WELCOME TO PANNAGAM.COM & PTV

பண்ணாகம் இணையம்

மருத்துவக் குறிப்புகள் ,  உணவுகள்

இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும், இதுதான் மருந்து, புதிய கண்டுபிடிப்பெல்லாம் கிடையாது, ஒருதடவை சொன்னா சொன்னதுதான் ,

இப்பாடல்
அருந்தமிழ் மருத்துவம் 500 என்ற பாடலில் இருந்து எடுக்கப்பட்டது


சித்த மருத்துவர் பாக்கம் தமிழன்
தமிழ் மருத்துவ அறிவுரைப்பா


மூளைக்கு வல்லாரை
முடிவளர நீலிநெல்லி
ஈளைக்கு முசுமுசுக்கை
எலும்பிற்கு இளம்பிரண்டை

பல்லுக்கு வேலாலன்
பசிக்குசீ ரகமிஞ்சி
கல்லீரலுக்கு கரிசாலை
காமாலைக்கு கீழாநெல்லி

கண்ணுக்கு நந்தியாவட்டை
காதுக்கு சுக்குமருள்
தொண்டைக்கு அக்கரகாரம்
தோலுக்கு அருகுவேம்பு

நரம்பிற்கு அமுக்குரான்
நாசிக்கு நொச்சிதும்பை
உரத்திற்கு முருங்கைப்பூ
ஊதலுக்கு நீர்முள்ளி

முகத்திற்கு சந்தனநெய்
மூட்டுக்கு முடக்கறுத்தான்
அகத்திற்கு மருதம்பட்டை
அம்மைக்கு வேம்புமஞ்சள்

உடலுக்கு எள்ளெண்ணை
உணர்ச்சிக்கு நிலப்பனை
குடலுக்கு ஆமணக்கு
கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே

கருப்பைக்கு அசோகுபட்டை
களைப்பிற்கு சீந்திலுப்பு
குருதிக்கு அத்திப்பழம்
குரலுக்கு தேன்மிளகே!

விந்திற்கு ஓரிதழ்தாமரை
வெள்ளைக்கு கற்றாழை
சிந்தைக்கு தாமரைப்பூ
சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை

கக்குவானுக்கு வசம்புத்தூள்
காய்ச்சலுக்கு நிலவேம்பு
விக்கலுக்கு மயிலிறகு
வாய்ப்புண்ணிற்குமணத்தக்காளி

நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்
நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர்
வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ
வெட்டைக்கு சிறுசெருப்படையே

தீப்புண்ணா குங்கிலியவெண்ணை
சீழ்காதுக்கு நிலவேம்பு
நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்
நஞ்செதிர்க்க அவரிஎட்டி

குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்
குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்
பெரும்பாட்டிற்கு அத்திநாவல்
பெருவயிறுக்கு மூக்கிரட்டை

கக்கலுக்கு எலுமிச்சைஏலம்
கழிச்சலுக்கு தயிர்சுண்டை
அக்கிக்கு வெண்பூசனை
ஆண்மைக்கு பூனைக்காலி

வெண்படைக்கு பூவரசு கார்போகி
விதைநோயா கழற்சிவிதை
புண்படைக்கு புங்கன்சீமையகத்தி
புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு

கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்
கரும்படை வெட்பாலைசிரட்டை
கால்சொறிக்குவெங்காரபனிநீர்
கானாகடிக்கு குப்பைமேனிஉப்பே

உடல்பெருக்க உளுந்துஎள்ளு
உளம்மயக்க கஞ்சாகள்ளு
உடல்இளைக்க தேன்கொள்ளு
உடல் மறக்க இலங்கநெய்யே

அருந்தமிழர் வாழ்வியலில்
அன்றாடம்சிறுபிணிக்கு
அருமருந்தாய் வழங்கியதை
அறிந்தவரை உரைத்தேனே!!

உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் கருணைக்கிழங்கை சாப்பிடலாம். நோய்களில் குறிப்பாக மூலநோயை குணப்படுவதில் சிறந்தது.
சத்துக்கள்

விட்டமின் சி, விட்டமின் பி, மாங்கனீஸ், மினரல்ஸ், ரிபோபிளேவின், பொட்டாசியம், இரும்பு, போன்ற சத்துக்கள் உள்ளன.

மருத்துவ பயன்கள்

மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலி மற்றும் மாதவிடாய் ஏற்படுவதில் பிரச்சனை போன்றவை சீராகும்.

பித்தப்பை பிரச்சனை, எலும்புகள் பலவீனம், கருத்தரித்தலில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்கிறது.

கருணைக்கிழங்கு சாப்பிடுவதால் கபம், வாதம், ரத்த மூலம் ஆகியன குணப்படுகின்றன. மேலும் கருணைக்கிழங்கு பசியைத் தூண்டி இரைப்பைக்கு பலம் சேர்க்கும்.

மூல நோயை குணப்படுத்தும், ஒருமாதம் வரை வேறு உணவு ஒன்றையும் சாப்பிடாமல் கருணைக் கிழங்கை மாத்திரம் வேக வைத்து அப்படியே உணவாக சாப்பிடவும், நாக்கில் ஏற்படும் வறட்சி மாற மோர் மட்டுமே சாப்பிட்டு வர மூலம் பூரணமாகக் குணமாகிவிடும்.

உணவில் பெருமளவில் கருணைக் கிழங்கை புட்டவியலாக வேக வைத்து, எண்ணெய்யும் உப்பும் மட்டும் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டு வருவது நல்லது.

இதன் சுவை வீரியமுள்ளது, அதில் துவர்ப்புச் சுவையுமுள்ளதால் ரத்தக் குழாய்களைச் சுருங்க வைக்கும்.

கருணைக்கிழங்கு ப்ரை

கருணைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்துக் கொள்ளவும். சிறு துண்டுகளாக நறுக்கி அதை உப்பு, கரம் மசாலாவில் புரட்டி எடுத்து, 10 நிமிடம் வைக்கவும்.

பிறகு அந்த கருணைக்கிழங்கு துண்டுகளை நன்றாக காய்ந்த எண்ணெய்யில் போட்டு, பொன்னிறம் வரும் வரை விட்டு பிறகு எடுக்கவும்.

இப்போது சுவையான கருணைக்கிழங்கு ப்ரை ரெடி.

குறிப்பு: மார்பக புற்றுநோய், கருப்பை புற்றுநோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது, ஏனெனில் இந்த நோயின் தாக்கத்தை ஏற்படுத்து ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் வெளிப்பாடு மோசமாக இருக்கும்.


சைவ உணவு சாப்பிடுபவர்களைக் காட்டிலும், அசைவ உணவை அதிகம் எடுத்துக் கொள்பவர்களுக்கே இருதய நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

அசைவ உணவுகள் சாப்பிடுவதன் மூலம் கலோரி, புரதம் போன்ற சத்துகள் கிடைத்தாலும் சில தீய விளைவுகளும் ஏற்படுகின்றன.

அசைவ உணவு எடுத்துக் கொள்பவர்களுக்கு ரத்தத்தில் அதிக அளவில் கொலஸ்ட்ரால் இருப்பதும் இருதய நோய்க்கான ஒரு காரணமாகும்.

மாமிச உணவில் அதிகம் உள்ள இந்த புரதச்சத்து அதிகளவில் ஜீரண நீர் சுரக்கக் காரணமாக இருப்பதால் ஜவ்வுப் பகுதியில் உள்ள க்ளைகோ புரதத்தைப் பாதித்து மியூகஸ் ஜெல் என்ற ஜவ்வு சேதமடைந்து பெப்டிக் அல்சர் குடல்புண் ஏற்பட காரணமாகிறது.

சரும நோய்கள், அலர்ஜி நோய்கள், ஆஸ்துமா போன்ற வியாதிகள் உள்ளவர்களுக்கு மாமிச உணவால் பெருமளவு தொந்தரவு ஏற்படுவதை அறிந்து இயற்கை மருத்துவ நிபுணர்கள் மாமிச உணவைத் தவிர்க்கும்படி பரிந்துரை செய்கின்றனர்.

அசைவ உணவு சாப்பிடுபவர்களைக் காட்டிலும் சைவ உணவு சாப்பிடுவோருக்கு ரத்த அழுத்தம் அதிகரிப்பதில்லை.

அசைவ உணவுகளில் புரதம் இருக்கும் அளவுக்கு நார்சத்து இருப்பதில்லை, இதனால் சிறுநீரக பாதிப்பு, கால்சியம் குறைபாடு, ஜீரண சக்தி குறைபாடு போன்றவை ஏற்படுகின்றன.

உணவில் காய்கறிகளை அதிகம் சேர்க்கும்போது, 4 அல்லது 5 மணி நேரத்துக்குள் செரித்துவிடும். ஆனால், அசைவு உணவு செரிமானம் அடைய சுமார் 3 நாட்கள் அதாவது 72 மணி நேரம் வரை ஆகும்.

எனவே, அசைவ உணவுகளை இரவு வேளையில் சாப்பிடக் கூடாது. செரிமானப் பிரச்னையால் பித்தப்பையில் கல் உருவாகும்.

சில ஆண்கள் மது அருந்திவிட்டு, அசைவ உணவுகளை எடுத்துக் கொள்வார்கள். இதனால், உடலில் கொழுப்பு சேர்ந்து, உயர் ரத்த அழுத்தத்தை உண்டாக்கும்.

மேலும் பக்கவாதம் ஏற்படவும் அதிக வாய்ப்பு உண்டு. குடலிலும் அதிக கொழுப்பு தங்கி, குடலின் இயக்கம் பாதிக்கப்படும். விளைவு, அதிக கோபம், எரிச்சல், நிதானமின்மை என அன்றாட செயல்களில் பாதிப்புகள் ஏற்படலாம்.

அசைவ உணவுகளை நிறுத்தினால் ஏற்படும் மாற்றங்கள் என்ன?

ஆரோக்கிய குறைபாட்டால் மருத்துவர்களை அணுகும் போது அவர்கள் தவிர்க்க அறிவுறுத்தும் முதல் உணவுகளில் இடம்பெறுவது சிக்கன், மட்டன், மாட்டிறைச்சி தான்.

அவ்வாறு இறைச்சியை சாப்பிடுவதை நீங்கள் நிறுத்துவதன் மூலம் உங்கள் உடலில் புதுவித மாற்றங்களை காணலாம்.

இறைச்சி சாப்பிடுவதை நிறுத்தும்போது முதலில் ஏற்படும் மாற்றம் உங்கள் எடை குறைவது தான். குறைந்தது 3 அல்லது 4 கிலோ வரை எடை குறைய வாய்ப்புள்ளது.

சைவம் மற்றும் அசைவ உணவுகளை சாப்பிடுபவர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், சைவம் சாப்பிடுபவர்களுக்கு 24% இதய நோய்களின் பாதிப்புகள் குறைவாக உள்ளது என தெரியவந்துள்ளது.

தசைகளின் வலிமைக்கு புரதச்சத்து மிகவும் அவசியம், எனவே இறைச்சி சாப்பிடுவதை நிறுத்தும் போது புரதச்சத்து குறைய வாய்ப்புள்ளது, ஆகவே புரதச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

இறைச்சி சாப்பிட்டால் உடல் சூடு அதிகமாக இருக்கும், எனவே நீங்கள் இந்த உணவை தவிர்ப்பதன் மூலம் உங்கள் உடல் சூடு குறையும்.

செரிமானப் பிரச்சனைகள் சரியாகும், இறைச்சியை கைவிட்டால் அதற்கேற்றவாறு சத்துள்ள காய்கறிகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

பீட்ரூட்டும். அதனை பெரும்பாலான மக்களுக்கு பிடிக்காது

அதன் நிறமோ, அல்லது அதன் ருசியோ எதுவென்று தெரியாது, ஆனால் பீட்ரூட்டை பார்த்தாலே ஓடி விடுவார்கள். ஆனால் பீட்ரூட் உடலுக்கு செய்யும் நன்மைகளை தெரிந்தால், அதனை நிச்சயம் ஒதுக்க மாட்டீர்கள்.

பீட்ரூட்டில் தேவையான விட்டமின் மினரல் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளன. ஆனால் அது உடல் மற்றும் மனம் சம்பந்தமான பாதிப்புகளுக்கு எவ்வாறு தீர்வளிக்கிறது என பார்க்கலாமா?

மன அழுத்தத்தை குறைக்கும் :

இந்த காலகட்டங்களில் மன அழுத்தம் என்பது சாதரணமாகிவிட்டது. பொருளாதாரம் அந்தஸ்து என எல்லாவற்றிற்கும் போட்டி போட்டுக் கொண்டு வெற்றியை நோக்கி எல்லாரும் தள்ளப்படுகிறார்கள். இதன் விளைவு மன அழுத்தம்.

மன அழுத்தத்தை பீட்ரூட் குறைக்கின்றது. ஆனால் நீங்கள் மருத்துவரை அணுகி அவர் தரும் தரும் மருந்துகளை உட்கொள்ளும்போது, அதனால் பக்க விளைவுகள் ஏற்படும். உடல் பருமன், இன்னும் பல பிரச்சனைகளை தரும்.

அதை விட எளிமையான வழி, பீட்ரூட் சாப்பிடுவதுதானே. அதிலுள்ள பீடெயின் என்ற பொருள் மூளையில் உள்ள நரம்புகளை தளர்த்து, புத்துணர்வு தருகிறது. எனவே பீட்ரூட் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால், எல்லாமே டே இட் ஈஸி பாலிஸிதான். பீட்ரூட் இன்னொரு வயாகரா :

அந்த காலகட்டத்தில் ரோம நகரங்களில் பாலுணர்வை தூண்ட பீட்ரூட் தான் உணவில் எடுத்துக் கொள்வார்களாம். இது வயாகராவை விட பலனை தருகிறது. பக்க விளைவுகள் இல்லை. இதனை இயற்கை வயாகரா என மருத்துவர்கள் அழைக்கிறார்கள். பீட்ரூட்டிலுள்ள போரோன் என்ற மினரல் ஆண், பெண்களின் செக்ஸ் ஹார்மோன்களை தூண்டுகிறது.

அனிமியாவை போக்குகிறது :

ரத்த சோகைக்கும் அற்புத பலனை பீட்ரூட் தருகிறது. இவை உடலில் ரத்த செல்களை உற்பத்தி செய்யத் தூண்டுகின்றன. பீட்ரூட் இரும்பு சத்தை அதிகம் கொண்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் இரும்புசத்தினை உடலில் உறிஞ்சு கொள்ளவும் உதவி புரிகிறது.

தூக்கமின்மை :

பீட்ரூட்டில் பீடெய்ன் மற்றும் ட்ரிப்டோஃபேன் ஆகியவை நரம்புகளை தளர்த்தி, தூக்கம் வரச் செய்கிறது. தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் இதனை தொடர்ந்து சாப்பிட்டால் தூக்கம் உங்கள் கண்களை தழுவும்.

ஃபோலேட் என்ற பொருளும் பீட்ரூட்டில் உள்ளது. அது நல்ல மன நிலையை உண்டாக்குகிறதாம். மன அழுத்தம் இருப்பவர்கள் கட்டாயம் பீட்ரூட் எடுத்துக் கொண்டால் பலன் கிடைக்கும்.

ரத்தக் கொதிப்பு மற்றும் இதய கோளாறு :

ரத்தக் கொதிப்பினை பீட்ரூட் குறைக்கிறது. இதய அடைப்பு, கோளாறுகளை வர விடாமல் தடுப்பதில் பீட்ரூட் முக்கிய பங்கு வகிக்கின்றது.இனிமேலாவது பீட்ரூட்டை வெறுக்காதீர்கள். அது நல்லதை தவிர வேறொன்றும் நமக்கு செய்வதில்லை.

சதாவேரி, நீலிசெடி, அம்மைக்கொடி என பல பெயர்களில் அழைக்கப்படும் தண்ணீர் முட்டான் கிழங்கு பல மருத்துவ குணங்களை உள்ளடக்கிய ஒரு மெல்லிய ஆனால் கெட்டியான தண்டுடைய பல பருவச்செடி
பலவிதமான சிறுநீரக கோளாறுகள், மஞ்சள் காமாலை மற்றும் தொடை நரம்பு வலி போக்கவும், சிறுநீர்ப் போக்கினைச் சீர்படுத்தவும் உதவுகிறது. இது சிறுநீர் போக்கினை தூண்டி மூட்டுக்களில் சேரும் கழிவுப் பொருட்களை சிறுநீர் மூலம் வெளியேற்றி கீழ் வாதத்தினைத் தீர்க்கும்.

இதற்கு இதிலுள்ள செயல் திறன் மிக்க வேதிபொருட்கள் ஆன ஸ்டிராய்டல், ஃபிளேவனாய்டுகள், குளுக்கோசைட்டுகளான அஸ்பரகோசைடுகள், கசப்பு குளுக்கோசைடுகள் போன்றவையே காரணம். சிறுநீரக நோய்களை குணப்படுத்துவது மட்டுமல்லாமல் நரம்பு மண்டல நோய்களையும், மலட்டு தன்மையையும் குணப்படுத்தும் ஆற்றல் வாய்ந்தது.

மூட்டுவலி, கழுத்து சுளுக்கு, நரம்பு மண்டல நோய்களை நீக்க உதவும் தைலங்களில் இது அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. பால்வினை நோயான கோனேரியாவுக்கு மருந்தாக பாலுடன் கலந்து தரப்படும் இத்தாவரம் பெண்களின் மலட்டுத்தன்மையை நீக்குவதில் முக்கிய பங்காற்றி பெண்குறி கோளாறுகளைப் போக்கிடவும் உதவுகிறது.


நாக்கில் அரித்தாலும் குடலை சுத்தப்படுத்துவதற்கு கருணைக்கிழங்கு உதவுகிறது.

உடல் எடையை குறைக்க விரும்புவர்கள் கருணைக்கிழங்கை சாப்பிடலாம்.

நோய்களில் குறிப்பாக மூலநோயை குணப்படுவதில் சிறந்தது.

சத்துக்கள்

விட்டமின் சி, விட்டமின் பி, மாங்கனீஸ், மினரல்ஸ், ரிபோபிளேவின், பொட்டாசியம், இரும்பு, போன்ற சத்துக்கள் உள்ளன.

மருத்துவ பயன்கள்

மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலி மற்றும் மாதவிடாய் ஏற்படுவதில் பிரச்சனை போன்றவை சீராகும்.

எலும்புகள் பலவீனம். கருத்தரித்தலில் ஏற்படும் பிரச்சனை. ஆற்றலை அதிகரித்தல்.

கருணைக்கிழங்கு சாப்பிடுவதால் கபம், வாதம், ரத்த மூலம், முளை மூலம் ஆகியன குணப்படுகின்றன. மேலும் கருணைக்கிழங்கு பசியைத் தூண்டி இரைப்பைக்கு பலம் சேர்க்கும்.

மூல நோயை குணப்படுத்தும், ஆசன வாயிலில் ஏற்பட்டுள்ள முளைகளைச் சிறிது சிறிதாகக் கரைத்து மூலத்தை வேரோடு களைந்து குணப்படுத்தும்.

ஒருமாதம் வரை வேறு உணவு ஒன்றையும் சாப்பிடாமல் கருணைக் கிழங்கை மாத்திரம் வேக வைத்து அப்படியே உணவாக சாப்பிடவும், நாக்கில் ஏற்படும் வறட்சி மாற மோர் மட்டுமே சாப்பிட்டு வர மூலம் பூரணமாகக் குணமாகிவிடும்.

உணவில் பெருமளவில் கருணைக் கிழங்கை புட்டவியலாக வேக வைத்து, எண்ணெய்யும் உப்பும் மட்டும் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டு வருவது நல்லது.

இன்சுலின் எனும் ஹார்மோன் நம் உடலில் சீராகச் சுரக்காதது அல்லது குறைவாகச் சுரப்பது அல்லது சுரந்த இன்சுலின் சரியாக வேலை செய்யாதது நீரிழிவு நோய் வருவதற்கு அடிப்படைக் காரணம்.

உடல் பருமன் (Obesity). இனிப்புப் பண்டங்களையும் கொழுப்பு உணவு வகைகளையும் அதிகமாகச் சாப்பிடுபவர்களுக்கு உடல் பருமன் ஆவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு. உடல் எடை அதிகரிக்க அதிகரிக்க இன்சுலினின் தேவையும் அதிகரிக்கும்.

அதற்கேற்பக் கணையம் அதிகமாக இன்சுலினைச் சுரந்து சுரந்து சீக்கிரத்தில் களைத்துப் போகிறது.

இதனால், இவர்களுக்கு நீரிழிவு நோய் சீக்கிரத்தில் வந்துவிடுகிறது. உடல் பருமன் உள்ளவர்களில் 100-ல் 80 பேருக்கு இந்த முறையில் தான் நீரிழிவு நோய் வருகிறது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுகளை சாப்பிடும்போது நீரிழிவு நோயிலிருந்து காத்துக்கொள்ளலாம்.

1. சீனிக்குப் பதிலாக நாட்டுவெல்லம் அல்லது பனங்கற்கண்டு அல்லது கருப்பட்டி பயன்படுத்தலாம்.

2. அரிசி சோற்றைக் குறைத்து காய்கறி, பழங்களை அதிகளவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

3. இரவில் ஊறவைத்த வெந்தயத்தை காலையில் வெறும் வயிற்றில் தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட வேண்டும்.

4. பாகற்காயை வாரம் மூன்று நாட்கள் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

5. நாவல்பழம் கிடைக்கும் காலத்தில் தவறாது சாப்பிடுதல். நான்கைந்து விதைகளையும் மென்று சாப்பிட வேண்டும்.

6. முள்ளங்கி தவிர மற்ற கிழங்கு வகைகளை கண்டிப்பாக தவிர்த்து விட வேண்டும்.

7. வெள்ளரிப் பிஞ்சு, கோவைக்காய் உணவில் அதிகளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

8. கண்டிப்பாக நாள்தோறும் வியர்க்கும் அளவிற்கு ஒரு மணிநேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடற்பயிற்சி செய்ய முடியாதவர்கள் நடைப்பயிற்சியை கண்டிப்பாக செய்ய வேண்டும்.

9. கொழுப்பு உணவுகளைத் அறவே தவிர்க்க வேண்டும்.

10. பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகளை முற்றிலுமாக தவிர்த்து விட வேண்டும்.

இரத்த சர்க்கரையின் அளவு சீராக 
உங்களுக்கு இனிப்பான பொருளை உட்கொள்ள ஆசை இருந்தால், பேரிச்சம் பழம் வாங்கி சாப்பிடுங்கள். ஏனெனில் பேரிச்சம் பழத்தில் இருப்பது ஆரோக்கியமான சர்க்கரை. ஆகவே இதனை உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.
எடையை அதிகரிக்கும்
உடல் எடையை அதிகரிக்க நினைப்போர், பேரிச்சம் பழத்தை உட்கொள்வது நல்லது. அதிலும் இதனை அதிக அளவில் சாப்பிட வேண்டும். மேலும் இதில் சோடியம், கொலஸ்ட்ரால் இல்லாததால், இதனை உட்கொள்வதன் மூலம் ஆரோக்கியமான வழியில் உடல் எடையை அதிகரிக்கலாம்.
செரிமானத்தை சீராக்கும்
பேரிச்சம் பழத்தில் நார்ச்சத்து அதிக அளவில் இருப்பதால், இதனை அன்றாடம் உட்கொண்டு வந்தால் செரிமான மண்டலம் சீராக இயங்கும்.

இதய ஆரோக்கியம்
செரிமானம் சீராக நடைபெறுவதால், உடலில் கெட்ட கொழுப்புக்களின் சேர்க்கை குறைந்து, இதன் மூலம் இதயத்திற்கு எவ்வித அழுத்தமும் ஏற்படாமல், இதயத்தின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.
இரத்த சோகை
இரும்புச்சத்து குறைபாட்டினால் ஏற்படுவது தான் இரத்த சோகை. இந்த இரும்புச்சத்து பேரிச்சம் பழத்தில் அதிகமாகவே உள்ளது. மேலும் இரும்புச்சத்தானது சிவப்பணுக்கள் ஆக்ஸிஜனை மற்ற பாகங்களுக்கு எடுத்துச் செல்ல உதவி புரியும்.
பொட்டாசியம் நிறைந்தது
இரும்புச்சத்து குறைபாட்டினால் ஏற்படுவது தான் இரத்த சோகை. இந்த இரும்புச்சத்து பேரிச்சம் பழத்தில் அதிகமாகவே உள்ளது. மேலும் இரும்புச்சத்தானது சிவப்பணுக்கள் ஆக்ஸிஜனை மற்ற பாகங்களுக்கு எடுத்துச் செல்ல உதவி புரியும்.
நரம்புகளின் இயக்கம்
பேரிச்சம் பழத்தின் வேறு சில சத்துக்களான கால்சியம், மக்னீசியம் மற்றும் வைட்டமின் பி6 போன்றவை நிறைந்துள்ளது. இதில் உள்ள கால்சியம் மற்றும் மக்னீசியம் எலும்புகளின் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது. வைட்டமின் பி6 புரோட்டீன்களை உடைத்து, நரம்புகளிளை சீராப இயங்க உதவும்.