தமிழ் உயர்வுக்காகவும் தமிழ் உறவுகளின் விடிவிற்காகவும் தம் இன்னுயிரை எம் தாய்மண்ணிற்காக தந்து எம்மக்கள் மனங்களில் நிறைந்த மாவீரர்களை தமிழ் உள்ளவரை மறவாது அனைத்து அரசியல், விடுதலைப்போராட்ட தியாகிகளை நாம் வணங்கி தலைதாழ்த்தி அஞ்சலி செய்வோமாக!!
இதில் தமிழீழத் தீர்மனம் 1976.ல் நிறைவேற்றிய வட்டுக்கோட்டை தொகுதியின் பண்ணாகம் மண்ணில் உதித்த எம் உறவுத் தியாகிகளை நினைவு கொள்வதில் நாம் பெருமையடைகின்றோம். அவர்களின் தன்னலம் அற்ற தியாகத்தை தலைதாழ்த்தி வணங்குகின்றோம்.
''உறவுகள் சாவதில்லை ஊர்வாசம் மாறுவதில்லை''
பண்ணாகத்திலிருந்து.......
அரசியல் வழியில் தம் உயிர்களைத் தியகம் செய்த தியாகிகள்.
1) தமிழ் மக்களில் நல் வாழ்விற்காய் தரணி எங்கும் ஒலித்த குரலின் சொந்தக்காரர். தமிழ்மக்களின் தானைத் தலைவனாக விளங்கியவரும் சிறிலங்காவின் முதல் தமிழ் எதிர்க்கட்சித் தலைவருமான நாவலர் .
அமரர் உயர்திரு. அப்பாப்பிளளை அமிர்தலிங்கம் அவர்கள்
2) பட்டதாரியாகி தமிழ் மாணவர் அமைப்பில் இணைந்து தமிழ்ச்சேவையாற்றி இராணுவத்தால் கைது செய்யப்பட்டு வெலிக்கடைச் சிறையில் படுகொலை செய்யப்பட்ட தியாகி
அமரர் திரு. ஆறுமுகம் சேயோன் அவர்கள்
பண்ணாகத்திலிருந்து ஆயுதப்போராட்ட வழியில் தம் உயிர்களைத் தியாகம் செய்த தியாகிகளுக்கு
பண்ணாகம்.கொம் இணையம் தலைதாழ்த்தி அஞ்சலிகளைத் தெரிவிக்கிறது.
1) செல்வன் பொன்னம்பலம் சிதம்பரநாதன் (நாதன்)
2) செல்வன் அப்பாத்துரை மணிவாசகம் (மணி)
3) செல்வன் பரமகுரு கணதேவகுரு (தேவன்)
4) செல்வன் மார்க்கண்டு சந்திரசேகரம் (சந்திரன்)
5) செல்வி பாலசிங்கம் கௌரி (கௌரி)
6) செல்வி கிருஷ்ணமூர்த்தி காயத்திரி (காயா)
7) செல்வன் தியாகராசா தவனேசன்
8) செல்வன் மாணிக்கரத்தினம் சக்திதாசன்
9) செல்வன் சிறினிவாசகம் சிவகுமார் (மதன்)
10) செல்வி கறுவல்த்தம்பி அணுசியா
11) திரு. திருநாவுக்கரசு கனகலிங்கம் (சாமி)
12. செல்வன் துரைலிங்கம் வசந்தன்
13. செல்வி சத்தியமூர்த்தி ருக்குமணிதேவி
14.செல்வன் .தெட்சணாமூர்த்தி கமலதாசன் (கமல்)
---------------------------------------------------
எம்மை விட்டுச்சென்ற பண்ணாகம் உறவுகளுக்கு சமர்ப்பணம்
அரசியல், போராட்ங்களில் தம் இன்னுயிர்களைத் தியாகம் செய்த பண்ணாகம் ஊர் தியாகிகள், மாவீரர்கள், கல்விமான்கள், எம் ஊர் பொது சேவையாளர்களுக்கும் இணைய ஆசிரியரின் பெற்றோர் அமரர்கள் திரு.திருமதி இலகுப்பிள்ளை கந்தசாமி (கடவுள்) கந்தசாமி செல்லம்மா அவர்களுக்கும்,மற்றும் பொதுமக்களுக்கும் இத் தளம் சமர்ப்பணம்.
''உறவுகள் சாவதில்லை ஊர் வாசம் போவதில்லை''
திரு.திருமதி இலகுப்பிள்ளை கந்தசாமி (கடவுள்) கந்தசாமி செல்லம்மா
-பிரதம ஆசிரியர்.- திரு.இ.க.கிருட்ணமூர்த்தி.