6வது ஆண்டு விழாவும் 2023 சித்திரைத் திருநாளும்.
6வது ஆண்டு விழாவும் 2023 சித்திரைத் திருநாளும். யேர்மன் தமிழ் கலாச்சார மன்றம் (அரசாங்கத்தில் பதிவுசெய்யப்பட்டது) German Tamil Kulturverein e.V. (G.T.K.) ''மனிதத்தை நேசிப்போம்'' ''We Love Humanity'' 6th Jubilee Events காலம்:- 29.04.2023 நேரம்:- மாலை 15.30 மணி சனிக்கிழமை இடம்:- Engagementzentrums Hüsten Am Hüttengraben 29 59759 Arnsberg, Germany (Nehim. Hüsten புகையிரத நிலையத்திற்கு அண்மையில்) நிகழ்ச்சிகள். மங்கல விளக்கேற்றல் அகவணக்கம் ,தமிழ்தாய் வாழ்த்து யேர்மன் தமிழ் கலாச்சார மன்றக் கீதம் ஆசியுரை வரவேற்புரை தலைவர் உரை போசகர் உரை பிரதம விருந்தினர் உரை சிறப்பு விருந்தினர் உரை வரவேற்பு நடனம் சிறப்புக் கலைஞர்கள் விருது வழங்கிக் கெளரவிப்பு தவில்,நாதஸ்வரம்,வயிலின் சோலோக் கச்சேரி இசைக் கச்சேரி நடனங்கள் மன்ற மாணவர்கள் கீபோட் சிறப்பு இசை விருந்து வில்லுப்பாட்டு நன்றியுரை சிறப்புப் பட்டிமன்றம். குடும்ப உயர்வுக்கு கூடுதலாகப் பாடுபடுவது. கணவனா? .................. மனைவியா? அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். யேர்மன் தமிழ் கலாச்சார மன்றம் தொடர்புகளுக்கு contact - whatsApp,Tp 01737079149, 015221706612, 01789156928, 01705270217,015165071359 |
6வது ஆண்டு விழாவும் 2023 சித்திரைத் திருநாளும். யேர்மன் தமிழ் கலாச்சார மன்றம் (அரசாங்கத்தில் பதிவுசெய்யப்பட்டது) German Tamil Kulturverein e.V. (G.T.K.) 6th Jubilee Events ''மனிதத்தை நேசிப்போம்'' ''We Love Humanity'' காலம்:- 29.04.2023 நேரம்:- மாலை 16.00 மணி இடம்:- Engagementzentrums Hüsten Am Hüttengraben 29 59759 Arnsberg, Germany உங்கள் பிள்ளைகளின் நிகழ்ச்சிகளையும் நாம் மேடையேற்றக் காத்திருக்கின்றோம். 06.04.2023 முன் நிகழ்ச்சி பதிவுக்குத் தொடர்பு கொள்ளுங்கள். G.T.K.verein. யே.த.க.மன்ற நிர்வாகம். contact - whatsApp,Tp 01737079149, 015221706612, 01789156928, 01705270217,015165071359 |
Click to edit table header |
உலகளாவிய பண்ணாகம்.கொம் இணைய உறவுகளின் சங்கமம்!! பண்ணாகம்.கொம் 17 வது ஆண்டு விழா காலம்> 20.5.2023 சனிக்கிழமை நேரம்~ மாலை 15.30 மணி (ஐரோப்பிய நேரம்) உரிய நேரத்தில் விழா ஆரம்பமாகும். (இலங்கை நேரம் 19.00 மணி) இடம் ~ பண்ணாகம்.கொம் குவியம் ZOOM Meeting-ID: 938 4539 4592 (கடவுச்சொல் இல்லை) குவியம் வழிமூலம் கலக்கும் உறவுகளின் அலையை காணத் தயாராகுங்கள். நிகழ்வுகள் ஆரம்ப நிகழ்வுகள் , ஆசியுரைகள், பிரதம,சிறப்பு விருந்தினர்கள் உரைகள் ,வாழ்த்துரைகள். கலைநிகழ்வுகள் வரவேற்பு நடனம் ,கிராமியக்கலைகள், நடனங்கள், சிறுவர்கள் இசைநிகழ்வுகள், பேச்சுக்கள் ,நகைச்சுவை , பட்டிமன்றம் இன்னும்பல..... சிறப்பு நிகழ்வு. ~~~~~~~~ பண்ணாகம்.கொம் நடாத்திய உலகளாவிய தமிழ்ப் பாடல் எழுதும் போட்டி முடிவுகள் வெளியீடு! பிரதம நடுவர்கள் முடிவுகளை வெளியிட்டுக் கருத்துரை வழங்குவார்கள். 1ம், 2ம், 3ம் இடம் பெற்ற வெற்றியாளர்களைக் கெளரவித்து சான்றிதழ்கள் வழங்கல். போட்டியில் கலந்த 35 அதிசிறந்த கவிஞர்களுக்கு சிறப்புச் சான்றிதழ்கள். இது உங்கள் விழா அனைவரையும் கலந்து சிறப்பிக்க அன்புடன் அழைக்கின்றோம். பண்ணாகம்.கொம் இணைய விழாக்குழு தொடர்புகளுக்கு. யேர்மனி.~ பண்ணாகம்.கொம் 0049 1737079149, கிருஷ்ணன். 0049 15733696870, சாந்தி. 0049 15214456196 ,சர்வாஜினி .004917695880738 இலங்கை.~ பாஸ்கரகுரு 0094786071023 , பாபுஜி .0094774002202 இலண்டன்.~ சிவம் 00447956594577, மனோ 00447904113079 , தமிழரசி. 00447388008063 நோர்வே.~ வணன் 0047793659374 ,வி.சுதன் .0047796622746 கனடா .~ கிரி .0016479784012 , சர்வேஸ்.001 4168232611, அமெரிக்கா.~ கலையரசி.~ 0015165068406 சுவீஸ்.~ தயாளன். 0041763421420 ,தனம். 0041628961002, கனி. 0041787152990 பிரான்ஸ் . கோகுலராஜ. 0033624157452, குலராஜ். 0033751523417, கி.சுதன். 0033634302987. கொலண்ட். ஜெயபாலன் .0031614585180 ,டென்மார்க். முகுந்தன் 004541711440 மலேசியா. பஞ்சரத்தினம் 0060143660860, சிங்கப்பூர். தங்கமலர் 006594512095 இது ஒரு முன் அறிவிப்பு ஓலை! கலை நிகழ்வுகளில் பங்குபற்ற இருப்பவர்கள் 5.5.2023 முன் தயவுசெய்து தொடர்பு (0049 1737079149 WhatsApp) கொள்ளவும். நன்றி |
Click to edit table header |
யேர்மன் தமிழ் கலாச்சார மன்றம். யேர்மனி (GKT e.V. அரசாங்கத்தில் பதிவுசெய்யப்பட்டது) German Tamil Kulturverein e.V. (G.T.K.) 2023 தைப் பொங்கல் நிகழ்வு எமது பாரம்பரிய கலாச்சாரத்தின் தைப்பொங்கல் (15.01.2023) தினத்திற்கான கொண்டாட்டமாகும். எமது மன்ற அனைத்துஅங்கத்தவர்கள்,நண்பர்கள்,ஆதரவாளர்கள்,மாணவர்கள்,பெற்றோர்கள், ஆசிரியர்கள் இணைந்து நடாத்தும் பொங்கல் ஒன்றிணைவு. காலம். 28.01.2023 சனிக்கிழமை நேரம். மாலை 15.30 மணி இடம். மன்றக்கட்டிடம் Engagementzentrums Hüsten Am Hüttengraben 29 59759 Arnsberg, Germany மன்ற நலன்விரும்பிகள் ஆதரவாளர்கள் அனைவரும் நிகழ்வில் கலந்து பொங்கல் உண்டு, கலந்துரையாடி மகிழ்ச்சியடைய வரவேற்கின்றோம் நிர்வாகம். யேர்மன் தமிழ் கலாச்சார மன்றம் GTK Germany தொடர்புகளுக்கு. G.T.K.verein. யே.த.க.மன்ற நிர்வாகம். contact - whatsApp,Tp 01737079149, 015221706612, 01789156928, 01705270217, 015165071359 |
Click to edit table header |
யேர்மன் தமிழ் கலாச்சார மன்றம். யேர்மனி (GKT e.V. அரசாங்கத்தில் பதிவுசெய்யப்பட்டது) 2022 ஒன்றுகூடல் தீபாவளி மற்றும் நத்தார் தினங்களுக்கான கொண்டாட்டமாகும். எமது மன்ற அனைத்துஅங்கத்தவர்கள்,நண்பர்கள்,ஆதரவாளர்கள்,மாணவர்கள்,பெற்றோர்கள், ஆசிரியர்கள் இணைந்து நடாத்தும். 2022 ஆண்டு சந்திப்பு நிகழ்வு காலம். 12.11.2022 சனிக்கிழமை நேரம். மாலை 15.00 மணி இடம். மன்றக்கட்டிடம் Engagementzentrums Hüsten Am Hüttengraben 29 59759 Arnsberg நிகழ்வுகள் 1.அமைதிவணக்கம் 2.இறைவணக்கம் 3.மன்றக்கீதம் இசைத்தல் 4.வரவேற்புரை 5.தலைவர் உரை 6.மன்ற போசகர் உரை 7.மன்ற மாணவர்கள் நிகழ்வுகள் 8.பாடல்,ஆடல் நிகழ்வு சிற்றுண்டி உணவு இடைவேளை 9,சபையர் கருத்துகள்,ஆலோசனைகள் 10. மன்றத்தின் 5வது ஆண்டு நிறைவு விழா 2023 மற்றும் சித்திரைத்திருநாள் விழா பற்றிய அறிவிப்பு 11.நன்றியுரை மன்ற நலன்விரும்பிகள் ஆதரவாளர்கள் அனைவரும் நிகழ்வில் கலந்து சிற்றுண்டிகள் உண்டு, உரையாடி மகிழ்ச்சியடைய வரவேற்கின்றோம் நிர்வாகம். யேர்மன் தமிழ் கலாச்சார மன்றம் GTK Germany தொடர்புகளுக்கு. 01737079149 |
உலகளாவிய தமிழ்ப் பாடல் எழுதும் மாபெரும் போட்டி பண்ணாகம்.கொம் இணையத்தின் 17வது ஆண்டு சிறப்பு நிகழ்வு 2023 www.pannagam.com , Germany உலகளாவிய கவிஞர்கள்,பாடலாசிரியர்களுக்கு ஒரு அரிய சந்தப்பம் இப் பாடல் எழுதும் போட்டியில் யாவரும் கலந்து கொள்ளலாம். இதற்கு எதுவித கட்டணமும் இல்லை. உங்கள் திறமைகளை உலக்கறியச்செய்வதே பண்ணாகம்.கொம் இணையத்தின் நோக்கமாகும். 2021இல் இதேபோன்று 15வது ஆண்டுவிழா நிகழ்வாக உலகளாவிய சிறுகதை எழுதும்போட்டியை வெற்றிகரமாக நடாத்தியதை யாவரும் அறிவீர்கள். 2023 நிகழ்வாக பாடல் எழுதும் போட்டியில் கலந்து உங்கள் திறமையை முன்நிறுத்துங்கள். முடிவு திகதி 30.09.2022. பாடல் எழுதும் போட்டி நிபந்தனைகள். 1. இப் போட்டிக்கு வயதெல்லை கிடையாது. உலக தமிழ் எழுத்தாளர்கள் யாவரும் கலந்து கொள்ளலாம். 2. பாடல் வரிகள் குறைந்தது 14 வரிகளும், கூடியது 24 வரிகளும் அமையும்படி எழுதவேண்டும். 3. இப் போட்டிக்காக எழுதிய பாடல் சொந்தப்படைப்பு என உறுதிக்கடிதம் இணைக்கப்படவேண்டும். 4. நாட்டார்பாடல்,பக்திப்பாடல், காதல் பாடல்,சமூகப்பாடல்களாக அமையலாம். 5. அரசியல், அமைப்புகள்,சாதியம், தனிநபர்சாடல்கள் இல்லாமல் சமூகமேம்பாட்டிற்கு ஏற்றவையாக இருக்கவேண்டும். 6. சிறந்த பாடல்கள் சிறந்த இசைஅமைப்பாளர்களால் இசைப் பேளைகளாக உருவாக்கப்படும். 7. அதி சிறந்த பாடல்களுக்கு சான்றிதழ்கள்,பரிசுகள் வழங்கப்படும். 8. நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது. நடுவர்கள் பல நாடுகளில் இருந்து நடுநிலை செய்வார்கள். 9. நிபந்தனைகளுக்கு அமையாத பாடல்களை நிராகரிக்க பண்ணாகம்.கொம் இணையத்திற்கு உரிமை உண்டு 10. பாடல்களை 30.09.2022க்கு முன்னர் PDF வடிவில் கிடைக்கக்கூடியவாறு மின்னஞ்சலில் அனுப்பவும். EMail- pannagam@live.com , ekk.moorthy@gmx.de மேலதீக விபரங்களுக்கு தொடர்புகொள்ளுங்கள் www.pannagam.com. Germany 0049 1737079149 T.P ,WhatsApp EMail- pannagam@live.com , ekk.moorthy@gmx.de அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். பண்ணாகம்.கொம் நிர்வாகம். |
Click to edit table header |
அன்பான யேர்மன் தமிழ் கலாச்சார மன்றம் அங்கத்தவர்களே!! ஆதரவாளர்களே!! உலகத்தில் 2022 ம் ஆண்டும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மக்கள் படும் அல்ல காரணமாக எமது ஒன்றிய அங்கத்தவர்கள், ஆதரவாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மன்ற கட்டிடத்தில் ஒன்று கூடல் நிகழ்வுகளை நாம் நடாத்தவில்லை. அதே போன்று இவ்வருட புதுவருட நிகழ்வு, பொங்கல் நிகழ்வுகளையும் கொரோனா பாதுகாப்பை முன்னிட்டு எமது நிர்வாகம் நடாத்தவிரும்பவில்லை . உங்கள் ஆரோக்கியமே எங்கள் விருப்பம் அதனால் புவருட நிகழ்வை 8.1.2022 சனிக்கிழமை சூம் மூலம் நடாத்த உள்ளோம் அதனால் அனைவரும் ZOOM நிகழ்வுகளில் நீங்கள் பாதுகாப்பாக கலந்து கொள்ளலாம். புதுவருட நிகழ்வும் கீபோட் ஆசிரியர் கெளரவிப்பும் காலம்.- 08.1.2022 சனிக்கிழமை நேரம். 19.00 மணி தொடக்கம் 20.00 மணிவரை இடம்.- Zoom Meeting-ID: 938 4539 4592 அனைவரும் தவறாது கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம். யேர்மன் தமிழ் கலாச்சார மன்றம் தலைவர், நிர்வாகத்தினர் |
Click to edit table header |
2022ம் ஆண்டு பண்ணாகம்.கொம் இணையத்தின் 16 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு பல்துறைகளில் தனித்திறமை பெற்ற சாதனை மாணவர்கள்அறிமுகமும் 2022விருதும் உலகம் எங்கும் உள்ள தமிழ் மாணவர்கள் 4வயது முதல் 20 வயதுவரை உள்ளவர்களில் பலர் தமக்கென ஏதோ ஒரு துறையில் தனித்திறமையைக் கொண்டிருப்பார்கள் தங்கள் திறமையை உலகறியச் செய்ய பலருக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை அந்த சந்தர்ப்பத்தை பண்ணாகம் இணையம் வழங்க முன்வந்துள்ளது எனவே யாவரும் இதில் இணைந்து கொள்ளலாம் முற்றிலும் இலவசம். மேலதீக விபரங்களுக்கு தொடர்புகொள்ளுங்கள் www.pannagam.com. Germany 0049 1737079149 T.P ,WhatsApp EMail- pannagam@live.com , ekk.moorthy@gmx.de அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். ஊடக அனுசரணை> பண்ணாகம்.கொம் ரீவி ,தமிழருவி வானொலி , எஸ்.ரி.எஸ் தொலைக்காட்சி , தமிழ்ரைம்ஸ் , தமிழன் எம் ரீவி ,யேர்மன் தமிழ் கலாச்சார மன்றம். |
வெற்றிகரமாக நடந்து முடிந்த குவியவழி பணணாகம் இணையத்தளத்தின் 15வது ஆண்டு விழா (எனது பார்வை)
ஏலையா க.முருகதாசன்
இலங்கையின் வட மாகாணத்தில் இருக்கின்ற பண்ணாகம் என்ற கிராமத்தைச் சேர்ந்த திரு.இ.க.கிருஸ்ணமூர்த்தி அவர்களை பிரதம ஆசிரியராகக் கொண்டு ஜேர்மனியில் இயங்கி வருகின்ற பண்ணகம் இணையத்தளம் கடந்த பதினைந்து ஆண்டுகளாக,அதன் உள்ளீடாக கதைகள்,கவிதைகள், நெடுந்தொடர்கள் என பல படைப்பாளிகளால் எழுதப்பட்டுவரும் ஆக்கங்களை பிரசுரித்து அவர்களின் எழுத்தாளுமையை வளர்த்து வருவதுடன்,தாயகம்,தமிழகம்,உலகம் என அன்றன்று நடைபெறும் செய்திகள் போன்றவற்றை உடனுக்குடன் தனது இணையத்தளத்தில் பிரசுரித்து தமிழினப் பணியாற்றி வருகின்றது.
இவ்விணையத்தத்திற்கும் தாயகம் தமிழகம் எனவும் உலகெல்லாம் பரந்து வாழும் புலம்பெயர் தமிழர்களென கணிசமான தொகையினர் வாசகர்களாக இருந்து வருகின்றனர்.
தொடரும் பணியினை அசை போடுதலும்,சிலாகித்து மகிழ்தலும் கடந்து வந்த பாதையில் விதைத்த இலக்கிய சமூக அறிவு விதைகள் சமூகத்திற்குள் ஆழமாக வேர்விட்டு வளர்ந்து நிற்கும் மகத்துவ நிலையை கண்டறிந்து மகிழ்வதற்காகவும், இணையத்தளத்தின் வாசகர்கள் ஆக்கதாரர்களுடனும் பண்ணாகம் என்ற ஊரவர்களோடும், உலகெங்கும் வாழுகின்ற பண்ணாக உறவுகளோடும் இணைந்து பண்ணாகம் இணையத்தளத்தின் 15வது ஆண்டு விழாவினை கடந்த 29.05.21அன்று சிறப்பாக நடத்தி முடித்திருக்கின்றனர்.
இவ்விழாவினை முன்னிட்டு சிறுகதைப் போட்டியினையும் நடத்தி, அதில் வெற்றிபெற்றவர்களையும் அறிவித்து உள்ளனர். உலகெங்கும் இருந்து 200க்கு மேற்பட்டவர்கள் இப்போட்டியில் கலந்து கொணடமை குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும்.
இப்போட்டிக்கான நடுவர்களாக உலகெங்குமிருந்து தெரிவு செய்யப்பட்டமை இப்போட்டியின் சார்பற்ற நடுநிலையை உறுதிப்படுத்தியிருக்கின்றது.
உலகெங்கும் வாழுகின்ற பண்ணாக உறவுகளின் இளந்தலைமுறையினர் குவிய இணைய வழியாக கலை நிகழ்ச்சிகளை அரங்கேற்றி கண்டுமகிழும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்திருந்தனர்.
ஒரு இணையத்தளத்தை நடத்துவது என்பதோ, அது தொடர்பான விழாவொன்றை குவியம் வழியாக நடத்துவதென்பதோ சாதாரண விடயம் அல்ல.அதனை நடத்திச் சாதித்துக் காட்டியுள்ளனர் திரு.திருமதி.கிருஸ்ணமூர்த்தி சர்வாஜினிதேவி தம்பதிகள்.அவர்களிருவருக்கும் எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.அதே வேளை இவ்விழாவினை சிரித்த முகத்துடன் பங்குகொள்வோரை அன்புடனும் நட்புடனும் அழைத்து தொகுப்பாளருக்குரிய ஆளுமையை இனங்காட்டிய திருமதி.சாந்தினி அவர்களையும் வாழ்த்திப் பாராட்டுகிறேன்.
இவ்விழாவினை குவியம் வழியாக நடத்தும் போது ஓருங்கிணைக்கும் மையப்புள்ளியாக இருக்கும் ஒருங்கிணைப்பாளரின் இடமும்,குவியம் வழியாக அதில் பங்கு கொள்வோரின் இடமும் அன்று ஒரு விழாவிற்கான இடமாக அமைந்திருந்தது.
எனவே பண்ணாகம் இணையத்தள உறவுகள் எங்கெங்கு இருந்தார்களோ அங்கங்கு அவர்களின் வீடுகளும் விழா மண்டபமாக மாறியிருந்தது.ஒரு விழா பல இடங்களில் நடந்தது என்றே கூறலாம்.
இவ்விழாவில் பிரதம விருந்தினர்களாகவும் வாழ்த்துரை வழங்வோர்களாகவும் கருத்துரை வழங்குவோர்களாகவும் கலந்து கொண்டோர் பிரதம ஆசிரியரின் சிந்தனையையும் கடுமையான உழைப்பையும் சிலாகித்து மகிழ்ந்து பாராட்டியிருந்தனர்.
வெகு விமரிசையாக கொண்டாடும் விழாக்களில் தவிர்க்க முடியாததும் தவிர்க்கக்கூடியதுமான சில தவறுகள் விழாவை நடத்துவோருக்கு இக்கட்டான சங்கடங்களை ஏற்படுத்திவிடுவதுண்டு.
அது போல இந்த விழா கிட்டத்தட்ட ஆறு மணித்தியாலங்கள் வரை நடைபெற்று. நிகழ்வுகளைகுறைத்து பார்வையாளர்களை உற்சாகம்பெற செய்திருக்கலாம். ஒரு சிலர் திரும்பத் திரும்ப இடையிட்டு பேசியது விழா ஏற்பாட்டாளர்களின் இக்கட்டான நிலையைக் கவனத்தில் எடுத்துக் கொள்ளாத அலட்சியமாக இருந்ததோ என எனக்குத் தோன்றியது மட்டுமல்ல அதுவே எனது பார்வையுமாகும். நன்றி ஏலையா முருகதாசன்.
நிகழ்ச்சிகள் தொடர் பகுதி 2 உலகளாவிய பண்ணாகம் இணைய உறவுகளின் சங்கமம்!! பண்ணாகம்.கொம் 15 வது ஆண்டு விழா கலை நிகழ்வுகள் 29.5.2021 சனிக்கிழமை மாலை 15.30 மணி (ஐரோப்பிய நேரம்) இலங்கை.19.00, இலண்டன் 14.30, கனடா 9.30, அவுஸ்திரேலியா 23.30, சிங்கப்பூர் 21.30 இடம் . ZOOM Meeting-ID: 938 4539 4592 கலை நிகழ்ச்சிகள் இந்தியா மங்கல இசை விருதுநகர் காரிகைப்பட்டி டாக்டர் ரவிச்சந்திரன் (நாதஸ்வரக்கலைஞர்) நடனம் ... செல்வி. கபிநயா குமரன் இலண்டன் கவிதை ...1) திரு.பொன். சிவநேசன் 2) திருமதி. சாம்பவி ஜெயதாசன் பாட்டு ... 1) செல்வி தாமரை சிவநேசன் 2) செல்வி.சாம்பவி ஜெயதாசன் வாழ்த்துப்பாடல் ... திருமதி. தமிழலரசி ஜெயதாசன் பேச்சு. .... செல்வி . மயூரிகா மனோகரசிவம் நடனம் ... செல்வி .மயூரிகா மனோகரசிவம் நிகழ்ச்சித் தொகுப்பு சிவப்பிரகாசம் மனோகரசிவம் கனடா 1)நடனம் ... செல்விகள் . மேனகா ,அபிஸா, பவிதா நடேஸ்வரன். 2) அஸ்மிகா சுதாகர் 2)வயலின்.... செல்வி.சக்திகா சிறிசொரூபன் 3)பாடல் .... செல்வன்கள். லதுஷன், அனோஷ் சுதர்சன். 2) அஸ்வின், ஆகாஸ் சுதாகர் 4)பேச்சு.... செல்வன். அனோஷ் சுதர்சன் நிகழ்ச்சித் தொகுப்பு செல்வி. சக்திகா சிறிசொரூபன் இலங்கை 1)கர்நாடகஇசைப்பாடல்... தேஜஸ்வராலயா கலைக்கூட மாணவர்கள் . இயக்குனர் கலைஞானசுடர் ஸ்ரீமதி சுபாஷினி 2) நடனம் ..... செல்விகள் .சங்கீதா, அபிநயா சதானந்தன். 3) கவிதை ... செல்வி மிதுஷா தயாளலிங்கம். 4( பாடல் .....திருமதி.சிவகுமார் சிவசக்தி 5) நடனம் .... செல்வி. அபிநயா சதானந்தன் நிகழ்ச்சித் தொகுப்பு ஸ்ரீமதி சுபாஷினி டென்மார்க் நடனம்... கணேஷா நாட்டிய சேத்ர மாணவர்கள் செல்வன். ஜெகநாதன் சஞ்சீவன் (ஸ்ரீ கைலேஸ்வரன் நாட்டியாலயா) செல்வி. லாவண்யா இன்பபாலன், செல்வி. அஸ்விதா சுரேஷ் , செல்வி. தேஜஸ்வினி பிரணவன் நிகழ்ச்சித் தொகுப்பு. திருமதி.சசிதேவி ரீசா சுவீஸ் பாடல் ... இசைப்பிரியா உருத்திரன் தமிழ்ப்பிரியா உருத்திரன் நிகழ்ச்சித் தொகுப்பு .. திருமதி. மதிமலர் சசிதரன் யேர்மனி 1) இசையமுதம் சங்கீத ஆசிரியை திருமதி.விஜயகலா கிருபாகரன். 2) சுரத்தட்டு ... செல்வன் . நகுல் துரையரங்கன் 3) யேர்மன் தமிழ் கலாச்சார மன்ற மாணவர்கள். ஆசிரியர். சி.சந்தோஸ் வழங்கும். சுரத்தட்டு பாடல்கள்..... 1). விக்காஷ் சண்முகலிங்கம் 2). ஆதீஸ் ஜெயவரதன் 3). அபிஷ் பாஸ்கரவேல் 4) றகாஷ் ரவி நிகழ்ச்சித்தொகுப்பு . செல்வி சப்றீனா கிருஷ்ணமூர்த்தி அனைவரையும் கலந்துகொள்ளும்படி அன்புடன் அழைக்கின்றோம் பண்ணாகம்.கொம் நிர்வாகத்தினர். யேர்மனி 2021 |
பண்ணாகம் இணையத்தின் 15வது ஆண்டுவிழாவிற்கான உலகளாவிய சிறுகதைப் போட்டியில் நடுவர்கள். போட்டியின் நடுவர்களாக 3 மாதங்கள் தொடர்ச்சியாக கதைகளை சிறந்தமுறையில் ஆய்வுசெய்து தரம் கண்ட தரமான நடுவர்கள் அனைவருக்கும் பண்ணாகம் இணையத்தின் நன்றிகள். 29.5.2021 அன்று முடிவுகள் குவியத்தில் zoom அறிவிக்கப்படும். |
திரு.காசி நாகலிங்கம், யேர்மனி
வண்ணத்துப்பூச்சி சஞ்சிகை ஆசிரியர், 12 நூல்களின் எழுத்தாளர், தமிழ் ஆசிரியர்
திருமதி .தேனம்மை. இந்தியா
திருமதி.தமிழரசி ஜெயதாசன் இலண்டன்
எழுத்தாளர்,கவிஞர், ஆசிரியர்,
சங்கீத ஆசிரியர்,
திருமதி.தமிழரசி இலண்டன்
Dr. M.R.ஸ்ரீ ரோகினி துபாய் எழுத்தாளர்,உலகத் தமிழ் ஆராச்சியாளர்,அமீரக தலைமை துபாய்
முனைவர் ஸ்ரீ ரோகிணி துபாய்
திருமதி. ராணி சீதரன் இலங்கை
எழுத்தாளர் ,கவிஞர், விரிவுரையாளர்
திருமதி. சசிகலா நயினை விஜயன் யேர்மனி
எழுத்தாளர், ஆசிரியர், TRG அறிவிப்பாளர்.
திருமதி. சசிகலா விஜயன் யேர்மனி
உலகளாவிய சிறுகதைப் போட்டி ஒருங்கிணைப்பு , வடிவமைப்பு பண்ணாகம்.கொம் நிர்வாகம்.
ஊடகவித்தகர் திரு.இக.கிருஷ்ணமூர்த்தி யேர்மனி
பண்ணாகம்.கொம் இணையத்தின் பிரதம ஆசிரியர், எழுத்தாளர், ஆசிரியர், ஊடகவியலாளர்
திருமதி.க.சர்வாஜினி யேர்மனி
ஆசிரியர் , பண்ணாகம்.கொம் உதவி நிர்வாகி,
ஒப்புநோக்காளர்.
சிறுகதைப் போட்டியில் பங்குபற்றிய இலங்கை, இந்தியா யேர்மனி, சுவீஸ், கொலண்ட், பிரான்ஸ், அவுஸ்திரேலியா, ஹங்கேரி, ஐக்கியராட்சியம், மலேசியா, சிங்கப்பூர், டென்மார்க் ஆகிய நாடுகளிலிருந்து பங்குபற்றிய எழுத்தாளர்கள் அனைவருக்கும் பண்ணாகம்.கொம் இணைய நிர்வாகத்தினரின் மனமார்ந்த நன்றிகள்.
பங்குபற்றிய எழுத்தாளர்களில் ஒருவருக்கு 1ம் இடம் 15.000 இ.ரூபா, இருவருக்கு 2ம் இடம் 10,000 இ.ரூபா, மூவருக்கு 3ம் இடம் 5000 இ.ரூபா வழங்கப்படும் மற்றும் 225 எழுத்தாளர்களுக்கு சிறந்த கதைக்கான சான்றிதழ்வழங்கப்படும்.