நெஞ்சில் நிறைந்த நினைவுகளுடன்
பண்ணாகம்.கொம்
17 வது ஆண்டு நிறைவுநாள் 01.03.2023
1.3.2023 இல் 18 வது ஆண்டில் காலடி வைக்கும் இவ்வேளையில்
உங்களிடம் 1 நிமிடம்...
உங்கள் பண்ணாகம் இணையம் 17வது ஆண்டு நிறைவு 1.3.2023 இல் காலடி வைக்கும் இவ்வேளையில் நாம் கடந்துவந்த பாதையில் சந்தித்த நல் உள்ளங்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
பண்ணாகம் இணையம் முற்றுமுழுதாக ஒரு சேவையாகவே நடாத்தப்படுகிறது இச்சேவையில் எம்மோடு பலர் 2006ம் ஆண்டு முதல் தம்மாலான சேவைகளைப் பலர் இணைந்து செய்துவருகிறார்கள் . பண்ணாகம் இணையத்தில் இதுவரை ஆக்கங்கள், செய்திகள் எழுதிய, எழுதிவரும் இணைய ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஆய்வாளர்கள், கதாசிரியர்கள், ராசிபலன்சோதிடர் (இந்தியா) ,செய்தியாளர்கள், ஒப்புநோக்காளர்கள், தொடர்கதை ஆசிரியர்கள் ,ஆலோசகர்கள் மற்றும் பண்ணாகம் இணையம் 17 வருடங்களாக சோர்வின்றி திறம்பட இயங்குவதற்கு இலவச சேவைகள் வழங்கியவர்கள் வழங்கிக் கொண்டிருக்கும் மூலகாரணியான இயக்குனர்கள், தொழில்நுட்பவியலாளர்கள் ,இணைய வரைகலையாளர்கள், தகவல் தொடர்பாளர்கள் என்போரையும் சிறப்பாக பண்ணாகம் இணையம் மறவாது பதிவிட்டு வருகிறது.
அதேபோன்று முகநநூலில் வாழ்த்துகின்றவர்கள் பதிவுகளையும் இங்கு இடம்பெறும். பண்ணாகம் இணையம் தனது இலவச திருமண சேவை மூலம் இதுவரை 38 திருமணங்களை மங்களகரமாக நிறைவு செய்து பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. எமது நிர்வாகத்தில் பல புதியவர்கள் சென்றவருடம் இணைந்து ஊக்கமுடன் செயற்பட்டு வருகிறார்கள். அதுடன் 17 வது ஆண்டு நிறைவு சாதனையாளர் வரிசையிலே என்ற ஒளிப்பதிவில் இணைந்து பதிவுகளை வழங்கியவர்களுக்கும், தொடர்ந்தும் வழங்கிக் கொண்டு வரும் உயர் நல்சிந்தனை உள்ளங்கள் அனைவருக்கும் நன்றிகள் நன்றிகள் பல..
நன்றி
அன்புடன் உங்கள்
பண்ணாகம்.கொம் நிர்வாகம்,
பிரதம ஆசிரியர் ஊடகவித்தகர் திரு.க.கிருஷ்ணமூர்த்தி
www.pannagam.com 2022 Germany
Click to edit table header |
வாசகர்களினால் எமது முகநூலில் 2023 ஆண்டு வாழ்த்திய பதிவுகளும் இங்கு இடம்பெறும்.
|
வாசகர்களினால் எமது முகநூலில் 2022 ஆண்டு வாழ்த்திய பதிவுகளும் இங்கு இடம்பெறும்.
1.3.2021 இணைய பிறந்தநாளில் நீங்கள் முகநூலில் பதியும் அன்பான வாழ்த்துக்கள் இங்கு உங்கள் ஆசிகளாக அந்தப் பதிவுகள் சேமிக்கப்பபடுகிறது கீழே பார்க்கலாம்........
நெஞ்சில் நிறைந்த நினைவுகளுடன்
பண்ணாகம்.கொம்
15 வது நிறைவுநாள் 01.03.2021
1.3.2021 இல் 15 வது ஆண்டில் காலடி வைக்கும் இவ்வேளையில் உங்களிடம் 1 நிமிடம்...
உங்கள் பண்ணாகம் இணையம் 15வது ஆண்டு நிறைவு 1.3.2021 இல் காலடி வைக்கும் இவ்வேளையில் நாம் கடந்துவந்த பாதையில் சந்தித்த நல் உள்ளங்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
பண்ணாகம் இணையம் முற்றுமுழுதாக ஒரு சேவையாகவே நடாத்தப்படுகிறது இச்சேவையில் எம்மோடு பலர் 2006ம் ஆண்டு முதல் தம்மாலான சேவைகளை செய்துவருகிறார்கள் . பண்ணாகம் இணையத்தில் இதுவரை ஆக்கங்கள், செய்திகள் எழுதிய, எழுதிவரும் இணைய ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஆய்வாளர்கள், கதாசிரியர்கள், ராசிபலன்சோதிடர் (இந்தியா) ,செய்தியாளர்கள், ஒப்புநோக்காளர்கள், தொடர்கதை ஆசிரியர்கள் ,ஆலோசகர்கள் மற்றும் பண்ணாகம் இணையம் 15 வருடங்களாக சோர்வின்றி திறம்பட இயங்குவதற்கு இலவச சேவைகள் வழங்கியவர்கள் வழங்கிக் கொண்டிருக்கும் மூலகாரணியான இயக்குனர்கள், தொழில்நுட்பவியலாளர்கள் ,இணைய வரைகலையாளர்கள், தகவல் தொடர்பாளர்கள் என்போரையும் சிறப்பாக பண்ணாகம் இணையம் மறவாது பதிவிட்டு வருகிறது.
அதேபோன்று முகநநூலில் வாழ்த்துகின்றவர்கள் பதிவும் இங்கு இடம்பெறும். பண்ணாகம் இணையம் தனது இலவச திருமண சேவை மூலம் இதுவரை 30 திருமணங்களை மங்களகரமாக நிறைவு செய்து பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. எமது நிர்வாகத்தில் பல புதியவர்கள் சென்றவருடம் இணைந்து ஊக்கமுடன் செயற்பட்டு வருகிறார்கள். அதுடன் 15 வது ஆண்டு நிறைவு சாதனையாளர் வரிசையிலே என்ற ஒளிப்பதிவில் இணைந்து பதிவுகளை வழங்கியவர்களுக்கும், வழங்கிக் கொண்டு வரும் உயர் நல்சிந்தனை உள்ளங்கள் அனைவருக்கும் நன்றிகள் நன்றிகள் பல..
நன்றி
அன்புடன் உங்கள்
பண்ணாகம் திரு.இக.கிருஷ்ணமூர்த்தி
பிரதம ஆசிரியர் பண்ணாகம் இணையம்
ஊடகவித்தகர், வாழ்நாள் சாதனையாளர்.
www.pannagam.com 2021
நெஞ்சில் நிறைந்த நினைவுகளுடன்
14வது நிறைவுநாள் 01.03.2020
1.3.2020 இல் 15 வது ஆண்டில் காலடி வைக்கும் இவ்வேளையில் உங்களிடம் 1 நிமிடம்...
உங்கள் பண்ணாகம் இணையம் 14வது ஆண்டு நிறைவு 1.3.2020 இல் காலடி வைக்கும் இவ்வேளையில் நாம் கடந்துவந்த பாதையில் சந்தித்த நல் உள்ளங்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
பண்ணாகம் இணையம் முற்றுமுழுதாக ஒரு சேவையாகவே நடாத்தப்படுகிறது இச்சேவையில் எம்மோடு பலர் 2006ம் ஆண்டு முதல் தம்மாலான சேவைகளை செய்துவருகிறார்கள் . பண்ணாகம் இணையத்தில் இதுவரை ஆக்கங்கள், செய்திகள் எழுதிய, எழுதிவரும் இணைய ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஆய்வாளர்கள், கதாசிரியர்கள், ராசிபலன்சோதிடர் (இந்தியா) ,செய்தியாளர்கள், ஒப்புநோக்காளர்கள், தொடர்கதை ஆசிரியர்கள் ,ஆலோசகர்கள் மற்றும் பண்ணாகம் இணையம் 14 வருடங்களாக சோர்வின்றி திறம்பட இயங்குவதற்கு இலவச சேவைகள் வழங்கியவர்கள் வழங்கிக் கொண்டிருக்கும் மூலகாரணியான இயக்குனர்கள், தொழில்நுட்பவியலாளர்கள் ,இணைய வரைகலையாளர்கள், தகவல் தொடர்பாளர்கள் என்போரையும் சிறப்பாக பண்ணாகம் இணையம் மறவாது பதிவிட்டு வருகிறது.
அதேபோன்று முகநநூலில் வாழ்த்துகின்றவர்கள் பதிவும் இங்கு இடம்பெறும். பண்ணாகம் இணையம் தனது இலவச திருமண சேவை மூலம் இதுவரை 20 திருமணங்களை மங்களகரமாக நிறைவு செய்து பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. எமது நிர்வாகத்தில் பல புதியவர்கள் சென்றவருடம் இணைந்து ஊக்கமுடன் செயற்பட்டு வருகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றிகள் நன்றிகள் பல
நன்றி
அன்புடன் உங்கள்
பண்ணாகம் திரு.இக.கிருஷ்ணமூர்த்தி
பிரதம ஆசிரியர் பண்ணாகம் இணையம்
ஊடகவித்தகர், வாழ்நாள் சாதனையாளர்.
14 வது நிறைவு வாழ்த்துக்களை இதை அழுத்தி பார்வையிடலாம்
HAPPY BIRTHDAY TO PANNGAM
முகநூல்,வாற்ஸ்அப் ,வைபர் ,மின்னஞ்சல் ,தொலைபேசி வழியாக
14வது ஆண்டு நிறைவு வாழ்த்துக்கள் வழங்கிய எமது உறவுகள் அனைவருக்கும் எமது இணைய நிர்வாகம்சார்பாக மகிழ்வான நன்றிகள்.... நன்றிகள்.... நன்றிகள். அவர்களில் பதிவுகள் இங்கு
அன்புடன்
இணைய பிரதம ஆசிரியர்
ஊடகவித்தகர்,வாழ்நாள் சாதனையாளர்
திரு இக.கிருஷ்ணமூர்த்தி அவர்கள்
\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\
முகநூலில் சிறு கவி வாழ்த்து
தமிழ் எங்கள் மூச்சு வாழ்க பண்ணாகம் இணையம் 2020
’’தமிழ் எழுத்தாளர் இணைய அகம்’’ யேர்மனியில் உதயமாக உறுதுணை வழங்கியவர்களில் பண்ணாகம் இணையமும் தனது முக்கிய பங்கு வகித்தது. இப்படிப்பட்ட இணையம் தனது 14வது அகவையில் கால்பதித்து புலம்பெயர் நாட்டில் தமிழ்த் தொண்டாற்றி வந்துகொண்டிருப்பதை நாம் மகிழ்வடைந்து பாராட்டுகின்றோம். வாழ்த்துகின்றோம்.
வாழ்க தமிழ் வளர்க இணைய சேவை.
வாழ்த்துவோர்
தமிழ் எழுத்தாளர் இணைய அகம்
ஒருங்கமைப்பாளர்கள்
யேர்மனி
பண்ணாகம் இணையம் 1.3.2020
முகநூல்,வாற்ஸ்அப் ,வைபர் ,மின்னஞ்சல் ,தொலைபேசி வழியாக
13வது ஆண்டு நிறைவு வாழ்த்துக்கள் வழங்கிய எமது உறவுகள் அனைவருக்கும் எமது இணைய நிர்வாகம்சார்பாக மகிழ்வான நன்றிகள்.... நன்றிகள்.... நன்றிகள்.
அன்புடன்
இணைய பிரதம ஆசிரியர்
ஊடகவித்தகர்,வாழ்நாள் சாதனையாளர்
திரு இக.கிருஷ்ணமூர்த்தி அவர்கள்
Click to edit table header |
01.03.2018 பண்ணாகம் இணையத்தின் 12 வது அகவை நிறைவுகண்டு பண்ணாகம் இணையம் பெருமையடைகிறது. ''நீங்களும் வாழ்த்தலாம்'' உங்கள் வாழ்த்தை facebook , viber ,whatsApp OR ekk.moorthy@gmx. அனுப்பிவையுங்கள். அவை அனைத்தும் உங்கள் நினைவாக பண்ணாகம் இணையத்தில் பதிந்து பத்திரப்படுத்திவைக்கின்றோம். |
-. Vijitha Ainkaran நுாறாண்டு காலம் வாழ்க
உன்னையும் என்னையும்
ஊரையும் உறவையும்
இணைத்தது விட்ட
இணைய நண்பன்.
அகவைகள் பதினொன்றில்
அகலக்கால் பதித்து
அகிலம் முளுவதும்
அலைக்கற்றைகளால்
அனைவரையும் ஒன்றாக்கிய
அருமையான இணையமே!
நின் சேவை
நின்றிடா பூமிப்பந்துபோல்
நிலைபெற வாழ்த்துகின்றோம்.
வாழ்க பண்ணாகம் இணையம்- தொடர்க அதன் நற்பணி!!!!
Click to edit table header |
23.4.2016 இல் நடைபெற்ற 10 வது ஆண்டு விழாவின் ஒரு பார்வையில் திரு.ரவி அவர்கள் இணைய அபிமானிகளின் வாழ்த்துச் செய்திகளை தொகுத்து தொடராக வழங்குகிறார். |
Click to edit table header |
2015 இல் 9வது ஆண்டில் பண்ணாகம் இணையம் தனது காலடியை பதிக்கின்ற இந்த நேரத்தில் வாழ்தியவர்களின் வாழ்த்துக்கள் உள்ளே பதிவாகிறது. |
நெஞ்சில் நிறைந்த நினைவுகளுடன்
உங்களிடம்
உங்கள் பண்ணாகம் இணையம் 9வது ஆண்டில் 1.3.2015 இல் காலடி வைக்கும் இவ்வேளையில் நாம் கடந்துவந்த பாதையில் சந்தித்த நல் உள்ளங்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
பண்ணாகம் இணையம் முற்றுமுழுதாக ஒரு சேவையாகவே நடாத்தப்படுகிறது இச்சேவையில் எம்மோடு பலர் 2006ம் ஆண்டு முதல் தம்மாலான சேவைகளை செய்துவருகிறார்கள் அவர்களில் சிலரின் பெயர்கள் வாசகர்களுக்கு அறிமுகமாகவில்லை அவர்களை நாம் 2016ம் ஆண்டு பண்ணாகம் இணையத்தால் நடாத்தப்பட இருக்கும் 10வது இணைய பிறந்தநாள் விழாவில் வெளியிடப்படவிருக்கும் 10வது ஆண்டு விழாவில் உங்கள் முன் பார்வைக்கு கொண்டு வருவோம். இதில் பண்ணாகம் இணையத்தில் இதுவரை எழுதிய எழுதிவரும் இணைய ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், ஆய்வாளர்கள், கதாசிரியர்கள், ராசிபலன்சோதிடர் (இந்தியா) ,செய்தியாளர்கள், ஒப்புநோக்காளர்கள், தொடர்கதை ஆசிரியர்கள் ,ஆலோசகர்கள் மற்றும் பண்ணாகம் இணையம் 9வருடங்களாக சோர்வின்றி திறம்பட இயங்குவதற்கு இலவச சேவைகள் வழங்கியவர்கள் வழங்கிக் கொண்டிருக்கும் மூலகாரணியான இயக்குனர்கள் தொழில்நுட்பவியலாளர்கள் இணைய வரைகலையாளர்கள் தகவல் தொடர்பாளர்கள் என்போரையும் 10வது ஆண்டு விழாவில் சிறப்பாக கௌரவிக்கப்பட உள்ளார்கள். இவர்களை பண்ணாகம் இணையம் மறவாது பதிவிட்டு வருகிறது.
அதேபோன்று முகநுாலில் வாழ்த்துகின்றவர்கள் பதிவும் இடம்பெறும்.
அன்புடன் உங்கள்
பண்ணாகம் திரு.இக.கிருட்ணமூர்த்தி
பிரதம ஆசிரியர் பண்ணாகம் இணையம்
HAPPY BIRTHDAY TO PANNGAM
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
Click to edit table header |
வாழ்த்துச்செய்திகள் கிடைத்தவுடன் பதிவிட்டு வருகின்றனர். அனுப்பியவர்கள் அனைவருக்கும் நன்றிகள் |
மகிழ்வோடு எமது பண்ணாகம் இணையத்தை வாழ்த்துகிறேன்.
ஜேர்மனியில் இயங்கிவரும் பண்ணாகம் இணையத்தள ஊடகம் மக்களுக்கான சேவையில் ஒன்பதாவது வருடத்தை எட்டியுள்ளது என்பது மகிழ்ச்சிக்குரியதும் பெருமைப்படக்கூடியதுமாகும்.
ஊடகத்துறையில் நவீன பத்திரிகையாக கருதப்படும் மின்னியல் அம்பலமாகக் கருதப்படும் இணையளத்தளமே இன்று நிமிடத்திற்கொரு செய்தியாக வாசிப்போருக்கு செய்தியாக கொடுத்து வருகின்றன.
திரு.இ.க.கிருஸ்ணமூர்த்தி அவர்களை பிரதம ஆசிரியராகக் கொண்டு ஜேர்மனியில் இயங்கி வரும் பண்ணாகம் இணையத்தளம் இணைய உலகில் குறிப்பிடத்தக்க இணையமாகும்.
பல்வேறுபட்ட செய்திகளுடனும் ஆக்கபூர்வமான ஆக்கங்களுடனும் சிரமங்களுக்கு மத்தியில் திறம்பட பண்ணாகம் இணையத்தளத்தை நடத்திவரும் பிரதம ஆசிரியர் திரு.இ.க.கிருஸ்ணமூர்த்தி அவர்களை மகிழ்வோடு வாழ்த்திப் பாராட்டுகிறேன்.
அன்புடன்
ஏலையா க.முருகதாசன்
ஏலையா சஞ்சிகை பிரதம ஆசிரியர்
கவிஞர் .- எழுத்தாளர் -நாடகவியளாளர்
பண்ணாகம் இணைய சிறப்பு உதவி ஆசிரியர்
---------------------------------------------------------------------------
நாம் 2006 இல் 2007 இல் வடிவமைத்த இணையத்தை திரும்பிப்பார்த்தால் ஒன்பது வருடம்! இணைய ஆசிரியர் இக.கி. அவர்களின் சீரிய முயற்சியின் வெற்றி.
தங்களின் ஆலோசனைக்கமைய முதலில் 2006ம் ஆண்டு www.pannagam.net.ms என ஆரம்பித்து நாம் 2007ம் ஆண்டு www.pannagam.com என்ற உத்தியோக முறையில் இணையத்தை பதிவு செய்த இணையமாக வடிமமைத்து சிறந்த தொழில்நுட்பத்தில் தொடர்ச்சியாக எந்தவித சோர்வுமின்றி இன்றுவரை இலவச சேவையாக நாடாத்தி வருகின்றமையை பாராட்டுகின்றோம்.
இன்று இன்புற்று அன்புடன் பாராட்டுபவர்கள்.
திரு.அருண் -சுவீஸ் -வரைகலையாளர் = Desining 2007
திரு.பிரசாத் - IT ing - B.sc Germany (program)
செல்வன். இரசாத் -தொழில்நுட்பவியலாளர்
செல்வன் .துசியந்தன் & கண்ணன் - 2006 வடிவமைப்பு
(இவர்கள் பண்ணாகம் இணையத்தின் உயிர்த்துடிப்புக்கு மூலகாரணமாக இணையத்தின் வடிவமைப்பு தொழில்நுட்ப நிர்வாகப் பிரிவு)
--------------------------------------------------------------------------------------------
வாழ்த்துகின்றேன்
அகவை ஒன்பதினுள்
ஓராயிரம் ஓட்டங்கள்
அகம் தோறும் உறவாடி -சர்வ
அலைஎங்கும் நிதம் தேடி
பார்புகழும் நின் பகிர்தலின்
பரவசம் பறப்பு மிக்கது
தொடரட்டும் பயணம்
வாழ்த்துக்கள்.
இஃது
யாழ் .தர்மினி பத்மநாதன்
பிரபல எழுத்தாளர் -கவிஞர் - இந்தியா
-------------------------------------------------------------------
ஜேர்மானியத் தமிழர்களின் தனி அடையாளமாகவும் பண்ணாகம் இணையம்
"பண்ணாகம் இணையம்" என்னைத் தொட்டது,"விழுதல் என்பது எழுகையே "எனும்
பன்னாட்டுப் படைப்பாளிகளின் நெடுங்கதைத் தொடரின் மூலம்தான்.
அனைத்து இணையத்தளங்களுக்கும்,நிகரான செய்திகளுடனும்,அவ்வப்போது மேலாகவும்,புதுமை இலக்கியத்துடனும் இன்று தமிழர் வாழ்வில் முழு இணையமாக புகழ் பரப்பி இருக்கும் பண்ணாகம் இணையம் அகவை ஒன்பதை எட்டுவது வெற்றியின் முரசென்பேன்.
ஜேர்மானியத் தமிழர்களின் தனி அடையாளமாகவும் பண்ணாகம் இணையம்
திகழ்கிறது.
இச் சேவையில் முழுமையாகத் தன்னை அர்ப்பணித்துள்ள திரு.கிருஸ்ணமூர்த்தி கந்தசாமி அவர்களையும்,அவருக்கு பக்க பலமாகத் திகழும் எழுத்துப் போராளி ஏலையா
முருகதாஸன் அவர்களையும் இந்த வேளையில்
பாராட்டி மகிழ்கிறேன்.
-கல்லாறு சதீஷ் -
கவிஞர் -எழுத்தாளர் - சேவையாளர்
மனமார்ந்த நல் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன் .
ஒன்பது ஆண்டுகளாக எனது கிராமத்தின் பெயரில் இயங்கி வரும் பண்ணாகம் இணையத்திற்கு எனது மனமார்ந்த நல் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன். இந்த நவீன உலகில் இன்று மனிதர்கள் அபரிமிதமான வாழ்க்கை சுமையால் நேரமின்றி, பணமின்றி அவஸ்த்தைப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இத்தனை இடர்களுக்கு மத்தியிலும் எட்டு ஆண்டுகளாக ஒரு இணையத்தளத்தை இடைவிடாது சிறப்பாக நடத்திவரும் நண்பர் இ. க. கிருஸ்ணமூர்த்தி அவர்களுக்கு சிறப்பான வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறேன். இத்துடன் இவருக்கு துணை நிற்கும் இவர் தம் குடும்பத்தாற்கும் நன்றிகள் உரித்தாகுக.
மேலும், எமது மண்ணினதும் மக்களினதும் பெருமைகளையும் வாழ்வியலையும் தாங்கி வந்து எமது கிராமத்து மக்களையும் உறவுகளையும் ஒன்றிணைக்கும் உறவுகளின் ஊடகமாக செயல்பட வேண்டுமென்று எமது மக்கள் மனமாக வேண்டிக் கொள்கிறேன்.
நன்றி
வெ. வேலழகன்.
எழுத்தாளர் - கவிஞர்
---------------------------------------------
அகவை ஒன்பதில் அடிபதிக்கும்
பண்ணாகம் இணையத்துக்கு எமது
வாழ்த்துக்கள்
நாட்டுநலம் காண்பதற்கு நாட்டம் உள்ள
நல்லமனம் கொண்ட நால்வர் சேர்ந்துளைத்து
ஊக்கமுடன் அனுதினமும் தூக்கமதைத்தான் மறந்து
ஊரவரின் உயர்வுசொல்லும் உன்னத பணியிதுவே!
பண்ணாகம் தாயகத்தில் பெயர்பெற்ற பேரூராம்-அந்த
பண்ணாகப் பெயர்கொண்ட இணையமது பேயர்கூறும்.
வரலாற்று சிறப்புடைய இணையம் இது
வாழவைக்கும் செந்தமிழை நாளும்; இ;து
சைவமும் தமிழும் தமிழர் இருவிழியென்று
சான்று பகர்ந்திடும் கண்விழி ஏடிது
அகவைகள் ஓன்பதை தான் நிறைத்து-தன்
அகவைகள் பத்தினில் அடிபதிக்கும் பண்ணாகஇணையம்
தாயகச் செய்திகளை உலகச்செய்திகளை ஊரவர் செய்திகளை
தினம்தினம் அள்ளித்தந்து தெவிட்டாத தேன்சுவையூட்டும் இணையம்.
வாழிய!வாழிய நீடூழிநீடூழி பல்லாண்டு வாழியவே!
வரலாறு நம்பக்கம் மாறும் மாறும்
வசந்தங்;கள் நம்தமிழர்பக்கம் மலரும் மலரும்.
திறமான கொள்கைகளை தினமதினம்; வகுத்து
சிந்தையிலே ஒற்றுமையை நாம் விதைத்து
செயல் பட்டால் அத்தனையும் தானேவரும்
தமிழன்னை தானுமவள் தலைநிர வழிபிறக்கும்
சிந்தித்து செயல்படுவோம் எங்கள்தாய்..
செந்தமிழைக் கார்த்திடுவோம்.
அன்புடன்
வாழிய வாழிய பல்லாண்டு இணையம்
பணிகொண்டு வாழ்க! வாழ்கவென
வாழ்த்தும்
கவிஞர்
வேலணை ஊர் -பொன்னண்ணா
டென்மார்க்
எழுத்தாளர் -ஆன்மீகபேராளர்
---------------------------------
பெருமையுடன் வாழ்த்துகின்றேன்
பண்ணாகம் இணையம் 9வது அகவையில் காலடி வைக்கும் போது மற்றவர்கள் பெருமையாக வாழ்த்தியிருப்பதை பார்த்து நான் பெருமைப்படுகின்றேன். வாழ்க பண்ணாகம் இணையம் தொடர்க அண்ணா உங்கள் சேவை.
இன்புற்று வாழ்த்துபவன்
திரு.சீ.சசிகரன் (சசி)
கனடா
(இவர் கனடாவில் கடந்த காலங்களிலிருந்து நடைபெற்ற கனடா பண்ணாக மக்கள் ஒன்றிய நிகழ்வுகளை பண்ணாகம் இணைய தொலைக்காட்சிக்கு கனடாவிலிருந்து நேரடியாக வழங்கிவருபவர்- நன்றி சசி)
-----------------------------------------
வாழ்த்துகின்றேன்!
"எண்ணிய முடிதல் வேண்டும், நல்லவே செய்தல் வேண்டும்" என்னும் நன்நோக்குடனும், "போற்றலும் தூற்றலும் பொருட்டல்ல ஏற்றதொரு கருத்தை என் உள்ளம் ஏற்கின் நில்லேன்- அஞ்சேன்- தொடர்ந்து செல்வேன்" என்று திண்ணிய நெஞ்சுடனும், பண்ணாகம் இணையத்தளம் எனும் வலையத்தின் ஊடாக அளப்பரிய சேவை செய்து வரும் என் பேரன்புக்குரிய அண்ணன் திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு என் முதல் வணக்கங்களும் வாழ்த்துக்களும்.
சொந்த பந்தங்களைப் பிரிந்து பல்லாயிரம் மைல் தொலைவுக்கப்பால் திக்குத் திக்காக வாழு(டு)ம் நம்மவர்க்கு ஊர்ச் செய்திகளை உடனுக்குடன் அறியத் தந்துதவும் பண்ணாகம் இணையத்தளம், தனது ஒன்பதாவது அகவையில் காலடி பதிக்கும் இவ் வேளையில், அதன் தன்னலமற்ற சேவை மென்மேலும் மிளிர்ந்து விளங்கவும், அதன் ஆசிரியரின் தொண்டு எவ்வித இடையூறுமின்றித் தொடரவும், இணையத்தள வளர்ச்சியின் நலன் விரும்பி என்ற வகையிலே எல்லோர்க்கும் பொதுவான இறைவனை இறைஞ்சி, வாழ்த்தி மகிழ்கின்றேன்.
நன்றி.
திருமதி. கண்ணா தணிகாசலம்
(இலண்டன்) -இணையபேராதரவாளர்-
--------------------------------------------------------------------
எமது இணையத்தை மனதார வாழ்த்துகின்றேன்
9வருடங்களில் படிப்படியாக வளர்ப்பதற்கு எவ்வளவோ கடின உழைப்பை வளங்கி இன்று உலக எழுத்தாளர்கள் எழுதும் ஒரு களமாகிய பண்ணாகம் இணையத்தை நினைக்கும்போது பெருமையாக உள்ளது. என்றும் உயர்வு பெற எனது வாழ்த்துக்கள்.
உளம் நிறைந்த வாழ்த்துக்கள்
திருமதி.கி.சர்வாஜினிதேவி
(பண்ணாகம் இணையத்தின் ஒப்புநோக்கும் பணிநிர்வாகி)
-------------------------------------------------------------------
தமிழ் எங்கள் மூச்சு வாழ்க பண்ணாகம் இணையம்
’’தமிழ் எழுத்தாளர் இணைய அகம்’’ யேர்மனியில் உதயமாக உறுதுணை வழங்கியவர்களில் பண்ணாகம் இணையமும் தனது முக்கிய பங்கு வகித்தது. இப்படிப்பட்ட இணையம் தனது 9 வது அகவையில் கால்பதித்து புலம்பெயர் நாட்டில் தமிழ்த் தொண்டாற்றி வந்துகொண்டிருப்பதையும் உலக எழுத்தாளர் ஒன்றிணைந்து எழுதிவரும் ’’விழுதல் என்பது எழுகையே’’ தொடர் கதையை 40 வாரங்களாக வெளியீடு செய்து வருவது கண்டும் நாம் மகிழ்வடைந்து பாராட்டுகின்றோம். வாழ்த்துகின்றோம்.
வாழ்க தமிழ் வளர்க இணைய சேவை.
வாழ்த்துவோர்
தமிழ் எழுத்தாளர் இணைய அகம்
ஒருங்கமைப்பாளர்கள்
யேர்மனி
-------------------------------------------------------------
பண்ணாகம் இணையத்தளத்துக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
பண்ணாக இணையமே!
ஒரு சிறு கவிதை கூறி, உன்னையும் வாழ்த்துகிறேன்
என் உயிர்க்கோயில்
உலகில்
கோடானுகோடி கோயில்கள்
இருந்தாலும்
நான்
முதற் கண்டது
என் அம்மா என்ற
என் உயிர்க்கோயிலே!
திரு .இக.கிருஸ்ணமூர்த்தி அவர்களின் அயரா முயற்சியும் மற்றும் பலரின் நிறைந்த உழைப்பும் பண்ணாக இணையத்தளத்தை தரமுள்ள இணையத்தளங்களில் ஒன்றாகச் சிறப்புற வளர்த்துப் பெருமையுடன் உலகெங்கும் உலாவர வைத்துள்ளது.
அரிய பல பயனுள்ள விடயங்களை உடனுக்குடன் வாசகர்களுக்குத் தெரியப்படுத்துவதுடன் மகிழ்வூட்டும் பொழுதுபோக்கு அம்சங்களையும் தந்து, உயிர்த்துடிப்புள்ள இணையத்தளமாக மக்கள் மனதில் இடம்பிடித்து ஒன்பதாவது ஆண்டு தன் பணியைத் தொடரும் பண்ணாகம் இணையத்தளத்தை மனமார வாழ்த்திப் பாரட்டுகின்றோம்!
வாழ்க நீ! வளர்க உன் பணிகள்!
வாழ்த்துவோர்
வண்ணத்துப்பூச்சி வெளியீட்டாளர்கள்
காசி மஞ்சு
மாஸ்பேக் -25.02.2015
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Tamilischer Kultur und Wohlfahrts verein Essen e.V
தமிழர் கலாச்சார நற்பணி மன்றம் (1985). VR:297
AM-Ringofen.21 45355 Essen
Tel: / Fax:201 / 330 75 24
E-Mail: wijayan@live.de
------------------------------------
27.02.2015
இதயத்தால் வாழ்த்துகின்றோம் !
பண்ணாகம்.கொம் இணையத்தளம் 9 ஆண்டுகளை நிறைவுசெய்கிறது என்ற செய்தி இதயத்தை இனிப்பாய் நிறைத்தது.தானுண்டு தன்வேலையுண்டு என்ற மனநிலையோடு போராடும் புலம் பெயர்வாழ்வில், சுயநலமில்லாத,பல நல்ல உள்ளங்கள் தாய்மண்ணுக்காகவும் தாய்மொழிக்காகவும், கலை கலாச்சார விழுமியங்களுக்காகவும், தம்மை அர்ப்பணித்து வாழ்கிறார்கள்.
சிலர் மறைக்கப்படுகிறார்கள் சிலர் மறக்கப்படுகிறார்கள்.இருப்பினும் ஓயாத அலைகள் போல சிலர் வெளிப்படுகிறார்கள்.
அந்த வகையில் பண்ணாகம் .கொம் என்ற இணையத்தளமானது சர்வதேச எழுத்தாளர்கள் கூடி எழுதும் விழுதல் என்பது…..என்ற நெடும் தொடர் கதையின் மூலம் உலக எழுத்தாளர்களை முக நூலுக்குள்ளும், இணையத்துக்குள்ளும் இணைத்து,வாசகர்களின் இதயத்துள் குடிகொண்டது.தாயகச்செய்திகளையும்,உலகச்செய்திகளையும் தருவதோடு புலத்தில் நிகழும் நிகழ்வுகளையும் உடனுக்குடன் தருகிறது.ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியவர்கள் 30ஆண்டுகளுக்கும் மேலாக பொதுப்பணியில் திகழ்ந்துவரும் ஒரு அற்புதமான மனிதர்.இடைவிடாத பணியால் மிளிர்ந்துகொண்டிருப்பவர்.தமிழ்அருவியின் முதன்மை வாசகராகத் திகழ்ந்தவர்.முதன்முதலில் இவர் ஐரோப்பிய வாசகர் வட்டம் என்ற அமைப்பை ஏற்படுத்தி சஞ்சிகைகள்,பத்திரிகைகளின் வளர்ச்சிக்கு ஆக்கபூர்வமான விமர்சனங்களையும்,ஊக்குவிப்புகளையும் தந்தவர்.தாயகத்திற்கும்,தான் பிறந்த கிராமத்திற்கும் தன்னாலான பணியைச் செய்துகொண்டிருப்பவர்.
இவரோடிணைந்து கரம் கொடுக்கும் துணைவியாருக்கும் நண்பர்களுக்கும் எங்கள் இதயபூர்வமான வாழ்த்துக்களையும் அன்பையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.பண்ணாகம்.கொம் இன்னும் பல்லாண்டுகள் பணியாற்றிடவும்,மென்மேலும் சிறப்புடன் விளங்கவும் எல்லோருக்கும் பொதுவான இறைவனை வேண்டுகின்றேன்.
வெல்க தமிழ்
தமிழ்அருவி நயினை விஜயன்
மணிபல்லவம்.
எசன்-யேர்மனி.
பொறுப்பாளர் தமிழர்கலாச்சார நற்பணிமன்றம் எசன்
------------------------------------------------------------------------------------------------------
கணனியில் முதல்முதலாக தோன்றிய பண்ணாகம் வாழ்க!
பாலபண்டிதர் திரு.விவேகானந்தன் அவர்கள்
(நோர்வேயிலிருந்து தனது முத்தான கையெழுத்தில் வாழ்த்து)
திருமதி .றஞ்சன் மாலினி -சுவீஸ்
வாழ்க பண்ணாகம் இணையம்
(அவர் தயாரித்து அனுப்பிய வாழ்த்துமடல்)
பண்ணாகம் இணையத்தளத்தின் ஒன்பதாவது நிறைவுகண்டு
வெற்றிமணி மகிழ்ந்து வாழ்த்துகின்றது.
முகநுாலில் பதியப்பட்ட வாழத்துச் செய்திகள்.
அனுப்பியவர்கள் அதனைப்பார்வையிட்டவர்கள் ஆகிய அனைத்து வாசகர்களையும் பதிவிட்டு வருகின்றோம். நாம் பதிய தவறியவர்கள் தயவுசெய்து எமக்கு அறியத்தாருங்கள் என அன்புடன் வேண்டுகின்றோம். நன்றி பதிவுகள் கீழே உள்ளது.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இடம்பெயர்வுகளால் இடம்மாறி
இயல்பு வாழ்க்கையை இழந்து
இடர்பட்ட வேளைகளில்
மீண்டும் இணைந்தோம் உன்னாலே
நேருக்கு நேர் சந்தித்தாற் போல்
மன நிறைவு கொண்டோம் உன்னாலே
பண்ணாக இணையம்
பலரை இணைத்து
நல்லறிவை கொண்ட
ஒர் பொக்கிசமாகி
எல்லோர் மனங்களிலும்
இடம் பிடித்த இணையமாக
இன்றும் வெற்றிநடை போடுகிறது
பண்ணாகம் இணையம் பல்லாண்டுகள் வாழ்க! வாழ்க!
Click to edit table header |
2014 இல் 8வது ஆண்டில் பண்ணாகம் இணையம் தனது காலடியை பதிக்கிறது
|
உங்கள் பண்ணாகம் இணையம் ஏழாவது அகவையில் 1.3.2013 இல் கால்பதிக்கிறது.
HAPPY BIRTH DAY TO PANNAGAM.COM
பண்ணாகம் இணையத்தை தரிசிக்கும் எம் இனிய அனைத்து உள்ளங்களுக்கும் வணக்கம்.
உங்களுடன் ஒரு நிமிடம்
எமது பண்ணாகம் இணையத்தின் 6வது ஆண்டினை நிறைவுசெய்து 7 வது ஆண்டில் கால்பதிக்கும் வேளையில் உங்களைச் சந்திப்பதில் மிக மகிழ்வு அடைகின்றோம். 29.11.2006 இல் பண்ணாகம் இணையம் உருவாக்கப்பட்டது. எம் உறவுகள் பலரின் விருப்பின் பெயரில் 1.3.2007 இல் விரிவாக்கி இன்றுடன் ஆறு வருடங்கள் நிறைவை எண்னி வியப்படைகிறோம். இந்த ஆறு வருடமாக எம் மக்களின் செய்திகள், தனிப்பட்ட விழாக்களின் விளம்பரங்கள், வாழ்த்துக்கள் என்பவற்ரை மக்களுக்கு திருப்தியளிக்கும் வகையில் எது விதமான கட்டணங்களும் இல்லாமல் எம் மக்களுக்கு இயன்றளவு சேவையாற்றிய பெருமிதத்துடன் அடுத்த ஏழாவது ஆண்டில் உங்கள் ஆசியுடன் கால் பதிக்கின்றோம்.
பண்ணாகம் இணைய நிர்வாகம்,ஆசிரியர்-
எமது இணையத்தை உலகின் பல பகுதி மக்கள் எல்லோரும் விரும்பிப் பார்க்கும் தளமாகவும் மற்றைய பொதுமக்கள் தமது விளம்பரங்களையும் ,செய்திகளையும் எமது தளத்தில் பிரசுரிப்பதை மிக மிக வரவேற்பதையும் கடந்த 2012 இல் கண்டிருந்தோம். ஆகவே எமது இணைய அனைத்து நேயர்களுக்கும், விளம்பரதாரருக்கம் பண்ணாகம் இணைய ஆசிரியர் ,நிர்வாகத்தினர் சார்பாக அனைவரும் நன்றிகள் கூறுகின்றோம்.
இந்த நேரம் 2013இல் வாழ்த்திநிற்கும் நேயர்களுக்கு நன்றிகள் கூறுகின்றோம்.
எமமை தொடர்புகொள்வதற்கு மின்னஞ்சல்கள்
1. E-mail- ekk.moorthy@gmx.de 2. E-mail pannagam@live.com
வாழ்த்துக்கள் கிடைத்ததும் அன்புடன் இணையத்தில் பதிகின்றோம். .அனைவருக்கும் நன்றிகள்
வாழ்த்துக்கள்-2013
பாரினில் இன்றும் பழந் தமிழ் பேசும்
பண்புடை மக்கள் வாழும் பண்ணாகம்
மண்ணின் பெயரால் உலக வீதியில்
உலா வரும் இலத்திரனியல் ஊடகமாம்
பண்ணாகம் இணையம் அகவை ஏழில்
நின்று நிமிர்ந்து நடைபயிலும் இந்நேரம்
என் மக்கள் சார்பாக வாழ்த்துகிறேன்.
எங்களை எங்களோடு பேசவைத்த நீ
இன்றும் என்றும் வாழ்க! வளர்க!!
எங்கள் மண்ணின் செய்திகளையும்
உலகின் செய்திகளையும் எடுத்து வந்து
கண்ணில் ஒளி செய்தாய் நன்றி!
ஏழு ஆண்டுகள் எந்த தொய்வும் இன்றி
இடைவிடாத முயற்சியால் எம்மக்களுக்காய்
இப்பணி செய்யும் இனிய நண்பர்
இ.க. கிருஸ்ணமூர்த்தி அவர்களுக்கு
உளமார்ந்த வாழ்த்துகளும் நன்றிகளும்
கருவறை போலே எமைக் காத்த
எமது மண்ணின் நினைவுகள் சுமந்து
நிற்கும் இவ்வூடகம் என்றும் நிலைத்திருக்க
எங்கள் விசவத்தனையான் அருள் வேண்டி
வாழ்த்தி மகிழ்கிறேன் வாழ்க! வளர்க!!
என் தமிழ் வையகம் உள்ளவரை.
வெற்றிவேலழகன் பண்ணாகம்.
-------------------------------------------
சிறுப்பிட்டி இணையத்தின் மனப்பூர்வமான வாழ்த்துக்களும் அன்பும் ஆதரவும்
பண்ணாகம் இணையத்தை தரிசிக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் 6வது ஆண்டினை நிறைவுசெய்து 7 வது ஆண்டில் கால்பதிக்கும் அதன் நிர்வாக குடும்பத்தினருக்கும் இணைய நிறுவனர்/ஆசிரியர் திரு.இ.க.கிருட்ணமூர்த்தி அவர்களுக்கும் பண்ணாகம் கிராமத்தின் நலனில் அக்கறையுடன் செயல்படும் அத்தனை உள்ளங்களுக்கும் மே மாதம் முதலாவது வருட பூர்த்தியை கொண்டாட இருக்கும் கனடா பண்ணாகம் மக்கள் ஒன்றிய நல்லுள்ளங்களுக்கும் இந்த சிறுப்பிட்டி இணையத்தின் மனப்பூர்வமான வாழ்த்துக்களும் அன்பும் ஆதரவும் என்றும் உண்டு
அத்துடன் எமது சகோதர இணையங்களான -S .T .S கலையகம் /தாவடி இணையம் /ஆணைக்கோட்டை இணையம் /நவற்கிரிஇணையம் போன்றவற்றின் நிர்வாகிகளும் தங்கள் வாழ்த்துக்களை இந்த இணையத்தின் ஊடாக பதிவு செய்கின்றனர்.உங்கள் கிராமத்து உயர்வுக்கு ஒற்றுமையுடன் கூடி முன்னெடுக்கும் எந்தவகையான முன்னெடுப்புக்களுக்கும் எம்மாலான ஆதரவு என்றும் உண்டென்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
சிறுப்பிட்டி இணைய நிர்வாகம் ஆசிரியர்
---------------------------------------------------------------------------
**ஏலையா சஞ்சிகை** வாழ்த்துகின்றோம்
பண்ணாகம் இணையத்தளம் ஊடகத்துறையில் ஆறாவது ஆண்டினை நிறைவு செய்து எழாவது ஆண்டில் தனது சேவையைத் தொடர்வது கண்டு பண்ணாகம் இணையத்தள பிரதம ஆசிரியர் திரு. இ. கு.கிருட்டிணமூர்த்தி அவர்களையும் அவரது உதவியாளர்களையும் மகிழ்ச்சியுடன் மனதார வாழ்த்திப் பாராட்டுகின்றோம்.
இவ்விணையத்தளம் ஆரம்பிக்கப்பட்ட காலகட்டத்தில் இருந்தது போல் இப்பொழுது இல்லை.அது தேடல் நோக்கிய பயணத்தில் சளைக்காது உழைத்ததால் பரிணாம வளர்ச்சியடைந்துள்ளது.
உள்ளடக்கத்திலாகட்டும் வடிவமைப்பிலாகட்டும் காலத்திற்கேற்றாற் போல் தன்னை வளர்த்திருப்பதை காண முடிகின்றது. சரவதேச செய்திகளிலிருந்து கதை, கட்டுரை, கவிதை, என்ற தளங்களிலும் இப்பொழுது மணமக்கள் சேவை என தன்னை விரிவுபடுத்தி உலகளவில் வாசகர்களைக் க&