WELCOME TO PANNAGAM.COM & PTV

பண்ணாகம் இணையம்

NEWS 7

கடந்த 12.04.2019 வெள்ளிக்கிழமை பிரான்சு நாடாளுமன்றத்தில் “10 ஆண்டுகள் முடிந்த நிலையில் சிறிலங்காவில் தமிழர்களின் நிலைமை” என்னும் தலைப்பில் பிரான்சு நாடாளுமன்றத்தில் உருவாக்கப்பட்ட ஈழத்தமிழர் நலன்காப்பு குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டு மதியம் 14.30 மணிக்கு ஆரம்பமானது.
13.30 மணிக்கு மாநாட்டில் பங்குபற்றுகின்றவர் உள்நுழைய அனுமதிக்கப்பட்டனர். 14.30 க்கு இக்குழுவின் தலைவியும், முந்நாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய Mmme. Marie – Georg Buffet அவர்கள் ஆரம்பித்து வைத்து மக்கள் பேரவையின் பொறுப்பாளரும் அனைத்துலக மக்கள் பேரவைப்பேச்சாளருமாகிய திரு.திருச்சோதி அவர்கள் அகவணக்கத்தை தொடக்கி வைக்க, தொடர்ந்து இளையோர் அமைப்பின் செயற்பாட்டாளர் செல்வன் நிந்துலன் இன்றைய மாநாட்டை வழிநடத்தினார். திரையில் சிறிலங்காவில் நடைபெற்ற இனஅழிப்பின் 10ஆண்டுகளின் பின்னரான நிலைப்பாடும், புலம்பெயர் நாடுகளின் தமிழர்களின் சனநாயக அரசியல் ரீதியான போராட்டங்கள், தமிழரின் பூர்வீக சரித்திரம் பற்றியதொரு ஆவணம் ஒளிபரப்பப்பட்டது. தொடர்ந்து டாக்டர்.செல்வி. சாருகா தேவகுமார் அவர்களின் நீதிக்கான மாற்றுஆய்வுக்கட்டுரை இடம் பெற்றது. தொடர்ந்து தாயகத்தில் இருந்து வருகைதந்திருந்த திரு. விஐயகுமார் நவநீதன் அவர்கள் தமிழும் அவர்களின் பூர்வீக நிலமும் என்ற தலைப்பில் அனைத்து நிழற்படத்தரவுகளுடன் தெளிவு படுத்தியிருந்தார். தொடர்ந்து நாடுகடந்த அரசின் சார்பாக உறுப்பினர் திருமகிந்தன் சுப்பிரமணியம் அவர்கள் பிரெஞ்சு மொழியில் ஆற்றியிருந்தார். அவரைத் தொடர்ந்து மூத்த தமிழின உணர்வாளர் ஐயா இக்பால் மொகமட் அவர்கள் தனது ஆய்வுக்கருத்தை ஆற்றியிருந்தார். முஸ்லீம் மக்களாக நாம் மதத்தால் தான் வேறுபட்டவர்கள் என்றும் மொழியால் நாம் தமிழ்மக்கள் என்பதையும், கடந்த 71 வருடங்களுக்கு மேலாக பெரும்பான்மையான சிங்களவர்களால் தமிழர், தமிழ்மொழி பேசுகின்றவர்கள் என்பதால் இனப்படுகொலைக்கு உள்ளாகின்றோம் என்றார். அவரைத் தொடர்ந்து சுரேசு தர்மலிங்கம் கிழக்கு மாகாணத்திலிருந்து வருகை தந்ததுடன் கிழக்கு மக்களின் போருக்கு பின்னான அவலங்களை தெரிவித்திருந்தார். அவரைத் தொடர்ந்து சுவிசு நாட்டின் பிரசையும் தமிழர் தாயகப்பகுதிக்குச் சென்று பலநாட்கள் தங்கி தமிழர்களின் நியாயமான சனநாயக வழியிலான போராட்டங்களையும், அபகரிக்கப்பட்ட தமிழர் நிலங்கள் பற்றிய ஆவணத்தை நிழற்படங்களோடு காட்சிப்படுத்தி உரையும் ஆற்றியிருந்தார். அவரைத் தொடர்ந்து ஸ்ராஸ்பேக் ஐரோப்பிய தமிழர் ஒன்றியத்தின் உறுப்பினர் திருமதி கிருபாகரன் அவர்கள் உரையாற்றியிருந்தார். அவரைத் தொடர்ந்து தமிழர் மனிதவுரிமைகள் அமைப்பின் பொறுப்பாளர் திரு.ச.வே.கிருபாகரன் அவர்கள் பிரெஞ்சு மொழியில் உரையாற்றியிருந்தார். இளையவர்களின் எதிர்கால நிலைப்பாடு சம்பந்தமாக செல்வன் பிரசன்னா சுந்தரசர்மா அவர்கள் உரையாற்றியிருந்தார். தொடர்ந்து நோர்வே நாட்டிலிருந்து வருகைதந்த சர்வதேச மக்கள் பேரவை ஆலோசனை உறுப்பினர் திரு. ஸ்ரீபன் அவர்கள் அன்றைய நிகழ்வின் தொகுப்பை மேற்கோள்காட்டி உரையாற்றினார். தொடர்ந்து மக்களிடம் கேள்விகளுக்கு விடப்பட்டது. அதற்கான பதில்களை தாயகத்திலிருந்து வந்தவர்களும் புலம்பெயர் வேலைத்திட்டங்களில் ஈடுபடுவோர் வழங்கியிருந்தனர். இறுதியாக சபையின் தலைவர் Mmme. Marie – Georg Buffet அவர்கள் பதிலளித்திருந்தார். போருக்குப் பின்னான 10 வருடகாலத்தில் சிங்கள தேசம் தமிழ்மக்களின் வாழ்வில், கல்வியில், பொருளாதாரத்தில் இதயசுத்தியுடன் எந்த ஆக்கபூர்வமான செயற்பாட்டைச் செய்யவில்லை என்பதை காண்பதோடு தன்னுடைய செயற்பாட்டை தொடர்ந்து தமிழ்மக்களுக்காக ஆற்றுவேன் என்ற கருத்துக்கள் பலவற்றை வழங்கினார். இதன் பின்னர் இறுதிநேரத்தில் வந்து கலந்து கொண்ட 95 மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் திரு. பொப்பின் அவர்களும் உரையை தமிழ்மக்களுக்குச் சார்பாகவும் ஆற்றியிருந்தார். இந்த மாநாட்டில் பல கட்டமைப்புக்களைச் சேர்ந்தவர்கள், ஐ.நா. பணிமனைச் செயற்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், இளையோர்கள், சங்கங்களை சேர்ந்தவர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். மாலை 7.00 மணிக்கு மாநாடு நிறைவுக்கு வந்தது

நான்காவது சர்வதேச தமிழ் இதழியல் மாநாடு யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் நாளை வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. மக்கள் இதழியல் அமைப்பின் ஏற்பாட்டில் இரு நாட்களாக அமர்வு நடைபெறவுள்ளது.

சென்னைப் பல்கலைக்கழக ஊடகத்துறை மற்றும் தொடர்பாடல் பிரிவு தலைவர் பேராசிரியர் கோபாலன் ரவீந்திரன் தலைமையில் நடைபெறும் ஆரம்ப நிகழ்வில், வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமை விருந்தினராகக் கலந்துகொள்ளவுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.விக்னேஸ்வரன் மதிப்புறு விருந்தினராகக் கலந்துகொள்ளவுள்ளார்.

நாளை காலை 8.30 மணிக்கு பதிவுகளுடன் நிகழ்வு ஆரம்பமாகும். காலை 9.10 மணிக்கு தமிழ்நாடு பாரம்பரிய நடனத்துடன் மங்கள விளக்கேற்றல் நடைபெறும்.

‘உதயன்’ பத்திரிகையின் ஆசிரியர் தே.பிரேமானந்த் வரவேற்புரை நிகழ்த்தவுள்ளார். காலை 9.40 மணிக்கு, மக்கள் இதழியல் இயக்கத்தின் தலைவர் தே.தேவானந்த் தொடக்கவுரை நிகழ்த்தவுள்ளார்.

அதனைத் தொடர்ந்து ஆசியுரைகளை, சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் ஆறு திருமுருகன், ‘பாதுகாவலன்’ பத்திரிகையின் ஆசிரியர் அருட்தந்தை ஏன்சிலி றொசான், ‘தினகரன்’ பத்திரிகையின் ஆசிரியர் கே.குணராசா, யாழ். எவ்.எம். கட்டுப்பாட்டாளர் முருகேசு ரவீந்திரன் ஆகியோர் வழங்கவுள்ளனர்.

தலைமையுரை காலை 10.15 மணிக்கு நடைபெறும். அதனை சென்னைப் பல்கலைக்கழக ஊடகத்துறை மற்றும் தொடர்பாடல் பிரிவுத் தலைவர் பேராசிரியர் கோபாலன் ரவீந்திரன் நிகழ்த்துவார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.விக்னேஸ்வரன் மதிப்புறு விருந்தினர் உரையை நிகழ்த்துவார்.

அதனைத் தொடர்ந்து வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் உரையாற்றுவார்.

முதன்மைப் பேச்சாளர் உரையை புதுடில்லியைச் சேர்ந்த பேராசிரியர் விஸ்வஜித்தாஸ் நிகழ்த்துவார்.

மக்கள் இதழியல் இயக்கத்தைச் சேர்ந்த கிருத்திகா தர்மராஜ் நன்றியுரையாற்றுவார். ஆரம்ப அமர்வு காலை 11.15 மணிக்கு நிறைவுக்கு வரும்.

இரண்டாவது அமர்வு காலை 11.30 மணிக்கு ஆரம்பமாகும். தமிழ் ஊடகத்துறையின் வரலாறு தொடர்பில் கலாநிதி கலாவாதி அமர்வு நடத்துவார். மதியம் 12.30 மணிக்கு தமிழ் வானொலி மற்றும் தொலைக்காட்சி தொடர்பில் கலாநிதி சக்திவேல் அமர்வு நடத்துவார்.

ஊடகக் கல்வி தொடர்பில் தே.தேவானந்த் பி.ப. 2.15 மணிக்கு மூன்றாவது அமர்வை நடத்துவார். மக்கள் இதழியல் தொடர்பான குழுக் கலந்துரையாடலை பேராசிரியர் ஜி.ரவீந்திரன் நடத்துவார்.

மாலை 4.30 மணிக்கு முற்றம் கலைக்குழு தமிழ்நாட்டு பாரம்பரிய நடனத்தையும், செயற்திறன் அரங்க இயக்கம் எங்கதம் நாடக ஆற்றுகையை நிகழ்த்துவார்கள். மாலை 6 மணிக்கு முதல் நாள் அமர்வு நிறைவுக்கு வரும்.


யா/ பண்ணாகம் மெய்கண்டான் மகா வித்தியாலயத்தில் க.பொ.த சாதாரணப் பரீட்சையில் ஒன்பது பாடங்களிலும் A சித்திகளைப் பெற்ற மாணவன்
அருளழகன் வெற்றிதரன் அவர்களுக்கு பண்ணாகம் இணையத்தின் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்தகவல். குகதாஸ்

கிழக்கு சீனாவில் அமைந்துள்ள ஒரு ரசாயன ஆலையில் ஏற்பட்ட பெரும் வெடிவிபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், இந்த சம்பவத்தில் 90க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமையன்று, யான்செங்கில் உள்ள ஒரு தொழிற்சாலையில் உள்ளூர் நேரம் பகல் 2.50க்கு இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

உரப்பொருட்கள் தயாரிக்கும் இந்த தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிப்பை தொடர்ந்து அந்த இடத்தில் தீ பற்றி எரிந்தது.

ரசாயன ஆலையில் ஏற்பட்ட இந்த பெரும் வெடிவிபத்தால் அந்த நேரத்தில் அப்பகுதியில் 2.2 அளவுக்கு சமமான ஒரு நில அதிர்வு இருந்ததாக சீனாவின் பூகம்பம் கண்காணிப்பு தொடர்பான நிர்வாக குழு தெரிவித்துள்ளது.

இந்த வெடிப்பு தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள படங்கள் தொழிற்சாலை அமைந்துள்ள இடத்தில் இருந்து ஒரு தீப்பிழம்பு எழுவதையும், அருகாமையில் உள்ள கட்டடங்கள் சேதமடைந்துள்ளதையும் காண்பிக்கின்றன.

இதனிடையே இந்த பகுதியில் கடுமையாக பற்றி எரிந்த தீ வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

சீனாவில் பாதுகாப்பு நெறிமுறைகள் சரிவர கடைபிடிக்கப்படாததால், தொழிற்சாலைகள் மற்றும் சுரங்கங்களில் அடிக்கடி விபத்து ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது.

சமீபத்திய ஆண்டுகளில் அதிகபட்சமாக, கடந்த 2015ஆம் ஆண்டு சீனாவின் டியான்ஜின் துறைமுகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், கிட்டத்தட்ட ஆயிரம் பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


விக்ரோறியா கல்லூரியில் பாராட்டு விழா நடைபெற்றது.மாணவி துஷியந்திக்கு எமது வாழ்த்துக்கள்


வலிகாமம் வலயத்தில் முதல் தடவையாக பெண் சாரணியத்தில் ஜனாதிபதி விருது பெற்ற எங்கள் சுழிபுரம் விக்ரோறியா கல்லூரி மாணவி செல்வி துஷியந்தி அவர்கட்கு இன்று விக்ரோறியா கல்லூரியில் பாராட்டு விழா நடைபெற்றது.மாணவி துஷியந்திக்கு எமது வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு அதிபர் தேர்தலுக்கு முன்னதாக, நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் வாய்ப்புகள் உள்ளதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இன்று காலை ஊடகங்களின் ஆசிரியர்களைச் சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

பலவீனமான நாடாளுமன்றம் ஒன்றில் உறுதியான முடிவுகளை எடுப்பது கடினமானது, என்றும், அவர் கூறியுள்ளார்.

இந்த ஆண்டு நொவம்பர்- டிசெம்பர் மாதங்களுக்கிடையில் அதிபர் தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ள நிலையில், அதற்கு முன்னதாக நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தலை நடத்தும் அதிகாரம் சிறிலங்கா அதிபரிடம் இல்லை.

இந்த நிலையில்,  சிறிலங்கா அதிபரின் இந்தக் கருத்தினால், தற்போதைய அரசாங்கத்தைக் கவிழ்த்து, மீண்டும் ஒரு அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சிகள் இடம்பெறுகின்றனவா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

யாழ்ப்பாணம் கீரிமலைக் கடற்கரைப்பகுதியில் ஆணொருவரின் சடலம் இன்று காலை கரையொதுங்கியுள்ளது.

சுமார் 50 வயது மதிக்கத்தக்க சடலமே கரையொதுங்கியது. சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

காங்கேசந்துறைப் பொலிஸாருக்குக் கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து அந்தப் பகுதிக்குப் பொலிஸார் விரைந்துள்ளனர்.

சடலத்துக்கு அருகில் மதுபானப் போத்தல் மற்றும் சில பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி – தர்மபுரம் பகுதியில் விடுதலைப் புலிகளின் பாடல்களை பதிவேற்றம் செய்தமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்களை நேற்று நீதிமன்றில் முன்னிலை படுத்திய போதே எதிர்வரும் 11ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, கடந்த 14ஆம் திகதி கிளிநொச்சி தர்மபுரம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பாடல்களை ஒளிப்பதிவு செய்த மற்றும் பாடலை ஒலிக்க விட்டமை போன்ற குற்றச்சாட்டுக்களில் இரண்டு பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் மேற்படி இரண்டு பேரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று குறித்த இரண்டு பேரையும் மீளவும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மீளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கைது செய்யப்பட்ட இருவருக்கும் எதிராக பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


ஒரு ஆண்டில் இளம் தமிழ் அரசியல்வாதி சபா.குகதாஸ்  மக்கள்சேவையில் சாதனை!! 
சபா.குகதாஸ் அவர்கள் வடமாகாண சபை உறுப்பினரான பதவியேற்று ஒரு வருடம் நிறைவு. 26.01.2018 வரை அவரின் சாதனைப்பட்டியல் ஒரு கண்ணோட்டம்.

ஒரே ஒரு வருடத்தில் சபா.குகதாஸ் அவர்களால் இப்படி பல சேவை செய்யலாம் என்றால் பல ஆண்டுகளாக ஆரசியல்வாதிகளாக இருப்பவர்களால் ஏன் செய்யமுடியவில்லை? என மக்கள் கேள்வி எழுப்பி உள்ளார்கள். மற்றைய அரசியல்வாதிகளுக்கு கிடைக்கும் மக்கள் உதவிப் பணம் எங்கு செல்கிறது?? இது பற்றி மக்கள் அங்கலாய்க்கிறார்கள்  தேர்தல் வேளைகளில் மட்டும் மேடைபோட்டு மக்களைப்பற்றி பேசுவதுடன் மக்கள் கஸ்டங்கள் தீருமா???


சபா.குகதாஸ் அவர்களின் ஒரு வருட சேவைப் பட்டியல்


இந்த ஒருவருடத்தில் அவர் அல்லும் பகலும் மக்களோடு மக்களாக நின்று,அவர்களின் தேவைகளை அறிந்து அவர்களுக்கு ஆற்றிய பணிகள் எண்ணிலடங்காதவை. அவற்றை நாம் ஒரு கணம் நினைந்து கொள்கிறோம்.

* 1650 மாணவர்களுக்கு ( ஒன்பது கட்டமாக இதுவரை ) கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

* 275 பயனாளிகளுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன.

* 80 பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டன.

* 26 விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

* 12 ஆலயங்களுக்கு திருப்பணி நிதி உதவிகள்.

* 15 சனசமூக நிலையங்களுக்கு உதவிகள்.

* 6 கலை,கலாசார மன்றங்களுக்கு நிதி உதவிகள்.

* 10 சிறுதொழில் முயற்சியாளர்களுக்கு உதவிகள்.

* பரீட்சையில் சித்தி பெற்ற 345 மாணவர்களுக்கு பரிசுத்தொகைகள் வழங்கப்பட்டன.

* முதல் தடவையாக தார் இடப்பட்ட 3 வீதிகள்
இன்னும் பல உதவிகள் தொடர்கின்றன..

"மக்கள் தேவையே தனது சேவையாக"கொண்டு இன்று வரை தனது பணியினை தொடர்கிறார். இனியும் தொடர்வார்....அவரின் இந்த மகத்தான சேவை இந்த மண்ணில் நின்று நிலைக்க வேண்டும் என்றும், இனியும் தொடர வேண்டும் என்றும் இறைவனை வேண்டி நெஞ்சார வாழ்த்துகின்றோம்.


(சேவைப் பட்டியல் தொகுப்பு .பாபுஜி நன்றி)

கனடாவில் கடுமையான பனிப்பொழிவுடன், பனிப்புயலும் வீசிவருகின்ற நிலையில் அங்கு வெப்ப நிலை -21°C  ஆக பதிவாகியுள்ளது.

அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் கனடாவில் கடந்த சில நாட்களாகவே கடும் குளிருடனான காலநிலை நிலவி வருகின்றது.

இந்தநிலையில் இன்று(திங்கட்கிழமை) கனடாவில்  வெப்ப நிலை -21°C ஆக பதிவாகியுள்ளது என கனேடிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடும் பனிப்பொழிவு காரணமாக வீதிகளில் பனிக்கட்டிகள் குவிந்துள்ளது. இதனால் அங்கு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், கனடாவின் சில பகுதிகளில் 26 km/h வேகத்தில் கடும்  பனிப்புயல் வீசும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சில முக்கிய விமான நிலையங்களில் விமான சேவைகள்  ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


நெஞ்சில் நிறைந்த நினைவுகளுடன் 


உங்களிடம்  1 நிமிடம்.........


உங்கள் பண்ணாகம் இணையம் 11வது ஆண்டில் 1.3.2017 இல் காலடி வைக்கும் இவ்வேளையில் நாம் கடந்துவந்த பாதையில் சந்தித்த நல் உள்ளங்கள் அனைவருக்கும்  எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

பண்ணாகம் இணையம் முற்றுமுழுதாக ஒரு சேவையாகவே நடாத்தப்படுகிறது இச்சேவையில் எம்மோடு பலர் 2006ம் ஆண்டு முதல் தம்மாலான சேவைகளை செய்துவருகிறார்கள் .   பண்ணாகம் இணையத்தில் இதுவரை எழுதிய எழுதிவரும் இணைய ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஆய்வாளர்கள், கதாசிரியர்கள், ராசிபலன்சோதிடர் (இந்தியா) ,செய்தியாளர்கள், ஒப்புநோக்காளர்கள், தொடர்கதை ஆசிரியர்கள் ,ஆலோசகர்கள்  மற்றும் பண்ணாகம் இணையம் 11வருடங்களாக சோர்வின்றி திறம்பட இயங்குவதற்கு இலவச சேவைகள் வழங்கியவர்கள் வழங்கிக் கொண்டிருக்கும் மூலகாரணியான இயக்குனர்கள் தொழில்நுட்பவியலாளர்கள் இணைய வரைகலையாளர்கள் தகவல் தொடர்பாளர்கள் என்போரையும்  சிறப்பாக கௌரவிக்கப்பட உள்ளார்கள். இவர்களை பண்ணாகம் இணையம் மறவாது பதிவிட்டு வருகிறது. 

அதேபோன்று முகநுாலில்  வாழ்த்துகின்றவர்கள் பதிவும் இடம்பெறும். பண்ணாகம் இணையம்  தனது  இலவச திருமண சேவை மூலம்  இதுவரை 16 திருமணங்களை திறம்பட நிறைவு செய்து பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. 

நன்றி

அன்புடன் உங்கள்

பண்ணாகம் திரு.இக.கிருட்ணமூர்த்தி

பிரதம ஆசிரியர்  பண்ணாகம் இணையம்


11 வது நிறைவு வாழ்த்துக்களை இதை அழுத்தி பார்வையிடலாம்


HAPPY  BIRTHDAY  TO PANNGAM