WELCOME TO PANNAGAM.COM & PTV

பண்ணாகம் இணையம்

News-1

யாழிலிருந்து கொழும்பு சென்ற ஹயஸ் எரிபொருள் பவுஸருடன் சிலாபம் ஆரச்சிகட்டுவவில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியது. இச்சம்பவம் இன்று அதிகாலை 2.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதில் ஹயஸ் வாகனத்தில் பயணம் செய்த 4 பேர் படுகாயம் அடைந்ததுடன் நயினாதீவு 5ம் வட்டாரத்தைச் சேர்ந்த லண்டனில் இருந்து வருகை தந்த அருன்மாறன் கலா என்ற பெண் பலியாகியுள்ளார்.

காயமடைந்தவர்கள் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ் அரசியல் தலைவர்களைவிட, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கே தமிழ் மக்கள் மீது அதிக அக்கறை என முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வார இதழ் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்குத் தமிழ் மக்கள் தொடர்பில் எவ்வித அக்கறையும் கிடையாது. இவர்கள் சுயநல சிந்தனை கொண்டவர்கள்.

இதனைத் தமிழ் மக்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். தமிழ்த் தலைவர்களைவிட தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழ் மக்கள் மீது அதிக அக்கறை கொண்டிருந்தனர்.

ஐ.நா. தீர்மானத்தின் பரிந்துரைகளை காலவரையறைக்குள் இலங்கை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். இதை அரசு செய்யாமல் இருந்தால் அதன் விளைவுகள் வேறு விதமாக அதாவது மிகவும் பாரதூரமாக இருக்கும்.”

– இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்.

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் வகையில் 40/1 என்ற புதிய தீர்மானம் இலங்கை அரசின் இணை அனுசரணையுடன் வாக்கெடுப்பின்றி கடந்த வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.

இது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“மூன்றாவது தடவையாக இலங்கை அரசின் இணை அனுசரணையுடன் இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பொறுப்புக்கூறல், நீதி நியாயம், காணாமல்போனோர் விடயம், மீள் நிகழாமை, நல்லிணக்கம் மற்றும் அதிகாரம் சம்பந்தமாக – எல்லாக் கருமங்களும் முதல் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளமைக்கு அமைவாக நிறைவேற்றப்பட வேண்டும் என்ற அடிப்படையில் மூன்றாவது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தப் புதிய தீர்மானத்தையும் நாம் வரவேற்கின்றோம். இதனை முன்னின்று நிறைவேற்றிய பிரிட்டன் தலைமையிலான உலக நாடுகளுக்கும் நாம் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இந்தத் தீர்மானத்தை இலங்கை அரசு நிறைவேற்ற வேண்டும். அதில் உள்ள பரிந்துரைகளை காலவரையறைக்குள் நடைமுறைப்படுத்த வேண்டும்.

இதை அரசு செய்யாமல் இருந்தால் அதன் விளைவுகள் வேறு விதமாக அதாவது மிகவும் பாரதூரமாக இருக்கும்.

ஐ.நாவின் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத் தேவை இலங்கை அரசுக்கு இருக்கின்றது” – என்றார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்சவை நிறுத்துவதற்குக் பொது எதிரணி தீர்மானித்துள்ளது என அறியமுடிகின்றது.

இதனையடுத்து ‘மொட்டு – கை’ கூட்டு முயற்சிகள் முற்றாகக் கைநழுவின என்றும் தெரியவந்தது.

ராஜபக்ச குடும்பத்தினரின் ஏகோபித்த ஆதரவுடன் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைக்கு பொது எதிரணியின் சிரேஷ்ட பிரமுகர்கள் பலர் தமது ஆதரவை வெளியிட்டுள்ளனர்.

முன்னதாக தனது அமெரிக்கப் பிரஜாவுரிமையை நீக்கக்கோரும் விண்ணப்பத்தைக் கடந்த வாரம் கோட்டாபய ராஜபக்ச, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்துக்கு உத்தியோகபூர்வமாக அனுப்பி வைத்திருந்தார்.

அதன் அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்வதற்காக அடுத்த வாரம் அவர் அமெரிக்காவுக்கும் பயணமாகின்றார்.

இந்நிலையிலேயே, பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபயவை மஹிந்த களமிறக்குவதற்கு உறுதியாக முடிவெடுத்திருக்கின்றார் என தகவல்கள் கசிந்துள்ளன.

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணியின் சார்பில் யார் வேட்பாளராகப் போட்டியிடுவது என்ற சர்ச்சை நீடித்து வந்த நிலையில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தத் தீர்மானத்தை அடுத்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் கூட்டு இணைந்து செயற்படுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அனைத்தும் முற்றுப் பெற்றுவிட்டன என அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

சிறுபான்மையினரின்- குறிப்பாக தமிழர்களின் ஆதரவு இன்றி, சிங்களப் பெரும்பான்மையினரின் ஆதரவுடன் தம்மால் அதிபர் தேர்தலில் வெற்றிபெற முடியும் என்று, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

“அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு, சிறுபான்மையினரின் ஆதரவைப் பெற வேண்டும் என்பது அவசியமில்லை.

2010இல் மகிந்த ராஜபக்ச, தமிழர்களின் ஆதரவு இல்லாமல், 1.8 மில்லியன் வாக்குகளால் வெற்றி பெற்றார்.

2015இல் அவர் தோல்வியடைந்தமைக்கு, தமிழ், முஸ்லிம்களின் ஆதரவு கிடைக்காதமை அல்ல.

கொழும்பு, கம்பகா போன்ற மாவட்டங்களில் உள்ள நகரப்பகுதிகளில் உள்ள நடுத்தர மக்கள் அவருக்கு வாக்களிக்கவில்லை. 449,000 வாக்குகளால் மாத்திரமே அவர் தோல்வியடைந்தார்.

அந்த சாதகமற்ற சூழ்நிலையில் கூட மகிந்த ராஜபக்சவுக்கு, வடக்கில் 1 இலட்சத்துக்கும் அதிகமான தமிழர்களின் வாக்குகள் கிடைத்தன.

போரின் போது, யாழ்ப்பாணக் குடாநாடு இராணுவ முகாம்களால் நிரம்பியிருந்தது. போர் முடிந்ததும், கீரிமலை, வசாவிளான், தொண்டைமானாறு போன்ற பகுதிகளில் உள்ள நிலங்களை விடுவித்தோம். பலாலி உயர்பாதுகாப்பு வலயத்தை மாத்திரம் வைத்திருந்தோம்.

இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட தனியார் காணிகளில் 90 வீதமானவற்றை நான் விடுவித்தேன். பாதுகாப்புக் காரணங்களுக்காக, பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தை மாத்திரம் வைத்திருந்தோம்.

எமக்குத் தேவைப்பட்ட தனியார் காணிகளை கொள்வனவு செய்தோம். கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு 3 இலட்சம் மக்கள் மீளக் குடியேற்றப்பட்டனர்.

தற்போதுள்ள கிளிநொச்சி நவீன மருத்துவமனை முன்னர் இராணுவ முகாமாக இருந்தது.

இவையெல்லாம், 2010இற்கும் 2014இற்கும் இடைப்பட்ட குறுகிய காலத்துக்குள் நடந்தன.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.