச்சிழந்தது நாடு
பிற்குறிப்பு:- பேச்சு எழுத்து சுதந்திரம் பற்றிய தலைப்பில் நடைபெற்ற சந்திப்பில் இஸ்லாமியபயங்கரவாதிகள் சுட்டதால் இரண்டு டென்மாக் பொலிசார் கொல்லப்பட்டனர் இரண்டு பொலிசார்காயமடைந்தனர். செய்தி 15.02.2015 நேரம் 15:31
பேனா எனும் போர்நாவுடன் நோர்வே நக்கீரா. 18.02.2015
------------------
காதலர்திவசம் 14மாசி
நோர்வே நக்கீரா
கருணை இல்லங்களில் கதறுகின்றன எம் கருவறைகள்
தாயர் தினம்கள் கொண்டாடுகிறார்கள் கணைக்கடல்கள்
உன்னை உயர்ந்தவனாக்க உருக்குலைந்தார் தந்தை-அவர்
சிந்தை சிதைய முதியோரில்லத்தில் வாழ்வதுதான் விந்தை
கட்டில் பிணமாய் ஆக்கினான் உயிருள்ள பெண்ணை
பெண்கள் தினமென உச்சரித்தான் ஒரு எண்ணை
தொழிலே இல்லாது போனான் உலகில் தொழிலாளி
தொழிலாளர் தினத்தைக் கொண்டுகிறான் முதலாளி
தினமின்றிப் போன தினங்களே தினங்கள்
கனங்கொண்டு வாழும் தினங்களில் மனங்கள்
காதல் எல்லாம் கருவின்றிப் போச்சு
காதலர் தினமும் கருக்கொள்ளலாச்சு
செத்தவர்க்கு செய்வார்கள் நினைவுகொள்ள திவசம்
காதலுக்கும் காதலர்கள் செய்கிறார்கள் காதல்திவசம்
காதலர் தினமாம் போதகன் செத்த14 மாசி
கல்லறையில் கதறுகிறது காதல் நீ யோசி
தினம் தினம் தினங்கள்
தினம் வந்த போகும்
இனம் இனம் இனமாய்
மனம் கொண்டு ஆடும்
சினம் சிந்திப் போக
சிறுமை நின்று ஏங்கும்
கனம் கொண்ட தினங்கள்
மனமின்றியும் வாழும்
-----------------------------------------
எணணை வளம்
நோர்வே நகக்கீரன்
வளமான நாடுகளில் இனியொன்று இலங்கை
சுண்ணாகத்தைச்சுற்றி எண்ணையுறும் இயற்கை
குடிப்பதற்கு தண்ணீரில்லை - என்றாலும்
குளிப்பதற்கு கிணறுகளில் எண்ணை
ஓப்பெக்கில் இனி இலங்கையும் இடம்பெறும்...!
போத்தல் நீரைக் குடிக்கலாம்
குளிக்கலாமா?
வானம் பொய்த போது
விமானங்கள் பொழிந்தன
கந்தக பொஸ்பரஸ் குண்டுவிதைகள்
எம்மண்ணுக்கு வைத்த சிதைகள்
விண்ணாணம் பார்க்கும் உலகிற்கு
சுண்ணாகம் தெரியவில்லை
புத்தனின் சித்தம்
கழிவெண்ணை அபத்தம்
இராச்சத மகிந்தனின் தம்பி
கோத்தைக்கு பாய்த கம்பி
வம்பிலை பிறந்தது வெம்பி
இவ்வரக்கன் செய்த சதியே - அவன்
கழிவுவெண்ணையில் எம்மண்ணின் விதி
ஞாலத்தில் காலமாகும் ஈழம் -பாரும்
பாலைவனமாகும் கோலம்
இருப்பை இரஞ்சிய மக்களுக்கு
மரணத்தை பரிசளித்தான் இராச்சதன் மகிந்தன்
மரணத்தை மணந்தவர்கள் உதிரத்தின் உறவுகள்
ஆட்சிகே இடுப்பொடித்து அடுப்படி அனுப்பினர்
தூங்குவதுபோல் தூங்குகிறான்
அரசமரங்களின் கீழ் போலிப்புத்தன் - இனி
எழுந்திருக்கவே மாட்டான் இந்தப்பித்தன்
புத்தனின் பல்லையே பிடுங்கி வைத்துக்
கொண்டாடப்படுகிறது வெசாக்
பல்லுப்போன புத்தனும் இனியும் பேசுவானா?
-----------------------------------
பனிவிழும் தேசத்து நண்பனுக்கு மீளமுடியாதவனின் மின்னஞ்சல்
இரத்தம்தோய்ந்த குரூரச்சிவப்பான
கொள்ளிக்கண்கள்
பார்வைகளே படுபாதகம் செய்யுமாற்போற்
சுவாலைப்பார்வைகள்
தரவையெங்கும் பிச்செறியப்பட்ட பிணப்பாகங்கள்
வல்லுறவினால் சிந்திய விந்துக்கள் வழியெங்கும்
செங்குருதி வழிந்து காய்ந்த தேகங்களை ஆட்காட்டிக்குருவிகள்
அடையாளம் கண்டுகொண்டாற்போல் அமைதியாய் இருந்தன
உள்ளம் துடித்தது
பற்கள் நரும்பின
மீசைகள் துடித்தன
தோள்கள் முறுக்கேறின
எல்லாமே கனவானது
ஆட்காட்டிகள் எல்லாமிழந்து அனாதரவாய் நின்றன.
அவற்றின் உணர்வுகள்
நம்மையும் தொற்றிக்கொண்டது
பழி வாங்கும் நேரம் இதுவல்ல
பார்த்து நடக்கவேண்டிய நேரம்
ஏற்றத்தைக் கைவிட்டு ஆற்றைக்கடக்க வேண்டும்
ஆற்றுப்படுத்த வேண்டியது அதிகம் இருக்கிறது
எங்கோ பனிமலைத் தேசத்தில் இருக்கும் நண்பன் உரத்து கூவுகிறான்
போருக்கு போகும் நேரம் இது
ஆற்றவா ஆள் தேடுகிறாய்
அவனுக்கென்ன அவனது நாட்டில் அகதியானாலும்
சுதந்திரமிருக்கின்றது.
எம்மிடம் பிரசையென்ற பிம்பம் மட்டும்தான்
அவனுக்கு ஆகாயமும் அழகு
பூமியும் அழகுதான்
ஏனென்றால் அடுத்த வேளைக்கான அரிசி அவனிடம் உள்ளது.
என்னிடம் என்ன இருக்கிறது
இப்போதெல்லாம் மீன்பிடிக்க கூட நாரைகள் வருவதில்லை
குளம் வற்றிவிட்டது.
இறங்கி தூண்டில் போடச் சொல்கிறார்கள்
குளத்திற்குள் புழுதி பறக்கிறது
மீன்பிடிக்கச்சொன்னால் எதைப்பிடிப்பது
எனவே நண்பனே உனது பிரசினையின் பரிமாணம் வேறு
எனது பிரச்சினையில் பரிமாணம் வேறு
உனக்கு சாப்பிட்டதனால் வரும் ஏப்பம்
எம்மிடம் வயிற்றுக்கில்லா கொட்டாவி
என்றோ ஒருநாள்
மழைபெய்யும்
குளம் நிரம்பும் நாரைகளும் வரும்
தூண்டிகளோடு நாமிருப்போம்
எங்கள் வயிறுகளும் நிறைந்திருக்கும்
நாளைக்கான உணவுகள் பையிலிருக்கும்
காயங்கள் ஆறி தேகம் தினவெடுக்க காத்திருப்போம்
அன்றும் இதே உணர்வோடு நீயிருந்தால்
வா நண்பா
கதைமுடிக்க
பழி முடிக்க.
ச. நித்தியானந்தன்
து-வேசம் (துவேசம்)
நோர்வே நக்கீரா 30.01.2015
துருவத்தில்
தூங்கிக் கொண்டிருந்தது துயரம்--நோர்வே
நிரம்பிக் கொண்டிருக்கும்
ஊருந்தும் பேருந்தில் (பஸ்)
நிரம்பாமலே பெருமூச்சு விடும்
கரியாசனமான
என் அருகாசனம் அரியாசனமாய்
விண்ணுலக விசாவுக்கு விண்ணப்பித்துவிட்டு
கழுத்தில் தொங்கும் சிலுவையும் கையுமாய்
விழுந்து விழுந்து நிற்கிறார்கள்
வாழ்வே விழப்போகும்
பலவெள்ளைக் கிழடுகள்.
என்தோழ்பை தொணதொணத்தது
"உன்மனம்போல் கொதிக்கிதடா மடி
கிழடி கூட அருகிருக்கமாட்டாள்
என்னையாவது உன்னருகிருத்து"
ஒருபயணச்சீட்டில்
இரு இருக்கையில்
இருவர் பயணம் செய்கிறோம்.
தோழ்பை
இப்போ தொங்க மறுக்கிறது.
இறங்கிப்போகும் போது
ஒரு கிழவியின் காதில் நான்
"நீ வணங்கும் யேசுவும் கறுப்பன்தான்"
முறைத்துப் பார்த்தபடி
விறைத்துப்போய் நின்றாள்
விண்ணுலக விசாவை இரத்து செய்வாளா?- இனி
நரகம்தான் இவர்களுக்கு சொர்க்கம்
(இதை பலர் ஐரோப்பாவில் அனுபவித்திருப்பர்)
------------------------------------------------
மலையகமக்களின் நினைவுடன் புத்தாண்டு
நோர்வே நக்கீரா
புதிது புதிதாய் ஆண்டுகள்- பல
வந்து வந்து போயின
எமது ஈழத்தமிழர்க்கு -என்ன
புதிதாய் ஆயின?
உலகிற்கு உதிரத்தை தேநீராய்
தந்தான் மலையத்தான்
சரிந்து மண்ணில் சிதைந்தபோது
உலத்தான் என்ன கொடுத்தான்?
அழுதகண்ணீர் வடிந்து
உலர்ந்து உப்பாய் போகுமுன்- எப்படி
தொழுது மகிழ்வை கேட்கிறாய்
புதைந்த ஆண்டே கூறுமுன்.
பத்தாண்டுச் சுனாமியை நினைத்து இப்போ அழுதோம்
புத்தாண்டில் மகிழ்வை எப்படி உன்னுடன் பகிர்வோம்.
சுனாமியாய் தின்றாய் அன்றும் வடவன்னித்தமிழனை
மண்சரித்துக் கொன்றாய் இன்றும் மலையகத்தமிழனை
தமிழனைத் தீர்த்துவிட்டு தரணியாளும் நோக்கமா?
செய்தவினை அத்தனையும் சேர்ந்துவரும் ஊக்கமாய்
இயற்கையே நீ என்ன இயக்கர்களின் பக்கமா?
அரக்கர்களுடன் வாழ்வது உனக்கு இன்பச்சொர்க்கமா?
தமிழனை தின்று தின்றே கொழுத்தாய்
எம்மை என்றும் தேடித்தேடியே அழித்தாய்
நம்பி நம்பியே நாம் இன்றுவரை கெட்டோம்
தன்நம்பிக்கையோடு புதுவுலகு படைப்போம்
வந்தவழி பார்த்து திரும்பி நீயும் போய்விடு – நாம்
சொந்தவழி கண்டபின் வந்து முகத்தைக் காட்டிடு
மழையும் நானும்
மழை தனது துளிக்கைகளால் தட்டிக் கொண்டிருந்தது யன்னல் கண்ணாடியை
நித்திரை குழம்பிய கோபத்தில் யன்னலைத் திறந்தேன் படக்கென்று
துளிக்கைகளால் முகத்தில் நீர் தெளித்து காலை வணக்கம் என்றது மழை
நித்திரையை குழப்பிய கோபத்தில் மழையைச் சீண்டவேண்டும் என்றெண்ணி
நித்திரையை குழப்பிவி;ட்டு வணக்கம் சொல்லுகிறாய் என்று நானும்
வேண்டா வெறுப்பாக வணக்கம் என்றேன் புன்முறுவல் பூத்தது மழை
உன்னிடம் ஒரு கேள்வியென்றேன் கேளென்றது மழை தொடர்ந்து பூமியை நனைத்தபடியே
உன் வேலையைவிட்டிட்டு என் கேள்விக்கு பதில் சொல் என்றென்
தனது புருவத்தை உயர்த்தி என்னைப் பார்த்த மழை அதெல்லாம் முடியாது
எனது வேலையை அந்தந்தப் பருவ காலத்தில் செய்ய வேண்டும் என்பது
இயற்கையின் கட்டளை என்று சொல்லி கேள்வியைக் கேள் என்றது மழை
நீ கண்ணாடியில் பட்டால் சத்தத்தால் அது இதுவெனக் காட்டுகிறாய,;...ம்...சரி
நீ சுவரில் பட்டால் இது சுவரென தெரியப்படுத்துகிறாய் சத்தத்தால் ,…ம்..சரி
நீ கிடுகு வீட்டுக்கூரைமேல் விழுந்தால் அது கீற்று வீடு என சத்தத்தால் தெரியப்படுத்துகிறாய்...ம்..சரி
நீ பனையோலை வேய்ந்த வீட்டின் மேல் விழுந்த ஒலியால் இதுவெனக் காட்டுகிறாய்,..ம்....சரி
நீP ஓட்டு வீட்டின் மேல் விழுந்து அதற்கொரு சத்தம் கொடுத்து ஓட்டு வீடென்கிறாய்...ம்..சரி
நீ அஸ்பெஸ்டஸ் வீட்டின் மேல் விழுந்து அதற்கொரு சத்தம் கொடுக்கிறாய்,..ம்...சரி
மழைக்கு கோபம் வந்துவிட்டது கேட்கிற கேள்விகளைக் கெதியாய்க் கேள் குறித்த நேரத்திற்குள்
இங்கு வேலையை முடித்துவிட்டு வேறு இடத்திற்கு போக வேணும் என்றது மழை
நீ மண்ணில் பட்டு இந்த வகை மண் என மணத்தால் காண்பிக்கிறாய்,ம்..சரி
நீ நீர்நிலைகளில் விழுந்து இது நீரெனக் காட்டுகிறாய்,..ம் சரி
நீ மரம் செடி கொடி மரங்களில் பட்டு இவை இதுவெனச் சத்தத்தால் காட்டுகிறாய்..ம் சரி
நீ பறவை மிருகங்களில் விழுந்து அவை இதுவென காட்டுகிறாய்,...ம்.....சரி
நீ எதிலெதிலோ விழுந்து அவைவை எதுவென வெளிப்படுத்துகிறாய,..ம்..சரி
ஆனால் மனதர்களின்; மேல் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் விழுகிறாயே
அவர்களை இனங்காட்டவில்லையே நீ தோற்றுப்போய் விட்டாயே என்றேன் எகத்தாளமாய்
மழைக்கு என்ன நினைத்ததோ தெரியவில்லை காற்றைக் கூப்பிட்டு இவனின் முகத்தில்
நிறையத் துளிகள் தெளி என்று சொல்லிவிட்டு என்னை ஏளனமாகப் பார்த்து
நீ சொன்னியே அவையெல்லாம் அகமும் புறமும் ஒரே மாதிரியானவை
அவற்றின் புறத்தில் நான் விழுந்து அகம் இதுவென உலகிற்கு உணர்த்தினேன்- ஆனால்
மனிதர்களின் முகம் ஒன்று சொல்லும் அகம் பலவாய்ச் சொல்லும் நேரத்திற்கொரு குணம்
என்ற மழையிடம் தோற்று அதை முகத்தில் காட்டாது மெதுவாக யன்னலைச் சாத்தப் போனேன்
„ஓய்“ என்ன சடக்கென்று சாத்துகிறாய் யன்னலை „சுட்டுவிட்டதா சொற்கள்“ என்று சொன்னதோடு
நீ படித்த பள்ளிக்கூட தாரகமந்திரம் அதுதான் „உனை நீ அறி“ அது உனக்குந்தான் என்றது.
„ச்சே... பேசாமலிருந்திருக்கலாம் தேவையில்லாம் மழையை வம்புக்கிழுத்து மாட்டிக் கொண்டேன்
-ஏலையா-
----------------------------------------------------------------------------------------------
விதிவழி வாழ்வு
விதிவழி வாழ்வு என்பது தவறு
மதிவழி விதியே வாழ்வின் உறவு
எழுதும் விதியை எங்கள் கரங்கள்
அழுதும் விதியை ஏற்கும் சிரங்கள்.
டையறி எழுதிட ஆறும் மனம்கள்
இடறி விழுமே வாசித்த சினங்கள்- சிலவேளை
முடிந்த பிரச்சனைகள் முடியாது இருக்க
மறந்த பழிகள் மாளாதிருக்க எழுதுடையறி
எழுதியதாலே ஏறிய அழுத்தம் இறங்கும்- எழுதி
பழகியதாலே பிரச்சனைகள் என்றும் அடங்கும்
வாசித்துப் பார்க்கையில் யாசிக்கும் அமைதி
யோசித்துப் பாருன் மனநின்மதி கருதி
மறதி ஒன்றே அமைதிக்கு மருந்து- இதில்
உறுதி யாயிரு இதுவே அருவிருந்து
மறதியில் தானே ஜனனங்கள் கொள்ளும்- உன்
மறதியின் பின்னரே மரணமும் அள்ளும்.
நோர்வே நக்கீரா 18.10.2014
--------------------------------------------------
நாட்குறிப்பு (டையறி)
விதியின் கரங்களால்
கண்ணீர் மைகொண்டு
எம்சிரங்களில் அரங்கேறும்
வாழ்க்கை டையரி
கண்ணீர் இல்லாதபோது
தண்ணீரிலும் எழுதப்படும்
மறதி என்பது உறுதியானால்
இறுதியில் அமைதி!
உறுதியில் அமைதி!
டையறி இடறிட
அறுதியில் மனது(ல்) விழுவது உறுதி.
மறதிக்கு டையறி
மறவாதிருக்கவும் டையறி
நண்பனை சந்திக்க...நட்புக்கு
பிள்ளைகளுடன் பேச...பாசத்துக்கு
மனையாளை அணைக்க..காதலுக்கு
அம்மாவை அழைக்க....அன்புக்கு
எதிரிக்கு அடிக்க.....வம்புக்கு
உணவு உண்ணக் கூட...
டையறி....டையறி....டையறி
die அறி டையறி
நாளையைக் காட்டும் நாள்குறிப்பு- சில
இறந்தநாட்களில் ஏற்படுத்தும் வெறுப்பு
வெறுப்பு நிறப்பும் சிறப்பா டையறியா??
அடிக்கிறது பின்னால் புறம்போக்கு...!!!
வாழ்க்கையை திருப்பி வாசி
தீராத பிரச்சனைகளை திருப்பி யோசி
திருத்தி யோசி
வாழ்க்கை திருத்தி வாசிக்கப்படுகிறது
வாழ்க்கை
உங்கள் கரங்களால்
நாட்களில் மேலே
காலத்தின் கைகொண்டு
அனுபவ மையெடுத்து எழுதப்படுகிறது
நாட்குறிப்புக்களாக....டையறிகளாக!!!
நோர்வே நக்கீரா 18.10.2014
-------------
எமது கவிக்குயில்களின் பெயர்ப் பதிவு |
கவிஞர்களின் கோட்டை |
திரு.நித்தியானந்தன்-இலங்கை
செல்வன். குலராஜ் -பிரான்ஸ்