
சங்கானை மேற்கில் அமைந்துள்ள பண்ணாகம் -விசவத்தனை என்னும் புண்ணிய பதியில் கோயில் கொண்டு அருள்பாலிக்கும் . பண்ணாக மக்களின் குல தெய்வமாக விளங்குபவர் விசவத்தனை முருகன். கிழக்கே நோக்கிய கோயில் வாசலுடன் பிள்ளையார், வைரவர், முத்துக்குமார், ஆறுமுகசாமி, நவக்கிரகங்கள், சண்டேசுவரர் என்பவற்றை பரிவாரத்தெய்வங்களாக கொண்டு இக் கோயில் விளங்குகின்றது. தினமும் மூன்று வேளை பூசைகள் நடைபெறுகின்றன.
இவ்வாலயத்தின் இராஜகோபுரம் பொதுமக்களின் பெருநிதியுடன் 2010இல் கோயிலின் பிரதான வாயிலில் இராஜகோபுரம் பூர்தியாக்கி கும்பாவிசேகம் நடைபெற்று.
மீண்டும் பெதுமக்களின் பாரிய பங்களிப்புடன் உள்பிரகாரமண்டபங்கள் மிக நவீன வடிமைப்பில் உருவாக்கிய 2017,2018 ஆலய நிர்வாகத்திற்கு எம்மக்களின் நன்றிகள். இன்று 2019 இல் புதுப் பொலிவுடன் ஆலயம் மிளிர்கிறது.